Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு,  நிதியுதவி: புடின் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் நீடிக்கப்படலாம்: புடின்

உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு,  நிதியுதவி: புடின் அறிவிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.

ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்டபகுதியில் இருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1296362

  • Replies 58
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாண்புமிகு அதி உத்தம பெரு மதிப்பிற்குரிய புட்டின் அவர்கள் மனித நேயம் மிக்க மக்கள் தலைவன்.

உக்கல் உக்ரேனிலிருந்து தப்பியோடி வருபவர்களுக்கு நிரந்தர விசாவும்,குடியுரிமையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்..

வாழ்க புட்டின். உயர்க மனித நேயம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மாண்புமிகு அதி உத்தம பெரு மதிப்பிற்குரிய புட்டின் அவர்கள் மனித நேயம் மிக்க மக்கள் தலைவன்.

உக்கல் உக்ரேனிலிருந்து தப்பியோடி வருபவர்களுக்கு நிரந்தர விசாவும்,குடியுரிமையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்..

வாழ்க புட்டின். உயர்க மனித நேயம்.

எங்களையும் ஏற்று ஏதாவது தருவாரா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எங்களையும் ஏற்று ஏதாவது தருவாரா??

நிச்சயம் தருவார்.

அடுத்த ஐ நா பாதுகப்பு சபை அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் ஒரு தீர்மானம் வந்தால் ——

பெரிய ஆப்பாக தருவார்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

நிச்சயம் தருவார்.

அடுத்த ஐ நா பாதுகப்பு சபை அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் ஒரு தீர்மானம் வந்தால் ——

பெரிய ஆப்பாக தருவார்🤣

நாங்கள் தான் அவருக்கும் அவரது நாட்டிற்கும் தீண்டத்தகாதவர்களாச்சே???

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ரஸ்யா பயங்கரவாத மேற்குலகின் உதவியுடன் ஜனநாயகத்துக்கு  எதிராக செயற்படும் உக்க்ரேனில் இருந்து வெளியேறிவரும் மக்களுக்கு நிதியுதவி அளிப்பது வரவேற்கத்தக்கது. இனி பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மேற்குலகில் வாழ்ந்துவரும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்கு பெருமளவில் குடியேறுவார்கள் என நம்பலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வாலி said:

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறம், வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும். 

சாப்பாடு இருக்கும் இடத்திலேதான் ஈ மொய்க்கும் 😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

எங்களையும் ஏற்று ஏதாவது தருவாரா??

ஏன்......ஏன் புட்டின் ஐயா உங்களுக்கு தரோணும்?
மாண்புமிகு புட்டின் அவர்கள்  தனது பிராந்திய மக்களுக்கு  பிரச்சனை என்றவுடன் உதவி செய்கின்றார்..நீங்கள் இந்த பிராந்தியமா? இல்லையே?

உங்களுக்குத்தானே உங்கள் பிராந்திய வல்லரசு இந்தியா இருக்கின்றது...போய் கேளுங்கள். கூடை கூடையாக அள்ளித் தருவார்கள்...

2 hours ago, goshan_che said:

நிச்சயம் தருவார்.

அடுத்த ஐ நா பாதுகப்பு சபை அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் ஒரு தீர்மானம் வந்தால் ——

பெரிய ஆப்பாக தருவார்🤣

ஆப்பு விடயத்தில் அமெரிக்கா,இந்தியா,சீனா மீது வராத கோபம் ஏன் ரஷ்யா மீது? சுக போகங்கள் கண்ணை மறைக்கின்றதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எங்களையும் ஏற்று ஏதாவது தருவாரா??

5 minutes ago, குமாரசாமி said:

ஏன்......ஏன் புட்டின் ஐயா உங்களுக்கு தரோணும்?
மாண்புமிகு புட்டின் அவர்கள்  தனது பிராந்திய மக்களுக்கு  பிரச்சனை என்றவுடன் உதவி செய்கின்றார்..நீங்கள் இந்த பிராந்தியமா? இல்லையே?

