Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளியேன் : யாருக்காகவும் எனது கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

 

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில்; நான் வெற்றி பெற்ற பின்னர் என்னிடம் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்காகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் மக்களிடம் காண்பிக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாட்டுக்கான எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதாகவே காணப்பட்டது. மக்களின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இன மற்றும் மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து ஏனையோருக்கு பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

gotabaya-12.jpg

எரிபொருள் விலை அதிகரிப்பு, உரப்பற்றாக்குறை, கொவிட் பரவல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நாடு முகங்கொடுத்துள்ள நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விசேட உரையில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு :

கொவிட் தாக்கம் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்த நாடுகள், தற்போது அதன் பாதிப்பைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளன. அந்நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெருமளவானோருக்குத் தடுப்பூசி ஏற்றியதனாலேயே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சில நாடுகளால் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்பட்டாலும்,  இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் தமது மக்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகளும் உள்ளன.

இலங்கைக்குத் தடுப்பூசியைக் கொண்டுவருவது தொடர்பில், கடந்த காலத்தில் நான் விஷேட கவனம் செலுத்தியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன், தனிப்பட்ட முறையில் உரையாடினேன். கடிதத் தொடர்புகள் மூலமும், கோரிக்கை விடுத்திருந்தேன். எமது வெளிநாட்டு அமைச்சின் ஊடாகவும் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடினோம். எமது அதிகாரிகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே, இம்முயற்சிகளின் நோக்கமாகும். இந்த முயற்சிகளின் பயனாக, ஒவ்வொரு மாதமும் எமக்குத் தேவையான பெருமளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். தற்போது வரையில், 12 64 000 அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், 31 இலட்சம் சனோஃபாம், 1 30 000 ஸ்புட்னிக் உள்ளடங்களாக, 44 94 000 தடுப்பூசிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. தற்போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் மொத்தச் சனத்தொகையில், சுமார் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில், 4 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 இலட்சம் சைனோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. அதேபோன்று, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 இலட்சம் மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.

இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய பெரும் எதிர்பார்ப்புடனேயே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். எத்தகைய பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட மாட்டாது எனக் கருதப்பட்ட எல்.டி.டி.ஈ. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று நாம் பொறுப்பேற்றதைப் போன்று, நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவித்து, மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துக்காக, நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்.

தேசிய பாதுகாப்பு

நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றேன். எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, நாம் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அத்துடன், தற்காலத்தைப் பற்றியும் மிகச்சரியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதே, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அன்று இந்த நாட்டு மக்கள், மத அடிப்படைவாதம் குறித்து பெரும் அச்சம் கொண்டிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன், எமது நாட்டின் பாதுகாப்புப் பொறிமுறை, பெரிதும் பலவீனப்பட்டிருப்பதை மக்கள் விளங்கிக்கொண்டனர்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்கள் காரணமாக, எமது புலனாய்வுத்துறை மிகவும் பலவீனப்பட்டிருந்தது. எமது பாதுகாப்புத்துறை, சர்வதேச மட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது. எமது புனிதஸ்தலங்கள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டிருந்தன. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பகிரங்கமாக அழிவுக்கு உள்ளாக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட பயங்கரவாதம், மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் மீண்டும் உருவாகியிருந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பில், நாம் தற்போது பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். பொறுப்புக் கூறவேண்டிய பதவிகளுக்கு, பொருத்தமான அதிகாரிகளை நியமித்துள்ளோம். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பாதுகாப்புத் துறையினரின் மனநிலையை, நாம் மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். அன்று பலவீனப்பட்டிருந்த புலனாய்வுத் துறையை, மீண்டும் ஒழுங்கமைத்தோம். கடந்த ஆட்சிக் காலத்தில் மறக்கடிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் திட்டங்களை, மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

நாட்டுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்த பாதாள உலகக் குழுவினரை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் பிரச்சினையை ஒரே தடவையில் தீர்ப்பது கடினம் என்றபோதும், அதனைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளோம். முழுமையாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

சகல இனத்தவர்களின் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டுள்ளது

எமது பாரம்பரியம், எமது கலாசாரம், தேசியம் என்பவற்றைப் பற்றி கதைப்பது இழிவாக கருதப்பட்டு வந்த யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கிறோம். அனைத்து இனத்தவர்களும் அனைத்து மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து, அடுத்தவருக்குப் பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளோம். கடந்த காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த, முஹூது விகாரை, கூரகல, தீகவாபி போன்ற கலாசார, மத மரபுரிமைகளை நாம் பாதுகாத்துள்ளோம். இன்று இந்த நாட்டின் ஒருமைப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை.  

