Jump to content

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022

 

படக்குறிப்பு,

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடக்கத்தில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி எழுத்தாளர் சு வெங்கடேசன் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

கோலாகலமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் படங்கள் இதோ..

 

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

 

படக்குறிப்பு,

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரானபழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து புகழ்பெற்ற மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

 

வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்கும் இளைஞர்

 

படக்குறிப்பு,

வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்கும் இளைஞர்

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்க முயலும் இளைஞர்.

 

வாடிவாசலில் இருந்து மாடு பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி

 

படக்குறிப்பு,

வாடிவாசலில் இருந்து மாடு பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி

வாடிவாசலில் இருந்து காளை பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே மாட்டைப் பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி இதோ.

 

அடங்க மறுக்கும் காளை, அடக்க முனையும் இளைஞர் படை

 

படக்குறிப்பு,

அடங்க மறுக்கும் காளை, அடக்க முனையும் இளைஞர் படை

ஒருபக்கம் அடங்க மறுக்கும் காளைகள், மறுபக்கம் அடக்க முனையும் இளைஞர் படை. ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி இரு தரப்பு.

 

மக்கள் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையிலிருந்து திமிறி வரும் காளை

 

படக்குறிப்பு,

மக்கள் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையிலிருந்து திமிறி வரும் காளை

ஜல்லிக்கட்டை காண, குறைவான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், காளைகளின் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சமில்லை.

இருப்பினும் குறைவில்லாத மக்களின் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையில் சிக்காமல் திமிறி வரும் காளை.

 

தொட்டுப் பார்... என தெறிக்கவிடும் கம்பீரத்தோடு வீரநடைபோடும் காளை

 

படக்குறிப்பு,

தொட்டுப் பார்... என தெறிக்கவிடும் கம்பீரத்தோடு வீரநடைபோடும் காளை

திமில் திமிற, உடலில் வலு புடைக்க தொட்டுப் பார் என தெறிக்க விடும் கம்பீரத்தோடு, எவரும் தொடவில்லை என்கிற திமிரோடு வீரநடைபோடும் காளை.

 

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்

 

படக்குறிப்பு,

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்.

 

வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை

 

படக்குறிப்பு,

வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை

மாட்டைப் பிடிக்க சூழ்ந்திருக்கும் இளைஞர்களுக்கு சவால்விடும் பாணியில், வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், கால்களைக் கொண்டு மண்ணைக் கோரி இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை.

 

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

 

படக்குறிப்பு,

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் முனைப்பில் விவரங்களைச் சரிபார்க்கும் காவல் துறை அதிகாரிகள்.

 

வாடிவாசல் வழி காளைகளை விட காத்திருக்கும் காளை மாடுகள் & மாடு வளர்ப்பவர்கள்

 

படக்குறிப்பு,

வாடிவாசல் வழி காளைகளை விட காத்திருக்கும் காளை மாடுகள்

மாதக் கணக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்த தங்கள் காளைகளை, வாடிவாசல் வழி போட்டிக்கு அனுப்ப வரிசையில் நிற்கும் காளைகள் மற்றும் காளை வளர்ப்பவர்கள்.

ஜல்லிக்கட்டை விறுவிறுப்பாக்கும் வர்ணனையாளர் மைக் சரவணன் - காணொளி

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்

ஜல்லிக்கட்டில் 'கெட்டவன்' - அதிரடிக்கு பெயர் பெற்ற மதுரை காளை - காணொளி

காணொளிக் குறிப்பு,

காளையின் பெயர் 'கெட்டவன்' - பல ஜல்லிக்கட்டில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய மாஸ் காளை

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண் - காணொளி

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண்

https://www.bbc.com/tamil/india-59990577

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராய்  இருக்கும், நேரில் பார்த்ததில்லை......!  👍

நன்றி ஏராளன் .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு. இளம் தமிழ்ப் பெண் கட்டப்பொம்மன் காலத்து வெள்ளையம்மாளை நினைவூட்டுகிறாள்.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்.

