Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Nathamuni said:

இளையராஜா மட்டுமா?

சினிமாவில் பிராமணர் எங்கே ஆதிக்கம் செலுத்தினார்கள்?

கே பாலசந்தர், விசு தவிர, கருணாதி முதல், எம்ஜிஆர், சிவாஜி, மெய்யப்ப செட்டியார், பாரதிராஜா, பாக்யராஜ், பா ரஞ்சித் என்று அடித்தட்டிலிருந்து வந்தவர்கள் லிஸ்ட் அதிகமே.... 

பிராமணர்களை செருப்பால் அடித்த பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படம் தேசிய விருது பெற்றது என நினைக்கின்றேன்.அதில் பார்ப்பன சாருகாசன் நடித்தது இன்னும் சிறப்பு....

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

இளையாராவை ரமண மகரிஷி அழைக்கும் வரை சினிமாக்காரன் மாதிரியே ஒரு சில கிசு கிசுக்களுடன் வாழ்ந்தார்.மகரிஷி  ஒரு கோவில் கோபுரம் கட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடாத்தி நிதி சேகரித்து தரும்படி வேண்டிக்கொண்ட பின்னரே உருத்திராட்ச மாலை அணியத்தொடங்கினார் என நினைக்கின்றேன். மற்றும் படி இளையராஜா பிறப்பில் ஒரு கிறிஸ்தவர்.

இல்லை.

ராஜா எப்போதும் தன்னை பிராமண-நண்பராக, இந்துவாகவே முன்னிலைபடுத்தினார். தனது சாதிய, மத அடயாளங்களை அவர் தனதாகவே காட்டி கொண்டதில்லை. என்பதே நான் கேள்விபட்டது.

இது திட்டமிட்டா அல்லது அவருக்கு உண்மையிலே இந்த மனநிலைதானா என்பது தெளிவில்லை. அவராகா சொன்னால்தான் புரியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சினிமாவில் பிராமணர் எங்கே ஆதிக்கம் செலுத்தினார்கள்?

🤣. தமிழ் சமூகத்தில் அத்தனை துறையிலும் இருந்த ஆதிக்கம் சினிமாவில் மட்டும் இல்லாமல் இருக்குமா?

மேடை நாடகம் முழுக்க பிராமணர் வசம் இருந்தது. சிலர் தவிர. அதில் இருந்தே சினிமா ஆரம்பத்தில் வந்தது.

ஒரு கட்டத்தில் பிராமண ஆதிக்கம் மட்டுமே இருந்தது.

பின்னர் அதற்கு மாற்றாக பிராமணர் அல்லாதோர் போட்டிக்கு இறங்கினார்கள். இதை பெருமளவு தெலுங்கு லாபி என்றும் சொல்லலாம். 

ஆனால் தலித் அரசியலை, அடக்குமுறையை, சுட்டும் தலித் லாபி என்று ஒன்று இன்றுவரை இல்லை.

அந்த அரசியலை கதைக்க கூட தேவையில்லை, தலித்தாகா இருந்தாலே தமிழ் சினிமாவில் மேலே வர முடியாது.

இப்போதும் ரஞ்சித் போன்ற சிலர் மட்டுமே அறிவு போன்றோர் பின்னால் நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஒன்று போதாதா, என்ன?

மேலும் நான் எனது பார்வையை தான் சொன்னேன், அதில் தவறு இருக்கலாம்.

உங்கள் கூற்றை நிரூபிப்பதற்கு ஒரு இளையராஜா போதாது சாரே..😀

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

பெரியாரின் திராவிட/திராவிட மொடல் நாட்டில் சாதி இன்னும் இருக்கா? 

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

1. ஏற்கனவே தலைப்பை விட்டு வெகு தூரம் வந்து விட்டதாலும்

2. இந்த கேள்விக்கான பதில் பல திரிகளில் முன்பே அளிக்கப்ட்டது என்பதாலும்.

