Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயனாவின் கார் 650,000 பவுண்ஸ்சுக்கு ஏலம் போனது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசி டயனா பயன்படுத்திய போர்ட் எஸ்கோர்ட் ஆர் எக்ஸ் தேர்போ கார் இலண்டனில் 650,000 பவுண்சுக்கு ஏலம் போயுள்ளது.

இந்த காரில் டயனா ஓட்டுனர் இருக்கையிலும் அவரின் மெய்பாதுகாவலர் (SO14) முன் பயணி இருக்கையிலும் அமர்வார்களாம். 

ஏனைய இவ்வகை கார்கள் எல்லாம் வெள்ளையாக இருக்க இது மட்டும் SO14, போர்ட் கம்பனிகள் உடன்பட்டு, கறுப்பில் செய்யபட்டதாயும் சொல்லப்படுகிறது. இந்தவகையில் இந்த மொடலில் உள்ள ஒரே கறுப்புகார் என்பதும் இதன் தனியம்சமாகும்.

காரின் பொருட்கள் வைக்கும் முன் பெட்டியில் (glove box) பாதுகாப்பு அதிகாரியின் ரேடியோ சாதனம் இருந்த கேபிள் இன்றும் தென்படுகிறதாம்.

1985-88 வரை இந்த காரை டயனா வைத்திருந்தாராம்.

https://www.theguardian.com/uk-news/2022/aug/27/dianas-unique-ford-escort-sells-for-incredible-650000

டிஸ்கி

சொப்பனசுந்தரி வைத்திருந்த சொப்பனசுந்தரி😆.

  • கருத்துக்கள உறவுகள்

Foto: Mercedes-Benz 500 SL, im Dezember 1991 erhält Lady Diana diesen  Mercedes-Benz 500 SL. Sas erste Mitglied des Königshauses, das privat ein  ausländisches Auto fährt. (vergrößert)

Mercedes Benz Museum – Das sollte man wissen! | GlobeSession

Mercedes benz 500 -Fotos und -Bildmaterial in hoher Auflösung – Alamy  Mercedes benz 500 -Fotos und -Bildmaterial in hoher Auflösung – Alamy

டயானா... 1991´ல்   வைத்திருந்த ஒரு  Mercedes-Benz 500 SL கார், 
ஜேர்மனியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் மியூசியத்தில் உள்ளது. 

முதலாவது படத்தில்... வலது பக்கம் நிற்கும் வெள்ளை வாகனம், 
பாப்பாண்டவர் ஒருவரால் பாவிக்கப் பட்டு, தற்போது... அதுகும் மியூசியத்தில் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யானை இருந்தாலும் ஆயிரம் இறந்தாலும் ஆயிரம்........பாவம் பிள்ளைகள் காரை ஏலத்தில விடுற நிலைமைக்கு வந்திட்டினம்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இந்த காரில் டயனா ஓட்டுனர் இருக்கையிலும் அவரின் மெய்பாதுகாவலர் (SO14) முன் பயணி இருக்கையிலும் அமர்வார்களாம். 

Mercedes Benz Museum – Das sollte man wissen! | GlobeSession

மேலுள்ள   படத்திலும்... டயானா, ஓட்டுநர் இருக்கையில் தான் 
அமர ஆயத்தப் படுத்துகின்றார் போலுள்ளது.

படத்தில்... வில்லியமும் காணப்படுகின்றார் என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இளவரசி டயனா பயன்படுத்திய போர்ட் எஸ்கோர்ட் ஆர் எக்ஸ் தேர்போ கார் இலண்டனில் 650,000 பவுண்சுக்கு ஏலம் போயுள்ளது.

லூசுக்கூட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

லூசுக்கூட்டங்கள்.

