Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கத் தலைவர்..!" - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பழ.நெடுமாறன் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கத் தலைவர்..!" - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பழ.நெடுமாறன் பேச்சு

`இலங்கை பிரச்னை தற்போது சர்வதேச பிரச்னையாக உருவாகியுள்ளது. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவிற்கு ஆபத்து.' - பழ.நெடுமாறன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். 

அதன் பின்பு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பழ.நெடுமாறன் இலங்கையில் இருந்திருந்தால் மகாத்மாவாகப் புகழப்பட்டிருப்பார். பா.ஜ.க வேண்டாத கட்சியாக, கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு காலசக்கரத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி கிடைத்தால் 2008-ம் ஆண்டு மோடியைப் பிரதமராக மாற்றிருப்பேன்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

ஏனென்றால், மோடி பிரதமராக இருந்திருந்தால் முள்ளி வாய்க்கால் போன்ற இலங்கை சம்பவம் நிகழ்ந்திருக்காது. இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதற்கு நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் கிடையாது” எனப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன், ``சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை வெற்றி பெற வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள். தற்போது அதே சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி அவரை ஆட்சியிலிருந்து வெளியேற்றிப் போராடி வருகின்றனர். ராஜபக்சேக்கள் சொந்த நாட்டிலேயே ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

மோடி

 

மோடி

 

இலங்கை பிரச்னை தற்போது சர்வதேச பிரச்னையாக உருவாகியுள்ளது. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவிற்கு ஆபத்து. அண்ணாமலை இது தொடர்பாகத் தெளிவாகவும் ஆழமாகவும், எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிப் பேசியுள்ளார். இது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அண்ணாமலை இருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக இருக்கிறார்" எனப் பேசினார்.

 

 

https://www.vikatan.com/news/politics/pazha-nedumaran-speech-at-mullivaikkal-ninaivendhal-meet

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரி என்ற மனோபாவம் போலும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரி என்ற மனோபாவம் போலும் 

அதே. இந்த வழியிலும்… முயற்சித்துப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சிவாஜிலிங்கத்தார், இரண்டு முறை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்.

இப்போது அங்கே நிக்கிறார். அது சொல்லும் செய்தி என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

நம்ம சிவாஜிலிங்கத்தார், இரண்டு முறை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்.

இப்போது அங்கே நிக்கிறார். அது சொல்லும் செய்தி என்ன?

 திரும்பவும் ஈழத்தமிழர் தலையில் மிளகாய் அரைக்க இந்தியா  நினைக்கிறது. 

😡

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

 திரும்பவும் ஈழத்தமிழர் தலையில் மிளகாய் அரைக்க இந்தியா  நினைக்கிறது. 

😡

போட்டிருக்கும் சட்டையும் சங்கி கலர் தானே.... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

போட்டிருக்கும் சட்டையும் சங்கி கலர் தானே.... 🤔

இலங்கையில் பரந்தன் ராசனையும் ரெலோவையும்  வைத்து தனது ஆட்டத்தை கொண்டுநடாத்த இந்தியா காய் நகர்த்துகிறது என்று முன்பு பலமுறை குறிப்பிட்டு இருந்தேன்.  

தற்போது, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத  தமிழ்க் கட்சிகள் பலவும் இருக்க, இந்த உளறுவாயன் TELO சிவாசிலிங்கத்தை அழைப்பதன் ஊடாக, இந்தியா (தமிழருக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு) சிங்களத்திற்கும் சொல்லவரும் செய்தி என்ன ? 

(இந்தியா வின் கைத்தடிதான் TELO என்று மீண்டும் ஒருமுறை  நிரூபணமாகின்றது.)

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

போட்டிருக்கும் சட்டையும் சங்கி கலர் தானே.... 🤔

 

21 minutes ago, Kapithan said:

 திரும்பவும் ஈழத்தமிழர் தலையில் மிளகாய் அரைக்க இந்தியா  நினைக்கிறது. 

😡

 

May be an image of 2 people and text that says 'நாச்சியாள் சுகந்தி 28 mins Facebook Lite டெல்லியில் அறிவாலயம் திறக்கவும் மோடி அமித்ஷாவ கூப்புடுறீங்க. சரி அதை அரசியல் நாகரீகம்னு சொன்னீங்க கலைஞர் சிலைய திறக்கவும் ஆர்.எஸ்.எஸ்காரர் தான் வேணுமா? இந்தியாவுல வேற யாருக்கும் அந்த தகுதி இல்லையா? நாயுடுகாரு திறப்பதால் என்ன நன்மை? ஐந்தாண்டுகள் செய்யும் ஊழலை மத்திய அரசு கண்டுகொள்ளாது என்பதற்காக இந்த நாடகமா? அல்லது அந்தரிலுகு நமஸ்காரம் பாசமா? இந்த இணைய உடன்பிறப்புகளும் எம்புட்டுத்தான் முட்டுக்கொடுப்பாங்க கேரளா போயி அங்க பினராயி கூட மேடையில நின்னு வீர வசனம் பேசுறீங்க.... அப்படியா அந்தர்பல்டி அடிச்சு பாஜகவுக்கு கும்புடு போடுறீங்க... ஊழல் பணத்துக்கு இன்னும் என்னென்ன செய்வீங்க 3-05-2022 ஜீனியர் 28 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு!'

 

280338081_3193455590912780_7567003154848336625_n.jpg?_nc_cat=101&ccb=1-6&_nc_sid=730e14&_nc_ohc=InM30bfaLmoAX_MtO8f&_nc_ht=scontent-frt3-2.xx&oh=00_AT8RbuXM63dr1TCn3DoOTTgfRlGc7cxtHJA-kcxW98oSOg&oe=6285B95C

கருணாநிதி போட்டிருந்த சால்வையும், சங்கி நிறம் தான்...
இப்போ... அ.தி.மு.க. வை  விட, தி.மு.க. தான்... 
பா.ஜ. க.வுக்கு, முரட்டு முட்டு... கொடுக்கிறது.

நம்ம சிவாஜியர்  மாட்டு மூத்திரம் குடிக்காதவரை.. 
அரசியல் செய்து பாக்கட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஒரு ராஜதந்திரியா? பழ.நெடுமாறன் சர்ச்சை பேச்சு.  மூத்த  பத்திரிகையாளர் திரு. அய்யநாதனுடன் பேட்டி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.