Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/8/2024 at 07:53, vasee said:

செப்ரெம்பர் மாதம் வட்டி விகித குறைப்பு (25 புள்ளிகள்) 0.25% ஏற்படும் என உறுதியாக நம்பப்படுக்கிறது, பொதுவாக வட்டி விகித குறைப்பு பங்கு சந்தையில் மிக சாதகமான விலைவாக ஏறத்தாழ 20 புள்ளிகள் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஆனால் 0.50% வட்டி குறைப்பு பற்றியும் பேசப்படுகிறது அவ்வாறாயின் 100 புள்ளிகள் மாற்றம் S&P 500 இல் ஏற்படும் ஆனால் இந்த 0.50% எதிர்மறையான விளைவாக உயராமல் இறங்க கூட அதிக வாய்ப்புண்டு.

50 புள்ளி வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தவாறு 100 புள்ளிகள் அதிகரிப்பினை  S&P 500 இல் ஏற்படுத்தியுள்ளது, இந்தவட்டி விகித அதிகரிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட 25 புள்ளி அதிகரிப்பிற்கு பதிலாக 50 புள்ளி அதிகரிப்பு என்பது அமெரிக்க பொருளாதார மந்தநிலையினையினை குறிக்கிறது, அதனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தவிலை அதிகரிப்பு ஒரு தற்காலிகமானதாக தெரியவில்லை (எனது கருத்து மட்டும்) குறித்த நாளில் ஏற்பட்ட விலை அதிகரிப்பின் விலை தளம்பல் ஏற்படவில்லை, ஆனால் பொதுவாக இவ்வாறன நிகழ்வு வார இறுதி விலை உச்சத்துடன் வார இறுதியினை எட்டும் ஆனால் விலை தற்போது மெதுவாக  இறங்குகிறது இவ்வாறு நிகழ்வது சற்று வித்தியாசமாக உள்ளது, ஆனால் Bullish flag போலொரு சந்தை அமைப்பினை ஒரு மணி நேர வரைபடத்தில் காட்சி அளிக்கிறது இந்த Bullish flag மேல் நோக்கி உடைத்தால் தற்போது உள்ள 5700 இலிருந்து 5800 வரை உயர வாய்ப்புள்ளது. 

  • 1 month later...
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னொரு பாட்டம் பண்வீக்கம் கூடுவதற்கு, நிலைமைகள் சூழ்வதாக பலர் கருதுகிறார்கள் .

(வேறு  திரியில் மெலெழுந்தவாரியான விளக்கத்தை இணைக்க முயற்சிக்ககிறேன்)    

அனால், அடிப்படையாக yield  curve இப்போதும் தலைகீழாகவே (inverted)  இருக்கிறது - இதன் கருத்து - அதாவது குறுகிய கால வட்டி வீதம் , மத்திம,  நீண்ட கால வட்டி வீதத்திலும்  கூட அல்லது , மத்திம,  நீண்ட கால வட்டி வீதத்துக்கு ஒப்பாக.

மத்திம, நீண்ட காலா வட்டி வீதம் பொதுவாக கூடியது, ஏனெனில் risk கூட என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்ட இடைவெளிக்க்கு பிறகு இந்த திரியில் எழுதுகிறேன்.

கிரிப்டோ உலகுக்கு வெளியே பலர் பிட்காயின் 64,000 இல் இருந்து 98,000 க்கு 46% ஆல் உயர்ந்தது பற்றி சிலாகித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனா ஒரு மாதத்தில்  XRP 0.50 இல் இருந்து 1.48 க்கு 170%ஆல் கூடியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் SEC வழக்கில் settlement க்கு போகும், SEC சேர்மன் தூக்கியடிக்கபடுவார் அல்லது விலகுவார் மற்றும் டிரம்பின் கிரிப்டோ சார்பு நிலைப்பாடு அத்துடன் ரிப்பிளின் RLUSD எனப்படும் stable coin அறிமுகம் என்பன இதன் பின்னால் உள்ள fundamental காரணிகளாக கூறப்படுகிறது.

