Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/11/2021 at 05:32, Kadancha said:
1 hour ago, vasee said:

 

நான் ஈரேட் மூலமாக செய்வதால் கிரிப்டோ நினைத்தும் பார்க்க முடியவில்லை.

  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/11/2021 at 10:32, Kadancha said:

கிரிபோட்ட இல் ஆவல் உள்ளவர்கள், ஈடுபட்டு இருப்பவர்கள் இதை கட்டாயம் வாசிக்கவும்.

முதலில் இது ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. கிரிப்டோ ஐ பற்றிய அறிவு மாத்திரமே.

முன்பு இணைத்த (XRP) வழக்கை  ஒருவரும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது.

அந்த வழக்கின் முக்கியத்துவம், XRP சாதகமான முடிவு (பல முடிவுகள் இருக்கின்றன), கிரிப்டோ இன் முரட்டுக் காளை (bull மார்க்கெட்) தனமான விலை எகிறுதல் நடக்க மிக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

XRP க்கு பாதகமான முடிவு என்றால், க்ரிப்டோ சாதுவாக நகரக் கூடிய அல்லது குறையக் (dip) கூடிய  வாய்ப்புகள் அதிகம்.

காரணம், SEC (US இன் நிதி ஒழுங்குமுறையை நிரவகிக்கும் அரச அலகு) பாவிக்கும் முறைப்பாட்டு மொழியும்  (ஏறத்தாழ terms of reference உம்). இது முதல் இணைத்த வீடியோ இல் இருக்கிறது. அந்த மொழியை பாவித்தது எந்த கிரிப்டோ ஐயும் வழக்குக்கு இழுக்கலாம். 

காரணம், இந்த வழக்கு முழு கிரிப்டோ ஐயும் பாதிக்கிறது.

December 6 முக்கியமான நாள், இங்கு UK இல் expert witness என்று சொல்லப்படும் செயன்முறையை ஒத்த நிகழ்வு இந்த வழக்கில் நடக்க இருக்கிறது.
 

நான் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்தே வருகிறேன் - இன்னும் ஒரு 3 மாதம் குறைந்தது இழுபடும் போல தெரிகிறது. 

Howey test எனும் கிரிப்டோவிற்கு முந்திய வழக்கின் அடிப்படையில் XRP கரன்சியா, security யா என்பதே வழக்கின் அடிப்படை தர்க்கம்.

செட்டில்மெண்டில் அல்லது தீர்ப்பில் XRPக்கு சாதகமானால் - XRP விலை எகிறும், அதே சமயம் கிடைக்கும் legal clarity யால் ஒட்டுமொத்த கிரிப்டோ உலகுக்கும் இது ஒரு பூஸ்டாக அமையும்.

மறுவளமானால் XRP தரை தட்டும். ஆனால் அவர்கள் இப்போ அமெரிக்காவுக்கு வெளியே இருந்து செயல்படுவதை பற்றி (plan B) சீரியசாக யோசிக்கிறார்கள்.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது நிதி அறிவுரை அல்ல.

அவதானம் மாத்திரம்.

இப்போதைய கிரிப்டோ சரிவில் (US இன் infrastructure bill இல் க்ரிப்டோ  reporting ஐ உள்ளடக்கியாதல் வந்த வினை ), பெரும்பாலும் முதன்மை க்ரிப்டோகள் அடிபட்டன.

ஆனல், meta, NFT மற்றும் defi கிரிப்டோகள் ஒன்றில் பொதுவாக அடிபடவில்லை அல்லது ஏறி உள்ளன  உ.ம். meta, sandbox, enj போன்றவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய அரசின் கிரிப்டோகரன்சி மசோதா: தனியார் மின் பணத்தின் எதிர்காலம் என்ன?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் 26 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு மசோதாவாக கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும்தான் இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவையின் பணிப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பாக பல கேள்விகள் உள்ளன. ஏனெனில் நிறைய பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். அரசு எல்லா கிரிப்டோகரன்சிகளையும் அரசு தடை செய்தால் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்?

கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன.

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பிட்காயின்' 17 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'எத்திரியம்' 15 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'டெதர்' 18 சதவீதத்திற்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன.

