Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை !

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

ஜப்­பானின் மிகப்­பெ­ரிய நக­ரமும் மின்­சார நகரம் என்றும் வர்­ணிக்­கப்­படும் டோக்­கி­யோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெற்­று­வந்த 32ஆவது டோக்­கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்­மாண்ட நிறைவு விழா­வுடன் முடி­வுக்கு வந்­தது.

 206 நாடு­களை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளை­யாட்டில் 339 போட்­டிப்­பி­ரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்­துள்­ளது. 

Photos: The 2020 Olympics in Tokyo

டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்­பட்டி 8 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­னது. வெற்று மைதா­னத்தில் நடை­பெற்ற நிறைவு விழா கலை­கட்­டி­யதா என்றால் இல்­லை­யென்றே சொல்ல ‍வேண்டும்.

நிறைவு விழாவின் தொடக்­கத்தில் வீரர்கள் மைதா­னத்­திற்குள் அணி வகுக்க ஜப்பான் நாட்­டி­ன் கலை நிகழ்ச்­சி­க­ளுடன் நிறைவு விழா ஆரம்­ப­மா­னது. 

அதன்­பி­றகு ஒலிம்பிக் கொடி இறக்­க­பட்டு அடுத்த ஒலிம்­பிக்கை நடத்தும் நக­ர­மான பிரான்ஸின் பாரிஸ் நகர மேய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

Tokyo Olympics 2021 closing ceremony: Epic ending to games as Team GB land  65 medals - Mirror Online

சம்­பி­தா­ய­பூர்­வ­மன ஒலிம்பிக் நிறை­வு­ நிகழ்வுகளின் பின்னர் பேசிய சர்­வ­தேச ஒலிம்பிக் சங்­கத்தின் தலைவர் தோமஸ் பாக் வீரர்­க­ளுக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்­த­தோடு ‍கொ‍ரோனாவுக்கு மத்தியில் ‍வெற்றிகரமான ஒலிம்பிக்‍கை நடத்தியமைக்கு ஜப்பான் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் வாழ்­த்துக்­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்தார்.

அத்­தோடு கடந்த 16  நாட்­க­ளாக எரிந்­து­கொண்­டி­ருந்த ஒலிம்பிக் தீபம் அணைக்­கப்­பட்­ட­தோடு வானைப் பிழந்த பட்டாசுக்களுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் கார­ண­மாக 2020 ஆம் ஆண்டு நடத்­தப்­பட வேண்­டிய ஒலிம்­பிக்கை ஓராண்டு ஒத்­தி­வைத்து இவ்­வாண்டு நட­த்­தப்­பட்­டது. 

ஆனாலும் இத­தற்கு டோக்­கியோ 2020 என்­றுதான் பெயர். நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­மு­றை­ நடை­பெறும் ஒலிம்பிக் போட்­டிகள் அடுத்த முறை முன்று வரு­டங்­களில் ‍அதா­வது 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளது.  

Most Challenging" Tokyo Olympics Declared Closed | Olympics News

இதற்கு முன்­ன­தாக 1900 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்­டு­களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடத்­தப்­பட்­டுள்­ளது.

டோக்­கியோ ஒலிம்­பிக்கில் ஒட்­டு­மொத்­த­மாக 39 தங்கப் பதக்­கங்­களை வென்­றுள்ள அமெ­ரிக்கா 41 வெள்ளி, 33 வெண்­கலம் உட்­பட மொத்தம் 113 பதக்­கங்­களை வென்று பதக்கப் பட்­டி­யலில் முத­லி­டத்தைப் பிடித்­துள்­ளது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் வெலுத்தி வந்த சினாவோ 38 தங்கப் பதக்­கங்கள், 32 வெள்ளி, 18 வெண்­கலம் என மொத்தம் 88 பதக்­கங்­க­ளுடன் இரண்­டா­வது இடத்தில் இருக்­கி­றது.

போட்­டியை நடத்­திய  ஜப்பான் 27 தங்­கப்­ப­தக்­கங்கள், 14 வெள்ளி மற்றும் 17 வெண்­க­லப்­ப­தக்­கங்­க­ளுடன் மூன்­றா­வது இடத்தில் உள்­ளது.

