Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2021 at 22:55, கிருபன் said:

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்

December 17, 2021

spacer.png

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) அலரி மாளிகையில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு. மு. பத்மவாசனினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமாினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, பிரதமாினால் நல்லை ஆதீனக் குரு முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர்  வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது. மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான திரு.எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி.சாந்தி நாவுக்கரசன்,  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி, திரு.சுந்தரலிங்கம், திரு.சுப்பிரமணியன், திரு.விக்னேஸ்வரன், திரு.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

spacer.png

spacer.png

spacer.png

 

https://globaltamilnews.net/2021/170592

படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோயில்!!!

On 19/12/2021 at 04:38, tulpen said:

நாவலரின் சைவ வினா விடை கற்பிப்பதில் தவறே இல்லையா?

large.1372631352_InkedInkedSaivaVinaVidai_2_LI.jpg.93e6259250b68c405936b0fe2bc7ed74.jpg

ஓ, இப்படியொன்று இருக்கிறதா? நான் அறியாதது. சைவமும் தமிழும் மட்டுமே வளர்த்தார் என்று இதுவரை நம்பியிருந்தேன். 

Edited by ரஞ்சித்

  • Replies 191
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 06:19, பாலபத்ர ஓணாண்டி said:

முள்ளுக்கம்பி போட்டவைக்கும் நீர்வேலியில் ராணுவத்தை வச்சு தேர் இழுத்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாரதரத்னா விருதும்

அது பாரதரத்னா இல்லை, “இலங்காரத்ணா” !

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

👇🏾
 

இந்த அபத்தமான கேள்விக்கு நீங்களே எண்ணிப் பதிலைக் கொடுக்கலாம். எனக்கு குரங்கின் மயிரைச் சிரைக்கும் முக்கியமான வேலை இருக்கு😁

அப்போ பூனையின் நிலை???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வேறொரு கண்டத்திலிருந்து வந்த முகம் தெரியாத மனிதர்களின் பேச்சையும் செயல்களையும் பார்த்து சமயம் மாறும் நிலையில் மக்களை வைத்திருந்தார்களென்றால், நிச்சயமாக அது பாதிரியார்களின் தவறல்ல. 

இன்னொன்று,

கிறீத்துவ பாதிரியார்கள் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் எம் மக்களின் நிலை ....? 

நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. ☹️

பாதிரியார்கள் பிழை விடவில்லையென்று யார் வாதிட்டது? 

நிச்சயமாக அவர்களும் தவறிழைத்திருப்பார்கள். இதனை கூறுவதற்கு வெட்கப்படவேண்டியதில்லை.

தவறுகள் எப்போதும் தவறுகளே. 

தவறுகளை ஏற்றுக்கொள்வதே சரியானவற்றை செய்வதற்கான முதற்படி.

மதம் மாற்றும் பேர்சிவல் பாதிரியார்கள், இன்றும் தீவெங்கும், மிகவும் மும்மரமாக உள்ளனர்.

தென்பகுதியில் பிக்குகள் அவர்கள் நடவடிக்கைகளை எதிர்கிறார்கள். வடக்கே, முல்லைத்தீவில் இருவர், மதம் மாற்ற முயன்று கைதாகியுள்ளனர்.

நாவலரின், சுதேச மதங்களை காக்கும் முயற்சி காரணமாகவே, இலங்கை பிரதமரால் நாவலர் வருடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது, மத பிரச்சார நடவடிக்கைகளுக்காக, நாவலர்.... செய்த ஒரு தவறை தூக்கிப்பிடிக்க வேண்டிய தேவை, மதம் மாற்ற முணைவோருக்கும், அவர்களை தீவிரமாக ஆதரிப்பவர்களுக்கும் உள்ளது.

சுதேச மதவழிபாட்டுக்கு போர்த்துக்கேயர் காலத்தில் முற்றாகத் தடை. ஆலய அழிப்பு.

ஒல்லாந்தர் காலத்தில் ஓரளவு தடை நீங்க, பிரிட்டிஸ்காரர் காலத்தில் தடை விலக, ஆரம்பத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு பெரும் சேவகம் செய்ய வைக்கப்பட்ட நாவலருக்கு, அவரது சொந்த மதத்தின் முன்னாறு ஆண்டு கால அவலம் சொல்லப்பட, தனது வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்து சைவத்தை இலங்கையிலும், தமிழகத்திலும் பாதுகாத்து தந்தார்.