@vasee chart என்ன சொல்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

வார இறுதியில் நீண்ட நேர வேலை, பின்னர் பதிவிடுகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

வார இறுதியில் நீண்ட நேர வேலை, பின்னர் பதிவிடுகிறேன்.

நன்றி

On 22/11/2024 at 22:52, goshan_che said:

SEC சேர்மன் தூக்கியடிக்கபடுவார் அல்லது விலகுவார்

இவர் ஜனவரி 20 பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

+கிரிப்டோ தொடர்பான எனது Fundamental அறிவு பூச்சியமாகும் இது வெறும் technical analysis.XRP-2.jpg

இதனை விகோப்பின் (Wyckoff) தொழில்னுட்ப  ரீதியான ஆய்வடிப்படையில் பார்க்கப்பட்டுள்ளது.

இது ஒரு வார வரைபடம்

Wycoff 3 laws

1. Demand & Supply

2. Cause & Effect

3. Effort & Result

இந்த 3 அடிப்படை விதிகளினடிப்படையில் விலை மாற்றத்தினை தீர்மானிப்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஆகும், அது முதலாவது விதி (Demand & Supply) சில குறிப்பிட்ட விலைகளில் விற்பனையாளர்கள் பெருமளவில் விற்க முற்படும் போது அதனை Supply zone ஆக வரையறுக்கப்படும் (0.57, 0.80, 1.02, 1.60, 2.73 Supply zones), அதே போல் Demand zone.

இது வரைகாலமும் இருந்த 0.57 இனை விலை முறியடித்து உயர்ந்துள்ளது அதனால் இது வரை காலமும் நிலவியிருந்த நிலையில் இருந்து ஒரு சாதகமான மாற்றமாக இது உள்ளது.

இரண்டாவது விதியாக உள்ள Cause & Effect காரனமாக (Cause) பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட அளவும் அதன் விளைவால் (Effect) விலையில் ஏற்பட்ட மாற்றமும்.

அதிகளவான பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும் போது அதற்கேற்ற வகையில் விலையில் மாற்றம் ஏற்படும், பொதுவாக அதிக பங்குகள் வாங்கப்படும் போது விலை அதிகரிக்கும் அதற்கு எதிர்மாறாக அதிகளவான பங்குகள் விற்கப்படும் போது விலை குறைவடையும்.

நியூட்டனின் 3 ஆவது விதி கூறும் எந்த விளைவிற்கும் அதற்கு சமனும் எதிருமான விளைவு இருக்க வேண்டும் அதனை Effort & Result என இதில் பார்க்கப்படுகிறது.

2022 மார்ச் மாதம் தொடங்கி 2023 மே மற்றும் யூலை வரையான மாதத்தில் பெருமளவில் பங்குகள் இரகசியமாக வாங்கப்பட்டுள்ளன (விலையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை ஆனால் விற்பனை அளவுகள் அதிகமாக உள்லது அதனை சிவப்பு வட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது)

2023 யூலை மாதமளவில் விலை அதிகரிப்பு ஏற்படும் அளவிற்கு பங்குகளின் அளவு இல்லை (அம்புக்குறியால் சுட்டி காட்டப்பட்டுள்ளது) இதனை Effort & Result இல் பார்த்தால் அது ஒரு உண்மையான உயர்வல்ல ஏனெனில் அதற்கு முந்தய காலப்பகுதியில் பெரியளவான பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட போதும் விலை மாற்றம் ஒப்பீட்டளவில் இதனை விட மிக குறைவாகவே இருந்துள்ளது.

