Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, goshan_che said:

புட்டின் திருவாதிரையாம் - அதுதான் அப்படி🤣

உடான்ஸ் சாமியார்…. சர்வதேச தலைவர்களின் நட்சத்திரம் எல்லாத்தையும்,
விரல் நுனியில் வைத்திருக்கிறார். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

Vadivel Balaji Laughing GIF - Vadivel Balaji Laughing Funny ...

உருட்டோ…உருட்டு…🤣

5 hours ago, தமிழ் சிறி said:

உடான்ஸ் சாமியார்…. சர்வதேச தலைவர்களின் நட்சத்திரம் எல்லாத்தையும்,
விரல் நுனியில் வைத்திருக்கிறார். 🤣

நல்ல காலம் சர்வதேச தலைவர்களின் காண்டத்தை கையில் வைத்திருக்கிறார் என சொல்லாமல் விட்டீர்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Rejoindre
 
Dinesh Kumar  ·   · 
 
வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா???
இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்
கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது
நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்
ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..
ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..
தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..
ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..
இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..
அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்
வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..
ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..
கண்டதை உண்டாலும் செரித்தது.
தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..
பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்
உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்
ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..
எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..
வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..
பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..
கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..
மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..
ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..
படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்
தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தலை வைத்து
நாம் உறங்கிய தருணம் கண்டோம்
பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய
பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..
அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..
பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...
காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..
பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்
ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்
செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்
ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது
தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்
காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்
ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்
ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..
மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..
மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...
ஆமாம் தானே???
 
Peut être une image de 9 personnes
 
இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் நாங்களும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தோம்.....இந்தக் கொடுப்பனவு எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.......!  😁
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cancer of sri lanka 

Bild

உலகில் உள்ள நாடுகள் அபிவிருத்தி அடைவதற்கான வழிமுறைகளை இனம் கண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் அதேவேளையில்,  சிறிலங்கா என்ற பேரினவாத நாடு அபிவிருத்தி அடைய வேண்டிய வழிமுறைகளை  தேடாமல்  தேவையில்லாத இடங்களில் புற்றுநோய் போல் விகாரைகளை அமைத்துக்கொண்டு வருகின்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, குமாரசாமி said:

உலகில் உள்ள நாடுகள் அபிவிருத்தி அடைவதற்கான வழிமுறைகளை இனம் கண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் அதேவேளையில்,  சிறிலங்கா என்ற பேரினவாத நாடு அபிவிருத்தி அடைய வேண்டிய வழிமுறைகளை  தேடாமல்  தேவையில்லாத இடங்களில் புற்றுநோய் போல் விகாரைகளை அமைத்துக்கொண்டு வருகின்றது.

Bild

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’പുസ്‌തകം കയ്യിലെടുത്തു തുടങ്ങുമ്പോൾ ആയുധങ്ങൾ താഴെ വയ്ക്കാൻ തുടങ്ങും Mono a’

நூல் கைகளில் விரியும்போது ஆயுதங்கள் நழுவிச்செல்லும் .........!  👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👍🔔    🐦   இசையமைப்பாளர் தனஞ்சய் துமால்  🐦🐦🐦மச்சிவர்ல புத்தா🐦🐦🐦 திரைப்படத்திற்காக பறவைகளின் இயல்பான குரல் மற்றும் சில இயற்கயான சத்தங்களை வைத்து இசையமைத்த ஒரு இயற்கயின் இசை ;மிக இனிமையாக தொகுத்து வழங்கி இருக்கின்றார் இதோ உங்களுக்காக ,,கேட்டுவிட்டு ..

👍🔔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people, people smiling and text

நீங்களும், அப்படி தானே நினைச்சீங்க... 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, people smiling and text

நீங்களும், அப்படி தானே நினைச்சீங்க... 🤣

எப்ப பார் ஒரே நித்தி (ரை) நினைப்புத்தான். 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாடா.......கனகாலத்துக்கு பிறகு ஒரு பிரயோசனமான பதிவு போட்ட திருப்தி எனக்கு.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பலம் வாய்ந்த சிங்கங்கள் கூட- 
வேடனின்  பொறியில் அகப்படும்- 
ஆனால் நரிகள் அகப்படுவதில்லை-
சாதுர்யமாக வாழுங்கள்-
இவ்வுலகில் பொறிகளே அதிகமாக உள்ளது.

Trennlinien - Trennbalken GB Pics, GB Bilder & 8362 Whatsapp Bilder

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’பிச்சைக்காரர்கள் புத்திசாலிகள் அவர்கள் ஒருபோதும் கடவுளிடம் உதவி கேட்பதில்லை’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person

🧷 பின் விளைவு இல்லாத, நவீன குடும்ப கட்டுப்பாடு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’மாஸ்டர் ஒரு க்ரீன் டீ sugar கம்மியா! என்ன திடீர்னு க்ரீன் டீ? இப்பலாம் health conscious அ இருக்கேன் மச்சி. அதான் sugar பால் டீ-லாம் விட்டுட்டு க்ரீன் டீக்கு மாறிட்டேன் சரி கைல என்னது? இனிப்பு போண்டா இங்க நல்லா soft ஆ இருக்கும்டா டீ கடை பரிதாபங்கள்.. #டான்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of towel rack

சமையல் அறையில், மலசல கூடம். 😮

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
❣️இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!
விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

Peut être une image de 1 personne et herbe

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, suvy said:

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் ...

மழையில் முளைத்த நாத்துகள் .. அலட்சியத்தால் அழுகும் நிலையில் 6,000 நெல்  மூட்டைகள்!

Rain Soaked Paddy Bundles In Mayiladuthurai | நெல் ...

