Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களும் -தமிழர்களும் எப்போதுமே விரோதமானவர்களாக இருந்திருக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களும் -தமிழர்களும் எப்போதுமே விரோதமானவர்களாக இருந்திருக்க வில்லை

 பி.கே.பாலசந்திரன்

0000000000000
*காலனித்துவஆட்சிக்கு  முன்னைய  காலங்களில், மோதல்களுக்கும் ஒத்துழைப்பிற்கும் இடையில் உறவுகள் மாறி மாறி  அமைந்திருந்தன .
*கி.பி 9 ஆம் நூற்றாண்டில், சிங்கள மன்னர்கள் தங்கள் பாதுகாப்புகளை அதிகரித்துக்கொண்டதுடன்    தென்னிந்திய சூறையாடுபவர்களை தடுக்க இராஜதந்திரநடவடிக்கைகளை  மேற்கொண்டிருந்தனர் .
* இலங்கையில் நடைமுறையில் இருந்த தேரவாத  பவுத்தத்தின்   வாகனமாக பாளிமொழி   இருந்தபோது, இலங்கை  பவுத்த  பிக்குகள் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டதுடன் , அதில் படைப்புகளை எழுதினர்,அத்துடன்  அந்த மொழியில் இந்திய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டனர்.
*போர்கள் இருந்தபோதிலும், தென்னிந்திய படைகளுக்கும் இலங்கை படைகளுக்கும் இடையிலான போர்களின் போது கூட, இலங்கை-தென்னிந்திய வர்த்தகம் செழிப்படைந்திருந்தது..
0000000000
chola-sri-300x200.jpg
புராதனகாலத்திலும்    இடைக் காலத்திலும்  தென்னிந்தியாவிலிருந்து இலங்கை மீது திரும்பத்திரும்ப இடம்பெற்ற  படையெடுப்புகள்  தமிழர்கள் மீதான சிங்களவர்களின்போக்கை  வடிவமைத்தது. ஆனால் அந்த உறவு எப்போதுமே  விரோதமானதாக  இருக்கவில்லை.
இருசாராருக்கும்  இடையில் ஏராளமானதும் குறிப்பிடத்தக்கதுமான  விதத்தில் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை , சகிப்புத்தன்மை மற்றும் கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளீர்த்துக்கொள்ளுதல் ஆகியவை இருந்தன.
மோதல் மற்றும் ஒத்துழைப்பு  பற்றிய  இந்த சுவாரஸ்யமான  கதையை பேராசிரியர் அமரதாச லியன கமகே தனது ’முன்   நவீன இலங்கையில் சமூகம், அரசு மற்றும் மதம்’ (சமூக விஞ்ஞானிகள் சங்கம் 2008) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். டாக்டர் லியன கமகேவின் கூற்றுப்படி, கி.பி 9 ஆம் நூற்றாண்டில், சிங்கள மன்னர்கள் தங்கள் பாதுகாப்புகளை அதிகரித்துக்   கொண்டனர், மேலும் தென்னிந்திய சூறையாடுபவர்களை தடுக்க இராஜதந்திரத்தை மேற்கொண்டனர்  .
தமிழ் கோரமண்டல் கரைப்பகுதியின்   வலிமைமிக்க வர்களும் ஆட்சி எல்லையை விரிவாக்கும்  கொள்கையுடையவர்களுமான சோழர்களிடமிருந்து  பிரதான அச்சுறுத்தல்  இருந்ததால், சிங்கள மன்னர்கள் தமிழகத்தில் சோழர்களின் போட்டியாளர்களான பாண்டியர்களுடன் கூட்டணி வைக்கத் தொடங்கினர். இராஜதந்திரமும்   பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிங்களவர்களை  ஆயிரம் ஆண்டுகளாக அமைதியைக் காக்க உதவியது.
“மிகவும் வலிமையான ஏகாதிபத்திய சோழர்கள் உட்பட எந்தவொரு படையெடுக்கும் சக்தியும் முழு நாட்டையும் கைப்பற்றுவதில் வெற்றிபெறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மோசமான காலங்களில் கூட தீவின் தெற்குப் பகுதி சுதந்திரமாக இருந்தது ” என்று டாக்டர் லியன கமகே சுட்டிக்காட்டுகிறார். 13 ஆம் நூற்றாண்டில் மிக மோசமான காலங்களில் கூட, இரண்டாம் பராக்கிரமபாகு மாகர்கள் , சந்திரபானு மற்றும் பாண்டியர்களின் படையெடுப்பை எதிர்கொண்டபோது, தென்னிலங்கை  சுதந்திரமாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.
படையெடுப்புகள் இலங்கையில் இந்திய விரோத உணர்வை தோற்றுவித்ததா ? “அதிகளவு ஆதாரங்கள்  எதிர்மறையான ஒரு பதிலை சுட்டிக்காட்டுகிறது” என்று கலாநிதி  லியன கமகே உறுதிபடக்  கூறுகிறார்  ஜம்புத்துவிபம்  அல்லது இந்தியா, சிங்கள பவுத்தர்களுக்கு புனிதமானதாக  இருந்தது.
