Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா.

Featured Replies

அந்த மைதானத்துக்கு போராளிகள் கரப்பந்தாட்டம் விளையாட வருவது வளமை... அண்றும் வந்திருந்தார்கள்... ஐந்து பேர் கொண்ட அணியாக சிங்கிள் சொட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்... பந்தின் வேகம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாய் அலைகிறது... அவர்கள் சாள்ஸ் அன்ரனி படையணி போராளிகள்.. மாவட்டரீதியாக பாரபட்சம் இல்லாமல் எல்லா மாவட்டத்தவரும் கலந்தே இருக்கிறார்கள்... பந்தின் வேகம் அதிகரித்து கிழே விழும் போதெல்லாம் தோல்வி உற்ற அணி வெளியேறி புது அணி உள்ளே நுளையும்... எனக்கும் கர பந்தாட்டம் எண்டால் உயிர்... என்னையும் ஒரு குழு அணியில் சேர்த்து இருந்தார்கள்.. வெளியேறும் அணிக்காகவும் எமது சந்தர்பத்துக்காகவும் காத்து இருக்கிறேன்... இது நடந்தது தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில்

ஏற்கனவே விளையாடி கொண்டு இருக்கும் அணி ஒண்றில் எல்லாருமே திருமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... என்ன மாதிரி அட்டகாசமாக விளையாடுகிறார்கள்... எங்களது அணிக்கு சந்தர்பம் அவர்களுக்கு எதிராக கிடைத்தது நாங்களும் ஏதோ வெற்றி வீரர்களை போல இறக்கினோம்.. முதலாவது சேவிஸ் எங்களுக்கு எதிராக போடப்போகிறார்கள்... தயார்.... நானும் பந்துக்காய் மிகவும் உசாராய் காத்திருக்க. பந்து கீர்..ர்ர் .... எண்டு வந்து எனக்கும் இன்னும் ஒருவருக்கும் இடையில் கீழே விழுகிறது... அவ்வளவு வேகமான சேவிஸை சத்தியமா நான் அப்பதான் முதல் முதலில் சந்தித்தேன்... எதிரணியில் பெரிய உயரம் இல்லாத சிரித்த முகத்துடன் கொஞ்சம் குண்டாக ஒருவர், அவர்தான் சேவிஸ் போட்டு இருக்கார்... இப்பிடியே விளையாடு போய் எப்பவுமே இலகுவில் தோற்க்காத எங்கட அணி வேகமாக மண்ணை கவ்வி வெளியிலை வந்துட்டுட்து வந்து தோல்விக்கு காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டினது வேற கதை...

எல்லா அணிகளையும் வீழ்த்தி வெற்றி வீரர்களாய் இருந்த அந்த திருமலையை சேர்ந்த போராளிகளை மலைப்போடு நான் பார்த்தாலும் அந்த அணிக்குள் இன்னும் சிறப்பாக விளையாடிய குறிப்பாக சேவிஸ் போட்டவரோடு சிலவார்த்தைகள் பேசவேணும் எண்ட ஒரு உள்ளுணர்வு... கிட்டப்போய் வணக்கம் அண்ணா என்கிறேன்... ஓ வணக்கம் எண்று தனது கையை கொடுக்கிறார் நான் என்னை அறிமுக படுத்த அவர் நான் "மாவளன்" என்கிறார்... சில விசாரிப்புக்களோடு அண்று பிரிந்து போகின்றோம்... சில நாட்கள் பயிற்சியின் இடைவேளையில் மீளவும் விளையாட்டுக்களுக்கு வருவார்கள்... அப்போது எல்லாம் மாவளனோடு சில வார்த்தை பேச்சோடு போகும்...

அண்று காலில் ஏற்ப்பட்ட சுளுக்கோ என்னவோ மாவளன் விளையாட வில்லை பார்வையாளராக இருக்கையில் அமர.. என்னையும் எனது அணியில் இருந்து கழட்டி விட்டார்கள்.... மாவளனுக்கு பக்கத்தில் போய் அமர்கிறேன்... என்ன விளையாட இல்லையோ நான் கேட்கிறேன்.. இல்லப்பா கால் சுழுக்கு ஏலாமல் கிடக்கு. அதான்... அவர் சொல்ல.. நீங்கள் எந்த ஊர் அண்ணா..?? வழமையாக போராளிகளிடம் நான் கேட்க்கிற கேள்விதான்.. " நான் கட்டபறிச்சான் திருமலை"... அவர் சொல்கிறார்..! எப்ப இயக்கத்துக்கு வந்தனீங்க..?? இது நான்... 90 கடைசியிலை என்ர அண்ணாவை ஆமி சுட்டு அடுத்த அடுத்த நாள்... அண்ணாவை ஆமி சுட்டதோ...???? ஆச்சரியமாக நான்.... ஓ நீங்கள் இன்னும் ஆமீட்டை வதை பட இல்லைபோல, அப்ப யாழ்ப்பாணம் புலிகள் கைகளில்... எனக்கு சிங்கள ஆமியின் வருகயும் அதன் கொடுமையும் இன்னும் புரிய இல்லை போல... அதாலை மற்றவர்களின் துயரம் கேள்விபடுகிறதோடை போயிடும்...

