Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 வருடங்களின் பின் ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி 

12 SEP, 2022 | 12:18 AM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.

Wanindu-Hasaranga-celebrates-after-dismi

இதன் மூலம் ஓரே நாளில் இரண்டு ஆசிய கிண்ணங்களை வென்றெடுத்து இலங்கை வரலாறு படைத்தது. 

சிங்கப்பூரில் இன்று பிற்பகல் நிறைவுபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக சுவீகரித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டிலும் ஆசிய கிண்ணத்தை இலங்கை ஆறாவது தடவையாக சுவீகரித்து பெருமை பெற்றது.

Sri-Lanka-fans-cheer-for-their-team_-Sri

8 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் இருபது 20 ஆசிய கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை சுவீகரித்த இலங்கை, இந்த வருடமும் அதேபோன்று இரட்டை வெற்றியை ஈட்ட அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் இலங்கை முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் பானுக்க ராஜபக்ஷ அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம், வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், ப்ரமோத் மதுஷானனின் 4 விக்கெட் குவியல் என்பன ஆசிய கிண்ணத்தை இலங்கை சுவீகரிப்பதற்கு பெரிதும் உதவின.

Chamika-Karunaratne-celebrates-Mohammad-

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானின் இன்னிங்ஸில் முதலாவது ஓவரை வீசிய டில்ஷான் மதுஷன்கவின் முதல் பந்து நோபோல் ஆனது. அதனைத் தொடர்ந்து அவர் வீசிய பந்துகள் வைட், வைட், 5 வைட், வைட், வைட் என பதிவானது. அவர் வீசிய 6ஆவது பந்து ப்ரீ ஹிட்டாக இருந்தபோதிலும் ஒரு ஓட்டமே பெறப்பட்டது. அதன் பின்னர் மதுஷன்க சிறப்பாக பந்துவீசிய போதிலும் முதல் ஓவரில் 12 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

Asif-Ali-is-bowled_-Sri-Lanka-vs-Pakista

இது பாகிஸ்தானுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், அடுத்த ஓவரரை வீசிய மஹீஷ் தீக்ஷன தனது ஓவரில் 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தினார்.

Bhanuka-Rajapaksa-smacks-one-down-the-gr

4ஆவது ஓவரில் பாகிஸ்தான் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ப்ரமோத் மதுஷானின் பந்துவீச்சில் பாபர் அஸாம் (5), பக்கார் ஸமான் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் களம்விட்டு வெளியேற பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மொஹமத் ரிஸ்வானும் இப்திகார் அஹ்மத்தும் 3ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட ஓட்ட வேகம் போதுமானதாக அமையவில்லை.

Haris-Rauf-almost-had-a-third-inside-the

இப்திகார் அஹ்மத் 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மொஹமத் நவாஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேற பாகிஸ்தான் 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனை அடுத்து தேவையான ஓட்ட வேகம் மேலும் அதிகரிக்க பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. 

கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 61 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஹசரங்க வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்துதில் மொஹமத் ரிஸ்வான் சிக்ஸ் ஒன்றை விளாச முனைந்து 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஆசிப் அலியின் விக்கெட்டை வனிந்து ஹரசங்க நேரடியாக பதம்பார்த்தார்.

Kusal-Mendis-loses-his-stumps-to-a-Nasee

அதே ஓவரில் குஷ்தில் ஷாவின் விக்கெட்டையும் ஹசரங்க வீழ்த்த இலங்கையின் வெற்றி அண்மித்துக்கொண்டிருந்தது.

18ஆவது ஓவரில் மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஷதாப் கானும் (4), 19ஆவது ஓவரில் மதுஷானின் பந்துவீச்சில் நசீப் ஷாவும் (4) ஆட்டமிழக்க பாகிஸ்தானின் ஆசிய கிண்ண கனவு தவிடுபொடியானது.

Pramod-Madushan-celebrates-dismissing-Ba

கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 32 ஓட்டங்கள் தேவைப்பட முதல் 3 பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்த சாமிக்க கருணாரட்ன, கடைசி பந்தில் பாகிஸ்தானின் கடைசி ஆட்டக்காரரான ஹரிஸ் ரவூப்பின் விக்கெட்டையும் கைப்பற்றினார்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தானின் பந்துவீச்சுகளை ஆரம்பத்தில் எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

Mohammad-Rizwan-works-one-on-the-leg-sid

குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8), தனுஷ்க குணதிலக்க (1), தனஞ்சய டி சில்வா (28), தசுன் ஷானக்க (2) ஆகியோர் முதல் 9 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

