Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யாவின் எரிவாயு தடையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் எரிவாயு தடையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்த போராக இருந்தாலும் சரி அல்லது மோதலாக இருந்தாலும் சரி அது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும் அதே நிலையைதான் ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தடை செய்துவிடுமோ என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.

இதன் பின்னணியை சற்று சுருக்கமாக பார்க்கலாம். ஐரோப்பாவிற்கு இப்போது ரஷ்யா வழங்கி வரும் எரிவாயுவுக்கான பணத்தை நட்பற்ற நாடுகள் ரஷ்ய ரூபாயான ருபிளில் தர வேண்டும் என்று அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். அதாவது நட்பற்ற நாடுகள் என்றால் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள்.

ரஷ்ய ரூபிளில் பணத்த செலுத்தினால் ரஷ்யாவின் பண மதிப்புக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், போலந்து, பல்கேரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய ரூபிள்ள பணத்தை செலுத்த முடியாது என தெரிவித்துவிட்டன. இதன் காரணமாக ரஷ்யா தனது எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது.

ஜெர்மனிக்கான விநியோகத்தை பாதியாக குறைத்துள்ளது. ஜெர்மனி ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ரோம்-ன் தலைவர், "எங்கள் உற்பத்தி எங்கள் விதிகள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை அடுத்து ஐரோப்பாவுக்கு எதிராக ரஷ்யா எரிவாயு போரை தொடுத்துள்ளதாக யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

செலன்ஸ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவை சமாளிப்பது எப்படி?

ரஷ்யாவை சமாளிப்பது ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள், தாமாக முன்வந்து எரிவாயு பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை எரிவாயு பயன்பாட்டை 15 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், கேள்வி என்னவென்றால், இது எளிமையானாதா? அல்லது கடினமானதா? இந்த பொருளாதார போரில் பாதிக்கப்படபோவது யார்?

எரிவாயு மிகவும் முக்கியமானது. மின்சார உற்பத்தி, சமையல் மற்றும் குளிர்விப்பான்களில் இது பயன்படுத்தப்படுது.

ரஷ்யா கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 40% இயற்கை எரிவாயுவை வழங்கியது.

ஆனால், பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, எரிவாயுவின் விலை பல மடங்காக அதிகரித்தது. இதனால், நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண YouTubeவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

YouTube பதிவின் முடிவு, 1

2020-ம் ஆண்டு ஜெர்மனிதான் மிகப்பெரிய இறக்குமாதியாளர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலி உள்ளது.

பிரிட்டன் ரஷ்யாவிடம் இருந்து 4 சதவீதம் மட்டும் தான் இறக்குமதி செய்துள்ளது, அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யவில்லை.

இருந்தாலும் கூட, ரஷ்யா ஐரோப்பாவிற்கான விநியோகத்தை கட்டுப்படுதியதால் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் எரிவாயு விலை உலகளவில் உயரும் நிலைக்கு வந்துள்ளது.

கூடுதல் தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யா

இதனையடுத்து இப்போது ரஷ்யா மீது கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்படும் அனைத்து எண்ணெய் இறக்குமதிகளையும் தடை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. குழாய் வழித்தடம் மூலமாக எண்ணெய் விநியோகம் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் இதை நம்பியிருப்பதால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் இறக்குமதியையும் தடை செய்துள்ளது. 2022-ன் இறுதிக்குள் பிரிட்டனும் ஒட்டுமொத்த இறக்குமதியையும் தடை செய்யவுள்ளது.

இந்த தடையால் பல ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வாங்குவது பாதிக்கப்பட வாய்ப்பிருக்காது.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து எண்ணெயை வாங்கி கொள்ளலாம்.

மாற்று வழி என்ன?

எண்ணெய் இறக்குமதி நாடுகளின் கூட்டமைப்பான IEA, 120 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை தங்களின் இருப்பில் இருந்து விடுவித்துள்ளது.

