Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தி

வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வதைக் காண்பர்.

ஒருபுறம் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத முனையி லும் வெடித்த போராட்டக் களங்களாகவும், மறுபுறம் அமைதி முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற சமாதான அரங் குகளாகவும் இரு முனைகளில் அந்த வரலாற்றுத்தடம் நகர்ந்து சென்றிருக்கின்றது.

அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளோடு தமிழர் நடத்திய அமைதிப் பேச்சுகள், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கைத்துரோக நாடகங்களின் அத்தியாயங்களாகக் கழிந்திருக்கின்றன.

அத்தகைய பெரும் வரலாற்றுத் துரோகத்தின் முக்கிய கட்டம் அரங்கேறியதன் ஐம்பதாவது ஆண்டை இன்று நாம் பூர்த்தி செய்கின் றோம்.

ஆம். பண்டா செல்வா ஒப்பந்தம் என்ற நம்பிக்கையைத் தமிழருக்கு சிங்களம் வழங்கி இன்று சரியாக ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அன்றிலிருந்து சரியாக எட்டரை மாதத்தில் அந்த ஒப்பந்தம் சிங்களத் தலைமையினால் கையொப்பமிட்டு உறுதியளித்த அப்போதைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண் டாரநாயக்காவினாலேயே கிழித்து வீசப்பட்டது. ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்ட சரித்திரத்தில் மீண்டும் ஒரு தடவை பேரினவாதிகளினால் அவர்கள் ஏமாளிகளாக்கப்பட்டனர்.

பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகி சரியாக அரைநூற் றாண்டு பூர்த்தியாகும் இச்சமயத்தில் அந்த வரலாற்றுப் பின்னணியை ஒரு தடவை மீட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

இந்த அரசியல் குளறுபடிகளுக்கு எல்லாம் மூலகாரணரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தமது கொள்கை நிலைப்பாட்டில் அவ்வப்போது குத்துக்கரணம் அடிக்கும் சராசரி மூன்றாந் தர அரசியல்வாதி போன்றே நடந்துகொண்டவர். இலங்கைத்தீவு இத்துணை மோசமான கட்டத்தில் தவிப்பதற்கு மூலகர்த்தா அவரே என்றால் அது மிகையாகாது.

1925, 26 களில் இளம் அரசியல்வாதியாக பொதுவாழ்க்கைக்குள் நுழைந்த சமயம் இலங்கையில் சமரசம் பேணப்படுவதற்கு சமஷ்டியே உகந்த உயர்ந்த வழிமுறை எனத் துணிந்தும், வலுவாகவும் குரல் எழுப்பிய பண்டா, முப்பது ஆண்டுகள் கழித்துத் தாம் ஆட்சித் தலைவராக வந்தபோது பௌத்த சிங்களப் பேரி னவாத மாயையின் பிடிக்குள் முற்றாகச் சிக்குண்டு, அதற்கு சர ணாகதி அடைந்து, தாம் வலியுறுத்திய சமஷ்டிக் கோட்பாட்டைத் தாமே நிராகரித்தார். ஆட்சியைப் பிடிப்பதற்கு வசதியாக இனவாதத்தை அப்போது அவர் கையிலெடுத்தார். நாடு முழுவதிலும் சிங்களம் மட்டுமே அரச மொழி என்ற சட்டத்தை 24 மணி நேரத் தில் கொண்டுவருவேன் என்ற அவரது பேரினவாதக் கூச்சல் தென்னிலங்கையில் நன்கு எடுபட்டது. 1956 தேர்தலில் அவரது தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அதனால் தெற்கில் வெற்றிவாகை சூடியது.

அத்தேர்தலில் தென்னிலங்கை ஒருபுறமாகவும் வடக்கு கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழர் தாயகம் மறுபுறமாகவும் இனமுரண்பாட்டு அடிப்படையில் துருவமயப்பட, தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலுக்குக் குரல் எழுப்பிய தமிழரசுக்கட்சி பெரு வெற்றியீட்டியது.

