Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வங்குரோத்து நிலையை அடையும்! - Financial Times தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலர்களே இருக்கிறது.

இந்நிலையில், இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடையும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அடுத்த பெரும் சவால் எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதனை செலுத்தத் தவறினால், கோவிட் பரவலையடுத்து கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுரினாம், பெலிஸ், ஜாம்பியா மற்றும் ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கையும் இணையும்.      

https://tamilwin.com/article/sri-lanka-reaches-bankruptcy-status-1644524816?itm_source=parsely-detail

https://www.ft.com/content/21217f9e-9c4c-4483-968c-25433e62d9c0

26 minutes ago, பெருமாள் said:

இலங்கை அரசாங்கத்தின் அடுத்த பெரும் சவால் எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

/

இறையாண்மை முறி என்றால் என்ன, ஏன் அதனை கட்ட வேண்டும் என எவருக்காவது தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

இறையாண்மை முறி என்றால் என்ன, ஏன் அதனை கட்ட வேண்டும் என எவருக்காவது தெரியுமா?

@ஏராளன்  போன்றவர்கள் இத்துறையில் வல்லவர்கள் இப்படியான கடன் முறி பத்திரங்கள் அதிகளவில் இறுதிக்கட்ட போரின் மூன்றுவருடங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் விற்கப்பட்டன ஒன் மில்லியன் அளவுக்கு கடன் வாங்கியுள்ளேன் வட்டியுடன் முதலை திருப்பி கொடுப்பதாகும் என்று இலங்கை அரசு அந்த துண்டை விற்கும் அது பல மில்லியனர்களின் கைகளில் கைமாறி கொண்டு இருக்கும் அதிக விளக்கம் என்னிடமும் இல்லை ஆனால் FT யில் போட்ட பந்தி இணைக்கிறேன் பாருங்கள் .

Many investors think Sri Lanka will become the latest to default on its sovereign debt during the pandemic, after the likes of Belize, Zambia and Ecuador. The country has almost $7bn in debt payments due this year but less than $3bn of foreign reserves.

இந்தவருடமுடிவுக்கு முன் 7 பில்லியன் டொலர் கவனிக்க மில்லியன் அல்ல பில்லியன் திருப்பி கொடுக்கணும் ஆனால் கையிருப்பில் இருப்பதோ 3 பில்லியன் இந்த கைருப்பில்தான் அத்தியவசிய மருந்து இத்யாதிகள் .

The lack of foreign currency reserves has caused power cuts and shortages of imports, including fuel and milk powder, which have exacerbated double-digit inflation.

இந்த பணவீக்கம் நெல்லியடியில் லண்டன் புது 50 பவுன் நோட்டுக்கு 400 கொடுக்கும் அளவுக்கு பெருத்துள்ளது 10 ஆயிரம் லண்டன் 50 பவுன் தாள் புதுசு கொண்டுபோனால் குறைந்த பட்சம் 3ஆயிரம் பவுன் லாபம் காட்டும் அளவுக்கு நிலைமை மோசம் .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இந்தியாவிடம் இருந்தும் பீஜிங்கில் இருந்தும் சமீபத்தில்  வாங்கப்படும் கடன்களை dollar-denominated debt என்கிறார்கள் இது என்னும் ஆபத்தானது பல நாடுகளை நிர்மூலம் செய்த  ஒன்று என்கிறார்கள்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

அத்துடன் இந்தியாவிடம் இருந்தும் பீஜிங்கில் இருந்தும் சமீபத்தில்  வாங்கப்படும் கடன்களை dollar-denominated debt என்கிறார்கள் இது என்னும் ஆபத்தானது பல நாடுகளை நிர்மூலம் செய்த  ஒன்று என்கிறார்கள்.

அப்ப இலங்கையில் பங்கு பிரிப்பதில் சண்டை வரும் என்கிறியள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இறையாண்மை முறி என்றால் என்ன, ஏன் அதனை கட்ட வேண்டும் என எவருக்காவது தெரியுமா?

Sovereign Bond என்பதைத் தான் இவ்வாறு முழி பெயர்த்துள்ளார்கள் போல உள்ளது…!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

@ஏராளன்  போன்றவர்கள் இத்துறையில் வல்லவர்கள் இப்படியான கடன் முறி பத்திரங்கள் அதிகளவில் இறுதிக்கட்ட போரின் மூன்றுவருடங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் விற்கப்பட்டன ஒன் மில்லியன் அளவுக்கு கடன் வாங்கியுள்ளேன் வட்டியுடன் முதலை திருப்பி கொடுப்பதாகும் என்று இலங்கை அரசு அந்த துண்டை விற்கும் அது பல மில்லியனர்களின் கைகளில் கைமாறி கொண்டு இருக்கும் அதிக விளக்கம் என்னிடமும் இல்லை ஆனால் FT யில் போட்ட பந்தி இணைக்கிறேன் பாருங்கள் .

Many investors think Sri Lanka will become the latest to default on its sovereign debt during the pandemic, after the likes of Belize, Zambia and Ecuador. The country has almost $7bn in debt payments due this year but less than $3bn of foreign reserves.

இந்தவருடமுடிவுக்கு முன் 7 பில்லியன் டொலர் கவனிக்க மில்லியன் அல்ல பில்லியன் திருப்பி கொடுக்கணும் ஆனால் கையிருப்பில் இருப்பதோ 3 பில்லியன் இந்த கைருப்பில்தான் அத்தியவசிய மருந்து இத்யாதிகள் .

The lack of foreign currency reserves has caused power cuts and shortages of imports, including fuel and milk powder, which have exacerbated double-digit inflation.

இந்த பணவீக்கம் நெல்லியடியில் லண்டன் புது 50 பவுன் நோட்டுக்கு 400 கொடுக்கும் அளவுக்கு பெருத்துள்ளது 10 ஆயிரம் லண்டன் 50 பவுன் தாள் புதுசு கொண்டுபோனால் குறைந்த பட்சம் 3ஆயிரம் பவுன் லாபம் காட்டும் அளவுக்கு நிலைமை மோசம் .

சத்தியமா எனக்கு ஒன்றும் தெரியாது.
கடஞ்சா, வசி, கோசான்சே இவர்களை கேட்டால் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.