Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.

மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கையில், பல மில்லியன் பெறுமதியான பொருட்களை வீசி எறிவதாக அமேசான் நிறுவனம் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடத்தினை சேமிக்க வேண்டும் என்று அமேசான் இந்த வேலைகளை செய்கிறது.

இவ்வளவுக்கும், அந்த பொருட்கள் அமேசானின் சொந்த பொருட்கள் அல்ல.

அமேசான் பெரும் சந்தையில், வித்து தருமாறு கோரி அனுப்பி வைக்கப்படும் பொருட்கள். திகதிகள் இன்னும் இருக்கையில், பகிங்கில் ஏதாவது நெளிவு, அல்லது, பகிங்கில் 6 பொருட்களில், ஒரு பொருள், உடைந்து விட்டால், மிகுதியை எறிவதும், பொருளை அனுப்பிய வியாபாரிக்கு, customer return/unsalable என்று சொல்லி, திருப்பி அனுப்பாமல், வீசி எறிவதுமாக, பெரும் அநியாயம் செய்து வந்துள்ளது, வருகிறது. 

அழிப்பது என்றால், யாரும் எடுத்து பாவிக்க கூடிய நிலையில் இல்லாமல், புல்டோசர் பாவித்து நொறுக்கி அழிப்பது.

ஆப்பிள் ஐபோன், முதல் சாதாரண, சாப்பாட்டு பொருட்கள் வரை பெரும் தொகையில், பிரிட்டன் எங்கும் உள்ள, அவர்களது ஸ்டோரேஜ் வசதிகள் அனைத்திலுமே இது பெருவாரியாக நடக்கிறது என்று, நேற்று பிரித்தானியாவின் முக்கிய டிவி நிறுவனம் செய்தி வெளியிட, அமேசான் தானாக, இது குறித்த நடவடிக்கை எடுக்காவிடில், நாம் எடுக்க வைப்போம் என்று, அரச அமைச்சர் அறிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்தால், தம்மை அமேசான் லிஸ்டில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று, பொருட்களை அனுப்பி வைக்கும் வியாபாரிகள் நஷடத்தினை தாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

சந்தையில் தனக்கு உள்ள, ஏகபோகத்தினை (monopoly) அடாவடியாக தவறாக பயன்படுத்தும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது அரசுகள் முன்னரும் நடவடிக்கை எடுத்துள்ளன.

இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறுமனே பொருட்களை அழித்து விடுவது தவறு என்று சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக, 6 பொருட்களை எதிர்பார்க்கும் ஆர்டர் பண்ணிய customer, உடன் தொடர்பு கொண்டு, விலையை குறைத்து 5 பொருட்கள் அனுப்பி வைக்கிறோம் என்று முயன்று இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

price fixing என்னும் இன்னுமொரு விடயத்தினை கிரிமினல் வேலை ஆக்கி உள்ளது பிரித்தானிய அரசு. அதாவது, பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தமக்குள் பேசி, நாம் அடிபடாமல், ஒரு குறித்த மார்க்கத்தில் (லண்டன் - பஹாமாஸ்), இந்த விலைக்கு குறைவாக, போகாமல், இந்த விலைக்கு அதிகமாகவே வியாபாரம் செய்யோம் என்று டிக்கெட் விலையினை நிர்ணயம் செய்தார்கள்.

இந்த விடயத்தினை மோப்பம் பிடித்த அரசு, அவர்களை பிடித்து சந்தையில் போட்டித்தன்மையினை இல்லாமல் செய்தார்கள் என்று சிறைக்கு அனுப்பியது. 

ஆகவே, தமிழ் கடைகளில், இன்னோரு கடைக்காரருக்கு போனை போட்டு, அண்ணை/தம்பி, £5 க்கு குறைச்சு மிளகாத்தூளை விக்காதீங்கோ, எல்லோருக்கும் நட்டம் என்று சொல்லி, அதனை ஒரு கடுப்பில் இருக்கும் வேலையாள், ரெகார்ட் பண்ணி, அனுப்பி வைத்தால், உள்ள தான் போகணும். 🤗

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி ஆக்கத்துக்கு .