எல்லாவற்றிலும் முக்கியமாக

3. இது அண்மைய யாழ்கள அறிவிப்புக்கு மாறாக அமைந்து பொது நன்மைக்கு, யாழ்களத்தின் நீடித்த இருப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதாலும் பொறுபுணர்வுடன் பதிலளிக்காமல் அமைதி காக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

எனக்கும் இது சம்பந்தமாக யாழ்களத்தில் விவாதிப்பதில் ஈடுபாடில்லை.ஆனாலும் தலித் மற்றும் சாதி பற்றி விவாதிக்கும் போது நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டி வந்துவிடுகின்றது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் இது சம்பந்தமாக யாழ்களத்தில் விவாதிப்பதில் ஈடுபாடில்லை.ஆனாலும் தலித் மற்றும் சாதி பற்றி விவாதிக்கும் போது நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டி வந்துவிடுகின்றது.

நன்றி

ரிசி மூலம், நதி மூலம் பார்ப்பதால்தானே பிரச்சனையே வருகிறது.

நமது ஆதரவு நிலைகள் பற்றிய தவறான மதிப்பீடுகளை தவிர்த்து விட்டு கருத்தை மட்டும் பார்ப்போம்🙏

பிகு

எனது கருத்து நிலை என்றும் தமிழ் தேசியமே. ஆனால் ஒரு காலத்தில் திராவிட கொள்கைக்கான தேவை இருந்தது என்பதையும், ஒரு போதும் திராவிட கொள்கையை தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிக்க வேண்டிய தேவை இல்லை, அது எதிர்மறை விழைவை தரும் என்பதையும் நான் நம்புகிறேன்.

என்னை யாரும் பச்சை குத்திய திராவிட கொள்கை ஆதரவாளன் என பிம்பத்தை உருவாக்கி விட கூடாது என்பதால் இந்த தன்னிலை விளக்கம்.

நம்மை பற்றி ஏனையோர் நினைப்பதும், நாம் யார் என்பதும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

ஒரு சிறு கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறேன்.....

பாடலை சேர்ந்து உருவாக்கிய போது, வராத சாதியம், பிறகு ஏன் வரவேண்டும் என்ற காரணமாகவே எனது பதில் முதலில் அமைந்தது.

சந்தோஸ் பதிலும் அதனை உறுதி செய்தது.

இது பணம் பங்கிடும் பிரச்சணை.

சாதியம் அல்ல....

அதே எனது கருத்தாக இருந்தது, இருக்கிறது.

🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மயிஸ்ரோ இளையராஜா 17 செப்ரெம்பர் இரசிகர்களை மகிழ்விக்க ரஷ்யா 😂  வருகிறாராம்.  சில தமிழ் சொற்கள் மட்டுமே தெரிந்த எனது இலங்கை தமிழ் வம்சாவளி நண்பர் ரிக்கெற் வாங்கிவிட்டார்  இவர்களை அவர் எவ்வளவுக்கு இசையால் கவர்ந்து உள்ளார் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு சிறு கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறேன்.....

பாடலை சேர்ந்து உருவாக்கிய போது, வராத சாதியம், பிறகு ஏன் வரவேண்டும் என்ற காரணமாகவே எனது பதில் முதலில் அமைந்தது.

சந்தோஸ் பதிலும் அதனை உறுதி செய்தது.

இது பணம் பங்கிடும் பிரச்சணை.

சாதியம் அல்ல....

அதே எனது கருத்தாக இருந்தது, இருக்கிறது.

🙏

ஒரு விடயம் பொருட்டு, நம் எல்லோரின் பார்வையும் நாம் அறிந்தவை, அனுபவித்தவை, கேட்டறிந்த கொண்டவையின் பலனாக வேறுபடுவது இயல்பே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இளையாராவை ரமண மகரிஷி அழைக்கும் வரை சினிமாக்காரன் மாதிரியே ஒரு சில கிசு கிசுக்களுடன் வாழ்ந்தார்.மகரிஷி  ஒரு கோவில் கோபுரம் கட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடாத்தி நிதி சேகரித்து தரும்படி வேண்டிக்கொண்ட பின்னரே உருத்திராட்ச மாலை அணியத்தொடங்கினார் என நினைக்கின்றேன். மற்றும் படி இளையராஜா பிறப்பில் ஒரு கிறிஸ்தவர்.

ரமண மகரிஷி 1950 ஆண்டளவில் சமாதியாகிவிட்டார் என நினைக்கிறேன்.

