Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ.

9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. அதிபராக இருந்த போது நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையுடன் இந்தச் சோதனை தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், "இது நாட்டின் இருண்ட காலம்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு, இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை," என்று தெரிவித்துள்ளார்.

 

எனினும் இந்தச் சோனை குறித்து எஃப்.பி.ஐ. அமைப்போ, அமெரிக்காவின் நீதித்துறையோ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அமெரிக்காவின் மைய அரசின் சட்டங்களும் ரகசிய ஆவணங்களை கையாள்வது குறித்து விவரிக்கின்றன.

இந்தச் சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ட்ரம்பின் வழக்கறிஞர் கிறிஸ்டினா என்பிசி நியூஸிடம் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், ட்ரம்ப் வீட்டில் நடைபெற்றிருக்கும் சோதனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

 

ட்ரம்ப் வீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனைத்து அரசு அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகவும், அதனால் "அறிவிக்கப்படாத இந்தச் சோதனை அவசியமில்லை, ஏற்புடையதில்லை" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"இத்தகைய தாக்குதல்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே நடக்கும் சாத்தியம் உண்டு. கெடுவாய்ப்பாக, இதுவரை காணாத ஊழலில் திழைக்கும் அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

புளோரிடாவில் சோதனை நடந்தபோது நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்ப் இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.

ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய ட்ரம்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப், "இந்தச் சோதனை தேசிய ஆவணக் காப்பகப் பதிவுகளைக் கையாள்வது குறித்த விசாரணையுடன் தொடர்புடையது" என்று கூறினார்.

பின்னணி என்ன?

அதிபராக இருந்தபோது அரசு ஆவணங்களைக் கையாண்டது தொடர்பாக ட்ரம்பை விசாரிக்க வேண்டும் என்று தேசிய ஆவணக் காப்பகம் நீதித்துறையைக் கேட்டுக் கொண்டுது.

அதிபராக இருந்த காலத்தில் பல ஆவணங்களை ட்ரம்ப் கிழித்து எறிந்ததாகவும் அவற்றை ஒட்டவைக்க வேண்டியிருந்தது எனவும் தேசிய ஆவணக் காப்பக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை 'போலிச் செய்திகள்' என்று கூறி நிராகரித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகவே இப்போது ட்ரம்பின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

எஃப்.பி.ஐ.யின் தேடுதல் வாரண்டில் நீதிபதி ஒருவர் கையெழுத்திட வேண்டும். தேடுதல் வேட்டைக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்த பிறகே நீதிபதி அதில் கையெழுத்திடுவார்.

 

காப்பகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த வகையில் நீதிபதி கையெழுத்திட்ட வாரண்ட் குறித்த தகவல் திங்கள்கிழமை காலை பத்து மணிக்கு எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக பெயர்கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ட்ரம்பின் இல்லத்தில் இருந்து பல பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவம் எந்தக் கதவும் உடைக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனிடையே வெள்ளை மாளிகையின் கழிவறைப் பேழையில் சில காகிதங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை பத்திரிகையாளர் மேகி ஹேபர்மன் வெளியிட்டுள்ளார். இது ட்ரம்பின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ட்ரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வெள்ளை மாளிக்கைக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையின்போது, நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்று பைடன் கூறியிருந்தார். வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் பைடனின் மகன் ஹன்டர் பைடனும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-62447584

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் என்றால்... பரம்பரைக்கே, சொத்து சேர்த்தவன் எல்லாம்....  😎
அரசியல் பழிவாங்கல் என்று  சொல்லி, அடுத்த முறை முதலமைச்சர்  ஆகி ...  😎  😎
அதை விட.. அதிகமாக கொள்ளை அடித்துக் கொண்டு இருப்பார்கள். 😂
மோட்டு சனமும்... ஒட்டு போட்டுக் கொண்டு இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கில்லரியின் அழித்த மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஏன் எவ் பி ஐயால் ஆராயப்படவில்லை என  ட்ரம்பின் ஆதரவாளர்கள் முணுமுணுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்ஸ் மீண்டும் தனது ஆணைக்கு கட்டுப்பட்ட சேவகன் டிரம்பை அமெரிக்க அதிபராக்கினால் - அது நேட்டோவுக்கும், அமெரிக்காவுக்கும் மரண அடியாக இருக்கும் என்பதை காலம் கடந்தேனும் அமெரிக்க ஆழ்-அரசு (deep state) உணர்ந்து செயல்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/8/2022 at 14:02, nunavilan said:

