Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிக்குமார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குமார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா?

[29 - July - 2007]

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தின் துவக்கமாக கடந்த வாரம் தலைநகர் கொழும்பில் `மக்கள் அலை' பேரணியை நடத்திய அதேதினத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. கிழக்கில் தொப்பிகல பிரதேசத்தில் இராணுவத்தினர் அடைந்த வெற்றியை சிறுமைப்படுத்திக் கருத்துத் தெரிவித்து படையினரை அவமதித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌத்த பிக்குமாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை அவர்கள் விற்பனை செய்ததாகக் கூறியதன் மூலம் மகா சங்கத்தினரை அவமதித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றஞ்சாட்டியே சுதந்திரக்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான மக்கள் அலை இயக்கத்தை நாட்டின் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக ஐ.தே.க. வும் சு.க. மக்கள் பிரிவும் அறிவித்திருக்கும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தப்போவதாக சுதந்திரக்கட்சியினர் சூளுரைத்திருக்கிறார்கள். எனவே, அடுத்து வரும் வாரங்களில் ஏட்டிக்குப் போட்டியாக பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நாட்டு மக்கள் காணக் கூடியதாக இருக்கும்.

சுதந்திரக்கட்சி எதிர்க்கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு கூறியிருக்கின்ற காரணங்களை நோக்கும்போது அவை பற்றி சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தொப்பிகல வெற்றியை சிறுமைப்படுத்தும் வகையில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் படையினரை எந்தளவுக்கு அவமதித்ததோ தெரியவில்லை. ஆனால், படையினரைப் பற்றி மக்கள் மத்தியில் புகழ்பாடி தற்போதைய இராணுவமயமாக்கல் அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இருப்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கம் நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற சகல பிரச்சினைகளையும் அதன் இராணுவ நடவடிக்கை முனைப்புக்குள் மூடிமறைத்து விட முடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சுதந்திரக்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களின்போது `வடக்கையும் கைப்பற்றுவோம்' என்ற கோஷம் மேலோங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. போரைத் தவிர, தற்போதைக்கு வேறு எந்த மார்க்கத்திலும் நாட்டம் இல்லாதிருக்கும் அரசாங்கம் படையினருக்கு சாமரம் வீசுவதைத் தவிர, வேறு எதைத்தான் செய்ய முடியும். போர் முனைப்புக்கு சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான ஒரு மார்க்கமாகவே விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்ததாக, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் வெளிக்காட்டும் எதிர்ப்பை நோக்குவோம். பௌத்த பிக்குமாரின் மதச்செயற்பாடுகளைப் பற்றி விக்கிரமசிங்க விமர்சித்திருந்தால் அதை மகாசங்கத்தினரை அவமதிக்கும் செயல் என்று குறை காண முடியும். ஆனால், விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்தது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற பௌத்த பிக்குமார் தங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகையொன்றை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலாகும். அவர்கள் அந்தச் சலுகையைத் துஷ்பிரயோகம் செய்தார்களா இல்லையா என்பதை விசாரணை மூலம் கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையைச் செய்யாமல், அரசாங்கத் தலைவர்கள் சுதந்திரக் கட்சித் தொண்டர்களை வீதிகளில் இறக்கி ஆர்ப்பாட்டம் செய்ய வைப்பது எந்தவிதத்திலும் பொருத்தமானதல்ல.

பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வந்ததே தவறு. அரசியலுக்கு வந்த பின்னர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஜீவன்களாக அவர்கள் தங்களைக் கருதமுடியாது. கௌதம புத்தர் கூட தன்னை விமர்சனங்களுக்கு விதிவிலக்கானவராக உரிமை கொண்டாடியதில்லை. இதை உணராதவர்களாக சுதந்திரக் கட்சியினர் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கிய விசித்திரத்தை இலங்கையில் காண்கின்றோம். புத்தபெருமான் தனது போதனைகளிலே அரசியல், போர் மற்றும் சமாதானம் குறித்து தெளிவாகவே கூறியிருக்கிறார். எந்தவிதமான வன்முறையையும் அங்கீகரிக்காத பௌத்த மதத்துக்காக தங்களை அர்ப்பணித் தவர்களென்று கூறிக்கொள்ளும் பிக்குமார் இலங்கையில் போருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆயுதபாணிகளான படைவீரர்களுக்கு பிரித் நூல் கட்டி ஆசீர்வதிக்கும் பௌத்த பிக்குமாரை சமகாலத்தில் இலங்கையில் தான் நாம் காண்கின்றோம். இலங்கை அரசியலில் பௌத்த பிக்குமாரின் பாத்திரம் எப்போதுமே எதிர்மறையானதாகவும் பிற்போக்கானதாகவுமே இருந்து வந்திருக்கிறது. இன்று அந்த பாத்திரம் ஏற்கனவே இருந்திருக்கக் கூடிய ஏதாவது மூடுதிரையையும் கிழித்தெறிந்துவிட்டு அப்பட்டமாகவே அதன் முழுமையான பிற்போக்கு வேலையை உலகறியச் செய்து கொண்டிருக்கிறது.

இலங்கையில் அதிகப் பெரும்பான்மையான பிக்குமார் புத்த பெருமான் போதித்தவாறு உலோகாயத பொருட்களில் நாட்டமற்ற எளிமையான வாழ்க்கையை வாழவில்லை. ஆடம்பர கார்களில் செல்கின்ற பிக்குமாரை சர்வசாதாரணமாக எம்மால் காணமுடிகிறது. அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற ஜாதிக ஹெல உறுமய பிக்குமார் குறைந்தபட்சம் அரசர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றி புத்தபெருமான் போதித்தவற்றைக் கூட அறியாதவர்களாக இருக்கின்றார்களோ என்றே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. புத்தர் தனது காலத்தில் அரசர் என்று குறிப்பிட்டதை இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அரசாங்கத்தை இன்று அரசியல்வாதிகளே நடத்துகின்றார்கள். அன்று புத்தபெருமான் அரசர்களுக்கான பத்து கடமைகள் என்று கூறியவற்றை உண்மையான பௌத்தர்கள் இன்று அரசியல்வாதிகளுக்கான கடமைகளாவே பிரயோகிக்க வேண்டும்.

அந்த பத்து கடமைகளில் முதலாவது அரசருக்கு செல்வத்திலும் உடைமைகளிலும் நாட்டமோ பிணைப்போ இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றது. தனிப்பட்ட சௌகரியங்கள், பெயர், புகழ் ஆகியவற்றில் நாட்டம் இருத்தலாகாது; சுய கட்டுப்பாட்டுடன் எளிமையான வாழ்க்கை வாழவேண்டும்; ஆடம்பர வாழ்க்கை அறவே கூடாது என்றெல்லாம் அரசருக்கு புத்தபெருமான் போதித்தார். இந்தப் போதனைகளை தங்களை உண்மையான பௌத்தர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடையும் அரசியல்வாதிகள் தான் பின்பற்றாவிட்டாலும் அரசியலில் ஈடுபடுகின்ற துறவிகளாவது பின்பற்றுகின்றார்களா? அவர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்ற வசதி வாய்ப்புகளையும் வரப்பிரசாதங்களையும் போட்டிபோட்டுக்கொண்டு அனுபவிக்கவே செய்கின்றார்கள். அவர்கள் அந்த வரப்பிரசாதங்களை துஷ்பிரயோகம் செய்வதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை அல்லது குற்றச்சாட்டுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசாங்கத் தலைவர்கள் கட்சித் தொண்டர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடச் செய்கிறார்கள் என்றால் இலங்கையில் பௌத்த மதத்தின் இன்றைய நிலை குறித்து புத்தபெருமான் கண்ணீர்தான் வடிக்க வேண்டும்!