"கடந்த வருடமே இதனைத் தடை செய்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது. இதையடுத்து பல கோடி இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தற்போது வந்திருக்கும் இந்திய அரசின் அறிவிப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதனை ஒழுங்குபடுத்த முடியாது என ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். நிதிக்குழுவின் தலைவர் இதனை ஒழுங்குபடுத்துவோம், தடைசெய்ய மாட்டோம் என்று சொல்லிவந்தார். ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்படும் மசோதா தனியார் கிரிப்டோகரென்சிகளைத் தடைசெய்யும் என கருதப்படுகிறது. மேலும் அரசே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் வழிமுறைகளை ஆராயப்போவதாகவும் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே கிரிப்டோ மூலம் வந்த வருவாய்க்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுவருவதாக சொல்கிறார்கள். அரசு அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கும் இந்த வரி விதிப்பு தொடருமென்றால், அது வெற்றிபெறாது" என்கிறார் துவக்கத்திலிருந்தே தனியார் கிரிப்டோ கரன்சிகளை விமர்சித்துவரும் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப் படுத்துவது மிக மிக அவசியம். உண்மையில் இதை மிகக் காலதாமதாக செய்கிறார்கள் என்பதுதான் கவலையே என்கிறார் பங்குச் சந்தை வல்லுநரான நாகப்பன்.

"இப்போது வரவிருக்கும் மசோதாவைப் பொறுத்தவரை தனியார் கரன்சிகளைத் தடை செய்யப்போவதாகத் தெரியவில்லை. ஒழுங்குபடுத்தும் என்றே கருதுகிறேன். இதனை ஒழுங்குபடுத்த வேண்டுமென பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இப்படி ஒழுங்குபடுத்தவில்லையென்றால் அது ஈமு கோழி வர்த்தகம் மாதிரி ஆகிவிடும்" என்கிறார் நாகப்பன்.

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அரசு தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதித்தால் என்னவெல்லாம் நடக்கும்? "வங்கிகளைப் பயன்படுத்தி ஒரு சாதாரண முதலீட்டாளர் இனி தனியார் கிரிப்டோவை வாங்க முடியாது. கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து வாங்கலாம். பெரும் முதலைகள் வெளிநாடுகளில் இருந்து செய்வார்கள். விபிஎன் மூலமாக கிரிப்டோ எக்சேஞ்சை தொடர்பு கொண்டாலும் உங்கள் வங்கி மூலம் பணத்தை செலுத்த முடியாது. ஆகவே விபிஎன் பயன்படுத்தினாலும் வாங்க முடியாது. வெளிநாட்டிற்கு பணத்தைக் கடத்தி தனியார் கிரிப்டோவை வாங்கலாம். ஆனால், அதை எல்லோராலும் செய்ய முடியாது.

இப்போதுவரை இதில் பணம் முதலீடு செய்தவர்கள் அந்தப் பணத்தை வெளியில் எடுக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கொடுப்பார்கள் என கருதுகிறேன். ஆனால், சந்தை இதற்கெல்லாம் காத்திருக்காது. நேற்று இரவு இந்திய அரசின் அறிவிப்பு வந்தவுடனேயே பிட் காயின், ஈதர் போன்றவற்றின் விலை 15-17 சதவீதம் வரை விழுந்துவிட்டது. ஆகவே, சட்டம் இயற்றப்படும்வரை நிச்சயம் பணத்தை அதிலிருந்து வெளியில் எடுக்க முடியும். எவ்வளவு பணம் கிடைக்கிறதோ, அது அவரவர் சாமர்த்தியம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

ரிசர்வ் வங்கி வெளியிடவிருப்பதாக சொல்லும் கரன்சிகளுக்கு இதே அளவு ஈர்ப்பு இருக்குமெனச் சொல்ல முடியாது. மற்ற கிரிப்டோகரன்சிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்களிடம் கரன்சிகள் இருப்பதாகச் சொல்கின்றன. அதனால், அவற்றின் விலை ஏறுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிடும்போது அப்படியிருக்காது. அதனால், அதன் மீது பெரிய கவர்ச்சி இருக்காது. ஆகவே, அரசின் டிஜிட்டல் கரன்சியின் விலை உயர வாய்ப்பு குறைவு. இதனால் மக்கள் எந்த அளவுக்கு இதில் முதலீடு செய்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீ நிவாசன்.