கில்லரியின் அழித்த மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஏன் எவ் பி ஐயால் ஆராயப்படவில்லை என  ட்ரம்பின் ஆதரவாளர்கள் முணுமுணுக்கிறார்கள்.

ரம்புக்கும் கிலாரிக்கும் இடையிலான நேரடி தேர்தல் தொலைக்காட்சி விவாதத்தின் போது   மின்னஞ்சல் அழிப்பு குற்றத்திற்காக உன்னை சிறையில் அடைக்க வேண்டும் என கிலாரியை பார்த்து ரம்ப் கூறியிருந்தார். கிலாரின்ரை புருசன் கிளின்டன் ஏதோ திறமே?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ரம்புக்கும் கிலாரிக்கும் இடையிலான நேரடி தேர்தல் தொலைக்காட்சி விவாதத்தின் போது   மின்னஞ்சல் அழிப்பு குற்றத்திற்காக உன்னை சிறையில் அடைக்க வேண்டும் என கிலாரியை பார்த்து ரம்ப் கூறியிருந்தார். கிலாரின்ரை புருசன் கிளின்டன் ஏதோ திறமே?

பில் மயக்கி வீழ்த்தும் மாயக் கள்ளன்.

டிரம்ப் “கொத்தாய் அள்ளும்” குரங்கன்😆.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

பில் மயக்கி வீழ்த்தும் மாயக் கள்ளன்.

டிரம்ப் “கொத்தாய் அள்ளும்” குரங்கன்😆.

இப்ப இருக்கிறவரும் லேசுப்பட்டவர் இல்லை கண்டியளோ....ஒழுங்காய் நடக்கவே ஏலாது அதுக்குள்ள...🤭

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்ப இருக்கிறவரும் லேசுப்பட்டவர் இல்லை கண்டியளோ....ஒழுங்காய் நடக்கவே ஏலாது அதுக்குள்ள...🤭

 

இவர் சிறுமிகளுடன் கைலாகு குடுத்து பழகும் சில வீடியோக்கள் புருவம் உயர்த்த வைக்கும் ரகம்தான்.

ஆனால் மகனை இழந்த ஒரு தாத்தாவின் பாசமே அது என்றும் சொல்கிறார்கள் ஒரு சாரார்.

என்ன கறுமமோ…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டாரா டிரம்ப்? - அதிகாரிகள் விசாரணைக்கு பதிலளிக்க மறுப்பு

  • பெர்ன்ட் டெபுஸ்மன் ஜுனியர்
  • வாஷிங்டனிலிருந்து
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வரி சலுகை பெறுவதற்காக தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டதாக எழுந்த புகாரின் பெயரில் நடந்த விசாரணையில் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதனை அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைக்கு டொனால்ட் டிரம்ப் புதன்கிழமையன்று நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு வந்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் மாகாண அரசு நடத்தும் விசாரணையின் ஒரு பகுதியாக தனது குடும்பத்தின் வணிக நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 

முன்னதாக, நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று நடந்த விசாரணையைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சாதகமான கடன்களையும், வரிச்சலுகைகளையும் பெறுவதற்காக டிரம்ப் தனது சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டிரம்ப், இந்த விசாரணை, அரசியல் உள் நோக்கத்துடன் நடக்கிறது என்றார்.

மன்ஹாட்டன் நகரிலுள்ள அவர் அலுவலகத்தில் விசாரணை நடந்த ஒரு மணிநேரத்திற்கு பிறகு, இது தொடர்பாக டிரம்ப் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸையும், இந்த விசாரணையையும் விமர்சித்துள்ளார்.