பாளி  இலங்கையில் நடைமுறையில் இருந்த தேரவாத பவுத்தத்தின் வாகனமாக இருந்தபோது, இலங்கை  பவுத்த பிக்குகள் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டனர், அதில் படைப்புகளை எழுதினர், அந்த மொழியில் இந்திய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டனர்.
படையெடுப்பாளர்களின் ஆதாரமான தென்னிந்தியாவுடனான உறவுகள் எப்போதுமே போர்க்களத்திற்கு ஏற்றவையாக இருந்தன என்று அனுமானிப்பது  பிழையாக இருக்கும் என்று வரலாற்றாசிரியர் தொடர்ந்து கூறுகிறார். “உண்மையில், தென்னிந்தியாவுடனான இலங்கையின் வர்த்தக  மற்றும் கலாசார உறவுகள் பொதுவாக நம்பப்படுவதை விட மிக நெருக்கமாகவும், நட்பாகவும் இருந்ததாகத் தெரிகிறது, இந்த உறவுகள் நிச்சயமாக தீவின் சமூக மற்றும் கலாசார பரிணாமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்று அவர் கூறுகிறார்.
சுவாரஸ்யமாக, சில படையெடுப்புகளின் போது, பவுத்த பிக்குகள், படையெடுப்பாளர்களின் போட்டியாளர்களால் ஆளப்படும் தென்னிந்தியாவில் உள்ள நாடுகளில்  புகலிடத்தை நாடுவார்கள். உதாரணமாக சோழர்களின்  படையெடுப்பின் போது பிக்குகள்  பாண்டிய ராஜ்யத்தில் தஞ்சம் புகுந்தனர். பாண்டிய நாட்டில் ஒரு மடாலயத்தில் இருந்தபோது அவர் எழுதிய தனது உபசகஜனலங்கரா என்ற புத்தகத்தில் பத்தாந்த  ஆனந்த தேரர், இலங்கையின் கடுமையான மாகா (கலிங்க-கேரள ) படையெடுப்பின் போது, அவர் உட்பட பல சிங்கள பவுத்த சிரேஷ்டர்கள் பாண்டிய மற்றும் சோழ நாடுகளில் தங்குமிடதையும் உதவியையும் பெற்றிருந்ததாக  கூறுகிறார்.
chola.jpg
5 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்ட அத்தகதா  (வர்ணனைகள்), இலங்கை பவுத்த  இலக்கியத்தின் ஒரு முக்கியமான  அங்கமாக மாறியது, முக்கியமாக தென்னிந்திய துறவிகளான புத்தத்தா மற்றும் தர்மபாலா ஆகியோரால் இது எழுதப்பட்டது. சோழ நாட்டில் இந்து மதம் ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருந்தபோது, காஞ்சி, காவிர நகர மற்றும் நாகப்பட்டனத்தில்  பவுத்தம் தப்பிப்பிழைத்தது.
சோழ சக்கரவர்த்தி முதலாம் ராஜராஜன் (கி.பி 926-1014) நாகப்பட்டனத்தில் கட்டிய அற்புதமான சூடாமணி  விகாரையை  அவரது வாரிசுகள் மீண்டும் மீண்டும் நல்கையாக  வழங்கியிருந்தனர். புகழ்பெற்ற அறிஞரான சூடாமணி வர்ம  விகாரையின் பதவியில் இருந்த புத்தபிரிய  தேரர் இலங்கையில் ‘சோலிய  தீபங்கர ’ என்று அறியப்பட்டிருந்தார்.. தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் உள்ள பவுத்த அமைப்புகள்  ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தன. இரண்டாம் பராக்கிரமபாகு  ஆட்சியின் போது (1236-1270) உயர் பதவிவழங்கல்  வைபவங்களில்  பெறப்பட்ட நன்கொடைகள் தமிழ்நாட்டில் உள்ள புத்த நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
போர்கள் இருந்தபோதிலும், தென்னிந்திய படைகளுக்கும் இலங்கை படைகளுக்கும் இடையிலான போர்களின் போது கூட, இலங்கை-தென்னிந்திய வர்த்தகம் செழித்தது. யுத்த காலங்களில் அல்லது ஒரு அரசியல் மோதலில் கூட பொருளாதாரத் தடைகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் இந்த நாட்களைப் போலல்லாமல், அந்த நாட்களில் வர்த்தகத்தில்  தலையிடப்படவில்லை.
12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் போர்கள் நடந்துகொண்டிருந்தபோது, தமிழ்நாட்டின் சோழர் மற்றும் பாண்டிய ராஜ்யங்களில் ‘இலங்கை வர்த்தகஒத்துழைப்பு ’ செழிப்படைந்திருந்தது . 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பரக்ரமபாகுவின் மனைவி லீலாவதியின் ஆட்சிக் காலத்தில் (அவருக்கு 1197–1200, 1209–10, மற்றும் 1211–12 ஆகிய நான்கு காலகட்டங்கள்  இருந்தன) தென்னிந்தியாவைச் சேர்ந்த நானதேசி வணிகர்கள் பொலனறுவையியை  சுற்றியுள்ள அவரது பகுதியில் தழைத்தோங்கினர்.
N_6ea02image_story-300x215.jpg
 