எவ்வாறாயினும் பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

The-Sri-Lanka-players-celebrate-their-wi

இந்தத் தொடரில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய பானுக்க ராஜபக்ஷ 45 பந்துளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 71 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவருடன் பிரிக்கப்படாத 7 ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த சாமிக்க கருணாரட்ன 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/135473

RELATED TAGS:

  • Replies 65
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

Ex-Sri Lanka PM Ranil Wickremesinghe sacked over assassination plot or  political misconduct? Maithripala Sirisena says both-World News , Firstpost

நரி, வந்த ராசி.... விளையாட்டுத் துறையில்... 
உலக அளவில், "கப்புகள்" எல்லாம் வாங்குறார்கள். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SL vs PAK: ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை பாகிஸ்தானை வென்றது எப்படி?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 
வனிந்து ஹஸ்ரங்கா

பட மூலாதாரம்,SURJEET YADAV/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

வனிந்து ஹஸ்ரங்கா

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக வனிந்து ஹஸ்ரங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துபாயில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவதற்கு அவரது சிறப்பான ஆட்டம் உதவியது.

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி இப்பொழுது ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மேலும், இந்த கோப்பையுடன் சேர்த்து, இலங்கை அணி ஆறாவது முறையாக இக்கோப்பையை வென்றுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியுடன்தான் இலங்கை தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் அதன் பின்பு ஒரு போட்டியில் கூட இலங்கை அணி தோல்வி அடையவில்லை.

இந்த வெற்றி மூலம் தங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அடைவதற்கான ஒரு வாய்ப்பை இலங்கை அணி கொடுத்துள்ளது. அதுபோக, ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றிலும் சிறப்பாக விளையாட இலங்கை அணிக்கு இதன்மூலம் உந்துதல் கிடைக்கும்.

முகமது ரிஸ்வான் அரைசதம் வீண்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்குக்கு முகமது ரிஸ்வான் முதுகெலும்பாக இருந்தார்.

நேற்றைய இறுதிப் போட்டியிலும் கூட அரை சதம் அடித்து பாகிஸ்தானின் போராட்டத்தை தொடர்ந்தார். ஆனால் ஹஸ்ரங்க 16வது ஓவரில் மூன்று அதிர்ச்சிகளை பாகிஸ்தானுக்கு கொடுத்து அதன் விதியை மாற்றினார்.

முதலில் குணத்திலக, ரிஸ்வான் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார். மூன்றாவது பந்தில் ஆசிஃப் அலி போல்டானார். ஐந்தாவது பந்தில் குஷ்தில் ஷா அடித்த பந்தை தீக்ஷான கேட்ச் பிடித்தார்.

முகமது ரிஸ்வான்

பட மூலாதாரம்,KARIM SAHIB/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

முகமது ரிஸ்வான்

இதனால் 112 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்கு பாகிஸ்தான் அணி சுருண்டது.

ரிஸ்வான் மிகவும் நிதானமாக பேட்டிங் செய்தது, பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரிக்க இலங்கைக்கு உதவியது. கடந்த சில போட்டிகளாகவே பாகிஸ்தான் அணியின் பிரச்னைக்குரிய காலகட்டத்தில் உதவி செய்யும் ஆட்டக்காரராகவே ரிஸ்வான் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

எனினும் இறுதிப்போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் அவரை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை.

ஒவ்வொரு ஓவரிலும் பாகிஸ்தான் எடுக்க வேண்டிய ரன் ரேட் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் எடுத்த முயற்சியின் போது, பாகிஸ்தானின் நவாஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

அழுத்தத்தில் மதூஷன்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிரமோத் மதூஷன் இறுதி போட்டியில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மீது பந்துவீச்சு தாக்குதல் நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அவர் நோபாலுடன் தொடங்கினார்.

ஒரு நோபால், ஏழு வைடு, ஃப்ரீ ஹிட்டில் அடிக்கப்பட்ட ஒரு ரன் என அனாமதேயமாக அவர் ஒன்பது ரன்கள் கொடுத்த பின்னும் முதல் பந்தை வீச காத்திருக்க வேண்டி இருந்தது. மொத்தத்தில், முதல் ஓவரில் மட்டும் அவர் 12 ரன்கள் கொடுத்தார்.

ஆனால், அவர் பின்னர் மீண்டு வந்தார். அவர் வீசிய நான்கு ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

இலங்கையின் சொதப்பல் - பயன்படுத்திக் கொள்ளாத பாகிஸ்தான்

Asia Cup: Sri Lanka Pakistan

பட மூலாதாரம்,KARIM SAHIB/AFP VIA GETTY IMAGES

முதலில் பேட் செய்த இலங்கைக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த அணி 58 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் பனுக்கா ராஜபக்ஷ மற்றும் ஹஸ்ரங்க ஆகியோரின் பேட்டிங் நிலைமையை மாற்றியது. ராஜபக்ஷ 6 ஃபோர் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 157.78.