"இத்தகைய நாடகத்துக்கு பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான டாலர்களும் செலவழிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நான் மறுத்துவிட்டேன்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த விசாரணை புதன்கிழமையன்று நடந்தது என்றும், 'தன் மீதான குற்றச்சாட்டிற்கு எதிரான ஐந்தாவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தினார்," என்றும் லெட்டிடியா ஜேம்ஸ் அலுவலகம் தெரிவித்தது.

"இந்த விவகாரத்தை எங்கு கொண்டு சென்றாலும், அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் அவர்கள் உண்மைகயையும் சட்டத்தையும் பின்பற்றுவார். எங்கள் விசாரணை தொடரும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்க உளவுத்துறை புளோரிடாவில் அமைத்துள்ள டிரம்ப்புக்கு சொந்தமான எஸ்டேட் மார்-அ-லாகோவில் (Mar-a-Lago) முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அவரது வணிக நடவடிக்கைகள் குறித்து இந்த தனி விசாரணை நடந்தது. அதில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

மேலும், அட்டர்னி ஜெனரலின் விசாரணை ஒரு பொதுத்துறை விசாரணையாக இருந்தாலும், மன்ஹாட்டன் மாகாண அட்டர்னி அலுவலகத்தால் மற்றொரு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை குற்றவியல் குற்றச்சாட்டுகளாக மாறலாம்.

டிரம்ப் புதன்கிழமையன்று கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததற்கு காரணம், அவரது பதில்கள் குற்றவியல் விசாரணையில் அவருக்கு எதிராக பயன் படுத்தப்படலாம் என்று சட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஐந்தாவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தினார். இந்த சட்ட திருத்தம் கிரிமினல் வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சியாக தாமே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது.

இந்த விசாரணை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது என்றும், இதில் நீண்ட இடைவேளைகளும் இருந்தது எனவும் டிரம்ப் வழக்கறிஞர் ரொனால்ட் பிஷெட்டி அமெரிக்க ஊடகத்திடம் தெரிவித்தார்.

அட்டர்னி ஜெனரலையும் அவரது விசாரணையையும் கண்டித்தும், டிரம்ப் தனது ஐந்தாவது திருத்த உரிமைகளை வலியுறுத்தியும் அவரது அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார்.

இந்த விசாரணை முடிவடைந்தவுடன், டிரம்ப் அல்லது அவரது நிறுவனத்திற்கு எதிராக நிதி அபராதம் கோரி வழக்குத் தொடர நியூ யார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் முடிவு செய்யலாம்.

 

நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ்

முன்னதாக, டிரம்ப் மற்றும் அவரது இரு குழந்தைகளான இவான்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் வாக்குமூலத்தை ஜேம்ஸ் ஆறு மாதங்களுக்கும் மேலாக கோரி வந்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் நியூயார்க் நீதிமன்ற அமைப்பு மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அதிபரையும், அவரது குழந்தைகளையும் விசாரிப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஜேம்ஸ் மீது வழக்குத் தொடர டிரம்ப் வழக்கறிஞர்கள் முயன்றனர்.

ஆனால் பிப்ரவரி மாதம், நியூயார்க் உச்ச நீதிமன்ற நீதிபதி மூவரும் வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இவாங்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் விசாரிக்கப்பட்டனர்.

இந்த விசாரணையில்,'நிதி மோசடிக்கான சாத்தியமான ஆதாரங்கள்' கிடைத்துள்ளதாகவும், முன்னாள் அதிபரையும், அவரது இரண்டு குழந்தைகளையும் கேள்வி கேட்க, அட்டர்னி ஜெனரலுக்கு உரிமை வழங்குவதாக நீதிபதி கூறினார்.

நீதிபதியின் முடிவை ஜேம்ஸ் தனக்கான வெற்றி என்று பாராட்டினார்.

இந்த விசாரணை 2019ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கியது. டிரம்பும் அவரது நிறுவனமும் சாதகமான கடன்களையும், வரிச் சலுகைகளையும் பெறுவதற்காக சொத்து மதிப்பை தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பதை இந்த விசாரணை நிரூபிக்க முயற்சி செய்கிறது. இந்த மோசடி டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-62501313

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.