Jump to content

இதய நாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஏதோ ஒரு மாதிரி முடிச்சிட்டீங்க. நிஜக்கதை என சொல்லி இருந்தீங்க அல்லவா? இப்போ இருவரும் எப்படி இருக்கின்றனர்?

உங்கள் கதையும் கவியும் ரொம்ப அழகுங்க. வாழ்த்துக்கள். ஆனால் இறுதிவரையில் நாயகன் நாயகி பெயரின்றியே கதை போயிடிச்சு.<<

ஓமோம் வெண்ணிலா, ஒரு வேளை இந்தக்கதை சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்க நேரிட்டால். நாயகி புலத்தில் நாயகன் போராட்டக் களத்தில்! உயிருடன் இருக்கின்றாரா என்ற உண்மை தெரியாது.

மீண்டும் ஒரு கதையில் சந்திக்கலாம் என நினைக்கின்றேன். நன்றி அக்கா

<<

நிச்சயமாக, தொடர்ந்து வாசித்து ஆதரவு தந்த உங்களூக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றிகள் வெண்ணிலா, உடனுக்குடன் பதில் போட்டு உற்சாகப்படுத்தினீர்கள்.!. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது.

  • Replies 88
  • Created
  • Last Reply
Posted

ஓமோம் வெண்ணிலா, ஒரு வேளை இந்தக்கதை சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்க நேரிட்டால். நாயகி புலத்தில் நாயகன் போராட்டக் களத்தில்! உயிருடன் இருக்கின்றாரா என்ற உண்மை தெரியாது.

அவரின் முழுப்பெயர் தெரிந்தால் ஒருதடவை தேடிப்பார்க்கலாமே இணையத்தின் வழியாக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அவரின் முழுப்பெயர் தெரிந்தால் ஒருதடவை தேடிப்பார்க்கலாமே இணையத்தின் வழியாக

<<

உங்களின் ஆதங்கம் புரியாமல் இல்லை; ஆனால் அந்த அண்ணை போராளி என்று சொன்னேனே!...

Posted

<<

உங்களின் ஆதங்கம் புரியாமல் இல்லை; ஆனால் அந்த அண்ணை போராளி என்று சொன்னேனே!...

உயிருடன் இருக்கின்றாரா என்ற உண்மை தெரியாது.

இதனால் தான் அபப்டி சொன்னேன். தப்பெனில் மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதனால் தான் அபப்டி சொன்னேன். தப்பெனில் மன்னிக்கவும்

<<

ஓ! இதில் தப்பென்ன? வெண்ணிலா? மன்னிப்பெல்லாம் வேண்டியதே இல்லை அது நட்பிற்கிடையிலும் சரி நல்லுறவுகளூக்கு இடையிலும் சரி!.

எனக்கும் அந்த அண்ணையை அவரின் உறுதியை மண்ணையும் ஒரு பெண்ணையும் நேசித்த பண்பை நினைக்கையில் அவரை விட ஒரு உயர்ந்த மனிதர் யாரேனும் இருப்பார்களா என்று நானும் நினைப்பதுண்டு.

அது கூட அந்த நாயகி சொன்ன ஒரு விடயம்' பிடிக்காத பெண்ணுக்காக தற்கொலை செய்வதை விட நாட்டுக்காகப் போராடலாமே என்று யாரோ ஒருவருக்குச் சொன்னது இவர் காதிலும் கேட்டு!! இன்று என்னால் இந்தளவுதான் எழுத முடிஞ்சுது!

Posted

சரி அந்தப்பெண் யாராகவும் இருந்திட்டு போகட்டும்... அட அது தமிழ்தங்கையாக இருந்தால் கூட பரவாயில்லை... :lol: ஆனாலும்..

விறுவிறுப்பான இந்த அழகிய காதல் குறுந்தொடரை யாழில் தந்ததற்கான தமிழ் தங்கையிற்கு நான்

"காதல் கதை அழகி"

என்ற பட்டத்தை யாழ்களம் சார்பில் வழங்கி மகிழ்கின்றேன்.. உங்களுக்குரிய பொன்னாடையை யாழ்கள நிருவாகி மோகன் விரைவில் வாங்கித் தருவார். அதை மதிப்புக்குரிய ஐயா தேவகுரு யாழ் இணையத்தின் அகவை 10 கொண்டாட்டத்தின் போது உங்களுக்கு போர்த்திவிடுவார். மேலும், அவர் தனது செலவில் உங்களுக்கு ஒரு லப்டெப்பையும் வாங்கி பரிசளிப்பார். [பரிசுகள்.. சும்மா பகிடிக்கு... மோகன், தேவகுரு குழம்பவேண்டாம்.. :D ]