ஹஸ்ரங்க 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எனும் ஸ்கோரை எட்ட உதவியது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 171.43.

அதேவேளை, பாகிஸ்தானின் பந்துவீச்சும் முதல் 10 ஓவரில் இருந்ததைப் போல அடுத்த 10 ஓவர்களில் இல்லை. இலங்கை பேட்டிங் இறுதியை நெருங்கும்போது ராஜபக்ஷ மற்றும் கருணாரத்ன கூட்டணி 54 ரன்கள் எடுத்து. இது ஏழாம் விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் அடித்த அடி இலங்கை அணி ரன் குவிக்கவும், அடுத்ததாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் 13வது ஓவர் முதல் பாரபட்சமின்றி வெளியேறவும் 2022 ஆசிய கோப்பையை இலங்கையின் பெயரில் எழுதவும் உதவியது.

https://www.bbc.com/tamil/sport-62871553

  • கருத்துக்கள உறவுகள்

சடாப்பின் சொதப்பல் பற்றி  எழுதாதது பிபிசி ஒரு சொதப்பல் என காட்டுகிறது.  🙂சடாப்  அதிக நேரம் இருந்தும் ஒரு பிடியை விட்டது.  பின்னர் இன்னுமொரு பிடியை இன்னுமொருவர் பிடிக்க எத்தனிக்கும் போது தானும் பிடிக்க எத்தனித்து மற்றவருடன் மோதி தன்னை காயப்படுத்தி கொண்டது மட்டுமல்லாமல் அடுத்த பிடியை விடவும் காரணமானார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Ex-Sri Lanka PM Ranil Wickremesinghe sacked over assassination plot or  political misconduct? Maithripala Sirisena says both-World News , Firstpost

நரி, வந்த ராசி.... விளையாட்டுத் துறையில்... 
உலக அளவில், "கப்புகள்" எல்லாம் வாங்குறார்கள். 😜

அதெல்லாம் அப்ப‌டி இல்லை , ம‌கிந்தான்ட‌ ம‌க‌ன் தான் விளையாட்டுத்துறை அமைச்ச‌ரா இருந்தார் , 
இப்போது அவ‌ர்க‌ள் இல்லாத‌து இல‌ங்கை அணிய‌ ப‌ழைய‌ நிலைக்கு கொண்டு போய் விட்டு இருக்கு 😏

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

அதெல்லாம் அப்ப‌டி இல்லை , ம‌கிந்தான்ட‌ ம‌க‌ன் தான் விளையாட்டுத்துறை அமைச்ச‌ரா இருந்தார் , 
இப்போது அவ‌ர்க‌ள் இல்லாத‌து இல‌ங்கை அணிய‌ ப‌ழைய‌ நிலைக்கு கொண்டு போய் விட்டு இருக்கு 😏

நான்… பகிடிக்கு, சொன்னேன் பையன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ வெற்றியோட‌ இலங்கை அணி வீர‌ர்க‌ள் உற்சாக‌ம் அடைந்து இருப்பார்க‌ள்

சொந்த‌ ம‌ண்ணில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தினார்க‌ள்.........இப்போது ப‌ல‌மான‌ இந்தியாவை பாக்கிஸ்தானை வீழ்த்தி கோப்பைய‌ வென்று இருக்கின‌ம் , எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இல‌ங்கை அணியில் இப்போது தான் அதிக‌ இள‌ம் வீர‌ர்க‌ள்.............ப‌ல‌ வ‌ருட‌ தொட‌ர் தோல்வியால் ப‌ட்ட‌ அவாம‌ன‌ங்க‌ளுக்கு நேற்று முற்றுப் புள்ளி  வைச்சு இருக்கின‌ம் 

இல‌ங்கை அணிக்கு வாழ்த்துக்க‌ள்.....ம்ஸ் டோனிய‌ போல இல‌ங்கை க‌ப்ட‌னும் கூலா இருக்கிறார் நேற்றையான் போட்டியில் முத‌லாவ‌து ஓவ‌ரில் தொட‌ர்ந்து வ‌யிட் வோல் போட‌ கூட‌ இல‌ங்கை க‌ப்ட‌ன் ரென்ச‌ன் ஆக‌ வில்லை , இது தான் க‌ப்ட‌னுக்கு அழ‌கு.............
 
