Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரேன் மோதல்: 'ரஷ்ய வீரர்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர், என் கணவரையும் கொன்றனர்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் மோதல்: 'ரஷ்ய வீரர்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர், என் கணவரையும் கொன்றனர்'

  • யோகிதா லிமாயே
  • பிபிசி நியூஸ், கீயவ், யுக்ரேன்
15 ஏப்ரல் 2022
காணொளிக் குறிப்பு,

தன் கதையை விவரிக்கும் அன்னா

ரஷ்யர்கள், கீயவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரும்பிச் சென்று விட்டனர், ஆனால் அவர்கள் இந்த நகரில் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இனி எப்போதும் மீள முடியாதவர்களிடையே ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இங்கே யுக்ரேனிய பெண்கள் ரஷ்ய படையெடுப்பு வீரர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நேரடி பாதிப்புக்குள்ளானவர்களின் வாக்குமூலத்தையும் அது பற்றிய ஆதாரங்களையும் பிபிசி நேரடியாகக் கேட்டது.

 

Short presentational grey line

எச்சரிக்கை: இந்த செய்தியில் பாலியல் வன்முறை பற்றிய சங்கடம் தரும் தகவல்கள் உள்ளன.

கீயவுக்கு மேற்கே 70 கிமீ (45மைல்) தூரத்தில் உள்ள அமைதியான கிராமப்புறத்தில், 50 வயதான அன்னாவிடம் பேசினோம். அவரது அடையாளத்தைப் பாதுகாக்க அவரது பெயரை மாற்றியுள்ளோம்.

மார்ச் 7ஆம் தேதி ஒரு வெளிநாட்டு சிப்பாய் உள்ளே நுழைந்தபோது தனது கணவருடன் வீட்டில் இருந்ததாக அன்னா எங்களிடம் கூறினார்.

"துப்பாக்கி முனையில், அவர் என்னை அருகே ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் என்னிடம் 'உன் ஆடைகளை அவிழ்த்து விடு அல்லது உன்னை சுடுவேன்,' என கட்டளையிட்டார். அவர் சொன்னதைச் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டிக் கொண்டே இருந்தார். பிறகு என்னை வன்புணர்வு செய்யத் தொடங்கினார்," என்றார் அன்னா.

ரஷ்ய கூட்டு நாடான செசன்யாவின் வீரரான அந்த நபர் இளமையான மற்றும் மெலிந்த உடல்வாகு கொண்டவராக இருந்ததாக அன்னா விவரித்தார்.

"அவர் என்னை பலாத்காரம் செய்து கொண்டிருக்கும் போது, மேலும் நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது நான் அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனால் அவர்கள் அந்த வீரரை அழைத்துச் சென்றனர். பிறகு நான் அந்த நபரை திரும்பப் பார்க்கவேயில்லை," என்று அன்னா கூறினார்.

ரஷ்ய வீரர்களின் சிறப்புப்பிரிவினரால் தான் காப்பாற்றப்பட்டதாக அன்னா நம்புகிறார்.

அன்னா உடனடியாக வீட்டுக்குத் திரும்பி வந்து தன் கணவனை பார்த்தார். அவரது கணவர் வயிற்றில் சுடப்பட்டுக் கிடந்தார்.

"என்னைக் காப்பாற்ற எனது கணவர் என்னைப் பின்தொடர்ந்து ஓட முயன்றார், ஆனால் ஒரு ரவுண்டு அவரை நோக்கி சுட்டனர்," என்று அன்னா கூறினார். இருவரும் பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தனர். மோதல் காரணமாக கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு காயங்கள் காரணமாக அன்னாவின் கணவர் இறந்தார்.

தனது துயரக்கதையை விவரிக்கும்போது அஅன்னா தனது அழுகையை நிறுத்தவே இல்லை. வீட்டின் கொல்லைப்புறத்தில் தனது கணவரை புதைத்த இடத்தை அன்னா எங்களுக்குக் காட்டினார். ஒரு உயரமான, மரச் சிலுவை அந்தக் கல்லறையின் மீது நிறுத்தப்பட்டிருந்தது. தான் உள்ளூர் மருத்துவமனையுடன் தொடர்பில் இருப்பதாகவும் உளவியல் ஆலோசனையைப் பெறுவதாகவும் அன்னா எங்களிடம் கூறினார்.

