Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைய கப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

by கதிர்

 

 

கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைய கப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொக்கிளாய் பாட சாலை முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் புள்ளியான கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்க்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வளவளத் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் நிலையில், தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்துவருகின்றது.

தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைய கப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

13 வேண்டுமா வேண்டாமா என்று அடிபட்டுக்கொள்கின்றவர்கள் இந்த தாயக பிரதேசத்தின் அதி முக்கிய நிலம் (தலைவரின் மொழியில் சொல்வது என்றால் 'இதய பூமி') பறி போவதற்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் மக்களை அணி திரட்டி போராட்டங்களை காத்திரமாக முன்னெடுக்கலாமே... ஆனால் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்.

யாழில் இணைக்கப்படும் பதிவுகளில் இப்படியான நில அபகரிப்பு தொடர்பான பதிவுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையான பார்வையாளர்களையும் கருத்தாடல்களையும் தான் கொண்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

யாழில் இணைக்கப்படும் பதிவுகளில் இப்படியான நில அபகரிப்பு தொடர்பான பதிவுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையான பார்வையாளர்களையும் கருத்தாடல்களையும் தான் கொண்டிருக்கும். 

எல்லா திரிகளையும் வாசிக்க எல்லாருக்கும் விருப்பம் இருப்பினும், நேரம் கிடைப்பது இல்லை. அப்படி வாசித்தாலும் பின்னூட்டம் இட தோன்றுவதும் இல்லை. அப்படி தோன்றினாலும் உடனே  பின்னூட்டம் இடுவதும் இல்லை.

15 minutes ago, MEERA said:

எல்லா திரிகளையும் வாசிக்க எல்லாருக்கும் விருப்பம் இருப்பினும், நேரம் கிடைப்பது இல்லை. அப்படி வாசித்தாலும் பின்னூட்டம் இட தோன்றுவதும் இல்லை. அப்படி தோன்றினாலும் உடனே  பின்னூட்டம் இடுவதும் இல்லை.

உங்களின் காத்திரமான பதிலுக்கு மிக்க நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

யாழில் இணைக்கப்படும் பதிவுகளில் இப்படியான நில அபகரிப்பு தொடர்பான பதிவுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையான பார்வையாளர்களையும் கருத்தாடல்களையும் தான் கொண்டிருக்கும். 

 

இப்படியான  திரிகளில்  போராட்டம்  பற்றி எழுதினால்  நீங்க  போய் செய்வது  தானே  என்பார்கள்?

இருக்கும்  மக்களையாவது  நிம்மதியாக  விடுங்கள்  என்பார்கள்

ஆனாலும் நான்  தாண்டிச்செல்வதற்கு  காரணம்   அதிஉட்சவிரக்தி....

இனி  யாரால  எம்மண்ணை காப்பாற்றமுடியப்போகிறது?????

  • கருத்துக்கள உறவுகள்

7-AA6-FF70-7914-4-FA0-B819-9-AFF25-E98-C

இனி மக்களின் கைகளில்..,

  • கருத்துக்கள உறவுகள்

நமது எல்லைகள் மாற்றியமைத்து, குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டு, எமது பூர்வீக நிலங்கள் திட்டமிடப்பட்டு காலத்துக்கு காலம் அபகரிப்படுகின்றன என்பதை ஆதாரத்தோடு சர்வதேசத்துக்கு தெரிவிக்க வேண்டும். நம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் அறிக்கை விடவுமே தெரியப்பட்டவர்கள். புலம் பெயர்ந்தவர்கள் தகுந்த சர்வதேச நிறுவனத்திற்க்கு அறிவிக்கவும். இது நீங்கள் உங்கள் இனத்துக்கு செய்யும் உச்சகட்ட உதவி. 

  • கருத்துக்கள உறவுகள்

1000 ஏக்கர் பூர்வீக நில அபகரிப்பை உடனடியாக நிறுத்துக – முல்லையில் போராட்டம்!

