Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் - ஜி.எல் பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் - ஜி.எல் பீரிஸ்

By DIGITAL DESK 5

20 AUG, 2022 | 01:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம். எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா,சரித ஹேரத்,டிலான் பெரேரா,உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் 09 உறுப்பினர் உள்ளடங்களாக 14 உறுப்பினர்கள் சனிக்கிழமை (20) அநுராதபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

எரிபொருள் பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு இவர்கள் தனித்தனி வாகனங்களை பயன்படுத்தாமல் கொழும்பில் இருந்து அநுராதபுரம் வரை தனிப்பட்ட பேருந்தில் ஒன்றாக சென்றுள்ளனர்.

மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 14 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கை மற்றும் கட்சி யாப்பிற்கு முரணாக உள்ளதால் ஒன்றிணைந்து செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது.

நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம்.எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம்.

அரசியல் ரீதியான முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்போம்.அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் நாங்கள் இலக்கு வைக்கப்படுவதை விளங்கிக்கொள்ள முடிகிறது என்றார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்ததை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும் ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுத்து,அவரை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

கட்சியின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்பட்டு அத்தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டின் போது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான பின்னணியில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் உட்பட பொதுஜன பெரமுனவின் 14 உறுப்பினர்கள் தனித்து செயற்படுகிறார்கள்.

புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் - ஜி.எல் பீரிஸ் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பொதி என்று, ஒரு பையை தூக்கி, தோலில் போட்டால், சம்பந்தர் அய்யா பின்னால வருவார்...😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nochchi said:

நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம். எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

இன்னும் இன மத நடவடிக்கைகளை விடவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

அரசியல் பொதி என்று, ஒரு பையை தூக்கி, தோலில் போட்டால், சம்பந்தர் அய்யா பின்னால வருவார்...😜

5 minutes ago, குமாரசாமி said:

இன்னும் இன மத நடவடிக்கைகளை விடவில்லை.

தானும் ஒரு இனவாதியென 'அடையாளம்' காட்டித்தான் சிங்களவரை மடக்கலாம் என்று இன்று இந்த படித்த இனவாதியும் நினைக்கிறான் என்பதை என்னவென்று சொல்வது? கோட்டாவும் தான் துட்டகாமியின் வாரிசாகப் படம்காட்டிக் கடைசியிலை சனத்தை பிச்சையெடுக்க வைத்துள்ளார். அடுத்து  இவர்............. ! இவங்கள் படிப்பிக்கிறதுகள் எவளவு இனவாதிகளாக இருக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nochchi said:

புலம் பெயர் தமிழர் அலுவலகம் கொழும்பில் அமைய, மொட்டு கட்சி எதிர்ப்பு. கோத்தா நாடு திரும்பியதும், தீவிர போராட்டம் நடத்துவர்களாம். 

இவர்கள், நாடு மீள ஒருபோதும் விடப்போவதில்லை. போட்ட அடி போதாது. 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர வாழ்த்துகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

புலம் பெயர் தமிழர் அலுவலகம் கொழும்பில் அமைய, மொட்டு கட்சி எதிர்ப்பு. கோத்தா நாடு திரும்பியதும், தீவிர போராட்டம் நடத்துவர்களாம். 

இவர்கள், நாடு மீள ஒருபோதும் விடப்போவதில்லை. போட்ட அடி போதாது. 

