Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பிமலை வேறு; தொப்பிக்கல் வேறு, குழம்ப வேண்டாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

மூலம்:   https://www.facebook.com/TrincoAid/posts/334149313677151/

(தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவர் நன்னிச் சோழன் ஆவார்)

---------------------------------------------------------------------------

 

 

குடும்பிமலை எதிர் தொப்பிக்கல்

 

 

கல் தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பிரதேசத்தில் இருக்கும்

  1. குசலான மலை,
  2. கேவர் மலை,
  3. தொப்பிகல் மலை,
  4. கார் மலை,
  5. குடும்பி மலை,
  6. நாகம்பு மலை,
  7. ரெண்டு கல் மலை,
  8. படர் மலை,
  9. மண் மலை

போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. பெரிய மலைகள் என்று இல்லாமல், மலைக் குன்றுகள் என்றே சொல்லலாம். இன்று நிலஆக்கிரமிப்பின் அடையாளமாக தொப்பிகல் மலையும், குடும்பி மலையும் விளங்குகின்றன.

A-15 திருமலை வீதியில் மட்டக்களப்பில் இருந்து 24வது கிலோமீட்டர் தூரத்தில் வரும் கிரான் சந்தியில் இருந்து, புலி பாய்ந்தகல் வீதியில் வடமுனையை நோக்கிச் செல்லும் பாதையில் 26வது கிலோமீட்டர் பிரிந்து 6-7 கிலோமீட்டர் சென்றால் குடும்பி மலைக் கிராமம் இருக்கின்றது.

 


வரலாற்று சிறப்பு மிக்க எந்த தடயங்களும் இல்லா விட்டாலும், அண்மைக்கால வரலாற்றில் இடம்பிடித்து விட்ட ஒரு மலையாகவும், பெயராகவும் இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் இடம் பெற்று விட்டது. தொப்பிக்கல் மலை சம்பந்தமாக மயக்கமான தெளிவற்ற நிலை பலரிடமும் இருக்கின்றது.

1977ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கள அரசினதும், பாதுகாப்பு படைகளினதும் பேசு பொருளாக இந்த மலை இருந்து வருகின்றது.

திடீர் என்று 2006ஆம் ஆண்டு இந்த தொப்பிக் கல் மலைப் பிரதேசம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு (google) வலைதளத்திலும் தேடப்படும் ஒரு பொருளாக இந்தப் பிரதேசம் மாறியது. அத்தோடு உள்ளூரிலும், அண்டைய நாடுகளில் இருந்தும் இந்தப் பிரதேசத்தை எல்லோரும் ஆவலோடும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

என்ன நடக்கின்றது? எப்படி நடந்ததது? என்ற பல கேள்விகள் எல்லோருடைய மனங்களையும் கிளறிக் கொண்டு இருந்தது. போதாக்குறைக்கு இலங்கை அரசாங்கமும், இராணுவத்தினரும், அரச ஊடகங்கள் ஊடாக தொப்பிக் கல் மலைப் பிரதேசம் பற்றியே பேசிக் கொண்டு இருந்தது.

main-qimg-aaaddc1029a4f7161a9cdccf7802491a.jpg

'குடும்பிமலை என்ற குன்றை தொப்பிக்கல் என்று மாற்றிப் புனைந்து வெளியிடப்பட்ட தாள்'🤬

அத்தோடு இலங்கை மத்திய வங்கியும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தொப்பிக்கல் மலை என்று, குடும்பி மலையின் படத்தை 1000ஆம் ரூபா நாணயத்தாளில் பதிவிட்டு அந்தப் பிரதேசத்தில் அரச படையினர் சிங்கள கொடியைப் பறக்க விடுவது போன்று அதி தீவிரமாக ஏற்றிக் கொண்டிருப்பதாக சாட்சிப்படுத்தி இருந்தது. இது ஒரு முக்கியத்துவம் மிக்க வரலாற்றுப் பதிவாக சிங்கள அரசு பதிவிட்டிருந்தது.