அதனால்தான் amazon pallet விற்பனையை அதிகரித்து உள்ளார்கள் போல் உள்ளது amazon pallet என்பது இந்த ரிடேர்ன்  பொருள்களை ஒரு pallet ல் அந்த பலகை கொள்ளும் நிறைக்கு பொருட்களை வைத்து கண்ணாடி பேப்பரினால் சுத்தி வைத்து இருப்பார்கள் விலை 28பவுன் அளவில் தான் உள்ளே 28 பவுன் பெறுமதியை விட அதிகமான பெறுமதி உடைய பொருள்கள் இருக்கும் கிபோட்கள் நம்ம @goshan_che தலைக்கு  மிகவும் பிரயோசனமாய் இருக்கும் அவருக்கு கிழமைக்கு ஒரு கீ போர்ட் அநேகமாக தேவைப்படும் என்று நினைக்கிறேன் 🤣பகிடி நோ ரென்சன் .நாட்டுக்கு நாடு இந்த விற்பனை வேறுபடும். இங்கு கறுப்பின நண்பர் கென்யாவுக்கு இப்படி amazon pallet களை  வாங்கி கப்பல் மூலம் அனுப்பி உபயோகமில்லா இலத்திரனியல் குப்பை என்று கவுன்சிலுக்கும்  காட்டி கவுன்சில் அப்படி குப்பைகளை வெளியேற்றுவதுக்கு உதவி பணம் கொடுப்பார்கள் அதையும் வாங்கி ஒருக்கல்லில் பல மாங்காய் அடிக்கிறார் .

Amazon Pallet £ 27.98

சிலருக்கு ரிடேர்ன்   ஐபோன் போன்றவையும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

நீங்கள் சொல்வது வேறு.

வியாபார உலகில் புகுந்து விட்டால், வியாபாரிக்கு மட்டுமே புரியும், சில நெளிவு சுளிவுகள், மூலை முடுக்குகள் உள்ளது போல அமேசனிலும் உண்டு.

இங்கே வித்தை தெரிந்தவர்கள் முழு நேர பெரும் வியாபாரம் செய்கின்றனர்.

இதில் உள்ள பலவகை வியாபாரங்களில் ஒன்று FBA. (Fulfillment by Amazon)

இதனை விளங்கினால், நல்ல யாவாரம் செய்யமுடியும். எனது நண்பர், பாகிஸ்தானிய வம்சாவளி, டாக்டர், மான்செஸ்டர் யூனியில் 5 வருடங்களுக்கு முன்னர் முடித்தவர், இப்போது மருத்துவத்தை கடாசி விட்டு முழுநேரமாக அங்கே கல்லா கட்டுகிறார்.

உங்களுக்கு இது குறித்து தெரிந்தால், அங்கே தான் இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு நல்ல பொருள் ஒன்றினை செய்பவருடன் தொடர்பில் உள்ளீர்கள், அவருக்கு எங்கே வியாபாரம் செய்வது என்று தெரியாது. உங்களுக்கு FBA குறித்து புரிகிறது, அவரது தரத்தில் நம்பிக்கை இருக்கிறது. அதேவேளை குறித்த பொருளுக்கு கனடாவில், அமேரிக்காவில் சந்தை இருக்கிறது என்று உங்களுக்கு தெரிகிறது.

என்ன செய்வீர்கள்? முன்பு என்றால் அங்குள்ள நண்பர்களுடன் தொடர்ப்பு கொள்வீர்கள். சிலர் சும்மா, அனுப்பன் பார்ப்போம் எண்டுவார்கள், சிலர் அதிகம் கொமிசன் கேட்ப்பார்கள்... ஸ்டோரேஜ் பிரச்சனை.....கடைசியில் வேலைக்கு ஆகாது. 

(கனடாவில் எனக்கு நடந்திருக்கிறது. அனுப்பின ஸ்டாக்கும், ஆளும் காணவில்லை. பிறகு அவரது வீடு மோர்ட்கஜ் கட்டாமல் எடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன், ஸ்டாக் பின்(னுக்குள்)அடித்திருப்பார்கள்).

இப்ப விசயத்துக்கு வருவோம்.

FBA என்றால், நீங்கள், உங்கள் ஸ்டாக்கினை amzon க்கு, உங்கள் நண்பர் இருக்கும் நாட்டிலேயே அவரை கொடுக்க சொல்லி சொல்வீர்கள். அமேசான், நீங்கள் சொல்லும் நாட்டுக்கு, இலவசமாக கொண்டுபோய் தமது ஸ்டோரேஜில் வைத்துக்கொள்வார்கள்.