சிலிர்ப்பூட்டும்படி இருக்கும்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு: திமில் குலுங்க இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள் - கள படங்கள்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

 

படக்குறிப்பு,

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் 21 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.தலா ஒரு மணி நேர சுற்றில் 30 வீரர்கள் என்கிற கணக்கில் மொத்தம் ஏழு சுற்றுகளாக போட்டி நடந்தது.

இன்றைய போட்டியில் 729 காளைகள் போட்டியில் பங்கெடுத்தன. சரியாக மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.இதன் முடிவில் முதலிடம் பிடித்த வீரராக பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அறிவிக்கப்பட்டார். நான்காவது சுற்றில் களத்துக்கு வந்த்து 21 காளைகளை பிடித்தார். 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இவர் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக வென்ற இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்ற காளைக்கு, சிறந்த காளைக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரராக குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிவிக்கப்பட்டார். இவர் 11 மாடுகளை பிடித்துள்ளார். இவருக்கு திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாம் இடம் பிடித்த வீரராக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தேர்வானார்.

முன்னதாக காலை 11.30 மணியளவில் விதிகளை மீறி சிலர் காளைகளை வாடிவாசலின் பின்பகுதியில் அவிழ்த்து விட முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த போட்டியில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

பிரபாகரன், முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் - பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர்

 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

கார்த்திக் ராஜா, இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரர்

தமிழ்நாட்டையே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பரவசப்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டுப் படங்கள் இதோ.

 

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

 

படக்குறிப்பு,

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

பாலமேடு ஜல்லிக்கட்டில், தன் திமிலைப் பிடிக்கும் வீரர்களை எல்லாம், உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை.

 

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

 

படக்குறிப்பு,

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளை அவிழ்த்துவிட காத்திருக்கும் காளை மாட்டு உரிமையாளர்கள்.

 

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

 

படக்குறிப்பு,

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

ஒருவரின் பிடியை உதறவிட்டு, மற்றொருவரின் பிடியிலிருந்து விடுபட துள்ளிக் குதிக்கும் வலிமையான காளை.

 

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

 

படக்குறிப்பு,

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

வாடிவாசலிலிருந்து வெளி வந்த காலை மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடுகிறது. மறுபக்கம் காளைக்கு ஈடு கொடுத்து திமிலை அணைத்த படி ஒரு இளைஞரும் ஓடுகிறார்.

 

ஒரு காளை, ஒரு இளைஞர்

 

படக்குறிப்பு,

ஒரு காளை, ஒரு இளைஞர்

ஒரு காளை, ஒரு இளைஞர், திமிலோடு மோதி விளையாடி ஜல்லிக்கட்டுப் போட்டியை சூடேற்றிய தருணம்.

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்

 

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

 

படக்குறிப்பு,

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்த பார்வையாளர்கள்.

 

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

 

படக்குறிப்பு,

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

வாடிவாசலில் இருந்து வந்தது தான் தெரியும், பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் அற்புக் காளை.

 

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

 

படக்குறிப்பு,

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

பிடித்த பிடியை விடாத இளைஞர், பிடியை பிரிக்கும் நோக்கில் கண்ணில் வேகத்தோடு திமிறித் தெறித்தோடும் காளை.

 

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

 

படக்குறிப்பு,

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

வாடிவாசலிலிருந்து புறப்பட்ட காளை, மாடுபிடி வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை.

 

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

 

படக்குறிப்பு,

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழி களம் கண்டு இளைஞர்களைத் தெறிக்க விட, தங்கள் உரிமையாளர்களோடு காத்திருந்த காளைகள்.

https://www.bbc.com/tamil/india-60008769

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசை ஏன் மறுத்தேன்?' - 16 வயது மதுரை மாணவி யோகதர்ஷினி பேட்டி

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

யோகதர்ஷினி

"மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அவ்வாறே என்னைப் பாருங்கள். நான் ஒரு பெண் என்பதால் என்னை மட்டும் ஏன் தனியாக பார்க்கிறீர்கள்? அனைவருக்கும் பின்பற்றப்படும் விதிமுறைகளைத்தான் எனக்கும் பின்பற்றப்பட வேண்டும். பெண் பிள்ளை என்று என்னைத் தனித்துப் பார்க்க வேண்டாம்," என்று ஜல்லிக்கட்டில் தன் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினி கூறுகிறார்.