  • கருத்துக்கள உறவுகள்

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் அப்கானிஸ்தான் அணியின் எதிர் கால‌ம் எப்ப‌டி இருக்கும் என்று யாழ்க‌ள‌த்தில் எழுதினேன் ப‌ல‌ர் என்னை பார்த்து ந‌க்க‌லோடு சிரித்தார்க‌ள் , பையா உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று லொல்

எழுதின‌ உற‌வுக‌ளை நினைக்க‌ தான் என‌க்கு இப்ப‌ சிரிப்பு வ‌ருது லொல் 😁
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

இந்த‌ வெற்றியோட‌ இலங்கை அணி வீர‌ர்க‌ள் உற்சாக‌ம் அடைந்து இருப்பார்க‌ள்

சொந்த‌ ம‌ண்ணில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தினார்க‌ள்.........இப்போது ப‌ல‌மான‌ இந்தியாவை பாக்கிஸ்தானை வீழ்த்தி கோப்பைய‌ வென்று இருக்கின‌ம் , எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இல‌ங்கை அணியில் இப்போது தான் அதிக‌ இள‌ம் வீர‌ர்க‌ள்.............ப‌ல‌ வ‌ருட‌ தொட‌ர் தோல்வியால் ப‌ட்ட‌ அவாம‌ன‌ங்க‌ளுக்கு நேற்று முற்றுப் புள்ளி  வைச்சு இருக்கின‌ம் 

இல‌ங்கை அணிக்கு வாழ்த்துக்க‌ள்.....ம்ஸ் டோனிய‌ போல இல‌ங்கை க‌ப்ட‌னும் கூலா இருக்கிறார் நேற்றையான் போட்டியில் முத‌லாவ‌து ஓவ‌ரில் தொட‌ர்ந்து வ‌யிட் வோல் போட‌ கூட‌ இல‌ங்கை க‌ப்ட‌ன் ரென்ச‌ன் ஆக‌ வில்லை , இது தான் க‌ப்ட‌னுக்கு அழ‌கு.............
 
பையா உலககோப்பை தொடரில் சாதனை படைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா உலககோப்பை தொடரில் சாதனை படைப்பார்களா?

பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும் அண்ணா

2014ம் ஆண்டு ஆசியா கோப்பை ம‌ற்றும் உல‌க‌கோப்பைய‌ ஒரே ஆண்டில் தூக்கினார்க‌ள் இல‌ங்கை வீர‌ர்க‌ள்  அதே போல் 2022இல் கூட‌ ந‌ட‌க்க‌லாம் 🙏🙏🙏

ப‌ந்து வீச்சு ர‌ன் குவிப்பு இர‌ண்டிலும் ந‌ல்லா செய‌ல் ப‌டின‌ம் இதை உல‌க‌ கோப்பையிலும் வெளிப் ப‌டுத்தினா கோப்பை வெல்ல‌ வாய்ப்பு இருக்கு 😏, இந்தியா என்ன‌ தான் ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்க‌ளை வைச்சு இருந்தாலும் ஏதாவ‌து ஒரு அணியிட‌ம் அடி வேண்டி கொண்டு பாதியிலே திரும்புவின‌ம் 😁

2011ம் ஆண்டுக்கு பிற‌க்கு இந்தியா உல‌க‌ கோப்பை தூக்கின‌து கிடையாது , இந்த‌ வ‌ருட‌மும் தூக்க‌ போர‌து கிடையாது , 😁😏👎
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தவறு நடந்தது? தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பாபர் அசாம்

12/09/2022
213
Babar_Azam_AP_1200x768-696x391.jpeg
sms-voting.gif
  
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான பாபர் அசாம், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் தமது அணி தோல்வியடைந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் 23 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, ஆறாவது முறையாக ஆசியக் கிண்ணத் தொடரினை வென்ற அணியாகவும் சாதனை செய்தது.

>> WATCH – இறுதிப்போட்டியின் வெற்றியை சாதகமாக்கிய முக்கியமான காரணம் என்ன? – ஷானக!

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் இலங்கை அணியுடன் தமது தோல்விக்கான காரணம் தொடர்பில் விபரித்திருந்தார்.

பாபர் அசாம் போட்டியின் முதல் 8 ஓவர்களிலும் தாம் செலுத்திய ஆதிக்கத்தினை பானுக்க ராஜபக்ஷ வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவருடனும் இணைந்து பெற்ற இணைப்பாட்டங்கள் மூலம் இல்லாமல் செய்து விட்டதாக தெரிவித்தார்.

”இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு எதிராக முதல் எட்டு ஓவர்களிலும் நாங்கள் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தினோம். ஆனால் ராஜபக்ஷவின் இணைப்பாட்டங்கள் பிரமாதமாக இருந்தன. இது உண்மையான ஆடுகளமாக இருந்தததோடு, துபாய் நகரில் விளையாடியது எப்போதும் போல நல்லதாகவே இருந்தது.”

ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி பானுக்க ராஜபக்ஷ வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் உடன் பெற்ற இணைப்பாட்டங்கள் (112 ஓட்டங்கள்) மூலமாக 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதேநேரம் தமது துடுப்பாட்டம் குறித்தும் கவலை வெளியிட்ட பாபர் அசாம், மோசமான தோல்விக்கு துடுப்பாட்டத்தோடு களத்தடுப்பும் காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

”எங்களது ஆளுமைக்கு ஏற்றாற்போல் நாங்கள் துடுப்பாடவில்லை. நாங்கள் சிறப்பாக ஆரம்பித்த போதும் 15 தொடக்கம் 20 வரையிலான ஓட்டங்களை மேலதிகமாக எதிரணிக்கு வாரி வழங்கியிருந்ததோடு (பந்துவீச்சினை) சிறப்பாகவும் நிறைவு செய்யவில்லை. சில நேர்மறையான விடயங்களும் கிடைத்திருந்தன. இறுதிப் போட்டியில் சிறு தவறுகள் குறைவாகவே இருந்தன. எங்களது களத்தடுப்பு எதிர்பார்த்தது போல் அமையவில்லை. துடுப்பாட்டத்திலும் சிறப்பான நிறைவினைப் பெற முடியவில்லை. ரிஸ்வான், நவாஸ் மற்றும் நஸீம் ஆகியோர் நேர்மறையாக இருக்கின்றனர். ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும் நாம் குறைவான தவறுகளை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.”

https://www.thepapare.com/what-went-wrong-babar-azam-news-tamil/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் தோல்வியை பொறுப்பேற்ற சதாப் கான்

Asia Cup 2022

By
 Mohammed Rishad
 -
13/09/2022
423
shadab-khan-cover-1-696x439.jpg
sms-voting.gif
  
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக அந்த அணியின் உதவித் தலைவர் சதாப் கான் தெரிவித்துள்ளார்.

டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6ஆவது முறையாக இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். நசீம் ஷாவின் முதல் ஓவரிலேயே குசல் மெண்டிஸ் போல்டாகி அதிர்ச்சியளித்தார்.

அதன்பின், பெதும் நிஸ்ஸக் 8 ஓட்டங்களுடனும், தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த தனன்ஜய டி சில்வாவும், அணித் தலைவர் தசுன் ஷானகவும் அடுத்தடுத்தது ஆட்டமிழக்க இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹஸரங்க இருவரும் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை எடுத்தது.

இதனிடையே. இலங்கைக்காக துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து அரைச் சதம் அடித்த பானுக ராஜபக்ஷவின் 2 முக்கிய பிடியெடுப்புகளை சதாப் கான் தவறவிட்டடிருந்தார். ஒருவேளை பானுக ராஜபக்ஷவின் முதலாவது பிடியெடுப்பை எடுத்திருந்தால் இலங்கை அணி 150 ஓட்டங்களைக் கடந்திருக்காது.

எனவே, பாகிஸ்தான் அணியின் முன்னணி களத்தடுப்பாளர்களில் ஒருவரான சதாப் கான், இவ்வாறு 2 பிடியெடுப்புகளை தவறவிட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து தனது டுவிட்டரில் சதாப் கான் வெளியிட்ட பதிவில்,

”பிடியெடுப்புகளை எடுத்தால் வெற்றி பெற முடியும். ஆனால் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பிடியெடுப்புகளை தவறவிட்டமை மற்றும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது அணியின் தோல்விக்கு நான் தான் காரணம். நஷீம் ஷா, ஹரீஸ் ரவூப் ஆகிய இருவரினதும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

அதேபோல, மொஹமட் ரிஸ்வானும் சிறந்த முறையில் துடுப்பாடி நெருக்கடி கொடுத்திருந்தார். ஒட்டுமொத்த அணியும் தங்களால் இயன்றவரை முயற்சித்தது.  இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

இந்த தளத்துக்கு என்னுடைய ஆதங்கம் புரிந்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தரமான வீரர்கள் இல்லை! ; இலங்கை கிண்ணத்தை வென்றது எப்படி?

Asia Cup 2022

By
 A.Pradhap
 -
14/09/2022
63
Cover-Asia-Cup-2022-696x464.jpg
sms-voting.gif
  
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக்கிண்ண பயணமும், வெற்றியும் ஒவ்வொரு இலங்கை ரசிகர்களின் மனதில் மறக்கமுடியாத மகிழ்ச்சியையும், வெற்றியின் உற்சாகத்தையும் தந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் தொடரை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொடர் மாற்றப்பட்டது. வீரர்களிடத்தில் எதிர்பார்ப்பிருந்தபோதும், ரசிகர்களிடம் இலங்கை கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருந்ததாக தெரியவில்லை.