அதனை, நீங்கள் digital marketing மூலம் சந்தைப்படுத்துவீர்கள். டெலிவரி, ஸ்டாக் maintenance, customer மேனேஜ்மென்ட்  எல்லாம் அமேசான் பார்த்துக்கொள்ளும். நீங்கள் இங்கிருந்து உலகின் எந்த பாகத்துடனும் யாவாரம் செய்ய, அமேசான் பேசியபடி தனது கமிசனை எடுத்துக்கொண்டு, மிச்சத்தினை உங்கள் கணக்குக்கு அனுப்பி விடும்.

இந்த செய்தியில் சொல்வது,  இவ்வாறு அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் பொருட்களையே, திருப்பி அனுப்பினால் செலவாகும் என்பதால் அழித்து விடுகினறனர்.

அதாவது, உங்களுக்கு ஏதாவது காரணத்தால், விக்காத பொருளை, உங்கள் நாட்டுக்கு எடுப்பீர்களா, அல்லது நண்பருக்கு அனுப்புவீர்களா? மேலும் இழப்பு வேண்டாம் என்று அழித்து விடு என்பீர்கள். அழிப்பது இலவசம், திருப்பி எடுக்க, காசு கட்டணும்.

இந்த அழித்து விடும் செய்தியை சொன்ன ITV காரருக்கும், இவ்வளவு விளப்பம் (FBA குறித்த)  இல்லாமல் தான் சொன்னார்.

நான் சும்மா அடித்து விடுகிறேன் என்று இன்னோருத்தரும் வேறு எங்கோ சொன்ன நினைவு. 🤔

சரி, அதை வெற்றிகரமாக செய்ய உங்களுக்கு மூன்று விடயங்கள் தேவை.

1. Digital மார்கெட்டிங் 
2. FBA 
3. sourcing, the stock. (சீனாகாரர் தான் இப்ப முன்னிலையில், அடுத்து இந்தியா) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

நன்றி நாதமுனி ஆக்கத்துக்கு .

அதனால்தான் amazon pallet விற்பனையை அதிகரித்து உள்ளார்கள் போல் உள்ளது amazon pallet என்பது இந்த ரிடேர்ன்  பொருள்களை ஒரு pallet ல் அந்த பலகை கொள்ளும் நிறைக்கு பொருட்களை வைத்து கண்ணாடி பேப்பரினால் சுத்தி வைத்து இருப்பார்கள் விலை 28பவுன் அளவில் தான் உள்ளே 28 பவுன் பெறுமதியை விட அதிகமான பெறுமதி உடைய பொருள்கள் இருக்கும் கிபோட்கள் நம்ம @goshan_che தலைக்கு  மிகவும் பிரயோசனமாய் இருக்கும் அவருக்கு கிழமைக்கு ஒரு கீ போர்ட் அநேகமாக தேவைப்படும் என்று நினைக்கிறேன் 🤣பகிடி நோ ரென்சன் .நாட்டுக்கு நாடு இந்த விற்பனை வேறுபடும். இங்கு கறுப்பின நண்பர் கென்யாவுக்கு இப்படி amazon pallet களை  வாங்கி கப்பல் மூலம் அனுப்பி உபயோகமில்லா இலத்திரனியல் குப்பை என்று கவுன்சிலுக்கும்  காட்டி கவுன்சில் அப்படி குப்பைகளை வெளியேற்றுவதுக்கு உதவி பணம் கொடுப்பார்கள் அதையும் வாங்கி ஒருக்கல்லில் பல மாங்காய் அடிக்கிறார் .

Amazon Pallet £ 27.98

சிலருக்கு ரிடேர்ன்   ஐபோன் போன்றவையும் கிடைக்கும்.

கீ போர்ட் எல்லாம் so old fashioned yarr…🤣. இப்படி விரைவாக பந்தி கணக்கில் கீ போர்ட்டில் என்னால் அடிக்க முடியாது. போன் டச் ஸ்க்ரீந்தான் வசதி.

சாவகாசமா காலை கடனை கழித்தபடியே ரெண்டு கருத்தை (கருத்தா அது கறுமம்🤣) தட்டிவிடலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சாவகாசமா காலை கடனை கழித்தபடியே ரெண்டு கருத்தை (கருத்தா அது கறுமம்🤣) தட்டிவிடலாம்🤣.

