Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை

இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை

 — கருணாகரன் — 

இலங்கையில் இனப்பிரச்சினையையும் விடப் பெரிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவை இப்போது தலையெடுத்துள்ளன. தென்பகுதியில் இவ்வாறான ஒரு புரிதலே நீண்டகாலமாக உண்டு. ஜே.வி.பியின் எழுச்சியும் கிளர்ச்சிகளும் இந்த அடிப்படையிலானவையே. ஆட்சி மாற்றங்கள், ஜே.வி.பிக்கான அன்றைய ஆதரவு போன்றவையெல்லாவற்றுக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளே முதற் காரணங்கள். 

ஏன் இப்பொழுது நமது சூழலில் இளைய தலைமுறையினர் அதிகமாகச் சட்டவிரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, வன்முறைகளில் ஈடுபடுவது, கள்ள மண் ஏற்றுவது, களவாக மரம் வெட்டுவது, கொள்ளை, கடத்தல், கொலை உள்ளிட்ட தவறான விடயங்களில் ஈடுபடுவதற்கும் பிரதான காரணம், வேலையில்லாப் பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையுமே. 

ஏனெனில் பொருளாரப் பிரச்சினை என்பது நேரடியாகவே நிகழ்காலத்தின் மீது நெருப்பையும் எதிர்காலத்தின் மீது இருளையும் ஒரே நேரத்தில் உண்டாக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதனாலே உலகின் அத்தனை நாடுகளும் அத்தனை சமூகங்களும் பொருளாதார அடிப்படைகளில் சரிவு ஏற்படாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துடிக்கின்றன. 

ஆனால் நமது இலங்கையிலோ எதிர்காலத்தின் மீது கனத்த இருள் படிந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்குப் பேராபத்தையும் போராபத்தையும் தரக்கூடியது. 

பொருளாதார நெருக்கடி என்பது அசமத்துவ நிலையை மக்களிடையே பாரிய அளவில் உண்டாக்கி விடக் கூடிய ஒன்று. வரலாறு முழுவதிலும் பொருளாதாரப் பிரச்சினையினாலேயே மனித குலமும் அதனுடைய வரலாறும் கொந்தளித்திருக்கிறது. இரத்தம் சிந்தியுள்ளது. 

ஆகவேதான் நாம் மிகக் கவனமாக இந்தப் பிரச்சினையைக் கையாள வேண்டியுள்ளது. கூடுதல் கவனமெடுக்கவும் வேண்டியுள்ளது. 

இப்படிச் சொல்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான நெருக்கடியையும் இன ஒடுக்குமுறையின் கனதியையும் நாம் குறைத்துப் பேசுகிறோம் என்று அர்த்தமில்லை. 

ஆனால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை பெரிய அளவுக்குத் தலைதூக்கியுள்ளது. உற்பத்தித்துறை படுத்து விட்டது. பொருளாதாரம் மிகக் கீழே தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. 

இதெல்லாம் ஏதோ இப்பொழுது இந்தக் கொரோனா நெருக்கடியினால் ஏற்பட்டது என்றில்லை. அதற்கு முன்பே போரினாலும் பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கையினாலும் ஏற்பட்ட வீழ்ச்சி இது. இதற்கு ஆட்சியிலிருந்த அத்தனை தரப்புகளுக்கும் பொறுப்புண்டு. 

இந்தப் பொறுப்பற்ற தன்மையினால் ஊழல், லஞ்சம் தொடக்கம் சட்ட விரோதத் தொழில் முறைகள் வரையில் நாட்டை நாசமாக்கக் கூடிய தீமைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வோம் என்றே பலரும் யோசிக்கிறார்கள். 

இதில் வல்லமையுள்ளவர்களும் சாத்தியங்களைக் கொண்டவர்களும் பிழைத்துக் கொள்கிறார்கள். ஏனைய பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் நடந்து கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்திற்கு முன்பு மக்கள் திணறிப்போய் நிற்கிறார்கள். 

இப்படி நெருக்கடிகள் ஏற்படும்போது நாடு இயல்பின்மையை நோக்கிச் செல்லும். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிகமும் தாக்கப்படுவது இளைய தலைமுறையினரே. அவர்கள்தான் எதிர்காலத்தைக் குறித்து அதிகமாகச் சிந்திப்போர். தங்களுடைய எதிர்காலம் நெருக்கடியின் இருளில் மூழ்கியிருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. 