கிரிப்டோ கரன்சி

பட மூலாதாரம்,GEOFFROY VAN DER HASSELT

"நாம் ஒரு கடையில் வழக்கமாக பொருளை வாங்குகிறோம். மீதமுள்ள காசுக்கு சில சமயம் அவர்கள் டோக்கன்களைக் கொடுப்பார்கள். திரும்பவும் அங்கே செல்லும்போது அந்த டோக்கனைக் கொடுத்து பொருளை வாங்கலாம். அந்த டோக்கன் அங்கு மட்டும்தான் செல்லும். அதுபோலத்தான் கிரிப்டோ. ஆனால், அதுபோல டோக்கனை வைத்திருப்பவர்கள் அதன் மதிப்பு அதிகம் என தொடர்ந்து அதில் வார்த்தகம் செய்கிறார்கள். திடீரென அந்தக் கடை மூடப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் ஒழுங்குமுறை தேவை என்கிறோம்" என்கிறார் நாகப்பன்.

இனி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "அமெரிக்காவில் புதிதாக கன்ட்ரோலர் ஆஃப் கரன்சி என ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி கிரிப்டோ மீது கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு நாடாக தடைசெய்தால், பிரதானமான தனியார் கிரிப்டோ கரன்சியைத் தவிர மற்றவை அழிந்துபோகும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

https://www.bbc.com/tamil/india-59401102

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ஏராளன் said:

இனி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "அமெரிக்காவில் புதிதாக கன்ட்ரோலர் ஆஃப் கரன்சி என ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி கிரிப்டோ மீது கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு நாடாக தடைசெய்தால், பிரதானமான தனியார் கிரிப்டோ கரன்சியைத் தவிர மற்றவை அழிந்துபோகும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

எனது கணீப்பீடு.

கிந்தியாவில், இது சாத்தியமாகலாம். அனால், வளர்ந்த நாடுகளில் இது நடபது கடினம்.

கிரிப்டோவை தடை செய்யும் அல்லது முயற்சிக்கும்  அரசியல் கட்சிகள், முன்னின்று செய்யும் அரசியல் வாதிகள், சமகால வரலாற்றில் இருந்து துடைத்து எறியப்படும்.

அதை பார்த்து விட்டு, மற்ற அரசியல் கட்சிகள், அரசியல் வாதிகள் கிரிப்ட்டோவுக்கு, தங்களாவே வழிசெய்து கொடுப்பார்கள்.

கிரிப்டோவில், இளம் சந்ததியின் பணம், உழைப்பு நினைத்து பசாற்க முடியாத வகையில் ஈடுபட்டு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Closed order

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விலை மேற்குறிக்கப்பட்ட இரண்டு வலயங்களில் (Level 1 , Level 2) விலை வீழ்ச்சி தடுக்கபட்டால் வாங்குவதாகத்திட்டமிட்டுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/11/2021 at 10:25, ஈழப்பிரியன் said:

நான் ஈரேட் மூலமாக செய்வதால் கிரிப்டோ நினைத்தும் பார்க்க முடியவில்லை.

எனது கணக்கு -0.36 விலகலையும்(Spread) கட்டணம் அறவிடுகிறது., அலகு ஒன்றிற்கு வாங்கினால் -0.16, விற்றால் 0.06 9( Swap) வழங்குகிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Entry 222.34

Stop 219.99

Take Profit 229.47

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, vasee said:

Entry 222.34

Stop 219.99

Take Profit 229.47

தன்னிச்சையான அவசரகால வெளியேற்றத்தின்(Stopped out) மூலம் நட்டத்துடன் மூடப்பட்டது.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கிடையான மன்சல் கோட்டினை (Short)விலை கடக்க தவறினால் அந்த பகுதியில் விற்கத்திட்டமிட்டுள்ளேன்.