ஆகவே.... அவரை.... இலங்கை அரசும், பிரதமரும் பெருமைப் படுத்துவதில் தவறில்லை.

****

தென்பகுதியில் ஒரு சிங்கள மன்னன், டொன் யுவான் தர்மபாலாவாக, கிறிஸ்தவர் ஆகும் அளவுக்கு அழுத்தம் இருந்தது.

சுதந்திரத்தின் பின், இலங்கை தீவின் தலைவிதியை நாசமறுத்தவர்கள், தமது அதிகார ஆசைக்காக மதம்மாறியவர்கள்; டொன் எஸ் சேனநாயக்கா, மகன் டட்லி, சொலமன் டயஸ் பண்டா, ஜலியஸ் ரிச்சட் ஜெயவர்தனே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை உடன் தொடர்பு கொண்டு அடுத்த வருடம் பாரிய அளவில் செய்ய வேண்டும். சபையின் செயற்பாடுகளையும் விஸ்தரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

ஓ, இப்படியொன்று இருக்கிறதா? நான் அறியாதது. சைவமும் தமிழும் மட்டுமே வளர்த்தார் என்று இதுவரை நம்பியிருந்தேன். 

ரஞ்சித்,

நானும் உந்த சைவபிரகாச/மெய்கண்டான் மூளைசலவையை மட்டும் வாசித்த/படித்த, எக்ஸாம் எடுத்த காலத்தில் இப்படித்தான் நம்பி இருந்தேன்.

நல்லது - இங்கே பலர் எழுதியவற்றால் ஒருவருக்காவது நாவலரின் அடுத்த பக்கமும் தெரிய வந்துள்ளதில் சந்தோசமே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

ஸ்ரீஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை உடன் தொடர்பு கொண்டு அடுத்த வருடம் பாரிய அளவில் செய்ய வேண்டும். சபையின் செயற்பாடுகளையும் விஸ்தரிக்க வேண்டும்.

⬆️  இதனைத்தான்…. எதிர் பார்த்தோம். 👍🏼 🙂

ஆறுமுக நாவலரின் புகழை…. மேலும் பரப்பிய… ருல்பன், ஜஸ்ரின், கோசான் போன்ற உறவுகளுக்கு நன்றி. 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

⬆️  இதனைத்தான்…. எதிர் பார்த்தோம். 👍🏼🙂

ஆறுமுக நாவலரின் புகழை…. மேலும் பரப்பிய… ருல்பன், ஜஸ்ரின், கோசான் போன்ற உறவுகளுக்கு நன்றி. 🙏🏽

🤣 மகிந்த, அங்கயன், சுரேன் இராகவனுக்கு பிறகுதான் நாங்கள் என்பதை பணிவன்புடன் தெரிவிக்கிறோம்😁.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

கிறீத்துவ பாதிரியார்கள் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் எம் மக்களின் நிலை ....? 

நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. ☹️

அவர்கள் வந்திருக்கா விட்டால்???????

என்ன நடந்திருக்கும்? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா சார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

ரஞ்சித்,

நானும் உந்த சைவபிரகாச/மெய்கண்டான் மூளைசலவையை மட்டும் வாசித்த/படித்த, எக்ஸாம் எடுத்த காலத்தில் இப்படித்தான் நம்பி இருந்தேன்.

நல்லது - இங்கே பலர் எழுதியவற்றால் ஒருவருக்காவது நாவலரின் அடுத்த பக்கமும் தெரிய வந்துள்ளதில் சந்தோசமே.

 

 

பிழை விடப்படாது.

சமய பரீட்சை நடாத்தியது, யாழ்ப்பாணத்தில் இருந்து, சைவ பரிபாலன சபை, கொழும்பில்  இருந்து விவேகானந்த சபை.

சைவபபிரகாசமோ, மெய்கண்டானோ இல்லை....

(இப்படி அடிச்சு விடுறாரே... நம்ம பங்கு கோசன், சைவம் இல்லையோ..... இப்ப வலு சந்தேகமா இருக்குதே) 🤔

8 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் வந்திருக்கா விட்டால்???????

என்ன நடந்திருக்கும்? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா சார்? :cool:

 

5 hours ago, Kapithan said:

கிறீத்துவ பாதிரியார்கள் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் எம் மக்களின் நிலை ....? 

நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. ☹️

இவர்கள் வந்திராவிட்டால், தமிழர் தமது தாயகத்திலும், சிங்களவர் தமது தாயகத்திலும் நிம்மதியாக வாழ்ந்திருப்பர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அங்கிள் சைவ சமயத்திற்காக நாவலரைக் கொண்டாடுறார் என்பதை நம்புவது கஷ்ட்டமாக இருக்கிறது.  வடக்கிலும் கிழக்கிலும் சைவக் கோயில்களையும், குருக்களையும், சைவர்களை அழித்துவிட்டு, "மனிதாபிமான மீட்புப் நடவடிக்கைதான் நடத்தினேன்" என்று கற்பூரத்தைக் கொழுத்திச் சத்தியம் செய்தவர் இப்போது நாவலருக்கு மரியாதை செய்கிறார் என்றால் சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

நாவலரை தூக்கிப் பிடிப்பது இருக்கட்டும், மகிந்த செய்வது நல்லது என்று நினைப்பவர்கள், இன்றுவரை  சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் அவராலும், அவரது அரசாலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் ஏதாவது செய்யப்போறாரோ எண்டு கேட்டால் நல்லது. ஆருக்குத் தெரியும், அங்கஜனாலும், அவருடைய ஆதரவாளர்களாலும் மகிந்த மனம் மாற்றப்பட்டு, மதம் மாற்றப்பட்டு சுத்த சைவப் பழமாக மாறிவிட்டாரோ என்னவோ? அடிக்கடி வீட்டில நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளியெண்டு கொண்டாடத் தொடங்கீட்டுது மனுசன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2021 at 03:44, satan said:

ஒருபக்கம் தமிழரின் கலாச்சாரத்தை அழிப்பது, நிலத்தை அபகரிப்பது. மறுபுறத்தில் சிவராத்திரி,  நவராத்திரி கொண்டாட்டம், நாவலர் ஆண்டு பிரகடனம். தமிழ் மக்களுக்கும் அறளை பிறந்திட்டுது.

இந்த பதிவை நீங்கள் கவனிக்கவல்லையா

On 17/12/2021 at 13:25, zuma said:

நாவலர் சைவத்தை மாத்திரம் அல்ல சாதியையும் திறம்பட வளர்த்தவர். சிங்களவன் தமிழ் மக்களை சாதி ரீதியாக பிரிப்பதற்கு நல்ல தான் காய் நகர்த்துகின்றான், அதற்க்கு எம்முடைய உயர் குடி மக்களும் துணை போகின்றார்கள்.
 

இதற்கு விருப்பு புள்ளியிட்ட தாங்கள் Sstan எழுதியதை கவனிக்க வில்லையா.

@ரஞ்சித்

மேலும் இங்கு மகிந்தவை யாரும் ஆதரிக்கவில்லை மாறாக மகிந்த செய்வதாலோ அல்லது நாவலரின் சாதீய கொள்கையை சாட்டாக வைத்து சைவம் சமயம் தாக்க கூடாது என்பதே.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

மகிந்த அங்கிள் சைவ சமயத்திற்காக நாவலரைக் கொண்டாடுறார் என்பதை நம்புவது கஷ்ட்டமாக இருக்கிறது.  வடக்கிலும் கிழக்கிலும் சைவக் கோயில்களையும், குருக்களையும், சைவர்களை அழித்துவிட்டு, "மனிதாபிமான மீட்புப் நடவடிக்கைதான் நடத்தினேன்" என்று கற்பூரத்தைக் கொழுத்திச் சத்தியம் செய்தவர் இப்போது நாவலருக்கு மரியாதை செய்கிறார் என்றால் சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

நாவலரை தூக்கிப் பிடிப்பது இருக்கட்டும், மகிந்த செய்வது நல்லது என்று நினைப்பவர்கள், இன்றுவரை  சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் அவராலும், அவரது அரசாலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் ஏதாவது செய்யப்போறாரோ எண்டு கேட்டால் நல்லது. ஆருக்குத் தெரியும், அங்கஜனாலும், அவருடைய ஆதரவாளர்களாலும் மகிந்த மனம் மாற்றப்பட்டு, மதம் மாற்றப்பட்டு சுத்த சைவப் பழமாக மாறிவிட்டாரோ என்னவோ? அடிக்கடி வீட்டில நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளியெண்டு கொண்டாடத் தொடங்கீட்டுது மனுசன்.

மேலே ஒரு வாழைப்பழ ஊசி செருகபட்டதே கவனிக்கவில்லையா?

அதாவது இலங்கை பிரதமர் நாவலரை கொண்டாடுவது சரிதானாம்.

அதாவது நாமெல்லாம் இலங்கை தாயின் பிள்ளைகள். நமது பிரதமர் கொண்டாடுகிறார்.

