Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருமா? 

Featured Replies

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருமா? 

Wordscape என்ற ஒரு online game உள்ளது. ஐந்தில் இருந்து 9 எழுத்துகள் வரைக்கும் குழப்பி போட்டு இருப்பார்கள். அவற்றில் இருந்து ஒளிந்து இருக்கும் ஆங்கில வார்த்தைகளை கண்டு பிடிக்க வேண்டும். anagram வகையான விளையாட்டு இது. கடந்த வருடம் பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிலையில் பொழுது போகாமல் விளையாடத் தொடங்கி அதனால் மிகவும் கவரப்பட்டு இன்று 10,193 ஆவது நிலையில் (level) விளையாடிக்கொண்டு இருக்கின்றேன். 

இந்த game இல் ஒரு கட்டத்தின் பின் எமக்கான 50 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம். நானும் சும்மா ஒரு குறூப்பை தொடங்கலாம் என 'BePositive' ஒன்றை தொடங்க. அதில் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் ஆட்கள் இணைந்து 50 பேர் கொண்ட குழுவாக ஆகி, ஒவ்வொரு வார இறுதியிலும் இதைப் போல இருக்கும் 50 அணிகளுடன் விளையாடுவோம். அனேகமாக முதல் நான்கு இடங்களிற்கு ஒன்றையாவது தொடர்ந்து தக்க வைப்போம்.

ஆண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருமா எனக் கேட்டுவிட்டு online game ஒன்றை பற்றி எழுதுகின்றான் என நீங்கள் நினைக்கத் தொடங்கும் இந்த கட்டத்தில் அதைப் பற்றி சொல்ல தொடங்குகின்றேன்.

அந்த game இல் நன்கு விளையாடும் ஒரு இளைப்பாறிய பாடசாலை பிரதி அதிபர் இருக்கின்றார். பேரப் பிள்ளைகளையும் பார்த்த ஆண் அவர், தன்னால் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என்று கூறினார். ஏன் என்று எல்லாரும் கேட்டதுக்கு கொஞ்சம் தயக்கத்துடன் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதாகவும், திங்கள் (போன் திங்கள்) கிழமை அறுவை சிகிச்சைக்குட்படப் போகின்றேன் என்றும் கூறினார். பின்னர் தொடர்ந்து உரையாடும் போது, மார்பகப் புற்றுனோய் பிரிவில் தான் தானும் இப்போது அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், முழுக்க முழுக்க பெண்கள் சூழ்ந்த அந்தப் பிரிவில் தான் மட்டுமே ஆண் என்றும் அதுவே தன்னை மிகவும் சங்கடப்படுத்துகின்றது என்றும் சொன்னார்.

குறூப்பில் இருக்கும் பலருக்கு இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதில் விளையாடும் இரண்டு தாதிகளுக்கு இது ஒரு சாதாரண தகவலாக அமைந்தது இருந்தது. ஆண்களுக்கு மார்பகப் புற்றுனோய் வரும் என்றும் இது ஒன்றும் அதிசயமான விடயம் அல்ல என்றும் சொன்னார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுனோய் மிகுந்த அக்கறையாக இருப்பது போன்று ஆண்கள் இருக்காவிடினும், அது வருதவற்கான சாத்தியங்கள் உள்ளது என்றும் கூறினர்.

உங்களில் எவராவது இது பற்றி அறிந்து உள்ளீர்களா? 

ஜஸ்ரின், நெடுக்கு போன்றோர் இது தொடர்பாக மேலும் விரிவாக எழுதினால் நல்லம்.

இது பற்றி மேலும் தகவல் வேண்டும் என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்க, அவரும் பல தகவல்களை அள்ளி வழங்கினார். 

அதில் ஒன்று, தமிழ் பிபிசியில் வந்தது.

ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள் என்ன?

ஏனையவை:


'Many men are oblivious they can get breast cancer'

Breast Cancer in Men

பின் குறிப்பு:

அவருக்கு மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதி பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை கூடிய , மற்றும் வயோதிப ஆண்களுக்கு , பெண்கள் போல் மார்பகம் காணப்படும் ....அவர்களுக்கு மார்பக புற்று நோய் வரும் சாத்திய கூறுகள் உள்ளதாய் கேளிவிப்பட்டு உள்ளேன்  

  • கருத்துக்கள உறவுகள்

Breast Cancer in Men | CDC

ஆண் பெண் இருபாலாரிலும் மார்பகம் அடிப்படை கட்டமைப்பில் ஒத்திருந்தாலும்.. பெண்களில் அது ஓமோன் தூண்டலால் வளர்ச்சியும் பால் சுரப்பிகளின் பெருக்கமும் கொழுப்புப் படிம அளவு அதிகரிப்பும் நிகழ்கிறது. 

குறிப்பாக ஆண்.. பெண் மார்பகப் பகுதிகளில் காணப்படும் நிணநீர் முடிச்சு சார்ந்து புற்றுநோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் இது பரம்பரை அலகுகள் சார்ந்து அதிகம் தீர்மானிக்கப்படுவதால்.. மார்பகப் புற்றுநோய் தாக்கமுள்ள குடும்பப் பின்னணி உள்ள ஆண்களில் இதற்கான வாய்ப்பு அதிகம்.