பி/கு: தமிழ் தங்கை உங்கள் காதல் கதை (உங்கள் என்றால், நீங்கள் எழுதிய கதை என்று சொல்ல வந்தேன்.. :P ) உண்மையில் அந்தமாதிரி மிகநன்றாக உள்ளது. இந்த காதல் சம்பவம் நடைபெற்ற காலம் ஒரு குறுகிய காலமாக 06 மாதங்கள் தொடக்கம் 18 மாதத்திற்குள் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். உண்மையில் இங்கு காதலர்களிடையே ஏற்ப்டும் பிரிவை ஒரு பெரிய பிரிவாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இது சும்மா ஒரு பள்ளிக்காதல் அவ்வளவுதான். மேலும், இருவரிலும் ஒருவருக்கு மேல் இன்னொருவர் மீது ஏற்பட்ட அலாதியான பாசம் என்பதை விட உண்மையான காதல்ஜோடி ஆகுமளவிற்கு இந்த காதல் பழுக்கவில்லை. அதாவது இன்னும் தெளிவாக சொன்னால் இருவரிடையே ஏற்பட்ட இந்த இணைப்பை எனது பார்வைக்கு காதல் என்ற பிரிவினுள் போடவும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். உங்கள் எழுத்தின் திறமை, கதை தொய்வு இல்லாமல் நகர்ந்தது. வெண்ணிலா போல ஒவ்வொரு பகுதிக்கும் எதிர்பார்த்து காத்திருப்பேன். உண்மையான கதை என்பதால் மனது சற்று கனக்கிறது. ஆனாலும் கலைஞன் சொன்ன மாதிரி வயது, காலம் போன்ற காரணிகளால் "காதல்" என்ற பிரிவினுள் போடமுடியவில்லை. காரணம் வயது, காலம்.

Posted

உங்கள் கதை எழுதும் நேர்த்தி மிக அருமை நல்ல சுவாரிசியமாக தொய்வு இல்லாமல் எழுதுவீங்கள்.பாராட்டுக்கள்.

சபேஸ் சொன்ன கருத்தை என்னால ஏற்க முடியாது. ஒரு காதலை வயதும் காலமும் தீர்மானிக்க முடியாது என்று நினைக்குறன். உதாரணத்துக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா 14 வயசுல ஒரு அண்ணாவைக் காதலிச்ச

அவரை கலியாணம் அவக்கு 28 வயசுல செய்தவ இப்ப குழந்தை குட்டியோட சந்தோசமாக இருக்கிறா.

ஆகவே நான் சொல்ல வாற என்ன எண்டா காதலைத் தீர்மானிக்கிறது வயதோ பருவமோ இல்லை.

உண்மையான உறுதியான நேசம் அன்பு தான்.

இந்தக் கதைல உள்ள காதநாயகி மாதிரி நிறயக் காதல் நடந்து இருக்கு காரணம் வரட்டுக்கவுரவம் மற்றும்

சமுகத்துக்குப் பயந்து.

அதுதான் நம்ம சமுகத்துல காதல் என்றாலே ஏதோதீண்டடத் தகாத செயலைச் செய்த மாதிரி பார்ப்பினம்.

ஆனால் ஒன்று இப்ப இப்படியான நிலை மிகவும் குறைந்து வரக் கூடிய நிலையைக்காண முடிகிறது குறிப்பாக புலம்பெயர் நாடுகளில். இப்படியான வளர்ச்சி மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று

Posted

ஒரு காதலை வயதும் காலமும் தீர்மானிக்க முடியாதா?