கன்னூறு கழித்த...  2 1/2 பிளேட்.... அட கண்ணுறாவியே.... 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2021 at 09:15, Nathamuni said:

ஆகவே, தமிழ் கடைகளில், இன்னோரு கடைக்காரருக்கு போனை போட்டு, அண்ணை/தம்பி, £5 க்கு குறைச்சு மிளகாத்தூளை விக்காதீங்கோ, எல்லோருக்கும் நட்டம் என்று சொல்லி, அதனை ஒரு கடுப்பில் இருக்கும் வேலையாள், ரெகார்ட் பண்ணி, அனுப்பி வைத்தால், உள்ள தான் போகணும். 🤗

அமேசனும் பிடிபடாமல் செய்யும் களவு  வியாபாரம் தரவு  விற்பனை  தமது விற்ப்பனையில்  மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள் எது அதிக லாபம் தரும் பொருள் இப்படியான தரவுகளை தமது பினாமி கொம்பனிகள் மூலம் விற்கின்றதாக குற்ற சாட்டு உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நான் சும்மா அடித்து விடுகிறேன் என்று இன்னோருத்தரும் வேறு எங்கோ சொன்ன நினைவு. 

அப்படி சொன்னது அமேசன் பற்றி சொன்னதை அல்ல. Price fixing சட்டத்தை பற்றி சொன்னதை. 

3 minutes ago, Nathamuni said:

கன்னூறு கழித்த...  2 1/2 பிளேட்.... அட கண்ணுறாவியே.... 😬

🤣 இன்னைக்கு செத்தா நாளைக்கு பால். Yesterday’s newspaper is today’s waste paper 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

அமேசனும் பிடிபடாமல் செய்யும் களவு  வியாபாரம் தரவு  விற்பனை  தமது விற்ப்பனையில்  மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள் எது அதிக லாபம் தரும் பொருள் இப்படியான தரவுகளை தமது பினாமி கொம்பனிகள் மூலம் விற்கின்றதாக குற்ற சாட்டு உள்ளது .

ஆரம்பத்தில் இருந்திருக்கும் பெருமாள்... இப்போது தேவையில்லை. அது மிக வேகமாக டிரில்லியன் டாலர் வியாபாரத்தினை நோக்கி நகர்கிறது.

நீங்களும், அமேசானை தோழராக்கி கொள்ளுங்கள்.... நல்ல காசு பார்க்கலாம். amazon can be our serious business partner - worldwide.

நினைத்துப் பாருங்கள்.... பிரேசில், அர்ஜென்டினா, ரசியா.... அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து.... பெரும் சந்தை.... என்ன பொருளை விக்கலாம் என்று அறியவும், அதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தான் தேவை. 👍

இங்கே இதுகுறித்த எழுதுவோம் என்று முன்பு ஒரு திரி ஆரம்பித்தேன். ஒருவர் கடுப்பேத்தினத்தால், வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த தளத்தினை நமது பொருளாதார அபிவிருத்தி குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாட பாவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்...

என்ன செய்வது? 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

இங்கே இதுகுறித்த எழுதுவோம் என்று முன்பு ஒரு திரி ஆரம்பித்தேன். ஒருவர் கடுப்பேத்தினத்தால், வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த தளத்தினை நமது பொருளாதார அபிவிருத்தி குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாட பாவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்...

என்ன செய்வது? 🤗

ஒரு நல்ல நோக்கில் திரிகள் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கதே. அதே சமயம் தரவுகள் சரியாக இல்லாதவிடத்து அவற்றை சுட்டி காட்டுவதும் கடமையாகிறது. இல்லாவிடின் அது திரி ஆரம்பித்ததன் நோக்கின் நேர் எதிர் நிலையையே அடையும்.

தரவுகளை சரி பார்த்து, தக்க ஆதாரங்களை முன்வைத்து எழுதும் பதிவுகள் கேள்விக்கு உள்ளாவதில்லை என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Is price-fixing illegal?
 
Price fixing occurs when companies collude to set the price, discount, or production amount of a good or service, instead of allowing market forces to set it for them. ... Price fixing is illegal because it fosters unfair competition and imposes high prices on consumers.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:
Is price-fixing illegal?
 
Price fixing occurs when companies collude to set the price, discount, or production amount of a good or service, instead of allowing market forces to set it for them. ... Price fixing is illegal because it fosters unfair competition and imposes high prices on consumers.
 
