Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய றோலர் படகுளை ஏலம் விடும் நடவடிக்கை - இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு - அன்னராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.நியூட்டன்)

 

IMG-20220124-WA0009.jpg

 

இந்திய றோலர் படகுளை ஏலம் விடும் நடவடிக்கையானது இந்திய இலங்கை மீனவர்களின் நிண்டகால பிரச்சினைக்கு தீர்வை நோக்கி பயணிக்கும் ஓர் முயற்சியாகும் இத்தகைய நடவடிக்கை தொடரவேண்டும் எனவும், உள்ளூர் வெளியூர் சட்டவிரோத தொழில்முறைகள் முற்று முழுதாக தடை செய்யும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார். 

 

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய மீனவர்களின் அத்துமிறிய தொழில் முறையால் வடபகுதியின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எங்களுடைய அன்றாட தொழில்களும், கடற்தொழில் உபகரணங்களும்  சேதமாக்கப்பட்டு எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தொடர்சியான போராட்டங்களை முன்னேடுத்து வந்த நிலையில், எல்லைதாண்டிய மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டு,  சட்டநவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், கைது நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட றோலர் படகுகள் மற்றும் நாட்டுபடகுகள் ஏலம் விடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத்தகைய நடவடிக்கைகள்  கடற்தொழில் அமைச்சின்  காலம் கடந்தவையாக இருந்தாலும் நாங்கள் இதனை வரவேற்கின்றோம் .தொடர்ந்தும் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். 

அது மட்டுமன்றி உள்ளூரிலும் சட்டவிரோதமாக றோலர் தொழில்கள் இடம்பெற்று வருகிறது. இதனாலும் கடல்வளங்கள் அழிக்கப்படுகிறது. இதற்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கெள்ளப்படவேண்டும்.  உள்ளூர் வெளியூர் என்றில்லாமல் கடல்வளங்களை அழிக்கின்ற மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.

இலங்கையில் கடற்தொழில் முறைமை தொடர்பில் உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தபட வேண்டும்.வடக்கு  மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் வரும்வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

இந்திய றோலர் படகுளை ஏலம் விடும் நடவடிக்கை - இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு - அன்னராசா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

இலங்கையில் கடற்தொழில் முறைமை தொடர்பில் உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தபட வேண்டும்.வடக்கு  மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் வரும்வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

தமிழ்நாட்டு மீனவர் சங்கத் தலைவரும், யாழ் மாவட்ட மீனவர் சங்கத் தலைவரும் இணைந்து தங்கள் மீனவர்களையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஏற்பாட்டை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வழி ஏற்படலாம். சட்டங்களை இயற்றி அவற்றை இருட்டறையில் வைத்துப் பாதுகாக்கும் இந்திய, இலங்கை அரசுகளிடம் அந்தச் சட்டங்களை நடைமுறைப் படுத்துங்கள் என்றால்... சட்டங்கள் இருக்கும் இருட்டறையிலுள்ள விசப் பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து உயிரையம் கொடுக்கவேண்டி வரலாம். அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😲   

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

தமிழ்நாட்டு மீனவர் சங்கத் தலைவரும், யாழ் மாவட்ட மீனவர் சங்கத் தலைவரும் இணைந்து தங்கள் மீனவர்களையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஏற்பாட்டை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வழி ஏற்படலாம். சட்டங்களை இயற்றி அவற்றை இருட்டறையில் வைத்துப் பாதுகாக்கும் இந்திய, இலங்கை அரசுகளிடம் அந்தச் சட்டங்களை நடைமுறைப் படுத்துங்கள் என்றால்... சட்டங்கள் இருக்கும் இருட்டறையிலுள்ள விசப் பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து உயிரையம் கொடுக்கவேண்டி வரலாம். அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😲   

ஒரு லட்சம் சங்கங்கள்  இருக்கு

பரவாயில்லையா அண்ணா???😭

1 hour ago, Paanch said:

