Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் ரஸ்ய யுத்தம் அடுத்த கட்டத்துக்குள் நுழைகிறதா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் இன்று ரஷ்யாமீது ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.. இதை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது.. உக்ரைன் ரஷ்யா எல்லையில் இருந்து 40கிலோமீற்றர் உள்ளே ரஷ்யாவில் இருக்கும் எண்ணெய்க்கிடங்கின் மீது உக்ரைன் ஏவுகணைத்தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.. ஏவுகணை எண்ணெய் சேமிப்பு நிலையத்தை தாக்கும் வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.. இதை அடுத்து உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்த போவதகா ரஷ்யா அறிவித்துள்ளது.. அநேகமாக அண்மையில் நடந்ததுதான் இரண்டு நாளுகளுக்கும் இடையிலான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும்போல..

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • பாலபத்ர ஓணாண்டி changed the title to உக்ரைன் ரஸ்ய யுத்தம் அடுத்த கட்டத்துக்குள் நுழைகிறதா..?
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிடம் இருந்து, நிச்சயம் பலமான பதிலடியை... 
உக்ரைன் எதிர் பார்க்கலாம்.

அடுத்து வரும் நாட்கள்... மிக மோசமானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன் திருப்பி அடிக்குறது தான் எல்லா முதலாளித்துவ நாடுகளுக்கும் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏவுகணை எண்ணெய் சேமிப்பு நிலையத்தை தாக்கும் வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது

அப்படியென்றால் false flag operation ஆகத்தான் இருக்கவேண்டும்.  இதை வைச்சே டொன்பாஸ் முழுவதையும் பிடிக்கலாம்.

26 minutes ago, கிருபன் said:

அப்படியென்றால் false flag operation ஆகத்தான் இருக்கவேண்டும்.  இதை வைச்சே டொன்பாஸ் முழுவதையும் பிடிக்கலாம்.

 

ஆனால் உக்ரைனின் வெளினாட்டு அமைச்சர் சொல்கின்றார், தாம் இத் தாக்குதலை மறுக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ போவதில்லை என்று

 

Ukraine refuses to confirm or deny depot strike

Ukraine's Foreign Minister Dmytro Kuleba says he cannot confirm or deny reports of Ukraine's involvement in the strike on the fuel depot in Belgorod, as he did not have the military information.

"I am a civilian," he told reporters in Warsaw, according to AFP.

Ukraine's defence ministry has also declined to comment, with Reuters quoting spokesman Oleksandr Motuzyanyk saying: "Ukraine is currently conducting a defensive operation against Russian aggression on the territory of Ukraine, and this does not mean that Ukraine is responsible for every catastrophe on Russia's territory...

"I will not confirm or deny these allegations."

The governor of the region said the attack was carried out by two Ukrainian helicopters, but Ukraine has not claimed responsibility.

நன்றி பிபிசி

https://www.bbc.com/news/live/world-europe-60949706

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

ஆனால் உக்ரைனின் வெளினாட்டு அமைச்சர் சொல்கின்றார், தாம் இத் தாக்குதலை மறுக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ போவதில்லை என்று

உக்கிரேனிய ஹெலிஹொப்ரர்கள் மிகவும் தாழப்பறந்து வந்து தாக்குதவதை வீடியோ எடுக்கமுடிந்தது. ஆனால் அவற்றை சுட்டுவீழ்த்த முடியவில்லை. இது false flag operation சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

ஒன்றில் உக்கிரேனிய ஓட்டுனர்கள் மிகவும் திறமையானவர்கள் அல்லது ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அணிகள் வேலைக்கு ஆகாதவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இது உக்ரேன் நடத்தியதாகவே ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டாலும் கூட, இதை ஒரு தடுப்புத் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.

எமது தாயகத்தில் மக்களை இலக்குவைத்து சிங்களம் தாக்குதல்களை நடத்தி, பலரைக் கொல்லும்போது நாமும் அவ்வப்போது எதிரியின் இதயத்தில் “இனி எம்மை அடித்தால், உனக்குப் புரியும் பாஷையில் நாமும் திருப்பி அடிப்போம்” என்று கூறுவதற்காக அடையாளத் தடுப்புத் தாக்குதல் செய்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

ஆனால், எமது அனுபவத்திலிருந்து நாம் அறிந்துகொண்ட ஒரு முக்கிய பாடம்தான், இந்தத் தடுப்புத் தாக்குதல்கள் ஈற்றில் எமக்கு எதனையுமே பெற்றுத்தரவில்லையென்பது. உக்ரேனுக்கும் இதுதான் நடக்கப்போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, ரஞ்சித் said:

இது உக்ரேன் நடத்தியதாகவே ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டாலும் கூட, இதை ஒரு தடுப்புத் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.

எமது தாயகத்தில் மக்களை இலக்குவைத்து சிங்களம் தாக்குதல்களை நடத்தி, பலரைக் கொல்லும்போது நாமும் அவ்வப்போது எதிரியின் இதயத்தில் “இனி எம்மை அடித்தால், உனக்குப் புரியும் பாஷையில் நாமும் திருப்பி அடிப்போம்” என்று கூறுவதற்காக அடையாளத் தடுப்புத் தாக்குதல் செய்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

ஆனால், எமது அனுபவத்திலிருந்து நாம் அறிந்துகொண்ட ஒரு முக்கிய பாடம்தான், இந்தத் தடுப்புத் தாக்குதல்கள் ஈற்றில் எமக்கு எதனையுமே பெற்றுத்தரவில்லையென்பது. உக்ரேனுக்கும் இதுதான் நடக்கப்போகிறது.

அடுத்த  பத்து வருடங்களில் தன்னை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவே ரஷ்யா இப்போதிலிருந்து விழித்துக்கொள்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 

277507271_516030003210817_25571031023991

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய நகரத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்?

ரஷ்ய நகரத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்?

உக்ரைனுக்கு வடக்கே உள்ள ரஷ்ய நகரத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது இரண்டு உக்ரைனிய ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள பெல்கோரோடில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகே தீப்பிடித்ததைக் காட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

இதன் சில காணொளிகள் எண்ணெய் கிடங்கில் ரொக்கெட்டுகள் தாக்குவதைக் காட்டுகின்றன.

ஆளுனர் வெளியிட்டுள்ள வியாசெஸ்லாவ் கிளாட்கோவின் வெளியிட்ட செய்தியில், ‘இரண்டு உக்ரைனிய இராணுவ ஹெலிகொப்டர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்கில் தீ ஏற்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை’ என கூறினார்.

மேலும், அவசரகால பணியாளர்கள் முடிந்தவரை விரைவாக தீயை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், குடியிருப்பாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த தீ பரவல் காணொளியை அவசரகால அமைச்சகம் டெலிகிராமில் வெளியிட்டது.

அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், டிப்போவில் (இந்த டிப்போவை ரஷ்ய அரச எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேப்ட் நடத்துகிறது) இரண்டு பேர் காயமடைந்ததாகவும் இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எட்டு எரிபொருள் தொட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29ஆம் திகதி பெல்கொரோட் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் பல வெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உக்ரைன் இதற்கு முன்னர் ரஷ்யாவில் இலக்குகளைத் தாக்கவில்லை மற்றும் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவின் குற்றச்சாட்டை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

பெல்கோரோட், 370,000 மக்கள் வசிக்கும் நகரம், உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ் நகருக்கு வடக்கே அமைந்துள்ளது.
இது ரஷ்ய பீரங்கிகளால் அதிக அளவில் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் ரஷ்ய படைகளால் சூழப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1274281

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.