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிதி அறிவுரை அல்ல. நேரமும் இல்லை விளக்க.

shiba inu கிரிப்டோ , இப்பொது ஊன்றி விட்டது, அனால் வளர்ச்சிக்கு பாரிய இடம் உள்ளது.  க்ரிப்டோ இன் 10,  11, 12 வது நிலைகளில் மாறிக் கொண்டு இருக்கிறது.

ஷீபா இனு வைத்து இருப்பவர்கள், 1 மில்லியன் ஐ கடந்து விட்டது. 

மில்லியன் அர் ஆக வருவதத்திற்கு எத்தனிக்கும் முயசிற்கு, ஓர் உண்மையான எத்தனிக்கும் வாய்ப்பை, மிக குறைந்த விலையில் வளங்குகிறது SHIBA INU இப்போதைய விலையில்.

எதிர் காலத்துக்கு, ஒன்றுமே உத்தரவாதம் இல்லை.

அனால், 1 மில்லியன் SHIBA INU இப்போதைய விலையில்,  £ 30 - 40. 

வெறி தெரிவுகளும் உள்ளது, அனால் 10 / 11 / 12 இல், 1 மில்லியன் வாடிக்கையாளர், Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, எனும் தகமையுடன் இருக்கும் வேறு கிரிப்டோவை காண முடியாது.

எதிர் கொள்ளும்  நிதி அபாயத்திற்கு, பெறுபேறு முடிவிலி ஆக இருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது SHIBA INU இப்பொது. வந்தால் மலை, போனால்  £ 30 - 40.

இன்று (as of posting), இந்த மாதத்தில்  மூன்றாம் முறை BITCOIN விழ (இப்போதைய நிலையில் 8% + ஆல்) , ஷீபா இனு வின் வீழ்ச்சி 3 - 5 %. 

பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.  


இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.
 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த விற்றல் நடவடிக்கையை திட்டமிட்டவாறு நேற்று இரவு வேலையினை முடித்துவிட்டு வந்து எடுத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது இந்த குறுங்கால வர்த்தக நடவடிக்கைகள் 43% ஆனவையே இலாபம் ஈட்டுவதாக வர்த்தககுறிப்புகள் கூறுகின்றன, அதாவது 10 இல் ஏறதாழ 6 தடவை எனது முடிவுகள் தவறானவை, சாதாரணமாக ஒரு நாணய சுழற்சியில் ஏறத்தாழ 10 இற்கு 5 தடவை சரியான முடிவுகளை எதிர்வுகூறலாம் (10 தடவையில் இந்த விகிதம் வராது 100 அல்லது 1000 முறை சுழற்றும் போது ஏறத்தாழ 50% வரும்).
ஆகவே எனது வர்த்தக நடவடிக்கையானது எழுந்தமானமாக நிகழும் நிகழ்தகவை விட மிகவும் குறைவானதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

LTC trade 2 நட்டத்துடன் தன்ன்னிச்சையான அவசர வெளியெற்றம் ஏற்ப்பட்டுள்ளது(Stopped out).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/11/2021 at 13:02, Kadancha said:

இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.

https://zycrypto.com/shiba-inu-propels-into-trillion-dollar-metaverse-with-blockchain-gaming-introduction/

 

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2021 at 00:02, Kadancha said:

நிதி அறிவுரை அல்ல. நேரமும் இல்லை விளக்க.

shiba inu கிரிப்டோ , இப்பொது ஊன்றி விட்டது, அனால் வளர்ச்சிக்கு பாரிய இடம் உள்ளது.  க்ரிப்டோ இன் 10,  11, 12 வது நிலைகளில் மாறிக் கொண்டு இருக்கிறது.

ஷீபா இனு வைத்து இருப்பவர்கள், 1 மில்லியன் ஐ கடந்து விட்டது. 

மில்லியன் அர் ஆக வருவதத்திற்கு எத்தனிக்கும் முயசிற்கு, ஓர் உண்மையான எத்தனிக்கும் வாய்ப்பை, மிக குறைந்த விலையில் வளங்குகிறது SHIBA INU இப்போதைய விலையில்.

எதிர் காலத்துக்கு, ஒன்றுமே உத்தரவாதம் இல்லை.

அனால், 1 மில்லியன் SHIBA INU இப்போதைய விலையில்,  £ 30 - 40. 

