Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ்

[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 17:27 ஈழம்] [ப.தயாளினி]

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

பயங்கரவாதத்தை ஆதரித்தும் ஹோல்ம்ஸ் ஒரு முழுமையான பயங்கரவாதி. பயங்கரவாதிகளை ஆதரிப்போரை நாங்கள் பயங்கரவாதிகளாகத்தான் கருதுவோம்.

ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி. சிறிலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க இந்த நபர் முயற்சிக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஹோல்ம்ஸ் இலஞ்சம் வாங்கியிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்குக் கிடைக்கவிருக்கும் அனைத்துலக கடன் உதவியை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுவது நாட்டுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும். அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களும் இதனைக் கண்டித்துள்ளனர்.

2,500 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதைக் குழப்பியடிக்கும் நடவடிக்கையிலும் சில அரச விரோத சக்திகள் ஈடுபட்டு வருகின்றன.

இம்மாநாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, இம்மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்நின்று நடத்துபவரான டொக்டர் ஷரீப்தீனின் பெயரில் போலியான குறுந்தகவல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அனைத்துலக நாடுகளுக்கு இதுபற்றி தகுந்த விளக்கம் கொடுத்துள்ளார்

"கோப்" அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்காக 26 நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் அவர்.

ஆனால் புலிகளிடம் ஹோல்ம்ஸ் இலஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்கள் எதனையும் கொழும்பு ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வெளியிடவில்லை.

puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ கடவுளே! சிரிப்பை அடக்க முடியவில்லை.. :D :D :)

சிங்களவருக்கு புத்தி பேதலிச்சுபோச்சு! :lol: :lol: :lol:

மாற்றப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

எல்லாம் நன்மைக்கே காலம் பதில் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை பணம் வாங்குவதில் தங்களைவிட வேறு யாரும் இருகீனம் என நினைகீனம் பாருங்கோ

கிணற்று தவளை என்பது இதைத்தானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் நீண்ட பொறுமையின் அர்த்தம் இப்பதான் எனக்கு விளங்க ஆரம்பிக்குது எண்டு நினைக்கிறேன்..

இதை கேள்விப்பட்ட அந்த ஐநா அதிகாரி நல்ல இரத்தகொதிப்பிலை இருப்பார் இப்ப..

நம்புங்கள் தமிழீழம நாளை பிறக்கும்...

ஐயோ கடவுளே! சிரிப்பை அடக்க முடியவில்லை.. :lol::D :D

மோட்டு சிங்களவனுக்கு புத்தி பேதலிச்சுபோச்சு! :D :D :D

இவனொரு தமிழ்ச் சிங்களவன். அந்தப் பக்கமா?. இந்தப்பக்கமா? என்று தெரியாத அரை வேக்காடு. நிலைமை எல்லை மீறிக் கொண்டிருப்பதை அறிந்திருந்தும் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். சிங்களவரின் எச்சிலை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு வாலையாட்டும் நாய்.

ஹோம்ஸின் கூற்று தரவுகளின் அடிப்படையில் சரியானதே - ஐநா

வியாழன் 16-08-2007 02:54 மணி தமிழீழம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலரின் பேச்சாளர் பரான் கக் பி.பிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் சிறீலங்கா 2006 ம் ஆண்டு உலகின் மனித நேயபணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளில் அதனை மேற்கொள்வதற்கு இடையூறுகளை மோசமான அளவில் ஏற்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே உண்மையில் அவரது கூற்று சரியானதே. இது முக்கியமாக ஒரே சம்பவத்தில் 17 மனிதநேய பணியாளர்கள் கொலை செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலங்கா அரசாங்க அமைச்சர் பெர்ணான்டோ பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் துணைச்செயலர் ஜோன் ஹோம்ஸ் ஐ பயங்கரவாதி எனக்குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் திரு.ஹோம்ஸ் விடுதலைப்புலிகளிடம் இலஞ்சம் வாங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் அமைச்சர் இரஞ்சம் வாங்கியதற்கு எதுவித ஆதாரங்களையும் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-நன்றி பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராசு கதிர்காமராக நினைப்பதில் என்ன தவறு? அதுங் மேலெ போனது இதிங் மேலே போகப்போறது.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸிலும் வந்துள்ளது.