உங்களுக்குத்தானே உங்கள் பிராந்திய வல்லரசு இந்தியா இருக்கின்றது...போய் கேளுங்கள். கூடை கூடையாக அள்ளித் தருவார்கள்...

இந்தியாவுக்கும் தங்களுக்கும்... பழைய வாய்க்கால் தகராறு இருக்குது என்று...
விசுகர்... நினைக்கிறார் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கும் தங்களுக்கும்... பழைய வாய்க்கால் தகராறு இருக்குது என்று...
விசுகர்... நினைக்கிறார் போலுள்ளது. 🤣

உலகம் முழுக்க சண்டை நடக்க மேற்குலகு மட்டும் ஜாலி வாழ்க்கை வாழ்ந்து காட்டியது. இப்போது அவர்கள் அடிப்படலைக்குள் குண்டு வெடிச்சத்தம் கேட்கும் போது இரத்தம் துடிக்குதாமெல்லே....😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஏன்......ஏன் புட்டின் ஐயா உங்களுக்கு தரோணும்?
மாண்புமிகு புட்டின் அவர்கள்  தனது பிராந்திய மக்களுக்கு  பிரச்சனை என்றவுடன் உதவி செய்கின்றார்..நீங்கள் இந்த பிராந்தியமா? இல்லையே?

உங்களுக்குத்தானே உங்கள் பிராந்திய வல்லரசு இந்தியா இருக்கின்றது...போய் கேளுங்கள். கூடை கூடையாக அள்ளித் தருவார்கள்...

இல்லை

நான் அதையும் கடந்து, அதுக்கும் மேலே உன்னதமானவர் என்று நினைத்தேன் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@தமிழ் சிறி

புட்டின் ஐயா உக்ரேனுக்கு சின்னதொரு தட்டுத்தான் செல்லமாய் தட்டினவர். அதோட முழு   மேற்குலகுமே பொருளாதாரத்தில் தள்ளாட்டம் காணத்தொடங்கீட்டுது.அப்பிடியிருந்தும் வாய்க்கொழுப்பு இன்னும் குறையேல்ல......😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நான் அதையும் கடந்து, அதுக்கும் மேலே உன்னதமானவர் என்று நினைத்தேன் 😂

மேன்மை தங்கிய அதி  உத்தமர் புட்டின் ஐயாவை...  
பப்பாவில் ஏத்தி, பத்தாயிரம் ரூபிளை எடுக்கலாம் என்று கனவு காணாதீங்க. 😂

1 minute ago, குமாரசாமி said:

@தமிழ் சிறி

புட்டின் ஐயா உக்ரேனுக்கு சின்னதொரு தட்டுத்தான் செல்லமாய் தட்டினவர். அதோட முழு   மேற்குலகுமே பொருளாதாரத்தில் தள்ளாட்டம் காணத்தொடங்கீட்டுது.அப்பிடியிருந்தும் வாய்க்கொழுப்பு இன்னும் குறையேல்ல......😁

மேற்குலகுக்கு... உள்ளுக்கு பயங்கர புடுங்குப் பாடு,
அதை வெளியில் காட்டாத மாதிரி, சவுண்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மேன்மை தங்கிய அதி  உத்தமர் புட்டின் ஐயாவை...  
பப்பாவில் ஏத்தி, பத்தாயிரம் ரூபிளை எடுக்கலாம் என்று கனவு காணாதீங்க. 😂

அதுக்கு முதலில் என் நிறத்தை நான் மாற்றணுமே சிறி 😂

ஐயாவுக்கு அது அலர்ஜி 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஆப்பு விடயத்தில் அமெரிக்கா,இந்தியா,சீனா மீது வராத கோபம் ஏன் ரஷ்யா மீது? சுக போகங்கள் கண்ணை மறைக்கின்றதோ?