ஓ சரி.. நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்... :D

Posted

காதல் செல்லிய காதலை சொன்ன விதத்தில் ஒரு தனித்துவத்தை உணர்கின்றேன். இந்த தனித்துவமான நடை என்னும் நிறைய விசயங்களை சொல்வதற்கு உங்களுக்கு துணையாய் நிற்கும் என நம்புகின்றறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கலைஞா, மிகுந்த நன்றி, மிக நன்றாகப் பாராட்டுகின்றீர்கள் இந்தப்பாராட்டுக்கு முன்னால் பொன்னாடை எல்லாம் பெரிதா என்ன?! :lol: ! நீங்கள் அளித்த பட்டத்தை மிக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றேன். மிகுந்த நன்றிகள்( பட்டம் நல்லாப்பிடிச்சிருக்கு :-)

இது ஓர் குறுகிய கால இடைவெளி என்பதை சரியாகக்கண்டுபிடித்ததற்கு நான் உங்களூக்கு கட்டாயம் பரிசு தரவேண்டும்!. கலைஞா, நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்த வயதுக்குள் அது காதல் இல்லை என்றால் அந்த அண்ணை இன்னொரு பெண்ணை மணந்திருக்கலாம் ஆனால் அவர் அது ஒன்றே தன் வாழ்வில் காதல் என்று முடிவு பண்ணிவிட்டாரே! இப்படி எத்தனை பேர் இருப்பார்கள்? படங்களில் தானே கதா நாயகனும்/நாயகியும் அழகு மாதிரிக் காட்டுவார்கள் நிஜத்தில் சில வேளைகளில் அப்படி அமைவதுண்டு. அப்படி அமைந்த ஜோடிகளில் இந்தக்கதைகளுக்குள் உள்ளவர்களூம் அடக்கம்( இப்ப கண்டிப்பா ஒத்துக்கொண்டிருப்பீங்கள் அது கட்டாயம் தமிழ்தங்கையா இருக்க முடியாது என்று ;) !)

சபேஷ்(அண்ணா?!) தங்கள் ஆதரவுக்கும் என் மிகுந்த நன்றிகள்.ஓ!! வெண்ணிலா போலவே தொடர்ந்து பின்னூட்டம் என்னும் ஊக்கம் கொடுப்பீர்களா? அப்படி எனில் மிக விரைவில் ஒரு தொடரைத் தொடர வேண்டியதுதான். மீண்டும் என் நன்றிகள்.

ரசிகை அக்கா, பெயருக்கேற்றால் போல் உங்கள் இரசனையும் என்னை விமர்சித்த விதமும், கொடுத்த ஆக்கமும்,ஊக்கமும் என்னை மேலும் எழுதுவிக்கும்!! 'காதலிச்சவங்களுக்குத்தான் அந்த உன்னதத்தை, அந்த உணர்வை புரிந்து கொள்ள முடியும் இல்லையா அக்கா?! நன்றிகள்.

சுகன் உங்களூக்கும் என் நன்றிகள், உங்களைப்போன்ற ஆதரவாளர்கள் இருக்கும் போது கட்டாயம் எழுதுவேன் மேலும் மேலும் நான் சந்தித்த நிஜமான கதைகளைகளையே படைப்பாக்கலாம் என்றிருக்கின்றேன்.

இதயநாதத்துக்கு இசை ஊட்டும் விதமாய் எனக்கு ஆதரவு தந்த தோழி வெண்ணிலா, ஜம்முபேபி, இவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேஷ்(அண்ணா?!) தங்கள் ஆதரவுக்கும் என் மிகுந்த நன்றிகள்.ஓ!! வெண்ணிலா போலவே தொடர்ந்து பின்னூட்டம் என்னும் ஊக்கம் கொடுப்பீர்களா? அப்படி எனில் மிக விரைவில் ஒரு தொடரைத் தொடர வேண்டியதுதான். மீண்டும் என் நன்றிகள்.

வெண்ணிலா மாதிரி தொடர்ந்து பின் ஊட்டம் தருவேனோ தெரியாது ஆனால் தொடர்ந்து வாசிப்பேன்... :lol:

தொடர்ந்து இப்படியான நல்ல ஆக்கங்களை தாங்கோ. :D

Posted

உங்களுக்கு நான் தந்த பட்டம் பிடிச்சு இருக்கா? அப்ப இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கோ, நிறைய நிறைய பட்டங்கள் தந்து உங்களை கெளரவிக்கின்றேன்... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களுக்கு நான் தந்த பட்டம் பிடிச்சு இருக்கா? அப்ப இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கோ, நிறைய நிறைய பட்டங்கள் தந்து உங்களை கெளரவிக்கின்றேன்... :rolleyes:

<<

உங்கள் பட்டங்களுக்காகவே பல்லாயிரம் கதைகள் எழுத வேண்டுமென 'விரல்கள் துடிக்குது" வேலைப்பணியின் பளு தடுக்குது :lol:!

உண்மையாகப்பிடிச்சிருக்கு! நல்ல பட்டம்!..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.