Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலரிமாளிகையும் முற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கோத்தா போர்குற்றவாளி என்று உரத்துக் கூற வேண்டும்...சர்வதேச விசாரணை....மனித உரிமை ஆணையாளரின்   பரிந்துரைகள் அமுல் செய்யுமாறு கோர வேண்டும் .....போராட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும்    அப்படி செய்யும் போது இப்போது போராட்டங்களை செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் தேர்தல் ஒன்று வந்தால் ஓடியடி போட்டி போட்டு வேலை செய்யும் இவர்கள் இப்போது ஏன்?.  அமைதியாக இருக்க வேண்டும்   

அவர்கள் கவலை வேறு! இனி யாரிடம் விலை பேசி, விட்டுக்கொடுத்து பணம் சம்பாதிப்பது என்பதே அவர்களது தற்போதைய ஏக்கம். காலம் வந்தபோதெல்லாம் தட்டிக்கழித்தவர்கள் இனி செய்வார்களா? விலை பேச யாருமில்லை. யாரோடு யார் பேரம்பேசுவது?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2022 at 19:21, Kandiah57 said:

கோத்தா போர்குற்றவாளி என்று உரத்துக் கூற வேண்டும்...சர்வதேச விசாரணை....மனித உரிமை ஆணையாளரின்   பரிந்துரைகள் அமுல் செய்யுமாறு கோர வேண்டும் .....போராட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும்    அப்படி செய்யும் போது இப்போது போராட்டங்களை செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் தேர்தல் ஒன்று வந்தால் ஓடியடி போட்டி போட்டு வேலை செய்யும் இவர்கள் இப்போது ஏன்?.  அமைதியாக இருக்க வேண்டும்   

அவர்களும் இந்த பேரணியைப் பார்த்து பயந்துவிட்டார்களோ தெரியவில்லை.. சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சிறுபாண்மை இனமான அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் பேசாமல் இருக்கிறார்களோ தெரியவி்ல்லை. ஏனெனில் இந்த பேரணி, உணவுப்பற்றாக்குறையாலும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் வந்த ஒன்றே தவிர வேறு ஒன்றுமில்லை என எங்கட தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியாமலா இருக்கும். 

ஊழல் உள்ள அரசை இல்லாமல் ஆக்கவேண்டும் என்றோ, மற்றைய இனங்களை மதித்து நடக்கவேண்டும் என்றோ மனம் மாறி வந்த போராட்டம் இது இல்லை என எங்கட தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் இந்தியா என்ன சொல்லும் அமெரிக்கா என்ன சொல்லும் அவர்கள் சொன்ன பிறகு ஏதாவது சொல்லாம் என நினைத்து அமைதியாக இருக்கிறார்களோ தெரியவில்லை.. 

என்னைப்பொறுத்த வரை எங்களுக்குள் ஒருபோதும் ஒற்றுமை இருந்தது இல்லை. புலம்பெயர்அமைப்புகள் உட்பட.. இன்று வரை இலங்கையில் உள்ள இளையோரையும் புலம்பெயர்ந்துள்ள இளையோரையும் இணைத்து ஒன்றாக நகர்வது கூட சாத்தியமா? 2009ற்கு பின் எத்தனை வருடங்கள்.. ஏதாவது முன்னேற்றம்? 

எல்லாவற்றையும் பார்க்க பார்க்க விரக்தியே ஏற்படுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் குறிப்பிடும் அரசியல்வாதிகள் 60 வருடங்களாக ஆழ்ந்து சிந்ததிப்பதினால் தான் ஈழத்தமிழினம் நடுத்தெருவில் நிற்கின்றது.

புலத்தில் இருப்பவர்களையோ ஈழத்தில் இருப்பவர்களையோ   வழிநடத்தி ஒருங்கிணைக்க தெரியாதவதர்கள் கதிரைகளை அலங்கரிக்காமல் என்றோ விலகியிருக்க வேண்டும்.

எமது அரசியல்வாதிகள் இனக்கலவரத்தை நினைத்து அமைதியாக இருக்கின்றார்கள் என்று சொல்லாத வரைக்கும் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களும் இந்த பேரணியைப் பார்த்து பயந்துவிட்டார்களோ தெரியவில்லை.. சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சிறுபாண்மை இனமான அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் பேசாமல் இருக்கிறார்களோ தெரியவி்ல்லை.