 

யுக்ரேன் ரஷ்யா

 

படக்குறிப்பு,

அன்னா தனது கணவரை தோட்டத்தில் அடக்கம் செய்துள்ளார்

தன்னைக் காப்பாற்றிய வீரர்கள் தனது வீட்டிலேயே சில நாட்களுக்குத் தங்கியிருந்தனர் என்ற அன்னா, அவர்கள் துப்பாக்கியைக் காட்டி கணவரின் உடைமைகளைத் தங்களுக்குக் கொடுக்கச் சொல்வார்கள் என்கிறார்.

"அவர்கள் கிளம்பியபோது, நான் போதைப்பொருள் மற்றும் வயாக்ராவை பார்த்தேன். அவர்கள் போதைக்கு தலைக்கேறியபடி அடிக்கடி குடித்துவிட்டு இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் கொலையாளிகள், கற்பழிப்பவர்கள் மற்றும் கொள்ளையடிப்பவர்கள். சிலர் மட்டுமே சரி" என்கிறார் அன்னா.

அன்னாவின் வீட்டிலிருந்து வரும் வழியில், மற்றொரு சிலிர்க்க வைக்கும் கதையைக் கேட்டோம்.

இங்கே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அன்னாவின் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு, அவரை பாலியல் வல்லுறவு செய்த அதே நபர், இதைச் செய்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள்.

அந்த பெண்ணின் வயது 40களில் இருந்தது. வீட்டை விட்டு அந்த பெண் வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறும் அண்டை வீட்டார், போர் தொடங்கியபோது வெளியேறிய ஒரு குடும்பத்தின் வீட்டின் படுக்கையறையில் அடைக்கப்பட்டார்.

நன்கு அலங்கரிக்கப்பட்ட அறை, அலங்கரிக்கப்பட்ட வால்பேப்பர் மற்றும் தங்கத் தலையணையுடன் கூடிய படுக்கை, குழப்பமான குற்றச் சம்பவ இடமாக காட்சியளித்தது. மெத்தை மற்றும் தலையணை உறையில் ரத்தக்கறைகள் தென்படுகின்றன.

ஒரு மூலையில் லிப்ஸ்டிக்கில் எழுதப்பட்ட ஒரு கண்ணாடியில், பாதிக்கப்பட்டவர் எங்கே புதைக்கப்பட்டார் என்பதை குறித்திருப்பதாகத் தோன்றுகிறது.

 

யுக்ரேன் ரஷ்யா

 

படக்குறிப்பு,

ரஷ்ய வீரர்களால் கண்ணாடியில் செய்தி ஸ்க்ராப்ட் செய்யப்பட்டது

ஓக்சானா என்ற அண்டை வீட்டார், ரஷ்ய வீரர்கள் அதை விட்டுச் சென்றதாக கூறினார்.

"அவர்கள் [ரஷ்ய வீரர்கள்] அவளை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அவளது கழுத்து அறுக்கப்பட்டோ குத்தப்பட்டோ, அவள் ரத்தம் கசிந்து இறந்து விட்டதாகவும் என்னிடம் கூறினார்கள். நிறைய ரத்தம் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்."

அந்த பெண் வீட்டின் தோட்டத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார்.

நாங்கள் சென்ற ஒரு நாள் கழித்து, அங்கு வந்து வழக்கை விசாரித்த போலீசார், அந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர். அந்த சடலம் ஆடையின்றியும், ஆழமான, நீளமான, கழுத்து முழுவதும் வெட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது.

கீயவ் பிராந்தியத்தின் காவல்துறை தலைவரான ஆண்ட்ரி நெபிடோஃப், கீயவுக்கு மேற்கே 50 கி.மீ (30 மைல்) கிராமத்தில் தாம் நடத்தி வரும் மற்றொரு வழக்கைப் பற்றி விசாரித்து வருவதாக எங்களிடம் கூறினார்.

மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் - அதில் முப்பதுகளில் ஒரு ஜோடி, அவர்களின் சிறு குழந்தை - என அந்த கிராமத்தின் விளிம்பில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வாழ்ந்தனர்.

