Jump to content

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா


Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

DaRfRJeU0AUzkfG.jpg

தென்னங்குரும்பையில் தேர்

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220521-073258.jpg

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

நாங்கள் வன்னியில விளையாடினது...

இவை 2000களின் மத்தியில்...

பொருட்கள் கொண்டு விளையாடுவது.

  • நடைவண்டி தள்ளுவது
  • ரயர் ஓட்டுவது
  • தண்ணித்துவக்கு 
  • பேப்பர் ரொக்கெற் - இரொக்கெட்டால வகுப்பறைக்குள் எறிபடுவது.
  • வண்டில் இழுப்பது - ஒரு பாட்டாவினை வெட்டி சில்லாகவும், ஒரு வகையான மருந்துப் போத்தலின் அடிப்பகுதியில் கம்பியைச் சொருகி அதை சில்லுக்குச் சொருகிவிட்டு அந்த மருந்துப் போத்தலின் வாயிலில் நீண்ட தடியைச் சொருகி கையைப் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தினோம். கொஞ்சம் செலவு செய்தால் அந்த வண்டிலின் பின்பக்கத்தில் இழுபொறிக்கு பூட்டுவது போன்ற சில்லுக்கொண்ட பெட்டியைப் பூட்டலாம். நல்ல விளையாட்டு.
  • ஆமியும் இயக்கமும் - நாங்கள் எப்படி விளையாடினாங்கள் எண்டால், ஒரு காவலரண் போன்ற ஒன்றை சிரட்டைகள் மற்றும் செங்கல்கள்/சீமந்துக்கல்கள் கொண்டு அடுக்கிக் கட்டிவிட்டு அதற்குள் இருந்தபடி ஆமியின் முன்னேற்றத்தைத் தடுப்பது போன்ற விளையாட்டு - கற்களால் எறிபடுவது, தண்ணியூற்றி மணலால் செய்யப்பட்ட கற்களை கூடுதலாகப் பயன்படுத்தினோம்; அவை பட்டால் உடைந்துவிடும். தடிகள் கொண்டு துவக்குகளும் உருவாக்குவோம்.  கதை எப்படியெண்டால், ஒரு கன்னை ஆமியாயும் இன்னொரு கன்னை இயக்கமாயும் இருக்கும். ஆமிக்கன்னை முன்னேறி வர அடிதான். பிறகு கன்னை மாறுவம், ஆனால் சில அறுவான்கள் கறுவியம் வைச்சுப்போடுவாங்கள். போன முறை எங்களிட்டை வாங்கினத்துக்கு இந்த முறை எங்களுக்குத் தருவாங்கள். பாவியள். 😂🤣😂🤣

 

கால்களால் விளையாடுவது

  • கீம்ஸ் - இதன் எழுத்தைச்சொல்லி விளையாடுவது. நானிது விளையாடுவது குறைவு. காலை மிதிச்சு மிதிச்சு விளையாடுவது. எனக்கு மறந்துவிட்டது.

 

தொட்டால் பிடிப்பது - ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் ஓடும் ஏனையோரில் ஆரேனும் ஒருவனை துரத்திச்சென்று தொட வேண்டும். பின்னார் அந்த தொடப்பட்டவனே பிடிப்பவர் ஆகுவார். இதில் பல விதிகள் உண்டு.

புளிச்சல் - பந்துகளால் ஒரு கன்னையைச் சேர்ந்தவர் மறு கன்னையைச் சேர்ந்தவர்களுக்கு எறிவது. பட்டுது எண்டால் நல்லாப் புளிச்சுப்போடும்.

பந்தை உயரத்திற்கு எறிந்து பிடிப்பது

 

 

 

அமர்ந்தபடி விளையாடுபவை

கைகளால் விளையாடுவது:- 

  • தக்காளி புக்காளி - இந்தப் பாடலிற்கு ஏற்ப கையை அகம் புறமாக திருப்பி எடுத்து விளையாடுவது. பாடல்: "தக்காளி புக்காளி தர்மத் தக்காளி கப்பல் வந்து பிரண்டடிக்க சுப்பையா." 
  • பென்சிலை வைச்சு ஒரு பாட்டு உள்ளது. அது மறந்துபோனன். அது கலர் பென்சிலின் எப்யரைச் சொல்லச்சொல்ல கைவிரல்களை அதற்கேற்ப மடிப்பது.
  • வாழைக்காய் தோழைக்காய் - இது ஆர் குசு விட்டது என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்துவது. பாடல்: "வாழைக்காய் தோழைக்காய் வண்டியில் ஏத்தற்காய் அஸ் பஸ் குஸ்." கடைசியாக நிற்பவனே அந்த நாறல் வேலையைச் செய்த நன்னாறிப்பயலாகக் கருதப்படுவான். 😂🤣.... ஐயோ பாவம்!

 

பொருட்கள் கொண்டு விளையாடுவது

  • ஆடுபுலி ஆட்டம்
  • மோட்டர் வைத்து விளையாடுவது

 

காட்ஸ் சேகரிப்பு:
கிரிக்கட் காட்ஸ், இந்த மல்யுத்தம் போன்ற சண்டையாளர்களின் படங்கள் பொறித்த காட்ஸ், அதைவிட இன்னபிற காட்ஸ் என்று பல விதமான காட்ஸை சேகரித்து அதை பிறருடன் பரிமாறிக்கொள்வது. இது 2008 இறுதியில் விளையாடத் தொடங்கினேன்.

பூவரசு பீப்பீ - பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதுவது.

 

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள்.......நன்றி நன்னி........!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.