உண்மை தான். நானும் செய்திகளில் பார்த்து பயந்துவிட்டேன். நான் இலங்கைக்கு சுற்றுலா தனியாக சென்று சிங்கல பிரதேசங்களையும் சுற்றி பார்க்க எல்லாம் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் தற்போதைய செய்திகளில் அவர்களை பார்த்த பின்பு ஒரு போதும் தனியாக இலங்கைக்கு போக மாட்டேன். எனக்கு சிங்களமும் தெரியாது.முன்பு குழுவாக தான் இலங்கை போயிருந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான். நானும் செய்திகளில் பார்த்து பயந்துவிட்டேன். நான் இலங்கைக்கு சுற்றுலா தனியாக சென்று சிங்கல பிரதேசங்களையும் சுற்றி பார்க்க எல்லாம் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் தற்போதைய செய்திகளில் அவர்களை பார்த்த பின்பு ஒரு போதும் தனியாக இலங்கைக்கு போக மாட்டேன். எனக்கு சிங்களமும் தெரியாது.முன்பு குழுவாக தான் இலங்கை போயிருந்தோம்.

அப்படி ஒவரா பயப்படும் படி இல்லை.

குழு மனநிலை, இப்படி பசி பஞ்சம், என்றால் கொஞ்சம் அதிகமாக உணர்சிவசப்படுவார்கள். கல்லெறிவார்கள், உடை களைவார்கள், வீட்டையும் எரிப்பார்கள்.

ஆனால் சாதாரண காலங்களில் மிகவும் அப்பாவித்தனமாக, நட்போடு பழக கூடியவர்கள்.

மொழி தெரியாமை, நாம் வித்தியாசமாக இருத்தலை வரும் அன்னிய உணர்வு, உலகில் எந்த நாட்டிலும் இருக்கும் கள்ளர் பயம் - இவை தவிர உண்மையில் இலங்கையின் சிங்கள பகுதிகள் அப்படி ஒன்றும் மோசமான இடமில்லை சுற்றுலா போக. 

ஒவ்வொரு அங்குலமும் ஏதோ ஒரு அழகு, அல்லது பார்க்க வேண்டிய சுவாரசியம் கொட்டி கிடக்கும் சிங்கள பகுதிகளில்.

இந்த சிக்கல் தீர்ந்த பின் ஒருமுறை போய் சுற்றிபாருங்கள்.

பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டால் தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

ஆனால் சாதாரண காலங்களில் மிகவும் அப்பாவித்தனமாக, நட்போடு பழக கூடியவர்கள்.

ஓம் நேரில் பார்த்த போது இவ்வளவு அன்பானவர்களாக இருக்கிறார்களே என்று வியப்படைந்ததுண்டு.

59 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு அங்குலமும் ஏதோ ஒரு அழகு, அல்லது பார்க்க வேண்டிய சுவாரசியம் கொட்டி கிடக்கும் சிங்கள பகுதிகளில்.

உண்மை தான்.

கல்லு ஏறிவது,  உடைகளை களைவது, வீடுகளுக்கு நெருப்பு  வைத்து எரிப்பது செய்திகளில் பார்த்து ஏமாற்றமும், அங்கே போக விரும்பியிருந்ததால்  பயமும் வந்தது.

தகவல்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்த வரை எங்களுக்குள் ஒருபோதும் ஒற்றுமை இருந்தது இல்லை. புலம்பெயர்அமைப்புகள் உட்பட.. இன்று வரை இலங்கையில் உள்ள இளையோரையும் புலம்பெயர்ந்துள்ள இளையோரையும் இணைத்து ஒன்றாக நகர்வது கூட சாத்தியமா? 2009ற்கு பின் எத்தனை வருடங்கள்.. ஏதாவது முன்னேற்றம்? 