இதில் படித்தவர்கள் போராட்டங்களை நடத்தியோ நீண்ட காலக் காத்திருப்புக்கு அப்பால் நின்றோ தமக்கான வேலை வாய்ப்பை அரச நிர்வாகத்துறைகளில் பெற்றுக் கொள்கிறார்கள். அரசும் எப்படியோ இவர்களையாவது சமாளித்துக் கொள்வோம் என்று வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதனால் இன்று நிர்வாகத்துறையில் அதிகப் படியான ஆட்கள் தேவைக்கதிகமாக வேலைக்கு உள் வாங்கப்பட்டிருக்கின்றனர். ஏனையோருக்கு வழியுமில்லை,திசையுமில்லை. 

இதனால் ஆத்திரமேற்படுகிறது இவர்களுக்கு. வேறு வழியில்லாமல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். சரியான வழிகாட்டலும் அதற்கேற்ற பொறிமுறையும் தொழில்துறைகளும் இருக்குமானால் இளைஞர்கள் அதில் ஆர்வத்தோடு ஈடுபடுவர். அதில்லாத போது அவர்கள் தெருவில்தானே நிற்பர்? தெருவிலே எத்தனை நாட்களுக்குச் சும்மா நிற்க முடியும்? 

இந்த எளிய உண்மையை பலரும் அறிய முற்படுவதில்லை. அப்படித் தெரிந்தாலும் அதைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. ஏராளம் அரசியல் பகுப்பாய்வாளர்கள் தமது மூச்சிரைக்க இரைக்க எவ்வளவோ அரசியல் வியாக்கியானங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மறந்தும் அவர்கள் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றி எழுதுவதே இல்லை. பேசாமல் அதைக் கடந்து சென்று விடுகிறார்கள். 

ஆனால் இந்த அடிப்படைப் பிரச்சினையை விட்டு விட்டு வெறுமனே இளைய தலைமுறையைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள். அல்லது அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டு விடுவார்கள். இரண்டினாலும் எந்தப் பயனும் கிட்டாது. பதிலாக இடைவெளியும் பாதிப்புமே நமக்கு ஏற்படும். 

இங்கே ஒரு கேள்வியை சிலர் எழுப்பக் கூடும். இதெல்லாவற்றுக்கும் பதிலையும் பரிகாரத்தையும் காண வேண்டியது அரசாங்கம்தானே. நாம் இதற்கு என்ன செய்ய முடியும்? என. 

அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதும் இறக்குவதும் மக்களாகிய நாமே. ஏன் நாம் நினைத்தால் அரசாங்கத்தைச் சரியாகவே இயங்க வைக்க முடியும். நமது அறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள், ஆளும் தரப்பிலுள்ள மக்கள் நேசச் சக்திகள் போன்ற தரப்புகள் சரியாகச் செயற்பட்டால் அரசாங்கம் உச்சவே –தப்பவே – முடியாது. எப்படியோ சரியாகச் செயற்பட்டே ஆக வேண்டும். இதற்காகத்தான் இந்தச் சக்திகளுக்கு எப்போதும் சமூக மதிப்புண்டு. 

ஆனால் துரதிருஸ்டவசமாக நம்முடைய சூழலில் இவற்றிற் பலவும் பொறுப்புடன் செயற்படுவதுமில்லை. பொறுப்பை உணர்வதுமில்லை. பொறுப்பை ஏற்பதுமில்லை. ஆளுமையாக நடந்து கொள்வதுமில்லை. பதிலாக தங்களுடைய தவறுகளையும் பொறுப்பின்மையையும் ஆளுமைக் குறைபாடுகளையும் மறைத்துக் கொள்வதற்காக எழுந்தமானமாக அரசாங்கத்தைக் குறை சொல்விட்டுத் தாம் தப்பித்துக்கொள்கிறார்கள். இது எவ்வளவுக்குத் தவறானது. எவ்வளவு அயோக்கியத்தனமானது! பச்சையாகச் சொன்னால், இது படு கேவலமானது. 

இன்று நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் வேலை வாய்ப்பின்மைக்குள்ளும் சிக்கியுள்ளது. இதற்கு அனைவருமே பொறுப்பாளிகள். எவரும் தப்பி விட முடியாது. 

