Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு

07 Sep, 2022 | 10:00 AM
image

கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். 

அவர்களின் அந்த நீண்ட கால கோரிக்கைக்கு மதிப்பளித்து கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் அமைந்தது. 

அதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் நீங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றார்.

அத்துடன், தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர்போராட்டங்கள், மற்றும் போரினால் பாதிக்கப்பட தமிழ்மக்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் நலிவடையச்செய்துள்ளமை தொடர்பிலும், பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதா பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

2.jpg

யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தெற்காசியாவின் சிறந்த பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, யாழ்.மாநகர சபை கட்டடம் முற்றாக தகர்க்கப்படமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். 

அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகிர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பின் முடிவில் கனடா மார்க்கம் மாநகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/135190

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தெற்காசியாவின் சிறந்த பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, யாழ்.மாநகர சபை கட்டடம் முற்றாக தகர்க்கப்படமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். 

அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகிர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பின் முடிவில் கனடா மார்க்கம் மாநகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து உதவிகளை பெற யாழ் மாநகர சபைக்கு அதிகாரம் உள்ளதா?

இதே போல் தான் விக்கியரும் கனடா சென்று கோரிக்கைகள் வைத்த  ஞாபகம்....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  விடயம்

இதே  போல் தொடர்ந்து தொடர்புகளை பேணுவதன்  ஊடாக

உதவிகளையும் நீதிகளையும் பெறவும்

கை கோர்க்கவும்  முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வெளிநாட்டிலிருந்து உதவிகளை பெற யாழ் மாநகர சபைக்கு அதிகாரம் உள்ளதா?

இதே போல் தான் விக்கியரும் கனடா சென்று கோரிக்கைகள் வைத்த  ஞாபகம்....

22 minutes ago, விசுகு said:

நல்லதொரு  விடயம்

இதே  போல் தொடர்ந்து தொடர்புகளை பேணுவதன்  ஊடாக

உதவிகளையும் நீதிகளையும் பெறவும்

கை கோர்க்கவும்  முடியும்

சுமந்திரன் தொடக்கம் பல அரசியல்வாதிகள் கனடாவுக்கு சென்று இருக்கின்றார்கள்.
ஆனால் மணிவண்ணன் செய்தது போல்…. ஒரு கனமான சந்திப்பை ஒருவரும் செய்யவில்லை. 👍🏽
சில அரசியல் வாதிகள்… கனடாவுக்குப் போய், கல்லெறி வாங்கிக் கொண்டு வருவார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் தொடக்கம் பல அரசியல்வாதிகள் கனடாவுக்கு சென்று இருக்கின்றார்கள்.
ஆனால் மணிவண்ணன் செய்தது போல்…. ஒரு கனமான சந்திப்பை ஒருவரும் செய்யவில்லை. 👍🏽
சில அரசியல் வாதிகள்… கனடாவுக்குப் போய், கல்லெறி வாங்கிக் கொண்டு வருவார்கள். 🤣

ஜப்பான் காரன் கொடுத்த காசை பயன்படுத்தல்ல எண்டு திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். 😬

இவர் உங்கை என்ன செய்கிறார்?  🤔

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

ஜப்பான் காரன் கொடுத்த காசை பயன்படுத்தல்ல எண்டு திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். 😬

இவர் உங்கை என்ன செய்கிறார்?  🤔

இலங்கை அரசாங்கம்தான்.... வயித்தெரிச்சலில்,
ஜப்பானிய பணத்தை, யாழ். மாநகரசபையால்...
பயன் படுத்த முடியாதபடி, முட்டுக்கட்டை   போட்டது.
👇 கீழே... உள்ள பதிவில், விபரமாக உள்ளது.  👇

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசாங்கம்தான்.... வயித்தெரிச்சலில்,
ஜப்பானிய பணத்தை, யாழ். மாநகரசபையால்...
பயன் படுத்த முடியாதபடி, முட்டுக்கட்டை   போட்டது.
👇 கீழே... உள்ள பதிவில், விபரமாக உள்ளது.  👇