அப்ப உங்கட அப்பா அம்மா எல்லாம்... நான் கேட்க்க தன் வேதனையை யாருகாவது சொல்ல வேணும் எண்டு நினைச்சாரோ என்னவோ சொல்ல ஆரப்பிக்கிறார்...

நான் பதினொராவது வகுப்பு படிக்கும்போது ஒருநாள் சண்டை தொடங்கீட்டுது... அண்ணாவும் நானும் தான் வீட்டிலை பிள்ளைகள்.. "கமம்"தான் எங்கட வருமானம் தரும் தொழில் நிறைய காணிகள் ஊரிலை இருக்கு... போதுமான வருமானமும் இருக்கு... சண்டை தொடங்கினாப்பிறகு ஒருநாள் ஆமிக்காறர் ஊருக்கை வந்தாங்கள்...

வரும் போது உள்ளை நிண்ட சில போராளிகளோடை சின்ன சின்ன சண்டைகள் நடந்தது.. அதிலை சரியான கடுப்பிலை வந்தவங்கள் போல, கண்ட ஆக்களுக்கு எல்லாம் அடியும் உதயும் பஞ்சமில்லாமல் குடுத்து கொண்டு எங்கட காணிக்கையும் புகுந்திட்டான்... முன்னுக்கு அப்பாதான் நிண்டவர்... அவருக்கு துவக்கின் பின் பக்கத்தாலை ஒரு போடு அவருக்கு அருகிலேயே நிண்ட அண்ணாவை இரண்டுபேர் சேந்து தற தற எண்டு இளுக்க ஆரம்பிச்சிட்டான்... ஐயோ, ஐயோ.. அப்பா ,அப்பா எண்டு அண்ணா கத்த வீட்டுக்கை நிண்ட கண்ட நானும் அம்மாவும் முத்தத்துக்கு ஓடி வாறம்... ஆமிக்காறரை கண்டதும் நான் வாசலோடை நிண்டுட்டன்... அப்பதான் அண்ணாவை இளுக்க தொடங்குறாங்கள் அண்ணா அப்ப அம்மா என்னை காப்பாத்துங்கோ எண்டு கத்துறான் கத்த கத்த வீதிக்கு இளுத்து கொண்டு போக பின்னாலை அப்பா ஓடிப்போய் சிங்கள சிப்பாயின்ர காலை கட்டிப்பிடிச்சு கதறுகிறார்... சிங்களவன் எட்டி உதையுற்றானே தவிர இரங்கின மாதிரி தெரிய இல்லை.. அண்ணா அம்மா, அப்பா , எண்டு கத்தி முடிஞ்சு கடைசியிலை என்னை பாத்து குட்டி குட்டி எண்டு கத்துறது கேக்கும்போதே வெடி விழும் சத்தம் கேக்கிறது...! வெளிய போனால் என்னையும் சுட்டு போடுவாங்களோ எண்ட ஒரு உணர்விலை நான் அதிலையே நிண்டுட்டன்... அம்மா வின் கதறல் காதை கிளிக்குது.. சலாடின் ரக வாகனம் அப்ப இரையும் சத்தம் வீதியை கடக்க அப்பாவின் குரல் அனுங்கலாக கேக்குது....

நான் பின்பக்க காணிக்காலை ஓட ஆரம்பிக்க என்னையும் சுட்டு துரத்த தொடங்கீட்டாங்கள்... சூடு படாமல் தப்பினது பெரிய விசயம்... ஓடும்போதே நினைச்சிட்டன் இயக்கத்திலை சேரவேணும் எண்டு... ஒருமாதிரி காடுகளுக்கை திரிஞ்சு இயக்க அண்ணாமாரை சந்திச்சு பயிர்ச்சீக்கு போன்னான்... அதுக்கு பிறகுதான் கேள்விப்பட்டன் அடிவிழுந்து கீழே விளுந்து கிடந்த அப்பாவின் கால்களுக்கு மேலாலை சலாடின் வாகனத்தை விட்டு ஏத்தி இருக்கிறான் சிங்களவன்....