Top Sri Lanka official calls UN aid chief "terrorist"

COLOMBO, Aug 15 (Reuters) - A top Sri Lankan government official called U.N. Under Secretary General for Humanitarian Affairs John Holmes a "terrorist" on Wednesday after he voiced concern about aid worker safety on the island last week.

Chief Government Whip Jeyaraj Fernandopulle, who is also the island's highways minister, told a media briefing he believed Holmes had taken a bribe from separatist Tamil Tiger rebels and had deliberately tried to harm Sri Lanka's reputation.

"I would say Holmes is completely a terrorist, a terrorist who supports terrorism. We consider people who support terrorists also terrorists," Fernandopulle told the briefing in the Sinhala language.

"So Holmes, who supports the LTTE (Tamil Tigers), is also a terrorist. This person tries to tarnish the image of Sri Lanka internationally," he added. "I think the LTTE has bribed Holmes."

Fernandopulle gave no proof to back up his assertion.

Holmes said on a visit to Sri Lanka last week the island had one of the worst records in the world for humanitarian aid worker safety.

He said almost 30 aid workers had been killed over the past 18 months. The Consortium for Humanitarian Agencies, an umbrella group of 104 aid agencies operating in Sri Lanka, puts the number at 34, a figure the government questions.

The government has accused Holmes of bias, helping to tarnish the government's reputation and indiscretion. The island's prime minister told parliament last week the government "utterly rejected" his remarks.

Holmes's visit coincided with the anniversary of the discovery of the massacre of 17 local staff of Paris-based aid agency Action Contre la Faim, which Nordic truce monitors have blamed on state security forces.

The government's peace secretariat has blamed the aid group, accusing it of negligence and irresponsibility.

President Mahinda Rajapaksa's government denies security forces have been involved in rights abuses and says a presidential commission is probing the allegations. The government has also rejected calls for a United Nations rights monitoring mission.

Nearly 70,000 people have been killed in the conflict in Sri Lanka since 1983 -- around 4,500 in the last year alone.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL30122.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஹோம்ஸின் குற்றச்சாட்டு; அரசின் மறுப்பு ஐ.நா.சபை செயலரின் தொடர்பாளர் விளக்கம் "

கடந்த வருடம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அதிகள வில் கொலை செய்யப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற படு கொலைச் சம்பவந்தான் பெரிதும் காரணம். இந்தச் சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் இலங்கை அரசினால் மேற் கொள்ளப்பட வேண்டும்''

என்று வலியுறுத்தியிருக்கின்றார் ஐ. நா.செயலர் பான்கீமூனின் செய்தித் தொடர் பாளர் பரான் ஹக்.

சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்ட ஐ.நா.வின் மனிதாபிமானப் பணி களுக்கான உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ், "இலங்கை மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத நாடு' என்று குற்றஞ் சாட்டி கருத்து வெளியிட்டிருந்தார். அவரது அந்தக் கருத்தை இலங்கை அரசுத்தரப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக பி. பி.ஸி.யின் சிங்கள சேவையான சந்தேசிய விடம் கருத்து வெளியிட்டிருக்கின்றார் ஐ. நா. செயலரின் செய்தித் தொடர்பாளர்.

பல நல்ல சமிக்ஞைகள் தென்பட்டன அவரால் தான் விரும்பிய உயர் மட்ட அரச அதிகாரிகளைச் சந்திக்க முடிந்தது. குறிப் பாக இலங்கை ஜனாதிபதியுடனும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார். மேலும் இன்றைய உண்மை நிலையைப் பொறுத்தவரையில் 2006ஆம் ஆண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்ட நாடுகளில் இலங்கை இரண் டாம் இடத்தில் உள்ளது. இதற்கு மூதூர்ப் படுகொலையே மிக முக்கிய காரணமாகும். என்று அவர் விளக்கம் அளித்தார்.

