Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நெருக்கடி:“ரூபாவின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும் – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில் விக்ரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி:“ரூபாவின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும் – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில் விக்ரமசிங்க

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்குள் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரம்சிங்க இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மிக விரிவாக புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவர் ஆற்றிய உரை பின் வருமாறு.

வணக்கம், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டேன். நான் அந்த பதவியை கேட்கவில்லை. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இந்த பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நான் அரசியல் தலைவர் என்ற விதத்தில் மாத்திரமன்றி, இலவச கல்வியை பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை படித்து, முன்னோக்கி பயணித்த தலைவர் என்ற விதத்தில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருக்கின்றது. 2022ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது, கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 2300 பில்லியன் ரூபா வருமானம் இருக்கின்றது என காண்பித்தாலும், இந்த வருடத்திற்கான உண்மையான வருமானம் 1600 பில்லியன் ரூபா என கணிப்பிட முடிகின்றது.

2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனமானது 3300 பில்லியன் ரூபாவாகும். எனினும், கடந்த அரசாங்கத்தின் வட்டி வீத அதிகரிப்பு மற்றும் மேலதிக செலவீனங்கள் காரணமாக 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் முழுமையான செலவீனமானது 4000 பில்லியன் ரூபாவாகும்.

வருடத்திற்கான துண்டுவிழும் தொகையானது 2400 பில்லியன் ரூபாவாகும். அது தலா தேசிய உற்பத்தியில் 13 வீதமாகும்.

அதேபோன்று அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையானது 3200 பில்லியன் ரூபாவாகும். நாங்கள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் 1950 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளோம். அதன்படி, 1250 பில்லியன் ரூபா மாத்திரமே எஞ்சிய மிகுதியாகவுள்ளது.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் எமது அந்நிய செலாவணியானது 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். எனினும், இன்று நிதி அமைச்சகத்தால் 1 பில்லியன் டாலரை கூட தேடிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்குவதற்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் அமெரிக்க டாலரை கூட நிதி அமைச்சினால் தற்போது தேடிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

பெட்ரோலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பெட்ரோலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாங்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்னைகள் காணப்படுகின்றன.

எதிர்வரும் சில தினங்களில் வரிசைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் வரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எம் வசம் தற்போது ஒரு நாளுக்கு போதுமான பெட்ரோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. நேற்றைய தினம் நாட்டிற்கு வந்த டீசல் கப்பலினால், டீசல் பிரச்னைக்கு ஒரு வகையில் சிறிய தீர்வொன்று தற்போது கிடைத்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மே 19ம் தேதி முதல் ஜுன் முதலாம் தேதி வரையான காலப் பகுதிக்குள் மேலும் 2 டீசலை ஏற்றிய கப்பல்களும், மே மாதம் 18 மற்றும் மே 29ம் தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வருகைத் தரவுள்ளன.

கடந்த 40 நாட்களுக்கு அதிகமாக இலங்கை கடற்பரப்பில் பெட்ரோல், மசகு எண்ணெய், உராய்வு எண்ணெய் ஏற்றிய மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

அதற்கான நிதியை செலுத்துவதற்கு திறந்த சந்தையிலிருந்து டாலரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை உற்பத்தி செய்ய எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், நாளாந்த மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் 15 மணிநேரம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

எனினும், நாங்கள் இதற்கு தேவையான நிதியை தேடியுள்ளோம். ஏதேனும் ஒரு வகையில் நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர் மிக விரைவில் தேடிக் கொள்ள வேண்டியுள்ளது.

மண்ணெண்ணை மற்றும் மசகு எண்ணெய் தொடர்பிலான நிலைமை இதை விடவும் மோசமாக காணப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மத்திய வங்கி, அரச, தனியார், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வங்கிகள் டொலர் இல்லாமையினால், அந்த பிரச்னைகளை தற்போது எதிர்நோக்கியுள்ளன.

எம்வசம் மிகவும் குறைவான டாலரே கையிருப்பில் உள்ளமையை நீங்களும் அறிவீர்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில், நாங்கள் நேற்றைய தினம் டீசலுடனான கப்பலொன்றை கொண்டு வந்துள்ளோம். அதனால், இன்று முதல் டீசலை பெற்றுக்கொள்ள உங்களுக்கு முடியும்.

இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்தது. அதேபோன்று செவ்வாய்கிழமைக்கு முன்பாக எரிவாயுடனான கப்பலுக்கு நாங்கள் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுப்போம். அதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு சிறியதொரு தீர்வு கிடைக்கும்.