படையெடுப்புகள் மற்றும் வணிக போக்குவரத்து ஆகியவை இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற தென்னிந்தியர்கள் குடியேற வழிவகுத்தன என்று டாக்டர் லியன கமகே குறிப்பிடுகிறார். தற்கால பதிவுகளில் படையெடுப்பாளர்கள் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர் (24,000 முதல் 94,000 ஆண்கள் வரை). அவர்களில் பலர் திரும்பிச் செல்வதை விட இலங்கையில் குடியேற விரும்பினர். தீவின் ஒவ்வொரு பகுதியிலும் தமிழர்கள் அல்லது தென்னிந்தியர்களின் சிறிய குழுக்கள் குடியேறியிருந்தாலும், வடக்கில்தான் குடியேற்றம் பெரிய அளவில் நிகழ்ந்ததுடன்  ஒரு தமிழ் இராச்சியம் உருவாகக்கூடியதாகவிருந்தது. சிங்கள ராஜரட்ட  இராச்சியத்தின் வீழ்ச்சி இதனை  எளிதாக்கியது.
வரலாற்றாசிரியர் பரணவிதாரணவின்  கூற்றுப்படி, யாழ்ப்பாண இராச்சியம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பிராமணர்களாக இருந்த ஆரியச்சக்ரவர்த்திகளால் ஸ்தாபிக்கப்பட்டது.. அவர்கள் தங்கள் வம்சாவளியை கலிங்க  கங்கா வம்சத்திலிருந்து வந்ததென   (இன்றைய ஒடிசா) கண்டுபிடித்தனர். 14 ஆம் நூற்றாண்டின் போது, மத்திய (கம்பளை ) மற்றும் தென் மேற்கு இலங்கை (கோட்டே / கொழும்பு / பாணந்துறை ) ஆகிய இடங்களில்  இருந்த  சிங்கள இராச்சியங்களின்  மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டியதன் மூலம் ஆரியச்சக்ரவர்த்திகள் தங்கள் புகழின்  உச்சகட்டத்தை எட்டியிருந்தனர்.. ஆரியச்  சக்ரவர்த்திகளை எதிர்ப்பதன் மூலமும், போரை யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு சென்று நிர்வாகியாக தனது பிரதிநிதியை நியமிப்பதன் மூலமும் போக்கை மாற்றியமைத்தவர் ஆறாம்  பராக்கிரமபாகு   (1415-1467) மன்னர் .
சுவாரஸ்யமாக, தென்னிந்திய கேரள குடும்பங்களான அழகக்கோனார்கள் மற்றும் அழகேஸ்வரர்கள்  (குறிப்பாக ஜெனரல் நிசங்க  அழகக்கோனார்)  யாழ்ப்பாண துருப்புக்களுக்கு எதிராக கோட்டே மற்றும் பாணந்துறையைப்  பாதுகாப்பதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தனர்.
இந்தியாவின் தமிழ் மன்னர்களின் தொடர்ச்சியானதும்  மற்றும் அழிவுகரமானதுமான  படையெடுப்புகள் தமிழர்கள் மீது தவறான உணர்வை ஏற்படுத்தின (தென்னிந்தியர்கள் அனைவரும் ஒன்றாகக் கருதப்பட்டு  தமிழர்    என்று அழைக்கப்பட்டனர்,இழிவாக கருதப்பட்டனர்). ஆனால் கலாநிதி  லியான கமகேவின்  கருத்துப்படி, இது எப்போதும் அவ்வாறு  இல்லை. தமிழர்களுடன் சந்தித்த ஆரம்பநாட்களில், தமிழ் ஆட்சியாளர்களின் நல்ல குணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு   எழுதப்பட்டன. சேனா, குத்திக  எல்லார  போன்றவர்கள்  அவர்களின் நீதியான ஆட்சிக்காக பாராட்டப்பட்டனர்.