நான் price fixing சட்டபூர்வமானது என்று சொல்லவில்லையே?

பிகு:

நான் உங்கள் கட்டுரையில் என்ன தரவு பிழை என்று இதுவரை சொல்லவில்லை. நீங்களாக எதையும் கற்பனை செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன, அந்த மொளவாத்தூள் மேட்டர் தானே?

அந்த சிலருக்கான சிம்பிள் புரிதலுக்காக..... 🤗

அல்லது, அந்த shadow மினிஸ்டர் விசயம்.... 

பாராளுமன்றமே இந்த நாட்டின் அதிஉயர் அதிகாரம் கொண்டது... 

MP கள் குழு அமைத்தும் யாரையும் அழைத்து விளக்கம் கோரலாம், வராவிடில் சிறைக்கும் அனுப்பலாம். 

உலகெங்கும் இருந்து வாசிப்பவர்கள் எல்லோரும் உங்கள் லெவெலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்கவும் முடியாது என்றும் உங்களுக்கு புரியும்.

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

கிட்ட முட்ட நெருங்கி விட்டீர்கள். 

நான் இங்கே கட்டுரைகளில் தரவு பிழை பிடிக்க வருவதில்லை நாதம். 

தமிழினம் சம்பந்தபட்டு முக்கியமான கருத்துக்கள், வாசகர்களை திசை திருப்பும் விதமான தரவு பிழைகளை கண்டால் சுட்டி காட்டுவது மட்டும்தான். 

இந்த கட்டுரையில் அப்படி இனத்துக்கு முக்கியமான தரவு பிழை ஏதும் இல்லை, ஆகவேதான் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை.

நீங்கள் இன்னொரு திரியில் எழுதி, நிர்வாகம் நீக்கிய கருத்தை மேற்கோள் காட்டி எழுதியதால் - பதில் எழுதினேன். 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எனது நண்பர், பாகிஸ்தானிய வம்சாவளி, டாக்டர், மான்செஸ்டர் யூனியில் 5 வருடங்களுக்கு முன்னர் முடித்தவர், இப்போது மருத்துவத்தை கடாசி விட்டு முழுநேரமாக அங்கே கல்லா கட்டுகிறார்.

டாக்டர் ஆக படிப்பவர்களுக்கு பிரச்சனையே இது தான்.

ஒரேயொரு நோக்கம் அதி கூடிய வருமானம். மற்றது எல்லாமே இரண்டாம், மூன்றாம் பட்சம்.

இவர்களை நேர்முகத்தேர்வும் கடைந்து கழிக்காது.

அது தான் நான் Parliament க்கு ஒரு பெட்டிஷன் போடுவம்  என்று இருக்கிறேன். "டாக்டர் ஆக படிப்பவர்கள், முடித்து வெளிஏறினாள், கட்டாயம், ஆகக்குறைந்தது 10 வருடங்கள் மருத்துவ துறையில் முழு நேர பனி புரிய வேண்டும். இல்ல விட்டால், Doctor ஆக பயிற்றுவிக்க  செலவாகும் அரசின் வரிப்பணத்தை  பணத்தை பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இன்றைய மதிப்பில் ஓர் £400 000 - £500, 0000 இடையில் வரும் என்று நினைக்கிறன்."

மக்களின் வரிப்பணத்தை, தனிநபர்  வருமானத்திற்கு முதலிட முடியாது.

பெட்டிஷன் kadancha என்று பெயர் வந்தாலும் கவலை இல்லை.

2 hours ago, Nathamuni said:

இதில் உள்ள பலவகை வியாபாரங்களில் ஒன்று FBA. (Fulfillment by Amazon)

ஏறத்தாழ drop shipping.

அனால், CRM, order, return  எல்லாம் Amazon.

சீனாவில் இருக்கும் கம்பனிகளோடு  சில் எடுக்க தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

டாக்டர் ஆக படிப்பவர்களுக்கு பிரச்சனையே இது தான்.

ஒரேயொரு நோக்கம் அதி கூடிய வருமானம். மற்றது எல்லாமே இரண்டாம், மூன்றாம் பட்சம்.

இவர்களை நேர்முகத்தேர்வும் கடைந்து கழிக்காது.

