Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடி வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.. 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாடாளுமன்றத்திற்கு... அருகில், துப்பாக்கி பிரயோகம்!

நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு!

T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும்... போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு!

பத்தரமுல்ல – பொல்துவ சந்திக்கு அருகில் நேற்றிரவு (புதன்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ சிப்பாய் ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு இராணுவ சிப்பாய் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவரது T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291117

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people, people standing and text

 

May be an image of 3 people, beard and text that says 'dhanizali Kelaniya Football Complex Liked by namal_rajapaksa and 62 others'

 

May be an image of 4 people, people standing and text that says 'dhanizali Colombo Racecourse 1/6 8 Liked by namal_rajapaksa and 53 others dhanizali Football talk with Namal Rajapaksa sports minister #nr #namalrajapaksa View 1 comment November 10, 2021'

இவர்தான்... நேற்று ரூபவாஹினிக்குள் போய் சண்டித்தனம் காட்டியவர். 
இவர்,  யாருடைய ஆள் என்று புரிந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இவ எங்கட @பெருமாள்ட தோஸ்த்

பெரும்ஸ் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி குடுத்திருக்கிறார்👌👏👏👏

மனிசி  நாங்க கொடுக்கும் ஆதரவை பார்த்து பூநகரி மொட்டை கருப்பான் தான் மூன்று நேரமும் சாப்பிடும் கதை உடான்ஸ் சாமியாருக்கு எட்டவில்லை போல உள்ளது .😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:
On 13/7/2022 at 19:27, goshan_che said:

இவ எங்கட @பெருமாள்ட தோஸ்த்

பெரும்ஸ் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி குடுத்திருக்கிறார்👌👏👏👏

மனிசி  நாங்க கொடுக்கும் ஆதரவை பார்த்து பூநகரி மொட்டை கருப்பான் தான் மூன்று நேரமும் சாப்பிடும் கதை உடான்ஸ் சாமியாருக்கு எட்டவில்லை போல உள்ளது

என்ன பெருமாள் உங்க தொகுதி ஆள் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

மனிசி  நாங்க கொடுக்கும் ஆதரவை பார்த்து பூநகரி மொட்டை கருப்பான் தான் மூன்று நேரமும் சாப்பிடும் கதை உடான்ஸ் சாமியாருக்கு எட்டவில்லை போல உள்ளது .😃

👍.

சாமியார் கவனம் கபினெட் லெவல் கிசுகிசுக்களில்தான்😆

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2022 at 10:55, தமிழ் சிறி said:

May be an image of 9 people, people standing and text

 

May be an image of 3 people, beard and text that says 'dhanizali Kelaniya Football Complex Liked by namal_rajapaksa and 62 others'

 

May be an image of 4 people, people standing and text that says 'dhanizali Colombo Racecourse 1/6 8 Liked by namal_rajapaksa and 53 others dhanizali Football talk with Namal Rajapaksa sports minister #nr #namalrajapaksa View 1 comment November 10, 2021'

இவர்தான்... நேற்று ரூபவாஹினிக்குள் போய் சண்டித்தனம் காட்டியவர். 
இவர்,  யாருடைய ஆள் என்று புரிந்ததா?

இலங்கை நெருக்கடி: நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? 'வைரல் போட்டோ' போராட்டக்காரர் கூறுவது என்ன?

  • எம்.மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
41 நிமிடங்களுக்கு முன்னர்
 

போராட்டக்காரர்

இலங்கையில் அதிகார மையங்களாக விளங்கிய 4 முக்கியமான கட்டடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், அதில் முன்வரிசையில் செயல்பட்ட ஒரு போராட்டக்காரர், மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது.

அந்தப் போராட்டக்காரரின் பெயர் டேனிஸ் அலி. புதன்கிழமையன்று பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்டதிலும் காலி முகத்திடல் மற்றும் அதிபர் மாளிகையில் போராட்டங்களை முன்னெடுத்ததிலும் முக்கியப் பங்காற்றியவர்.