அண்டைக்கு திண்ணைல இதை கேட்டனான் - நீங்கள்தான் “நித்திரை” 🤣 க்கு போய்விட்டீர்கள்.

எல்லாரும் ஆப்பு வைத்தவர்கள்தான். ஆனால் இவர்கள் ஆப்பு வைத்த பின், தமது சுயநலத்துக்காகவேனும் ஐநா, மனித உரிமை எண்டு ஏதேதோ செய்கிறார்கள் (அவர்கள் சுய நல நகர்வை நாம் எமக்கு சாதகமாம திருப்ப வேண்டும் என்பது வேறு விடயம்).

ஆனால் ரஸ்யா? 2009 க்கு பின்னும் இலங்கைக்கு சர்வதேசத்தில் இந்தியாவை விட அதிகமாக, சீனாவுக்கு நிகராக கவர் எடுக்கும், எடுத்து கொண்டிருக்கும் நாடு.

ஒரு சவால் உங்களுக்கும், சிறி அண்ணா, கற்ப்ஸ், கல்யாணி க்கும்.

ஒரே ஒரு அறிக்கை - மேற்கு விடுவதை போல் வெற்று அறிக்கை மட்டும் போதும், இலங்கையில் நடந்ததை நேர்மையாக விசாரிக்க வேண்டும், பொறுப்புகூறல் அவசியம் என ரஸ்யாவை விட பண்ணுங்கள்.

நான் உங்களை விட அதிகமாக புட்டின் துதிபாடுவேன்.

சுகபோகம் - இதை நான் ஒரு போதும் மறுப்பததில்லையே இங்கே நான் ரஸ்ய (புட்டின்) எதிர்நிலை எடுக்க காரணம்

1. சிறு தேசிய இனமான உக்ரேனின் சுய உரிமையை ஆதரித்தல்

2. சிறு தேசிய இனமான தமிழர்களின் நலனுக்கு ஒப்பீட்டளவில் ரஸ்யாவை விட மேற்கு பரவாயில்லை

3. புலம்பெயர் தமிழர் எனும் சக்தி - இருக்கும், பயன்பட கூடிய ஒரே இடம் மேற்கு மட்டுமே. இந்த சக்தி மட்டுமே இப்போ தமிழரின் ஒரே ஆயுதம் 

4. எனதும், குடும்பத்தினதும் சுகபோக சுயநலம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அதுக்கு முதலில் என் நிறத்தை நான் மாற்றணுமே சிறி 😂

Buy Glow And Lovely Face Cream With SPF 30 White 25g Online - Shop Beauty &  Personal Care on Carrefour UAE

விசுகர்.. இந்த கிறீம் வாங்கி பூசுங்க. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தமிழ் சிறி said:

மேற்குலகுக்கு... உள்ளுக்கு பயங்கர புடுங்குப் பாடு,
அதை வெளியில் காட்டாத மாதிரி, சவுண்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 🤣

ஜேர்மனியில் ஆளும் கட்சிகளுக்குள்ளும் இதர கட்சிகளுக்குள்ளும் உக்ரேன் விடயத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து விட்டது.

உக்ரேனை வற்புறுத்தி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவந்து போரை நிறுத்த வேண்டும் என்பதே.

இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உக்ரேனுக்கு பண உதவியும் ஆயுத உதவியும் செய்ய முடியும்? இப்போதே தள்ளாட்ட பொருளாதாரம். இப்போதே  விலையேற்றத்தால் நுகர்வோர் திண்டாட்டம். இன்னும் பொருட்கள் விலையேறும் என அரசே உத்தியோகபூர்வமாக அறிக்கை விடுகின்றது.வரும் குளிர்காலத்திற்கு பின் பல நாடகங்கள் அரங்கேறும்.😁

15 minutes ago, விசுகு said:

