Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கட தோட்டத்தை சுற்றி பாப்பம் வாங்க | Yarl Samayal Jaffna Farm Vlog | Cherry | Organic farm jaffna

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 90களுக்கு முன் அநேக வீடுகள் இப்படித்தான் இருந்தன .இதைவிட கூடிய மரங்கள் இருந்தன என்றும் கொள்ளலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து போடுவது நல்ல விஷயம்.

👋✍️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

 குறுகிய நிலபரப்பினுள் அனைத்து விதமான பயன் தரு கனிகள் மரங்கள் நட்டு இருக்கிறீர்கள், அனைத்தும் காய்த்திருக்கிறது என்பதுதான் முக்கியமான ஒன்று.

ஊரில் நிற்கும்போது பல மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறேன் அதில் சில சில வருடங்கள் ஆகியும் வெளிநாடு நான் வரும்வரை காய்க்கவேயில்லை என்பதுதான் சோகம்.

அலரி மரம் தோட்டங்களில் வீடுகளில் வளர்க்ககூடாது என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், உண்மையோ தெரியவில்லை, அலரி அபசகுனம் மட்டுமல்ல ஏனைய பயிர்களின் நீரை உறிஞ்சிகொள்ளும் என்று அறிந்ததாய் ஒரு ஞாபகம்.

மற்றும்படி பழத்தை நீங்கள் வெட்டும் முறையைபார்க்கும்போது பக்குனுது கவனமாக வெட்டுங்கள்.

இயற்கையோடு சேர்ந்த உங்கள் உழைப்புக்கும் வாழ்வுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க அருமையாய் இருக்கின்றது பாராட்டுக்கள்........!  👍

பனங்காணிகளில் அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, குண்டுமணி கொடி எல்லாம் கேட்பாரற்று சொரிந்து போய் கிடைக்கும்......இந்தத் தோட்டத்தைப் பார்க்கையில் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.....நிறைய இழந்து விட்டோம் ......!   

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, sivarathan1 said:

அருமை. 👍

உங்கள் தாயார் நிறைய விடயங்கள் அறிந்துள்ளார். 

இப்படியான தோட்டங்கள் எமது வீட்டு பழ, மரக்கறி தேவையை பூர்த்தி செய்ய வல்லன. 

எந்த ஊர் இது?

  • தொடங்கியவர்
21 hours ago, பெருமாள் said:

யாழில் 90களுக்கு முன் அநேக வீடுகள் இப்படித்தான் இருந்தன .இதைவிட கூடிய மரங்கள் இருந்தன என்றும் கொள்ளலாம் .

உண்மை தான்,, 

21 hours ago, யாயினி said:

அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து போடுவது நல்ல விஷயம்.

👋✍️

ஓம் மிச்சம் இன்னொரு காணொளியாக வரும் 

21 hours ago, valavan said:

 குறுகிய நிலபரப்பினுள் அனைத்து விதமான பயன் தரு கனிகள் மரங்கள் நட்டு இருக்கிறீர்கள், அனைத்தும் காய்த்திருக்கிறது என்பதுதான் முக்கியமான ஒன்று.

ஊரில் நிற்கும்போது பல மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறேன் அதில் சில சில வருடங்கள் ஆகியும் வெளிநாடு நான் வரும்வரை காய்க்கவேயில்லை என்பதுதான் சோகம்.

அலரி மரம் தோட்டங்களில் வீடுகளில் வளர்க்ககூடாது என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், உண்மையோ தெரியவில்லை, அலரி அபசகுனம் மட்டுமல்ல ஏனைய பயிர்களின் நீரை உறிஞ்சிகொள்ளும் என்று அறிந்ததாய் ஒரு ஞாபகம்.

மற்றும்படி பழத்தை நீங்கள் வெட்டும் முறையைபார்க்கும்போது பக்குனுது கவனமாக வெட்டுங்கள்.

இயற்கையோடு சேர்ந்த உங்கள் உழைப்புக்கும் வாழ்வுக்கும் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி, நிச்சயமாக அலரி மரம் பற்றி தெரியவில்லை, ஒருமுறை பார்க்கிறோம், தகவலுக்கு மிக்க நன்றி. 

20 hours ago, suvy said:

பார்க்க அருமையாய் இருக்கின்றது பாராட்டுக்கள்........!  👍

பனங்காணிகளில் அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, குண்டுமணி கொடி எல்லாம் கேட்பாரற்று சொரிந்து போய் கிடைக்கும்......இந்தத் தோட்டத்தைப் பார்க்கையில் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.....நிறைய இழந்து விட்டோம் ......!   

