Jump to content

நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனங்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனங்களும்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 
சிங்க சிலை

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.

இந்த சிலையின் உயரம் 6.5 மீட்டர். வட்ட தட்டில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பது போன்றான சிலை அது.

ஆனால் கி.மு. 250ம் ஆண்டை சேர்ந்த சிங்க முத்திரை தற்போது புதிய வடிவமைப்பில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிங்கங்கள் தனது கோரைப் பற்களை ஆக்ரோஷமாக காட்டுவது தேவையற்ற சித்தரிப்பு என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் இந்த நான்கு சிங்கங்கள் பழைய அசோகர் சிங்க முத்திரையில் இருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் நடுவில் அமைந்துள்ள 9,500 கிலோ எடையுள்ள அந்த சிலையை திறந்து வைக்கும் வீடியோவை திங்களன்று காலை பகிர்ந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோதி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

கி.மு. 250 காலப் பகுதியில் பேரரசர் அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட பல தூண்களின் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட அந்த சிங்க முத்திரையை அடிப்படையாகக் கொண்டே இந்த சிங்க சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சிங்க முத்திரை நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்பட்டது, தலை நகரத்தில் காலனித்துவ அடையாள நீக்கத்தில் முக்கிய மைல்கல் ஆகும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்த சிங்கங்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதியதாக வடிவமைக்கப்பட்ட சிங்கங்கள் 'இணக்கத்துடனும், மேண்மையுடன்' காணப்படுவதற்கு பதிலாக 'சீறிப்பாயும் ஒரு விலங்கை போல காட்சியளிக்கின்றன' என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திட்டம், டெல்லியில் உள்ள காலனித்துவ கட்டடங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கான செலவு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

எதிர்க்கட்சியினர் இத்தனை பெரும் தொகையில் இந்த கட்டடம் கட்டப்படுவது குறித்து விமர்சித்தனர். மேலும் அந்த கட்டடத்தின் வடிவமைப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்தான் தற்போது சிங்க முத்திரை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாரம் யெச்சூரி, "தேசிய சின்னத்தை திறந்து வைத்து, அரசமைப்புச் சட்டத்தை மோதி மீறியுள்ளார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாகத் துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நரேந்திர மோதி அழித்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து மத முறையில் பூஜை செய்தது குறித்தும் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல தாங்கள் இந்த சிலை திறப்பிற்கு அழைக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து வைக்கிறது நமது அரசமைப்புச் சட்டம். இந்தியப் பிரதமராக உள்ள மோதி, நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தேசிய சின்னத்தை திறந்து வைத்திருக்கக் கூடாது. மக்களவை சபாநாயகர் அரசின் உதவியாளர் அல்ல. பிரதமர் மோதி அனைத்து அரசியலமைப்பு விதிகளையும் மீறிவிட்டார்," என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிதெரிவித்துள்ளார்.

சிலை திறப்பின் போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

"உண்மையை சொல்ல வேண்டுமானால் சத்யமேவ ஜெயதே என்பதிலிருந்து சிங்கமேவ ஜெயத்தேவிற்கு நாம் எப்போதோ மாறிவிட்டோம்," என திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

"அசோக சிங்கங்கள் தற்போது பற்களை காட்டுகின்றன? மோதி அரசின் புதிய வரவாக இது உள்ளது" என தெலங்கானா ஆளும் கட்சியான ராஷ்டிர சமிதி சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

இந்த புதிய சிங்கங்கள் கருணையும் கம்பீரத்துடனும் இருப்பதை காட்டிலும் ஆக்ரோஷமாக தெரிகின்றன என எழுத்தாளர் கிரண் மன்ரால் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரும் அக்டோபரில்தான் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/india-62135460

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

சீனாவை… பயப்படுத்த, கோரைப் பல் சிங்கத்தை,  அறிமுகப் படுத்தியுள்ளார்களோ… 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் திசையை பார்க்கும் சிங்கத்துக்கு கோரைப்பற்களில் இருந்து ரத்தம் ஒழுக  விட்டிருக்கலாம்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்:  மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனங்களும் - BBC News தமிழ்

Datei:Sri Lankan Army Flag.svg – Wikipedia

தேசிய சின்னத்தில்.. சீறிப்பாயும் சிங்கங்கள்.
இந்தியாவும், ஸ்ரீலங்காவும்  சிங்கத்தை தேசிய சின்னமாக வைத்துள்ளது.
ஒன்றுக்கு கோரப் பல்லு, மற்றதின் கையில் வாள். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அமெரிக்க தேசியப் பறவையாக Bald Eagleஐத் தெரிவு செய்யும்போதும் இதே விதமான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்தக் கழுகு இனங்கள் பிற பறவைகளது உணவினை பறித்து உண்பவை என கூறப்பட்டது. ஆனாலும் இந்த வாதங்கள் புறந்தள்ளப்பட்டு Bald Eagle தெரிவு செய்யப்பட்டது. 

தற்போதைய அமெரிக்காவின் செயல்களுக்கும் இந்தக் கழுகின் செயல்களுக்கும் இடையிலான  ஒற்றுமைகளை நாம் கண்ணால் காண்கிறோம்

 இந்தப் புதிய சிங்கங்கள், எதிர்கால இந்தியாவுக்கான கட்டியங்கூறலாகக் கொள்ளலாமா ? 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.