அந்த 2023 யூலை மாத பங்கு அளவுடன் ஒப்பிடும் போது தற்போதய பங்கு அளவு குறைவாகவும் விலை அபரிதமாகவும் உள்ளது, கடந்த இரண்டு வாரத்தில் முதல் வாரத்தில் விலையில் (candlestick) மேலே வெறும் கோடாக உள்ள பகுதி supply zone  ஆக இருந்தது கடந்த வாரம் அதனை கடந்து விலை ஏறியமையானது இது ஒரு உண்மையான விலை அதிகரிப்பாக தோன்றினாலும் பங்குகளின் அளவு மேலும் குறைந்துள்ளது அத்துடன் அது 1.60 Supply zone இல் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்

1. Smart money Mark up இதுவரை காலமும் பங்குகலை வாங்கியிருந்த பெரிய நிறுவனங்கள் அதனை விற்பதற்கு சந்தையினை உருவாக்குதல் (இது நல்ல செய்தி அல்ல).

2. அல்லது உண்மையாக சந்தையில் விற்பதற்கு எவரும் தயாராக இல்லாமல் இருப்பதாகும் ( இது உண்மையாக இருந்தால் ஒரு மிக நல்ல செய்தியாகும்)

இதனை எவ்வாறு அடையாளம் காண்பது?

தற்போது 1.60 இல் விலை விற்பனை ஏற்படுவதால் விலை மீண்டும் ஒரு தடவை 1.60 செல்ல முய்ற்சிக்கும் அப்போது விலை 1.60 இனை கடந்தால் அடுத்த இலக்கு 2.73.

மறு வளமாக விலை 1.20 கீழிறங்கி அங்கு மேலும் விலை கீழிறங்க முடியாவிட்டால் மேலெழுந்து 1.60 எதிர் கொள்ளும், அதன் போது விலை மீண்டும் அந்த விலையில் விற்பனையாளர்கள் வந்தால் விலை 1.20 கீழிறங்கும், அங்கு விலை தக்கவைக்கப்படாவிட்டால் 1.02 வரலாம்.

ஆகவும் நிலமை மோசமானால் 0.80 போகலாம், தற்போது பெருமளவில் 0.57 விலை செல்லாது  என கருதுகிறேன் (உறுதியாக கூறமுடியாது)

இந்த வாரம் ஒரு முக்கிய வாரமாகும், விலை 1.60 கடக்கிறதா என பார்ப்போம், ஏனெனில் விற்பதற்கு ஒருவரும் இல்லை என்றால் இந்த வாரம் விலை 1.60 கடந்தாக வேண்டும் இல்லாவிட்டால் இது ஒரு பலவீனமான நிலையாகும் ஆனாலும் விலை 1.20 மேல் இருக்கும் வரை சாதகமானதுதான்.

பங்குகளின் விலை மாற்றத்தில் Fundamental analysis முக்கியம், Fundamental analysis பொறுத்தவரை உங்களுக்கு அது தொடர்பான நல்ல தெளிவு உள்ளதனால் அதனடிப்படையில் இந்த ஆய்வினை வெறும் உசாத்துணையாக பாவிக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, vasee said:

மிக்க நன்றி.

நீங்கள் எழுதியதை  மூன்று நாலு தரம் வாசித்த்தால்தான் எனக்கு விளங்கும். ஓரளவுக்கு விளங்கியதும் தொடந்து எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

மிக்க நன்றி.

நீங்கள் எழுதியதை  மூன்று நாலு தரம் வாசித்த்தால்தான் எனக்கு விளங்கும். ஓரளவுக்கு விளங்கியதும் தொடந்து எழுதுகிறேன்.

நேரடியாக விடயத்தினை கூறாமல் விகோப் தத்துவார்த்தத்தினை முன்னிலைப்படுத்தியமைக்கு மன்னிக்கவும் கோசான்,

யாழ்களத்தில் உங்களைபோல மிக சிறந்த சிந்தனையாளர்கள் உள்ளார்கள், இந்த திரியில் அந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினால் அதனால் நன்மை அடைவேன் எனும் சுயநலமே உங்களுக்கு மறைமுகமாக இந்த முறைமையினை பரிச்சயமாக்க அவ்வாறு கருத்திட்டிருந்தேன்.