தன்னார்வத் தொண்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு அவர்கள் பணிபுரியும் இடங்களில் உறுதிப்படுத்தப்படவேண் டும் என்று ஜனாதிபதியிடமும் ஜோன் ஹோம்ஸ் கேட்டுக்கொண்டார். தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளரக்ளின் பாதுகாப்புக் குறித்து எங்களுக்கு கவலையுள்ளது. இது தொடர்பாக அவர்கள் இலங்கையில் தொண் டாற்றுவது குறித்துஅனைத்துத் தரப்பினருடன் பேசுவோம் என்றும் சொன்னார் பரான்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் குற்றச்சாட்டுக்கு ஜோன் ஹோம்ல்ஸ் விளக்கம்

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்த கருத்து சிறிலங்கா கடுமையான எதிர்ப்பலைகளை தோற்றுவித்த நிலையில் அவர் தனது கருத்து தொடர்பான விளக்கத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு சிறிலங்கா உகந்த இடம் அல்ல அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் றொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஹோல்ம்ஸிடம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் கோரியிருந்து.

இதனையடுத்து சிறிலங்காவின் பேரிடர் முகாமைத்துவ அமைச்சரான மகிந்த சமரசிங்காவிற்கு ஹோல்ம்ஸ் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பாக அரசு தனது கருத்தில் எடுக்கவில்லை. அது மனிதாபிமான பணியாளர்களை பாதுகாக்க முற்படவில்லை என்பதன் அர்த்தத்திலும் நான் எனது கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு நடைபெற்றுவரும் மோசமான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடைவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இலகுவாக வழியில் கூறியிருந்தேன்.

அதுவே எனது செய்தி முழுவதிலும் உள்ள கருத்தாகும். அரசுடன் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதுவே எனது உளப்பூர்வமான விரும்பமாகும். எனினும் சிறிலங்காவில் ஏற்பட்டுவரும் மனிதாபிமான நெருக்கடிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதிலும், கிழக்கின் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதிலும் நான் தொடர்ந்து ஆவலாக இருக்கிறேன்.

எனது நேர்காணலில் நான் அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை கூற முயலவில்லை. எனது பயணத்தின் போது பொதுமக்களிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் என்னால் பெறப்பட்ட சில கருத்துக்களை நான் முன்வைத்திருந்தேன். மேலும் மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான எனது கருத்தையும் நான் சந்தித்த எல்லோரிடமும் தெரிவித்திருந்தேன். அதனையே அமைச்சருடன் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் தெரிவித்தேன் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரையும் அவர்களது நியூயோர்க் பயணத்தின் போது எதிர்வரும் மாதம் சந்திக்க விரும்புவதாக அவர் தனது கடிதத்தின் முடிவுரையில் தெரிவித்துள்ளார்.

-புதினம்

ஜெயராசு கதிர்காமராக நினைப்பதில் என்ன தவறு? அதுங் மேலெ போனது இதிங் மேலே போகப்போறது.

கதிர்காமர் போல உவருக்கு வரமுடியாது கதிர்காமர் என்னதான் தமிழனுக்கு எதிராக இயங்கினாலும் அதில் வெற்றி பெற்றவர் அவரை வெளிநாட்டு ராஜதந்திரிகள் நம்பினார்கள் ஆனால் ஜெயராஜிடம் எந்தவித அரசியல் சானக்கியமும் இல்லை

மாற்றப்பட்டுள்ளது - இணையவன

Edited by இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கருத்து உலக அரங்கத்தில் எமது நாட்டை தலைகுனிய வைக்கும். - பெ.சந்திரசேகரன்

Written by Pandaravanniyan - Aug 16, 2007 at 04:22 PM

ஜ.நா வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸ் பற்றி அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ள கருத்துக்கள் உலக அரங்கத்தில் எமது நாட்டை தலைகுனிய வைக்கும் என்று அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் அனைத்தும் அங்கத்துவம் வகித்து முழுமையாக கௌரவிக்கும், ஜ.நா சபையில் பொறுப்பான பதவி வகிக்கும் ஒருவரை பயங்கரவாதி என்றும் புலிகளிடம் கப்பம் பெற்றுள்ளார் என்றும் வர்ணித்திருப்பது, முழு ஜ.நா சபை முயற்சிகளையும் அவமானப்படுத்துகின்ற வார்த்தைகளாகவே கருதவேண்டியுள்ளது.

உச்சகட்டமாக அந்த அதிகாரி மீண்டும் இலங்கை வருவதை மக்களே தீர்மானிப்பார்கள் என கூறியிருப்பது வெளிப்படையான அச்சுறுத்தலாகும்.