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி. 16 வயதே ஆகும் இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவரது முன்னோர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக யோகதர்ஷிணி ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகளைக் களமிறக்கி வருகிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட அவரது காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், மாணவி யோகதர்ஷினியின் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவைச் சேரும் என்று அறிவித்தனர். மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷிணிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழா குழு தெரிவித்தது.

இதனை யோகதர்ஷிணி வேண்டாம் என்று நிராகரித்துச் சென்றுவிட்டார். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் இதே போன்று அறிவித்த பரிசை நிராகரித்தார்.

எங்கள் வீட்டில் பாரம்பரியமாக காளை வளர்க்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக நான் ஜல்லிக்கட்டுக்குக் காளையைக்‌ கொண்டு செல்கிறேன். அதேபோன்று இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையை அழைத்துச் சென்றேன் என்று பிபிசி தமிழிடம் யோகதர்ஷினி தெரிவித்தார்.

"நான் அழைத்துச் சென்ற காளை புதியது. அது இதுவரை வாடிவாசலைப் பார்த்ததில்லை. இந்த ஆண்டுதான் முதல் முறையாகக் களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இருவர் காளையைக் கட்டியதால், பிடிமாடு என்று அறிவித்தனர். அப்போது அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்," என்கிறார் அவர். முந்தைய ஆண்டுகளில் இவரது வேறு ஒரு காளை ஜல்லிக்கட்டில் நான்கு முறை வென்றுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்று ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டு, அதைத் தாம் மறுத்ததாகக் கூறுகிறார் மாணவி யோகதர்ஷினி.

"கடந்த ஆண்டு ஒருவர் காளையைப் பிடித்தார். அப்போது ஆறுதல் பரிசாகப் பட்டு சேலை வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தனர். அதனை வேண்டாம் என்று மறுத்தேன். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டு பேர் காளையை பிடித்தும், அதைப் பிடிமாடு என்று அறிவித்தனர். இப்போதும் எனக்கு ஆறுதல் பரிசாக தங்கக் காசு வழங்குவதாக அறிவித்தனர். அதை வேண்டாம் கூறிவிட்டு வந்தேன்."

 

BBC

"ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் எந்த காளைகளும் அவை பிடிக்கப்பட்டால் ஆறுதல் பரிசு வழங்க மாட்டார்கள். காளை வென்றால் காளை உரிமையாளருக்கு பரிசு, காளை பிடிக்கப்பட்டால் வீரருக்கு பரிசு. இவைதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்துதான் மாட்டை அவிழ்க்கிறேன். இதில் நான் பெண் பிள்ளையாக மாட்டைக் கட்டவிழ்க்கிறேன், நான் துவண்டு விடக்கூடாது என்பதற்காக ஆறுதல் பரிசு அறிவித்தனர். எனக்கு அது வேண்டாம்.

எப்பொழுதும் போல மற்றவர்களுக்கு என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அவை எனக்கும் பொருந்தும். அதே விதிமுறையை என்னிடமும் பின்பற்றுங்கள். என் மாடு வென்றால் பரிசை ஏற்கிறேன்," என்றார் அவர்.

தாம் ஒரு பெண்ணாக மாட்டை அவிழ்ப்பதால் மட்டுமே எனக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக கூறுகிறார் யோகதர்ஷினி.

"என்னை மட்டும் ஏன் தனித்துப் பார்க்கிறீர்கள்? நானும் அனைவரையும் போல்தான் காளையை விடுகிறேன். என் காளை வென்றால் நான் வாங்கும் பரிசில் ஒரு நியாயம் உள்ளது, என் காளை பிடிமாடாக ஆகிவிட்டதால் எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்," எனத் தெரிவித்தார் யோகதர்ஷினி.