"மார்ச் 9ஆம் தேதி, ரஷ்ய ராணுவத்தின் பல வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அந்த கணவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பாதுகாக்க முயன்றார். அதனால் அவர்கள் அவரை முற்றத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்," என்கிறார் நெபிடோஃப்.

"அதற்குப் பிறகு, இரண்டு வீரர்கள் அந்த வீட்டுப் பெண்ணை பலமுறை பாலியல் வல்லுறவு செய்தனர். அவர்கள் வெளியேறி விட்டு திரும்பி வருவார்கள். அவர்கள் மூன்று முறை வந்து பாலியல் வன்புணர்வு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தால் பிள்ளைக்கு தீங்கு விளைவிப்போம் என்று மிரட்டினர். குழந்தையைப் பாதுகாக்க அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவில்லை."

வீரர்கள் புறப்பட்டபோது அந்த வீட்டை எரித்ததுடன், குடும்பத்தில் வளர்ந்த நாய்களையும் சுட்டுக் கொன்றனர்.

 

யுக்ரேன் ரஷ்யா

 

படக்குறிப்பு,

தீக்கிரையான குடும்பத்தின் வீடு

கடைசியில் அந்த பெண் தனது மகனுடன் தப்பிச் சென்று பின்னர் காவல்துறையை தொடர்பு கொண்டார்.

அது குறித்து நம்மிடையே பேசிய அதிகாரி நெபிடோஃப், தனது விசாரணைக்குழு அந்த பெண்ணை சந்தித்து அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ததாகக் கூறுகிறார்.

காவல்துறையினர் அவர்களின் குடும்ப வீட்டில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் - அந்த வீட்டின் கூடு மட்டுமே இப்போது அங்கு எஞ்சியுள்ளது.

முந்தைய அமைதியான, சாதாரண வாழ்க்கையின் சில அறிகுறிகள் எரிந்த இடிபாடுகளில் உள்ளன. ஒரு குழந்தையின் சைக்கிள், ஒரு அடைத்த குதிரை, ஒரு நாயின் கயிறு மற்றும் ஒரு மனிதனின் ஃபர் வரிசையான குளிர்கால காலணி ஆகியவற்றைப் பார்த்தோம்.

அந்த பெண்ணின் கணவரை அக்கம் பக்கத்தினர் தோட்டத்தில் புதைத்தனர். தற்போது அந்த பிரேத பரிசோதனைக்காக போலீசார் அதை தோண்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.

யுக்ரேனின் மனித உரிமைகளுக்கான புகார் பெறும் நிர்வாகி லியுட்மிலா டெனிசோவா, இத்தகைய நபர்கள் தெரிவிக்கும் வழக்குகளை தாங்கள் ஆவணப்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.

"புச்சாவில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஆக்கிரமிப்பின் போது 14 முதல் 24 வயதுடைய சுமார் 25 சிறுமிகள் மற்றும் பெண்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் கர்ப்பமாக உள்ளனர்," என்று அவர் கூறினார்.

"யுக்ரேனிய குழந்தைகளை பெற்றெடுப்பதைத் தடுக்க, எந்த ஆணுடனும் உடலுறவு கொள்ள விரும்பாத அளவிற்கு யுக்ரேனிய பெண்களை பாலியல் வல்லுறவு செய்வோம் என்று ரஷ்ய வீரர்கள் கூறினார்கள்."

 

யுக்ரேன் ரஷ்யா

 

படக்குறிப்பு,

எரிந்த குடும்ப வீட்டிற்கு வெளியே ஒரு குழந்தையின் பொம்மை

ஆதரவு ஹெல்ப்லைன்களில் பல அழைப்புகள் வருவதாகவும், டெலிகிராம் செயலி பயன்பாட்டில் உள்ள சேனல்கள் மூலமாகவும் தகவல்களைப் பெறுவதாக அவர் கூறுகிறார்.