கூலிப்படைகளை வைத்துக்கொண்டு ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், தாக்கப்படுதல், அசீட் வீசுதல் போன்றவற்றின் பின்னணியில் அரசே இருந்து செயற்படுகின்றது என்பது ஏற்கனவே எழுந்துள்ள குற்றச்சாட்டாகும்.

இதனை மெய்ப்பிப்பது போலவே 'மக்கள் தீர்மானிப்பார்கள்' என்ற கருத்தானது மக்கள் எனக் கூறிக்கொண்டு அரசு எதையோ செய்ய முற்படுகின்றது என்பது பல அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

ஏற்கனவே இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் பல நாடுகளின் நிலைப்பாட்டை கேலிக்கிடமாக்கியுள்ள நிலையில், அமைச்சரின் தற்போதைய வாக்குமூலம் ஜ.நா சபையையும் பகைத்துக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றது.

உலக நாடுகளின் பிரதநிதிகள் இலங்கையைப்பற்றி கருத்து கூறுகையில் அதில் பொதிந்திருக்கும் உண்மைகளை கண்டறிய முடியாமல் கண்மூடித்தனமாக உதாசீனப்படுத்துவது எமது நாட்டுக்கும் எதிர்காலத்திற்கும் பாரதூரமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நடவடிக்கைகளை ஆதரிப்பதுதான் ஏனையநாடுகளின் கடமையென எவராவது கருதுவார்களேயானால் அதற்குரிய தாக்கத்தை சந்தித்தேயாகவேண்டும்.

புலிகளை பயங்கரவாதிகள் என்றும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை அவமானப்படுத்தியும் வந்துள்ள இனவாத தேசிய கட்சிகள்கூட இன்று தமிழர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேசத்தின் கருத்துக்களை உதாசினப்படுத்துவது நாட்டுக்கு எவ்விதத்திலும் நன்மைபுரிவதாக அமையாது

தமிழர்களுக்காக எவராவது, எந்த நாடாவது எதையாது பேசினால் அவர்கள் நாட்டுக்கு எதிரானவர்களென்று சாயம்பூசுகின்ற நிலைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் விடக்கூடியளவு தமிழ் அரசியல் கட்சிகள் தன்மானம் அற்றவர்களென கருதிவிடக்கூடாது.

சங்கதி

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோம்ஸ் பயங்கரவாதி என்று அரசாங்கம் கூறவில்லை ஜெயராஜ் கூறியிருந்தால் அது அவரது தனிப்பட்ட கருத்து

வீரகேசரி நாளேடு

ஜோன் ஹோம்ஸ் ஒரு பயங்கரவாதி என இலங்கை அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அப்படிக் கூறியிருந்தால் அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் பெயரில் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புக்கும் உபாய ஆய்வுகளுக்குமான நிருவக கட்டிட கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தப்பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்தையும் அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒழித்துக்கட்ட தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தவர் லக்ஷ்மன் கதிர்காமராவார்.

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகள் பலவற்றிற்கு அழுத்தங்களையும் கொடுத்து வந்தார். அவர் விட்டுச் பணியையே நாம் இப்போது முன்னெடுத்துச் செல்கின்றோம். பயங்கரவாதம் எத்தகையது என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று அவரின் பெயரை இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவும் முடிவுசெய்தோம்.

இதன் இன்னும் ஒருகட்டமாக பயங்கரவாதம் ஜனநாயக அரசுக்கு சவால் என்ற கருப்பொருளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 18ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரையிலான சர்வதேச மாநாடொன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கலந்துகொள்வதுடன் கௌரவ அதிதியாக பிரான்ஸ் நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிவான் ஜீன் லூயிஸ் புரூகுயர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்

ஹோம்ஸின் கூற்று தரவுகளின் அடிப்படையில் சரியானதே – ஐநா

ஐக்கிய நாடுகள் சபையின் செயலரின் பேச்சாளர் பரான் கக் பி.பிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் சிறீலங்கா 2006 ம் ஆண்டு உலகின் மனித நேயபணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளில் அதனை மேற்கொள்வதற்கு இடையூறுகளை மோசமான அளவில் ஏற்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே உண்மையில் அவரது கூற்று சரியானதே. இது முக்கியமாக ஒரே சம்பவத்தில் 17 மனிதநேய பணியாளர்கள் கொலை செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலங்கா அரசாங்க அமைச்சர் பெர்ணான்டோ பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் துணைச்செயலர் ஜோன் ஹோம்ஸ் ஐ பயங்கரவாதி எனக்குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் திரு.ஹோம்ஸ் விடுதலைப்புலிகளிடம் இலஞ்சம் வாங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் அமைச்சர் இரஞ்சம் வாங்கியதற்கு எதுவித ஆதாரங்களையும் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