அது தான் நான் Parliament க்கு ஒரு பெட்டிஷன் போடுவம்  என்று இருக்கிறேன். "டாக்டர் ஆக படிப்பவர்கள், முடித்து வெளிஏறினாள், கட்டாயம், ஆகக்குறைந்தது 10 வருடங்கள் மருத்துவ துறையில் முழு நேர பனி புரிய வேண்டும். இல்ல விட்டால், Doctor ஆக பயிற்றுவிக்க  செலவாகும் அரசின் வரிப்பணத்தை  பணத்தை பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இன்றைய மதிப்பில் ஓர் £400 000 - £500, 0000 இடையில் வரும் என்று நினைக்கிறன்."

மக்களின் வரிப்பணத்தை, தனிநபர்  வருமானத்திற்கு முதலிட முடியாது.

பெட்டிஷன் kadancha என்று பெயர் வந்தாலும் கவலை இல்லை.

ஹலோ, kadancha

நான் ஒரு டாக்குத்தர் என்று வைத்துக்கொள்வோம். பல்கலைக்கழகங்களும், அரசினது அல்ல. பணம் சம்பாதிக்கும் நோக்கில் இயங்குகின்றன.

எனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்.

கடன் கட்ட வேணும். எனக்கு வரும் ஆரம்ப சம்பளம் £20,000. பிச்சைக்காசு. சம்பளம் கூட்டு மாறு கோரி போராடுகின்றோம், அரசு கண்டுகொள்ளவில்லை.

மாதாந்தம், கடன் நிலுவை, வீட்டு வாடகை, சாப்பாடு போக, குறைந்தது 12 மணி நேர வேலை எதிர்பார்க்கிறீர்கள். சிலவேளை தொடர்ந்து 36 மணிநேரம் வேலை, கேட்டால் அது training ஒரு பகுதி என்கிறீர்கள்.

பாராளுமன்றுக்கு, நீங்கள் கொடுக்கும் மனு எப்படி என்னை கட்டுப்படுத்தும்? இது சுதந்திர நாடு. மனித உரிமை மீறல் என்றல்லவா போகும்

அதே வேளை, இலங்கையில் சரியானது, காரணம் அங்கு இலவசக்கல்வி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனது காசில் அல்லது கடனை வாங்கி படிக்கிறேன்.

நீங்கள் வாங்கிய கடன் அல்ல. 

ஓர் டாக்டர் ஐ பயிற்றுவிக்க, அரசு பிறிம்பாக (அந்த டாக்டர் ஆக பயிற்றுவிக்க படுபவர், அவர் எடுக்கும் கடனை தவிர ) மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறது. 
 
இது ஓர் பிரதான கரணம், டாக்டர் பட்டபடிப்புக்கான பல்கலைக்கழக இடங்கள் தொகை மிகவும் இறுக்குகமாகவும், வரையறை பட்டும் இருபதற்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

தனி அமைப்பான பல்கலைக்கழகங்களில், (அதாவது அரசுக்கு சொந்தமில்லாத), பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நன்றாக நான் அறிவேன். அது அநேகமான டாக்டர்  இற்கு படிப்பவர்களுக்கு தெரியாது.  அவர்கள் எண்ணுவது தாம் வாங்கும் கடனே முழுமையாக தம்மை பயிற்றுவிப்பதாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இதை நன்றாக நான் அறிவேன். அது அநேகமான டாக்டர்  இற்கு படிப்பவர்களுக்கு தெரியாது.  அவர்கள் எண்ணுவது தாம் வாங்கும் கடனே முழுமையாக தம்மை பயிற்றுவிப்பதாக.

ஆம், அப்படித்தானே....

சரி வேறு விதமாக பார்ப்போமா?

கனடாவில் இருந்து, பிரிட்டனின் நான்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒன்றுக்கு வருடம் £35,000 செலுத்தி வந்து படிப்பவர் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வாரா?

நீங்கள் இலங்கை நிலையினை நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வாதம், அந்த நாட்டினை பொறுத்து சரியானது.

அங்கே படித்து, இங்கு வந்து தொழில் பார்க்கும், நண்பர்களுக்கு, நீங்கள் சொல்வதை சொல்லி, நாம் நக்கல் அடிப்பது உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?

இது BMA க்கும்  அரசுக்கும் இடைப்பட்ட ஏற்பாடு.

UK இல் எல்லா பல்கலை கழகங்களும்  தனியார் நிர்வாகம் தான். 