"ஒரு 25 வயது பெண்மணி, தனது 16 வயது சகோதரி தன் கண்ணெதிரிலேயே வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை எங்களிடம் தெரிவிக்க அழைத்தார். தனது சகோதரியை பாலியல் வல்லுறவு செய்தபோது, 'ஒவ்வொரு நாஜி விபச்சாரிக்கும் இப்படித்தான் நடக்கும்' என்று அந்த வீரர்கள் கத்தினர் என்று அவர் கூறினார்," என்கிறார் டெனிசோவா.

ஆக்கிரமிப்பின் போது ரஷ்ய துருப்புக்கள் செய்த பாலியல் குற்றங்களின் அளவை மதிப்பிட முடியுமா என்று நாங்கள் கேட்டோம்.

"தற்போது அது சாத்தியமற்றது, ஏனென்றால் எல்லோரும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறத் தயாராக இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் தற்போது உளவியல் ஆதரவைக் கோருகிறார்கள். எனவே அவர்கள் எங்களிடம் சாட்சியம் அளிக்கும் வரை நாங்கள் அந்த கொடுமைகளை குற்றங்களாக பதிவு செய்ய முடியாது," என்கிறார் டெனிசோவா.

பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்காக விளாதிமிர் புதினை தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று யுக்ரேன் விரும்புகிறது என்று அவர் கூறுகிறார்.

"நான் புதினிடம் இதை கேட்க விரும்புகிறேன். ஏன் இப்படி நடக்கிறது?"

தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக எங்களிடம் கூறிய பெண் அன்னா, "இது எனக்குப் புரியவில்லை. நாம் கற்காலத்தில் வாழவில்லை, புதினால் ஏன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது? அவர் ஏன் ஆக்கிரமித்து கொலை செய்கிறார்?" என்று கேட்கிறார்.

கூடுதல் செய்தித்தகவல் வழங்கியவர்கள்: இமோஜென் ஆண்டர்சன், அனஸ்டாசியா லெவ்செங்கோ, டாரியா சிபிகினா மற்றும் சஞ்சய் கங்குலி.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ராணுவ வீரர்கள்... பெண்களை கண்டால், 
தலை குனிந்து கொண்டு போகின்ற... பத்தரை மாத்து தங்கங்கள். 😂

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ராணுவ வீரர்கள்... பெண்களை கண்டால், 
தலை குனிந்து கொண்டு போகின்ற... பத்தரை மாத்து தங்கங்கள். 😂

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🤣

ஆக்கிரமிப்பு இராணுவங்கள் எல்லாம் ஒன்று தான். சாகப்போறம் அதுக்கு முதல் என்னவெல்லாம் முடியுமோ செய்து பாப்பம் என்ற மனநிலை வருகுதோ/போதை மருந்துகளை கொடுத்து இப்படி செய்கிறார்களோ தெரியவில்லை.
உக்ரைன் இராணுவம் உள்நாட்டுப் போரில் என்னவெல்லாம் செய்தாங்களோ?!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

ஆக்கிரமிப்பு இராணுவங்கள் எல்லாம் ஒன்று தான். சாகப்போறம் அதுக்கு முதல் என்னவெல்லாம் முடியுமோ செய்து பாப்பம் என்ற மனநிலை வருகுதோ/போதை மருந்துகளை கொடுத்து இப்படி செய்கிறார்களோ தெரியவில்லை.
உக்ரைன் இராணுவம் உள்நாட்டுப் போரில் என்னவெல்லாம் செய்தாங்களோ?!

உக்ரைன் போர் ஆரம்பித்த, இரண்டாம் நாளே...  
அங்குள்ள  பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 
இந்திய மாணவிகளை,  உக்ரைன் இராணுவம் 
பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்திகள் வந்தது.

அதனை.. இந்திய ஊடகமோ, மேற்குலக ஊடகமோ...
வெளிக் கொண்டு வராமல்... மூடி  மறைத்து விட்டு...
ரஷ்சிய இராணுவத்தின் மீது, குற்றம் சொல்ல என்ன அருகதை உள்ளது.
பேசாமல்... புட்டினிடம்... ஒரு இளநி வாங்கி, 
மடக், மடக்... என குடிக்க வேண்டும்... இந்த பத்திரிகை கபோதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைன் போர் ஆரம்பித்த, இரண்டாம் நாளே...  
அங்குள்ள  பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 
இந்திய மாணவிகளை,  உக்ரைன் இராணுவம் 
பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்திகள் வந்தது.

