Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாஸ்து சாஸ்திரப்படி.. பேஸ்புக் பெயரை மீ(மெ)ரா என்று மார்க்கு மார்த்திட்டாராமில்ல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க்.

Facebook changes its name to Meta in major rebrand

https://www.bbc.co.uk/news/technology-59083601

Edited by nedukkalapoovan

  • nedukkalapoovan changed the title to வாஸ்து சாஸ்திரப்படி.. பேஸ்புக் பெயரை மீ(மெ)ரா என்று மார்க்கு மார்த்திட்டாராமில்ல.
32 minutes ago, nedukkalapoovan said:

பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க்.

Facebook changes its name to Meta in major rebrandவ்

https://www.bbc.co.uk/news/technology-59083601

Quote

வாஸ்து சாஸ்திரப்படி.. பேஸ்புக் பெயரை மீ(மெ)ரா என்று மார்க்கு மார்த்திட்டாராமில்ல.

பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க்.

நெடுக்ஸ், உங்கள் பதிவின் தலைப்பிற்கும் தமிழில் தந்துள்ள தகவலுக்கும் உண்மையான செய்திக்கும் தொடர்பில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க்.

Facebook changes its name to Meta in major rebrandவ்

https://www.bbc.co.uk/news/technology-59083601

இனி ஏதாவது பூசை வழிபாடுகளும் நடக்கலாம்.👋😄

  • கருத்துக்கள உறவுகள்

Metaverse என்பது மெய்நிகர் உலகின் அடுத்த கட்டம். Internet 2.0 என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இந்த மெட்ட்டாவேர்ஸ்சில் எமது மெய்நிகர் avatar களை வைத்து பலதையும் நாம் செய்யும் நிலை வருமாம்.

இந்த அடுத்த கட்டத்தை நோக்கி பேஸ்புக்கின் தாய் நிறுவனத்தை நகர்தவே இந்த பெயர் மாற்றம் என்கிறார்கள்.

அதே சமயம் கெட்டு போன பெயரை கைவிடும் உத்தி என்றும் சொல்கிறார்க்ஃள்.

மெட்டா வேர்சிலும் யாழ் இருக்க கடவதாக.

https://www.bbc.co.uk/news/technology-58749529
 

மேட்டா வேர்சை பற்றிய பிபிசி கட்டுரை 👆🏼.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் 'மெடா' என மாற்றம்: இது குறித்து மார்க் சொல்வதென்ன?

  • டேனியல் தாமஸ்
  • வணிக செய்தியாளர், நியூ யார்க்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மார்க் சக்கர்பெர்க்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய பிராண்டிங் முயற்சியின் ஒரு பகுதியாக, தன் கார்ப்பரேட் நிறுவன பெயரை 'மெடா' என மாற்றியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் செய்யும் பணிகளை இந்த புதுப்பெயர் உள்ளடக்குவதாக இருக்கும் என நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் சமூக வலைதளம் என்பதைத் தாண்டி, மெய்நிகர் சேவைகளை எல்லாம் மேம்படுத்தி வருகிறது.

இந்த பெயர் மாற்றம், தன் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சேவைகளுக்கு பொருந்தாது, அச்சேவைகளைக் கட்டுப்படுத்தும் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு மட்டுமே இந்த பெயர் மாற்றம் பொருந்தும்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் வெளியிட்ட, ஆவணங்களின் அடிப்படையில், ஃபேஸ்புக் தொடர்பாக பல்வேறு எதிர்மறை செய்திகள் வந்ததைத் தொடர்ந்து இப்பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பை விட லாபத்துக்கு முன்னுரிமை கொடுத்தது என ஃப்ரான்செஸ் ஹாகென் என்கிற முன்னாள் ஊழியர் குற்றம்சாட்டினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் தாய் நிறுவனத்தின் பெயரை 'ஆல்ஃபபெட்' என மாற்றியது. ஆனால் அப்பெயர் அதிகம் பிரபலமாகவில்லை.

மெடாவெர்ஸ்

பட மூலாதாரம்,META

 
படக்குறிப்பு,

மெடாவெர்ஸ்

ஒரு ஹெட்செட்டைப் பயன்படுத்தி விளையாட, வேலை செய்ய, ஒருவரோடு ஒருவர் மெய்நிகராக தொடர்பு கொள்ள 'மெடாவெர்ஸ்' என்கிற இணைய உலகத்தைக் கட்டமைப்பது தொடர்பான திட்டங்களை வெளியிட்ட போது, 'மெடா' என்கிற பெயரையும் அறிவித்தார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்.

இன்று நாம் (ஃபேஸ்புக்) செய்யும் அனைத்து வேலைகளையும் இப்போதிருக்கும் பிராண்ட் பெயரால் முழுமையாக பிரதிபலிக்க சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

"காலப்போக்கில் நாம் மெடாவெர்ஸ் நிறுவனமாக பார்க்கப்படுவோமென நம்புகிறேன். நம் பணிகள் மற்றும் அடையாளத்தை, நாம் கட்டமைப்பதை நோக்கி நிலை நிறுத்த விரும்புகிறேன்" என ஒரு மெய்நிகர் மாநாட்டில் கூறினார்.

"இப்போது எங்கள் வியாபாரத்தை இரு பிரிவுகளாக பார்க்கிறோம் மற்றும் குறிப்பிடுகிறோம். ஒன்று எங்கள் செயலிகளின் குடும்பம் மற்றொன்று எதிர்கால தலங்கள் குறித்த பணிகள்.

