Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறுவதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறுவதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த 98 நாட்களாக அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த போராட்டக்காரர்கள் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து தாம் உடனடியாக வெளியேறுவதாக இன்றையதினம் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது போராட்டாம் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து வெளியேறும் வரை தொடரும் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/131435

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி இருக்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, கிருபன் said:

தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறுவதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்பு

ஏதோ நாட்டை கைப்பற்றின பீலிங்......:cool:
ராணுவ அடக்குமுறைக்கு பெயர் போன சிறிலங்காவில் இப்படியொரு அற்புதமா?

சிரிப்பு சிரிப்பாய் வருது கோவாலு 🤣

மனோ கணேசனின் முகப்புத்தகத்திலிருந்து :

 

<#புலிகளை" பிளந்த ரணிலுக்கு எம்மை பிளப்பது சுலபம் என காலிமுக போராட்ட குரலொன்று கூறுகிறது..!> 

1)பாராளுமன்றத்தையும் ஆக்கிரமித்து, அரசியலமைப்பு மூலமாக எமக்கு தீர்வு தரும் கடைசி அமைப்பையும் அழிக்க வேண்டாம் என்கிறார்.

2)ஏற்கனவே போராட்டக்காரர்கள், ஆக்கிரமிக்க வேண்டிய ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களை ஆக்கிரமித்து விட்டோம். அவ்வேளைகளில் ஒரு உயிர் சேதமும் ஏற்பட வில்லை. அதாவது அவ்வேளைகளில்  இராணுவம் சுடவில்லை. அதாவது உயிர்கொல்லி தோட்டாக்கள்/live ammunition இராணுவத்தால் இதுவரை  பயன்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆனால், இப்போது சுடலாம் என்கிறார். 

3)பெதும் கேர்னர் (Pathum Kerner) என்ற நபர் காலி முக போராட்டத்தில் நுழைந்து இத்தகைய  "பாராளுமன்றத்தை பிடி" என்ற தவறான வழிகாட்டலை தருவதாக சொல்கிறார்.

4)இதன்மூலம் போராட்டத்தில் பிளவு வருகிறது. "புலிகளை" பிளந்த ரணிலுக்கு இந்த போராட்டத்தையும் பிளப்பது சுலபம் என்கிறார்.  

5)பாராளுமன்றத்தில், சபாநாயகர் இல்லத்தில், கை வைத்தால் உலகமும் எம்மை நிராகரிக்கும். ஏற்கனவே எமக்கு ஆதரவாக இருந்த  "சட்டத்தரணிகள்" சங்கமும் இப்போது எம்மை விமர்சிக்கிறது என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அறகளையவை ஆரம்பித்து வைத்தவர்களின் நோக்கம் நிறைவேறியதும் அறகளை முடித்து வைக்கப்படுகிறது?

ரூபவாகினியில் பூந்தவர், பேட்டி கொடுத்தவர் முன்னர் நாமலுடன் நின்ற போட்டோ சுத்துகிறது.

பாராளுமன்றை நோக்கி போனதும் உள்குத்து என்றே சொல்கிறார்கள்.

போராட்டகாரர் கொஞ்சமாவது வெற்றி எண்டு அறிவிப்பது என்றால் - ரணிலை தவிர வேறு எவரையாவது ஜனாதிபதியாக்குவதுதான். 

ஆனால் ரணில்தான் அமெரிகாவின் தேர்வு என்றால் - வேறு எவரையும் விட நமக்கு அவர் சாதகமான தெரிவாக இருக்க கூடும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people, people standing and text

 

May be an image of 3 people, beard and text that says 'dhanizali Kelaniya Football Complex Liked by namal_rajapaksa and 62 others'

 

May be an image of 4 people, people standing and text that says 'dhanizali Colombo Racecourse 1/6 8 Liked by namal_rajapaksa and 53 others dhanizali Football talk with Namal Rajapaksa sports minister #nr #namalrajapaksa View 1 comment November 10, 2021'

போராட்டக் காரருக்குள்  மகிந்த கோஷ்டியின்  ஆட்கள் கலந்து விட்டார்கள்.
இவர்தான்... நேற்று ரூபவாஹினிக்குள் போய் சண்டித்தனம் காட்டியவர். 
இவர்,  யாருடைய ஆள் என்று புரிந்ததா?

நேற்று... இராணுவத்தின்...  T-56 துப்பாக்கியும்,   60 தோட்டாக்களும்... 
போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக வந்த செயலும் இவர்களின் வேலை தான்.