பந்துவீச்சளார்களை பதம்பார்த்த இலங்கையின் அற்புத வெற்றிகள்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஊரியிருந்த நிலையில், கிண்ணத்தை வென்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தசுன் ஷானக தலைமையிலான இளம் இலங்கை அணி.

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வி. 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த இலங்கை அணி, பந்துவீச்சிலும் தடுமாறி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

Sri-Lanka-vs-Afghanistan-1st-Match.jpgபடுதோல்வியிலிருந்து மீண்டுவருவதற்கும், சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றியொன்றினை பெறவேண்டிய நிலை. முதல் சுற்றில் வெளியேறினால் அணியின் இத்தனை கால முயற்சியும், திட்டங்களும், எதிர்பார்ப்புகளும், முன்னேற்றமும் ஒட்டுமொத்தமாக சரிந்துவிடும் என்ற அதீத அழுத்தம் வீரர்களிடத்தில் அதிகரித்தது.

ஆனால், போட்டிக்கு முன்னர் இருந்த ஒட்டுமொத்த அழுத்தத்தையும் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற ஒரே ஒரு ஊடகசந்திப்பு அதீத உத்வேகமாகவும், கிண்ணத்தை வெல்வதற்கு மிகப்பெரிய உந்துகோளாகவும் மிகப்பெரிய நம்பிக்கையாகவும் மாறியது.

பங்களாதேஷ் போட்டிக்கு முன்னர் தசுன் ஷானக ஆப்கானிஸ்தானை ஒப்பிடும்போது, பங்களாதேஷ் அணியில் முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகீப் அல் ஹஸன் மாத்திரம்தான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். எனவே, அவர்களை வீழ்த்துவது இலகுவானது என்ற கருத்தொன்றை பதிவுசெய்தார்.

இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணியின் பணிப்பாளர் கலேட் மஹ்மூட், எமது அணியிலாவது இரண்டு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இலங்கை அணியில் அப்படி யாரையும் நாம் பார்க்கவில்லை என கூற, இந்த கருத்து வைரலானது.

சமுகவலைத்தளங்களில் ரசிகர்களிடம் மாத்திரமின்றி, மஹேல ஜயவர்தன போன்ற முன்னாள் வீரர்கள் இலங்கை வீரர்கள் தாம் யார் என காட்டவேண்டிய தருணம் இது என்ற கருத்துக்களுடன் இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க தொடங்கினர். கலேட் மஹ்மூட்டின் கருத்து இலங்கை வீரர்களையும் உற்சாகமடையவைக்க தவறவில்லை.

இந்த உற்சாகத்துடன் களமிறங்கிய இலங்கை அணி, டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் அதிகூடிய வெற்றியிலக்கை (184/8) அடைந்து சாதனை வெற்றியை பதிவுசெய்ததுடன், குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் இறுதியில் 2 பௌண்டரிகளை விளாசி அசித பெர்னாண்டோ என பங்களாதேஷிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இலங்கை.

Sri-Lanka-vs-Bangladesh-14.jpgபங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியுடன் சுபர் 4 சுற்றில் காலடி வைத்தது இலங்கை. ஏற்கனவே படுதோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தானுடன் முதல் போட்டி, அடுத்தடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற ஐசிசி T20 தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள அணிகளுக்கு எதிரான போட்டிகள்.

சுபர் 4 சுற்றுக்கு முன்னரும் பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லை. இலங்கை அணியிடத்திலும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்ததே தவிர, கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பு இறுதிப்போட்டியின்போதே வந்திருந்தது என்பதை அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்க குறிப்பிட்டிருந்தார்.

எந்த இடத்தில் தோல்வியடைந்தோமோ? அதே இடத்தில் வெற்றிபெறுவதே சிறந்த அணிக்கு அழகு என்பதை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிரூபித்தது இலங்கை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான படுதோல்வியை, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சமன்செய்தது மாத்திரமின்றி, அந்த அணிக்கு எதிராகவும், ஷார்ஜா மைதானத்திலும் அதிகூடிய வெற்றியிலக்கை (176/5) அடைந்து சாதனை படைத்தது.

ஆப்கானிஸ்தான் போட்டியை பொருத்தவரை எந்தவொரு தனி வீரரின் பிரகாசிப்புகள் வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை. பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, அசித பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷனவுடன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.