இந்தக் கொடி ஏற்றப்படுவதற்கு முன் இங்கே இந்தப் பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த 'புலிக் கொடி' பற்றியும், அதன் வரலாற்று தடம் பற்றியும் ஆய்வாளர்களை தேடிப் பார்க்க தூண்டிய ஒரு நிகழ்வாக இதைப் பார்க்கலாம். முதலில் தொப்பிக்கல் மலை, குடும்பி மலை இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தூரம் என்பவற்றைப் பார்ப்போம்.

 


  • குடும்பி மலை:

main-qimg-558218fcd0f38271a3e4efc926967132.jpg

Kudumpi malai.jpg

இந்தக் குடும்பி மலை, கிரான் சந்தியில் இருந்து 26ஆவது மைல்கல்லில் இருந்து குறுக்காக 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. சாதாரணமாக ஒரு சூடு நெல் கதிர்களை அறுத்து குவித்து வைப்பது போன்று தோற்றத்தில் இருக்கும்.

அடி வாரம் அகன்றும், விரிந்தும், வட்டமாகவும், உச்சியில் ஒரு கல்லும் உடையாது, இந்த உச்சிக்கல் தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு குடும்பியைப் போல (பிராமணர்கள் கட்டும் குடும்பியைப் போல) இருக்கும். இந்த தோற்றத்தை தூரத்தில் இருந்து பார்த்தல் தெளிவாகத் தெரியும்.

 


  • தொப்பிக்கல் மலை:

main-qimg-6426e40a2c2c9aa03ce794cb1f991f6d.jpg

Thoppikkal malai.jpg

தொப்பிக்கல் மலை என்பது அதே பாதையில் மியான் குளச்சந்தியில் இருந்து 30ஆவது கிலோமீட்டரில் பிரிந்து தென் கிழக்குப் பக்கமாக 5 கிலோமீட்டர் சென்று பெரிய மியான் கல் வழியாக வெள்ளைக் கல் மலை, பால வட்டவான், மயிலத்த மடு, மாதவணை போன்ற காட்டுப் பிரதேசங்களை அண்டியதாக கிரானில் இருந்தது சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது.

அதே போல் செங்கலடிச் சந்தியில் இருந்து பதுளை வீதியில் சென்று மேற்குப் பக்கமாக, மாவடி ஓடை, புலுட்டு மான் ஓடை, வழியாகவும் (சரியான பாதை இல்லை) செல்லலாம். பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு - திருமலை வீதியில் மன்னப்பிட்டிச் சந்தி ஊடாக அருகம்பல என்ற சிங்கள கிராமத்தை தாண்டி கிழக்குப் பக்கமாக, மாந்தலை ஆற்றரைக் கடந்தும் தொப்பிக்கல் மலைக்குப் போகலாம்.

இது வட்ட வடிவம் அல்லாத முன் பக்கத்திற்க்கு மட்டும் முனை வைத்த ஒரு தொப்பியை வைத்தது போன்று தோற்றத்தில் இருக்கும், இந்தப் பிரதேசத்தில் இன்னும் ஒருவரும் குடியேறவில்லை. (2017 ஆம் ஆண்டு நிலவரப்படி)

