Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

எங்கே போகிறது எம்திருநாடு!

*************************

அழகிய இலங்கை

ஆக்கிரமிப்புகள் 

இருந்தாலும்-மக்கள்

ஒருகாலமும் உணவுக்கு 

கையேந்தியதாய்

வரலாறு இருந்ததில்லை.

 

இடையில்..

உண்னமுடியாத 

வாழைக்கிழங்கையும்

உணவாய்யுண்டு

தேங்காயோடு தேனீர்

குடித்தோம்.

பாணுகாக கியூவில்

பட்டினி கிடந்தோம்-என

சிறிமாவின் காலமும்

ஐம்பது ஆண்டுகளுக்கு

மேலாகிப் போச்சு.

 

ஆனால் இன்றோ

அதைவிடவும் கொடுமை

பார்க்குமிடமெல்லாம் கியூ

பாணுக்கும், பல்பொருளுக்கும்

பால்குடிகளின் பால்மாவுக்கும்

சமையல்எரி வாயுவுக்கும்

சாம்பாறு மரக்கறிகட்கும்

மண்ணெண்ணை பெற்றோள்

மாவு அரிசி யாவுக்குமே!  

மக்கள் படும் பாடு 

சொல்லிலடங்காது.

 

விடிவை நினைக்கவே

 பயமாக இருகிறது 

எழுந்தவுடன் அம்மா 

பசிக்குது என

அழும் குழந்தைகளுடன்

நாமும் சேர்ந்து

 அழத்தான் முடிகிறது-என

அன்றாடம் உழைக்கின்ற

தாய் தந்தைகள்.

 

விலைவாசி 

என்னும் மலையை 

மக்கள் தலையில் வைத்து

தூக்கி நடவென 

சொல்லுகிறது அரசு.

 

பட்டினியாலும்- மின் 

வெட்டாலும் சமநிலை

படுத்தப்படிருக்கும் 

ஒரேநாடு ஒரேகொள்கை

கோனுயர குடியுயரும்-என

வாக்களித்த.. 

யுத்தம் தெரியாத சகோதர 

இன மக்களும்

கோனையுயர்த்திவிட்டு

அவர்கள்போடும்

பொருளாதார-பசி 

பட்டினிகுண்டுகளுக்கு

பலியாகும் நிலையில்

 இன்றோ வீதியில்.

 

எனியாவது அரசு

போர்வெற்றியை விடுத்து

பொருளாதாரத்தை 

கட்டியெழுப்புமா? அல்லது

கைமாறிக் கொடுக்குமா?

காலம் தான் பதில்

சொல்லவேண்டும்.

-பசுவூர்க்கோபி.

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, பசுவூர்க்கோபி said:

 

எங்கே போகிறது எம்திருநாடு!

*************************

அழகிய இலங்கை

ஆக்கிரமிப்புகள் 

இருந்தாலும்-மக்கள்

ஒருகாலமும் உணவுக்கு 

கையேந்தியதாய்

வரலாறு இருந்ததில்லை.

 

இடையில்..

உண்னமுடியாத 

வாழைக்கிழங்கையும்

உணவாய்யுண்டு

தேங்காயோடு தேனீர்

குடித்தோம்.

பாணுகாக கியூவில்

பட்டினி கிடந்தோம்-என

சிறிமாவின் காலமும்

ஐம்பது ஆண்டுகளுக்கு

மேலாகிப் போச்சு.

 

ஆனால் இன்றோ

அதைவிடவும் கொடுமை

பார்க்குமிடமெல்லாம் கியூ

பாணுக்கும், பல்பொருளுக்கும்

பால்குடிகளின் பால்மாவுக்கும்

சமையல்எரி வாயுவுக்கும்

சாம்பாறு மரக்கறிகட்கும்

மண்ணெண்ணை பெற்றோள்

மாவு அரிசி யாவுக்குமே!  

மக்கள் படும் பாடு 

சொல்லிலடங்காது.

 

விடிவை நினைக்கவே

 பயமாக இருகிறது 

எழுந்தவுடன் அம்மா 

பசிக்குது என

அழும் குழந்தைகளுடன்

நாமும் சேர்ந்து

 அழத்தான் முடிகிறது-என

அன்றாடம் உழைக்கின்ற

தாய் தந்தைகள்.

 

விலைவாசி 

என்னும் மலையை 

மக்கள் தலையில் வைத்து

தூக்கி நடவென 

சொல்லுகிறது அரசு.

 

பட்டினியாலும்- மின் 

வெட்டாலும் சமநிலை

படுத்தப்படிருக்கும் 

ஒரேநாடு ஒரேகொள்கை

கோனுயர குடியுயரும்-என

வாக்களித்த.. 

யுத்தம் தெரியாத சகோதர 

இன மக்களும்

கோனையுயர்த்திவிட்டு

அவர்கள்போடும்

பொருளாதார-பசி 

பட்டினிகுண்டுகளுக்கு

பலியாகும் நிலையில்

 இன்றோ வீதியில்.

 

எனியாவது அரசு

போர்வெற்றியை விடுத்து

பொருளாதாரத்தை 

கட்டியெழுப்புமா? அல்லது

கைமாறிக் கொடுக்குமா?

காலம் தான் பதில்

சொல்லவேண்டும்.

-பசுவூர்க்கோபி.

அருமை.. பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த ஆமி வெற்றி விழா வருகுதே...அது எங்கை நயினாதீவிலா....அல்லது ...ஆரியகுளத்திலா/..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பஞ்சம் பசி தலைதூக்கும் போதுதான் பக்குவமான கவிதைகளும் பிறக்கின்றன......!  👍

பாராட்டுக்கள் கோபி........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை.. பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌

மகிழ்வோடு நன்றிகள் தோழர்

9 hours ago, alvayan said:

அடுத்த ஆமி வெற்றி விழா வருகுதே...அது எங்கை நயினாதீவிலா....அல்லது ...ஆரியகுளத்திலா/..

நடத்தினால் நாஷம்தான் பொறுத்திருந்து பார்ப்போம்

மகிழ்வோடு நன்றிகள் alvayan

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2022 at 22:18, suvy said:

பஞ்சம் பசி தலைதூக்கும் போதுதான் பக்குவமான கவிதைகளும் பிறக்கின்றன......!  👍

பாராட்டுக்கள் கோபி........!  

உண்மைதான்.  
நன்றிகள்  சுவி  அண்ணா.

On 2/4/2022 at 05:26, புங்கையூரன் said:

ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!

வினைவிதைத்தவன் வினை அறுப்பான்  நீங்கல் சொல்வது உண்மையே.
நன்றிகள் புங்கையூரன் அவர்களே.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.