Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில்  கண்டுபிடிப்பு

கேபரான்:
 
உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.
 
இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தில் ஒரு கோளே வைரமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

பிரபஞ்சத்தில் ஒரு கோளே வைரமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா...

இயலுமானவரை, பௌதிக விஞ்ஞானம்  இல்லாமல், இலகு தமிழில் சொல்கிறேன்.  

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

அல்லது  நட்சத்திரங்கள் வெடித்து, பின் அவற்றுக்குள்ளேயே இடிந்து (இப்படியே கருந்துளை உருவாக்குவது, நட்சத்திரங்கள் போதிய அளவு பருமன் இருந்தால்) கருந்துளை உருவாகாமல், அதற்கு முதல் படிகளில் உள்ள தன்மையை அடையும் போது (pulsar, neutorn star, dwarf), முக்கியமாக dwarf ஆக மாறும் போது (ஏனெனில் இந்த நிலையில் அநேகமாக carbon மற்றும் oxygen, ஏறத்தாழ வியாழனி அல்லது அதனிலும் கூடிய  பருமனில், அதற்குலேயே இடிந்து நொருங்கும் நிலை),  உருவாக கூடிய சாத்தியக்  கூறுகள் இருக்கிறது.  
 
  மேலதிக ஆர்வம் இருந்தால், இணைப்பை வாசித்து பாருங்கள் (எச்சரிக்கை: அறிய முற்பட்டால், ஓர் போதையாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு) .

http://content.time.com/time/health/article/0,8599,2090471,00.html

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர்களாலேயே வித்தியாசம் கண்டுபிடிக்க கஸ்டமாக இருக்கும் செயற்கை வைரம் வந்திட்டாம் என்று எங்கோ படித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இயலுமானவரை, பௌதிக விஞ்ஞானம்  இல்லாமல், இலகு தமிழில் சொல்கிறேன்.  

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

அல்லது  நட்சத்திரங்கள் வெடித்து, பின் அவற்றுக்குள்ளேயே இடிந்து (இப்படியே கருந்துளை உருவாக்குவது, நட்சத்திரங்கள் போதிய அளவு பருமன் இருந்தால்) கருந்துளை உருவாகாமல், அதற்கு முதல் படிகளில் உள்ள தன்மையை அடையும் போது (pulsar, neutorn star, dwarf), முக்கியமாக dwarf ஆக மாறும் போது (ஏனெனில் இந்த நிலையில் அநேகமாக carbon மற்றும் oxygen, ஏறத்தாழ வியாழனி அல்லது அதனிலும் கூடிய  பருமனில், அதற்குலேயே இடிந்து நொருங்கும் நிலை),  உருவாக கூடிய சாத்தியக்  கூறுகள் இருக்கிறது.  
 
  மேலதிக ஆர்வம் இருந்தால், இணைப்பை வாசித்து பாருங்கள் (எச்சரிக்கை: அறிய முற்பட்டால், ஓர் போதையாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு) .

http://content.time.com/time/health/article/0,8599,2090471,00.html

ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்...

கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன...

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

மன்னிக்கவும். மிகவும் தவறான  விளக்கத்தை தந்துவிட்டேன்.  

ஆம் ஒளியையே புதைக்கக்கூடிய ஈர்ப்பை கொண்ட கருந்துளையில்,  வைரங்கள் எம்மாத்திரம்?  

கருந்துளை என்பதே மிக கூடிய திணிவு ஓர் புள்ளியில் ஒருங்கியுள்ளது (SINGULARITY) எனும் பொழுது, வைரத்துக்கு இடம் ஏது?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இந்த பிரபஞ்சம் குறித்து சிந்தித்தாலே தலை சுற்றும்.

நாம் வாழும், உலகம், இன்னோரு கிரகத்தின், நரக லோகமாக இருக்கலாம் யார் கண்டது என்றும் ஒரு கவி கிறுக்கி இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

இந்த பிரபஞ்சம் குறித்து சிந்தித்தாலே தலை சுற்றும்.

நாம் வாழும், உலகம், இன்னோரு கிரகத்தின், நரக லோகமாக இருக்கலாம் யார் கண்டது என்றும் ஒரு கவி கிறுக்கி இருக்கிறார். 

வேரொறுவரின் கனவில் கூட இந்த உலகமானது இயங்கி கொண்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் அறிவியல் உலகில் உலவி வருகிறது...

--Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...