தினக்குரல்

எல்லாத்துக்கும் முதல் யுனிசெப் உந்த பிக்குமார் மீது கவனம் எடுக்க வேணும்... சிறுவரை பலவந்தமா துறவியாக்குவதை தடை செய்ய வேணும்... அந்த சிறுவர்கள் மடத்துக்குள் சுற்றாமல் உலகை அறிய செய்ய வேணும்.... அப்பதான் பாளி மொழி மகாவம்ச கதையையும் தாண்டி உலகம் இருக்கு என்பதை கண்டு கொள்ள செய்ய முடியும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கௌதம புத்தர் கூட தன்னை விமர்சனங்களுக்கு விதிவிலக்கானவராக உரிமை கொண்டாடியதில்லை.

2500 வருடங்களிற்கு முதலே இவ்வளவு தெளிவாக இருந்திருக்கு அந்த மனிசன் ஆனால் இந்த நூற்றாண்டிலும் எம்மால் சாதாரண யாழ்கள விமர்சனத்தை ஏற்று கொள்ள முடியாம இருக்கிறது.என்ன உலகமடா சாமி. :lol:

எல்லாத்துக்கும் முதல் யுனிசெப் உந்த பிக்குமார் மீது கவனம் எடுக்க வேணும்... சிறுவரை பலவந்தமா துறவியாக்குவதை தடை செய்ய வேணும்... அந்த சிறுவர்கள் மடத்துக்குள் சுற்றாமல் உலகை அறிய செய்ய வேணும்.... அப்பதான் பாளி மொழி மகாவம்ச கதையையும் தாண்டி உலகம் இருக்கு என்பதை கண்டு கொள்ள செய்ய முடியும்...

யாழ் களம் சார்பாக குறுக்ஸின் ஆலோசனையுடன் பண்டிதரின் உதவியுடன் நாம் தயாரித்த ஒரு புத்த பயங்கரவாதம் பற்றிய காணொளி

http://youtube.com/watch?v=-6F6KKcFYEI

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol: :angry: :angry:
2500 வருடங்களிற்கு முதலே இவ்வளவு தெளிவாக இருந்திருக்கு அந்த மனிசன் ஆனால் இந்த நூற்றாண்டிலும் எம்மால் சாதாரண யாழ்கள விமர்சனத்தை ஏற்று கொள்ள முடியாம இருக்கிறது.என்ன உலகமடா சாமி. :lol:
புத்தர் மனிதனின் இயலாமையை தான் தூண்டி விட்டார்... எல்லாரும் பிறப்பது இறப்பதுக்கே எண்டு விட்டு வைத்தியரையும், பொறியியலாளரையும், விஞ்ஞானிகளையும், உழைப்பாளிக்களையும் கொண்டிராமல் உலகம் இருந்து இருந்தால் புத்தர் மாதிரி பிச்சை எடுக்கத்தான் எல்லாரும் புறப்பட்டு இருக்க வேணும்... அப்ப பிச்சை போடுவது யார் எண்ட கேள்வியை புத்தர் தான் சொல்லி இருக்க வேணும்... சைவ கடவுள் எல்லாம் கையில் ஆயுதம் வைத்திருப்பது. எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டும் என்பதை சொல்வதுக்கு தான்... வாழ்க்கை என்பது வாழ்வதற்கே... அதை பிச்சை பாத்திரதை வைத்து கொண்டு செய்ய முடியாது...!
யாழ் களம் சார்பாக குறுக்ஸின் ஆலோசனையுடன் பண்டிதரின் உதவியுடன் நாம் தயாரித்த ஒரு புத்த பயங்கரவாதம் பற்றிய காணொளிhttp://youtube.com/watch?v=-6F6KKcFYEI
ஏற்கனவே என்னது கருத்தை அங்கு பதிந்து இருந்தேன்... மற்றவர்களுக்காக நண்றி...