கடைசி தங்கம்

 

டோக்­கியோ ஒலிம்­பிக்கின் முத­லா­வது தங்­கப்­ப­தக்­கத்தை சீனா வென்­றதைப் போல டோக்­கியோ ஒலிம்ப்கின் கடைசி தங்­கப்­ப­தக்­க­மான 339ஆவது தங்கப் பக்­கத்தை செர்­பியா நாட்டின் ஆண்கள் போட்டர் போலோ அணி வென்­றது. 

கிரீஸ் நாட்­டுடன் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் 13-10 புள்­ளிகள் அடிப்­ப­டையில் வென்ற செர்­பியா, கடைசி தங்­கப்­ப­தக்­கத்தை வென்ற நாடு என்ற பதிவைப் பதித்­தது.

நிலை­நாட்­டப்­பட்ட உலக சாத­னைகள்

பெண்கள் ட்ராக் சைக்கிள் பந்­தயம் - ஜேர்­மனி

ஆண்கள் ட்ராக் சைக்கிள் பந்­தயம் குழு: - இத்­தாலி

மகளிர் 200 மீற்றர் பிஸ்டோக் நீச்சல்:  - டட்­ஜானா ஷோன்­மேக்கர் (தென்­ன­பி­ரிக்கா) (2: 18.95 மீ)

ஆண்கள் 100 மீற்றர் பட்­டர்­பிளை நீச்சல் போட்டி: கேலெப் டிரஸ்ஸல் -– அமெ­ரிக்கா (49.45 வினா­டிகள்)

ஆண்கள் 4 × 100 மீற்றர் மெட்லி ரிலே: - அமெ­ரிக்கா (3: 26.78 மீ)

ஆண்­க­ளுக்­கான பளூ தூக்கல் -: லாஷா தலா­காட்சே – ஜோர்­ஜியா (488 கிலோ)

பெண்கள் 4 × 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் -: அவுஸ்­தி­ரே­லியா (3: 29.69)

மகளிர் முப்­பாய்ச்சல் -: யூலிமர் ரோஜாஸ் – வெனி­சுலா (15.67 மீட்டர்)

400 மீற்றர் தடை­தாண்டல் ஒட்டம்-: கார்ஸ்டன் வார்ஹோல்ம் – நோர்வே (45.94 வினா­டிகள்)

மகளிர் உள்ளக சைக்கில் ஓட்டம்: - சீனா (31.804 வினா­டிகள்)

பெண்கள் 4x200 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் -: சீனா (7: 40.33 நிமி­டங்கள்)

73 கிலோ பிரிவில் ஆண்கள் பளு­தூக்கல் :- ஷி ஜியாங் – சீனா

மகளிர் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டம்: சிட்னி மெக்­லாஹ்லின் – அமெ­ரிக்கா (51.46 வினா­டிகள்)

ஆண்­க­ளுக்­கான 1500 மீற்றர் ஓட்டம்: ‍ஜேகோப் இங்க்­பி­ரிட்சன் – நோர்வே (3 நிமிடம் 28.32 வினாடி)

மக­ளி­ருக்­கான 1500 மீற்றர் ஓட்டம்-: ஃபெய்த் கிபி­யாகோன் –- கென்யா (3 நிமிடம் 53.11 வினாடி)

குழு நிலைப் போட்டிப் பிரி­வு­களில்  முதல் மூன்று இடங்­களைப் பெற்ற நாடுகள் (ஆண். பெண் இரு பிரி­வு­க­ளிலும் )

மல்­யுத்தம்

 

ஆண்கள்: ஆர்.ஓ.சி., அமெ­ரிக்கா, கியூபா

பெண்கள்: ஜப்பான், அமெ­ரிக்கா, ஜேர்­மனி

அம்­பெய்தல்

ஆண்கள்: ஆர்.ஓ.சி., துருக்கி, இத்­தாலி

பெண்கள்: கொரியா, ஆர்.ஓ.சி., இத்­தாலி

ஜிம்­னாஸ்டிக்

ஆண்கள்: சீனா, ஜப்பான், ஆர்.ஓ.சி.

பெண்கள்: அமெ­ரிக்கா, ஆர்.ஓ.சி., சீனா

தட­களம்

ஆண்கள்: இத்­தாலி, அமெிக்கா, கென்யா

பெண்கள்: அமெ­ரிக்கா, ஜமைக்கா, கென்யா

குத்­துச்­சண்டை

ஆண்கள்: கியூபா, பிரித்­தா­னியா, ஆர்.ஓ.சி.