ஆட்சிக்கு வந்த பண்டா அரசு சிங்கள மட்டும் சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அதற்குப் பதிலடியாகத் தமிழரசுக்கட்சி தமிழ் இனம் தன்னாட்சியுடன் இயங்கக் கூடியதான சமஷ்டி ஆட்சி வடிவத்தைத் தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்தக் கோரி வெகுசனப் போராட்டங்களைப் பரவலாக நடத்துவதற்குப் பொங்கி எழுந்தது.

தமிழ் மக்களின் தன்னாட்சி சமஷ்டி வடிவக் கோரிக்கைக்கு 1956 பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் தெளிவான ஆணை கிடைத்ததால் வீறுகொண்ட தமிழரசுக்கட்சி அதற்காகத் தனது சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் சட்டமறுப்பு இயக்கங்களையும் தீவிரப்படுத்தத் தீர்மானித்தது.

இவ்வாறு தமிழினம் அரசியல் தன்னாட்சிக்கான உரிமை யைக் கோரி தமிழ்த் தேசிய உணர்வோடு எழுச்சி பெற்றமை பண் டாரநாயக்காவின் சிங்கள ஆட்சிப்பீடத்தை அதிரவைத்தது. மடை திறந்த வெள்ளமாக பீறிட்டுப் பாய்ந்து சீறி வரும் தமிழரின் எழுச்சிமிகு வெகுசனப் போராட்டத்தை அரண்கட்டி, மறிக்க எண்ணிய பண்டாரநாயக்கா அதற்காகத் தந்திரம் செய்தார். தமிழர் ஏமாற்று நாடகம் அரங்கேறியது.

தமிழர் தந்தை செல்வநாயகத்துடன் பிரதமர் பண்டாரநாயக்கா நேரடியாகப் பேசினார். சமரச உடன்பாட்டுக்கான இறுதிப் பேச்சுகள் 1957 ஜூலை 25 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின. அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு அதாவது இற்றைக்கு சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஜூலை 26 ஆம் திகதி இணக்கம் எட்டப்பட்டது.

முழு சமஷ்டி வடிவம் இல்லாவிட்டாலும் பிரதேச மன்றங்கள் ஊடாகத் தமிழருக்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரங்களை வழங்கவும், தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும் இணங்கித் தந்தை செல்வாவுடன் ஒப்பமிட்டார் பண்டா. ஆனால் அதன்பின் நடந்தது என்ன?

தமிழருக்கு சற்றேனும் அதிகாரம் பகிரப்பட வாய்ப்பு ஏற்பட்டதைக் கண்டு சிங்களம் பொங்கிக் கொதித்து எழுந்தது. இனவாத சக்திகள் பேரெதிர்ப்புக்காக ஒன்று திரண்டன. ஜே. ஆர். ஜெய வர்த்தனா தலைமையில் மேற்படி ஒப்பந்தத்துக்கு எதிராக "கீர்த்தி மிக்க' கண்டியை நோக்கிய கால்நடை ஊர்வலம் நடத்தப்பட் டது. அதனால் தூண்டப்பட்டு, எழுச்சி பெற்ற சிங்களப் பேரினவாதம் 1958, ஏப்ரல் 9 ஆம் திகதி பிரதமர் பண்டார நாயக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டது. சுமார் இருநூறு பிக்குகள் உட்பட ஐநூறு இனவெறி ஆதரவாளர்களைக் கொண்ட அந்தப் பேரணி பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிரதியை சவப் பெட்டி ஒன்றில் வைத்து இறுதி ஊர்வலமாக பண்டாவின் இல் லம்வரை கொண்டு சென்றது. அங்கு வைத்து சவப்பெட்டித் தக னத்தை உணர்ச்சி ஆரவாரத்தோடு அது நிறைவேற்றியது.

அந்தப் பேரினவாதக் காட்டுக்கூச்சலுக்கு அடிமையாகி, அடிபணிந்த பிரதமர் பண்டாரநாயக்கா, அந்தக் கூட்டத்தின் முன்னால் வந்து நின்று, பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஒரு பிரதியைக் கிழித்தெறிந்து ஒப்பந்தம் செத்துவிட்டது எனப் பிரகடனம் செய்தார்.

சிங்களத் தலைமை அன்று புரிந்த இந்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமே இத்தீவில் இன ஒருமைப்பாட்டுக்கும் தேசிய நல்லிணக்கத்துக்கும் நிரந்தரமாகவே சாவுமணி அடித்தது. தமிழர் தேசம், சிங்களவர் தேசம் ஆகியவற்றுக்கு இடையே நிரந்தரப் பகை உண்டாக அதுவே காரணமாயிற்று.

பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட கையோடு, அதனால் பீறிட்டு எழுந்த பேரினவாத உணர்வு பெரும் வன்முறைக் கலவரமாகத் தமிழர் மீது பொறிந்தது.

அதன் தொடர் அங்கங்களே இப்போது பெரும் யுத்தமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

-உதயன்

இதை எல்லாம் வச்சு இப்போ என்ன பண்ணுறது? தமிழ் மக்களுக்கு உதவாத ஒப்பந்ததை வைத்து?

இந்த ஒப்பந்தம் ஐம்பது வருடங்களாக தமிழருக்கு இழைக்கப்படும் உரிமை மறுப்பிற்கான சாட்சியம்.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாவும் இல்லை செல்வாவும் இல்லை ஓப்பந்தம் இருந்து தான் என்ன இல்லாட்டி தான் என்ன :):o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறப்பு நாளை - பிறந்தநாளாகக் கொண்டாடுவர். இறப்பு நாளை நினைவுநாளாகக் நினைவு கொள்ளுவர். குறைப்பிரசவம், அல்லது பிறந்தப்பின் மரணித்தல் அல்லது நோயுடனேயே வாழ்ந்து மரணித்தல் என்பவற்றை அதிகம் நினைவில் கொள்ளுவதில்லை.

- ஈழத் தமிழர் தொடர்பான ஒப்பந்தங்களை எந்த வகையில் இணைப்பது?

- குற்றுயிருடன் உருவாகி மரணித்த ஒப்பந்தக்களுக்கு பிற்ந்தநாள் எப்படி? ஆனால் நினைவுகூறல் மட்டும் செய்யலாம்.

எல்லாமே பகிடியாகிப்போனவை

;)

புதிய ஒப்பந்தம் செய்து பிரச்சினையைத் தீருங்கோ என வலியுறுத்தும் உலகக் காவலர்களுக்கு இவற்றை விலாவாரியாகச் சொல்லிக் காட்டத்தான் வேண்டும்

:)

- நீடித்த ஆயுளுடன் நிலைக்கப்போகும் ஒப்பந்தம் இனிமேல்தான் உருவாகும் அது எல்லைப் பிரிப்பு தொடர்பானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை-இந்திய ஒப்பந்தமும் 29ந் தேதி 10ஆவது ஆண்டுவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கின்றது! :lol::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை-இந்திய ஒப்பந்தமும் 29ந் தேதி 10ஆவது ஆண்டுவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கின்றது! :lol::rolleyes:

20 வது ஆண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தில் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தம்

-என் .ஸ்ரீகாந்தா எம்.பி-

1957 ஆம் ஆண்டு ஆடி மாதம் 26 ஆம் திகதி அன்றைய இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக

  • கருத்துக்கள உறவுகள்

20 வது ஆண்டு

20 வருடம் போய்விட்டதா?? :unsure:

அரை நூற்றாண்டை பூர்த்தி செய்துள்ள பண்டா - செல்வா உடன்படிக்கை

[29 - July - 2007] [Font Size - A - A - A]

-பி.ரவிவர்மன்-

இலங்கையின் இன நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்காகவென உருவாக்கப்பட்ட பண்டா- செல்வா ஒப்பந்தம் கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை 50 வருடங்களைப் பூர்த்திசெய்திருக்கின்றது. இதனையிட்டு முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டோம்.

வ.திருநாவுக்கரசு-இடதுசாரி முன்னணி

பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் 50 ஆண்டு நிறைவுபெற்றுள்ள இன்றைய தருணத்தில் கடந்துவந்த 50 ஆண்டு காலப்பகுதியும் கறைபடிந்த இருண்ட யுகமாகவே கழிந்துள்ளது என்று இடதுசாரி முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வ.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 50 வருடங்கள் கழிந்துவிட்டன. அவ்வொப்பந்தமானது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு பாக்க இப்பவும் பண்டா-செல்வா ஒப்பந்தம் இருக்கிறமாதிரி எழுதியிருக்கு :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.