தமிழ்நாட்டு மீனவர் சங்கத் தலைவரும், யாழ் மாவட்ட மீனவர் சங்கத் தலைவரும் இணைந்து தங்கள் மீனவர்களையும் இணைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும் ஏற்பாட்டை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர வழி ஏற்படலாம். சட்டங்களை இயற்றி அவற்றை இருட்டறையில் வைத்துப் பாதுகாக்கும் இந்திய, இலங்கை அரசுகளிடம் அந்தச் சட்டங்களை நடைமுறைப் படுத்துங்கள் என்றால்... சட்டங்கள் இருக்கும் இருட்டறையிலுள்ள விசப் பூச்சிகளுக்கு இரத்ததானம் செய்து உயிரையம் கொடுக்கவேண்டி வரலாம். அதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.😲   

இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளும் வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளும் 2016 இல் சந்தித்தனர். அதில் இந்திய மீன்வர்கள் இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு மூன்று வருட காலவகாசம் கோரி அதனை வடபகுதி மீன்வர்கள் வழங்கியிருந்தனர்.

இன்று 2022... 

6 வருடங்கள் கடந்த பின்னரும் இந்திய கடற்கொள்ளையர்கள் சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்ட அதே இழுவை படகுகளை கொண்டு எம் வடபகுதி மீன்வளத்தை கொள்ளையடிக்கின்றனர். கேரளாப் பக்கம் போனால் அடி வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று அந்தப்பக்கம் எட்டியும் பார்க்காமல், போரால் சிதைவுற்ற எம் மீன்வர்களின் வளத்தை வந்து சூறையாடுகின்றனர்,
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளும் வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளும் 2016 இல் சந்தித்தனர். அதில் இந்திய மீன்வர்கள் இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு மூன்று வருட காலவகாசம் கோரி அதனை வடபகுதி மீன்வர்கள் வழங்கியிருந்தனர்.

இன்று 2022... 

6 வருடங்கள் கடந்த பின்னரும் இந்திய கடற்கொள்ளையர்கள் சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்ட அதே இழுவை படகுகளை கொண்டு எம் வடபகுதி மீன்வளத்தை கொள்ளையடிக்கின்றனர். கேரளாப் பக்கம் போனால் அடி வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று அந்தப்பக்கம் எட்டியும் பார்க்காமல், போரால் சிதைவுற்ற எம் மீன்வர்களின் வளத்தை வந்து சூறையாடுகின்றனர்,
 

விபரம் அறியத்தந்தமைக்கு நன்றி நிழலி அவர்களே.!🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு லட்சம் சங்கங்கள்  இருக்கு

பரவாயில்லையா அண்ணா???😭

எண்ணுக்கணக்கற்ற கடவுள்களை உருவாக்கி எங்களை ஏமாற்றி, எமது உழைப்பையும் உறுஞ்சுவோரை ஏற்றுக்கொண்ட எங்களுக்கு, இது பரவாயில்லைப் போல் தெரிகிறதே தம்பி.!!😁

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும்: மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

spacer.png

இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது குறித்தும், ஜனவரி 23ம் திகதி இலங்கை நாட்டினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடிதத்தில், “இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வருகிற 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்துள்ள செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.

இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக்குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும் விற்பனை வருவாயை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அவர்களின் இலங்கை பயண விபரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப்படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும் தமிழக அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாதிக்கும்.

மேலும் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் படகுகளை எவ்வித சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை ஏலம்விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை திரும்பப்பெறவும் இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கொண்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறுப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த சூழ்நிலையில், 2018-ம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுது பார்க்க இயலாதென கருதப்படும் 125 தமிழக படகுகளை ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் 2018-ம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
 

 

https://athavannews.com/2022/1263817

 

4 hours ago, கிருபன் said:

 

அதன் அடிப்படையில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும் விற்பனை வருவாயை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அவர்களின் இலங்கை பயண விபரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கொள்ளை அடித்த பணத்தை மீண்டும் கொள்ளையர்களிடமே திருப்பி தரவேண்டும் என்ரு ஸ்டாலின் கோரிக்கை விடுக்கின்றாரம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடுவதை நிறுத்தவேண்டும் - சுரேஸ் பிறேமசந்திரன்

( எம்.நியூட்டன்)

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடுவதை நிறுத்தவேண்டும் தமிழக மக்கள், இலங்கை தமிழருக்கு பாதுகாப்பாக உள்ளனர் எனவே  தமிழக மக்களையும், இலங்கை தமிழ்மக்களையும் மோதவிடும் செயலை செய்ய வேண்டாம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்தார்.