பெண்கள்: துருக்கி, பிரித்­தா­னியா, ஜப்பான்

சைக்­கி­ளோ­ட்டம்

ஆண்கள்: நெதர்­லாந்து, சுலோ­வே­னியா, ஆஸ­தி­ரியா

பெண்கள்: நெர்­லாந்து, ஆஸ்­தி­ரியா, சுவிட்­ஸர்­லாந்து

குதி­ரை­யேற்றம்

ஜேர்­மனி, பிரித்­தா­னியா,சுவிடன்

வாள் சண்டை

ஆண்கள்: ஆர்.ஓ.சி., பிரான்ஸ், கொரியா

பெண்கள்: ஆர்.ஓ.சி., எஸ்­டோ­னிய, அமெ­ரிக்கா

கால்­பந்­தாட்டம்

ஆண்கள்: பிரேசில், ஸ்பெய்ன், மெக்­சிகோ

பெண்கள்: கனடா, சுவிடன், அமெ­ரிக்கா

கோல்ப்

ஆண்கள்: அமெ­ரிக்கா, சுலோ­வே­னியா, சைனிஸ்­தாய்பே

பெண்கள்: அமெ­ரிக்கா, ஜப்பான், நியூ­ஸி.

ஹொக்கி

ஆண்கள்: பெல்­ஜியம், ஆஸி., இந்­தியா

பெண்கள்: நெதர்­லாந்து, ஆர்­ஜன்­டீனா, பிரித்­தா­னியா

ஜூடோ

ஆண்கள்: ஜப்பான், ஜோர்­ஜியா, செக்.குடி­ய­ரசு

பெண்கள்: ஜப்பான், கொசோவா, பிரான்ஸ்

கராட்டி

ஆண்கள்: ஜப்பான், இத்­தாலி, பிரான்ஸ்

பெண்கள்: எகிப்து, ஸ்பெய்ன், பல்­கே­ரியா

நீச்சல் மரத்தன்

ஆண்கள்: ஜேர்­மனி, ஹங்­கேரி, இத்­தாலி

பெண்கள்: பிரேசில், நெதர்­லாந்து, ஆஸி.

றக்பி 7

ஆண்கள்: பிஜி, நியூ­ஸி­லாந்து, ஆர்­ஜன்­டீனா

பெண்கள்: நியூ­லாந்து, பிரான்ஸ், பிஜி

துப்­பாக்கி சுடுதல்

ஆண்கள்: அமெ­ரிக்கா, சீனா, செக்.குடி­ய­ரசு

பெண்கள்: ஆர்.ஓ.சி, அமெ­ரிக்கா, சீனா

நீச்சல்

ஆண்கள்: அமெ­ரிக்கா, பிரித்­தானி, ஆர்.ஓ.சி.

பெண்கள்: ஆஸி., அமெ­ரிக்கா, சீனா

மேசைப்­பந்து

ஆண்கள்: சீனா, ஜேர்­மனி, ஜப்பான்

பெண்கள்: சீனா, ஜப்பான், ஹொங்கொங்

டென்னிஸ்

ஆண்கள்: குரோ­ஷியா, ஜேர்­மனி, ஆர்.ஓ.சி

பெண்கள்: செக்.குடி­ய­ரசு, சுவிட்­ஸர்­லாந்து, பிரேசில்

கரப்பந்தாட்டம்

ஆண்கள்: பிரான்ஸ், ஆர்.ஓ.சி., ஆர்ஜன்டீனா

பெண்கள்: அமெரிக்கா, பிரேசில், சேர்பியா

பளுதூக்கல்

ஆண்கள்: சீனா, ஜோர்ஜயா, கட்டார்

பெண்கள்: சீனா, ஈக்வடோர், சைனிஸ் தாய்பே

வெறுங்­கை­யுடன் நாடு திரும்­பிய இலங்கை

டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டியில் இலங்­கை­யி­லி­ருந்து ஒன்­பது வீரர்கள் 7 போட்டிப் பிரி­வு­களில் பங்­கேற்­றி­ருந்­தனர். 

ஆனால் இதில் ஒருவர் கூட அடுத்த சுற்­றுக்கு முன்­னே­ற­வில்லை என்­பதே சோகம். ஆக இலங்கை அணி வெஙை்­கை­யுடன் நாடு திரும்­பி­யது.