உறுதியாக தெரியும் உங்களை போன்ற சிந்தனையாளர்களின் பங்களிப்பு இந்த திரியில் இருந்தால் மிக பெரிய அனுகூலம் யாழ்கள வாசகர்களாகிய எமக்கு கிடைக்கும்.

XRP-3.jpg

XRP-4.jpg

XRP hourly charts

மேலே உள்ள இரண்டு படங்களும் இன் தற்போதய நிலவரம் அடுத்து குறைந்தது ஒரு மணி நேரத்தில் விலையில் என்ன மாற்றம் நிகழும்? 

width=500

ஆரம்ப காலத்தில் பங்கின் விலையும் அதன் அளவும் இவ்வாறு குறிப்பிடப்படும்,

இதனை Tape reading என்பார்கள்.

இதில் இரண்டு விடயங்கள் மட்டுமே உள்ளது
1. விலை 
2. எண்ணிக்கை (அளவு)

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சீனியிற்கு பெருமளவு டிமான்ட் இருந்த காலப்பகுதியில் கேவ் மையர் என்பார் சீனி வர்த்தகத்தில் முக்கிய புள்ளியாக இருந்தார்.

Henry Osborne Havemeyer - Wikipedia

அந்த சம காலப்பகுதியில் டீகன் வைட் என்ற பங்கு வர்த்தகர் பிரபலமாக இருந்தார்

Deacon White - Wikipedia

ஒரு நாள் டீகன் வைடின் காரியாலயத்திற்கு அவரது நண்பர் ஒருவர் வந்து உபயோகமான தகவல் கொடுத்தால் அதற்கு பரிசளிப்பீர்கள் என கூறியிருந்தீர்களல்லவா என கூறி கேவ் மையர் சீனி பங்குகளை வாங்கி குவிக்கிறார் என கூறினார் (அந்த காலத்தில் ஏகப்பட்ட Tariff இருந்தாக கூறப்படுகிறது)

அதற்கு டீகன் வைட் அதனை உடனடியாக நம்பாமல் அவரிடம் பல கேள்விகளை கேட்டு விட்டு தனது உதவியாளாரை கூப்பிட்டு 10000 சீனி பங்குகளை சந்தையில் விற்க கூறினார், வந்த அவரது நண்பர் எதிர்பார்த்தது சீனி பங்குகளை டீகன் வைட் வாங்குவார் என ஆனால் இவர் விற்பதனை பார்த்து அவர் குழம்பி விட்டார்,  விற்பனை உறுதிப்படுத்தல் வந்த பின் Ticker tape இனை பார்த்துக்கொண்டிருந்த டீகன் வைட் தனது உதவியாளரிடம் கூறினார் மீண்டும் 10000 சீனி பங்குகளை விற்குமாறு.

டீகன் வைட் நண்பர் பொறுமை இழந்து எனது தகவலை உபயோகப்படுத்தாவிட்டால் பரவாயில்லை நான் வேறு எங்காவது கொண்டு செல்கிறேன் என கூறினார்.

அதற்கு டீகன் வைட் எதுவும் கூறாமல் Ticker tape இனை பார்த்த வண்ணம் இருந்தவர் தனது உதவியாளரை அழைத்து 30000 சீனி பங்குகளை வாங்குமாறு கூறினார், பின்னர் தனது நண்பரை பார்த்து கூறினார்.

நண்பரே நான் உங்களை  நம்புகிறேன் ஆனால் நான் ஒரு பங்கு வர்த்தகராக இந்த தகவலுக்கு ஒரு ஆதாரம் வேண்டும் அதனாலேயே முதலில் 10000 பங்குகளை விற்க கூறினேன், சந்தையில் விலை குறையாமல் அந்த பங்குகளை உடனே எடுக்கப்பட்டு விட்டது, அந்த தகவலை மேலும் உறுதிப்படுத்த இரண்டாவது 10000 பங்குகளை விற்க கூறினேன் அந்த பங்குகளும் விலை மாற்றம் இல்லாமல் எடுக்கப்பட்டுவிட்டது, அதன் மூலம் நண்பரே நீங்கள் கூறிய தகவல் ஆதார பூர்வமானது என உணர்ந்து கொண்டதால் 30000 பங்குகளை சந்தை விலையில் வாங்கினேன் என்றார்.