February 12, 2022

கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் சுமார் 1000 ஏக்கர்  பூர்வீக நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி  கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

spacer.png

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில்  12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின்  சுமார் 1000 ஏக்கர்  பூர்வீக நிலங்கள் இவ்வாறு அபகரிக்க  நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும்,அரச நிறுவனங்களின் திட்டமிட்ட ஆக்கிரமினாலும் தமிழ் நிலங்கள்  கேள்விக்குள்ளாகி வரும் நிலையில் இதற்கு மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

spacer.png

எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பததை கண்டித்தும் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும்  கொக்கிளாய் கிராம மக்களால் இன்று (12.02.22)  கொக்கிளாய் பாடசாலை முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 குறித்த  போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டுள்ளனர்.

 

image_25aec80160.jpg?w=1320&is-pending-lhttps://globaltamilnews.net/2022/172952


 

 

  • கருத்துக்கள உறவுகள்

'கனிய மணல் அகழ்வு என்னும் போர்வையில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்காதே' - கொக்கிளாய் போராட்டம்

கே .குமணன்

கனிய மணல் கூட்டுதாபனத்தால்  இல்மனையிட் அகழ்வுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான  கொக்கிளாய் தொடக்கம் செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் இன்று (12) கொக்கிளாய் இல்மனைட் கூட்டுத்தாபன பொறித்தொகுதிக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG_5997.jpg

கடந்த 2018 ஆம் ஆண்டு கொக்கிளாய் கிராம மக்கள் 16 பேருக்கு  சொந்தமான  44 ஏக்கர் உறுதி காணிகள் மற்றும் அனுமதிப்பத்திர காணிகளை மக்களின் அனுமதியின்றி அபகரித்து வேலி அமைத்து கொக்கிளாய் இல்மனையிட் பொறித்தொகுதி (plant) அமைத்துள்ள கைத்தொழில் அமைச்சின் கீழான இலங்கை கனிப்பொருள் மணல்  லிமிடட் அந்த செயற் திட்டத்தை விஸ்தரிக்கும் நோக்கோடு கொக்கிளாயிலிருந்து செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கையை கடந்த சிலவாரங்களாக இரகசியமாக முன்னறிவித்தல் எதுவுமின்றி முன்னெடுத்து வருகின்றது.  

IMG_5991.jpg

இதன் முதற்கட்டமாக கொக்கிளாய் கிராமத்தில் கடந்த காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் மேட்டு காணிகள், குடியிருப்பு நிலங்கள் சேமக்காலை, குளம் போன்றவற்றை உள்ளடக்கி அளவீடுகளை மேற்கொண்டு எல்லைப்படுத்தும் நடவடிக்கையை நில அளவை திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.

IMG_5978.jpg 

இந்த நில அளவை நடவடிக்கை தற்போது கரையோரமாக கொக்குத்தொடுவாய் கிராமாம் வரை இடம்பெற்றுள்ளதோடு எதிர்காலத்தில் கடற் கரையோரத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அகலமும் 12 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட தமிழ்  மக்களின் பூர்வீக நிலங்களை உள்ளடக்கி விஸ்தரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த காணி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அளவீடு செய்யப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறுகோரியும் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படவிருக்கும் இல்மனையிட் அகழ்வு திட்டத்தை நிறுத்துமாறுகோரியும் கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

IMG_5976.jpg

கொக்கிளாய் பாடசாலை முன்பாக ஆரம்பித்த இந்த எதிர்ப்பு போராட்டம் அபகரிக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்மனையிட் பொறித்தொகுதிவரை சென்று அங்கு எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம் ,வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_1976.jpg

இந்த போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , கொக்கிளாய் பங்குத்தந்தையர்கள் , பொத்துவில் தொடக்கி பொலிகண்டி பேரெழுச்சி இயக்கத்தை சேர்ந்த வேலன் சுவாமி பொதுமக்கள் ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஒளிப்படக்கருவி தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தி போராட்டக்காரரை புகைப்படம் எடுக்கும் செயற் பாட்டில் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தபட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

IMG_1972.jpg

 

 

https://www.virakesari.lk/article/122365

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.