Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மியாவ் said:

தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்...

டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்...

நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்...

இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...

உலகில் வாக்களிப்பது சட்டப் படி விதிக்கப் பட்ட கடமை என்றில்லாத எல்லா நாடுகளிலும் 65- 70 % பேர் வாக்களிப்பது வழமைக்கு மாறானது அல்ல - இது ஒப்பீட்டளவில் நல்ல வாக்களிப்பு வீதமும் கூட! இந்த வாக்களிப்பு வீதத்தால் நீங்கள் விரும்பும் கட்சி வெல்லவில்லையென்பது சப்பைக் கட்டு.

தமிழக மக்கள் நான் அறிந்த வரையில் ஸ்திர நிலையை விரும்புபவர்கள். இங்கே சில சமயங்களில் காட்டப் படும் விம்பம் போல  சினிமாப் பைத்தியங்களோ, முன் யோசனையற்ற மடையர்களோ அல்ல அவர்கள்!

நீங்கள் விரும்பும் கட்சி வெல்ல முடியாமைக்கு மிக முக்கிய காரணம் தூய தமிழ் வாதம் என்ற போர்வையில் பரப்பப் படும் தெலுங்கு உட்பட்ட ஏனைய வம்சாவழியினருக்கெதிரான நிலைப்பாடு. இந்தத் தேவையில்லாத தெலுங்கு/கன்னட/மலையாள எதிர்ப்பு ஆணியை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் கட்சி  தமிழ் நாட்டில் தேர்தலில் வெல்ல முடியாது. அடுத்த 100 ஆண்டுகளில் சில வேளை சாத்தியமாகலாம்!

(வந்தேறி என்ற trigger word இனால் உணர்ச்சி மயப்பட்டு திரியை பிரான்சிலிருந்து தமிழகத்திற்குத் திரியைத் திருப்பியது யார் என்று மேலே சென்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!😎)  

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

உலகில் வாக்களிப்பது சட்டப் படி விதிக்கப் பட்ட கடமை என்றில்லாத எல்லா நாடுகளிலும் 65- 70 % பேர் வாக்களிப்பது வழமைக்கு மாறானது அல்ல - இது ஒப்பீட்டளவில் நல்ல வாக்களிப்பு வீதமும் கூட! இந்த வாக்களிப்பு வீதத்தால் நீங்கள் விரும்பும் கட்சி வெல்லவில்லையென்பது சப்பைக் கட்டு.

பணத்தின் பங்களிப்பு இல்லை என்கிறீர்கள்... 

நன்றி...

Edited by நியானி
நீ/நீர் என ஒருமையில் எழுதல் ஆகாது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மியாவ் said:

பணத்தின் பங்களிப்பு இல்லை என்கிறீர்கள்... 

நன்றி...

சரி, உங்கள் திருப்திக்காக வென்ற கட்சி/கட்சிகள் பணம் கொடுத்து வாக்கு வாங்கின என்று வைத்துக் கொள்வோம் - எடுகோள்!

எத்தனை வீதம்? 90%, 50% அல்லது 5 % - இதில் எந்த வீதமான வாக்குகள் பணத்தினால் வாங்கப் பட்டன?

தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு பணத்திற்காக மட்டுமே தமிழக வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பது அவர்களை அவமானப் படுத்தும் செயல் என நினைக்கிறேன். இதை நிரூபிக்கவோ, பணத்தின் விளைவைக் கணக்கிடவோ ஏதாவது முயற்சிகள் நடந்திருக்கின்றனவா? இது இன்ரர்நெற் யுகம் - காற்றுப் புக முடியாத இடங்களிலும் கமெரா புகக் கூடிய யுகம். இன்னும் 90 கள் போல "பரவலான குற்றச் சாட்டு" என்று நகர்ந்து விட முடியாது - ஆனால் அப்படி நகர்வது உங்களுக்குப் பிடித்தமான கட்சிக்கும் சௌகரியமானது!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

திமுகவின் மொத்த வாக்கு சதவிகிதமே 37%... தாங்கள் குறிப்பிட்டதிலேயே மிக குறைந்த 5% ஐ எடுத்துக்கொண்டாலும் கூட வாக்கு வங்கியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது... இது அதிமுகவிற்கும் பொருந்தும்... இதனுடன் மீடியா...

தேர்தல் வந்தால் தமிழ்நாடு ஒரு திருவிழா கோலமே காணும்... 

