Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு, புலிகளின் இப்போதைய போக்குத் தொடரின் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேமாட்டாது கண்காணிப்பு குழு எச்சரிக்கிறது இப்படி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Jul 8 7:45:31 EEST 2007

அரசு, புலிகளின் இப்போதைய போக்குத் தொடரின் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேமாட்டாது கண்காணிப்பு குழு எச்சரிக்கிறது இப்படி

அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் இப் போதைய போக்கும் அணுகு முறையும் தொடருமானால் இலங் கையில் போருக்கு முடிவே வரமாட்டாது. அதனைப் என்றைக் கும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

இவ்வாறு எச்சரித்துள்ளது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு.

எமக்கு மீண்டும் மீண்டும் அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்கு மாறாக இரண்டு தரப்புகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறிவரு கின்றன

ஆகையால் இலங்கையில் 30 வருடங்களாக நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தி யம் அருகிவருகிறது

இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான பகைமையும் மோதல்களும் அதிகரித்தே வருகின்றன. என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஒமர்சன் தெரிவித்தார்.

ஒவ்வொரு தரப்பும் அடுத்த தரப்பின் மீது குற்றம் சுமத்துகின்றன; குறை சொல்கின்றன.

இரண்டில் எந்தத் தரப்பிடமும் யுத்தநிறுத்த மீறல் குறித்து எடுத்துச் சொன்னால் அவ்வாறு நடந்திருப் பதைச் சுட்டிக்காட்டினால்

தாம் பதில் தாக்குதல், தங்களைப் பாதுகாப்பதற்கான தாக்குதலையே நடத்தியதாகக் கூறுகின்றனர். அடுத்த தரப்பே தாக்குதலை முன்னெடுத்ததாகவும் அதனால் தாம் பதில் தாக்குதல் நடத்த நேர்ந்ததாகவும் சொல்கின்றனர்

இரண்டு தரப்புகளும் இந்தப் போக்கையும் அணுகு முறையையும் தொடர்ந்து கடைக்கொண்டால் கடைப் பிடித்தால் பிரச்சினை முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்த விதமான முன்னேற்றத்தையும் எப்போதும் காணமுடியாது. போர் முடிவின்றித் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று ஒமர்சன் சொன்னார்.

இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, தடுப்பதற்காக, மோதல்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்காக நாம் இயன்றவரை நான்றாகப் பாடுபடு கின்றோம். எனினும் எங்களது பங்களிப்பு பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என் றும் தொர்பினூர் ஒமர்சன் மேலும் தெரி வித்தார்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் சொல்பேர்க்கும், ஒமர்சனும் கடந்த புதன் கிழமை கிளிநொச்சிக்குச் சென்று விடு தலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகம் எஸ்.புலித்தேவனை யும் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனையும் சந்தித்துப் பேசினர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்துவதில் தமக் குள்ள அக்கறையையும் அர்ப்பணிப்பையும் அவர்கள் அப்போது வெளியிட்டனர்.

அதன் பின்னர் நேற்றுமுன்தினம் வெள் ளிக்கிழமை அரசாங்கத்தின் சமாதானப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரஜீவ விஜய சிங்கவை வழமையான வாராந்தக் கூட் டத்தில் சந்தித்தனர்.

அதன் பின்னரே கண்காணிப்புக் குழு வின் பேச்சாளர் எச்சரிக்கைத் தொனியில் முன்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதேவேளை, கண்காணிப்புக் குழுவி னர் விடுதலைப் புலிகளையும் அடிக்கடி கிரமமாகச் சந்தித்துப் பேச உள்ளதாக ஒமர்சன் தகவல் வெளியிட்டார்.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவரிட்ட கேட்கின்றோம். எப்ப புலிகள் தங்ளின் எல்லைக் கோட்டை மீறிச் சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைப் பிடிச்சு வைச்சிருக்கினம். நிறைய இடத்தை உந்தப் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டி இழக்க வைச்சிருக்கியள்.