இந்த கதையை மாவளன் சொல்லி முடிக்கும்போது எனக்கு பல இரவுகளுக்கு நித்திரை வரப்போவதில்லை என்பது மட்டும் விளங்கியது...
அப்ப உங்கட அம்மா அப்பா இப்ப எங்கை...??? நான் கேட்க்க.. அப்பாவை அம்மா தான் பாத்து கொள்கிறா எண்று அரசியல் போராளிகள் சொன்னார்கள் என்க்கிறார் ... அம்மாவை கஸ்ரப்பட விட்டு நீங்கள் இயக்கத்துக்கு வந்தது பிழை இல்லையா...?? இடக்கு முடக்கான கேள்விதான் நான் கேட்க்கிறேன்... அனேகம் பேருக்கு இதுதான் முக்கிய பிரச்சினையே... என்னை கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தார் என்ன நினைத்தாரோ என் முதுகில் கையை வைத்து தட்டி கொண்டே சொன்னார்... " நான் அம்மாவையோடை இருந்து இருந்தால் என்னை காப்பாத்த அம்மா இன்னும் கஸ்ரப்பட்டு இருப்பா." அந்த உண்மை எனக்கு இப்போதும் உரைப்பது உண்டு...

இவ்வளவு சோகத்தை வச்சு கொண்டு எப்பிடி நீங்கள்சந்தோசமாய் இருக்கிற்றீங்கள்... இதைமாவளனிடம் இன்னும் ஒரு நாள் வினாவி இருந்தேன்.... அதுக்கு அவர் கவலை பட்டால் வருத்தம் தான் வரும் சந்தோசமாக இருந்தால்தான் பலமாய் இருக்கலாம்... அப்பதான் என்ர ஊரிலை இருந்து சிங்களவனை துரத்தலாம்.... என்னை உயிரோடை விட்ட பிழையை செய்த சிங்களவனுக்கு படிப்பீக்க வேணும்... மாவளன் சொன்னவை இப்பவும் எனது காதுக்கை நிக்கிறது...!

( "மேஜர் மாவளன் "1997ம் ஆண்டு கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்த படை மீதான வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார் எண்று கேள்விப்பட்டேன்)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ம். ஒவ்வொரு போரளியும், ஆயிரம் வேதனைகளையும் எண்ணங்களையும் சுமந்து நிற்கின்றான். மாவளன் போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள., பெண்களுக்குக் கிடைத்த வேதனையான வாழ்வு தான், அவர்களைப் போரா வைத்தது என்பதை உலகம் உணரவேண்டும்.

தலைவர் சொல்வது போன்று, " நாம் சாவதற்காக வாழவில்லை. வாழ்வதற்காகவே சாகின்றோம்." தமிழனுக்கு என்ன வருத்தமா? வீணாகச் சண்டை போட்டு மரணிக்க வேண்டுமென்று? தமிழனுக்கு வாழ்வதற்கான ஆதாரங்கள் தகர்க்கப்பட்டமையால் தான், அவர் போராவே வந்தான்.

நன்றி தல. போராட்டத்தில் கலந்த கடந்தகால வாழ்வை ஞாபகப்படுத்தியமைக்கு. இவ்வாறே ஒவ்வொரு போரளியின் உணர்வினையும் ஆவணப்படுத்த வேண்டும். முக்கியமாக லெப். கேணல் வீரமணி உங்களின் நண்பர் என்ற சொன்னதாக நினைவு. அவரைப் பற்றிய தகவல்களையும் எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் மாவளனின் குடும்பத்தில் ஏற்பட்ட சோகக் கதையினை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் தலா. மேஜர் மாவளவனுக்கு வீர அஞ்சலிகள்.

நன்றி தயா அண்ணா இதேபோன்ற ஒரு கதை பின்வருமாறு

ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது....

1986ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ரவிக்குமாரும் அவரது தம்பி அன்ரனியும் ஆற்றுக்கு குளிக்கச்சென்ற வேளை சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இருவரிடமும் கைத்துப்பாக்கி ஒன்றே இருந்தது. இராணுவம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்செல்லவும் உரிய சூழல் அங்கில்லை. உயிருடன் பிடிபட்டால் இராணுவத்தின் கொடுமைகள் எப்படி இருக்கும் என்று இருவருக்கும் தெரியும்.