ஆனால் நீண்ட காலமாக வந்தாறு மூலை, சித்தாண்டி, கிரான் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பருவ காலத்தில் மாடுகள் தங்கள் கால் நடைகளை மேய்ப்பதற்காக இங்கு வருவார்கள். இந்தப் பகுதி நீண்ட காலமாக தமிழர்களின் கால் நடைகள் மேய்க்கும் மேய்ச்சல் தரையாகவே பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் யுத்தம் முடிந்த பிறகு பெரும்பான்மை இனத்தவர்கள் மியான் கல், மாந்தலை ஆற்றைக் கடந்தது வந்து இந்த பிரதேசத்தில் இருந்த காடுகளை அழித்து நெல்லும், வேறு உப உணவுப்பயிர்களும் செய்தார்கள். அத்தோடு இங்கு உள்ள தமிழர்களின் கால் நடைகளை துப்பாக்கியால் சுட்டும், சுருக்கு வைத்துப் பிடித்தும் அநியாயம் செய்தார்கள். இதைக் கேட்கச் சென்ற தமிழர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். கால் நடைகளை கட்டி வைத்து நட்ட ஈடும் அறவிட்டார்கள். இவர்கள் காடுகளை அழித்த போது வன இலாக்காவினர் கண்டு கொள்ளவில்லை. இவர்களுக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும், மாந்தலை ஆற்று ஓரத்தில் முகாம் அமைத்து பாதுகாப்புப் படையினர் இருந்தார்கள்.

இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கும், அத்து மீறிய குடி யேற்றத்துக்கும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நீண்ட காலமாக பல முயற்சிகளை எடுத்து பல தரப்பினர்களிடம் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வத்திருக்கின்றார்கள். இதன் படி ஒரு பெரிய காவலரண் அமைக்கப்பட்டதோடு, இங்குள்ள கால் நடை வளர்ப்போருக்கு பாதுகாப்பும், கால் நடைகளுக்கான குடிநீர் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.


 

இந்த இரண்டு மலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களே, தொப்பிக்கல் மலையின் மறுபெயர் தான் குடும்பி மலை என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த மயக்கத்தை ஏற்படுத்தியது இலங்கை அரசாங்கமும், படைகளுமே ஆகும்.

குடும்பி மலையைச் சுற்றி மீரானக் கடவை, சின்ன மியான்கல், பெரிய மீயான்கள் குளம், கிரான் வட்டை, அசுரவணச் சோலை போன்ற பல கிராமங்கள் இருக்கின்றன.

1960 ஆண்டு காலப் பகுதியில் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள்இ காடுகள் வெட்டி சேனைப் பயிரும் வேளான்மையும் செய்து வந்தார்கள். 1970 ம் ஆண்டு காலப் பகுதியில் தேக்கு மரம் நாட்டும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி பலருக்கு இங்கே குடியேற வாய்ப்புக்கள் கிட்டியது.

1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு பௌத்த பிக்குவின் தலைமையில் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் இப்பகுதியில் கொண்டு குடியேற்றப்பட்டு தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்தக் குடியேற்றத்திற்கு பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அதி தீவிரமாக செயல்பட்டார். அத்தோடு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது. இந்தக் காலப்ப் பகுதியில் “பொடியன்களின் ” ஆத்திரம் மேலோங்கியதால், இந்தக் குடியிருப்புக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டதோடு, குடியேற்றவாசிகளும் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

குடுப்பி மலையை அண்டிய கிராமங்களில் - சின்ன மீயான்கல், பெரிய மீயான்கல் - ஆகியவற்றில் 69 குடும்பங்களும் எனயா பகுதிகளில் எல்லாம் சேர்த்து மொத்தம் 169 குடும்பங்களைச் சேர்ந்த 774 பேர் குடியிருக்கின்றார்கள். குடும்பி மலைக் குமரன் வித்தியாலயத்தில் 14 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள். இது ஒரு ஆரம்பப் பிரிவுப் பாடசாலையாகும். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த, கோவிந்தமூர்த்தி பிரசாகினி, பரமகுமார் யசாஜினி, பொன்னுத்துரை சரோஜினி, சற்குணாந்தம் சுலக்சனா ஆகியோர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மடுவடிப் பிள்ளையார், முத்துமாரி அம்மன், கண்ணகி அம்மன், வேங்கையடி முருகன் போன்ற ஆலயங்களையும் கட்டி வழிபட்டு வருகின்றார்கள் . மியான் கல் குளம் 1600 ஏக்கர் வயல் நிலத்திற்கு நீர் பாய்ச்சக் கூடிய குளமாகும். இங்கு தொண்டு நிறுவனங்களினால் குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருக்கின்றது.