அமெரிக்காவின் இருப்பில் இருந்து பெருமளவிலான எண்ணெயை வழங்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

செளதி அரேபியா போன்ற நாடுகள் எதிர்காலத்தில் கூடுதல் எண்ணெயை சந்தையில் கொண்டு வரவுள்ளன.

சமீபத்திய தடைகள் மூலம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் அளவில் இருந்து 90 சதவீதம் குறையும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இது முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். மேலும், உலகத்தில் வேறு பகுதிகளுக்கு ரஷ்யாவால் எண்ணெயை விற்க முடியும். எடுத்துக்காட்டாக இந்தியா உள்ளிட்ட ஆசியான் நாடுகள் இதில் அடங்கும்

ஆனால், இது ரஷ்யா மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஐரோப்பாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யா கடந்த ஆண்டில் 430 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக தீவிர மந்தநிலை உண்டாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ல் ரஷ்யாவின் பொருளாதாரம் பத்து சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த பொருளாதார போரில் யாரு வெற்றிபெற்றாலும், விலையேற்றத்தால் நுகர்வோர்களே பாதிக்கப்படுவார்கள்.

https://www.bbc.com/tamil/global-62413498

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் ரை (tie)கட்ட வேண்டாமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

1)/அதாவது ட்பற்ற நாடுகள் என்றால் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள்

Unfriendly countries என்றால் நட்பு அற்ற நாடுகள் என்று பொருள். (நட்பு நாடுகள் friendly countries)

இதனை உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் என்று திரித்துக் கூறுவது  கூறுதல் BBC தமிழ்-க்கு அழகல்ல.

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பல வாரங்களின் பின் லீட்டர்/1.71£ க்கு பெற்றோல் அடித்தேன்.

பிரென்ற் கச்சா எண்ணை இன்று சந்தையில் பரலுக்கு 96.75. புட்டின் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு முதல்நாள் - 94 சொச்சம்.

மந்தமாகும் உலக, குறிப்பாக சீன பொருளாதாரம் கச்சா எண்ணை விலையை 100 க்கு கீழ் வைத்திருக்கும் போல் படுகிறது.

ஆனால் ஜேர்மனிக்கு இந்த விண்டருக்கு எரிவாயு விடயத்தில் கடுமையாகத்தான் இருக்கப்போகிறது.

ஆனால் ஜேர்மனியர்கள் இதை கடக்க கூடிய ஓர்மம் உள்ளவர்கள். சூழவும் ரஸ்யபடைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியுடனான ரயில், தெரு காரிடோர்கள் (இணைப்பு வழிகள்) கூட அடைக்கபட்டு கிட்டதட்ட முற்றுகைக்குள் இருந்த மேற்கு பேர்லினை அமெரிக்க உதவியுடன் உயிப்புடன் வைத்திருந்தவர்கள்.

சமாளிப்பார்கள்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை எரிவாயு பயன்பாட்டை 15 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

நான் இதுவரை அவதானித்த அளவில்....
ஜேர்மனியில் அநேகமான அரச அலுவலகங்களில்  கீற்றரை முற்றிலும் திறந்துவிட்டு யன்னலையும் கதவையும் திறந்து விட்டு இருப்பார்கள்.ஆனால் வீட்டில் அதற்கு எதிர்மாறு.....😂

டிஷ்கி:- அவனோடை தனகுவானேன் அவதிப்படுவானேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

ஜேர்மனியர்கள் இதை கடக்க கூடிய ஓர்மம் உள்ளவர்கள். சூழவும் ரஸ்யபடைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியுடனான ரயில், தெரு காரிடோர்கள் (இணைப்பு வழிகள்) கூட அடைக்கபட்டு கிட்டதட்ட முற்றுகைக்குள் இருந்த மேற்கு பேர்லினை அமெரிக்க உதவியுடன் உயிப்புடன் வைத்திருந்தவர்கள்.

சமாளிப்பார்கள்.


ஓம் அவர்கள் கிரேட் மக்கள் சமாளிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.