இதற்கிடையில் தம்பி அன்ரனி தன்னைச் சுடுமாறு அண்ணனுக்கு கூறுகின்றான். ஒரு வயிற்றில் பிறந்து தான் தூக்கி வளர்த்த தம்பியை எப்படிச் சுடுவது, ஆனாலும் ரவிக்குமார் தேச நலனையே சிந்தித்தார்.

பகைவரிடம் பிடிபட்டு அழிய விரும்பவில்லை சொந்தத் தம்பியைச் சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுவிட்டு அந்தப்புலி வீரனும் வீரச்சாவடைந்தான்.

நன்றி-பதிவு

  • தொடங்கியவர்

சிலவிடயங்களை எப்போதும் மறக்க முடியாது... எனக்குள்ளும் மாவளன் சொன்னவை மறக்க முடியாதவையாகதான் இருந்தவை அடிக்கடி நினைவில் வரும் விடயம் அது... அதுக்கு குறிப்பாக போராளிகளை மூளை சலவை செய்து போராட வைக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்னும் உந்துதலை தந்தது எனலாம்....

ஈழவன் எனக்கும் இதனை வாசித்தபோது பதிவு இணையதளத்தில் வந்திருந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றிய தலைப்பே ஞாபகம் வந்தது.

தாயை தனியே விட்டு தாயகத்தை காக்க போன போராளி...

ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது....

இது போன்ற தலைப்புகள் உண்மையான சம்பவத்தை சிறுமைபடுத்துவதாகவே இருக்கிறது. ஆனால் முக்கியமான சம்பவத்தை பகிந்துகொண்ட தயாவுக்கு நன்றிகள்.

அதுக்காக நீங்கள் சொல்லும் காரணத்தை அறிந்து கொள்ளலாமா...??

எப்பவாவது போராட போகவேணும் எண்ட எண்ணம் உங்களுக்குள் வந்து இருக்கிறதா..??? அப்படி வர இல்லை எண்டால் அதுக்கான காரணங்களிலை ஒண்டு அம்மா(வீட்டுக்காறர்) பாவம் , அரசாங்கத்தோடை போராடி வெல்ல முடியாது எண்ற பயம்... இதில் உங்களுக்கு ஏதாவது ஒண்டு இருந்து இருக்கும்....

ஒவ்வொருத்தருக்கும் முதலில் தன் "குடும்பம்" பிறகுதான் தேசம் வரும்.... தாயை (குடும்பத்தை) நேசிக்க தெரியாதவன் தாய் நாட்டை நேசித்தான் என்பது அபத்தம்.... அதனால்தான் மரணித்த வீரன் நேசித்த ( மாவீரர் குடும்பங்களை) குடும்பங்களை கவனித்து கொள்ள புலிகளால் தனியான அலகுகள் நிறுவபட்டு உள்ளன...!

சொல்லவேண்டிய விடயங்களை சரியாக சொல்லவேண்டும். ஆனால் இங்கு தலைப்பு தவறாகிவிட்டது. அதனால் தகவல்களும் தவறாகிவிடுமல்லவா?

மற்றும்படி மிகவும் நல்ல விடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

தம்பியை எப்படி சுடுவது என்று தலைப்பிட்டதன் மூலம் அச்சம்பவம் நடந்ததற்கான சூழ்நிலையை பற்றியோ அதன் பின்னால் உள்ள நியாயமான காரணங்களையோ புரிந்துகொள்வதில் குழப்பங்கள் வரும். அதே போல்தான் தாயை தனியே விட்டு தாயகத்தை காக்கபோன போராளி என குறிப்பிட்டு அச்சம்பவம் சொல்லவேண்டிய முக்கியமான செய்தி தவறாக புரிந்து கொள்வதில் குழப்பங்களை உருவாக்கிவிடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒவ்வொருவனுடைய பார்வையிலும் இருக்கின்றது விஷால்.

தம்பியை எப்படிச் சுடுவது என்று போடுவதோ, தாயை தனியே விட்டுப் போனது என்பது என்று சொல்லப்படுகின்ற தலைப்புக்களின் அர்தத்ம் என்பது, தாய் தனியே இருக்கின்றாள், அவளுக்கு யாருமே உதவியில்லை என்ற இரத்த சம்பந்தமான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து சுயநலமாக வாழாமல், நாடு தான் முக்கியம், அங்கே கஸ்டப்படுகின்ற மக்கள் தான் முக்கியம் என்று போகின்ற போராளியின் தியாத்திற்காகத் தான் அவ்வகை உருவமைப்புச் செய்திருப்பார்.