சிறிலங்காவின் குற்றச்சாட்டுக்கு ஜோன் ஹோல்ம்ஸ் விளக்கம்

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்த கருத்து சிறிலங்கா கடுமையான எதிர்ப்பலைகளை தோற்றுவித்த நிலையில் அவர் தனது கருத்து தொடர்பான விளக்கத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு சிறிலங்கா உகந்த இடம் அல்ல அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் றொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஹோல்ம்சிடம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் கோரியிருந்து.

இதனையடுத்து சிறிலங்காவின் பேரிடர் முகாமைத்துவ அமைச்சரான மகிந்த சமரசிங்கவிற்கு ஹோல்ம்ஸ் நேற்று புதன்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பாக அரசு தனது கருத்தில் எடுக்கவில்லை. அது மனிதாபிமான பணியாளர்களை பாதுகாக்க முற்படவில்லை என்பதன் அர்த்தத்திலும் நான் எனது கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு நடைபெற்று வரும் மோசமான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடைவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இலகுவாக வழியில் கூறியிருந்தேன்.

அதுவே எனது செய்தி முழுவதிலும் உள்ள கருத்தாகும். அரசுடன் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதுவே எனது உளப்பூர்வமான விரும்பமாகும். எனினும் சிறிலங்காவில் ஏற்பட்டுவரும் மனிதாபிமான நெருக்கடிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதிலும், கிழக்கின் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதிலும் நான் தொடர்ந்து ஆவலாக இருக்கிறேன்.

எனது நேர்காணலில் நான் அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை கூற முயலவில்லை. எனது பயணத்தின் போது பொதுமக்களிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் என்னால் பெறப்பட்ட சில கருத்துக்களை நான் முன்வைத்திருந்தேன். மேலும் மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான எனது கருத்தையும் நான் சந்தித்த எல்லோரிடமும் தெரிவித்திருந்தேன். அதனையே அமைச்சருடன் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் தெரிவித்தேன் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரையும் அவர்களது நியூயோர்க் பயணத்தின் போது எதிர்வரும் மாதம் சந்திக்க விரும்புவதாக அவர் தனது கடிதத்தின் முடிவுரையில் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/

ஹோம்ஸ் பயங்கரவாதி என்று அரசாங்கம் கூறவில்லை ஜெயராஜ் கூறியிருந்தால் அது அவரது தனிப்பட்ட கருத்து

ஜோன் ஹோம்ஸ் ஒரு பயங்கரவாதி என இலங்கை அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அப்படிக் கூறியிருந்தால் அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் பெயரில் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புக்கும் உபாய ஆய்வுகளுக்குமான நிருவக கட்டிட கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தப்பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்தையும் அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒழித்துக்கட்ட தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தவர் லக்ஷ்மன் கதிர்காமராவார்.

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகள் பலவற்றிற்கு அழுத்தங்களையும் கொடுத்து வந்தார். அவர் விட்டுச் பணியையே நாம் இப்போது முன்னெடுத்துச் செல்கின்றோம். பயங்கரவாதம் எத்தகையது என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று அவரின் பெயரை இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவும் முடிவுசெய்தோம்.

http://www.virakesari.lk/

ஐ.நா. உயரதிகாரி ஹோம்ஸ் பயங்கரவாதியா?

அரசின் கருத்து அது அல்ல என்று அறிவிப்பு.

நிலையைத் தெளிவுபடுத்துகிறார் வெளிவிவகார அமைச்சர்.

ஐ.நா உயரதிகாரியன ஜோன் ஹோம்ஸ் ஒருபயங்கரவாதி என்று கூறப்படுவது இலங்கை அரசின் நிலைப்பாடே அல்ல.இப்படி அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர்

ரோஹித போகால்லாகம.

கொழும்பில் நேற்று தாம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விக்ளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இது குறித்தும் கருத்து வெளியிட்டார்.