சந்தையில் பொருளகள் அதிகமாக இருந்தால் விலை குறைவடையும் மறுவளமாக பொருள்கள் குறைவாக இருந்தால் விலை அதிகரிக்கும் ஆனால் இந்த பொது விதியில் மாற்றம் நிகழும் போது அங்கே சிறந்த பெரிய நிறுவனங்களின் செயற்பாடு மறைந்திருக்கும்.

அவர்களுக்கு அரச மட்ட தொடர்புகள் மற்றும் மிக முக்கிய தொடர்புகளினூடாக சாமானியர்கள் அறியாத விபரங்கள் தெரியும் ஆனாலும் அவர்கள் சும்மா போய் பங்குகளை வாங்க மாட்டார்கள் மற்றவர்களாகவே அவர்களுக்கு விற்குமாறு திட்டங்களை உருவாக்குவார்கள்.

அதாவது அதிகமாக வாங்கும் போது ஏற்படும் விலை ஏற்றத்தினை ஏற்படுத்தாமல் முடிந்தளவு குறைந்தளவு விலையில் வாங்குவார்கள்.

விலையும் அந்த விலையில் விற்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையிடையேயான தொடர்பியலினடைப்படையே விகோப்பின் முறைமை.

XRP விலை அதிகரிக்கிறது, இந்த நிலை தொடருமா? அப்படி தொடருமாயின் அதற்கான ஆதாரம், மற்றும் இது ஒரு தற்காலிகமானதாயின் அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதே விகோப்பின் முறைமையூடாக கூறியுள்ளேன்,

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, vasee said:

இந்த 3 அடிப்படை விதிகளினடிப்படையில் விலை மாற்றத்தினை தீர்மானிப்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஆகும், அது முதலாவது விதி (Demand & Supply) சில குறிப்பிட்ட விலைகளில் விற்பனையாளர்கள் பெருமளவில் விற்க முற்படும் போது அதனை Supply zone ஆக வரையறுக்கப்படும் (0.57, 0.80, 1.02, 1.60, 2.73 Supply zones), அதே போல் Demand zone.

Supply zones  நீல கிடையான கோடுகளால் காட்டப்பட்டுள்ளது இதற்கு closing price (line chart) பயன்படுத்தப்பட்டுள்ளது.

விலை இந்தக்கோடுகளை கடக்கும் போது அது பின்னர் Demand zone அக மாறிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

XRP-5.jpg

ஒரு மணிநேர XRP வரைபடம்,  அடுத்த சில மணித்தியாலங்கள் விலை அதிகரிக்குமா இல்லை விலை குறைவடையுமா?

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted

XRP-6

ஒரு மணிநேர XRP வரைபடம்,  அடுத்த சில மணித்தியாலங்கள் விலை அதிகரிக்குமா இல்லை விலை குறைவடையுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

XRP-7.jpg

ஒரு மணிநேர XRP வரைபடம்,  அடுத்த சில மணித்தியாலங்கள் விலை அதிகரிக்குமா இல்லை விலை குறைவடையுமா?

தற்போது முதல் தடவையாக தனது பலவீனத்தினை வெளிப்படுத்துகிறது, அவ்வாறாயின் 2.00 resistance விலை ஆகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் முதலீட்டாளர்களின் கவனத்தினை ஈர்க்கின்றது, இந்த விலை மாற்றங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது அது ஒரு எதேச்சையாக (Randomly)  நிகழ்வது போல இருக்கும், ஆனால் அடிப்படையில் விலை மாற்றங்களின் பின்ணணி பற்றிய பார்வை சமானிய மனிதர்களில் இருந்து தொழில் முறையான முதலீட்டாளர்களின் பார்வையிலிருந்து வேறுபடுகிறது.