13 ஆம் நூற்றாண்டின் பதிவுகளில் , தமிழர்கள் கடுமையான கண்டனத்திற்கு உட்பட்டிருந்தனர் . முன்னர் பாராட்டப்பட்ட எல்லாளன் ரா (கிமு 205 முதல் கிமு 161 வரை) கூட “தேவநம்பிய  திஸ்ஸ  மன்னரால் கட்டப்பட்ட எண்ணற்ற தாதுகோபங்களை  அழித்து 44 ஆண்டுகளாக நீதியின்றி ஆட்சி செய்த ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுகிறார். இந்த எழுத்துக்களில், கடந்த காலங்களைப் போலல்லாமல், எதிர்க்கும் படைகள் ‘தமிழ்’ மற்றும் ‘சிங்களவர்கள்’ என அடையாளம் காணப்பட்டன, குறிப்பிட்ட மன்னர்களுக்கு சொந்தமானவையென  அல்ல.
‘தமிழ் ’ படையெடுப்பாளர்களுக்கு எதிரான மனக்கசப்பு, மாகா படையெடுப்பாளர்களின் அழிப்பு நடவடிக்கைகளை  நேரில் கண்ட சாட்சியாக இருந்த ஒரு பவுத்த துறவி எழுதிய பூஜாவளியவில் ஒரு அதிக இடத்தை பிடித்திருந்தது, தென்னிந்தியர்கள் அனைவரும் ‘தமிழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல. அவர்களில் கலிங்கர்கள் (ஒடிசாவிலிருந்து), மலையாளிகள்  (கேரளாவிலிருந்து), துளுவர்  (வட கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவைச் சேர்ந்த துளு  மொழி பேசுபவர்கள்) மற்றும் கன்னடர் (கர்நாடகாவிலிருந்து) ஆகியோர் அடங்குவர்.
அந்த நாட்களில் ஏற்பட்டிருந்த  மோதல்களை,   தமிழர்களுக்கு எதிராக  சிங்களவர்கள் மற்றும் நேர்மாறாக -இனரீதியானவை என்று சொல்வது தவறு என்று கலாநிதி  லியன கமகே எச்சரிக்கிறார் யாழ்ப்பாணத்தை வென்ற ஆறாவது பராக்கிரமபாகு  இந்து கோவில்களின் புரவலராகவிருந்தார் . சிலாபத்தில் முன்னேஸ்வரம்  சிவன்  கோவிலில் உள்ள ஒரு தமிழரின்   கல்வெட்டு கோயிலுக்கு அவர் செய்த பங்களிப்பை பதிவு செய்கிறது. “மிகவும் சுவாரஸ்யமாக, யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள கந்தசுவாமி  கோயிலின் அஸ்திவாரம் ஆறாம்  பராக்கரமபாகுவுடன் தொடர்புபட்டது ” என்று டாக்டர் லியனகே சுட்டிக்காட்டுகிறார். , ஆறாவது பரக்ரமபாகுவின்  மகள் உலகுடையதேவி தென்னிந்திய தமிழ் நன்னூர் துணயாவை மணந்திருந்தார்.
15 ஆம் நூற்றாண்டின் கவிஞர் தொட்டகமுவே ஸ்ரீ ராகுல , ஹிக்கடுவவுக்கு அருகிலுள்ள தொட்டகமுவே விஜயபாகு  பிரிவேனாவில், சிங்களம் மற்றும் பாளிமொழிகளைத்    தவிர, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கட்டாய பாடங்கள் என்று எழுதினார். இடைக்காலத்தின் சிங்கள படைப்புகளான பூஜாவளிய  மற்றும் சதாரமலங்கராய போன்றவை தமிழ் சொற்களைக் கொண்டிருந்தன. இன்றைய சிங்களவர்களிடமிருந்தும் பேசப்படும் குறிப்பாக விவசாயம், நில அளவீடு மற்றும் உறவினருக்கான சொற்களில் தமிழ் சொற்கள் உள்ளன. மேலும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கோன், பெருமா, அழக  போன்ற தலைப்புகள் காணப்படுகின்றன