தமிழ்நாடு அரசு இன்று கூட (கொரோனா காலத்தில் கூட) டாஸ்மாக் வருமானத்தை மட்டும் தான் பெருமளவில் நம்பி இருக்கிறது என்பதை தாண்டி வேறென்ன உதாரணம் வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் அறியாமையில் இருக்கிறார்கள் என்பதற்கு... 

50 ஆண்டு கால திராவிட ஆட்சி என்று பெருமை வேறு...

--மன்னிக்கவும் இதை தட்டச்சு செய்யும் பொழுது இது அதற்கான திரி இல்லை என்பதனை மூளை சுட்டி காட்டி கொண்டே தான் இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மியாவ் said:

இதற்குரிய திரி இல்லைத் தான் என்றாலும், மறைமுகமாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

ஆனால், நீங்கள் நேரடியாகப் பதில் தரவில்லையே? அந்த 5% வாக்குகள் பணம் மூலம் வாங்கப் பட்டதை ஒரு honeypot operation மூலமாவது கண்டறிய முடியாதா? ஏனெனில், தேர்தலுக்கு முன்னரே "பணம், வாக்களிப்பு இயந்திரம்" இவையெல்லாம் பற்றி சந்தேகங்கள் தெரிவிக்கப் பட்டனவே? ஏன் அலேர்ட் ஆகி ஒரு ஆதாரம் கூட திரட்ட முடியவில்லை? உங்கள் கட்சி முழுவதும் படித்த தம்பிகள் அல்லவா?

எனவே தான் நான்  சும்மா குற்றச் சாட்டை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் தோல்விக்கு முழு விளக்கம் தர முடியாதெனச் சொல்கிறேன்.

டாஸ்மாக்கைப் பின் தொடரும் ஒரு சனத்தொகை இருக்கும் தான்! ஆனால், அவர்களால் பாரிய விளைவா என்றல்லவா நான் கேட்கிறேன்?

எங்கள் ஊரில் கோத்தா வென்றது சீனப் பணத்தினால் என்று சிலர் இங்கே சொல்வர். ஆனால், ஈஸ்ரர் குண்டு வெடிப்பின் விளைவே அவர் வெற்றி. இப்படி பிரதான காரணம் ஏதோ இருக்க, நீங்கள் சூழ் நிலைச் சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு பிழையான மதிப்பீடு செய்கிறீர்கள் என நான் கருதுகிறேன். இதற்கு மேல் உங்கள் இஷ்டம்!

20 hours ago, குமாரசாமி said:

சார்! ஏனைய கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக ஊடகங்களில் பகிரங்கமாக செய்திகள் வந்தது. அதை மறுத்தோ அல்லது எதிர்ப்பு அறிக்கைகள் விடுத்தோ எந்த கட்சியும் மறுப்பறிக்கைகள் விடவில்லை.
இப்படியிருக்கும் போது  தங்களின் புளகாங்கிதம் ஒருவித வக்கிரமமாகவே தெரிகின்றது.
கோழி குருடாய் இருந்தாலும் நமக்கு குழம்பு முக்கியம் பீலிங் ....

வாக்குக்கு பணம் கொடுக்கப்படவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா?
 
தென்கிழக்காசிய நாடுகளில் தேர்தல் தில்லு முல்லுகள் நடப்பது தெரிந்த‍தே.அதை இல்லை என்று முழுவதுமாக யாரும் நிரூபிக்கவும் முடியாது  அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல. .  2005 ஜனாதிபதி தேர்தலில் புலிகளுக்கு பணம் கொடுத்து வன்னி வாக்காளர்கள் தடுக்கபட்டதால் மகிந்த வெற்றி பெற்றார் என்ற குற்றசாட்டும் உண்டு. இது தொடர்பாக  யார் மூலமாக பணம் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் வந்த‍த‍து.  அதை யாராலும் நிரூபிக்க முடியாது.  அது தென்னாசியா நாடுகள் முழுவதும் உள்ளவை தான். 

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்கு போடும் வாக்கு தேர்தலை தீர்மானிக்கிறது என்பதை ஏற்க முடியாது.

1. திமுக அளவுக்கு, அதை விட அதிக பணப் பட்டுவாடா செய்யும் கட்சி அதிமுக.

2. அதிமுகவையே பணநாயகத்தில் ஆர்கே நகரில் வீழ்தியவர் தினகரன். ஒருமுறை இதுக்காகவே தேர்தல் பிற்போடபட்டது. அப்படியும் வென்றார்.