செய்திகள் வாட்ஸப்பில் வந்தவையா? ரஷ்ய மொழியில் இருந்தால் கூட ஆதரத்திற்காக இணைத்துவிடுங்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

செய்திகள் வாட்ஸப்பில் வந்தவையா? ரஷ்ய மொழியில் இருந்தால் கூட ஆதரத்திற்காக இணைத்துவிடுங்கள்.!

அவர்களுடன் இருந்த, இந்திய மாணவர்கள் தெரிவித்ததை...
போர் தொடங்கிய முதல் கிழமையே... யாழ். களத்தில்  இணைத்திருந்தேன்.
உக்ரைனுக்கு விசுவாசமாக உள்ள, மட்டுறுத்தினர் யாரோ...
உடனேயே... அந்தச்  செய்தியை நீக்கி, உலகம் அறிய முடியாமல் இருட்டடிப்பு  செய்து, 
விளாடிமிர் செலென்ஸ்கிக்கு,  தனது விசுவாசத்தை காட்டி விட்டார்.  

இன்று போர் தொடங்கி 52 நாள் ஆகிய பின், அந்தச் செய்தியை... 
வைக்கல் பட்டறைக்குள்.. குண்டூசியை தேடுவது போல், சிரமமானது.

என்றாலும்... கிருபன் ஜீக்காக,   அந்தச்  செய்தி...
ரஷ்ய மொழியில் இருந்தாலும், கண்ணில் பட்டால்... இணைத்து விடுகின்றேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ராணுவ வீரர்கள்... பெண்களை கண்டால், 
தலை குனிந்து கொண்டு போகின்ற... பத்தரை மாத்து தங்கங்கள். 😂

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🤣

சிறித்தம்பி உக்ரேனில் நடக்கும் ஒரு விடயம் தெரியுமா? அங்கே சம்பவங்கள் நடக்காவிட்டாலும் உலகிற்கு காட்டுவதற்காக செய்திகளை தயாரிக்கின்றார்கள். ஒரு நடிகனுக்கு காட்சிப்படுத்தல் பற்றி சொல்லிக்கொடுக்கவா வேண்டும்.

ஒரு முறை பிணங்களை காட்டும் போது சில பிணங்கள் அசைவுற்றது  ஞாபகம் இருக்கா?😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி உக்ரேனில் நடக்கும் ஒரு விடயம் தெரியுமா? அங்கே சம்பவங்கள் நடக்காவிட்டாலும் உலகிற்கு காட்டுவதற்காக செய்திகளை தயாரிக்கின்றார்கள். ஒரு நடிகனுக்கு காட்சிப்படுத்தல் பற்றி சொல்லிக்கொடுக்கவா வேண்டும்.

ஒரு முறை பிணங்களை காட்டும் போது சில பிணங்கள் அசைவுற்றது  ஞாபகம் இருக்கா?😂

Staged என்றும் கூறப்படுகிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி உக்ரேனில் நடக்கும் ஒரு விடயம் தெரியுமா? அங்கே சம்பவங்கள் நடக்காவிட்டாலும் உலகிற்கு காட்டுவதற்காக செய்திகளை தயாரிக்கின்றார்கள். ஒரு நடிகனுக்கு காட்சிப்படுத்தல் பற்றி சொல்லிக்கொடுக்கவா வேண்டும்.

ஒரு முறை பிணங்களை காட்டும் போது சில பிணங்கள் அசைவுற்றது  ஞாபகம் இருக்கா?😂

குமாரசாமி அண்ணை... உக்ரைனிலை, அசைந்த பிணங்களை நானும் பார்த்தேன். 
உக்ரேனியர்... உலக மகா, சுத்து மாத்து திலகங்கள். 

உலக நாயகன்... புட்டின், பொதுமக்களை தாக்கமால்.. 
மனிதாபிமான அடிப்படையில்,  நடந்து கொள்வதை கொச்சைப்  படுத்துகிறார்கள்.