சில வேளை ரமணாச்சிரமம் சார்பாக இசை நிகழ்வு நடந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

ரமண மகரிஷி 1950 ஆண்டளவில் சமாதியாகிவிட்டார் என நினைக்கிறேன்.

சில வேளை ரமணாச்சிரமம் சார்பாக இசை நிகழ்வு நடந்திருக்கலாம்.

ஓம்....உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை. 

அவர் அப்படி செய்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.

அவர் சினிமாவுக்கு வந்தது தன் திறமையை வெளிகொணர, அதன் மூலம் பொருள், பலம், புகழ் ஈட்ட.

ஆனால் அதை அவர் அடைய அவரின் தலித் அடையாளம், நிச்சயம் ஒரு தடையாக இருந்திருக்கும். அவர் சமூக புரட்சி அரசியல் செய்திருந்தால் அடித்தே நூத்திருப்பார்கள்.

ஆகவே நான் ஆரம்பத்தில் சொன்னபடி,

இளையராஜ ஒரு விதிவிலக்கு. “பிராமண சேவகன்” மனநிலையை வெளிகாட்டிய அவரை பிராமண லாபி வளர விட்டது என்பதை வைத்து “ஜெய்பீம்” அரசியல் செய்யும் அறிவையும் அதே போல வளரவிடும் என சொல்ல முடியாது.

இசைஞானி இளையராஜா இசையமைக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சாதி வர்க்க வேறுபாடு, பிராமண ஆதிக்கம் பற்றி பல பாடல்களில் தெளிவாக இசை / பாடல் மூலம்  பதிவுசெய்துள்ளார்.
உதாரணம் - ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, மாமே வூடு மச்சி வூடு, பாடறியேன் படிப்பறியேன் இன்னும் பல. 

இந்த கட்டுரையில் எழுதியிருக்கும் விடயங்கள் மிகவும் நுணுக்கமான சுராசியமான விடயங்கள்.

https://www.huffpost.com/archive/in/entry/to-appreciate-ilaiyaraaja-s-anti-caste-politics-you-have-to-listen-to-his-music_in_5eda5614c5b6817661649db5

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Sasi_varnam said:

இசைஞானி இளையராஜா இசையமைக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சாதி வர்க்க வேறுபாடு, பிராமண ஆதிக்கம் பற்றி பல பாடல்களில் தெளிவாக இசை / பாடல் மூலம்  பதிவுசெய்துள்ளார்.
உதாரணம் - ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, மாமே வூடு மச்சி வூடு, பாடறியேன் படிப்பறியேன் இன்னும் பல. 

இந்த கட்டுரையில் எழுதியிருக்கும் விடயங்கள் மிகவும் நுணுக்கமான சுராசியமான விடயங்கள்.

https://www.huffpost.com/archive/in/entry/to-appreciate-ilaiyaraaja-s-anti-caste-politics-you-have-to-listen-to-his-music_in_5eda5614c5b6817661649db5

இணைப்புக்கு நன்றி.  கட்டுரையை மேலோட்டமாக வாசித்தேன்.

தமிழ் சினிமாவில் பிராமண ஆதிக்கம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? என்ற கேள்விக்கு பதில் கட்டுரையில் இருக்கிறது.

ஆனால் இளையராஜா படத்தின் ஓட்டத்துக்கு அமைய, பாடலாசிரியர் எழுதியபாடல்களுக்கு இசை அமைத்ததன் மூலம் சாதிய வேறுபாட்டை எதிர்த்து அரசியல் செய்தார் என்பது அவ்வளவு ஏற்புடையதாக தெரியவில்லை. அப்படி என்றால் மிட்நைட் மசாலா பாடல்களில் வரும் ஆபாச வரிகளையும் ராஜா தலையில் கட்ட வேண்டி வரும்.

அவரின் மீதான பாசத்தால் ஏதோ ஒரு நேர்மறை உதாரணத்தை வலிந்து தேடி பிடிக்கும் செயலாகவே எனக்கு படுகிறது.

நானும் ராஜாவின் பரம ரசிகந்தான். இசைக்கு மட்டும். தனி மனிதனாக அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.