Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வசந்த முதலிகே, உள்ளிட்ட.... மூவரை, 90 நாட்களுக்கு தடுத்து வைத்து... விசாரணைகளை மேற் கொள்வதற்கு அனுமதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகே, உள்ளிட்ட.... மூவரை, 90 நாட்களுக்கு தடுத்து வைத்து... விசாரணைகளை மேற் கொள்வதற்கு அனுமதி.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரிடம் போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று முந்தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 16 உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வசந்த முதலிகே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

தெற்காசியாசிய பிராந்திய காரியாலயம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

குடியியல் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பது மற்றும் பயங்கரவாதம் அல்லாத அவர்களின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்படாத கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2022/1295438

  • கருத்துக்கள உறவுகள்

முதலிகே, சிறிதம்ம தேரர், ஹஷாந்த ஆகியோர் தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு முகாமில்

23 Aug, 2022 | 09:46 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய  மூவரும்,  சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத  தடுப்பு  மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், இது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய மூவரையும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்ட நிலையிலேயே, அவர்கள் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என  சி.ஐ.டி.  எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனபப்டும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுப்பதாக   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் தகவல்கள் பிரகாரம், 90 நாள் தடுப்புக் காவல் விசாரண நடக்கும் தற்போதைய சூழலில், தங்காலையில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும்  விரும்பினால் சட்டத்தரணிகளை சத்திக்க அனுமதியளிக்கப்படும் என  அறிய முடிகின்றஹு.

 அத்துடன் நெருங்கிய உறவினர்கள் என கிராம சேவகரின் அத்தாட்சியுடன் வரும் உறவினர்கள்  மட்டும் அவர்களை வார நாட்களில் ஒரு நாளில் மட்டும் உற்பகல் 9.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கு அனுமதிப்படுவர் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரோடு ஒன்றாக பயணித்த  ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதாங்கள் பிரகாரம்,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலைய கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டு களனி வலய குற்ற விசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

கல்வெவ சிறிதம்ம தேரர்  தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்ர்து வைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

 இந் நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு  கையளிக்குமாறு பொலிஸ்  மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கடந்த 21 ஆம் திகதி  ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், இந்த மூன்று பேரும் அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து அவதானம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் பயங்கர்வாத நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவும் ஆலோசனை வழ்னக்கப்பட்ட நிலையிலேயே, சி.ரி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி. இணைந்த பொலிஸ் குழுவொன்றூடாக விசாரணைகல் தர்போது முன்னெடுக்கப்படுகின்றன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்

 கடந்த 18 ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி வலய  குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில்,  வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரும் உள்ளடங்கும் நிலையில் அந்த மூன்று பேருக்கு எதிராக மட்டும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.  போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில்,  முதலில்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான முதல் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்ப்ட்டு நீதிமன்றில் ஆஜர்ச் எய்யப்பட்ட 16 பேரில்  ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/134249

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஜே.வி.பி ஐ சேர்ந்தவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய  மூவரும்,  சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை குறைந்தபட்சமாவது விளங்கிக் கொள்வதற்கு தென்னிலங்கை இளையோர், குறிப்பாகச் சிங்களச் சகோதரர்களுக்கு ஒரு வாய்ப்பைக் காலம் வழங்கியுள்ளது. இன்றைய இந்தச் சூழலின் தோற்றுவாயாகத் திடீரெனத் தோன்றிய கொரோனா மற்றும் நிதிநிர்வாகத் திறன் இன்மை மட்டும் கரணியமல்ல, இனவாதக்கடும் போக்கின் கரணியமாகத் தமிழினத்தை ஒடுக்கவும், தமிழர் நிலத்தை கபளீகரம் செய்யவும் எனக் கடன்பட்டு யுத்தம் செய்ததோடு, அரசிலே இருந்தவர்கள் யுத்தத்தைச் சாட்டித் தம்மை சட்டவிரோதமாகப் பொருளாதார ரீதியில் வளர்த்துக்கொண்டதன் பலாபலனே இந்த நிலை என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பதோடு, உங்களுக்கே இந்தநிலை என்றால்,  எமதுநிலை இந்த 70 ஆண்டுகள் எவளவு கொடுமையானதாக இருந்தது என்பதைச் சொல்லிப் புரியவேண்டியதில்லை. சிங்கள இளையதலைமுறையாவது புதிய சிந்தனையோடு, பாதிக்கப்பட்ட தமிழினத்தின் உரிமைகளை ஏற்பதோடு, அதனூடாக எற்படும் புரிதலில் இருந்து ஒரு புதியதொரு அத்தியாயத்தை நோக்கிப் பயணிக்க முன்வந்தால் ஈழத்தீவினது இருமொழிபேசும் மக்களும் மகிழ்வான வாழ்வைக் காணமுடியும். இனவாதச் சிந்தனையென்ற கண்ணாடியூடாகவே நோக்கினால் இப்படியே காலத்துக்காலம் பாணுக்கும் பருப்புக்கும் போராடவேண்டியே இருக்கும். 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதாலா வசந்த முதலிகே பழிவாங்கப்படுகிறார் ? - ஊருவரிகே வன்னிலா எத்தோ கேள்வி