ஜோன் ஹோம்ஸ் ஒரு சிரேஷ்ட ஐ.நா அதிகாரி. அவரை நாம் பயங்கரவாதியாகச் சித்தரித்தால் ஐ.நாவிடமிருந்து எந்த உதவியையும் இலங்கை பெற்றுக் கொள்ள முடியாது.ஐ.நா சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பயங்கரவாதியாகச் சித்தரிப்பது அரசின் நிலைப்பாடல்ல.

நீங்கள்(செய்தியாளர்கள்) குறிப்பிடுவது போல் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உண்மையில் அப்படி ஐ.நா உயரதிகாரியை பயங்கரவாதியாகச் சித்திரித்திருபாரேயானால் அது அவரின் தனிப்பட்ட கருத்து. அரசின் கருத்தல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

எந்த நேரத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில், என்ன நோக்கத்தக்காக அவர் இவாறு ஜ.நா உயரதிகாரியைச் சித்தரித்தார் என்றும் எனக்குத தெரியாது. ஆனால், என்னிடம் கேட்டால் அப்படிக் கூறுவது அரசின் நிலைப்பாடல்ல என்பதை மட்டும் என்னால தெளிவுபடுத்த முடியும். என்றார் அவர்.

நன்றி : சுடர் ஒளி

நல்ல சமாளிப்பு. ஜெயராஜ் கதிர்காமருக்கு நினைவாஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவரும் ஒருகாலத்தில ஐ.நா. சபை கொசுக்கு மருந்தடிக்கிறதோட நிறுத்திக் கொள்ளச் சொன்னவர் தானே.

ஜோன் ஹோம்ஸ் ஒரு சிரேஷ்ட ஐ.நா அதிகாரி. அவரை நாம் பயங்கரவாதியாகச் சித்தரித்தால் ஐ.நாவிடமிருந்து எந்த உதவியையும் இலங்கை பெற்றுக் கொள்ள முடியாது.ஐ.நா சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பயங்கரவாதியாகச் சித்தரிப்பது அரசின் நிலைப்பாடல்ல.

நீங்கள்(செய்தியாளர்கள்) குறிப்பிடுவது போல் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உண்மையில் அப்படி ஐ.நா உயரதிகாரியை பயங்கரவாதியாகச் சித்திரித்திருபாரேயானால் அது அவரின் தனிப்பட்ட கருத்து. அரசின் கருத்தல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிறேஸ்ட அமைச்சரின் கருத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என்னும் கண்ணோட்டத்தில் யாரும் பார்கமாட்டார்கள் என்பதே உண்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசை ஆத்திரப்பட வைக்கும் சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள்

[17 - August - 2007]

இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் அண்மைக் காலமாக தெரிவித்து வருகின்ற விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய பதிலை அளிக்க முடியாமல் இருக்கும் அரசாங்கத் தரப்பினர் ஆத்திரத்தின் மிகுதியில் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை அவதூறு செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான அலுவலகத்தின் பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் உலகில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று கருத்துத் தெரிவித்தமைக்காக அவரைக் கண்டித்து பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிட்ட பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க, ஐ.நா. நிறுவனத்தின் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குறியாகியிருப்பதாக? குறிப்பிட்டிருந்தார். மறுநாள் தென்பகுதியில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய பிரதமர் ஜோன் ஹோம்ஸினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மீண்டும் கண்டனம் செய்தபோது அவரை `ஜோன் ஹோம்ஸ் என்ற பயல்' (Fellow) என்று விளித்ததையும் காணக் கூடியதாக இருந்தது. ஐ.நா. வின் ஒரு உயரதிகாரியை ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறாக விளித்தமையில் இருக்கக்கூடிய பண்பற்ற- தகாத தன்மையைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ஜோன் ஹோம்ஸ் விவகாரம் உட்பட பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புகளினால் அண்மைக் காலத்தில் விடுக்கப்பட்ட அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச சதி முயற்சியொன்று மேற்கொள்ளப்படுகின்ற சாத்தியம் குறித்து அச்சம் வெளியிட்டார். இலங்கையில் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் விடுதலைப் புலிகளினதும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் நோக்கங்களுக்குச் சார்பாக சர்வதேச சமூகம் செயற்படுகின்றது என்றும் சில சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள் இரண்டகமானவையாக அமைந்திருக்கின்றன என்றும் குற்றஞ்சாட்டிய ரம்புக்வெல, அரசாங்கம் எந்தச் சவாலுக்கும் முகங்கொடுக்கத் தயாராயிருக்கிறது என்று அறிவித்தார். மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் (Human Rights Watch) சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் கடந்தவாரம் விடுத்திருந்த அறிக்கைகளை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச சதி முயற்சியொன்றின் அங்கமாக அமைச்சர் ரம்புக்வெல நோக்குகின்றார் என்பதை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள் தெளிவுபடுத்தின.