உங்களுக்கு ஏன் எரிகிறது?

மகிந்த மிக திறமைசாலி, தீபாவளி, கொண்டாடுவார், பொங்கலும் செய்வார், தமிழிலும் பேசுவார்.

இடைக்கிடையே இப்படியான செயல்களை செய்து தமிழர்கள் சாக்கில் போட எலிகள் போல் தமக்குள் பிராண்டு படுவதையும் ஊக்குவிப்பார்.

அப்படியும் திரி திசைமாறாமல் நாவலரை பற்றி மட்டுமே 4 பக்கம் ஓடிவிட்டால், ஒரு கள உறவைவைத்து ஹிந்து-கிறீஸ்தவன் எண்டு மடை மாற்ற அவரின் அடிப்பொடிகள் ரெடியாகத்தான் இருப்பார்கள்.

அப்பதானே மேலே நீங்கள் கேட்ட நியாயமான கேள்விகளை விடுத்து, மறந்து தமிழர்கள் தமக்குள் குத்தி முறிவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இந்த பதிவை நீங்கள் கவனிக்கவல்லையா

இதற்கு விருப்பு புள்ளியிட்ட தாங்கள் Sstan எழுதியதை கவனிக்க வில்லையா.

@ரஞ்சித்

இரண்டுமே சரிதானே? தமிழர்களுக்காகவோ சைவர்களுக்காகவோ மகிந்த இதனைச் செய்யவில்லையென்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

மேலே ஒரு வாழைப்பழ ஊசி செருகபட்டதே கவனிக்கவில்லையா?

அதாவது இலங்கை பிரதமர் நாவலரை கொண்டாடுவது சரிதானாம்.

அதாவது நாமெல்லாம் இலங்கை தாயின் பிள்ளைகள். நமது பிரதமர் கொண்டாடுகிறார்.

உங்களுக்கு ஏன் எரிகிறது?

மகிந்த மிக திறமைசாலி, தீபாவளி, கொண்டாடுவார், பொங்கலும் செய்வார், தமிழிலும் பேசுவார்.

இடைக்கிடையே இப்படியான செயல்களை செய்து தமிழர்கள் சாக்கில் போட எலிகள் போல் தமக்குள் பிராண்டு படுவதையும் ஊக்குவிப்பார்.

அப்படியும் திரி திசைமாறாமல் நாவலரை பற்றி மட்டுமே 4 பக்கம் ஓடிவிட்டால், ஒரு கள உறவைவைத்து ஹிந்து-கிறீஸ்தவன் எண்டு மடை மாற்ற அவரின் அடிப்பொடிகள் ரெடியாகத்தான் இருப்பார்கள்.

அப்பதானே மேலே நீங்கள் கேட்ட நியாயமான கேள்விகளை விடுத்து, மறந்து தமிழர்கள் தமக்குள் குத்தி முறிவார்கள்?

கோசான், இங்கு நாவலரை எதிர்ப்பவர்கள் பலர் அன்னிய சமயத்தவர்களும் சமய நம்பிக்கை அற்றவன் என்ற முகமூடியை அணிந்தவர்களுமே.

Just now, ரஞ்சித் said:

இரண்டுமே சரிதானே? தமிழர்களுக்காகவோ சைவர்களுக்காகவோ மகிந்த இதனைச் செய்யவில்லையென்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் தானே? 

இல்லை இரண்டுமே வேறுபட்ட பார்வை. மேலும் நிச்சயமாக தமிழர்களுக்காக இதனை செய்யவில்லை தனது 100% அரசியலுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

மேலும் இங்கு மகிந்தவை யாரும் ஆதரிக்கவில்லை மாறாக மகிந்த செய்வதாலோ அல்லது நாவலரின் சாதீய கொள்கையை சாட்டாக வைத்து சைவம் சமயம் தாக்க கூடாது என்பதே.

மாற்றுக்கருத்தில்லை.

நாவலரின் சாதிக் கொள்கையினை தமிழரைப் பிரித்தாளவோ அல்லது  அங்கஜனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வடக்கில் தனது கட்சியின் செல்வாக்கை அதிகப்படுத்தவோ மகிந்த விரும்புவதாகவே எனக்குப் படுகிறது.

இந்த இரண்டுபேரினதும் கருத்துக்களில் இருந்து நான் புரிந்துகொண்டதும் இதுவே.

நாவலர் சாதியைத் தூக்கிப் பிடித்தார் என்பதற்காக அவர் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் ஆற்றிய பங்கினை நான் மறுக்கவில்லை. 