3. இந்த முறை ஆட்சியில் இருந்தது அதிமுக. மத்தியில் பாஜக. இவர்கள் மிக உக்கிரமக தி மு க பணம் கொடுப்பதை கண்காணித்து தடுத்தார்கள். இதே யாழ்களத்தில் கூட பல கருத்தாளர்கள் திமுகவை தடுத்து விட்டு அதிமுக இலகுவாக பணம் சப்ளை செய்கிறார்கள் எனவே அதிமுக வெல்ல போகிறது என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள் 🤣.

4. நடந்தது என்ன? ஆட்சியில் இல்லாத திமுக பெரு வெற்றி. நடப்பது பணநாயகம் என்றால் அதிமுக வென்றிருக்க வேண்டும்.

பிகு

பணம் இடை தேர்தல்களில் விளையாடலாம். இதை அழகிரி திருமங்கலம் இடைதேர்தலில் அறிமுக படுத்தினார். அதனால்தான் இதை திருமங்கலம் பார்மூலா என்பார்கள்.

ஆனால் பொது தேர்தல்களில் பணம் பெரிய பாதிப்பை தருவதில்லை. அப்படி தருவதாகின் ஒரு போதும் ஆளும் கட்சி 120 சீட்டுக்கு கீழே எடுக்க கூடாது.

இங்கே கருத்து எழுதுபவர்கள் எல்லாரையும் விட தமிழ்நாட்டு வாக்காளர்கள் புத்திசாலிகள்.

தேர்தலில் பணம் கொடுப்பது என்பது ஒரு சடங்காகி விட்ட தேசத்தில், எல்லாரிடமும் வாங்கி கொண்டு தமக்கு நல்லது செய்வார்கள் என நினைப்போருக்கே அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

👆🏼 இந்த அணுகுமுறை சீமானே முன்னர் பரிந்துரைத்த அணுகுமுறைதான் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

தென்கிழக்காசிய நாடுகளில் தேர்தல் தில்லு முல்லுகள் நடப்பது தெரிந்த‍தே.அதை இல்லை என்று முழுவதுமாக யாரும் நிரூபிக்கவும் முடியாது  அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல. .  2005 ஜனாதிபதி தேர்தலில் புலிகளுக்கு பணம் கொடுத்து வன்னி வாக்காளர்கள் தடுக்கபட்டதால் மகிந்த வெற்றி பெற்றார் என்ற குற்றசாட்டும் உண்டு. இது தொடர்பாக  யார் மூலமாக பணம் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் வந்த‍த‍து.  அதை யாராலும் நிரூபிக்க முடியாது.  அது தென்னாசியா நாடுகள் முழுவதும் உள்ளவை தான். 

எதுக்கு எடுத்தாலும் புலிகளை இழுப்பதே உங்களுக்கு. உங்களுக்கு வேறை பிரச்சினை எண்டது விளங்குது. புலிகளை இழுக்காமல் ஒரு கருத்து என்றாலும் எழுதமுடியுதோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

எதுக்கு எடுத்தாலும் புலிகளை இழுப்பதே உங்களுக்கு. உங்களுக்கு வேறை பிரச்சினை எண்டது விளங்குது. புலிகளை இழுக்காமல் ஒரு கருத்து என்றாலும் எழுதமுடியுதோ தெரியாது

இதை  வேண்டாம்  என்று எழுதி எழுதி களைத்து

கடைசியில் கடுமையான  வார்த்தையில் வந்து  நிற்கின்றேன்

அடுத்தது  தூசணம்???😢

Edited by விசுகு
பிழை திருத்தம்

3 hours ago, வாதவூரான் said:

எதுக்கு எடுத்தாலும் புலிகளை இழுப்பதே உங்களுக்கு. உங்களுக்கு வேறை பிரச்சினை எண்டது விளங்குது. புலிகளை இழுக்காமல் ஒரு கருத்து என்றாலும் எழுதமுடியுதோ தெரியாது

ஆசியாக்கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட அளவுக்கு தேர்தல் தில்லு முல்லுகள் உள்ள நிலையில் தமிழ் நாட்டில் தமது கட்சி வெல்லவில்லை என்ற விரக்தியில் அதை பெருப்பித்து தமிழ் நாட்டின் தேர்தலில் மட்டும் தான் தில்லு முல்லு  என்று பிரச்சாரம் செய்யும் போது அங்கு மட்டுமல்ல  நம் முதுகிலும் அழுக்கு உள்ளது தான் என்பதை புரியும்படி கூறவேண்டியதாயற்று. அவ்வளவுதான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.