குஸ்பு… கடித்த, கொய்யாப்பழத்தை….
2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த தமிழர்களும் இருக்கிறார்கள் அண்ணே… 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குஸ்பு… கடித்த, கொய்யாப்பழத்தை….
2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த தமிழர்களும் இருக்கிறார்கள் அண்ணே… 😁

அப்ப கொரோனா இருந்ததா.....!  🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

குஸ்பு… கடித்த, கொய்யாப்பழத்தை….
2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த தமிழர்களும் இருக்கிறார்கள் அண்ணே… 😁

அதை ஏலம் எடுத்து என்ன செய்தவங்களாம்???? 🧐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Foto: Mercedes-Benz 500 SL, im Dezember 1991 erhält Lady Diana diesen  Mercedes-Benz 500 SL. Sas erste Mitglied des Königshauses, das privat ein  ausländisches Auto fährt. (vergrößert)

Mercedes Benz Museum – Das sollte man wissen! | GlobeSession

Mercedes benz 500 -Fotos und -Bildmaterial in hoher Auflösung – Alamy  Mercedes benz 500 -Fotos und -Bildmaterial in hoher Auflösung – Alamy

டயானா... 1991´ல்   வைத்திருந்த ஒரு  Mercedes-Benz 500 SL கார், 
ஜேர்மனியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் மியூசியத்தில் உள்ளது. 

முதலாவது படத்தில்... வலது பக்கம் நிற்கும் வெள்ளை வாகனம், 
பாப்பாண்டவர் ஒருவரால் பாவிக்கப் பட்டு, தற்போது... அதுகும் மியூசியத்தில் உள்ளது.

SL 500 😘

பக்கத்தில் நிற்கும் ஜி வேகனில்தான் பாப்பரசர் ஜான் பால் சந்திரிகாகாலத்தில் இலங்கை வந்தவர்.

4 hours ago, தமிழ் சிறி said:

Mercedes Benz Museum – Das sollte man wissen! | GlobeSession

மேலுள்ள   படத்திலும்... டயானா, ஓட்டுநர் இருக்கையில் தான் 
அமர ஆயத்தப் படுத்துகின்றார் போலுள்ளது.

படத்தில்... வில்லியமும் காணப்படுகின்றார் என நினைக்கின்றேன். 

ஓம்.

பக்கத்தில் நிற்பது வில்லியம் அல்ல. டயனா இறக்கும் போது அவர் இதை விட இள வயது.

4 hours ago, குமாரசாமி said:

லூசுக்கூட்டங்கள்.

இல்லை இது ஒரு வகை முதலீடு. 

4 hours ago, தமிழ் சிறி said:

குஸ்பு… கடித்த, கொய்யாப்பழத்தை….
2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த தமிழர்களும் இருக்கிறார்கள் அண்ணே… 😁

அது சிலுக்கு கடித்த அப்பிள் இல்லையா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

குஸ்பு… கடித்த, கொய்யாப்பழத்தை….
2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த தமிழர்களும் இருக்கிறார்கள் அண்ணே… 😁

MGR படப்பிடிப்புக்கு போன ஒரு வெள்ளை அமெரிக்கர் எழுதினார்.

படப்பிடிப்பு இடைவேளையில் சந்திப்பதாக ஏற்பாடு. 

இருவருக்கும், orange juice வரவழைத்தார். அவர் பாதிக்கு சற்று மேலாக குடித்து விட்டு வைத்து விட்டார்.

அங்கிருந்த உதவியாளர், அதனை எடுத்து சென்றார். தூரத்தே, மக்கள் திரள். போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தார்கள். கொண்டு போன உதவியாளர், அந்த மக்கள் பார்க்கும் வகையில், மிச்சம் இருந்த பானத்தினை ஒரு பாரிய தண்ணீர் நிறைந்த பீப்பாய் ஒன்றினுள் ஊத்தி, அங்கிருந்த மக்களுக்கு விநியோகம் செய்ய தொடங்கினார். மக்களும் முண்டியடித்தனர்.

அதனை நான் கவனித்ததைம் அவர் கவனித்தார். புன்முறுவல் செய்தார். நானும் அது குறித்து கேட்கவில்லை. கேட்டு சங்கடப்படுத்தாமல், எனக்கு புரிந்ததை அப்படியே மனதினுள் வைத்துக்கொண்டேன்.