சந்தையில் இரண்டு நிலைகள் காணப்படுகிறது

1. Trending market (விலை ஒரு இலக்கு நோக்கியதாக உயர்ந்தோ(up trend) அல்லது இறங்கி (Down trend) செல்லலாம்)

2. Ranging Market ( விலை எந்த வித இலக்கின்றி பக்க வாட்டாக நகருதல் (choppy) அதன் விலை வித்தியாசம் மிக குறுகியதாக இருக்கும்)

இந்த இரண்டாவது நிலையான பக்கவாட்டான விலை (Ranging) இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழும்

1. Accumulation

2. Distribution

ஒரு பங்கினை சாமானியர்களின் கண்களுக்கு புலப்படாத வகையில் அதன் விலையினை அதிகரிக்காமல் ( பொருள்களின் தேவை அதிகரிக்கும் போது அதன் விலை இயல்பாக அதிகரிக்கும்) அதனை வாங்கி குவிப்பார்கள் பின்னர் அதே பொருளை விலை ஏற்றி அதிக விலையில் ஆனால் அதிக விற்பனையின் போது ஏற்படும் விலை வீழ்ச்சி ஏற்படாமல் விற்பார்கள்.

இந்த வாங்கும் விற்கும் நடவடிக்கையே Accumulation & Distribution, இந்த நிகழ்வின் போது விலை பக்கவாட்டாக நகரும்.

விலை குறைவான பங்குகளை வாங்கியவர்கள் அதனை அதிக விலைக்கு விற்பதற்காக செய்யும் நடவடிக்கை Mark up என அழைக்கிறார்கள் அதே போல அதிக விலைக்கு விற்ற பங்குகளை திரும்ப வாங்குவதற்காக அந்த பங்குகளை சந்தையில் விற்று விலைச்சரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையினை Mark down என அழைக்கிறார்கள்.

இந்த விலை ஏற்ற விலை வீழ்ச்சி நடவடிக்கையின் போது விலை இலக்கு நோக்கி நகரும் (Trending market).

விக்கோப்பின் இரண்டாவது விதியான cause & effect இல் காரணமாக (Cause) Accumulation & Distribution உம் காரியமாக (Effect) Mark up Mark down உம் காணப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

licensed-image?q=tbn:ANd9GcRUxp13GFlGrLPimE8NJpPrBL3Nb96pe73LJ7tY0CrdGzaVXmnLUjwRIIDeeCmZPis-0xUBWxD73bw9dJk

ஜெசி லிவர்மோர் பங்கு சந்தை வீழ்ச்சி ஏற்படலாம் என கணித்திருந்தார் ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் அதுவரை தனது ஓய்வை கழிக்க புளோரிடா சென்றார், ஒரு நாள் காலை பத்திரிகையினை பார்த்த போது TT எனும் பங்கு 155 இல் விற்பனையாகி கொண்டிருந்தது அவர் கடைசியாக பார்த்த போது அது 140 இல் இருந்திருந்தது.

பொதுவான சந்தை நிலவரம் சரியில்லாத நிலையில் இந்த ஒரு பங்கு மாத்திரம் உயர்வடைவதற்கான காரணம் அவருக்கு விளங்கவிலை, ஆனால் அவர் நினைத்தார் அது மூலதன திரட்டலுக்காக அந்த நிறுவனத்தினர் பங்கின் விலையினவேணுமென்றே உயர்த்துகின்றனர் என உனர்ந்தார்.

அதனால் அந்த பங்கினை விலை 153 இலிருந்து விற்க ஆரம்பித்தார் விலை வீழ்ச்சியடைய அவரது நிலையினை அதிகரிக்க தொடங்கினார் விலை 133 எட்டிய போது 30000 பங்குகலை விற்றிருந்தார்.