இனி... அவர்களுடன் சேர்ந்து, வன்முறையை கையில் எடுத்து,
பொதுமக்களின்  அதிர்ப்திக்கு... போரட்டக்கார்களை இலக்கு வைப்பார்கள்.  
அதற்கு முதல்...கைப்பற்றிய இடங்களை விட்டு வெளியேறுவதுதான் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people, people standing and text

 

May be an image of 3 people, beard and text that says 'dhanizali Kelaniya Football Complex Liked by namal_rajapaksa and 62 others'

 

May be an image of 4 people, people standing and text that says 'dhanizali Colombo Racecourse 1/6 8 Liked by namal_rajapaksa and 53 others dhanizali Football talk with Namal Rajapaksa sports minister #nr #namalrajapaksa View 1 comment November 10, 2021'

போராட்டக் காரருக்குள்  மகிந்த கோஷ்டியின்  ஆட்கள் கலந்து விட்டார்கள்.
இவர்தான்... நேற்று ரூபவாஹினிக்குள் போய் சண்டித்தனம் காட்டியவர். 
இவர்,  யாருடைய ஆள் என்று புரிந்ததா?

நேற்று... இராணுவத்தின்...  T-56 துப்பாக்கியும்,   60 தோட்டாக்களும்... 
போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக வந்த செயலும் இவர்களின் வேலை தான்.

இனி... அவர்களுடன் சேர்ந்து, வன்முறையை கையில் எடுத்து,
பொதுமக்களின்  அதிர்ப்திக்கு... போரட்டக்கார்களை இலக்கு வைப்பார்கள்.  
அதற்கு முதல்...கைப்பற்றிய இடங்களை விட்டு வெளியேறுவதுதான் நல்லது. 

உண்மைதான். ரணில்-ராஜபக்ச கூட்டு escalate to deescalate உத்தியை எடுத்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உண்மைதான். ரணில்-ராஜபக்ச கூட்டு escalate to deescalate உத்தியை எடுத்துள்ளது. 

இனி... இராணுவம், சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளும் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இனி... இராணுவம், சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளும் போல் தெரிகிறது.

அது அவர்களுக்குக் கைவந்தகலையாறிற்றே. உலகநாடுகளில் உள்ள பெரும்பாலான ஆயுதப்படைகள் அரசைக்காப்பதற்காக மக்களைக் கொல்லவோ துன்புறுத்தவோ தயங்கியதில்லை. அதிலும் தென்னாசிய வட்டகை ஒருபடி மேல். சி.சு.கட்சியும், ஐ.தே.கட்சியும் சிங்கள இளைஞர்களையும் கொன்றுகுவித்தவர்கள்தானே. அதிகாரத்தைக்காத்து உயர்குழாத்து மக்களுக்கு சேவைகளை வழங்குவதே அரசுகளின் இலக்கு. அதற்காக அவர்கள் கொலையென்ன எதையும் செய்வார்கள். பருத்தி உற்பத்தி செய்பவனுக்குக் கிடைப்பதென்னவோ கோவணத்துணி மட்டுமே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் கோரிக்கைகள் வெல்லப்படும் வரை ஜனாதிபதி செயலகத்தில் போராட்டம் தொடரும் - காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

(எம்.எப்.எம்.பஸீர், நா.தனுஜா)

 

தன்னெழுச்சி போராட்டக் காரர்களால் கைப்பற்றப்பட்ட,  கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை,  கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய மூன்று அரச கட்டிடங்களையும் முழுமையாக மீள கையளிக்கவும், அக்கட்டிடங்களிலிருந்து வெளியேறவும் போராட்டக் காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து 14 ஆம் திகதி வியாழக்கிழமை கோட்டை - காலி முகத்திடல் - கோட்டா கோ கமவில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தி போராட்டத்துடன் தொடர்புடைய செயற்பட்டாளர்கள் அறிவித்ததுடன், குறித்த மூன்று அரச கட்டிடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறினர்.

எனினும் கைப்பற்றப்பட்ட, பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியான  தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின்  கடைமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படா வண்ணம் அதனை தமது பொறுப்பில் தொடர்ந்து வைத்திருக்க போராட்டக் காரர்கள் தீர்மானித்துள்ளனர். 

ஆட்சியாளர்களுக்கு தொடர்ச்சியாக போராட்டக் களத்திலிருந்து ஒரு வலுவான அரசியல் செய்தியை வழங்கும் முகமாக , செயலகத்தினை தொடர்ந்து தமது பொறுப்பில் வைத்திருக்க தீர்மானித்ததாகவும்,  மக்களின் கோரிக்கைகளை வெல்லும் வரை தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்து போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

' ஜனாதிபதி செயலகம் என்பது பழைய பாராளுமன்ற கட்டிடமாகும்.  மக்கள் தமது இறைமையையை நிறைவேற்று அதிகாரம்,  சட்டவாக்கம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றின் ஊடாக செயற்படுத்த அதிகாரமளித்திருக்கும் நிலையில், தற்போது அதே மக்கள் தமது இறைமையையை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க எத்தனித்துள்ளனர். 