உங்களுக்கு இது தெரியும். வெளிப்படையாக அதைச் சொன்னா உங்களின் இருப்பு அவுட்டாகப் போடும் என்றதால உப்படிக் கதைக்கின்றியள். பேசாமல் ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டு புறப்படுங்கோ. இவ்வளவு காலமும் ஏதோ பிரியோசமாக இருந்மாதிரியல்லோ உங்கட கதை

ஓமண்ணே நீங்க சொல்லுறது சில நேரம் சரியா தான் இருக்கு எழுத்து பிழை இருக்குதோ அண்ணே.

:)

கண்காணிப்பு குழு தமிழரும் சிங்களவரும் சேரும் காலம் வராது எண்று சொல்லி இருந்தால் நண்றாக இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறிலங்கா அரசின் வெற்றிகளை மட்டம் தட்டும் ஒரு பேச்சு.. கிழக்கை முழுமையாக விடுவித்து, அபிவிருத்திப் பணிகளைத் துரிதகதியில் மேற்கொள்ள ஏதுவாக புதிய தேர்தலை நடாத்தி அரசுக்குச் சேவை செய்யும் நபர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதைப்போலவே வட பகுதியிலும் இலகுவான வெற்றிகளை ஈட்ட சிறிலங்கா அரசு பல்வேறு வகையான திட்டங்களை வகுத்துள்ளது. இம்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு தம் இருப்பைக் காத்துக் கொள்ள கண்காணிப்புக் குழு எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் பலிக்காது.. கண்காணிப்புக் குழு தேவையெல்லை என்ற நிலை கிழக்கில் தோன்றியுள்ளதுபோல் வடக்கிலும் விரைவாகத் தோன்றும். அப்போது கண்காணிப்புக்குழு தானாகவே மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறும். வெளியேறாவிட்டாலும் சிறிலங்கா அரசுக்கு நட்டமில்லை.. ஏனெனில் அவர்களுக்கு சம்பளமும், பட்டுவாடாக்களும் கொடுப்பது இளிச்சவாய் நோர்வே அரசுதானே.

கேகலிய பேட்டி கொடுத்தால் இப்படியிருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு ஒரு சதத்துக்கும் (இலங்கைக் காசு) மதிப்பில்லை எண்டிற வெக்கத்தை வெளிக்காட்டாமல் தாங்களும் ஏதோ பெரியாக்கள் எண்டிறமாதிரி கண்காணிப்புக்குழு செயல்படுகுது. பாவம் அவங்களும் சம்பளத்துக்கு வேலை செய்யிற ஆட்கள். எங்களுக்கு வேணாம் இந்த உத்தியோகம் எண்டுபோட்டு மூட்டைகட்ட ஏலாது. பொஞ்சாதி புள்ளையள் கோபிக்கும். செருப்பால அடிச்சாலும் பட்டுக்கொண்டு அசையாம நிக்கிறதுக்குத்தான் அவையளுக்குச் சம்பளம் குடுபடுது. நான் நினைக்கிறன் கண்காணிப்புக் குழுவை நியமிக்காமல் இருந்திருந்தால் சில வேளை இத்தனைக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் எண்டு. உவங்கள் இஞ்ச நிக்கிறதாலதான் விசயங்கள் தலைகீழாகத்தான் போகுது. ராசபக்ச அரசாங்கத்தின்ர தேர்தல் விஞ்ஞாபனத்தையும், வேலைத்திட்டத்தையும், ஹெல உறுமய, ஜேவிபி கூட்டையும் அவதானிச்சுப்போட்டு உடனடியாக உது சரிவராது எண்டு போயிருக்க வேணும். என்ன செய்யிறது விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல்லையெண்டுகொண்டு சம்பளத்துக்காக நிக்கினம்.

ராசபக்ச அரசாங்கத்தின்ர தேர்தல் விஞ்ஞாபனத்தையும், வேலைத்திட்டத்தையும், ஹெல உறுமய, ஜேவிபி கூட்டையும் அவதானிச்சுப்போட்டு உடனடியாக உது சரிவராது எண்டு போயிருக்க வேணும். என்ன செய்யிறது விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல்லையெண்டுகொண்டு சம்பளத்துக்காக நிக்கினம்.