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோன்று, மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்றது. இருத நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகள், சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவிலான மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.

மருந்து, சத்திர சிகிச்சை உபகரணங்கள், நோயாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் விநியோகத்தர்களுக்கு 4 மாதங்களாக கடனை செலுத்தவில்லை.இவர்களுக்கு 34 பில்லியன் ரூபா நிலுகை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.

அதேபோன்று, அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளுக்கு கடந்த 4 மாதங்களாக கடன்தொகை செலுத்தப்படவில்லை.

அதனால், மருந்தாக்கல் கூட்டுதாபனத்தை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க, சர்வதேச மருந்து விநியோக நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அத்தியாவசியமான 14 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த மருந்து வகைகளை விநியோகிப்பதற்கு எமது மருந்து விநியோக பிரிவிற்கு தற்போது முடியாதுள்ளது.

இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட இரண்டு வகையான மருந்துகளை விநியோகிக்கவே முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத்திட்டத்திற்கு பதிலாக புதிய வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை நிவாரண வரவு செலவுத்திட்டமாக முன்வைப்பதே எமது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. அதேபோன்று தற்போது கடும் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை விமான சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன்

2021ம் ஆண்டில் மட்டும் இலங்கை விமான சேவைக்கு 45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இருந்து 2021 மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அரசுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள நட்டமானது 372 பில்லியன் ரூபாவாகும்.

நாங்கள் இந்த நிறுவனத்தை தனியார் மயப்படுத்தினாலும், அந்த நட்டத்தை நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் ஒரு தடவையேனும் விமானத்தில் கால் தடம் பதிக்காத இந்த நாட்டில் வாழ்கின்ற வறுமை கோட்டிற்கு கீழுள்ள அப்பாவி மக்களுக்கும் இந்த நட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது

இதை விடவும் மோசமான நிலைமையை நான் குறுகிய காலத்திற்கு சந்திக்க வேண்டியுள்ளது.

பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 84.38 சதமும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 71.19 சதமும், ஒரு லீட்டர் டீசலுக்கு 131.55 சதமும், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 136.31 சதமும், ஒரு லீட்டர் மண்ணெண்ணைக்கு 294.50 சதமும் நட்டத்தை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கி வருகின்றது.

பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு இந்த நட்டத்தை தொடர்ந்தும் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான இயலுமை கிடையாது. அதேபோன்று, மின்சார சபை, ஒரு அலகு மின்சாரத்திற்கு உங்களிடமிருந்து 17 ரூபா வசூலிக்கவிட்டாலும், அதற்காக 48 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சுமார் 30 ரூபா வரை நட்டம் காணப்படுகின்றது. இதுவும் பாரியதொரு பிரச்னையாகும்.

விருப்பமில்லாமலேனும் இந்த சந்தர்ப்பத்தில் பணத்தை அச்சிட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் இந்த மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செலவிட வேண்டியுள்ளமைக்காகவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.

பணம் அச்சிடுகின்றமையினால், ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கும், மின்சார சபைக்கும் ரூபாவை தேடிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் சில மாதங்கள், உங்களுக்கும், எனக்கும் வாழ்க்கையில் மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். அதனை அர்ப்பணிப்புடன் எதிர்நோக்க வேண்டியிருக்கும். விடயங்களை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கு நான் விரும்பவில்லை.

இதுவே உண்மையான நிலைமை. கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை குறுகிய காலத்திற்கு நாம் எதிர்நோக்கவுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் துன்பகரமான நிலைமையே காணப்படுகின்றது. எனினும், இந்த நிலைமையானது குறுகிய காலத்திற்கு மாத்திரமே காணப்படும்.

எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இதற்கான சில மாதங்களை பொறுமையுடன் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனினும், இந்த நிலைமையிலிருந்து எம்மால் மீண்டெழ முடியும். அதற்காக புதிய வழியொன்றை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை குறித்து எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு அவர்கள் வழங்கிய பதிலுக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

தற்போது காணப்படுகின்ற இந்த பிரச்னைகளுக்கான பதிலை தேடிக் கொள்வதற்காக தேசிய சபையொன்றையோ அல்லது அரசியல் சபையொன்றையோ அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் உடனடியாக ஸ்தாபிக்க வேண்டியுள்ளது. அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி குறிப்பிட்ட கால எல்லைக்குள், குறுகிய, மத்திய, மற்றும் நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நாட்டை அபிவிருத்தி செய்ய எமக்கு இயலுமை கிடைக்கும்.