மழையில் நனைந்த நெல் மூட்டைகள். 😡 

விவசாயி மாதக்கணக்கில் கஸ்ரப் பட்டு விளைவித்த நெல்லைக் கூட 
பாதுகாக்க ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்காத அரசாங்கங்கள்....
ஆடம்பர செலவுகளுக்கும், போலி விளம்பரங்களுக்கும் செலவழிக்கும் பணம் 
மிக மிக அதிகம். 

எல்லோருக்கும் தினமும்  தேவையான உணவை... அவன் வெய்யிலிலும், 
மழையிலும் நின்று விளைவித்து தரும் போது... அதற்குரிய மரியாதையையும், 
பாதுகாப்பையும் கொடுக்காத அரசு வெட்கி தலை குனிய வேண்டும்.
இவர்கள்...  நாசமாக போக வேண்டும் என்று திட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை.

சிந்திக்க வைக்கும்... அருமையான பதிவை பதிந்த சுவியருக்கு நன்றி. 🙏

  • Like 2
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de chien et monument

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
கென்யாவின் ஓட்டப்பந்தய வீரரான ஏபெல் முடாய் ஃபினிஷ் லைனில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார், ஆனால் சிக்னல்களால் குழப்பமடைந்து பந்தயத்தை முடித்துவிட்டதாக நினைத்து நிறுத்தினார்.
ஸ்பானிய ஓட்டப்பந்தய வீரர் இவான் பெர்னாண்டஸ் அவருக்குப் பின்னால் இருந்ததோடு, அவருக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, கென்யா வீரரை தொடர்ந்து ஓடுமாறு கத்தத் தொடங்கினார்.
ஏபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது, புரியவில்லை.
பெர்னாண்டஸ் அவரை வெற்றி எல்லைக்கு பிடித்து தள்ளினார்.
ஒரு நிருபர் பெர்னாண்டஸிடம், "ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு பெர்னாண்டஸ் பதிலளித்தார், "ஒரு நாள் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெறச் செய்யும் வகையான வாழ்க்கையை நான் பெற வேண்டும் என்பதே எனது கனவு."
"ஆனால் ஏன் கென்யாவை வெற்றி பெற அனுமதித்தீர்கள்?" செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு பெர்னாண்டஸ், "நான் அவரை ஜெயிக்க வைக்கவில்லை, அவர் வெற்றி பெறவேண்டும். இது அவரது பந்தயம்." என்று பதிலளித்தார்.
நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார்: "ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!"
பெர்னாண்டஸ் நிருபரைப் பார்த்து, "ஆனால் அது தகுதியான வெற்றி ஆகுமா? அந்த வெற்றி இந்த பதக்கத்தின் மரியாதையை எனக்கு கொடுத்திருக்குமா? கண்டிப்பாக கொடுத்திருக்காது. என்னை பண்புடன் வளர்த்த என் அம்மா என்ன நினைப்பார்?"
நண்பர்களே, மதிப்புகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.
நாம் நம் குழந்தைகளுக்கு என்ன மதிப்புகளை கற்பிக்கிறோம், அவர்கள் எந்த அளவிற்கு மனிதர்களை சம்பாதிக்க தூண்டுகிறார்கள்? என்பது மிகவும் முக்கியம்.
நண்பர்களே, மற்றவர்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், அதை அவர்களை வலுவாக்க நாம் உதவினால், நம் வெற்றிக்கான பலம் தானாக கிடைக்கும்.
வாழ்த்துக்கள்
 
நண்பர்களே...
 
Peut être une image de 3 personnes

மனித நேயம்.......!   💐

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, suvy said:
 
சில ஆப்பிரிக்க சமூகங்களில், ஒரு குதிரை நோய்வாய்ப்பட்டு இறக்கும் அளவிற்கு இருக்கும் போது,
தன் வாழ்நாளில் ஒரு ஆணையும் நினைக்காத பரிசுத்த பெண் அந்த குதிரையை தாண்டினால் குணமடையும்
என்ற ஒரு நம்பிக்கை அந்த சமூகத்தினரிடம் இன்றளவும் உண்டு
அதன் நிமித்தம் பரிசுத்த பெண் """"
ஒருவரை குதிரையை தாண்ட செய்யும் பொழுது ......குதிரை எழுந்து நிதானமாக ஓடும் காட்ச்சியை பார்த்து மக்கள் அந்த பெண்ணையும் கைதட்டி அணைத்து,,தூக்கி தங்களின் மகிழ்ச்சியினை ❤️ ❤️ ❤️ ❤️கொண்டாடுகின்றனர் 👍🔔

👍🔔

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, அன்புத்தம்பி said:

சில நம்பிக்கைகள்…. எவ்வளவு உண்மையானவை என நிரூபித்த காணொளி.
குதிரை எழுந்து ஓடியவுடன்…. அந்த மக்கள், அந்தப் பெண்ணை தூக்கி கொண்டாடிய காட்சி கண்கலங்க வைத்தது. 🥰

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

சில நம்பிக்கைகள்…. எவ்வளவு உண்மையானவை என நிரூபித்த காணொளி.
குதிரை எழுந்து ஓடியவுடன்…. அந்த மக்கள், அந்தப் பெண்ணை தூக்கி கொண்டாடிய காட்சி கண்கலங்க வைத்தது. 🥰

நம்பியவர்க்கு நட்ட கல்லும் தெய்வமாகும்......நம்பாதவர்க்கு தெய்வமும் வெறும் கல்தான்......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

நம்பியவர்க்கு நட்ட கல்லும் தெய்வமாகும்......நம்பாதவர்க்கு தெய்வமும் வெறும் கல்தான்......!

அதெண்டால் 100% உண்மைதான்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.