ஜனாதிபதி செயலக நடவடிக்கைகள் பெரும்பாலும் கட்டிடத்தின் பின்னால் அமைந்துள்ள பகுதியிலேயே இடம்பெறும்.

எனவே நாம் செயலகத்தின் முன் பகுதியை தொடர்ந்து எமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமைதிப் போராட்டத்தை தொடரவுள்ளோம். 

இதனூடாக புதிய பாராளுமன்றத்துக்கு நாம் பலமான  அரசியல் செய்தியை தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம்.' என போராட்டக் காரர்கள் சார்பில்  ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் குறிப்பிட்டார்.

அந்தவகையில் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்களின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் முதலாவதாகக் கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கூறிய விடயங்கள் வருமாறு:

 நாமனைவரும் ஒன்றிணைந்து 97 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்த மக்கள் போராட்டம் இன்று (14) முக்கியமானதொரு வெற்றியைப் பதிவுசெய்திருக்கின்றது.

சபாநாயகரின் கருத்தின் பிரகாரம் மிகமோசமான ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியிருக்கும் நிலையில், சட்டரீதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் என்ற அடிப்படையில் நாம் மக்கள் போராட்டத்தில் வெற்றிகண்டிருக்கின்றோம்.

இன்றளவிலே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவொரு நாட்டிற்கும் செல்லமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. அவர் ஓர் அரசியல் அநாதையைப்போன்ற நிலையில் இருக்கின்றார். இலங்கை மக்களுக்கு இழைத்த பாவங்களுக்கும் துரோகங்களுக்குமான தண்டனை அவருக்கு இப்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அந்தப் பதவிலிருந்து துரத்திடிக்கும் போராட்டத்தில் மக்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள் என்று அறிவிக்கின்றோம்.

 இனியொருபோதும் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதியாக முடியாது என்ற உறுதிப்பாடு ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பதவியிலிருந்து விலகவேண்டும் என்பதே எமது இரண்டாவது கோரிக்கையாக இருக்கின்றது.

நாடளாவிய ரீதியிலிருந்து தன்னிச்சையாக ஒன்றிணைந்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரைப் புறக்கணித்தார்கள்.

எனவே இலங்கை மக்களின் விருப்பத்திற்கு முரணான வகையில் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான உரிமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். 

அதேவேளை மக்களின் வெற்றியைத்தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இதுவரையான காலப்பகுதியில் நாம் கைப்பற்றிய ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய மூன்று முக்கிய இடங்களிலிருந்தும் வெளியேறுவதற்கு ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட காலிமுகத்திடல் பகுதியில் எமது போராட்டம் தொடரும். அங்கு வருகைதருமாறு நாட்டுமக்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.

அங்கிருந்து அஹிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம். சொத்துக்களைக் கைப்பற்றிக்கொள்வதிலோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதிலோ எமக்கு எந்தவொரு வெற்றியும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.

மாறாக ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகச்செய்வதும், மக்கள் ஆணையின் பலத்தை மேலோங்கச்செய்வதுமே எமது உண்மையான வெற்றியாகும். எனவே ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

 அவரைத்தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் கூறியதாவது:

 போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் செயற்பாடுகளும், அவர்களால் முக்கிய கட்டமைப்புக்கள் கைப்பற்றப்பட்டமையும் சில தரப்பினரால் வன்முறை செயற்பாடுகளாகக் காண்பிக்கப்படுகின்றன.

ஆனால் மக்களால் மக்களுக்காக நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டம் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அமைதியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கின்றன.

அதேபோன்று ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமான பொதுச்சொத்துக்களாகும். ஆகவே அவற்றைக் கையகப்படுத்துகின்ற உரிமை மக்களுக்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.  

அடுத்ததாகப் பேசிய ராஜ்குமார் ரஜீவ்காந்த் பின்வருமாறு தெரிவித்தார்:

ஆரம்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்பதே காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. 

ஆனால் பின்னர் அவர்களைப் பாதுகாப்பதற்கு முயன்ற ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டும் என்பது போராட்டக்காரர்களின் நிபந்தனையாக மாறியது.

இவ்வாறானதொரு பின்னணியில் போராட்டங்களின் மூலம் நாம் ஏற்கனவே கைப்பற்றிய 4 இடங்களில் ஜனாதிபதி செயலகம் தவிர்ந்த ஏனைய 3 இடங்களைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தாலும், ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை மக்களின் துணையுடன் மேலும் தீவிரமாக எமது போராட்டம் தொடரும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம். 

அதேவேளை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மக்களின் மீது ஆயுதங்களையும் அடக்குமுறைகளையும் பிரயோகிக்கும் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
 

https://www.virakesari.lk/article/131479

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.