இதுல சிலது மிச்ச பக்கம் இருக்கு அடுத்த பகுதியில் வரும் 

16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அருமை. 👍

உங்கள் தாயார் நிறைய விடயங்கள் அறிந்துள்ளார். 

இப்படியான தோட்டங்கள் எமது வீட்டு பழ, மரக்கறி தேவையை பூர்த்தி செய்ய வல்லன. 

எந்த ஊர் இது?

மிக்க நன்றி, இது கோப்பாயில் 

  • கருத்துக்கள உறவுகள்

அலரி விதை விசம் என்றபடியால்தான் அப்படி சொல்லுறது......எங்கள் வீட்டில் பின்னுக்கு அருகில் எல்லாம் நிறைய இருந்தது.....கோவிலுக்கு பூ எடுப்பவர்கள் வந்து கொய்து கொண்டு போவார்கள்......!

முன் வீட்டு அக்கா ஒருவர் அப்பப்ப வந்து பொறுக்குவார்.ஏனென்று கேட்டால் உவன் துலைவானோடை (அவவின் புருஷனைத்தான்) வாழேலாது அதுதான் என்று சொல்லுவா ஆனால் பின்னேரம் விறாந்தையில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டிருப்பா.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

அலரி செடி வைக்க தேவை இல்லை. தானாகவே வரும். தேமா வைப்பார்கள். தேமா மரத்தில் நாம் சிறுவயதில் ஏறி விளையாடுவோம். அலரி காய்களை வைத்து ஈரக்குகளினால் குற்றி தேர் செய்து விளையாடுவோம்.

இப்படி தோட்டங்கள் செய்வது நல்லதொரு முதலீடு, பயன்தரும் நேரம். கடைசி வரை எம்மை காப்பாற்றும். ஆனால், யாழ்ப்பாணம் மண் வளத்தை, நீர் தரத்தை நினைக்கும் போதுதான் கவலையாக உள்ளது.

செயற்கை இரசாயனங்கள் இயற்கை வளத்தை கெடுத்துவிடும். ஏற்கனவே போர்க்காலத்தில் கொட்டப்பட்ட குண்டுகள், வெடி மருந்துகள் சூழலை துவம்சம் செய்துவிட்டது.

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நல்ல சோலையாக உள்ளது.

  • தொடங்கியவர்

பகுதி 2 

இந்த காணொளியில் நாங்க காட்டுற கொஞ்ச மரங்கள்

அம்பிரலங்காய்

பப்பாளி

கருணைக்கிழங்கு

பட்டர் ஃபுரூட் / அவகோடா

சின்ன நெல்லி - Small Gooseberry

முசூட்டை

கறுவா

பலா

ஊர் அன்னமுன்னா

திப்பிலி

தூதுவளை

வேப்பமரம்

ஆடாதோடை

இரசவள்ளி Purple Jam

பயிற்றை

முடக்கொத்தான்

கொடித்தோடை Passion fruit)

லாவுடு

ஸ்டார் பழம்

விலும்பிலி

மாதுளை

வெற்றிலை betel

சப்போட்டா

பூசணி

கறிவேப்பிலை

முருங்கை drumstick

பெருங்குறிஞ்சா

கரிசலாங்கண்ணி

ரம்புட்டான் Rambutan

முழு நெல்லி - Small Gooseberry

மரவள்ளி

மங்குஸ்தான் Mangosteen

கொய்யா

சிவப்பு கொய்யா

இந்தியன் கருவேப்பிலை

கரும்பு

பாவட்டை Pavetta indica

கவண்டிஷ் வாழை

செவ்வாழை

சாம்பல் மொந்தன்

யானை வாழை

ஊர் இதரை

கப்பல் வாழை

மருத்துவ வாழை

வன்னி மொந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவரதன்... உங்களது, இரு காணொளிகளையும்... ரசித்து  பார்த்தேன். :)
மூன்று தலைமுறை ஆட்களும், சேர்ந்து.. கடினமாக உழைத்ததின் பலனை,
எமக்கும் காட்டி... ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி. 🙏

அந்தத்.. தோட்டத்தை, நன்றாக திட்டமிட்டு... 
செடிகளையும், கொடிகளையும், மரங்களையும்,   வளர்த்து உள்ளதை பார்த்து...   
உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. 👏

உண்மையில்... நீங்கள் எல்லோரும், பயங்கர கெட்டிக்காரர்.
எல்லோருக்கும்.. பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும். ❤️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.