வெறி தெரிவுகளும் உள்ளது, அனால் 10 / 11 / 12 இல், 1 மில்லியன் வாடிக்கையாளர், Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, எனும் தகமையுடன் இருக்கும் வேறு கிரிப்டோவை காண முடியாது.

எதிர் கொள்ளும்  நிதி அபாயத்திற்கு, பெறுபேறு முடிவிலி ஆக இருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது SHIBA INU இப்பொது. வந்தால் மலை, போனால்  £ 30 - 40.

இன்று (as of posting), இந்த மாதத்தில்  மூன்றாம் முறை BITCOIN விழ (இப்போதைய நிலையில் 8% + ஆல்) , ஷீபா இனு வின் வீழ்ச்சி 3 - 5 %. 

பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.  


இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.
 

நீங்கள் கூறுவது போல கிரிப்டோ நாணயங்களின் விலைகளுக்கும் பிட் கொயினின் விலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என உணருகிறேன், ஆனால் இந்த கிரிப்டோ தொடர்பான எனது அறிவு இங்கு  யாழில் உள்ளவர்களின் அறிவுடன் ஒப்பிடும் போது எனது அறிவு பூச்சியமாகும்.

பிட் கொயினின் தற்போதய நிலவரம் மேலே குறிக்கப்பட்ட இரு வரைபடத்தில் ஒன்று முதலாவது நாள் (Daily)கால அளவையும் இரண்டாவது வார (Weekly) கால் அள்வையும் கொண்டது.

இதில் நிலநிற இரு சமாந்தர கோடுகள் கொண்டு இந்த பிட் கொயினின் ஏறுமுகத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இதனை (Up trend channel) என அழைப்பார்கள்.

இயல்பாக இப்படியான நிலையில் விலை கீழிருக்கும் நீல சமாந்தர கோட்டை அண்மிக்கும் போது சில்லறை வர்த்தகர்கள் வாங்குவார்கள் (Support).

ஆனால் வார வரைபடத்தில் பார்த்தால் விலை Resistance and double top என்ற நிலையைக்காட்டுகிறது.

இது உணமையானால், விலை முக்கிய வலயமான 50000 விட்டு கீழிறங்கினால், அடுத்து 40000 முக்கிய வலயமாகவும் பின்னர் 30000 முக்கிய வலயமாகும்.

ஆனால் தற்போதுள்ள நிலையில் இரண்டு வகையான சில்லறை வர்த்தகர்கள் உள்ளார்கள்

1. பயந்த சுபாவம் கொண்ட வர்த்தகர்கள்

2.பேராசை கொண்ட வர்த்தகர்கள்

முதலாமவர் சந்தையை விட்டு வெளியேறுவார் இரண்டாவது வகை நபர்கள் இந்த தற்போதய விலையில் அதிகமாக (மலிவான விலையில்) வாங்குவர்.

விலை ஒரு கட்டத்திற்கு கீழ் இறங்கும் போது பதற்றத்தை உருவாக்கி விரைவான வெளியேற்றத்தை தூண்டலாம் அதனால் விலை சடுதியாக குறையும் அப்போது வெளியேறும்போது அது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

கீழே பிட் கொயினின் Market sentiment ஆனது விலை வீழ்ச்சியடையலாம் (அவ்வாறு நிகழாமலும் போகலாம்) என கூறுகிறது.(Short Interest)

 

BITCOIN - CHICAGO MERCANTILE EXCHANGE                                Code-133741
FUTURES ONLY POSITIONS AS OF 11/16/21                         |
--------------------------------------------------------------| NONREPORTABLE
      NON-COMMERCIAL      |   COMMERCIAL    |      TOTAL      |   POSITIONS
--------------------------|-----------------|-----------------|-----------------
  LONG  | SHORT  |SPREADS |  LONG  | SHORT  |  LONG  | SHORT  |  LONG  | SHORT
--------------------------------------------------------------------------------
(5 Bitcoins)                                         OPEN INTEREST:       13,648
COMMITMENTS
   8,649   10,127    2,313      678      321   11,640   12,761    2,008      887

CHANGES FROM 11/09/21 (CHANGE IN OPEN INTEREST:       -173)
    -609     -598      387      112      -22     -110     -233      -63       60

PERCENT OF OPEN INTEREST FOR EACH CATEGORY OF TRADERS
    63.4     74.2     16.9      5.0      2.4     85.3     93.5     14.7      6.5

NUMBER OF TRADERS IN EACH CATEGORY (TOTAL TRADERS:       97)
      48       38       28        3        5       63       63  

இவ்வாறு பிட் கொயின் விலை அனைத்து கிரிப்டோ நாணயங்களில் செல்வாக்கு செலுத்துமா?