ஈழத் தமிழர்களின் தமிழ் மொழியிலும், சைவ மதத்திலும் நாவலர் ஆற்றிய பங்கு முக்கியமானது என்று நாம் நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

25ம் திகதி மகிந்த நத்தார் தினத்தை கொண்டாட போகின்றார். அவரை ஒரு சில பாதிரிமார்களும் சந்திக்க போவார்கள். இதனை காரணம் காட்டி இன்று இங்கு குத்தி முறிபவர்கள் அல்லது கிறீஸ்தவ தமிழர்களோ தாங்கள் நத்தார் தினத்தை கொண்டாடாமல் விடுவார்களா அல்லது மகிந்தவை சந்தித்த பாதிரிமார்களையும் சபைகளையும் புறக்கணிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மீரா,

மீரா சைவத் தமிழன்.

நான் அக்னோயிஸ்டிக் தமிழன்.

ஜஸ்டின் கிறிஸ்தவ தமிழன் (என நினைக்கிறேன்).

நாம் எவ்வளவு கருத்து மோதல் வந்தாலும் மதத்தை இழுப்பதில்லை. ஏனென்றால் நாம் தமிழன் என்ற புள்ளியில் இணைகிறோம்.

நாவலரை பற்றி 4 பக்கமாக விவாதித்தோம், யாராவது நீ கிறீஸ்தவன் ஆகவே நீ நாவலரை பற்றி எழுதாதே என்றோமோ?

இல்லை அத்தனை பேரும் நாவலர், சாதியம், நல்லது கெட்டது என்ற வட்டத்துள்தான் சுத்தி வந்தோம்.

நமக்குள் பிணக்குகள் இல்லை என்பதல்ல. கணிசமானகாலம் ஒரு வேத பள்ளிகூடத்தில் படித்த சைவன் என்ற வகையில் நானும் இவற்றை பற்றி அறிவேன்.

ஆனால் வெளியில் இருந்து ஊக்குவிக்கபடும் விசத்தை நாம் இனம் காண வேண்டும்.

இது எமக்குள்ளான பிரச்சனை. 

இதில் மகிந்தவும், மொகமட்டும் உள்ளே வரும் போது / நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

இதை இரு பகுதிக்கும்தான் சொல்கிறேன்.

ஆனால் உண்மையில் இதில் இரு பகுதியிலும் பிழை இல்லை. நீங்கள் பொறுப்பாகத்தான் உரையாடினீர்கள். அவரும் 4 பக்கம் பார்த்தார், இது வேலைக்காகாது - தானே இறங்கி விட்டார்🤣.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

மாற்றுக்கருத்தில்லை.

நாவலரின் சாதிக் கொள்கையினை தமிழரைப் பிரித்தாளவோ அல்லது  அங்கஜனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வடக்கில் தனது கட்சியின் செல்வாக்கை அதிகப்படுத்தவோ மகிந்த விரும்புவதாகவே எனக்குப் படுகிறது.

இந்த இரண்டுபேரினதும் கருத்துக்களில் இருந்து நான் புரிந்துகொண்டதும் இதுவே.

நாவலர் சாதியைத் தூக்கிப் பிடித்தார் என்பதற்காக அவர் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் ஆற்றிய பங்கினை நான் மறுக்கவில்லை. 

ஈழத் தமிழர்களின் தமிழ் மொழியிலும், சைவ மதத்திலும் நாவலர் ஆற்றிய பங்கு முக்கியமானது என்று நாம் நம்புகிறேன். 

தமிழனை இனியும் பிரித்தாள நாவலரின் சாதிக் கொள்கை தேவையில்லை. இன்று வரை தமிழன் சேர்ந்தா இருக்கிறான்.

கத்தோலிக்கரான செல்வாவையே தலைவராக ஏற்றவர்கள் தமிழர்கள். இன்றும் கத்தோலிக்க / கிறீஸ்தவ அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் சைவர்களும் சைவ அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் கிறீஸ்தவ / கத்தோலிக்கர்களும் வாழும் நாடு அது.

அதே போல் தான் சாதியம்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

தமிழனை இனியும் பிரித்தாள நாவலரின் சாதிக் கொள்கை தேவையில்லை. இன்று வரை தமிழன் சேர்ந்தா இருக்கிறான்.

வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, அந்நிய மத ஆதரவாளர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும், நாவலரின் இருநூறாண்டுகளுக்கு முன்னான கருத்தினை தூக்கிப் பிடித்து கொண்டு வருவது தெளிவாகிறது.