Cancer Risk for Women Carrying BRCA Mutations - National Cancer Institute

மார்பகப் புற்றுநோய்க்கு காரணமான பரம்பரை அலகு மாறல் ஜீன்கள் (BRCA 1 மற்றும் 2 மாறல்கள்) மனிதனில் 13ம் 17 நிறமூர்த்தங்களில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிறமூர்த்தங்கள் பால் சார் 23ம் நிறமூர்த்தங்கள் அல்ல. இதனால்.. பரம்பரை ஊடாக ஆண்களுக்கும் இந்த ஜீன்கள் கடந்தப்பட முடியும்.

BRCA mutation - Wikipedia

 

Understanding Genetics

Understanding genes & mutations - Marie Keating Foundation

இதைத்தவிர வேறு பல காரணிகள் இணைத்தோ தனித்தோ மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தலாம். அதற்கான வாய்ப்பும் உண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் அது மாறல் ஜீனை காவுவோரை விட குறைந்த சதவீதத்தில் தான் தாக்குகிறது.

Breast Cancer Symptoms, Risk Factors, and Treatment

 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, 

ஆண்களில் , பெண்கள் போல மார்பகப் புற்று நோய் வரலாம் - ஆனால் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இலக்கங்களில் சொன்னால்: அமெரிக்காவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது, ஆனால் ஆண்களில் 833 பேர்களில் ஒருவருக்கு வருகிறது (ஆனால், ப்றொஸ்ரேற் எனப்படும் முன்னிற்கும் சுரப்பி, ஆண்களில் மட்டும் இருப்பது, இதில் ஏற்படும் புற்று நோய் 100 பேர்களில் 13 பேருக்கு ஏற்படுகிறது!) -எனவே, ஆண்களில் முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோயை ஒரு வயதுக்கு மேல் பரிசோதிப்பர் - பெண்களில் மார்பகப் புற்று நோயை முன்கூட்டியே அறிய சில பரிசோதனைகள் செய்வர். 

கவனிக்க வேண்டியது, ஆண்களில் மார்பகப் புற்று நோய் அரிதாக உருவானாலும், போதிய விழிப்புணர்வு, முன்கூட்டிய மருத்துவக் கவனிப்பின்மையால் நன்கு முற்றி , வேறு உடற்பகுதிகளுக்கும் பரவிய பின்னரே கண்டு பிடிக்கப் படுகிறது. இது தான் பிரச்சினையாக இருக்கிறது. 
முன்கூட்டியே அறிய என்ன செய்யலாம்? எங்கள் மார்பகப் பகுதியில், அல்லது கமக்கட்டின் கீழ் ஏதாவது வீக்கங்கள் (வலியோடு அல்லது வலி இல்லாமல்) தென்பட்டால் உடன் மருத்துவரை நாட வேண்டும். 

ஆண்களில் ஏற்படும் சில மார்பகப் புற்று நோய்களுக்குரிய ஜீன் மாற்றங்கள் பெற்றோரிடமிருந்து கடத்தப் படலாம். உதாரணமாக BRCA1/2 எனும் பெண்களின் மார்பகப் புற்று நோயை உருவாக்கும் ஜீன் மாற்றங்கள் ஆண்களில் மார்பகப் புற்று நோயை மட்டுமன்றி, கணையப் புற்று நோய், முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோய் என்பவற்றையும் அதிகரிக்கக் கூடும். இத்தகைய குடும்பத்தில் இருக்கும் புற்று நோய்கள் பற்றிய விபரங்களை உங்கள் குடும்ப மருத்துவர், வருடாந்த நலப் பரிசோதனை செய்யும் போது கேட்டு உங்களுக்கிருக்கும் ஆபத்துகளைப் பற்றி அறிவுறுத்துவர். எனவே, வருடாந்தம் இத்தகைய physical  இற்கு செல்ல வேண்டியது அவசியம். 

தற்போது, 23 & Me ஆகிய கம்பனிகள் செய்யும் பரம்பரையியல் பரிசோதனையில், BRCA போன்ற ஜீன்களில் இருக்கும் மாற்றங்களையும் பரிசோதித்து உங்களுக்கிருக்கக் கூடிய அதிகரித்த வாய்ப்புகளைக் கணிக்க உதவுவர்!  

மேலே  ரதி சொல்லியிருக்கும் விடயங்களும் ஓரளவு சரியானவை: அதிகரித்த உடற்பருமன் பல புற்று நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன - மார்பகப் புற்று நோய் அவற்றுள் ஒன்றாக பெண்களில் இருக்கிறது. ஆண்களில் உடற்பருமனின் விளைவு தெளிவாக தெரியவில்லை. 

பெண்களுக்கிருப்பதைப் போல ஆண்களுக்கு பெரிய மார்பகங்கள் உருவாவது சிலரில் சில ஓமோன் மாற்றங்களால் நடக்கலாம். இதை gynecomastia என்பர். இதனால் மார்பகப் புற்று நோய் ஆபத்து மிகவும் சிறிதளவு அதிகரிக்கலாம். ஆனால், gynecomastia என்பது ஆபத்தில்லாத தானாகவே மறைந்து  விடக் கூடிய ஒரு நிலை! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.