Jump to content

இலங்கையில் போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

33 நிமிடங்களுக்கு முன்னர்
 

மஹிந்த

பட மூலாதாரம்,PMD

இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன?

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். பிபிசி சிங்கள சேவையும் அவரிடம் சில கேள்விகளை எழுப்பியது.

கேள்வி: ரணில் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அவர் அதிக வாக்குகளைப் பெற்றார், அதனால் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

கேள்வி: அவர் உங்களது நெடுங்கால அரசியல் எதிரியாக இருந்தவர். நீங்களும் அவருக்கு வாக்களித்தீர்களா?

பதில்: அப்படியும் சொல்ல முடியாது... (சிரிக்கிறார்)

 

ரணில்

பட மூலாதாரம்,PMD

 

படக்குறிப்பு,

ரணில் விக்கிரமசிங்க

கேள்வி: இப்போது அமைச்சரவையிலும் அரசாங்கத்திலும் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: என்ன நடக்கப் போகிறதென்று நாங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும்.

கேள்வி: புதிய அரசாங்கத்தில் உங்கள் பங்களிப்பு இருக்குமா?

பதில்: அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதைச் செய்வோம்.

கேள்வி: உங்கள் கட்சித் தலைவர் டளஸ் அழகபெருமவுக்கு ஆதரவளித்தார். ஏன் இந்த கருத்து வெறுபாடு?

பதில்: நாங்களும் அவருக்குத்தான் வாக்களித்தோம். ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார். யாராவது ஒருவர்தானே வெற்றிபெற முடியும்...

(பிபிசி கேள்வி): ரணில் மீது பல விமர்சனங்கள் உள்ளன — போராட்டக்காரர்கள் மற்றும் பிறரிடமிருந்து. மக்களின் உண்மையான குரல் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கவில்லை என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து?

பதில்: பல்வேறு கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அவர்கள் (போராட்டக்காரர்கள்) அவர்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறார்கள். நாங்கள் எங்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறோம்.

கேள்வி: மக்களின் போராட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: போரட்டம் போதுமென்று நினைக்கிறேன். போராட்டத்தை அவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62249346

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம்.. சும்மா நிகழவில்லை. நீங்கள் மக்கள் மீது திணித்த பளுக்களால் உருவானது. அது அவ்வளவு இலகுவில் அடங்கிறதா தெரியவில்லை. வினை விதைத்தவன் வினையறுப்பான். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

கேள்வி: அவர் உங்களது நெடுங்கால அரசியல் எதிரியாக இருந்தவர். நீங்களும் அவருக்கு வாக்களித்தீர்களா?

அவர்கள் கட்சி அடிப்படையில் மட்டுமே கொள்கை வேறுபாடு உடையவர்கள். இப்போது சிங்கள மக்களுக்குள் நடப்பது ஒரு பொது பிரச்சனை. எனவே இந்த விடயத்தில் ஒற்றுமைமையாக இருப்பார்கள்.

இந்த ஒற்றுமை தமிழர் தரப்பில்  வருவதானால் சில மரண அறிவித்தல்களின் பின் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அவர்கள் (போராட்டக்காரர்கள்) அவர்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறார்கள். நாங்கள் எங்களது குரல்தான் மக்களின் குரல் என்று சொல்கிறோம்.

போராட்டம் செய்வதே மக்கள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியாத அறிவாளி! மக்களால்  தேர்வு செய்யப்படாத ஒருவர் நாட்டின் சனாதிபதி! மக்களால்  அடித்து துரத்தப்பட்டவரும் தாங்கள் மக்களின் குரலாம். மக்களின் குரல் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு, ஆடிய தகிடு தத்தங்கள் போதும், போய் பிள்ளை குட்டியளோடு ஓய்வெடுங்கள்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.