 

உள்நாட்டு விவகாரங்களில் அந்நியர்களுக்கு இடமளியோம்

 

அதேபோன்று, எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு, இந்த அரசாங்கம் எவருக்கும் இடமளிக்க மாட்டாது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

பொருளாதாரம்

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே, எமது மற்றமொரு முக்கிய சவாலாக இருந்தது. இதற்கான சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில், நாம் முகங்கொடுத்த முக்கிய சவால்கள், அவற்றை நாம் எதிர்கொண்ட விதம் பற்றி மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டில் உருவான புதிய அரசாங்கத்திடம் இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கும் போது, எம்மிடம் பலமானதொரு பொருளாதாரம் இருந்தது. சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன். ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம். நாட்டுக்குப் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. ரூபாயின் பெறுமதி ஸ்திரமான நிலையில் இருந்தது. வெளிநாட்டு இருப்பு பலமானதாக இருந்தது. கடன்சுமை தளர்த்தப்பட்டு இருந்ததுடன், முழு நாடுமே ஒரு தொழில் நிலையமாக மாறி, துரித அபிவிருத்திகள் கண்டுவந்தன.

2015 - 2019 வரையான காலப்பகுதியில் கொவிட் மற்றும் ஏனைய எந்தவொரு பாதிப்புக்கள் இல்லாத போதிலும் அப்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக, எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 2019 ஆம் ஆண்டாகும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2.1 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அரசுக் கடன் 7,400 பில்லியன் ரூபாவில் இருந்து 13,000 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் மீதான வரிச்சுமை, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. ரூபாயின் பெறுமதியில் தளம்பல் ஏற்பட்டு, பொருட்களின் விலையும் அதிகளவு அதிகரித்துக் காணப்பட்டது. ஏற்றுமதி வருமானம் குறைந்து, வெளிநாட்டு இருப்பும் பலவீனமடைந்திருந்தது.

கொவிட் பரவல் ஆரம்பம்

இவ்வாறு வீழ்ச்சி கண்டிருந்த ஒரு பொருளாதாரத்துடன் தான், நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். என்றாலும், அந்த யதார்த்தத்தை மிகச் சரியாக விளங்கிக்கொண்டு, முறையானதொரு திட்டத்துடன் தான் நாம் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்தோம். எதிர்பாராத விதமாக, எமது நாட்டில் மட்டுமன்றி, முழு உலகத்துக்குமே பிரச்சினையாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மாறியது. அதனால், அந்தத் திட்டங்களை நாம் எதிர்பார்த்த வகையில் நடைமுறைப்படுத்த முடியாததொரு சூழ்நிலை உருவானது. நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்கு முன்னர், கொவிட் 19 தொற்று சீனாவில் ஆரம்பித்து, முழு உலகிலும் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், இந்நோய் பற்றிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கத் தேவையான அறிவு, எந்தவொரு நாட்டிடமும் இருக்கவில்லை. உலகச் சுகாதார ஸ்தாபனமும், இதனை வியப்புடனேயே பார்த்தது.

தொற்றுப் பரவலின் தன்மையைப் புரிந்துகொண்ட உடனேயே, மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், சிறந்த நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஜனாதிபதிச் செயலணியை ஸ்தாபித்து, எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நிலைமையையும் முகங்கொடுக்கத் தயாரானோம்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளியேன் : யாருக்காகவும் எனது கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை - ஜனாதிபதி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால, சீனாக்காரன் உள்ள நிண்டு மேயிறான்.

திஸ்ஸமகாராம குளம் எப்படி சீனா ஆமிக்காரன் சுத்தம் பண்ணுறான் எண்டால், அதே எனக்கு தெரியாதே எண்டுறார் கெஹிலிய. 

சிங்களவனுக்கு கூட்டமா சேர்ந்தா ஒரு வெறி வரும். ஆனால் ஒன்று பிழை என்றால், தயங்கமால் ஒரு வசனம் சொல்வார்கள், 'அனே வேரதி நேத' (இது பிழைதானே) என்பார்கள்.