நாதமவர்களே, எங்களிடம் புலத்திலோ அல்லது தாயகத்திலோ நல்லதொரு திடசங்கற்பமும், அரசியல் ஆற்றலும் உள்ள தலைமையொன்றில்லாதது பெரும் குறையாக உள்ளது. சிங்களத்தின் இந்தத் தொங்குபொறி நிலையைச் சரியாகப் பயன்படுத்தி நாம் எமது மக்களையும் எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்கின்றோமெனத் திட்டவரைபுகளை அறிவியல் நோக்கோடு தயாரித்து அ.நா.நி முதல் ஐநாவரை அனுப்பி ஒரு செயற்திட்டமொன்றை செய்தால், ஐநா போன்றனவும் மாத்தியோசிக்கக்கூடும். வட-கிழக்கிற்கான ஒரு பொருண்மியக் கட்டமைப்பையாவது நிறுவி அதனைப் புலமையாளர்கொண்ட ஒரு குழுவின் ஊடாகச் சுயமாக அரசினது தலையீடின்றி இயங்கவைத்தாலே ஒருபடி வெற்றியாக அமையும். அதனை வெற்றிகரமாக இயங்கவைப்பதன் ஊடாக எமது அரசியலையும் தனித்துவமாக விடுமாறு கோரமுடியும் அல்லவா?   அதற்கான எந்தச் சிந்தனையுமின்றியல்லவா உருத்திரா முதல் கயன் வரையானவர்கள் இருக்கிறார்கள். கோட்டா வருவதோடு, புலம்பெயர் தமிழருக்கான பணியகம் புடுங்கியெறியப்படுவதும் நடக்கவேண்டும். ரணிலினது ஆட்சியும் முடிவுக்கு வரலாம் அல்லது யாரோ ஒரு களஉறவு(வெறொருதிரியில்) சுட்டியதுபோல்  கோட்டா உள்ளபோறதாகவும் இருக்கும். எது நடந்தாலும் இரசிக்கக் கூடியதே. ஏனென்றால் மாறிமாறி எம்மையழித்தவர்கள் ஒருவரையொருவர் இப்படியாவது தண்டிக்கப்படட்டும்.  

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, nochchi said:

நாதமவர்களே, எங்களிடம் புலத்திலோ அல்லது தாயகத்திலோ நல்லதொரு திடசங்கற்பமும், அரசியல் ஆற்றலும் உள்ள தலைமையொன்றில்லாதது பெரும் குறையாக உள்ளது. சிங்களத்தின் இந்தத் தொங்குபொறி நிலையைச் சரியாகப் பயன்படுத்தி நாம் எமது மக்களையும் எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்கின்றோமெனத் திட்டவரைபுகளை அறிவியல் நோக்கோடு தயாரித்து அ.நா.நி முதல் ஐநாவரை அனுப்பி ஒரு செயற்திட்டமொன்றை செய்தால், ஐநா போன்றனவும் மாத்தியோசிக்கக்கூடும்.

நீங்களே சொல்லுங்கள் இதுகளை வைத்து என்ன செய்யலாம்? சின்ன ரோட்டு கூட போடமுடியாது.

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருத்தர் அங்க இருந்து தான் ஆரம்பித்தவர்! இப்ப அவர் எங்கே என்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

அதற்கான எந்தச் சிந்தனையுமின்றியல்லவா உருத்திரா முதல் கயன் வரையானவர்கள் இருக்கிறார்கள்.

4 hours ago, குமாரசாமி said:

நீங்களே சொல்லுங்கள் இதுகளை வைத்து என்ன செய்யலாம்? சின்ன ரோட்டு கூட போடமுடியாது.

இதுதான் எமது மக்களின் மன ஓட்டமும் என்று நினைக்கின்றேன். காணாமற்போனவர்களது அமைப்பினர் நேரடியாகவும் நெத்தியடியாகவும் கூறிவிட்டார்கள். ஆனால், மக்கள் கொடுத்த புள்ளடிப்பலம் அவர்களைத்தானே தமிழினத் தலைமையெனச் சொல்கிறது. 

3 hours ago, ஏராளன் said:

ஏற்கனவே ஒருத்தர் அங்க இருந்து தான் ஆரம்பித்தவர்! இப்ப அவர் எங்கே என்று தெரியவில்லை.

அவர் திரும்பிவாறாராம். பிரதமாகிறாராம். பிறகு சனாதிபதி பதவி துறக்கிறாராம்.

அரசமைப்பின்படி பிரதமர் சனாதிபதியாகிறாராம் ...............Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

அவர் திரும்பிவாறாராம். பிரதமாகிறாராம். பிறகு சனாதிபதி பதவி துறக்கிறாரஅரசமைப்பின்படி பிரதமர் சனாதிபதியாகிறாராம் ...............Quellbild anzeigen

இவர் பிரதம மந்திரியானால்; வெறும் மாதிரியாகவே கதிரையை அலங்கரித்துக்குக்கொண்டு இருப்பார், சகல அதிகாரங்களும் குறைக்கப்படும். ஜனாதிபதியானால் அங்கு தேவையே இருக்காது, இன்னொரு நாடு அதிகாரம் பெற்றிருக்கும். நாட்டை விற்று விட்டு, இவர் கையில் பதவி வழங்கப்படும். பெண் உனக்குத்தான் என்று ஆசை வார்த்தை கூறி உழைப்பித்துப்போட்டு, வேறொருவருக்கு பெண்ணைக்கட்டிக்கொடுப்பதுபோல்   எல்லாம் வெறும் கனவே! 