கோபம் வேறு வருகிறது...

ஒன்று சாதியம் குறித்து பேசுவது. அடுத்து, பௌத்த எதிர்ப்பினை இழுப்பது....

நீங்கள் சொன்னது போல, இன்று ஆட்சியில் சிங்களவர்கள்... அவர்களிடமே போய் நாவலர் ஆண்டாக பிரகடனம் செய்ததில்... தவறு இல்லையே... உடனே... பௌத்தன்.... இனத்தை அழித்தவன் என்று கூப்பாடு வேறு.

அழித்தவன் தான்... அதுக்காக கொழும்பில் அதிகாரம் என்ற நிதர்சனம் ஒன்று உள்ளதே... அதனை மறுக்க முடியாதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

நாவலர் சாதியைத் தூக்கிப் பிடித்தார் என்பதற்காக அவர் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் ஆற்றிய பங்கினை நான் மறுக்கவில்லை. 

ஈழத் தமிழர்களின் தமிழ் மொழியிலும், சைவ மதத்திலும் நாவலர் ஆற்றிய பங்கு முக்கியமானது என்று நாம் நம்புகிறேன். 

நிச்சயமாக. இந்த திரியை நீங்கள் மீள திருப்பி பார்த்தால் - எல்லாரும் இதை ஏற்று கொண்டே தமது கருத்தை முன்வைத்தார்கள் என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இவ்வுலகில் நூறு வீதம் சரியாக நடந்த மனிதரை அடையாளம் காட்டுங்கள். அதன் பின் ஆறுமுகநாவலரை விமர்ச்சிக்கலாம்.

ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ மதத்திற்கு விசுவாசியாக இருந்த சைவர். எதிரியாகினும் நன்றியுணர்வு ஒரு மனிதனுக்குஅதி முக்கியம்.நோர்மலாக பார்க்கப்போனால்  அவர் ஒரு சைவ துரோகி...😂

மதத்தை விட அவர் தமிழுக்கு பங்காற்றிய செயல்கள் அதிகம்.

மாம்பழம் சுவை என்பதற்காக அதன் கொட்டையையும் விழுங்க முயற்சிக்காதீர்கள்.

ஆறுமுகநாவலர் சொல்லித்தான் சாதிப்பிரச்சனை தொடர்கின்றது என்றை மாயத்தை உருவாக்காதீகள்.

எது கிடைத்தாலும் நூல் கோர்ப்பவர்கள் இவர்கள்😂

14 hours ago, குமாரசாமி said:

இங்கே சிலர் ஆறுமுகநாவலர் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரைக்கும் உள்ள தவறுகளை மட்டும் தூக்கிப்பிடித்து குளிர்காய்கின்றனர்.

ஆறுமுகநாவலர் எப்படிப்பட்ட அறிவாளி என்பது மேற்குலகிற்கு நன்கு தெரியும்.

பைபிளை மொழி பெயர்த்து அதில் மிக மிக தூய்மையான தமிழ் சொற்களை உருவாக்கியவர் ஆறுமுகநாவலர்.சைவசமயத்தில் கூட அந்த மேன்மைச்சொற்கள் பாவிக்கப்படுவதில்லை. எவ்வளவு அமைதியான வார்தைகளும் வசனங்களும் தமிழ் பைபிளில் அமைந்திருக்கின்றது.

அது இங்கு எகிறி குதிக்கும் சிலருக்கு தெரியுமா🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

எது கிடைத்தாலும் நூல் கோர்ப்பவர்கள் இவர்கள்😂

கத்தோலிக்க மதத்தினை தழுவியவர்களும், கத்தோலிக்க பாடசாலைகளில் மண்டை கழுவுபட்டவர்களும், நாவலரை எந்த புள்ளியில் தாக்குகிறார்கள் என்று பார்க்க.... நோக்கம் புரிகிறது. 😇

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர்

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர்

பழங்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் ஏட்டுச்சுவடிகளிலேயே இருந்தன. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு ஏட்டில் இருந்த இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றது தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமையம் ஆகும்.
பதிவு: டிசம்பர் 19,  2019 11:37 AM
ஏட்டிலிருந்து அச்சுப் பதிப்பது அப்படி ஒன்றும் எளிய செயல் இல்லை. ஏட்டில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு எந்தப் பிழையும் இல்லாமல் அச்சில் பதிக்கும் அரிய பணியை மேற்கொண்ட பெரியவர்களாலேயே இன்றைக்குத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அத்தகைய அரிய பணியை ஆற்றிய முன்னோடிகளுள் முதன்மையானவர் ஆறுமுகநாவலர்.