இலங்கையில் தங்களின் நலன்களை வைத்து இருக்கிற நாடுகள் தனித்துவமாய் எந்த முடிவையும் எடுக்க முடியாத மாதிரியான இராச தந்திர வலையை உருவாக்கி தடுத்து நிறுத்தி இருக்கிறது இலங்கை அரசு... அதாவது புலிகளை வெல்கிறார்களோ இல்லையோ... வெளிநாடுகளை ஏய்ப்பதில் வெற்றி பெற்று வருகிறது இலங்கை...! இது எவ்வளவு காலம் அவர்களால் முடியலாம் என்பது வேற கதை... ஆனால் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் முடிவு ஒருவிடயத்தை தெளிவாக்கியது... அது இலங்கை வெல்கிறது என்பதுதான்..

உதாரணமாய்.. ஜப்பான் புலிகளை ஆதரித்து ஒரு வசனம் கூட பேச முடியாமல் தவிக்கிறது... ஏற்கனவே இலங்கையில் கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்தாச்சு.. புலிகளை ஆதரித்தால் ஜப்பான் வெளியேறி அந்த இடத்தை சீனா நிரப்பும் எனும் நிலை... இதுதான் ஜதார்த்தம்.. யாருமே இப்போதைக்கு புலிகளை ஆதரிக்க மாட்டார்கள்.. ஆதரித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்...!!

ஜப்பானுக்கோ மேற்கத்திய நாடுகளுக்கோ இலங்கைத்தீவில் செய்துள்ள முதலீடுகள் ஒன்றும் பெரிதல்ல. இலங்கையுடனான வர்த்தகம் ஜப்பனின் மொத்த சர்வதேச வர்த்தகத்தில் 1% கூட இருக்காது.

இணைத்தலைமை நாடுகளின் தடுமாற்றத்துக்கு முக்கிய காரணமே இந்தியாவின் மறைமுக அழுத்தங்கள் தான்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும் பிராந்திய நலன்களுக்கும் தமிழர்கள் பலம் பெறுவது ஆபத்து என்று இந்தியா நினைப்பது தான், இணைத்தலைமை நாடுகள் தமிழர்கள் சார்பாக தீர்மானங்கள் போடுவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஜப்பானும் அகாசியும் வெறும் அம்பு மட்டும் தான்.

Edited by vettri-vel

ஜோக் அடிக்கதேங்கோ....!! ஜப்பானின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகள் ஐரோப்பவிற்கான ஏற்றுமதியில் தான் தங்கி இருக்கிறது... ஏற்றுமதி என்பது தாய்வானில் இருந்து, மலேசியாவில் இருந்து, மற்றய நாடுகளில் இருக்கும் ஜப்பானிய தொழில்ச்சாலைகளில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் இலங்கையை துரகளுக்கு வந்தோ, இல்லை இலங்கைக்கு கொண்டு வரப்படோதான் நாடு ரீதியாக கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டு இருக்கிறன...! ஜப்பானுக்கு தேவையான எரிபொருட்கள் கூட இலங்கையில் இருக்கு பன்னாட்டு நிறுவனங்கள்ளால்தான் பெரும்பகுதி ஏற்றப்படுகிறது... அதுக்காகத்தான் இந்தியா கூட சீனன்குடா எண்ணைக்குதங்களை வாடகை கொடுத்து வாங்கி வைத்து இருக்கிறது.. அப்படிப்பட்ட இலங்கையின் வருமானத்தின் பொரும்பகுதியில் ஒரு பகுதி இந்த கப்பல் போக்குவரத்து சரக்குகள் கையாழுதல் போண்றவை இலங்கைக்கும் கூட வருமானத்தை ஈட்டி தரும் வளி....!

ஏன் சீனாவின் ஆயுத தொழில்ச்சாலை ஒண்றின் கழஞ்சியம் ஒண்று காலி துறைமுகத்துக்கு அண்மையில் இருக்கிறது.. சீனா ஒண்றும் ஓசியில் கழஞ்சியம் வைத்து இருக்க வில்லை..! தேவையான பணம் இலங்கைக்கு கொடுக்கிறது...!!