6 hours ago, Kadancha said:

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

சி வி இராமனின் மைத்துனர் இல்லை, சகோதரனின் மகன், சி வி இராமன் இவரது சித்தப்பா ஆவார். இவர் லாகூரில் பிறந்தவர், சிக்காகோவில் காலமானார்.. அத்துடன் இவர்கள் இருவரும் பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

அவரின் நினைவாகவே அமெரிக்காவினால்  “Chandra X-ray Observatory” விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

-Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...

இதை பற்றி ஒரு டிவி நிகழ்சி 20 வருடங்களுக்கு முன் பார்த்தேன். பிபிசி என நினைகிறேன்.

உலகில் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த 2ம் உலகில் எதிர்மாறாக நடக்குமாம்.

இதோ அந்த நிகழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதை பற்றி ஒரு டிவி நிகழ்சி 20 வருடங்களுக்கு முன் பார்த்தேன். பிபிசி என நினைகிறேன்.

உலகில் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த 2ம் உலகில் எதிர்மாறாக நடக்குமாம்.

இதோ அந்த நிகழ்ச்சி.

நல்ல தீனி... பொறுமையாக பார்க்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில படம் தி மண்டேலா எஃபக்ட் (The Mandela Effect) படத்தில் Parallel universe பற்றி அழகாக காட்டி இருப்பார்கள்...

இந்த படத்தில் கோடிட்டு காட்ட வேண்டிய இடம் என்றால் ஒரு பெண் குழந்தை விளையாட்டு பொம்மையை எடுத்து கொண்டு தன் பெற்றோர்களின் மேற்பார்வையில் கடலுக்குள் குளிக்க சென்று இறந்து விடும்... அதே குழந்தை படம் முடியும் தருவாயில் பொம்மையை எடுத்து கொண்டு ஓடுகையில் குழந்தையின் தந்தை அந்த பொம்மையை வைத்துவிட்டு விளையாட செல்லுமாறு கேட்பதனில் அடங்கி இருக்கிறது சூட்சுமம்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பழுவூர்கிழான் said:

பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

இதையும் நினைத்து விட்டு எழுத மறந்து விட்டேன். நன்றி.

ஆனால், இவரின் கலாநிதி செய்த மாணவர்கள் இருவர், இவருக்கு  முதல் நோபல் பரிசை பெற்றார்கள்.

இவர் UK இல் நிறவாத பிரச்சனைக்கு முகம் கொடுத்தே, US வந்தவர்.

பிரச்னை தோடங்கியது  Arthur Eddington, einsteen இந்த எதிர்வு கூறலான பெரிய திணிவுகள்  ஒளியை வளைக்கும் என்பதை einsteen சொல்லிய  சூரிய கிரகணத்தை கொண்டு  பரிசோதனை செய்து பொது சார்பு தத்துவத்தின் முக்கிய பகுதியை யதார்த்தமாக சரி பார்த்தவர். 

https://www.nature.com/articles/435020a
 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2021 at 21:31, மியாவ் said:

ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்...

கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன...

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...

(1)

பதில் பிந்தியது தான். ஆம், அல்லது இல்லை என்ற  பதில் விளக்கத்தை ஏற்படுத்தாது. இது எனது ஒழுங்கற்ற பொழுது போக்குகளில் ஒன்று. மீண்டும் சில விடயங்களை சரி பார்த்து (refresh), அளவான மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதால் பிந்திவிட்டது. 

சற்று விரிவாக பார்ப்பதால், பகுதி பகுதியாக பார்ப்போம். இன்னொரு காரணம், உங்களுக்கு  மட்டம் கூடினால்,  விலா வாரியின் ஆழத்தை குறைக்குமாறு நீங்கள் சொல்லலாம்.  

சிறிய ஓர் மனப் பரிசோதனையோடு தொடங்குவோம். காரணம் பின்பு தெரியும்.
 
ஒருவரியில் கூறுவதானால் , கருந்துளை என்பது, கற்பனைக்கு அப்பாற்பட்ட திணிவை (ஆக குறைந்தது, முன்பு சொல்லிய Chandra Shekar Limit - எமது சூரியனின் திணிவின் 1.4 மடங்கிலும் அதிகமாக), கற்பனைக்கு உள்ளேயும் காணமுடியாத சிறிய பரிமாணத்துக்குள்ளே (புள்ளியில் ??? - எவருக்கும்  தெரியாது) தங்கி வைத்து உள்ளது. 