6 hours ago, goshan_che said:

இளவரசி டயனா பயன்படுத்திய போர்ட் எஸ்கோர்ட் ஆர் எக்ஸ் தேர்போ கார் இலண்டனில் 650,000 பவுண்சுக்கு ஏலம் போயுள்ளது.

இந்த காரில் டயனா ஓட்டுனர் இருக்கையிலும் அவரின் மெய்பாதுகாவலர் (SO14) முன் பயணி இருக்கையிலும் அமர்வார்களாம். 

ஏனைய இவ்வகை கார்கள் எல்லாம் வெள்ளையாக இருக்க இது மட்டும் SO14, போர்ட் கம்பனிகள் உடன்பட்டு, கறுப்பில் செய்யபட்டதாயும் சொல்லப்படுகிறது. இந்தவகையில் இந்த மொடலில் உள்ள ஒரே கறுப்புகார் என்பதும் இதன் தனியம்சமாகும்.

காரின் பொருட்கள் வைக்கும் முன் பெட்டியில் (glove box) பாதுகாப்பு அதிகாரியின் ரேடியோ சாதனம் இருந்த கேபிள் இன்றும் தென்படுகிறதாம்.

1985-88 வரை இந்த காரை டயனா வைத்திருந்தாராம்.

https://www.theguardian.com/uk-news/2022/aug/27/dianas-unique-ford-escort-sells-for-incredible-650000

டிஸ்கி

சொப்பனசுந்தரி வைத்திருந்த சொப்பனசுந்தரி😆.

Ford or Mercedes? 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

Ford or Mercedes? 🤔

இப்போ ஏலம் போனது Ford Escort. சிறி அண்ணா இனைத்தது Merc. அவர் பாவித்த பிறிதொரு கார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அப்ப கொரோனா இருந்ததா.....!  🤔

அப்ப, கொரோனா  பிறக்க இல்லை.  😁

6 hours ago, குமாரசாமி said:

அதை ஏலம் எடுத்து என்ன செய்தவங்களாம்???? 🧐

 K.Karthik Raja's - KKR Whatsapp Collections : குளிரும் - கொய்யா  பழமும்(Guava-Fruit-Benefits)No.1 Tamil Blog in the world|Tamil News  Paper|k.karthik raja|Whatsapp News|Breaking News Headlines|Latest Tamil  News,India News, World News,

கொட்டை எடுத்து... முழைக்கப் போட்டிருப்பாங்கள். ப்பூஹாஹாஹா.... 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பக்கத்தில் நிற்கும் ஜி வேகனில்தான் பாப்பரசர் ஜான் பால் சந்திரிகாகாலத்தில் இலங்கை வந்தவர்.

பல தடவைகள்.. அந்த அருங்காட்சியகத்துக்கு, போயிருந்தாலும்...
பாப்பாண்டவர், அந்த வாகனத்தில் தான்.. 
இலங்கைக்கு போனவர் என்பது... எனக்கு, புது தகவல். 👍 

இது உண்மையான தகவலா என்று உறுதிப் படுத்தினால்... மிகவும் நல்லது. 🙂
அந்த வாகனத்தின் கீழ் உள்ள தகவலிலோ, ஆடியோ பதிவிலோ... 
இலங்கைக்கு போனதை பற்றி குறிப்பிடவில்லை.
ஏனென்றால்... வந்த விருந்தினர்கள்  வேறு யாரையும், அங்கு  கூட்டிக் கொண்டு போய்...
நீங்கள் சொன்னதை சொல்ல... எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்டால்?
நான்...  "ஆந்தை முழி"  முழிக்க வேண்டி வரும். 😁

4 hours ago, goshan_che said:

அது சிலுக்கு கடித்த அப்பிள் இல்லையா?🤔

சிலுக்கு,  கடித்தது.. அப்பிள். குஸ்பு, கடித்தது... கொய்யா. 😜
இரண்டும் வெவ்வேறு சரித்திர  சம்பவங்கள்.  இரண்டையும் போட்டு... குழப்பிக்க கூடாது. 😁 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

MGR படப்பிடிப்புக்கு போன ஒரு வெள்ளை அமெரிக்கர் எழுதினார்.