https://thinakkural.lk/article/130228

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

படையெடுப்புகள் மற்றும் வணிக போக்குவரத்து ஆகியவை இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற தென்னிந்தியர்கள் குடியேற வழிவகுத்தன என்று டாக்டர் லியன கமகே குறிப்பிடுகிறார். தற்கால பதிவுகளில் படையெடுப்பாளர்கள் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர் (24,000 முதல் 94,000 ஆண்கள் வரை). அவர்களில் பலர் திரும்பிச் செல்வதை விட இலங்கையில் குடியேற விரும்பினர். தீவின் ஒவ்வொரு பகுதியிலும் தமிழர்கள் அல்லது தென்னிந்தியர்களின் சிறிய குழுக்கள் குடியேறியிருந்தாலும், வடக்கில்தான் குடியேற்றம் பெரிய அளவில் நிகழ்ந்ததுடன்  ஒரு தமிழ் இராச்சியம் உருவாகக்கூடியதாகவிருந்தது. சிங்கள ராஜரட்ட  இராச்சியத்தின் வீழ்ச்சி இதனை  எளிதாக்கியது.

 

ஓர் RAW agent, புலமை சார் நேர்மை அற்ற சிங்கள வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களோடு சேர்ந்து,   ஈழததமிழருக்கு இலங்கைத் தீவில் பூர்விகம் இல்லை என்று நிறுவ முயற்செய்கிறார்.

பாவம் RAW agent, மகாவம்சம் கூட சிங்கள இனம், மக்கள், ஏன் சிங்களம் எனும் சொல்லை கூட சொல்லவில்லை. 

ஆனால், மகாவம்சம், தமிழர் என்பதை டெமேல (Demela) என்று இழிவாக பாவித்து, திட்டி கொட்டி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

படையெடுப்புகள் மற்றும் வணிக போக்குவரத்து ஆகியவை இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற தென்னிந்தியர்கள் குடியேற வழிவகுத்தன என்று டாக்டர் லியன கமகே குறிப்பிடுகிறார். தற்கால பதிவுகளில் படையெடுப்பாளர்கள் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர் (24,000 முதல் 94,000 ஆண்கள் வரை).

இவர்கள் இப்பொது Demalagattara (டெமலா கட்டற) எனும் சாதி பெயரால் அழைக்கப்படும் சிங்களவர்கள்.

RAW agent, வழுக்கைத்தலை பி.கே பாலச்சந்திரன் , உண்மையிலேயே மொட்டை தான்.  

புலமை சார் நேர்மை அற்ற சிங்கள வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளளர்கள், பி.கே பாலச்சந்திரன் வழுக்கைத்தலையில்  முட்டை அடித்து, மிளகாய் அரைக்க, அதை வெளியில் சொல்லி தனக்கு தானே கூழ் முட்டை அடித்த   RAW agent, வழுக்கைத்தலை பி.கே பாலச்சந்திரன்.

கிந்தியாவின் புலனாய்வு எப்படி இருக்கும்?

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இலங்கையை குளிர்விக்கிறாராம்!🤪

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kadancha said:

 

கிந்தியாவின் புலனாய்வு எப்படி இருக்கும்?

 

இந்திராகாந்திக்கு ஓர் தேனீர் கொடுத்து கச்சைதீவை 1971 களில் பெற்று கொண்ட சிறிமாவின் ராஜதந்திரத்தின் முன் இந்தியா ராஜதந்திரம் பிச்சை வாங்க வேண்டும் ....இந்தியாவின் முக்கால்வாசி பகுதி கடல் எல்லையை கொண்டது அந்த கடல் எல்லையை பாதுகாக்க தெரியாத இந்தியா......30 கிலோமீற்றர் தூரத்தில் சீனாக்காரன் நீர்மூழ்கி கப்பல் வைத்திருக்கிறான் .....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பி கே தான் 2009க்கு முன்பு கொழும்பில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரசுக்காக (டைம்ஸ் ஓப் இந்தியாவோ?) எழுதி கொண்டு இருந்தார்.

மிக மோசமான புனைவுகளை அவிழ்து விடுவார்.

இவரின் கட்டுரைகளில் கொமெண்ட்ஸ்சில் போய் துவைத்து தொங்க போடுவதை ஒரு தொழிலாலகவே செய்த காலம் அது🤣.

காலங்கள் மாறினாலும் பி கே அடித்து விடுவது மட்டும் மாறவில்லை என்பதற்கு இந்த கட்டுரை சான்று பகர்கிறது.

இப்படி பட்ட கூ முட்டைகளை நம்பியதால்தான் ரோ இன்று இலங்கையில் மூக்குடைபட்டு நிக்கிறது🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.