ஏட்டுச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் நூல்களை மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள் என்று ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப்பிள்ளை எனப் பெரிய பட்டியலையே அடுக்கலாம். “தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்.” என்று திரு.வி.க. கூறியுள்ளது தமிழ்ப்பதிப்பு வரலாற்றையே சுருக்கமாகக் காட்டுகிறது.

யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் தம்பதியருக்குப் புதல்வனாக 1822-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ஆறுமுகம் என்பதாகும். அவருடைய தகப்பனார் கந்தப்பிள்ளை மட்டுமின்றி பாட்டன் பரமநாதர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவருமே தமிழ் அறிஞர்கள். எனவே மூன்று தலைமுறையினர் தமிழ் அறிஞர்களாக விளங்கிய புகழ்மிக்க வழிமரபில் தோன்றிய ஆறுமுகம் கல்வி கேள்விகளில் தலைசிறந்து விளங்கியதில் வியப்பில்லை. எந்த இலக்கியத்தைப் பற்றியும் மடைதிறந்த வெள்ளம்போல் கருத்துகளைப் பொழிந்து தள்ளும் இவருடைய சொல்லாற்றலைப் பாராட்டித் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தை வழங்கியது. அதன்பின் இவர் ஆறுமுக நாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

சிறப்புமிக்க புலவர்களிடம் படித்து இளமையிலேயே தமிழிலும் வடமொழியிலும் நன்கு புலமைபெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் தாம் பயின்ற அக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவருடைய தமிழறிவையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு மகிழ்ந்த கல்லூரி அதிபர் பெர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் தமது பணிக்குத் துணையாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார். தமிழும் சைவமும் தமது இரு கண்களாகப் போற்றிய ஆறுமுக நாவலர் தமிழில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியாற்றியது அவருடைய பொதுநோக்கிற்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஏட்டுச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்து பாடுபட்டார். இதற்காகச் சொந்தமாக அச்சு இயந்திரம் வாங்கி வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் அச்சுக்கூடம் நடத்தினார். சொந்த அச்சுக்கூடம் வைத்திருந்ததும் மரபுவழியாகப் பெற்ற தமிழ்ப்புலமையும் ஆங்கிலக் கல்வியும் இவரது பதிப்புப் பணி சிறந்து விளங்கத் துணைபுரிந்தன. தாம் புரிந்த பதவியையும் உதறித் தள்ளினார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார்.

இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை முதலான இலக்கியங்களுக்கு இவருடைய உரை எளிமையாக மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்தது.

ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன.

தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக எழுத்தறிவு பெற்றுப் புத்தகவாசிப்பில் ஈடுபடுவோரை முன்னிலைப் படுத்தியே இலக்கணத்தையும் சைவசமயத்தையும் பற்றிய பல விளக்கநூல்களை எழுதிய சிறப்பு இவருக்கே உரியது. எனவே இவரை ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று அறிஞர்கள் பாராட்டினர்.

ஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு.வரதராசனார் போற்றியுள்ளார்.

சிதம்பரத்தில் 1864-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சைவ வித்தியாசாலையை நிறுவினார். சிதம்பரத்தில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழையும், சைவத்தையும் கற்பித்தார்.

இலங்கையில் ஆங்கிலேய அரசு மதுவிற்பனை மூலம் வருவாயைப் பெருக்கிக்கொள்கிறதே என வருந்தினார். ஆறுமுக நாவலர் 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோவில் ஆகிய கோவில்களின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறிப் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்கள் மீண்டும் அமைய வழிவகுத்தார்.

இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச்சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அங்ஙனம் மாறிவந்தவர்களுள் கிங்ஸ்பரி என்னும் பெயரைக் கொன்டவரே பின்னாளில் சி.வை.தாமோதரம்பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரிய இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியராகப் பணிபுரிந்து பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார்.

சொற்பொழிவுத்துறையில் முன்னோடிகள் என்று போற்றப்படும் வ.உ.சி., திரு.வி.க., அண்ணா ஆகியோருக்கு நெடுநாட்கள் முன்னதாகவே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஈடு இணையற்ற சொற்பொழிவாளராகத் திகழ்ந்த பெருமை நாவலருக்கே உரியது.

ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971-ம் ஆண்டு அக்டோபர் 29-ல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.

ஆறுமுக நாவலரை “செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்” என கவிமணி பாராட்டியுள்ளார்.