படப்பிடிப்பு இடைவேளையில் சந்திப்பதாக ஏற்பாடு. 

இருவருக்கும், orange juice வரவழைத்தார். அவர் பாதிக்கு சற்று மேலாக குடித்து விட்டு வைத்து விட்டார்.

அங்கிருந்த உதவியாளர், அதனை எடுத்து சென்றார். தூரத்தே, மக்கள் திரள். போலீசார் தடுத்து நிறுத்தி இருந்தார்கள். கொண்டு போன உதவியாளர், அந்த மக்கள் பார்க்கும் வகையில், மிச்சம் இருந்த பானத்தினை ஒரு பாரிய தண்ணீர் நிறைந்த பீப்பாய் ஒன்றினுள் ஊத்தி, அங்கிருந்த மக்களுக்கு விநியோகம் செய்ய தொடங்கினார். மக்களும் முண்டியடித்தனர்.

அதனை நான் கவனித்ததைம் அவர் கவனித்தார். புன்முறுவல் செய்தார். நானும் அது குறித்து கேட்கவில்லை. கேட்டு சங்கடப்படுத்தாமல், எனக்கு புரிந்ததை அப்படியே மனதினுள் வைத்துக்கொண்டேன்.

நாதம்ஸ்... சிலவேளை.. இப்படியானவற்றை வாசிக்கும் போது...
தமிழர்கள்.. ஏன், இப்படி இருக்கின்றார்கள் என்று பிரஷர் ஏறும்.
இந்த சினிமா மாயையில்.. விழுந்து இருப்பதால், 
பல உரிமைகளை அந்நியர்கள் தட்டிக் கொண்டு போகின்றார்கள்.   😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

இல்லை இது ஒரு வகை முதலீடு. 

ஓமோம் உலகம் முழுக்க இப்பிடியான லூசுகள் இருந்தால் முதலிடலாம் தானே 🤣

3 hours ago, தமிழ் சிறி said:

கொட்டை எடுத்து... முழைக்கப் போட்டிருப்பாங்கள். ப்பூஹாஹாஹா.... 😂 🤣

அதுதான் இப்ப வாற கொய்யாப்பழங்களுக்கு விதை இல்லை.... 😁

  • கருத்துக்கள உறவுகள்

திராட்சை பழங்களுக்கும் விதை இல்லையே, அதை யார் கடித்திருப்பார்கள்........!   🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இது உண்மையான தகவலா என்று உறுதிப் படுத்தினால்... மிகவும் நல்லது. 🙂
அந்த வாகனத்தின் கீழ் உள்ள தகவலிலோ, ஆடியோ பதிவிலோ... 
இலங்கைக்கு போனதை பற்றி குறிப்பிடவில்லை.
ஏனென்றால்... வந்த விருந்தினர்கள்  வேறு யாரையும், அங்கு  கூட்டிக் கொண்டு போய்...
நீங்கள் சொன்னதை சொல்ல... எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்டால்?
நான்...  "ஆந்தை முழி"  முழிக்க வேண்டி வரும். 😁

12 hours ago, goshan_che said:

நல்ல வேளையாக கேட்டீர்கள். எனக்கும் நினைவில் இருந்ததை (1995) வைத்துத்தான் சொன்னேன். நீங்கள் கேட்டபின் தேடிப்பார்த்தால் - அது இதை ஒத்த ஒரு Land Rover III

கீழே வீடியோவில் வருகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நல்ல வேளையாக கேட்டீர்கள். எனக்கும் நினைவில் இருந்ததை (1995) வைத்துத்தான் சொன்னேன். நீங்கள் கேட்டபின் தேடிப்பார்த்தால் - அது இதை ஒத்த ஒரு Land Rover III

கீழே வீடியோவில் வருகிறது.

நன்றி கோசான். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.