எளிய உதாரணம், இன்று நாட்டில் எத்தனை தொழிற்துறைகள் உள்ளன என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கூடப் பல தொழிற்துறைகள் இருந்தன. சீமெந்துத் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலகள், வாளித் தொழிற்சாலை, ஆணித் தொழிற்சாலை, மில்க் வைற் சவர்க்காரத் தொழிற்சாலை, அண்ணா கோப்பி தொழிற்சாலை, சுப்பிரமணியம் சோடாக் கொம்பனி, பற்பொடித் தொழிற்சாலை, பீடிக் கொம்பனிகள், சுருட்டுத் தொழிற்சாலைகள், தோல் பதனிடம் தொழிற்சாலை, கைத்தறி மற்றும் புடவைத் தொழிற்சாலைகள், தோலகட்டி உணவு பதனிடும் தொழிற்சாலை எனப் பல ஆலைகளும் தொழிற்சாலைகளும் இருந்தன. இவற்றில் பல ஆயிரக்கணக்கானோர் வேலை செய்தனர். அப்பொழுது புலம்பெயர்வு நடக்கவே இல்லை. ஆகவே இங்கே இருந்த இளைய தலைமுறை முடிந்தளவுக்கு தொழில்களில் ஈடுபடக் கூடியதொரு நிலை இருந்தது. சூழல் இருந்தது. 

பெரும்பாலான நமது தேவைகளையும் இந்த ஆலைகளின் உற்பத்திகளில் இருந்து நாம் பெற்றுக் கொண்டோம். 

ஆனால் இன்று? 

இவை எதுவுமே இல்லை. 

எல்லாமே அழிந்து விட்டன. அண்ணா கோப்பி போன்ற ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே உண்டு. அவையும் முன்னரைப்போல செழிப்பாக இயங்கவில்லை. அதற்கான சமூக ஆதரவுத்தளம் ஒடுங்கி  சுருங்கி விட்டது. 

இதற்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்ல முடியும். 

1. அரசின் தெளிவற்ற பொருளாதாரக் கொள்கை. 

2. முதலீட்டாளர்களிடையே உள்ள குழப்பம், பதட்டம், தயக்கம் போன்றவை. 

3. வெளிப் பொருட்களின் மீதான அளவற்ற மோகம். 

இந்த மூன்று காரணங்களும் இணைந்து சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் ஒரு எண்ணத்தையும் வழிமுறையையும் நோக்கி இளையை தலைமுறையைத் தள்ளியுள்ளன. 

இங்கே இப்படி இந்தப் பிரச்சினையைப் பற்றியும் அதற்கான காரண காரியங்களைப் பற்றியும் ஏராளம் தர்க்க நியாயங்களை எழுதிக் கொண்டிருக்கலாம். அதனால் எந்தப் பயனுமில்லை. பதிலாக என்ன செய்யப்போறோம் என்று சிந்திக்க வேண்டும். அதுவே அவசியமானது. அதுவே பயனுள்ளது. 

கிளிநொச்சியில் யோசுவா புதிதாகப் பலவற்றைப் பற்றியும் சிந்திக்கிறார். அதில் முக்கியமான ஒன்று சமூக மட்டத்திலான உறவாடலின் வழியாக மேற்கொள்ளப்படும் தொழிற்துறைகளைப் பற்றிச் சிந்திப்பதாகும். நம்முடைய சூழலில் என்ன பொருட்களெல்லாம் கிடைக்கின்றனவோ அவற்றை வைத்தே அவர் ஒரு புதிய உலகைப் படைக்க முனைகிறார். இதில் முக்கியான இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று அவருடைய உணவு முறைகள். குறிப்பாகப் புதிதாக்குதல்கள். இரண்டாவது, சமூக மட்டத்திலான சுற்றுலாத்துறையை வளர்ப்பதாகும். 

இரண்டும் பொருளாதார ரீதியிலும் வேலை வாய்ப்பு ரீதியிலும் கைகொடுக்கக் கூடியன. யாரும் சிந்தியாததை யோசவா சிந்திக்கிறார். இதுதான் மெய்யான சமூகப்பற்றாகும். 

நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாகவே செயற்படுவாய் என்பது பொய்யல்ல, மெய். 

https://arangamnews.com/?p=6169

 

 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

கிளிநொச்சியில் யோசுவா புதிதாகப் பலவற்றைப் பற்றியும் சிந்திக்கிறார்.