ஆர்வம் இருந்தால் இளவட்டமே முன்னெடுக்கலாமே...
அவைக்கே குடியுக்கும் கூத்தடிக்கிறத்துக்கும் நேரமில்லை (பெரும்பான்மை இப்படித்தான். நாம் வெளிநாட்டவர், அவங்கள் நாட்டில இருக்கிறாங்கள். நாங்கள் ஏன் அவங்களிட்டை போக வேண்டும் என்ற மனப்பான்மை இஞ்ச சில இளவட்டத்திட்ட கண்டிருக்கிறன்.) இதிலை உதுக்கு எங்கத்தைப் போறது. போதாக்குறைக்கு கொசமேனும் ஊரைப் பத்தியோ இல்லை இனத்தின்ட வரலாறோ தெரிந்திருக்க வேணும். சும்மா மாவீரர் நாளுக்கு ஒரு கார்த்திகைப் பூவை வைச்சால் போதாது (அந்த கார்திகைப் பூவின்ட பெயரே அதுதானென்டு பாதிப் பேருக்குத் தெரியாது!)🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2022 at 13:42, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களும் இந்த பேரணியைப் பார்த்து பயந்துவிட்டார்களோ தெரியவில்லை.. சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சிறுபாண்மை இனமான அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் பேசாமல் இருக்கிறார்களோ தெரியவி்ல்லை. ஏனெனில் இந்த பேரணி, உணவுப்பற்றாக்குறையாலும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் வந்த ஒன்றே தவிர வேறு ஒன்றுமில்லை என எங்கட தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியாமலா இருக்கும். 

ஊழல் உள்ள அரசை இல்லாமல் ஆக்கவேண்டும் என்றோ, மற்றைய இனங்களை மதித்து நடக்கவேண்டும் என்றோ மனம் மாறி வந்த போராட்டம் இது இல்லை என எங்கட தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் இந்தியா என்ன சொல்லும் அமெரிக்கா என்ன சொல்லும் அவர்கள் சொன்ன பிறகு ஏதாவது சொல்லாம் என நினைத்து அமைதியாக இருக்கிறார்களோ தெரியவில்லை.. 

என்னைப்பொறுத்த வரை எங்களுக்குள் ஒருபோதும் ஒற்றுமை இருந்தது இல்லை. புலம்பெயர்அமைப்புகள் உட்பட.. இன்று வரை இலங்கையில் உள்ள இளையோரையும் புலம்பெயர்ந்துள்ள இளையோரையும் இணைத்து ஒன்றாக நகர்வது கூட சாத்தியமா? 2009ற்கு பின் எத்தனை வருடங்கள்.. ஏதாவது முன்னேற்றம்? 

எல்லாவற்றையும் பார்க்க பார்க்க விரக்தியே ஏற்படுகிறது

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இது நான் உள்பட இங்குள்ள அனைவருக்கும் தெரியும்    செயல்கள என்பது சிந்தனை,எண்ணங்கள் இருந்து பிறப்பது.  இவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் நாங்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக இருக்க வேண்டும் என்பது தான் தமிழர்கள் பிரச்சினைகள் பற்றியும் அதை எவ்வாறு தீர்வு காணலாம் அதற்கு நாங்கள் என்ன செய்யலாம் என்று எல்லாம் சிந்தித்து பார்ப்பது இல்லை.  தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்   பேச்சுவார்த்தைக்கு பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி உள்ளார்  மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களையும் உருவாக்கியுமிருக்கிறார்.  அப்படி தானே உருவாக்கிய சந்தர்ப்பங்களையும்  பயன்படுத்தி உள்ளார் 

மேலும் தமிழ்த்தலைவர்கள் தேர்தலில் போட்டி இடும்போதும் வாக்குறுதிகளை கொடுப்பாங்களே அப்போதெல்லாம் நீங்கள் மேலே சொன்ன காரணங்கள் இருக்கும் இல்லையா?. எப்படி அமெரிக்கா இந்தியா......எல்லாவற்றையும் மறந்து வாக்குறுதிகளை கொடுக்க முடிகிறது?     இப்போது சிங்களமக்கள். செய்வது… போல் நாங்களும் தமிழ்தலைமைகளை மாற்றினால் நிச்சயம் விடுதலை கிடைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2022 at 23:10, satan said:

அவர்கள் கவலை வேறு! இனி யாரிடம் விலை பேசி, விட்டுக்கொடுத்து பணம் சம்பாதிப்பது என்பதே அவர்களது தற்போதைய ஏக்கம். காலம் வந்தபோதெல்லாம் தட்டிக்கழித்தவர்கள் இனி செய்வார்களா? விலை பேச யாருமில்லை. யாரோடு யார் பேரம்பேசுவது?

கோத்தாவைத் துரத்துவதுபோல் இவர்களையும் (சம் சும் செம்....) துரத்துவதுதான் சரியானதாக இருக்கும். துரத்திவிட்டு இளையதலைமுறை முன்னுக்கு வரவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.