தமிழனுக்கு ஒரு துண்டு நிலம் தர ஏலாது எண்டு சீனாக்காரனுக்கு தூக்கி கொடுத்தது சிங்களவனுக்கு குடைச்சல். தமிழனுக்கு கொடுக்கவில்லையே என்று அல்ல. சீனாக்காரன் முழுவதும் எடுத்து விடுவான் என்ற பயத்தில்.

கோத்தா, நாளை அமெரிக்கா போய் விடுவார், நாம் எங்க போறது என்று சொல்லும் சிங்களவர்கள் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனால் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்,சர்வதே வியாபாரத்துக்கு அச்சுறுத்தால் இப்படி பெரிய பெரிய விசயம் எல்லாம் இருக்கு கண்டியளோ ஒரு நாட்டை அமைதியாக நடத்துவதற்கு ....நீங்கள் உங்கன்ட குடும்பம் தான் சிறிலங்கா அவையளுக்கு பாதுகாப்பு அளித்தால் சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நினைக்கிறீயள்

ஒரு அண்ணன் சீனாவுக்கு 
ஒரு அண்ணன் அமெரிக்காவுக்கு 
நீங்கள் இந்தியாவுக்கு என அழைய வேண்டிய நிலை இதில தேசிய பாதுகாபு பற்றி அறிக்கை வேறு.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

 பொறுப்புக் கூறவேண்டிய பதவிகளுக்கு, பொருத்தமான அதிகாரிகளை நியமித்துள்ளோம்.

ம். இராணுவத்தை நியமித்து யாரும் கேள்வி கேட்க்காதபடி அடக்கி வைத்திருக்கிறார்.

7 hours ago, பிழம்பு said:

பாதாள உலகக் குழுவினரை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் பிரச்சினையை ஒரே தடவையில் தீர்ப்பது கடினம் என்றபோதும், அதனைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளோம்.

அதன் அங்கத்தவர்கள் யாவரும் இப்போ அரச கட்டிலில்.

 

8 hours ago, பிழம்பு said:

கடந்த காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த, முஹூது விகாரை, கூரகல, தீகவாபி போன்ற கலாசார, மத மரபுரிமைகளை நாம் பாதுகாத்துள்ளோம்.

 இதென்ன புதுக்கதை? ஒருவேளை அமெரிக்கா கைப்பற்றியிருந்துதோ?

8 hours ago, பிழம்பு said:

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், சிறந்த நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஜனாதிபதிச் செயலணியை ஸ்தாபித்து, எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நிலைமையையும் முகங்கொடுக்கத் தயாரானோம்

எல்லாமே இராணுவம் கையாளுது. அதிலெங்கே மருத்துவர், சுகாதார நிபுணர்  பணியாற்றுகின்றனர்? தங்கள் பணிக்கு இடையூறு செய்யப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனரே?

 

8 hours ago, பிழம்பு said:

தற்போது வரையில், 12 64 000 அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், 31 இலட்சம் சனோஃபாம், 1 30 000 ஸ்புட்னிக் உள்ளடங்களாக, 44 94 000 தடுப்பூசிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன.

எப்போதும் கேக்கிற பிச்சையை இப்போ ஊசியாய் கேக்கினம்.

8 hours ago, பிழம்பு said:

ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம்.

முதற்தர பகிடி. கடன் வாங்கி கடன் அடைத்ததை மக்கள் அறியவில்லை என்று நினைத்தாரோ?

 

8 hours ago, பிழம்பு said:

எமது பாரம்பரியம், எமது கலாசாரம், தேசியம் என்பவற்றைப் பற்றி கதைப்பது இழிவாக கருதப்பட்டு வந்த யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம்.

கனவு கண்டாரோ? அல்லது மக்களை ஏமாற்றுகிறாரோ? நல்லாய் அடிச்சு விடுகிறார் யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற தைரியத்தில். 

யப்போய் வடக்கன் ஏதும் வடை
 சுட வெளிக்கிட்டு கண்டுபிடிச்சு விட்டாங்களோ

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.!  தீஞ்ச மண்டை.. பொக்கற்ல எட்டனா, காலணா இருந்தா தர்மம் பண்ணுங்க..☺️.😊

Screenshot-2021-06-26-11-12-14-955-org-m

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.