ஆக்கிரமிப்பு இராணுவம் என்பது எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மேற்கு ஊடகங்கள் மட்டுமல்ல மத்திய கிழக்கு ஊடகமான அல் ஜசிரா போன்றவையும் உக்ரைனில் ரஷ்சிய படை செய்த பாலியல் வன்புணர்வுகள் பற்றி விபரமாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

அரசியல் ரீதியில் ஒவ்வொரு தரப்பையும் ஆதரிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. ஆனால் இப்படியான கொடூரங்களை, பாலியல் வன்புணர்வுகளை, படுகொலைகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதுவும் இவற்றை எல்லாம் எதிர்கொண்ட ஒரு சமூகமாக நாம் இருந்து கொண்டு....

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஆக்கிரமிப்பு இராணுவம் என்பது எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மேற்கு ஊடகங்கள் மட்டுமல்ல மத்திய கிழக்கு ஊடகமான அல் ஜசிரா போன்றவையும் உக்ரைனில் ரஷ்சிய படை செய்த பாலியல் வன்புணர்வுகள் பற்றி விபரமாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

அரசியல் ரீதியில் ஒவ்வொரு தரப்பையும் ஆதரிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. ஆனால் இப்படியான கொடூரங்களை, பாலியல் வன்புணர்வுகளை, படுகொலைகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதுவும் இவற்றை எல்லாம் எதிர்கொண்ட ஒரு சமூகமாக நாம் இருந்து கொண்டு....

 

 

வெளி உலகத்திற்கு காட்டப்படும் பெரும்பாலான செய்திகள் staged என்று கருதப்படுகிறது. 

புச்சா  படுகொலைகள் காட்சிப்படுத்தப்பட்டவையா staged  என்று தன்னிடம் ஐரோப்பிய தலைவர் ஒருவர் கேட்டதாக உக்ரேன் அதிபர் கூறியிருக்கிறார். 

ஆதலால் எல்லாவற்றையும் உடனடியாக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... உக்ரைனிலை, அசைந்த பிணங்களை நானும் பார்த்தேன். 
உக்ரேனியர்... உலக மகா, சுத்து மாத்து திலகங்கள். 

உலக நாயகன்... புட்டின், பொதுமக்களை தாக்கமால்.. 
மனிதாபிமான அடிப்படையில்,  நடந்து கொள்வதை கொச்சைப்  படுத்துகிறார்கள்.

இஞ்சை நான் இருக்கிற இடத்திலை சில வீடுகளிலை உக்ரேன் கொடியை அரைக்கம்பத்திலை பறக்க விட்டிருக்கினம்.அது மட்டுமில்லை கொஞ்சப்பேர் தங்கடை வீட்டு வாசல்லை மஞ்சள் நீல லைற்று எரிய விட்டிருக்கினம். பன்னாடைக்கூட்டங்கள்.:wink:

 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺 🇷🇺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேனியர்... உலக மகா, சுத்து மாத்து திலகங்கள். 

ஜெர்மனியிலை இருக்கிற எங்களுக்குத்தான் தெரியும் இவர்களின் சுத்துமாத்துக்கள்.

8 hours ago, தமிழ் சிறி said:

உலக நாயகன்... புட்டின், பொதுமக்களை தாக்கமால்.. 
மனிதாபிமான அடிப்படையில்,  நடந்து கொள்வதை கொச்சைப்  படுத்துகிறார்கள்.

புட்டினுக்கு மனிதாபிமானம் இருக்கிறதாலை தான் முக்காவாசி ஐரோப்பிய நாட்டு வீடுகள் இன்னும் வெக்கையாய் இருக்கு......

அதை விட ஐரோப்பாவின்75 வீதமான தொழிற்சாலைகள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

Staged என்றும் கூறப்படுகிறது. 

 

கன விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அடக்கி வாசிக்கின்றது போல் இருக்கு.குறிப்பாக ஜேர்மனி.உக்ரேனியர்களின் கள்ள யுக்திகள் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. சில தினங்களுக்கு முன் ஜேர்மன் ஜனாதிபதியின் உக்ரேன் பயணம் நிறுத்தப்பட்டது. அதே போல் இன்னும் பல ஜேர்மன் பிரமுகர்களின் உக்ரேன் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.