அதுக்கு முதலில் என் நிறத்தை நான் மாற்றணுமே சிறி 😂

ஐயாவுக்கு அது அலர்ஜி 

மேற்குலகில் நிறம் குறைந்தவர்கள்/வெளி நாட்டவர் மீது தாக்குதல் நடக்கின்றது.
நேற்று முன் தினமும் கிழக்கு ஜேர்மனியில் அகதி முகாம் மீது  தாக்குதல் நடாத்தப்பட்டது. அதே போல் வியட்நாமிய குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்திய 30ம் வருட நினைவுநாளும் அனுஷ்டிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, goshan_che said:

ஆனால் ரஸ்யா? 2009 க்கு பின்னும் இலங்கைக்கு சர்வதேசத்தில் இந்தியாவை விட அதிகமாக, சீனாவுக்கு நிகராக கவர் எடுக்கும், எடுத்து கொண்டிருக்கும் நாடு.

இதெல்லாம் புட்டின் தனிப்பட்ட விடயமல்ல.
நாடு. அதன் அணிசார் நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள். இதில் ரஷ்யாவை பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

விடுதலைப்புலிகளை இங்கிலாந்து தடை செய்தவுடன் ஐரோப்பிய ஒன்றியமும் தடை செய்ததல்லவா?.இங்கிலாந்திற்கு இந்தியா தானே விடுதலைப்புலிகளை தடைசெய்ய வற்புறுத்தியது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ein riesiger Krater von einem Raketenangriff auf Charkiw

சில தினங்களுக்கு உக்ரேனியர்களால்  ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த படம்.😂

ரஷ்யாவிடமிருந்து  இன்னும் பல ஏவுகணைகள் போனஸ் ஆக உக்ரேன் மீது  ஏவப்படுவது உறுதி.....

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

Buy Glow And Lovely Face Cream With SPF 30 White 25g Online - Shop Beauty &  Personal Care on Carrefour UAE

விசுகர்.. இந்த கிறீம் வாங்கி பூசுங்க. 😂

அடப்பாவி 😂

நிறம் நம்ம திமிர்

அதை ஏற்காத எவனும் நமக்கு எதிரி என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இதெல்லாம் புட்டின் தனிப்பட்ட விடயமல்ல.
நாடு. அதன் அணிசார் நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள். இதில் ரஷ்யாவை பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

விடுதலைப்புலிகளை இங்கிலாந்து தடை செய்தவுடன் ஐரோப்பிய ஒன்றியமும் தடை செய்ததல்லவா?.இங்கிலாந்திற்கு இந்தியா தானே விடுதலைப்புலிகளை தடைசெய்ய வற்புறுத்தியது......

நானும் புட்டின் தனிப்பட்ட விடயம் என சொல்லவில்லையே.

உண்மை என்னவென்றால் உங்கள் எல்லாருக்குமே தெரியும் ரஸ்யாவின் கொள்கை எப்போதும் 100% ஈழத்தமிழருக்கு விரோதமானது. இன்றும் என்றும்.

ஆகவேதான் இதை பற்றி அலட்ட தேவையில்லை என நழுவுகிறீகள். அன்றும் நித்திரை ஆகி விட்டீர்கள்.

ஆனால் எனது சவால், சவால்தான்.

👇

56 minutes ago, goshan_che said:

ஒரு சவால் உங்களுக்கும், சிறி அண்ணா, கற்ப்ஸ், கல்யாணி க்கும்.

ஒரே ஒரு அறிக்கை - மேற்கு விடுவதை போல் வெற்று அறிக்கை மட்டும் போதும், இலங்கையில் நடந்ததை நேர்மையாக விசாரிக்க வேண்டும், பொறுப்புகூறல் அவசியம் என ரஸ்யாவை விட பண்ணுங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

ஒரே ஒரு அறிக்கை - மேற்கு விடுவதை போல் வெற்று அறிக்கை மட்டும் போதும்,

இன்னும் உசுப்பேத்தலா நமக்கு தேவை?

இது உங்களுக்கே காமெடியாக தெரியலையா? 