மண்ணெண்ணை, எரிவாயு, எரிபொருள் வரிசைகள் இல்லாத நாடு, மின்வெட்டு இல்லாத நாடு, விவசாயத்தை சுதந்திரமாக செய்துக்கொள்ளக்கூடிய நாடு, இளைஞர் யுவதிகளின் பாதுகாப்புக்கான நாடு, போராட்டங்களுக்காகவும், வரிசைகளுக்காகவும் காத்திருந்து நாட்களை செலவிடாத நாடு, சுதந்திரமான வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய நாடு, மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளக்கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

நான் மிக அபாயமான சவால் ஒன்றை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளேன். இந்த பிரச்சினை மிகவும் ஆழமானது. ஆழம் தெரியவில்லை. மிக மெல்லிய கண்ணாடிகளினால் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கைபிடியும் கிடையாது. எனது கால்களுக்கு கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளது.

இந்த பாதணிக்கு கீழ் கூர்மையான ஆணிகள் இருக்கின்றன. குழந்தையை மிக பாதுகாப்பாக மறுபுறத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இந்த நாட்டிற்காக இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஒரு நபர், குடும்பம், குழுக்களை காப்பாற்றுவது எனது நோக்கம் கிடையாது. முழு நாட்டு மக்களையும் காப்பாற்றுவதே எனது பொறுப்பாகும்.

முழு நாட்டையும் காப்பாற்றும் பொறுப்பு உள்ளது. இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை காப்பாற்றுவது எனது பொறுப்பாகும். வாழ்க்கையை பணயம் வைத்து, இந்த சவாலை ஏற்றுக்கொள்கின்றேன்.

இந்த சவாலை வெற்றிக்கொள்வேன். அனைவரது ஒத்துழைப்புக்களும் எனக்கு வேண்டும். எனது பொறுப்பை நாட்டிற்காக நான் நிறைவேற்றுவேன். இது நான் உங்களுக்கு வழங்கும் உறுதிமொழியாகும்.

இவ்வாறு ரணில் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-61469072

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பன் குசும்பன் எதோ ஒரு பெரிய இடத்தை லம்பாவா வெளிநாட்டுக்கு விக்க போறான் அதுக்கு அத்தி வாரம் போடுகின்றான்  இம்முறை தமிழர் பகுதிக்குள் தான் போல் உள்ளது .

 

 

 

சைக்கிள் கோஸ்ட்டி பேருக்கு ஊளையிடும்  சம்சும்  ஒப்புக்கு மாரடிப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

நான் அரசியல் தலைவர் என்ற விதத்தில் மாத்திரமன்றி, இலவச கல்வியை பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை படித்து, முன்னோக்கி பயணித்த தலைவர் என்ற விதத்தில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

நான் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நரியார் மன்னிக்கவும் ரணிலார் வேறு யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்திருக்கிறார். 

சொந்த எழுத்துப்போல தெரியவில்லை. 

😃

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலார்... நல்லாச் சுத்திறார்.. தன்னை ஒரு அகாயாச சூரன் போலக் காட்ட.

நட்டத்தில் ஓடுவதை எல்லாம் தனியார் மயப்படுத்தலாம்.. அல்லது பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கலாம். 

வைத்தியத்துறையின் முக்கிய பகுதிகளையும் தனியார் மயப்படுத்தலாம்.

உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகிற வழியை தேடலாம்.

இராணுவ செலவீனங்களை குறைக்கலாம். இராணுவ ஆளணியை உள்நாட்டு உற்பத்திக்கு தொழில்துறைக்குள் நுழைக்கலாம்.. பயன்படுத்தலாம். 

இராணுவக் கட்டுமானங்களை தனியாருக்கு அல்லது மக்களுக்கு வழங்கலாம்.

நாட்டின் பாதுகாப்பையும் கொரோனா தொற்றுக் குறைவையும் உறுதிப்படுத்தி.. உல்லாசப் பயணிகளை கவரும் வழிமுறையை பார்க்கலாம்.

தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்தியையும் சந்தையும் விரிவாக்கலாம்.

தானியங்களுக்கு உலக சந்தையில் ஏற்பட்டுள்ள உயர் கேள்விக்கு ஏற்ப தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்தி வேலைத்திட்டங்களை செய்யலாம்.

