கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 / In English & Tamil
சாமுவேல் யாழ்ப்பாண போதனை மருத்துவ மனையிலும் சாரா வேம்படி மகளீர் கல்லூரியிலும் கடமையாற்றுவதால், திருமணமான பின், அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கள் வாழ்வை தற்காலிகமாக அமைத்தார்கள்.
சாரா, திருமண தம்பதிகளாக, தங்களது முதல் கிறிஸ்துமஸ்ஸை பிரத்தியேகமாக கொண்டாட, வீட்டை கவனமாக அலங்கரித்தாள். ஜன்னல் அருகே ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரம் நின்றது. மெழுகுவர்த்திகள் மெதுவாக மின்னின. அவள் வீட்டு வேலைகள் செய்யும் போதும் கூட கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினாள்.
ஆனால் சாமுவேல், இவைகளில் ஒன்றிலும் தனிக்கவனம் செலுத்தாமல், தானும் தன்பாடாக இருந்தான். அதைக்கவனித்த சாரா, "கிறிஸ்துமஸ் நெருங்குகிறது, 2026 பிறக்கப்போகுது, ஆனால் நீ அமைதியாக இருக்கிறாய்," என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"உன் ஆர்வத்தை, மகிழ்வை, செயலை பார்த்து, நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்," என்று அவன் பதிலளித்தான்.
"இது உலகை இரட்சிக்க பிறந்த இயேசுவின் பிறந்தநாள்," என்று அவள் இயல்பாகச் சொன்னாள்.
சாமுவேல் தயங்கி, பின்னர் மெதுவாகக் கேட்டான், "அவர் எப்போது பிறந்தார் என்று எப்படி உனக்குத் தெரியும்?"
சாரா சிரித்தாள். "டிசம்பர் 25. அது அனைவருக்கும் தெரியும். ஏன் குட்டி பிள்ளைக்கு கூட , வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்க" என்றாள்.
ஆனால், அப்பொழுது சாமுவேல் வாக்குவாதம் செய்யவில்லை. அவன் அமைதியாக சிரித்தான், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க உதவினான். அன்பு, பொறுமையுடன் தொடங்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். மற்றது, இது, திருமணத்தின் பின், அவளின், முதல் கிறிஸ்மஸ்.
வாரங்கள் கழித்து, ஒரு சாதாரண மாலையில், உப்பரிகையில் [பால்கனியில்] அமர்ந்து இருவரும் நிலா ஒளியில் கொஞ்சம் ஓய்வு பெற்றுக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள். அன்று மூன்றாம் பிறை வானில் ஒளிர்ந்துகொண்டு இருந்தது. சாமுவேலுக்கு அப்பொழுது பாரதிதாசனின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.
துருக்கச் சிறுவன் ... "மூன்றாம் பிறையாய்த் தோன்றும் காலை என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகு நிலவே துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ !
கத்தோலிக்கச் சிறுவன்... "கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு நிலவே கத்தோலிக்கச் சொத்து நீதான்!
இந்துச் சிறுவன்... எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு நிலவே இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ !
அவன் அந்த பாடல் வரிகளை பாடிக் காட்டிவிட்டு, சாராவிடம் கேட்டான்: மூன்று பேரும் மொழியைக் கேட்டால், யாருக்கு சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்?
சாரா, எந்த சிந்தனையும் செய்யாமல், எடுத்த உடனேயே, அது கத்தோலிக்கருக்கே என்றாள். சாமுவேல், அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, ... பாரதிதாசனின் அடுத்தவரியை பாடினான்.
சுயமரியாதைச் சிறுவன்... யாவரும் மனிதர் என்பது தெரிந்தால், நிலவும் பொதுவே என்பது தெரியும், அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே!
அவள் ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்தாள்.
சாமுவேலும் மௌனமாக ஒரு வரலாற்றுப் புத்தகத்தைத் திறந்தான். “சாரா,” அவன் மெதுவாகக் கூறினான், கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது. 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாகத் தெரியவில்லை என்றான்.