ஆகவே, கருந்துளையின் அடர்த்தியும்  (அடர்த்தியின் பௌதிக வரைவிலக்கணம் - ஓர் குறிப்பிட்ட கன அளவில் (volume) இருக்கும் திணிவு (mass) ) கற்பனைக்கு அப்பாற்றப்பட்டது. அடர்த்தி என்பதும், செறிவு  என்பதும்  வேறு வேறான  அளவீடுகள் விஞ்ஞானத்தில். எனவே, செறிவு என்பது உங்களுக்கு தெரிந்தால், அடர்த்தியும் தெரிந்து இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது.

ஆனால், கருந்துளையின் பரிமாணம் புள்ளி அளவு என்பது உண்மையாய் இருக்கும் என்றால், புள்ளி பரிமாணம் அற்றதால் (புள்ளியின் கன  அளவு 0) - விளைவு, தூய கணித முடிவிலியை (எந்த கணித விற்பன்னருக்கு கூட கற்பனையிலேயே வேறு எவருக்கும் உணர்த்த முடியும், இதுவரையில்)   பௌதிகமாக, நிதர்சனத்தில்  மனித வர்க்கம் உணர்கிறது, முடிவிலியை (அதாவது கருந்துளையை) பற்றிய  பல தரவுகளையும் (data) செய்மதிகள், மிகவும் நுண்திறன் கொண்ட விண்வெளி தொலை நோக்கு கருவி (பெயர் Hubble) போன்றவற்றால் பெறுகிறது. 

தூய கணித கற்பனையில் உள்ள முடிவிலி என்பது ஒன்றித்த முடிவிலி. ஏனெனில், எந்த எண்ணையும், பூச்சியதால் வகுத்தால் விளைவு முடிவிலி அல்லது கற்பனைக்கு அப்பாற்றப்பட்ட மிகப் பெரிய எண் (அதாவது, உ.ம். ஆக, 2/0 - முடிவிலி, 37/ 0 - முடிவிலி,  1000 / 0 - முடிவிலி ..., எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு முடிவிலி, தூய கணித கற்பனையில்).  எனவே இதில் வரும் இன்னொரு உப முடிவு,   தூய கணித கற்பனையில் உள்ள ஒன்றித்த முடிவிலியிலும், வேறு வேறான பௌதிக முடிவிலிகள் உண்டு என்பது.  அதாவது, உ.ம். ஆக, 2/0, 37/ 0, 1000 / 0 என்பது  போன்றவைகல் எல்லாமே வேறு வேறான முடிவிலிகள், ஏனெனில், கருந்துளைகளின் திணிவு வேறுபடலாம் என்பதால். 

இன்னுமொரு சிந்தனைக்கும் இது வழி சமைக்கிறது. வேறு, வேறு முடிவிலிகள் இருப்பதால், பூச்சியத்திலும் வேறு வேறான பூச்சியங்கள் (பௌதிக அடிப்படையில்) இருக்கிறதா?    

இந்த மனபரிசோதனைக்கு காரணம்,  கருந்துளை பற்றிய குறித்த அறிவை பெறுவதை விட (அடிப்படை அறிவு தேவை, அது பொதுவாக அடிப்படை பௌதிகம் தான்) , அது பற்றி எவ்வாறு சிந்திக்கப்படுகிறது என்பதை அறிவதே பொருத்தம். ஏனெனில், கருந்துளைக்கு மிகவும் சமீபமாக கூட இதுவரையில் பயணிக்க முடியாது!!             

இன்னொரு காரணம், அதி உயர் தூய கணிதம் - (பிரோயக கணிதம், பொறியியற் கணிதம்  ஒரு விதத்தில் பௌதிகத்தின் ஓர் கிளை) - பௌதிகம், ஓருடலும் ஈருயிரும் போல என்பதை அறியவும்.     

 அடுத்த பகுதியை பார்க்க முதல், இந்த மட்டம் உங்களுக்கு பொருத்தமானதா என்பதை அறியத்தரவும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மறந்து விட்டேன்.  

உ.ம். ஆக, 2/0 - முடிவிலி, 37/ 0 - முடிவிலி,  1000 / 0 - முடிவிலி போன்ற முடிவிலிகள், உண்மையில் முடிவிலிகள் தானா? ஏனெனில், பௌதிக அடிப்படையில், 1.4 சூரியத் திணிவிலும் கூடிய திணிவு புள்ளியில் அடக்கப்படும் என்பது உண்மையாய் இருக்கும் பொது தான்  முடிவிலியின் பௌதிக யதார்த்தத்தை காண்கிறோம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.