இது ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மட்டும் அல்ல எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்...!

Edited by தயா

ஜோக் அடிக்கதேங்கோ....!! ஜப்பானின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகள் ஐரோப்பவிற்கான ஏற்றுமதியில் தான் தங்கி இருக்கிறது... ஏற்றுமதி என்பது தாய்வானில் இருந்து, மலேசியாவில் இருந்து, மற்றய நாடுகளில் இருக்கும் ஜப்பானிய தொழில்ச்சாலைகளில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் இலங்கையை துரகளுக்கு வந்தோ, இல்லை இலங்கைக்கு கொண்டு வரப்படோதான் நாடு ரீதியாக கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டு இருக்கிறன...! ஜப்பானுக்கு தேவையான எரிபொருட்கள் கூட இலங்கையில் இருக்கு பன்னாட்டு நிறுவனங்கள்ளால்தான் பெரும்பகுதி ஏற்றப்படுகிறது... அதுக்காகத்தான் இந்தியா கூட சீனன்குடா எண்ணைக்குதங்களை வாடகை கொடுத்து வாங்கி வைத்து இருக்கிறது.. அப்படிப்பட்ட இலங்கையின் வருமானத்தின் பொரும்பகுதியில் ஒரு பகுதி இந்த கப்பல் போக்குவரத்து சரக்குகள் கையாழுதல் போண்றவை இலங்கைக்கும் கூட வருமானத்தை ஈட்டி தரும் வளி....!

இது ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மட்டும் அல்ல எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்...!

1. ஜப்பானின் மிகப்பெரிய Trade Partener அமெரிக்கா(USA) . ஐரோப்பா (EU) அல்ல.

Top 15 Countries for Japanese Exports in 2005

United States ... US$135.9 billion (22.9% of total Japanese exports)

European Union ... $87.6 billion (14.7%)

China ... $80.1 billion (13.5%)

South Korea ... $46.6 billion (7.8%)

Chinese Taipei ... $43.6 billion (7.3%)

Hong Kong ... $36 billion (6%)

Thailand ... $22.5 billion (3.8%)

Singapore ... $18.4 billion (3.1%)

Malaysia ... $12.5 billion (2.1%)

Australia ... $12.4 billion (2.1%)

Indonesia ... $9.2 billion (1.5%)

Philippines ... $9.1 billion (1.5%)

Canada ... $8.8 billion (1.5%)

Panama ... $7.4 billion (1.2%)

Mexico ... $6.9 billion (1.2%)

Top 15 Countries Japan Imported From in 2005

China ... US$108.5 billion (21.1% of total Japanese imports)

United States ... $65.3 billion (12.7%)

European Union ... $58.6 billion (11.4%)

Saudi Arabia ... $28.7 billion (5.6%)

United Arab Emirates ... $25.3 billion (4.9%)

Australia ... $24.5 billion (4.8%)

South Korea ... $24.4 billion (4.7%)

Indonesia ... $20.8 billion (4%)

Chinese Taipai ... $18.1 billion (3.5%)

Thailand ... $15.6 billion (3%)

Malaysia ... $14.7 billion (2.8%)

Qatar ... $10.7 billion (2.1%)

Iran ... $10.3 billion (2%)

Canada ... $8.9 billion (1.7%)

Philippines ... $7.7 billion (1.5%)

2. தூரகிழக்கு நாடுகளில் இருந்து எல்லா கப்பல்களும் இலங்கையை கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இலங்கை துறைமுகங்களினூடக செல்லும் கப்பல்கள் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் 1% கூட இல்லை.