https://www.bbc.com/tamil/india-60021982

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி இறுதியில் நுழைந்தது தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை நொக் - அவட் செய்து ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட  தென் ஆபிரிக்கா தகுதிபெற்றது. கடந்த வருடம் மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவின் வெற்றியில் அயாபொங்கா காக்காவின் துல்லிய பந்துவீச்சு, ஆன்எக் பொஷ் குவித்த அரைச் சதம், லோரா வுல்வார்டின் சிறந்த துடுப்பாட்டம் என்பன முக்கிய பங்காற்றின. தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தஸ்மின் ப்றிட்ஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.) ஆனால், லோரா வுல்வார்ட் ஆன்எக் பொஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 65 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். லோரா வுல்வார்ட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (121 - 2 விக்.) வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 14 ஓட்டங்களை ஆன்எக் பொஷ், க்ளோ ட்ரையொன் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். இப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய   ஆன்எக் பொஷ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ளோ ட்ரையொன் ஆட்டம் இழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. க்றேஸ் ஹெரிஸ் (3), ஜோர்ஜியா வெயாஹாம் (5) ஆகிய இருவரினது விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது. பெத் மூனியும் பதில் அணித் தலைவி தஹிலா மெக்ராவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். தஹிலா மெக்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார். 16.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னரே அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. எலிஸ் பெரி 23 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். ஃபோப் லிச்ஃபீல்ட் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அயாபொங்கா  காக்கா 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நொன்குலுலென்கோ 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஆன்எக் பொஷ் https://www.virakesari.lk/article/196539
    • அது தங்களுக்கு வாக்குப் போட்ட இடங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவினம் அண்ணை! வன்னியில் எவ்வளவோ வீட்டுத் திட்ட வீடுகளில் மக்கள் இல்லை. ஆனாலும் பலர் குடிசைகளில் வாழ்கிறார்கள்! ஏனெனில் பொருத்தமான திட்டங்கள் இல்லை. மக்கள் வாழக் கூடிய பகுதிகளில்/ வேலை வாய்ப்பு உள்ள இடங்களில் வீட்டுத்திட்டம் அமைவதில்லை. அரசு ஒரே இடத்தில் 50 வீடுகளைக் கட்டி வழங்கி மாதிரிக் கிராமம் என பெயர் சூட்டும்! ஆனால் பாதி வீடுகளில் மக்கள் வசிப்பதில்லை. மல்லாவி ஐயங்கன்குளம் என நினைக்கிறேன் சந்தைக்கென கட்டிய கட்டிடத்தில் மாடுகள் படுத்துறங்குகின்றன!
    • ஆறு மாதங்களுக்கு முன்னர் bbc யில் இந்த புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை வந்ததும் இதை வாங்கிப் படித்தேன். தமிழில் இப்போது வந்திருகின்றது என்று அறிகின்றேன். நல்ல புத்தகம். 
    • நன்றி  அண்மையில் நான் ஒரு கட்டுரை ஒன்றை வாசித்தேன். Noyal நடேசன் எழுதியது. உங்கள் கேள்விக்கு அது பதிலாக அமையலாம்.   // சிங்கள மக்கள் விடயத்தில்  உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது  2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை . அதேபோல் அவர்கள்  தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று  எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது.  அதையும் பொய் எனச் சொல்லமுடியாது. தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள்.  அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது  பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே.  பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் . தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில்  பணயக் கைதிகளாக முடியும். இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய  தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது.  கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன.   75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட  இலங்கையில் சமாதானம்,  இனங்களின்  பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான்  உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல்  இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல்  இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள். தமிழர்களுக்கு,  அரசியல்வாதிகளின்  மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது.  ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது. தற்பொழுது நமக்கு     தேவையான விடயம் பேர்டல்ட்  பிரட்  (Bertolt Brecht)  நாடகமுறையே. உணர்ச்சிவசப்படாத சிந்திக்கும் அரசியல். மற்றும் நேர்மையான  அரசியல்வாதிகளின் தேவை.   மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான்  தொடரும் .  இலங்கை மீதோ அல்லது   சிங்கள மக்கள் மீதோ  உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால்,   இலங்கையை ஒரு ஏமன்  அல்லது   சோமாலியாவாக்க முடியும்.//
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.