யோசுவா எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம், நாங்க வியத்மகவையும் ஏலியவையும் வைத்து ஒரு அரை லூசுக்கு பெயிண்ட் அடித்து மக்கள் மீது கட்டிவிடுவோம், உலகமே சுருண்டு படுக்குது ,இலங்கையோ கொரோனாவில கதறுது இந்த லட்சணத்தில்  சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை வளர்க்க போராய்ங்களாம்  

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2021 at 18:28, அக்னியஷ்த்ரா said:

,இலங்கையோ கொரோனாவில கதறுது இந்த லட்சணத்தில்  சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை வளர்க்க போராய்ங்களாம்  

எனகென்னவோ, அவர் அப்படி நினைப்பதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் இந்த தொற்று இப்படியே எங்களுடன் இருந்தாலும், வாழ்க்கை அதனோடு சேர்ந்து போகத்தானே போகிறது..ஏதோவிதமாக நாங்கள் சமாளித்துக்கொண்டு தானே போகவேண்டும்.. பெருந்தொற்றில் இருந்து ஓரளவிற்கு இயல்புநிலைக்கு வரும் பொழுது தொழில்துறைகள் மீளவும் தொடங்கும்.. சுற்றுலாதுறையும் மீளவும் கட்டியெழுப்படவேண்டும் தானே.. 

பொருளாதார தடைகள் இருந்த காலத்திலேயே மக்களால் தங்களது வாழ்க்கையை உள்ளூர் உற்பத்திகளுடன் கொண்டு நடத்த முடிந்தது.. இந்த பெருந்தொற்றும் கடந்து போகும் பொழுது மீளவும் வாழ்க்கை வாழ தொழில் முயற்சிகள் அவசியம்.. 

அத்துடன் அவர் கிளிநொச்சியையும் அதன் வளங்களையும் கருத்தில் கொண்டுதான் திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறார்..

 

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்டால் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடாது வாழ்க்கை தொடரும் அந்த மக்களும் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கோவிட்டால் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடாது வாழ்க்கை தொடரும் அந்த மக்களும் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

அரசும் அரசு இயந்திரங்களும் சரியான வழியை மக்களுக்குக் காட்டவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே. அது பற்றி அரசும் கவலை கொள்ளவில்லை. கோவிட்டில் இருந்து மீண்டாலும் வாழ்வு வளமாக நீண்ட காலம் எடுக்கும் போல் தான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவன் வாழ்வான் எனின் மற்றோர் நிலை? மற்றோரை நினைத்தே பலர் வருத்தப்படுவதாக நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வேலை நிறைய இருக்கு செய்ய ஆட்கள் தான் இல்லை ...வெளி நாட்டில் கூலி வேலை செய்ப்பவர்கள் கூட ஊரில் இருக்கும் தங்கட உறவுகளை கூலி வேலைக்கு கூட விடாயினம்  


 

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த ஜோசுவா?

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனகென்னவோ, அவர் அப்படி நினைப்பதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் இந்த தொற்று இப்படியே எங்களுடன் இருந்தாலும், வாழ்க்கை அதனோடு சேர்ந்து போகத்தானே போகிறது..ஏதோவிதமாக நாங்கள் சமாளித்துக்கொண்டு தானே போகவேண்டும்.. பெருந்தொற்றில் இருந்து ஓரளவிற்கு இயல்புநிலைக்கு வரும் பொழுது தொழில்துறைகள் மீளவும் தொடங்கும்.. சுற்றுலாதுறையும் மீளவும் கட்டியெழுப்படவேண்டும் தானே.. 

பொருளாதார தடைகள் இருந்த காலத்திலேயே மக்களால் தங்களது வாழ்க்கையை உள்ளூர் உற்பத்திகளுடன் கொண்டு நடத்த முடிந்தது.. இந்த பெருந்தொற்றும் கடந்து போகும் பொழுது மீளவும் வாழ்க்கை வாழ தொழில் முயற்சிகள் அவசியம்.. 

அத்துடன் அவர் கிளிநொச்சியையும் அதன் வளங்களையும் கருத்தில் கொண்டுதான் திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறார்..