Busiest Ports By Volume

1. Singapore

2. Rotterdam, Netherlands

3. South Louisiana, U.S.A.

4. Shanghai, China

5. Hong Kong, China

6. Houston, U.S.A

7. Chiba, Japan

8. Nagoya, Japan

9. Ulsan, South Korea

10. Kwangyang, South Korea

2005 Busiest Ports By Containers

Rank===Port======Country=============== TEUs(000s)(1)

1=======Singapore===Singapore==============23,192

2=======Hong Kong==People's Republic of China =22,427

3=======Shanghai===People's Republic of China==18,084

4=======Shenzhen===People's Republic of China=16,197

5=======Busan======South Korea 11,843

6=======Kaohsiung Taiwan (Republic of China) 9,471

7=======Rotterdam Netherlands 9,287

8=======Hamburg Germany 8,088

9=======Dubai United Arab Emirates 7,619

10=======Los Angeles United States of America 7,485

11=======Long Beach United States of America 6,710

12=======Antwerp Belgium 6,482

13=======Qingdao People's Republic of China 6,307

14=======Klang Malaysia 5,544

15=======Ningbo People's Republic of China 5,208

16=======Tianjin People's Republic of China 4,801

17=======New York United States of America 4,785

18=======Guangzhou People's Republic of China 4,685

19=======Tanjung Pelepas Malaysia 4,177

20=======Laem Chabang Thailand 3,834

33===Colombo Sri Lanka 2,455

3. ஜப்பானின் மொத்த ஏற்றுமதியில் இலங்கை துறைமுகங்களினூடக செல்வது மிக சிறிய விகிதமே.

Edited by vettri-vel

அப்படியானால் இதையும் ஒருதரம் பாருங்கள்... இலங்கைக்கு வருவாயை ஈட்டி தரும் நாடுகளின் முதல் பத்து நாடுகளின் ஜப்பான் மூண்றாவது இடத்தில்...!

Sri Lankan Exports - Top 10 Destination Markets

United States of America

Basic Information

Economy & Trade

Dutiable Status of Goods

Marketing

Imports to USA

List of Toy Importers

Ceramic & Porcelain Tableware Market

Export of Pepper from Sri Lanka to India under ISFTA - Implications

Information

இந்த ஒப்பந்தத்தில் சீனாவும் அடக்கம்....!

Emerging Opportunities in the Japanese Market

Basic Characteristics of the Market

Recent Trends

Changes in the Distribution System

Emerging Market Sectors

Malaysia

Introduction (Basic Data)

Economic Overview

External Trade

Trade with Sri Lanka

Korea

Introduction (Basic Data)

Economic Overview

Labour Market Restructuring

Public Sector Restructuring

Globalisation

Trade with Sri Lanka

Philippines

Introduction (Basic Data)

Economic Overview

Foreign Trade

Australia

Summery Report Australia

Introduction

Economic overview

Foreign Trade

Market Access

Transport & Communication

Marketing, Distribution and Promotion

Proposed Future Market Research

Opportunity Analysis

Limitations

Recommendations & Conclusion

Major Imports

Major Exports

Annexure

Pakistan

Guide to the research

Introduction

Economic overview

Foreign Trade

Market Access

Transport & Communication

Opportunity Analysis

Useful Information

Major Imports

Major Exports

SAARC Country Profiles

Introduction

தகவல் பெறப்பட்ட இடம்

http://www.srilankabusiness.com/pmarkets/index.htm

ஒவ்வொரு நாடுகள் வரிசையிலும் கிழே இலங்கை எதில் செல்வாக்கு செலுத்த முடியும் என்னும் விடயம் விபரமான லிங்கில் இருந்தது வேண்டுமானால் மூல தளத்தை பார்வையிடுங்கள்...!

அதாவது ஜப்பான் தனது நாட்டுக்கான முலகங்களை இலங்கையில் விலை குறைவாக பெறவில்லையா..?? இலங்கையின் முக்கிய துறை முகங்களை கட்டி கொடுத்தது ஜப்பான் தான்

http://www.ecfa.or.jp/english/pdf/jpc.pdf

அதுக்கான செலவையும் ஜப்பான் ஏற்று கொண்டது... அதாவது தனது கப்பல்களின் வருகை சம்பந்தமான ஒப்பந்தத்தொடு... இவை எவையும் நீங்கள் காட்டும் வருடாந்த செலவீனங்களில் வருவதில்லை... எங்கையாவது ஒப்பந்தங்கள் சம்பந்தமாக ஏதாவது இருந்தால் தேடிப்பாருங்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.