ரஷீட் கானின் முதல் ஓவரில் குசல் மெண்டிஸ் இரண்டு சிக்ஸர்களை அடித்து, இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை மேலும் பலமாகின்றது என்ற அறிவிப்பை வெளிப்படுத்த, ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து இலங்கை அணியின் நம்பிக்கை உச்சத்தை தொட்டது.

ஆப்கானிஸ்தான் போட்டியின் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு ஒரு வெற்றி இலங்கைக்கு தேவை. அதுவும் சர்வதேச T20I தவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியை 9வது இடத்திலிருக்கும் இலங்கை அணி எதிர்கொள்ள தயாராகியது.

பலமான இந்திய அணியை எதிர்கொள்வதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டின் கணிப்பின்படி இலங்கை வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இந்திய அணியில் பலம் பொருந்திய நட்சத்திர வீரர்கள். இலங்கை அணியில் இளம் வீரர்கள். இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறையின் பந்துவீச்சு அனுபவம் பூஜ்ஜியத்தில் தொடங்கியிருந்தது.

இலங்கை அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மிகச்சிறந்த ஓட்ட இலக்கை அடைந்து வெற்றியீட்டியதால், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால் இலங்கை அணியின் வெற்றிக்கு சிறிதளவு வாய்ப்புகள் கோடிட்டு விடப்பட்டிருந்தன.

இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை எந்த இடத்தில் அவர்களுக்கு எதிராக முழுமையான கணிப்புகள் இருக்கின்றதோ! அந்த இடத்தில் வெற்றிபெற்று ஆச்சரியம் அளிப்பதே வழமை. அதனை 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி, தென்னாபிரிக்காவில் குசல் பெரேராவின் அற்புத சதத்தின் உதவியுடன் டெஸ்ட் வெற்றி போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

அந்தவகையில் பலமான இந்திய அணிக்கு எதிராக தங்களுடைய இரண்டாவது சுபர் 4 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்து தங்களுடைய இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்திக்கொண்டது. குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதமும், பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோர் ஆட்டத்தை நிறைவுசெய்த விதமும் இலகுவில் மறக்கக்கூடியவை அல்ல.

இப்படி துடுப்பாட்ட வீரர்களின் பிரகாசிப்பு ஒரு பக்கமிருக்க டில்ஷான் மதுசங்க, விராட் கோஹ்லியை ஆட்டமிழக்கச்செய்த பந்தும், அவருடைய கடைசி ஓவர்களும் அவருடைய திறமையை மேலும் வெளிச்சமிட்டு காட்டியது.

Sri-Lanka-vs-India-Super-4.jpgஇந்திய அணிக்கு எதிரான வெற்றியின் பின்னர் இலங்கை அணி கிண்ணத்தை வெல்வதற்கான நம்பிக்கை பிறந்தது. பாகிஸ்தானிடம், ஆப்கானிஸ்தான் பெற்ற தோல்வியின் பின்னர் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவது உறுதியாகியது.

இறுதிப்போட்டிக்கு முன்னர் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் சுபர் 4 போட்டியில் மோதின. அணிகளில் சில மாற்றங்கள். இலங்கை அணியில் தனன்ஜய டி சில்வாவுடன், பிரமோத் மதுசானுக்கு T20I அறிமுகம் கிடைத்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றும், முதலில் துடுப்பெடுத்தாட தயாராகாத இலங்கை அணி, தொடர் வெற்றிகளை நோக்கி சென்றது.

அதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான சுபர் 4 சுற்றில் இலகுவான வெற்றியை பெற்று, 4 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு தயாராகியது. மறுபக்கம் பாகிஸ்தான் தோல்வியடைந்தாலும் அவர்கள் பலமான அணியென்பதை இலங்கை அணி மறக்கவில்லை.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணி களத்தடுப்பை தேர்வுசெய்யும் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தசுன் ஷானக ஏன் சுபர் 4 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்கவில்லை? என்ற விடயமும் விமர்சனங்களாக எழும்பின.

விமர்சனங்களுக்கு ஏற்றவாறு இறுதிப்போட்டியில் நாணய சுழற்சி பாகிஸ்தான் பக்கம். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறியது இலங்கை. தசுன் ஷானகவின் மீது எழுந்த விமர்சனங்கள் உண்மையாகுமா? அல்ல இலங்கை அணி மீண்டு பதிலடி கொடுக்குமா? என்ற கேள்விகள் சமுவலைத்தளங்களில் ஓடிப்பாய்ந்தன.