IMG_20220126_135804.jpg

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடப்போவதாக  ஏற்கனவே கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.  இந்த வள்ளங்கள்  எல்லை மீறி வந்த படகுகளாக இருக்கலாம். சட்டவிரோதமாக வந்தவையாக இருக்கலாம், ஆனால் தமிழகம் என்பது ஈழத் தமிழ் மக்களுடைய பாதுகாவலனாக இருக்கக் கூடிய ஒரு பிரதேசம், இரு நாடாக உள்ளது. 

இது இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு பலம்,  தற்போது கூட  அங்கு தங்கியுள்ள இலங்கைத் தமிழ்  மக்களுக்கு பல்வேறு பட்ட திட்டங்களை முன்னேடுத்துள்ளார்கள். அவ்வாறான சூழ்நிலையில் அவர்களின் படகுகளை ஏலத்தில் விடுவது நல்லதல்ல தற்போது இப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

 இலங்கை அரசாங்கம் எம்மிடம் கடன் பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ள நிலையில் எமது படகுகளை ஏலத்தி விடப்போகிறார்கள் என்று  ஊடகங்களில், சமூகவலைத்தலங்களில் செய்திகள்  வெளிவந்த வண்ணமுள்ளது. ஆகவே இலங்கைத் தமிழ்மக்கள் இன்னும் தமக்கான நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் சமூகம். எங்களின் போராட்டம் முடிவடையவில்லை, போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளது. மீனவ மக்களுக்கு  பிரச்சினைகள் உள்ளது, அதை மறுக்க முடியாது. 

இந்த வகையில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது ஏலத்தில் உள்ள படகுகள் நல்ல நிலையிலா அல்லது பழுதடைந்த நிலையிலா இருக்கின்றது என்பது தெரியாது தற்போது தமிழக அரசுக்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளது 

இதனை ஏலத்தில் விடுவதை கைவிடப்படவேண்டும் இதனை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும். தற்போதைய  கடற்றொழில் அமைச்சர் இதனை  கவனத்திற் கொண்டு  செயற்படவேண்டும்  அவரும் முன்னாள் போராளியாக இருந்தவர் அவருக்கும் தமிழக மக்கள் எவ்வாறு இலங்கை தமிழ்மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது தெரியும்.

தமிழ்தாடு எத்தகைய பாதுகாப்பாக இலங்கை தமிழ்மக்களுக்கு உள்ளது என்பது தெரியும்.  எனவே  இந்த படகுகளை ஏலத்தில் விடுவதை நிறுத்த வேண்டும்.   தமிழக மக்கள் மத்தியில் கசப்பான எண்ணங்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். கடற்தொழில் அமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.

பறிமுதல் செய்த இந்திய படகுகளை  ஏலத்தில் விடுவதை நிறுத்தவேண்டும் - சுரேஸ் பிறேமசந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் பிரச்சனையில் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகின்றனர்

January 26, 2022
spacer.png

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலின் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த  சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 
இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால்,  சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு  அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்ராலின், சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில்  கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங் கொண்டவை எனவும் தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2022/172319

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மீனவர்கள் பிரச்சனையில் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகின்றனர்

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழினத்தை அழித்துவரும் சிங்கள இனத்திடமிருந்து விடுபடுவதற்காக தமிழினம் போராட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் சுயநலம் தேடி இன்று சிங்கள அரசில் அமைச்சராகவுள்ள உங்களை நீங்களே மறந்ததென்ன.🤔  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.