Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த நாள் "கரும்புலிகள் நாள்":

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த நாள் "கரும்புலிகள் நாள்": சு.ப.தமிழ்ச்செல்வன்

[வியாழக்கிழமை, 5 யூலை 2007, 15:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

எமது இனத்தின் பெருமையையும் வீரத்தையும் உலகறியச் செய்த மிக முக்கியமான ஒருநாள் "கரும்புலிகள் நாள்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் சந்திரன் நினைவு சிறுவர் பூங்கா திறப்பு நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய சிறப்புரை:

எமது குழந்தைகள் சிரித்து வாழவேண்டும். மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை கொடுத்த அந்த உன்னதமானவர்களின் இந்த நாளில் நாம் இந்தப் பூங்காவை திறந்து வைப்பதில் பெருமிதமடைகின்றோம்.

20070705001ja9.jpg

Shot with NIKON D70

20070705003xm5.jpg

Shot with NIKON D70

20070705004pe7.jpg

Shot with NIKON D70

எமது தேசியத் தலைவர் எமது இளம் தலைமுறையினர் அறிவில் சிந்தனையாளர்களாக வாழ்ந்து உடல், உள ஆரோக்கிய மேம்பாட்டுடன் வாழவேண்டும் என்கின்ற ஆர்வமுடைய திட்டத்தின் அடிப்படையில் அவருடைய வழிகாட்டலின் அடிப்படையில் நாங்கள் பல வேலைத்திட்டங்களை நமது மண்ணில்- போர்ச் சூழல்களுக்கும் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.

எமது இளம் தலைமுறையினரை ஆரோக்கியமாக உடல், உள வளர்ச்சியோடும் சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்கின்ற அக்கறையோடும், ஆர்வத்தோடும் வழிகாட்டி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஒரு முயற்சியாகவும் இன்று இந்த மாவீரன் லெப். கேணல் சந்திரன் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

20070705005ei9.jpg

Shot with NIKON D70

20070705006fu4.jpg

Shot with NIKON D70

20070705007yo0.jpg

Shot with NIKON D70

லெப். கேணல் சந்திரனின் நினைவாக இந்தப் பூங்கா திறந்து வைக்கப்பட வேண்டும் என்பது எல்லோரது எண்ணமாகும். ஏனெனில் ஒரு காலத்தில் வன்னியில் மிகச் சிறப்பான மக்கள் வேலைத்திட்டத்தை ஒரு அரசியல் போராளியாக இருந்து முன்னெடுத்தவர். இந்த வன்னி மண்ணிலேயே இரு தசாப்தங்கள் முடிந்தாலும் அவருடைய பெயரை எமது மக்கள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தளவுக்கு எமது மக்கள் மத்தியில் அரும்பணியாற்றி உயர்ந்த உன்னதமான ஒரு மாவீரன்தான் எங்கள் லெப். கேணல் சந்திரன்.

மக்களோடும் இளைய தலைமுறையினரோடும் மிகவும் அர்ப்பணிப்போடும் பெரும் இடர்களுக்கும் மத்தியில் வாழ்ந்த மாவீரன் சந்திரன் என்றார் அவர்.

20070705008vt2.jpg

Shot with NIKON D70

20070705009ge5.jpg

Shot with NIKON D70

கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாராகிய திருமதி பொன். தியாகம் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை தளபதி கேணல் தீபன் ஏற்றினார்.

லெப். கேணல் சந்திரன் திருவுருவச் சிலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் திரைநீக்கம் செய்து, ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.

20070705010lw0.jpg

Shot with NIKON D70

20070705011qi1.jpg

Shot with NIKON D70

தளபதி கேணல் தீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறை, நிதிப் பொறுப்பாளர் தமிழ்க்குமரன், அருட்திரு பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் ஆகியோரும் மலர் மாலைகளை அணிவித்தனர்.

சிறுவர் பூங்கா பெயர்ப்பலகையினை நிதித்துறை, நிதிப்பொறுப்பாளர் தமிழ்க்குமரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

சிறுவர் விளையாட்டு முற்றத்தினை மாவீரர் கேணல் சங்கரின் துணைவியார் திருமதி குகா சங்கர், தொங்கு பாலத்தினை இரண்டு மாவீரர்களின் தந்தையாரான தங்கராஜர், சிறுவர் பூங்கா அலுவலகத்தினை கரும்புலி கப்டன் ராகுலனின் தாயார், பசும்புல் திடலினை இரண்டு மாவீரர்களின் தாயாராகிய சரோஜினி ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

கரைச்சி பிரதேச சபை சிறப்பு ஆணையாளர் பொன் நித்தியானத்தம் கருத்துரையாற்றினார்.