நன்றி  சிறி

நானும்  தேடிக்கொண்டிருந்தேன் இணைக்க...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசாங்கம்தான்.... வயித்தெரிச்சலில்,
ஜப்பானிய பணத்தை, யாழ். மாநகரசபையால்...
பயன் படுத்த முடியாதபடி, முட்டுக்கட்டை   போட்டது.
👇 கீழே... உள்ள பதிவில், விபரமாக உள்ளது.  👇

வயித்தெரிச்சலோ இல்லையோ..... மத்தியவங்கியிடம் டொலர் இல்லை என்பது ஊருக்கு, உலகத்துக்கு தெரிந்த விடயம்.

காசு முதலே 2019ல் வந்திருந்தாலும், டொலர் பிரச்சணை இருக்கிறது என்று தெரிந்தே, பசளை இறக்குமதி தடை என்று, இரசாயண உரம் என்று சொல்லி நாட்டையே நாசமறுத்தார் கோத்தா.

கனடா மார்க்கம் போன முதல்வர், மத்திய வங்கியோட இழுபறிப்படாமல், நேரா ஜப்பானிய தூதரகம் போய், வண்டியை நீங்களே இறக்கி, நன்கொடையாக தாருங்கோ அல்லது, நாம் தெரிவு செய்யிறத்துக்கு, நீங்கள் வெளிநாட்டிலேயே டொலராக கொடுங்க என்று சொல்லி, அலுவலை பார்த்திருக்கலாமே.

கொரோணா காரணமாக, மூன்று வருடம் கணக்கு நியாயமில்லை என்று வாதாடியிருக்கலாம்.

இப்ப,  காசும் போச்சு, வண்டியும் இல்லை. 🙄

வக்கீலுக்கு படிச்சு, அம்மன் சல்லிக்கு பிரயோசனம் இல்லையோ? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

அந்த வாகனத்தை ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான செலவு , வரிகள் மற்றும் மாநகர சபைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான செல்வது என 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து வாகனத்தினை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பல்வேறு தரப்புகளுடனும் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2019.06.12 ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் மூலம் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரினோம்.

அவர்கள் எமக்கான அனுமதியை தரவில்லை. மீண்டும் 18 ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கு உரிய படிமுறைகள் அடிப்படையில் இறக்குமதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.

நீண்ட இழுபறியில் பின்னர் 2019.11.14ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அது மூன்று மாத கால பகுதிக்கே செல்லுபடியாகும். அதற்கு இறக்குவதற்கான மற்றைய அனுமதிகள் கிடைக்க தாமதமானதால், இறக்குமதி சான்றிதழ் 2020.02.17ஆம் திகதியுடன் காலாவதியானது.

அதன் காலாவதி திகதியை நீடித்து தருமாறு கோரிய போது அதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு சபை மறுத்தது.
பின்னர் திறைசேரிக்கு கடிதம் அனுப்பினோம். மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம்.

நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.

பிறகு அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்வதன் ஊடாக முயற்சிப்போம் என அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை தாக்கல் செய்தோம். ஆனால் பயன் கிடைக்கவில்லை.

இறுதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தன்னை சந்திக்கும் இராஜ தந்திரிகளிடம் வாகனத்தினை இறக்க முடியாத நிலைமை குறித்து எடுத்து கூறி இராஜதந்திர ரீதியாக முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதுவும் பயனற்று போனது.

இந்நிலையிலையே, ஜப்பான் அரசாங்கம் தமது திட்டமானது மூன்று கால பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது.

மூன்று வருடங்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்.மாநகர சபையும் தன் சக்திக்கு மேலாக பல முயற்சிகளை எடுத்தமையை நாம் அறிவோம்.

நாமும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடாத்தினோம். எந்த பயனும் இல்லை எனவே ஒப்பந்தத்தை முடிவுறுத்துகிறோம்.