பிட் கொயின் அனைத்து கிரிப்டோ நாணயங்களின் விலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்புகிறேன்

உதாரணமாக எவ்வாறு Yield Curve  ஒரு நாட்டின்  எதிர்காலத்தில் வரக்கூடிய பொருளாதார சரிவை முன்னரே அறிவிப்பது போல் (90 களில் ஜப்பான்) ஆனால் இதற்கும் விதி விலக்காக சில நாடுகள் இருக்கலாம் (இலங்கையின் Yield Curve பார்த்தால் எதிர் வரும் 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவது போலிருக்கிறது)

Yield Curve மட்டுமல்ல பங்கு சந்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நாடி பிடித்துக்காட்டும். (அமெரிக்காவின் DJIA)

அதே போல் பிட் கொயின் கிரிப்டோவின் எதிர்காலத்தையும் உணர்த்துவதாக கருதுகிறேன் (தவறான கருத்தாகவும் இருக்கலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://coinmarketcap.com/currencies/lunar/

https://www.lunardefi.com/


நிதி அறிவுரை அல்ல. ஆய்ந்து முடிவை எடுக்கவும்.  

கிரிப்டோ இல் ஆரம்பத்தில் இருக்கும் நிலையில், இறங்குவதத்திற்கு ஓர் அறிய சந்தர்ப்பம். எனவே சிறிய தொகையை இட்டு என்ன நடப்பதை அவதானித்து மேலும்  போடலாம்.

இதில் முக்கியமானது capital growth, passive income by  reflections (கிரிடப்டோ இந்த உண்மையான தொழிற்பாடு , அதுவும் defi கிரிப்டோ ஐ பங்கு என்று வழக்குக்கு இழுப்பது மிகவும் கடினம். கிரிப்டோ இன் உண்மையான முகம் இதுதான். இவ்வளவு income ஐயும், இதுவரையில் கம்பனிகளும், வங்கிகளும் எடுத்தன) . 

ஆனால் விரைவாக இருப்பது நல்லம். முழுவதும் வாசிக்கவும். இன்னமும்  3/4 பூச்சியம் இருப்பது ஏறத்தாழ 100 அல்லது 1000 மடங்கு பெரிதாவதற்கு வாய்ப்பு உள்ளது. மிகுதி   பூச்சியம், கடினம்.

ஏறத்தாழ £150 (ஏறத்தாழ stop loss) ஐ வேறு projects இல் பகுதி அல்லது முழுதாக்க இழந்து தான் இதை அறிந்தேன். 


Bitcoin குறைந்து இருக்காவிட்டால், இது இன்னும் கூடி இருக்கும்.

live டெலிகாஸ்ட் வழியாக, telegram messenger இல் CEO  & team  வைக்கும் கூட்டதில் பங்குபற்றி, கேட்டதை சொல்கிறேன்.  

Lunar defi  தீர்க்கும் பிரச்னை: Trading இல் பலவித tool கள் பாவிக்கப்படுகிறது. Lunar இன் நோக்கம் Apple எப்படி computer க்கு easy user experience தந்ததோ, அது போன்ற experience ஐ  Lunar trading க்கு வழங்கும்.

எனவே, Bitocoin இன் ஏற்ற இறக்கம் தாக்கம் இதில் அவ்வளவு பெரிதாக இருக்காது. இதை நீங்கள்,   https://coinmarketcap.com/currencies/lunar/ chart இல் பார்க்கலாம் (bitcoin விழுந்த நாட்களில்)


ரிஸ்க் க்கும் இருக்கிறது; ஏனெனில் ஆரம்பம்.   ஆனால், சிறதாக தொடக்கி பெரிதாக வருவதற்கு ஓர் அறிய சந்தர்ப்பம். 