ஒருவனுடைய தியாகத்தை எடுத்துக் காட்டுவதற்கு, இதை விட வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது என்பது தான் என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடன் கதையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

அது ஒவ்வொருவனுடைய பார்வையிலும் இருக்கின்றது விஷால்.

தம்பியை எப்படிச் சுடுவது என்று போடுவதோ, தாயை தனியே விட்டுப் போனது என்பது என்று சொல்லப்படுகின்ற தலைப்புக்களின் அர்தத்ம் என்பது, தாய் தனியே இருக்கின்றாள், அவளுக்கு யாருமே உதவியில்லை என்ற இரத்த சம்பந்தமான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து சுயநலமாக வாழாமல், நாடு தான் முக்கியம், அங்கே கஸ்டப்படுகின்ற மக்கள் தான் முக்கியம் என்று போகின்ற போராளியின் தியாத்திற்காகத் தான் அவ்வகை உருவமைப்புச் செய்திருப்பார்.

ஒருவனுடைய தியாகத்தை எடுத்துக் காட்டுவதற்கு, இதை விட வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது என்பது தான் என் கருத்து.

<_<

  • தொடங்கியவர்

சொல்லவேண்டிய விடயங்களை சரியாக சொல்லவேண்டும். ஆனால் இங்கு தலைப்பு தவறாகிவிட்டது. அதனால் தகவல்களும் தவறாகிவிடுமல்லவா?

மற்றும்படி மிகவும் நல்ல விடயத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

தம்பியை எப்படி சுடுவது என்று தலைப்பிட்டதன் மூலம் அச்சம்பவம் நடந்ததற்கான சூழ்நிலையை பற்றியோ அதன் பின்னால் உள்ள நியாயமான காரணங்களையோ புரிந்துகொள்வதில் குழப்பங்கள் வரும். அதே போல்தான் தாயை தனியே விட்டு தாயகத்தை காக்கபோன போராளி என குறிப்பிட்டு அச்சம்பவம் சொல்லவேண்டிய முக்கியமான செய்தி தவறாக புரிந்து கொள்வதில் குழப்பங்களை உருவாக்கிவிடுகிறது.

மற்றவரில் இருந்து வேறுபடுவதால்தான் போராளிகளை தியாகிகள் போல பார்க்கிறார்கள்... சொல்ல வந்த விடயமும் அப்படித்தான்... சாதாரண மனிதன் தன் சொந்தத்தையும் தன் துயரையும்தான் நினைப்பான்.... ஆனால் ஒரு போராளியால் மட்டும்தான் அதைனை போக்கும் வளியை கண்டு கொள்ள முடியும் அதனை நோக்கி செயலாற்ற முடியும்...

அதன் படி பார்த்தான் நீங்கள் குறை பிடிக்கும் அளவுக்கு தலைப்பு ஒண்றும் கேவலமாக அமையவில்லை....! ஒரு போராளியின் குறிக்கோளை மட்டுமே சொல்ல வருகிறது...!!

தயா விடயத்தை நல்ல முறையில் தந்திருக்கிறார்.

ஆனால் தலைப்பு எனக்கும் சற்று நெருடலாகத்தான் இருக்கிறது.

"தாயை தனியே விட்டு" என்பது தலைப்பில் மேலோங்கி நிற்கிறது.

"தாயை தனியே விடுதல்" என்பது ஒரு குற்றச்சாட்டா அல்லது தியாகத்தின் பெருமையை குறிப்பதா என்பதில் தெளிவான நிலை இல்லை.

Edited by சபேசன்

கஸ்ரப்படுவா எண்டு தெரிந்தே நீங்கள் அம்மாவை தனியே விடுவீர்களா..??? சாதாரண மனிதனால் முடியாது... ஆனால் கடைந்து எடுத்த கொடியவனால் முடியும்... ஆனால் ஒரு நியாயத்தன்மையோடும் விட்டு கொடுப்போடும் செய்ய முடியும் எண்றால்.... அதுதான் தியாகம்..! அம்மா கஸ்ரப்பட்டாலும் பறவாய் இல்லை எண்று எங்களுக்காக போராடியமை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.