By VISHNU

13 SEP, 2022 | 09:54 PM
image

(எம்.மனோசித்ரா)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாகவா பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுகின்றார் என கேள்வியெழுப்பிய ஆதிவாசிகள் இனத் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ , வசந்த முதலிகேவை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் பழிவாங்கலுக்கு உற்படுத்தப்படுகின்றாரா? பொது பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் இவ்வாறு பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த பதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எனவே அவரை பலிவாங்குவதற்கு பதில் , ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

அந்த நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து பழிவாங்கலுக்கு உட்படுத்தாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் பிராமரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். https://www.virakesari.lk/article/135592

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2022 at 03:14, nunavilan said:

இவர்கள் ஜே.வி.பி ஐ சேர்ந்தவர்களா?

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது ஜே வி பி இன் ஒரு அங்கம். சிங்களத்தில் அந்தர விஷ்ஷ வித்யாலய சங்கம என்று பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் என்ன என்று இப்பவாவது அனுபவித்து உணருங்கள் சகோதரர்களே 

நாங்கள் உங்கள் புரிந்துணர்வுக்காக காத்திருக்கிறோம் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த முதலிகேயின் பிறந்த நாள் : சி.ரி.ஐ.டி. தலைமையகத்தின் முன் கேக் வெட்டிய போராட்டக்காரர்கள்

By T YUWARAJ

19 SEP, 2022 | 09:59 PM
image

 

( எம்.எப்.எம்.பஸீர்)

போராட்டக் கலத்தின் முன்னணி செயற்பாட்டாளர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவரது பிறந்த தினத்தை சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும்   புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் முன்பாக போராட்டக்காரர்கள்  கொண்டாடியுள்ளனர்.

 கிருளப்பனையில் அமைந்துள்ள  சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும்   புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் முன்பாக நேற்று (18) இரவு  8.30 மணியளவில், வசந்த முதலிகேவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்,  அங்கு கேக் வெட்டி அவரது பிறந்த தினத்தை கொண்டாடினர். அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான அவரது கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமும் போராட்டக்காரர்கள் நடந்துகொண்டனர்.

 எவ்வாறாயினும் , வசந்த முதலிகே, பயங்கரவாத தடுப்பு மற்றும்  புலனாய்வுப் பிரிவின் கீழ் உள்ள தங்காலை தடுப்பு முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 பின்னர்,  பத்தரமுல்லை - தியத்த உயன பகுதியிலும் போராட்டக்காரர்கள் வசந்த முதலிகேவின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து,  அடக்குமுறைக்கு எதிராக  எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

No description available.

முன்னதாக நாட்டில் ஜனாதிபதி பதவி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களாக விளங்கிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய மூவரையும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டது.

 அதன்படி, அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என  சி.ஐ.டி.  எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுக்கிறது.

https://www.virakesari.lk/article/135965

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டி ஏற்படும் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

By T. SARANYA

19 NOV, 2022 | 03:28 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே  மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இருப்பினும் நிச்சயம் இதன் பின்விளைவுகளை  எதிர்காலத்தில்  அரசாங்கம் அனுபவிக்கும் என்றும் அதனை கண்டு நாம் கவலைப்பட வேண்டிய   தருணமொன்று  ஏற்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் சிறிதம தேரரை பார்ப்பதற்காக  நேற்று  (18) சென்றிருந்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

பயங்கரவாத தடைச்சட்டத்தின்  தடுத்து வைக்கப்பட்டுள்ள  சிறிதம்ம தேரரை பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை பார்க்கும் போது அரசாங்கத்தினால்  பழிவாங்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகிறது என்பது தெட்டத் தெளிவாக புரிந்துக்கொள்ள  முடிகிறது.

மேலும், வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் தொடர்பான வழக்கு விசாரணைகளின் நீதிமன்றத்தின் தீர்ப்பு  ஓரிரு மாதங்களில் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது.

குறித்த கைதுகள் அநீதியான, சட்டரீதியற்ற, பழிவாங்கல் நடவடிக்கைகளாக நாம் காண்கிறோம்.

இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையில் அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர், யுவதிகளால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நாம் ஆதரவாக செயல்படுவோம்.

அரசாங்கம்  இதுபோன்ற கைதுகளை மேற்கொண்டு அவர்களை சிறையில் அடைத்து அவர்களின் தலைவிதியை மாற்ற முடியாது. மேலும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நிச்சயமாக எதிர்காலத்தில்  வருந்தும். இதனை கண்டு நாம் கவலைப்பட வேண்டி ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/140542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.