11 hours ago, nochchi said:

.எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம்.

அது ஏது புனித நகர்? கோத்தா பதவிப்பிரமாணம் செய்ததும் இந்தப்புனித நகரிலேயே, பதவிக்காலம் முடியுமுன்னே தப்பியோடியதும்  அதனாலேயே. பாத்து...!  இந்த நகரில் ஒரு நயவஞ்சக வரலாறு இருக்கிறது. அதனாலேயே நஜவஞ்சகர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து, இங்கு வந்து கூடி முடிவெடுக்கிறார்கள், பிரமாணஞ் செய்கிறார்கள். இங்கு வந்து உறுதியெடுப்பவர்களை அது பழிவாங்காமல் விடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இவர் பிரதம மந்திரியானால்; வெறும் மாதிரியாகவே கதிரையை அலங்கரித்துக்குக்கொண்டு இருப்பார், சகல அதிகாரங்களும் குறைக்கப்படும். ஜனாதிபதியானால் அங்கு தேவையே இருக்காது, இன்னொரு நாடு அதிகாரம் பெற்றிருக்கும். நாட்டை விற்று விட்டு, இவர் கையில் பதவி வழங்கப்படும். பெண் உனக்குத்தான் என்று ஆசை வார்த்தை கூறி உழைப்பித்துப்போட்டு, வேறொருவருக்கு பெண்ணைக்கட்டிக்கொடுப்பதுபோல்   எல்லாம் வெறும் கனவே! 

இனவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள் என்று பார்க்கப்படும் சிங்களப் பெருந்தேசியவாதிகள் இதனை ஏற்றுக்கொள்வார்களா தெரியவில்லை. ஒரு சில சிறுசிறு சலசலப்புகளோடு பெருந்தேசியவாதம் பதுங்கியிருக்கிறது. ஒரு கட்டத்தின்மேல் அது ரணிலையே தூக்கியெறிந்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றும். அந்த இடத்தை ஒருவேளை கோத்தாவால் முடியாவிட்டால் விமல், சம்பிக்க, பீரிஸ் போன்றவர்களை வைத்து நகர்த்துவார்கள். வெளியார் தலையீடு அதிகரித்தால் இனக்கலவரத்தைக் கையிலெடுத்து  நாட்டைக்கொழுத்தவும் இந்தச் சிங்களப் பெருந்தேசியவாதக் கூட்டம் தயங்காது. ஆனால், இனி ஒரு இனக்கலவரம் வருமானால் அது  ஈழத்தீவினது பங்குபிரிப்போடு நிறைவுக்கு வரும். அது சிலவேளை மூன்று நிர்வாகங்களாகவும் அமையலாம். நன்றி

6 hours ago, satan said:

அது ஏது புனித நகர்? கோத்தா பதவிப்பிரமாணம் செய்ததும் இந்தப்புனித நகரிலேயே, பதவிக்காலம் முடியுமுன்னே தப்பியோடியதும்  அதனாலேயே. பாத்து...!  இந்த நகரில் ஒரு நயவஞ்சக வரலாறு இருக்கிறது. அதனாலேயே நஜவஞ்சகர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து, இங்கு வந்து கூடி முடிவெடுக்கிறார்கள், பிரமாணஞ் செய்கிறார்கள். இங்கு வந்து உறுதியெடுப்பவர்களை அது பழிவாங்காமல் விடாது.

அப்படித்தான் தோன்றுகிறது. இதில் ஏதோ ஒருவித ஆத்ம பலத்தின் ஆற்றல்தானோ யார் அறிவார். வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர் சேனையின் குறியீடாகப் புனிதநகர் தொடர்ந்தும் வாழ்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.