Sri-Lanka-vs-Pakistan-Final.jpgஆனால் பானுக ராஜபக்ஷவின் அற்புத இன்னிங்ஸ் (71 ஓட்டங்கள்) மற்றும் ஹஸரங்கவின் வேகமான ஓட்டக்குவிப்பு (36 ஓட்டங்கள்) என்பன இலங்கை அணியை 58/5 என்ற நிலையிலிருந்து 170/6 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச்சென்றது. இதில் பானுக ராஜபக்ஷ நசீம் ஷாவின் இறுதிப்பந்தில் விளாசிய சிக்ஸர் இப்போதும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் முன் வந்துசெல்கின்றன.

உளவியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு ஓட்டங்களால் அழுத்தத்தை கொடுத்தது இலங்கை. ஓட்டங்களின் அழுத்தம் மேலோங்க ஏனைய விடயங்களை பிரமோத் மதுசான் (4 விக்கெட்டுகள்), வனிந்து ஹஸரங்க (3 விக்கெட்டுகள்) ஆகியோர் பந்துவீச்சில் பார்த்துக்கொள்ள 6வது தடவையாக கிண்ணத்தை தமதாக்கியது இலங்கை.

உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. நாணய சுழற்சி போட்டியின் வெற்றியை தீர்மானிக்கவில்லை. கடந்தகால பிரகாசிப்புகளுக்கும், இன்றைய நாளின் வெற்றிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவை அனைத்துமே இலங்கை அணிக்கு வெற்றியையும் கொடுக்கவில்லை.

இலங்கை அணி 8 வருடங்களுக்கு பின்னர் ஆசியக்கிண்ணத்தை வென்றதற்கான காரணம் ஒன்றுதான். வீரர்கள் தனியொருவருக்காக விளையாடவில்லை. அணிக்காக விளையாடினர். ஒருவரின் பிரகாசிப்பை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் பிரகாசித்தனர். கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் விளையாட்டு. குறிப்பிட்ட 11 பேரின் ஒற்றுமையும், திறமையும்தான் இலங்கை ரசிகர்கள் இன்று கொண்டாடும் ஆசியக்கிண்ணத்தை பெற்றுத்தந்திருக்கிறதே தவிர, உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எவரும் கிண்ணத்தை வென்றுக்கொடுக்கவில்லை!

https://www.thepapare.com/no-world-class-players-how-did-sri-lanka-win-the-asia-cup-2022-feature-tamil/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றியினை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், இதனை சிங்களத் தேசியத்தின் வெற்றியென்றும், சிங்களச் சிங்கங்களின் வெற்றியென்றும் பிரச்சாரப் படுத்துகிறார்கள். உண்மையிலேயே இது 100 வீதம் சிங்களவர்களைக் கொண்ட அணிதான். பேச்சிற்குக் கூட ஒரு தமிழரோ முஸ்லீமோ இந்த அணியில் இல்லை. 

சரித்திரத்தில் கிரிக்கெட் இலங்கையில் இனவாதிகளுக்கு துணைபோனது போலவே இந்த அணியும், வெற்றியும் இனவாதிகளுக்கு பிரச்சாரப் பொருளாக மாறியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

இந்த வெற்றியினை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், இதனை சிங்களத் தேசியத்தின் வெற்றியென்றும், சிங்களச் சிங்கங்களின் வெற்றியென்றும் பிரச்சாரப் படுத்துகிறார்கள். உண்மையிலேயே இது 100 வீதம் சிங்களவர்களைக் கொண்ட அணிதான். பேச்சிற்குக் கூட ஒரு தமிழரோ முஸ்லீமோ இந்த அணியில் இல்லை. 

சரித்திரத்தில் கிரிக்கெட் இலங்கையில் இனவாதிகளுக்கு துணைபோனது போலவே இந்த அணியும், வெற்றியும் இனவாதிகளுக்கு பிரச்சாரப் பொருளாக மாறியிருக்கிறது.

வ‌ணக்க‌ம் அண்ணா

நீங்க‌ள் சொல்லுவ‌தும் ச‌ரி தான்

ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளில் எத்த‌னையோ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் ,

யூடுப்பில் போய் வாசித்தா கூடுத‌லான‌ த‌மிழ‌ர்க‌ள் இந்த‌ வெற்றிய‌ கொண்டாடின‌ம் அண்ணா

அர‌சிய‌ல் த‌லையீடு இருந்தா நாம‌ அதை விம‌ர்சிக்க‌லாம் , 

இல‌ங்கை அணிக்குள்ளையே வீர‌ர்க‌ளுக்குள் ஒற்றுமை இல்லை அது இது என்று புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌தும் உந்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் தான் , 

இந்த‌ வெற்றி நாட்டு ம‌க்க‌ளுக்கு சிறு ம‌கிழ்ச்சிய‌ கொடுக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.