இந்­தி­யாவுக்கு ஒரு தங்கம்

ஒலி­ம­பிக்கில் பங்­கேற்ற இரண்­டா­வது மிகப்­பெ­ரிய சனத்­தொகை கொண்ட நாடானா இந்­தியா இந்த ஒலிம்­பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்­கலப் பதக்­கத்தை வென்­றது. இந்­தியா இந்த பட்­டி­யலில் 48 ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது.

ஒட்டு‍மொத்த உலகமும் கொரோனாவால் பிடித்திருக்கும் நிலையில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் வெற்றி பெற்றதா என்பதை வரலாறு தீர்மானிக்கும்.  ஆனால் வியைாட்டு உலகின் மகத்துவத்தை டோக்கியோ ஒலிம்பிக் எடுத்துக் காட்டியுள்ளது என்பது திண்ணம்.

https://www.virakesari.lk/article/110943

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதனாலென்ன .. வாற வழியில் வாங்கி கொள்ளலாம்..👌

da05c-kovil2bvadivelu2b1_memekadai.blogs

  • கருத்துக்கள உறவுகள்

2024இல் இலங்கை ஒலிம்பிக் அணி பதக்கம் பெற வாழ்த்துக்கள்!

சுசந்திகா அம்மையார் வெள்ளி பெற்றது போல் நிச்சயம் இலங்கை வீர, வீராங்கனைகளால் பிரகாசிக்க முடியும் முடியும்.

28 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

2024இல் இலங்கை ஒலிம்பிக் அணி பதக்கம் பெற வாழ்த்துக்கள்!

சுசந்திகா அம்மையார் வெள்ளி பெற்றது போல் நிச்சயம் இலங்கை வீர, வீராங்கனைகளால் பிரகாசிக்க முடியும் முடியும்.

எப்படி?

சிங்கள அரசியல்வாதிகளின் எடுபிடிகள் தான் விளையாட்டுத்துறையில் அதிகாரிகளாகவும், வீரர்களை தேர்ந்தெடுப்பவர்களாவும் உள்ளனர். இந்த எடுபிடிகள் இனப்பாகுபாடு, மதப்பாகுபாடு, வர்க்க வேறுபாடு போன்றவற்றால் வடிகட்டப்பட்டுத்தான் விளையாட்டு வீரர்களை தெரிவு செய்கின்றனர். 

திறமையின் அடிப்படையில் தெரிந்தெடுக்காமல், இவ்வாறு தேர்ந்தெடுக்கும் ஒரு நாட்டில் பதக்கம் ஒன்று பெறுவது இயலாத காரியம். சுசந்திக்காவுக்கு அன்றைய விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக இருந்த எஸ்.பி. திசனாயக்காவினால் நிகழ்ந்த அவமானம், புறக்கணிப்பு போன்றவற்றை ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது, இனி ஒருவரும் வரப்போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

சிங்கள அரசியல்வாதிகளின் எடுபிடிகள் தான் விளையாட்டுத்துறையில் அதிகாரிகளாகவும், வீரர்களை தேர்ந்தெடுப்பவர்களாவும் உள்ளனர். இந்த எடுபிடிகள் இனப்பாகுபாடு, மதப்பாகுபாடு, வர்க்க வேறுபாடு போன்றவற்றால் வடிகட்டப்பட்டுத்தான் விளையாட்டு வீரர்களை தெரிவு செய்கின்றனர்

 

38 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

2024இல் இலங்கை ஒலிம்பிக் அணி பதக்கம் பெற வாழ்த்துக்கள்

விளையாட்டிலும் அரசியல் என்றால் இந்த நிலைமைதான்
2024  இல் அல்ல இலங்கை இன்னும் பல காலம் தங்கத்திற்கு காத்திருக்க வேண்டும்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித் தோன்றல்கள் விரைவில் ஒலிம்பிக்கில் தங்கள் திறமையைக் காட்டுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

2024இல் இலங்கை ஒலிம்பிக் அணி பதக்கம் பெற வாழ்த்துக்கள்!

சுசந்திகா அம்மையார் வெள்ளி பெற்றது போல் நிச்சயம் இலங்கை வீர, வீராங்கனைகளால் பிரகாசிக்க முடியும் முடியும்.

அடுத்த சுசந்திகா சிங்கள இனத்தில் உருவாக்கி வரும்வரை வானை பார்த்து  பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான், கல்வியறிவினால் முகத்தில் அறைந்த  புலம் பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறைகள் ஒலிம்பிக்கிலும்  சாதித்து பதக்கங்களால் இலங்கைக்கு முகத்தில் அறையவேண்டும்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.