அவற்றுக்க்கு, அரச மானியம் இருக்கிறது. இது குறைக்கப்பட்டு மூட வேண்டி நிலை வந்த பல்கலைகளலகங்களும் இருக்கிறது. அனால், மூடப்பட்டதோ எனபதை நான் தொடரவில்லை.

அனால், மருத்துவ துறைக்கு பிறிம்பான மானியம்.

https://www.universitiesuk.ac.uk/policy-and-analysis/reports/Documents/2016/university-funding-explained.pdf

Page 6  ஓர் சாதாரண ஆதாரம்.

இதில் வாதிட வரவில்லை.

மருத்துவ துறைக்கு மாணவர் எடுக்கும் கடனால், (60-80, ஏன் 100 என்று வைத்து கொண்டாலும்) ஒருபோதும் காணாது.

மருத்துவ துறையில் பயிற்றுவிக்கப்படும் போது, consultants, specialists fee, அவற்றின் மூலப் பொருட்கள், இவற்றை கடனால் அடைப்பதற்கு (அரசு உத்தரவாதம் தந்தால் ஒழிய), வேறு தனியாரறால் முடியாது. இதுவே யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

இது BMA க்கும்  அரசுக்கும் இடைப்பட்ட ஏற்பாடு.

UK இல் எல்லா பல்கலை கழகங்களும்  தனியார் நிர்வாகம் தான். 

அவற்றுக்க்கு, அரச மானியம் இருக்கிறது. இது குறைக்கப்பட்டு மூட வேண்டி நிலை வந்த பல்கலைகளலகங்களும் இருக்கிறது. அனால், மூடப்பட்டதோ எனபதை நான் தொடரவில்லை.

அனால், மருத்துவ துறைக்கு பிறிம்பான மானியம்.

https://www.universitiesuk.ac.uk/policy-and-analysis/reports/Documents/2016/university-funding-explained.pdf

Page 6  ஓர் சாதாரண ஆதாரம்.

அது அரச மானியம் அல்ல.

தர்மஸ்தாபன status. இங்குள்ள secondary independant ஸ்கூல் அனைத்துக்கும் இதே ஸ்டேட்டஸ் தான்.

அதாவது, லாபத்துக்கு வரி இல்லை. ஆனால் லாபம் ஒரு அளவுக்கு மேல் போகாதவாறு, ஸ்காலர்ஷிப், பர்சரி கொடுத்து விட வேண்டும், என்ற நிபந்தனையுடன்

ஆகவே, இங்கே அரசு, ஒரு எதிர்கால சந்ததி கல்வி அறிவுடன் வளர வேண்டும் என்று இந்த status இணை, கல்வி நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது.

டாக்டர் கல்வி மட்டுமல்ல, சாதரண history டிகிரி கோர்ஸ் படிப்பவர்கள் கூட பயனடைகிறார்கள். ஆகவே நீங்கள் ஒரு குழுவை தனியே தாக்குவது நியாயமில்லை.

படித்த தொழில், தேவையான பணத்தினை தரவில்லை என்றால், பணத்தினை தரும் தொழிலை தேர்வு செய்வது எனது உரிமை, அதனை நணபர் கடஞ்சாவின் பெட்டிசம் மறுக்கும் என்று நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் பகுதி காரணம், படித்து வெளியிறான்ல் நாட்டில் எனக்காவது ஓர் இடத்தில வேலை என்பதை அரசு உறுத்தி செய்வதத்திற்கு 
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இது ஓர் பகுதி காரணம், படித்து வெளியிறான்ல் நாட்டில் எனக்காவது ஓர் இடத்தில வேலை என்பதை அரசு உறுத்தி செய்வதத்திற்கு 
  
நான் கணக்காளராக படித்தேன் என்றாலும், அங்கே பட்டேலுடன், சிங்கருடன் சிங்கி அடிக்காமல், IT பக்கம் நகர்ந்தேன். அது எனது அடிப்படை உரிமை, நண்பரே.

இதுக்கும், அரசுக்கும் என்ன தொடர்பு வரும் என்று நினைக்கிறீர்கள்.

கூடுதலாக உழைப்பதால், அரசுக்கு வரியை கூடுதலாக செலுத்துகிறேன். 