15 minutes ago, goshan_che said:

நானும் புட்டின் தனிப்பட்ட விடயம் என சொல்லவில்லையே.

உண்மை என்னவென்றால் உங்கள் எல்லாருக்குமே தெரியும் ரஸ்யாவின் கொள்கை எப்போதும் 100% ஈழத்தமிழருக்கு விரோதமானது. இன்றும் என்றும்.

ஆகவேதான் இதை பற்றி அலட்ட தேவையில்லை என நழுவுகிறீகள். அன்றும் நித்திரை ஆகி விட்டீர்கள்.

ஆனால் எனது சவால், சவால்தான்.

இதெல்லாம் ஒரு அணி சார் நடவடிக்கைகள் என சொன்னாலும் உங்களுக்கு விளங்கவில்லையா?

25 minutes ago, விசுகு said:

நிறம் நம்ம திமிர்

எனக்கும் அந்த திமிர் உண்டு.
ஆனால் அதை எல்லா இடமும் காட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இன்னும் உசுப்பேத்தலா நமக்கு தேவை?

இது உங்களுக்கே காமெடியாக தெரியலையா? 

இது கொமெடி இல்லை.

உசுப்பேத்தலும் இல்லை.

இலங்கையில் பொறுப்புகூறல் வேண்டும், நியாயமான விசாரணை வேண்டும் என கோருவது எப்ப அண்ணை உங்களுக்கு உசுப்பேத்தலாக மாறியது?

ரஸ்யா அண்மையில் நடந்த இலங்கை போராட்டங்களை கூட உள்நாட்டு விடயம் என கருத்தே கூறாமல் தவிர்த்து விட்டது.

அந்தளவுக்கு பெளத்த-சிங்கள இலங்கையின் ஆயுட்கால நண்பன் இரஸ்யா.

அவர்களுக்கு நாம் ஆதரவளிக்கும் முன் மொண்டி நீக்ரோ போன்ற (அதுவும் ஒரு ஸ்லாவிக் சேர்பிய பெரும்பான்மை நாடுதான்) சின்னம் சிறிய நாடு போலாவது ரஸ்யா எமக்கு நீதி வேண்டி செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லையே?

மொண்டி நீக்ரோவுக்கு விளங்கியது இந்த பெரிய இராஸ்யாவுக்கு விளங்கவில்லை என சொல்லவியலாது. ஆகவே ரஸ்யா முழுக்க முழுக்க பெளத்த-சிங்கள இலங்கைக்கு விசுவாசமாக எமக்கான நீதிக்கு நந்தியாக நிற்கும் நாடுகளில் முதலாவது (சீனாவை விட - அவன் பருத்திதுறைக்கு வந்தாவது பார்த்தான்).

ஆகவே ரஸ்யாவுக்கு நாம் ஆலவட்டம், அர்ச்சனை தட்டு தூக்கமுதல் அவர்களின் அணுகுமுறைய மாற்றும்படி கோருவது நியாயமானதே. 

ஆகவேதான் சொல்கிறேன் ஒரு வெற்று அறிக்கையாவது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் அந்த திமிர் உண்டு.

ஆனால் அதை எல்லா இடமும் காட்ட முடியாது.

ஆபிரிக்கர்களுடன் அதிகம் பழக கிடைத்ததன் அனுபவப்படி 

மிகக் கறுப்பான தோல் குறித்து அவர்கள் எப்போதும் தாழ்வுமனத்துடன் பேசியதே கிடையாது அண்ணா.  ஆனால் நம்மவர்???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

இலங்கையில் பொறுப்புகூறல் வேண்டும், நியாயமான விசாரணை வேண்டும் என கோருவது எப்ப அண்ணை உங்களுக்கு உசுப்பேத்தலாக மாறியது?

வெற்று அறிக்கை என்றால் என்ன சார்?

30 minutes ago, goshan_che said:

ஒரே ஒரு அறிக்கை - மேற்கு விடுவதை போல் வெற்று அறிக்கை மட்டும் போதும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.