மின் உற்பத்தியில்.. மீள் சுழற்சி வள மின் உற்பத்தியை பெருக்கலாம்.. குறிப்பாக நீர் மின் உற்பத்தி.. சூரியக் கல மின் உற்பத்தி.. காற்றாலை மின் உற்பத்தி.. கடலலலை மின் உற்பத்தி.. இதற்குள் தனியார்.. பன்னாட்டு நிறுவனங்களை முதலிட அழைக்கலாம். 

பெற்றோல்.. டீசல் வாகனங்களின் பாவனையைக் குறைத்து.. மின் ஊர்திகளின் பாவனையை அதிகரிக்கும் வகையில் வாகன உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுக்குள் அனுமதிக்கலாம்.

இப்படி எத்தனையோ செய்யலாம்..

ஆனால்.. தனியாரும்.. பன்னாட்டு நிறுவனங்களும் நாட்டுக்குள் வரனும் என்றால்.. கப்பம்.. அரசியல் காடைத்தனம்.. சுரண்டல்.. இலஞ்சம்.. இவை இருக்க முடியாது. அப்படி என்றால்.. எப்படி ரணில்.. கோத்தா.. மகிந்த எல்லாம் பணக்காரர் ஆவது.. அதுதான் இப்ப பிரச்சனையே தவிர..

இலங்கையை பொருளாதார மீட்சிக்குள் கொண்டு செல்ல.. எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால்.. அவற்றைச் செய்ய சிங்கள அரசியல்வாதிகளுக்கு சித்தமில்லை. அவ்வளவும் தான். இந்தச் சின்ன நாட்டையே நிர்வகிக்க வக்கில்ல.. இதில.. தமிழர்களையும் சேர்த்து வைச்சு கஸ்டப்படட்டாம்.

எனவே தமிழர்களைப் பிரிந்து போக அனுமதிப்பது கூட சிங்கள தேசத்துக்கு நல்லது தான். அதுவும் ஒரு வழிமுறை தான் மிஸ்டர் அணிலார்.. ச்சா.. ரணிலார். இவற்றைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தலாமே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

எனவே தமிழர்களைப் பிரிந்து போக அனுமதிப்பது கூட சிங்கள தேசத்துக்கு நல்லது தான். அதுவும் ஒரு வழிமுறை தான் மிஸ்டர் அணிலார்.. ச்சா.. ரணிலார்.

ச்சீய்…. நரியார். 😛

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்!

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று(திங்கட்கிழமை) ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு   ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார்.

நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022   ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன..

2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்கள். எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும். வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் .

அதேப் போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாயாகும். நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம். அதன்படி அண்ணளவான மிகுதி 1250 மில்லியன் ரூபாய்கள்.

நாம் நேற்று அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3000 பில்லியனில் இருந்து 4000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.

2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன.

ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.

இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது.

இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றில் இருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன.

இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்.

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம்.

அதேப் போன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும். மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது.

இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இவ்வனைத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று ஒரு டீசல் ஏற்றிய கப்பலை நேற்று கொண்டு வந்தோம். அதனால் இன்று முதல் அந்த டீசலை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதன்பொருட்டு இந்தியாவின் ஒத்துழைப்பு நமக்கு கிடைத்தது.

அதேப் போன்று வந்துள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சனைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு இடையில், மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாகும்.

அதேப் போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது.

இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும். ஆனால் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்திற்க்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.

இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.

அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன் . 2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளது. 2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது.

நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நட்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க ப் போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.

அரசாங்கம் தற்போது 92 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 84.38 , 95 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 71.19 , டீசல் லீட்டர் ஒன்றில்ரூ. 131.55 சுப்பன் டீசல் லீட்டர் ஒன்றில் ரூ. 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றில் ரூ. 294.50 என நட்டமடைகின்றது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்த நட்டத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதேப்போல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம் ரூ. 17 ஐ அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபாய்கள் வரை செலவு செய்கிறது. அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபாய்கள் நட்டம் ஏற்படுகிறது. அதுவும் மோசமான சிக்கலாகும்.

நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும், உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது.

எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.

நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம்.

இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதிர்கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளித்தமை குறித்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்திற்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான குறுகிய கால- மத்தியக் கால – மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல எம்மால் முடியும்.

மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு, விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு, இளைஞர் யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு, மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.

என்னுடைய கால்களில் கலற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.

எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன், ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே.

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.

நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1282153

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.