அதே காலத்தில் மற்ற வர்த்தகர்களும் அந்த பங்கினை விற்றார்கள், ஆனால் விலை 133 இனை எட்டிய போது சாமானிய மக்களுக்கு அது ஒரு இலாபமான விலையில் வாங்குவத்ற்கு ஏற்ற பங்காக தெரிந்தமையால் அந்த பங்கினை வாங்கினார்கல் அதனால் சந்தையில் காணப்பட்ட Floating shares அனைத்தும் வற்றியது, இந்த சந்தர்பத்தினை பாவித்து அந்த நிறுவனத்தினர் ஒரு short squeeze  நடவடிக்கையில் இறங்கினர் விலை மீண்டும் 150 தொட்டது விலை 150 தொட்டதும் அந்த பங்குடன் நேரடியாக மோதாமல் அந்த பங்கின் பெருமளவான உரிமையினை கொண்ட ECC இன் பங்குகள் 10000 லிவர்மோர் விற்றார்.

அந்த பங்கு TT பங்கு போலல்லாது சந்தையில் பெரிதாக கவனத்தினை ஈர்க்காத பங்கு 10000 ப்ங்குகள் விற்றதும் அந்த நிறுவன பங்கின் விலை பெருமளவில் சரியத்தொடங்கியது, இதனை பார்த்த மற்ற வர்த்தகர்கள் TT பலவீனத்தினை உணர்ந்தே ECC உயரதிகாரிகள் தமது பங்கினை  விற்கிறார்கள் என கருதி TT பங்குகளை விற்க தொடங்கினார்கள், இந்த தடவை TT ஆல் எதுவும் செய்ய முடியவில்லை விலை 90 இற்கு கீழே சரியத்தொடங்கியது.

இந்த சம்பவத்தில் சாமானியரகளின் பங்கு வாங்கல் நடவடிக்கையினை விகோப் Automatic rally என வகைபடுத்துகிறார்.

Wyckoff Accumulation #1

நடை முறையில் Automatic rally (AR)  கீழே உள்ள வரைபடத்தில் (இந்த  வாரம் AUDJPY) சிகப்பு கோட்டினால் காட்டப்பட்டுள்ளது, பின்னர் விலை ஒரு சிறிய ranging நகர்கிறது இதனை Re distribution என விகோப் வரையறுக்கிறார்.

AR.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

XRP-8

XRP hourly chart

இதுவரை நிலவியிருந்த விலை 2.00 resistance level ஐ XRP  கடந்துள்ளது அதன் விலை அதிகரிப்பினை அதன் அளவு உறுதி செய்துள்ளது, முன்னர் கூறிய 2.73 இனை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

விலை 2.00 கீழ் கானப்பட்ட trading range ஒரு re accumulation ஆகவரையறுக்கலாம் இதனடிப்படையில் 2.70 அடையலாம் அதன்பின்னர் 2.73 முக்கிய resistance இல் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு அமைவாக அடுத்த நகர்வு அமையலாம். இந்த 2.73 இனை விலை கடந்தால் மிகவும் சாதகமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

XRP-9.jpgதற்போதய  Mark up (விலையினை அதிகரிக்கும் முயற்சி) அடுத்து அதிக விலையில் விற்கும் நிலை பின்னர் விலை வீழ்ச்சி நிலையாகும்.

இது குறுங்கால ஒரு மணிநேரத்திற்கான ஆயவகும,  இது வரை விலை வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறி தென்படவில்லை, விலை 2.40 மேல் அடுத்த விலை அதிகரிப்புடன் அதிக எண்ணிக்கையுடன் காணப்பட்டால் அது ஒரு சாதகமானதாகும் அவ்வாறில்லாமல் விலை 2.00 கீழ் சென்றால் இது ஒரு போலியான முன்னேற்றமாக இருக்கலாம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.