அகண்ட விளக்கம் தர நேரம் இல்லை. வாங்குவதற்கான விளக்கம் https://www.lunardefi.com/ இருக்கிறது. 

குறிப்பு: இதில் எனது ஈடுபாடு இருக்கிறது. எனவே நீங்கள் இதில் வாங்கினால் எனக்கு மறைமுக நன்மை இருக்கிறது.

(இதை வேறு எவராவது இன்னமும் விளக்கமாக எழுத முடியும், வேறு பதிவாக இடலாம், how to buy).

இதற்கு,  உங்களின் IT திறனில் மிகுந்த நம்பிக்கை இருக்க வேண்டும். இல்ல விட்டால் உதவியை நடவும்  

இது வாங்குவதற்கு, உங்களுக்கு  தனிப்பட்ட வாலட் (wallet) தேவை. Metamask ஐ google இல் தேடி install பண்ணவும், chrome extension  ஆக. Metamask மட்டும்தான் வேலை செய்யும்  என்று இல்லை; அனால் பொதுவான  பாவனையில் இருப்பது. 

பின் metamask இல் Binance Smart Chain இ சேர்க்கவும். எப்படி சேர்ப்பது, google இல் தேடினால் வரும். 

பின்பு, Binance  (அல்லது நீங்கள் பாவிக்கும்வேறு  கிரிப்டோ எஸ்ச்ங்கே)  இல் BNB ஐ வாங்கி, Metamsk இல் இருக்கும் Smart Chain address  க்கு, Binance இல் இருந்து withdraw பண்ணவும்.

பின், உங்கள் metamask இல் Binance Smart Chain கீழ் இருக்கும் BNB ஐ பயன்படுத்தி Lunar வாங்கலாம் 

வாங்குவதத்திற்கு உகந்த கிரிப்டோ defi  exchange: 

https://poocoin.app/swap

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பு  சொல்லிய கிரிப்டோ, இன்று கூட ஏறி இருக்கிறது, அனால் bit coin அரக்கி இருக்கிறது இதை எழுதும் பொது.

 அதனால், ஈடுபடும் எண்ணம் இருந்தால் மிக விரைவாக செயலில் இறங்கவும். 

https://coinmarketcap.com/currencies/lunar/

https://www.lunardefi.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/11/2021 at 13:02, Kadancha said:

பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.  


இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

ஷீபா  இனு, அதன் வரலாற்று resistance ஆனா  0.000052 ஐ தகர்த்து விட்டது.

சொல்லிய பொது எவராவது கருத்தில் எடுத்து இருந்தால், நன்மை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kadancha said:

ஷீபா  இனு, அதன் வரலாற்று resistance ஆனா  0.000052 ஐ தகர்த்து விட்டது.

சொல்லிய பொது எவராவது கருத்தில் எடுத்து இருந்தால், நன்மை.

ETrade 

மூலமாக இதில் ஈடுபட முடியாததாதலால் கவனம் செலுத்துவதில்லை.

  ZM பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ETrade 

மூலமாக இதில் ஈடுபட முடியாததாதலால் கவனம் செலுத்துவதில்லை.

  ZM பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

ZM ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, ஈழப்பிரியன் said:

Zoom Video Communications Inc

 

42 minutes ago, ஈழப்பிரியன் said:

Also looking PYPl

Paypal Holdings Inc

வாங்குவதற்காகவா(Long) அல்லது விற்பதற்காகவா(Short)?

எனது அபிப்பிராயத்தின்படி இரண்டும் Runaway Gap  இடம்பெற்றுள்ளது, இது இந்த இரண்டு பங்குகளின் வலிமையற்றதன்மையை காட்டுகிறது, குறைந்த பட்சம் குறுகிய காலமாவது இந்த நிலை தொடரலாம், ஆனால் பேபால் முக்கிய வலயத்தில் உள்ளது (Support) விலை இந்த வலயத்திலிருந்து கீழிறங்கினால் விற்கலாம்.

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.