"இதன் ஒரு பகுதியாக, நாம் செய்யும் எல்லா பணிகளையும் பிரதிபலிக்கும் விதத்திலும், நாம் யார் என்பதை பிரதிபலிக்கும் விதத்திலும், நாம் கட்டமைக்க இருப்பதையும் பிரதிபலிக்கும் விதத்தில் புதிய நிறுவன பிராண்ட் பெயரை தேர்வு செய்ய வேண்டிய நேரமிது" என்றார்.

ஃபேஸ்புக் மெடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஃபேஸ்புக் மெடா

ஃபேஸ்புக் நிறுவனம், கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க் தலைமையகத்தில் வியாழக்கிழமை, கட்டை விரலை உயர்த்தி இருக்கும் லைக் படத்தை நீக்கிவிட்டு, நீல நிற முடிவுறா எண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகம் செய்தது.

'மெடா' என்கிற சொல்லுக்கு கிரேக்க மொழியில் 'அப்பால்' என பொருள். ஒரு வெளி நபருக்கு மெடாவெர்ஸ் என்பது மெய்நிகரில் ஒரு பதிப்பு போல இருக்கலாம், ஆனால் சிலரோ இது எதிர்கால இணையமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

ஒரு கணினிக்கு முன் இருப்பதற்கு பதிலாக, மெடாவெர்சில் ஒரு ஹெட்செட்டைக் கொண்டு மெய்நிகர் உலகத்தில் அனைத்து டிஜிட்டல் சுற்றுசூழலிலும் இணையலாம்.

இந்த மெய்நிகர் சேவையை வேலை செய்வது, விளையாடுவது, கலை நிகழ்ச்சிகளைக் காண்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பழகுவது என பலவற்றிலும் பயன்படுத்தலாம் என நம்பப்படுகிறது.

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் கூட, எம்விஆர்எஸ் என்கிற பெயரில் விற்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-59086605

  • கருத்துக்கள உறவுகள்

மெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள்: கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக்

27 நிமிடங்களுக்கு முன்னர்
மார்க் ஸுக்கர்பெர்க்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

மார்க் ஸுக்கர்பெர்க்

சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தன் பெயரை 'மெடா' என்று மாற்றிக்கொண்டது.

ஹீப்ரூ மொழியில் 'மெடா' என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது.

ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும் ட்விட்டர் தளத்தில், பலரும் எழுதுகிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஒரு ட்விட்டர் பயனர் "ஹீப்ரூ பேசும் மக்கள் அனைவரும் சிரிக்க ஒரு நல்ல காரணத்தை கொடுத்தமைக்கு நன்றி" என கூறினார்.

ஃபேஸ்புக் மட்டுமே இப்படி பெயர் மாற்ற மொழிபெயர்ப்பு பிரச்சனையால் அனைவரும் பார்த்து சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிறுவனமல்ல.

மொழிபெயர்ப்பின் போது பொருள் மாறிய சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் விரல்களை வெட்டி சாப்பிடுங்கள்

கே எஃப் சி உணவகம்
 
படக்குறிப்பு,

கே எஃப் சி உணவகம்

அமெரிக்காவைச் சேர்ந்த கே எஃப் சி துரித உணவகத்துக்கு 'விரல்களை நக்கி சாப்பிடும் அளவுக்கு சிறப்பானது' என்பது தான் அவர்களின் இலக்கு வாக்கியம். அந்நிறுவனம் சீனாவுக்கு 1980-களில் நுழைந்த போது, தங்களின் இலக்கு வாக்கியத்தை சீனாவில் மொழிபெயர்த்த போது அத்தனை சிறப்பாக பொருந்திப் போகவில்லை.

மாண்டரின் மொழியில் "உங்கள் விரல்களை வெட்டி சாப்பிடுங்கள்" என்று பொருள்படும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

ஆனால் அந்த வாசகங்கள் கே எஃப் சி நிறுவனத்தை அதிகம் பாதிக்கவில்லை. இப்போதும் சீனாவின் மிகப்பெரிய துரித உணவகங்களில் ஒன்றாக உள்ளது கே எஃப் சி.

உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், தன் 'சில்வர் மிஸ்ட்' காரின் பெயரை 'மிஸ்ட்' என மாற்றியது. அதை ஜெர்மனில் மொழிபெயர்த்தால் 'சாணம்' அல்லது 'மலம்' என பொருள்பட்டது. பிறகு காருக்கு சில்வர் ஷேடோவ் என்று பெயர் மாற்றப்பட்டது.

நோக்கியா லூமியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நோக்கியா லூமியா

நோக்கியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு லூமியா மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியபோது, அது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்வினைகள் வரவில்லை.

ஸ்பானிய மொழியில் லூமியா என்றால் 'விபச்சாரம் செய்பவர்' என்று பொருள். நாடோடியாக வாழும் மக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் மொழி வழக்குகளில் மட்டுமே இப்படி பொருள்படும்.

ஹோண்டா நிறுவனம் தன் புதிய கார் ஒன்றுக்கு ஃபிட்டா என்று பெயரிட இருந்தது. ஸ்வீடிஷ் மொழியில் ஃபிட்டா என்றால் யோனிக் குழலை குறிக்கும் கொச்சையான சொல்.

இந்த பிரச்சனை தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ரக வாகனத்துக்கு ஜாஸ் என பல நாடுகளில் பெயரிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-59101361

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.