நன்றி - புதினம்

கரும்புலிகள் நிகழ்வில் தேசியத்தலைவர் அகவணக்கம்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பலநூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் நினைவுச்சுடரேற்றி கரும்புலிகள் நாளை நினைவுகூர்ந்தார்.

விசேடமாக அமைக்கப்பட்ட கரும்புலிகள் நினைவாலயத்தில் பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நேரமான இரவு 7.05 மணிக்கு நினைவுச்சுடரினை தமிழீழத் தேசியத் தலைவர் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நிறைவடைந்ததும் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.

இதுவரை மொத்தம் 322 கரும்புலி மாவீரர்கள் உயிராயுதங்களாக தங்களைத் தற்கொடையாக்கியுள்ளனர்.

இவர்களில் 81 பேர் தரைக் கரும்புலிகள், 241 பேர் கடற் கரும்புலிகள் ஆவர். .

42538719ys8.jpg

36649659rl0.jpg

32490220cv8.jpg

49789794lk5.jpg

72409054eo6.jpg

-Pathivu-

Edited by யாழ்வினோ

நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் அகவணக்கம் செலுத்தினார் தமிழீழத் தேசியத் தலைவர்.

பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் நினைவுச்சுடரேற்றி கரும்புலி மாவீரர்களை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

தமிழீழத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட கரும்புலிகள் நினைவாலயத்தில் பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் மத்தியில் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நேரமான இரவு 7.05 மணிக்கு நினைவுச்சுடரினை தமிழீழத் தேசியத் தலைவர் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நிறைவடைந்ததும் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர், கரும்புலிகள் மத்தியில் உரையாற்றினார். இதில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் கலந்துகொண்டு கரும்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்தார்.

வடமராட்சி நெல்லியடியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ முகாம் மீது 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லர் நடத்திய கரும்புலித் தாக்குதலே விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலித் தாக்குதலாகும். தாயக விடுதலைக்காக கரும்புலிகள் தங்களது பயணத்தின் 20 ஆம் ஆண்டை நிறைவு நிறைவு செய்திருக்கிறார்கள்.

இதுவரை மொத்தம் 322 கரும்புலி மாவீரர்கள் உயிராயுதங்களாக தங்களைத் தற்கொடையாக்கியுள்ளனர்.

இவர்களில்

81 பேர் தரைக்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

241 பேர் கடற்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

ஆனையிறவுச் சமரின் போது சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறித் தளங்களை தாக்கி அழித்தனர் கரும்புலிகள்.

2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் கொழும்பு கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள், பயணிகள் வானூர்திகள் ஆகியவற்றை தாக்கியழித்தனர் கரும்புலிகள். அத்தாக்குதலுக்குப் பின்னர்தான் சிறிலங்கா அரசாங்கம் அமைதிப் பேச்சுக்களுக்கு திரும்பியது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இறிதிக்கட்டத்துக்கு கொண்டு வந்தவர்களில் கரும்புலிகளின் பங்கு மகத்தானது.அவர்கட்கு நிகர் அவர்கள் தான்.அவர்களின் துணிவும்,திறமையும் தான் பல இராணுவதாக்குதல்களின் வெற்றிக்கு வழி வகுத்தன.அவர்கள் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்வார்கள்.இன் நன்நாளில் கரும்புலிகளை நினைவு கூர்வோமாக.

கரும்புலிகள்!!

தமது சாகும் வேளையை தெரிந்து கொண்டவர்கள்; அதனால் சாகாவரம் பெற்றவர்கள். தம் மக்கள் மீது அவர்கள் வைத்த அபரிமிதமான அன்பிற்கு தலைவணங்கி அவர்களை நினைவுகூர்வோம்.

தமிழீழத் தேசத்தின்

உருக்குச் சுவர்கள்.

தரணியே காணாத

தன் மானர்கள்.

எதிரிக்கும் புலப்படாத

தென்றல் காற்று.

புரிதலிலும் தேன்றாத

பொக்கிஷ மனங்கள்.

விடியலையே எண்ணும்

சுதந்திரப் பூக்கள்.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.