மேலும், வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

இந்த விடயத்தில் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட்டையோ தற்போதைய முதல்வர் மணிவண்ணனையோ அல்லது மாநகர நிர்வாகத்தையோ குறை கூறவோ குற்றம் சாட்டவோ முடியாது முடியாது.

இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டது.

தமது தலையீடு இன்றி வெளிநாடுகளோ வெளிநாட்டில் வசிப்போரோ எவரும் மாகாணங்களுக்கு நேரடியாக உதவ விடக்கூடாது எனும் குறுகிய சிந்தனையில் செயற்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கி அவர்களை இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு அரசாங்கம் கோருகின்றதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

மேலும், வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

வாசித்துத் தான் பதிலலித்தேன்.

இவர்கள் இப்போது சொல்வது, இலங்கை அரசியல்வாதிகளுக்குரிய பம்மாத்து வியாக்கியானம்.

யாழ் ஆஸ்பத்திரில ஸ்கானர் அனுப்பிய இலண்டன் தமிழர்கள், தாம் பணம் போட்டு சிங்கப்பூரில் வாங்கி, இலவசமா அனுப்பி, சுகாதார அமைச்சர் ராஜிதவை சந்தித்து, சுங்க வரி இல்லாமல் இறக்க ஏற்பாடு செய்தார்கள்.

அது முடியுமாயின், இதனை செய்திருக்கலாமே.

நோக்கம் கொமிசனில் இருந்தால் வேலை நடக்காது கண்டியளே....

வடிவா, விசாரித்தால், தாமதத்துக்கு காரணம் கமிசன் படியாமை தான்..... என்று தெரியவரும்.

ஸ்கானர் விசயத்தில, கமிசனுக்கு வழியில்லை..... விசயம் டபக்கெண்டு முடிஞ்சுது.

ஜப்பான்காரர், காசை கொடுத்துவிட்டு, நீங்களே வாங்குங்கோ எண்டால்?

அமைச்சர் ஜங்கரநேசனும் ஊழலில் சிக்கியவர் தானே.... அப்புறம் ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

வாசித்துத் தான் பதிலலித்தேன்.

இவர்கள் இப்போது சொல்வது, இலங்கை அரசியல்வாதிகளுக்குரிய பம்மாத்து வியாக்கியானம்.

யாழ் ஆஸ்பத்திரில ஸ்கானர் அனுப்பிய இலண்டன் தமிழர்கள், தாம் பணம் போட்டு சிங்கப்பூரில் வாங்கி, இலவசமா அனுப்பி, சுகாதார அமைச்சர் ராஜிதவை சந்தித்து, சுங்க வரி இல்லாமல் இறக்க ஏற்பாடு செய்தார்கள்.

அது முடியுமாயின், இதனை செய்திருக்கலாமே.

நோக்கம் கொமிசனில் இருந்தால் வேலை நடக்காது கண்டியளே....

வடிவா, விசாரித்தால், தாமதத்துக்கு காரணம் கமிசன் படியாமை தான்..... என்று தெரியவரும்.

ஸ்கானர் விசயத்தில, கமிசனுக்கு வழியில்லை..... விசயம் டபக்கெண்டு முடிஞ்சுது.

ஜப்பான்காரர், காசை கொடுத்துவிட்டு, நீங்களே வாங்குங்கோ எண்டால்?

அமைச்சர் ஜங்கரநேசனும் ஊழலில் சிக்கியவர் தானே.... அப்புறம் ?

நீங்கள்  குறிப்பிடும்  இரண்டுக்கும்  வித்தியாசம்  இருக்கு

எனக்கு  இதில்  நேரடி  அனுபவமும் இருக்கு

வடக்கு  மாகாணத்தினூடாக (அதன்  ஆளுனரின்  செயலாளரின்  முழு  ஒத்துழைப்பு இருந்தும்)

செய்ய முடியாததை தனி  நபர்கள்  மூலமாக  செய்தோம்

அரசு,  அதிகாரம்,  கட்சி வாக்கு, உரிமை....... என்று  வந்து  விட்டால்  பெரும்பான்மைப்பேய்  விழித்துக்கொள்ளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.