இதனை அரசு கட்டுப்படுத்தினால், வீதியில் இறங்கி போராடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான் கணக்காளராக படித்தேன் என்றாலும், அங்கே பட்டேலுடன், சிங்கருடன் சிங்கி அடிக்காமல், IT பக்கம் நகர்ந்தேன். அது எனது அடிப்படை உரிமை, நண்பரே.

வருமனத்திற்கு வரி இல்லை,  இதை தயவு செய்து இதனுடன் குழப்பாதீர்கள். அது வேறு விடயம்.

மருத்துவ துறையில் இடையில் கைவிட்டால் கூட விரும்பி விட்டால் வரி பணமே வீணாவது. அந்த இடம் ஒரு போகுமே நிரப்ப பட முடியாது வேறு மனவரால்.

பாட திட்ட தொடர்ச்சி ஓர் கரணம், அந்த funding ஐ  அரசு மீள பெற்றுவிடும்.

மருத்துவ துறை படிப்பு விளையாட்டு அல்ல.

மீண்டும், மீண்டும் பலவாறு aptitude சரிபார்க்கப்படுவதும் இதனால் தான்.   

நான் வாதிட வரவில்லை.

எவ்வளவுக்கு விட உரிமை உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீகளோ, அவற்றிலும் மேலாக டாக்டர் படிப்பு இடம் வீணாமால் போவது முக்கியம் எனக்கு, அதுவும் மக்கள் வரிப்பணத்தாய் இறைத்து.

மற்ற துறைகள் பலகலை கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது அல்ல. அனால், மருத்துவம், பல் வைத்தியம், மிருக வைத்தியம் போன்ற துறைகள் பயிற்றுவிக்கப்படுவது.

இதனால் தான் இலங்கையின் மருத்துவத்துறை இப்பொது சர்வதேச தரம் வாய்ந்தது அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kadancha said:

இது ஓர் பகுதி காரணம், படித்து வெளியிறான்ல் நாட்டில் எனக்காவது ஓர் இடத்தில வேலை என்பதை அரசு உறுத்தி செய்வதத்திற்கு 
  
நீங்கள் சொல்வதுதான் சரி கடஞ்சா.

Foreign students fee என்றாலும் home students fee என்றாலும் மருத்துவ படிப்பை படித்து முடிக்கும் செலவுடன் ஒப்பிட்டால் மாணவர்கள் கட்டும் fees பலமடங்கு குறைவு.

ஆகவே மிகுதியை யார் கட்டுகிறார்கள்? 

யூனிவர்சிட்டிகளுக்கு அளிக்கப்படும் grants மூலமாகவோ, funding மூலமாகவோ, tax arrangements மூலமாகவோ - ஒவ்வொரு மாணவனினதும் மருத்துவ படிப்பின் செலவில் பெரும் பங்கை ஏற்பது அரசுதான். 

மருத்துவ படிப்பை வேறு டிகிரிகளுடன் ஒப்பிட முடியாது. எல்லா டிகிரிகளிலும் அரசின் பங்கு உள்ளது என்றாலும், மருத்துவ படிப்பில் அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் செலவழிக்கும் பங்கு, தொகை மிக அதிகமானது.

இப்படி பல வளங்களை செலவழித்து படித்து விட்டு - அந்த இடத்தை இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் அவராவது சேவை செய்திருப்பார் - வேறு தொழில் பார்க்க போவது நியாயமில்லைத்தான். 

ஆனால் இதில் கைவைக்க மாட்டார்கள் - அப்படி வைத்தால் சன், டெய்லி மெயில் போன்ற பத்திரிகைகள் போன்ற டப்லொயிட்கள், அதை வாசிக்கும், தடுப்பு ஊசி அடிக்கமாட்டோம், மாஸ்க் போடமாட்டோம் என்று தனி மனித உரிமை புரட்சி செய்யும் மொக்கு கூட்டம் எல்லாம் கிளர்ந்து எழும்

நீங்கள் சொன்ன அதே வாதம் படித்து முடித்த கையோடு, டுபாய் போகும் டாக்டர்கள், தாதிகள், டீச்சர் மாருக்கும் பொருந்தும்.

ஆனால் அவர்களில் டாக்டர்கள் அளவுக்கு tax payer invest பண்னுவதில்லை.

அதே போல் வேறு நாட்டில் அரசு செலவில் படித்து விட்டு இங்கு வருவதும் அந்த நாட்டு வரியிறுப்பாளருக்கு செய்யப்படும் துரோகமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.