அவள் மேலே பார்த்தாள், பின் சாரா முகம் சுளித்தாள். “அப்படியானால் அதை ஏன் மாற்ற வேண்டும்?” அவள் சட்டென்று கேட்டாள்.
அங்குதான் அவர்களின் சூழ்ச்சியே இருக்கிறது என்றவன், "கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால் - “சாட்டர்னேலியா. யூல். பேகன் [Saturnalia. Yule. Pagan] கொண்டாட்டங்கள் - அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை."
சுருக்கமாக, “கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மாற்ற, கிறிஸ்தவத் தலைவர்கள் ஏற்கனவே உள்ள பண்டிகைகளை கிறிஸ்துவின் கதையுடன் இணைத்தனர்.” என்றான்.
அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அதை கவனித்த சாமுவேல், " சாரா நான் ஒன்றையும் பழிக்கவில்லை, இன்றைய இந்து சமயம் கூட, தென் இந்தியரை, தங்களுக்குள் உள்வாங்க, தங்களின் வேத சமயத்துக்குள், பண்டைய தமிழரின் சைவ சமயத்தை உள்வாங்கியது ஒரு வரலாறு. அதற்காக முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால் → விஷ்ணு ஆனான்! சிவன் → ருத்திரன் ஆனான்! கொற்றவை →பார்வதி / துர்க்கை ஆனாள்! அதற்குத் தக்க புராணங்களும் இயற்றப்பட்டன." என்றான்.
அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அவளின் வாயும் மனமும் உலக நாடுகளின் அன்பு இரட்சகரை துதித்துக்கொண்டு இருந்தது.
"உலக நாடுகளின் அன்பு இரட்சகர்
உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை
குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க
கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"
"வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை
கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட
மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து
அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"
"காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட
மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர்
பாலகன் மேலே விண்மீன் நிற்க
இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"
"ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து
கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி
உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"
Brief of 'When the Candle Met the Question' / Part: 02
The First Christmas
It was their first Christmas as a married couple, still living near Jaffna.
Sarah decorated the house carefully. A small Christmas tree stood near the window. Candles flickered softly. She sang hymns as she worked.
Samuel watched.
“You’re quiet,” she said, smiling.
“I’m thinking,” he replied.
“It’s Jesus’ birthday,” she said naturally.
Samuel hesitated, then asked gently,
“Do you know when he was born?”
Sarah laughed.
“December 25. Everyone knows that.”
Samuel did not argue that night. He only smiled and helped her light the candles.
Love, he knew, must begin with patience.
The Question Enters the House
Weeks later, on an ordinary evening, Samuel opened a history book.
“Sarah,” he said softly,
“did you know that Christmas was officially fixed on December 25 only 340 years after Jesus’ death?”
She looked up.
“Pope Julius I made that declaration,” he continued.
“Before that, Christians remembered Jesus’ birth on March 29, January 6, and even a date in June.”
Sarah frowned.
“Why change it then?”
“Because Europe already had midwinter festivals,” Samuel said.
“Saturnalia. Yule. Pagan celebrations.”
“To convert non-Christians,
Christian leaders merged existing festivals with Christ’s story.”
The room fell silent. Sarah was not angry. But something inside her shifted. Her mouth and mind were filled with praise for the beloved Savior of the world.
"Jesus, devoted redeemer of all nations,
has shone forth,
Let the whole family of the faithful
celebrate the stories
The shining star,
gleaming in the heavens,
makes him known at his birth and,
going before,
has led the Magi to his cradle
Falling down,
they adore the tiny baby hidden in rags,
as they bear witness to the true God
by bringing a mystical gift"
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 03 தொடரும் / Will follow
துளி/DROP: 1951 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02
https://www.facebook.com/groups/978753388866632/posts/32961478550167367/?
By
kandiah Thillaivinayagalingam ·