மறுநாள் புதன்கிழமை தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஜோன் ஹோம்ஸை ஒரு பயங்கரவாதி என்று வர்ணித்திருந்தார். அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்கு உலகளாவிய பிரசாரங்களைச் செய்வதற்காக ஜோன் ஹோம்ஸுக்கு விடுதலைப் புலிகள் இலஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். மனிதாபிமானப் பணிகளுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை விளங்குகின்றது என்ற ஜோன் ஹோம்ஸின் கூற்றை நாம் நிராகரிக்கின்றோம். அவரும் ஒரு பயங்கரவாதிதான். அந்த ஆள் பேசுவதை அரசாங்கம் கணக்கிலெடுப்பதில்லை என்று அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே கூறியிருந்தார். அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவர் ஐ.நா.வின் உயரதிகாரியை பயங்கரவாதியென்றும் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக உலகம் பூராகவும் பிரசாரம் செய்வதாகவும் தனது தகுதிக்கு கிஞ்சித்தும் பொருத்தமில்லாத வகையில் அவதூறு செய்திருப்பதை காண்கின்றோம். உள்நாட்டுஅரசியலில் அநாகரிகமாகப் பேசுவதைப் போன்று சர்வதேச உறவுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் செயற்படுவது முறையானதல்ல என்பதை அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை விஜயத்தின்போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்களில் ஒரு சொற்றொடர் அளவுக்கு மிஞ்சிய கவனத்தைப் பெற்றிருப்பது குறித்து கவலைப்படுவதாக தெரிவித்திருக்கும் ஜோன் ஹோம்ஸ் மனிதாபிமானப் பணியாளர்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் தொடர்பிலான விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி இருப்பதாக அல்லது அப்பணியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்று அர்த்தப்படும் வகையில் எதையும் சொல்வதற்கு தான் முயற்சிக்கவில்லையென்றும் ஜோன் ஹோம்ஸ் விளக்கம் அளித்திருக்கிறார். அவரைப் பயங்கரவாதி என்றும் இலஞ்சம் வாங்குபவர் என்றும் அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே அவதூறு தெரிவித்திருப்பதை அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த வொரு முக்கிய அமைச்சரும் இதுவரை கண்டிக்கவோ அல்லது அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ இல்லை.

இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வந்து கொண்டிருக்கின்ற அறிக்கைகளின் தொடரில் இறுதியாக வந்திருப்பது மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் (South Asians for Human Rights) என்ற அமைப்பின் அறிக்கையாகும். அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைய ஆரம்பித்த பிறகு வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களின் நிலை குறித்து மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை அறிக்கைவிடுத்திருக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினதும் ஏனைய தரப்புகளினதும் சூழ்ச்சித் தனமான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இந்த நிலைமை மனிதாபிமானச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாக அமைந்திருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றுகின்ற பல்வேறு தொண்டர் அமைப்புகள் அநாவசியமான விமர்சனங்களுக்கு ஆளாவதுடன் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக்காக வேண்டியிருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் உரியமுறையில் கையாள வில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பின் தலைவராக முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இருக்கிறார். இந்த அறிக்கையை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வாசித்திருந்தால், குஜ்ராலையும் ஒரு பயங்கரவாதி என்றும் இலஞ்சம் வாங்குபவர் என்றும் அவதூறு செய்யக்கூடுமோ?

நன்றி - தினக்குரல்

Edited by கறுப்பி

உவருக்கு பான் கின் மூண் கண்டனமாம்... பிரதமர் கனவு பின்னர் ஜனாதிபதி கனவு எல்லாம் தகர்ந்து போவதை பாத்துக்கொண்டு உயிர் வாழும் ஜந்து எண்டுதான் உவரை (உதை) சொல்ல வேணும்...