 

 

On 7/9/2021 at 09:28, அக்னியஷ்த்ரா said:

யோசுவா எதை வேண்டுமானாலும் யோசிக்கலாம், நாங்க வியத்மகவையும் ஏலியவையும் வைத்து ஒரு அரை லூசுக்கு பெயிண்ட் அடித்து மக்கள் மீது கட்டிவிடுவோம், உலகமே சுருண்டு படுக்குது ,இலங்கையோ கொரோனாவில கதறுது இந்த லட்சணத்தில்  சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை வளர்க்க போராய்ங்களாம்  

 

On 7/9/2021 at 08:36, கிருபன் said:

கிளிநொச்சியில் யோசுவா புதிதாகப் பலவற்றைப் பற்றியும் சிந்திக்கிறார்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/9/2021 at 09:36, கிருபன் said:

இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை

இனப்பிரச்சனையை தீர்ப்பதில் என்ன சிக்கல்? 
இங்கு ஓம் சொன்னவர்கள் பதில் தருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

யார் இந்த ஜோசுவா?

நமக்கு பைபிளில் இருக்கும் யோசுவாவையும் ,ஊரிலிருக்கும் ஓடாவி யோசுவாவையும்தான் தெரியும் 
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் இந்த யோசுவா யாரென்று தெரியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

 

யார் இந்த ஜோசுவா?

 

எனக்கு 👇🏾இந்தக் கதையில் வந்த ஜோஷுவாவைத்தான் தெரிகின்றது!

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

எனக்கு 👇🏾இந்தக் கதையில் வந்த ஜோஷுவாவைத்தான் தெரிகின்றது!

 

ஆளாளுக்கு ஜெருசலேம், மட்டகளப்பு, பெங்களூர் ஜோசுவாவ காட்டி டின்னு கட்டாதீங்கப்பா🤣.

நான் தேடுறது கிளிநொச்சி ஜோசுவாவ.

ஜோசுவா, எங்கையா இருக்க நீயி (ரன் விவேக் பாணியில் வாசிக்கவும்).

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நமக்கு பைபிளில் இருக்கும் யோசுவாவையும் ,ஊரிலிருக்கும் ஓடாவி யோசுவாவையும்தான் தெரியும் 
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் இந்த யோசுவா யாரென்று தெரியாது. 

காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா

ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்

spacer.png

 

spacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா

ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்

கடைசியாக யோசுவா சிக்கிட்டார் 
அருட்தந்தை எப்பிடி சுற்றுலாத்துறையை முன்னேற்ற முடியும், தனிப்பட்ட வகையிலோ, வேறுவகையிலோ  கத்தோலிக்க திருச்சபையின் அனுமதியின்றி முதலீடு செய்ய முடியாதே, கத்தோலிக்க திருச்சபை அதுவும் இலங்கை கத்தோலிக்கதிருச்சபை தற்போது பெரிதாக வருமானமின்றி  கொசுவடிக்கிறது  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா

ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்

spacer.png

 

spacer.png

 

நன்றி ஜி.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கடைசியாக யோசுவா சிக்கிட்டார் 
அருட்தந்தை எப்பிடி சுற்றுலாத்துறையை முன்னேற்ற முடியும், தனிப்பட்ட வகையிலோ, வேறுவகையிலோ  கத்தோலிக்க திருச்சபையின் அனுமதியின்றி முதலீடு செய்ய முடியாதே, கத்தோலிக்க திருச்சபை அதுவும் இலங்கை கத்தோலிக்கதிருச்சபை தற்போது பெரிதாக வருமானமின்றி  கொசுவடிக்கிறது  

தோலகட்டி நெல்லிரசம், வைன் என்று முன்னர் வலி வடக்கில் திருச்சபை சிலதை முயன்றது -அது போல இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தோலகட்டி நெல்லிரசம், வைன் என்று முன்னர் வலி வடக்கில் திருச்சபை சிலதை முயன்றது -அது போல இருக்கலாம்.

தோலகட்டி நெல்லிரசம் கேள்விப்பட்டிருக்கிறேன்.. வைனும் தயாரித்தார்களா? 

மேலே உள்ள கட்டுரையில் எத்தனை தொழிற்சாலைகள் யாழ்ப்பாணத்தில் இரு்ந்தன அவை ஏன் கைவிடப்பட்ட காரணங்களை கூறியிருந்தாலும் ஒன்றைக்கூடவா மீள கட்டியெழுப்ப முடியாது போய்விட்டது.. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.