மறைமலை இலக்குவனார்,
சிறப்பு வருகை பேராசிரியர்,
கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

 

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/12/19113732/Arumugam-Navalar-Tamil-Renaissance-predecessor.vpf

 

எமது வராலறுகளை சிதைக்க வேண்டுமென்றே கிளம்பியுருக்கும் சிலரை இனம் காண்பது யாழ்கள வாசகர்களுக்கு நன்று, 🙂

42 minutes ago, MEERA said:

25ம் திகதி மகிந்த நத்தார் தினத்தை கொண்டாட போகின்றார். அவரை ஒரு சில பாதிரிமார்களும் சந்திக்க போவார்கள். இதனை காரணம் காட்டி இன்று இங்கு குத்தி முறிபவர்கள் அல்லது கிறீஸ்தவ தமிழர்களோ தாங்கள் நத்தார் தினத்தை கொண்டாடாமல் விடுவார்களா அல்லது மகிந்தவை சந்தித்த பாதிரிமார்களையும் சபைகளையும் புறக்கணிப்பார்களா?

அவர்கள் சிங்சங் தமிழர்கள்

தாளம் (இசைக்கருவி) - தமிழ் விக்கிப்பீடியா

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர் (1822 – 1879) பற்றிய சிறு குறிப்பு

பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்துக்கு இலங்கை உட்பட்ட ஆரம்ப காலத்தில் அமெரிக்க கிறிஸ்துவ மிசினரிகள் பல, இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில், பல பாடசாலைகளை நிறுவி அதன் மூலமாக ஆங்கில கல்வியினையும் கிற்ஸ்துவ மதத்தினையும் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தினர்.

இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளைக்கும், சிவகாமிக்கும் மகனாக 1822 டிசம்பர் 12ம் நாள் ஆறுமுக நாவலர் தோன்றினார்.

இளமையில் தந்தையிடம் தமிழ், சமஸ்கிருதம் மொழிகளையும் மற்றும் உவெஸ்லியன் மிசன் பாடசாலையில் (தற்போது யாழ்பாணம் மத்திய கல்லூரி) ஆங்கில மொழியும் கற்று 20 வயதிலே தமிழ்ப்பண்டிதராகி, அப்பாடசாலைத் தலைவரான பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியருமாகி, பின்னர் அவரது கோரிக்கைக்கு இணங்கி அதே பாடசாலையில் ஆசிரியரும் ஆனார்.

பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய விரும்பினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். ஆறுமுக நாவலரின் கைதேர்ந்த பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. இந்த தமிழ் மொழிபெயர்ப்பு இலங்கையிலும், தென் இந்தியாவிலும் பல சைவ தமிழர்களை கிறிஸ்துவராக மாற வழி வகுத்தது.

சைவ சிந்தாந்தத்தில் பற்றுடனும், சிறந்த தெளிவுடன் இருந்த ஆறுமுக நாவலர், ஆங்கிலேயர்களுக்கு முன்னர் ஆண்ட காலனித்துவ ஆட்சியாளர்களான டச்சுக்காரர்களினாலும் போர்துக்கேயர்களாலும் தடை செய்யப்பட்டிருந்து அப்போது தான் வழிபாட்டுக்கான மீள் அனுமதி பெற்ற தனது சொந்த மதமும் பெரும் உதவி வேண்டிய நிலையில் உள்ளதனை உணர்ந்து தமது வேலையை விட்டு நீங்கி, தனது வாழ்வை சைவத்துக்கும், தமிழுக்கும் அர்பணித்தார். 60 க்கு மேற்பட்ட பல புத்தகங்களை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்திலும், தென் இந்தியாவில் சிதம்பரத்திலும், ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ எனும் பெயரில் பாடசாலைகளை உருவாக்கினார். கோயில்களில் ஆன்மிக உரைகள் நடாத்தி மக்களுக்கு சமய அறிவு மேம்பட வைத்தார். இதன் காரணமாக மதம் மாறுவோர் தொகை வீழ்ச்சி அடைந்தது.

இவர் வெளியிட்ட பாலபாடம், சைவ வினாவிடை போன்றன, இலங்கை அரச பாடசாலைகளில் சமயக்கல்வி பாடத் திட்டத்திற்கும் மூலாதாரம் ஆகியது.

சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்தொண்டாற்றி தமிழ் கூறும் நாடெங்கணும் தனக்கிணையில்லதாராய் திகழ்ந்தவர் யாழ்ப்பாணம், நல்லை நகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.