2019, 2020-ஆம் ஆண்டில் அவரும் நாமல் ராஜபக்ஷவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் புதன்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. நாமல் ராஜபக்ஷவுடன் அவர் தொடர்பில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்தார்கள்.

நாமல் ராஜபக்ஷ தரப்பிலும் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. டேனிஸ் அலி தம்மை முன்பு தம்மைச் சந்தித்ததாகவும் ஆனால் வன்முறைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ தரப்பிலான ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பிபிசி தமிழிடம் டேனிஸ் அலி பேசினார். "நாமல் ராஜபக்ஷவைச் சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது எல்லாம் உண்மைதான். அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன". என்றார் அவர்.

"நான் கால்பந்துடன் தொடர்புடையவன். நாமல் ராஜபக்ஷவுக்கும் கால்பந்தில் ஆர்வம் உண்டு. அவர் அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். நான் கால்பந்து தொடர்பான ஊடகம் ஒன்று வைத்திருக்கிறேன். எனது அப்பா, தம்பி ஆகியோர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார்கள். நானும் பள்ளி அளவில் கால்பந்து விளையாடி இருக்கிறேன். கால்பந்து தொடர்பான நிகழ்வின்போது விளையாட்டு அமைச்சர் என்ற முறையில் நான் அவரைச் சந்தித்தேன்" என்று டேனிஸ் அலி கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது, "நான் பிரதமர் அலுவலகத்தில் இருப்பது அவர்களுக்குப் பிரச்னை" என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று அதில் மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள் என்று கூறினோம். ஆனால் அதைக் கைப்பற்றுவது எங்களது நோக்கமல்ல. அதன் பிறகுதான் எனது புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. என்னை ஒரு தீவிரவாதி போலச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்" என்றார் டேனிஸ் அலி.

அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்

புதன்கிழமையன்று மிகவும் ஆவேசமாக நடந்த போராட்டங்கள் மறுநாளே சற்றுத் தணிந்திருந்தது. அவசரச் சட்டம், ஊரடங்கு ஆகியவை காரணமாக மக்கள் கூட்டம் குறைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 24 மணி நேரத்துக்கும் மேலாக தங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதமர் அலுவலக கட்டடத்தை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறினார்கள். இப்போது அது அரசின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கிறது.

போராட்டக்காரர்களில் ஒரு தரப்பினர் கட்டடங்களை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக இருந்தாலும் மற்றொரு தரப்பினர் அதை ஏற்கவில்லை. கடைசியாக அரசுக் கட்டடங்களை ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்ததாக டேனிஸ் அலி பிபிசியிடம் தெரிவித்தார்.

"தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற விருப்பம் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த முடிவை ஏற்று வெளியேறுகிறோம்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது பலர் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினாலும் சிலர் தயக்கத்துடனேயே வெளியேறினார்கள்.

இதே போல் அலரி மாளிகை எனப்படும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் மாளிகையும் இப்போது அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கிறது.

 

போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு மூடப்பட்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம்

 

படக்குறிப்பு,

போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு மூடப்பட்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம்

கைப்பற்றப்பட்ட 4 கட்டடங்களை போராட்டக்காரர்கள் ஒப்படைந்திருந்தாலும், காலி முகத் திடல் பகுதியில் இருக்கும் அதிபரின் அலுவலகத்தை மட்டும் இப்போது ஒப்படைப்பதாக இல்லை என்று போராட்டகாரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

முக்கிய இலக்கான கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது நடந்துவிட்டது. இன்னும் அவர்களுக்குப் பல கோரிக்கைகள் உண்டு. அதற்காக காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் அதே உற்சாகத்துடனும் புதிய கொண்டாட்டத்துடனும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/sri-lanka-62159512

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2022 at 04:34, ஈழப்பிரியன் said:

 

கண்ணுக்கு குளிர்மையான காட்சி, போதுமா வசீ? அப்பப்போ ஆட்சி பீடமேற, கட்டம் கட்டமாக தமிழர்மேல் வைத்த தீ, நிண்டு எரியுது! தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிவந்து, இழைக்கப்பட்டவர்களால்  ஏற்றுக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து எரியக்கடவதாக!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.