மிஸ்டர் மொட்டை ஆமத்துறுக்கள் தங்களது பணியை விட்டுவிட்டு திசைமாறி அரசியலுக்கு வந்த பின்னர் சகல விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டியது அவர்களது கடமைதானே

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் மனிதனின் இயலாமையை தான் தூண்டி விட்டார்... எல்லாரும் பிறப்பது இறப்பதுக்கே எண்டு விட்டு வைத்தியரையும், பொறியியலாளரையும், விஞ்ஞானிகளையும், உழைப்பாளிக்களையும் கொண்டிராமல் உலகம் இருந்து இருந்தால் புத்தர் மாதிரி பிச்சை எடுக்கத்தான் எல்லாரும் புறப்பட்டு இருக்க வேணும்... அப்ப பிச்சை போடுவது யார் எண்ட கேள்வியை புத்தர் தான் சொல்லி இருக்க வேணும்... சைவ கடவுள் எல்லாம் கையில் ஆயுதம் வைத்திருப்பது. எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டும் என்பதை சொல்வதுக்கு தான்... வாழ்க்கை என்பது வாழ்வதற்கே... அதை பிச்சை பாத்திரதை வைத்து கொண்டு செய்ய முடியாது...!

புத்தர் சொல்லியும் நாய் வாலை நிமிர்த்த முடியுமா ஒரு பாட்டில் கூட வருகிறது,2500 வருடங்களிற்கு முதல் இறப்பை கூடி ஏற்று கொள்ள கூடிய பக்குவத்தில் மனிதன் இருக்கவில்லை அதற்காக தான் நாலு பெரும் உண்மைகளை புத்தர் கூறி இருகிறார்,இறப்பு,பிறப்பு,முத

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துக் கணக்கை காட்ட மறுக்கும் ஹெல உறுமய பிக்குகள்

[ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2007, 15:30 ஈழம்] [ப.தயாளினி]

ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்குகளை நாடாளுமன்றத்துக்கு தாக்கல் செய்யவில்லை.

சிறிலங்காவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்துக் கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹெல உறுமயவைச் சேர்ந்த அளவே நந்தனலோக தேரர் மற்றும் கொட்டபொல அமரகீர்த்தி தேரர் ஆகியோர் மட்டுமே இதுவரை சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான அத்துரலிய ரத்ன தோர், எல்லாவல மேதானந்த தேரர், உடுவே தம்மலோக்க தேரர், உடவத்த நந்தன தோர், அக்மீமன தயாரத்ன தேரர், அபரெக்க பன்னலோக தேரர் ஆகியோர் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.

கிழக்கு அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தனது ஆலோசகர் பசில் ராஜபக்ச மூலம் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பிலான கடிதம் ஒன்றை ஜே.வி.பி.க்கு பசில் ராஜபக்ச அனுப்பியிருந்தார். ஆனால் எந்த ஒரு விடயம் தொடர்பாகவும் எந்த ஒரு ஆலோசனையையும் மகிந்தவுடன் அல்லது அரசாங்கத்துடன் நடத்தப்போவதில்லை என்று ஜே.வி.பி. திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்சாலயில இருந்தா தான் பிக்கு, அரசியலுக்கு வந்தா பிறகு என்ன பிக்கு? பொத்தி கொண்டு கணக்கு காட்டவேண்டியதுதானே :angry:

புத்தர் சொல்லியும் நாய் வாலை நிமிர்த்த முடியுமா ஒரு பாட்டில் கூட வருகிறது,2500 வருடங்களிற்கு முதல் இறப்பை கூடி ஏற்று கொள்ள கூடிய பக்குவத்தில் மனிதன் இருக்கவில்லை அதற்காக தான் நாலு பெரும் உண்மைகளை புத்தர் கூறி இருகிறார்,இறப்பு,பிறப்பு,முத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.