ஐ நா அதிகாரியை இலங்கை அமைச்சர் பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இலங்கையில் நடைபெறவிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டிலில் ஐ நா அதிகாரிகளை அனுமதிக்கக் கூடாது. :P

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக சிறிலங்காவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். - மர்மம் புரியாமல் சந்தேகிக்கிறது இலங்கை இனவாத அரசு.

ஜ வெள்ளிக்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் விமர்சனம் செய்துள்ளமைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஜோன் ஹோல்ம்ஸ், உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்ற மிகவும் ஆபத்தான இடம் சிறிலங்கா என்று சாடியிருந்தர்.இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்றும் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்றார் என்றும் கூறியிருந்தார்.இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஐ.நா. பேச்சாளர் மைக்கேல் மோண்டஸ் கூறியதாவது:ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. விரும்பத்தகாதது. ஹோன் ஹோல்ம்சின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் முழுமையாக ஆதரவளிக்கிறார் என்றார் அவர்.

http://nitharsanam.com/?art=24151

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தியை கேட்டு ஒவ்வொரு ஈழத்தமிழனும் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கிறோம். எமது போராட்டம் வெற்றி பெறும் என்ற அந்த உயரிய நம்பிக்கைக்கு இச் செய்தி மேலும் பலம் சேர்க்கிறது.. :lol::o

சிறிலங்காவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் விமர்சனம் செய்துள்ளமைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஜோன் ஹோல்ம்ஸ், உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்ற மிகவும் ஆபத்தான இடம் சிறிலங்கா என்று சாடியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்றும் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்றார் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஐ.நா. பேச்சாளர் மைக்கேல் மோண்டஸ் கூறியதாவது:

ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. விரும்பத்தகாதது. ஹோன் ஹோல்ம்சின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் முழுமையாக ஆதரவளிக்கிறார் என்றார் அவர்

http://www.eelampage.com/

ஜெயராஜ் பெர்னான்டோப் புள்ளையின் விமர்சனம் கவலையளிக்கிறது - ஜோன் ஹொல்ம்ஸ்

இலங்கை வந்தபோது தான் தெரிவித்த கருத்தை ஜெயராஜ் பெர்னான்டோப் புள்ளை விமர்சித்தமை கவலையளிப்பதாக ஜக்கிய நாடுகள் சபையின் மனநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜோன் ஹொல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பணிமனையிலிருந்து அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜோன் ஹொல்ம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனது இலங்கைக்கான பயணம் அரசாங்கத்துடன் உறவை மேப்படுத்தும் நோக்கம் கொண்டது.

இலங்கையில் கடந்த 18 மாதங்களில் 18 மனித நேயப் பணியாளர்கள் படு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே தான் கருத்தைத் தெரிவித்துள்ளேன்.

இலங்கை வந்திருந்தபோது வடக்கு - கிழக்குக்கு நேரில் சென்று பார்வையிட அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டு தந்தமைக்கு அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எனது பயணத்தின் போது இலங்கைத் தீவில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறியக்கூடியதாகவும் அவற்றுக்கான தீர்வைக் காணக்கூடியதாகவும் இருந்தது.

இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறைகள் மற்றும் தீர்வுகள் குறித்து மகிழ்சியடைகின்றேன்.

ரொயிற்றர் செய்தி நிறுவனத்திற்கு நான் வழங்கிய செவ்வியை சில ஊடகங்கள் எல்லைக்கு அப்பால் சென்று வெளியிட்டுள்ளன.

எனது செவ்வியில் எதிர்மாறான விடயங்கள் எவற்றையும் கூறவில்லை.

மனித நேயப் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாக நான் தெரிவிக்கவில்லை.

எனது செவ்வி தொடர்பில் சில ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு தனது பெயரைக் களங்கப்படுத்த முயற்சிக்கின்றன. எனினும் இதற்கு பகிரங்கமான பதிலை வழங்க நான் முயற்சிக்கவில்லை எனவும் ஜோன் ஹொல்ம்ஸ் தனது கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/

பல்டி அடிச்சுட்டாங்கையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.