போர்க் காலத்தில் விடுதலைப் போராட்டத்தோடு இந்த மக்கள் இரண்டறக் கலந்திருந்தார்கள். பல போராளிகளையும், மாவீரர்களையும் தந்த மண், இந்த மண். போரழிவுகளின் தடங்களையும் இன்றும் இங்கே காணலாம்.

போர் முடிந்த பின்னர் இந்தப் பகுதி ஒரு ஆக்கிரமிப்புப் பிரதேசமாகவே இருக்கின்றது. மீயான் கல் குளச்சந்தியில் பெரியதொரு இராணுவ முகாமும், வசதிகளுடன் கூடிய உல்லாச விடுதியும் இருக்கின்றது. இந்த விடுதியை இராணுவத்தினரே நடத்தி வருகின்றார்கள்.

கிரான் ஆற்று ஓரம் இருந்து, புலி பாய்ந்த கல், தரவை, நெடும் பாதை எங்கும் இராணுவ முகாம்களும், காவல் அரண்களும் இன்று இங்கு இருப்பதைக் காணலாம். இவ்வாறு சிங்கள பெளத்த பேரினவாத அரச இயந்திரத்தின் நில ஆக்கிரமிப்பின் அடையாளமாக குடும்பிமலையும், தொப்பிக்கல் மலையும் காணப்படுகின்றது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

  • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
  • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நன்னிச் சோழன் said:

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

  • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
  • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
25 minutes ago, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

 

அண்ணை இது நான் எழுதியது அன்று... வேசுபுக்கில் புல்லு மேஞ்சு கொண்டு போகும் போது ஆணி குத்துவது போல கிடைத்தது. அப்படியே கொண்டு வந்து இங்கு போட்டு விட்டேன். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2021 at 01:22, goshan_che said:

உங்கள் கட்டுரையை வாசித்த பின் எனக்கும் குழம்பி விட்டது நன்னி. 

@தனிக்காட்டு ராஜா @அக்னியஷ்த்ரா உறுதி செய்யுங்க அப்பு.

உன்னிச்சை போன நேரம் தூரத்தில் குடும்பிமலையும், உகந்தை முருகனை பாக்கபோன நேரம் தூரத்தில் தொப்பிகல்லும் தெரிந்த நியாபகம். 

 

உகந்தைக்கு போகும் வழியில் இருப்பதும் குடும்பி மலை தான் ,தொப்பிஹல  என சிங்களத்தில் சொல்வார்கள்,

உன்னிச்சை போகும் வழியில இருப்பதும் குடும்பி மலைதான் ஆனால் இந்த மலைதான் பிரபலமான மலைப்பகுதி புலிகள் இருந்த காலத்தில் ராணுவம் கிழக்கை கைப்பற்றிய போது பாரிய முகாமிட்டுள்ளது இதனால் இப்போது தொப்பிஹல என்றே அழைக்கப்படுகிறது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 3/10/2021 at 15:25, நன்னிச் சோழன் said:

மேற்கண்ட இரு மலைகளின் அமைவிடம்:

  • குடும்பிமலை: கரடியனாறுபக்கம் உள்ளது
  • தொப்பிகல்: உகந்தை பக்கம், குமணை சரணாலயம் கிட்டவாக உள்ளது

 

தகவல் வழங்குநர்:

@goshan_che

இந்த தகவல் தவறானது என்பதையும் மேலே கட்டுரையில் உள்ளதே சரியானது என்பதையும் வாசகருக்கு நான் தெளிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இந்த தகவல் தவறானது என்பதையும் மேலே கட்டுரையில் உள்ளதே சரியானது என்பதையும் வாசகருக்கு நான் தெளிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி நன்னி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

நன்றி நன்னி

🙏🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.