Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை

Featured Replies

மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை

இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன்.

சமபங்கு

கந்தப்பு :

எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை

கலைஞன்

கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும்

கந்தப்பு

அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா

கலைஞன்

அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம்

கந்தப்பு

எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் போறது, வீட்டு வரவு செலவு, என்ன சமைக்கிறது, ரிவியிலை என்ன நிகழ்;ச்சி பாக்கிறது வங்கிக்கணக்கு வழக்கு இப்படியான சின்ன விசயங்களிலை என்லாம் குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா.

ஈராக்கிலை அமெரிக்கா படையெடுத்தது சரியா, மகிந்த ஆட்சியிலை இருந்து மங்கள சமரவீரா பிரிஞ்சது சரியா, டேவிட் பெக்கம் அமெரிக்காவிற்கு விளையாடப் போனது சரியா இது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை எல்லாம் நான் தான் முடிவெடுப்பன். அவ தலையிட மாட்டா.

  • Replies 78
  • Views 12.1k
  • Created
  • Last Reply

மணி அத்தான் நீங்களும் தொடங்கிவிட்டீங்களா........................ ஆவலாக இருகிறோம்............அது சரி ஜம்முவையும் சேருங்கோவேன் நகைசுவைக்கு.......... :P :lol:

Edited by Jamuna

உங்கள் தினம் ஒரு நகைச்சுவை வாசிக்க தினமும் இந்தப்பக்கம் வருவேனே. மணி அத்தான் தொடருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நகைச்சுவை வாசிக்க எமக்கும் ஆசை

சிரிச்சிட்டேன்யா..சிரிச்சிட்

  • தொடங்கியவர்

ஜமுனா தாராளமாக நீங்களும் நகைச்சுவைகi இணைக்கலாம்.

  • தொடங்கியவர்

ஒருவர் கடை வைதிருந்தார். அவருடைய ஒரே நோக்கம் கடையை நன்றாக நடத்துவதும் பணமீட்டுவதும் தான். அவருக்கும் மரணநேரம் வந்துவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். தந்தையின் உயிர் பிரியப் போகிறது என்று அறிந்து மூன்று புதல்வர்களும் சுற்றி நிற்கிறார்கள். மெல்லக் கண்களைத் திறந்து பார்க்கிறார். அப்போது நடந்த உரையாடல்.

தந்தை : மூத்த மகன் எங்கையடா?

மகன்1 : இங்கை உங்களுக்குப் பக்கத்திலைதான் நிக்கிறனப்பா

தந்தை : இரண்டாவது மகன்

மகன்2 : நானுமு; உங்களோடை தான் நிக்கிறனப்பா

தந்தை : கடைசிப் பெடியன் எங்கை?

மகன் 3 : இங்கை பக்கத்திலைதான் நிக்கிறனப்பா. பயப்பமடாதேங்கோ

தந்தை : (கவலையுடன்) எல்லாரும் இங்கை நிண்டால் கடையை யார் பாக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு மகன்

தன் மகன் எந்த பொருளையும் எளிதில் திருடிவிடும் குணம் கொண்டிருந்தான். அதை மாற்ற திருடுபவர்களுக்கு கடவுள் தண்டனை அளிப்பார் என்று உணர்த்தி தன் மகனை திருத்த நினைத்தால் தாய்.

அதற்காக கோவில் பூசாரியிடம் தன் மகனை அனுப்பி வைத்தார்.

பூசாரி அந்த பையனைப் பார்த்து கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவன் திருதிருவென முழித்தான்.

மீண்டும் கடவுள் எங்கே இருக்கிறார் என்று பூசாரி கேட்க பயம் தொற்றிக் கொண்டது பையனுக்கு.

மூன்றாவது முறையாகவும் பையனிடம் பூசாரி கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்க அவன் பிடித்தான் ஓட்டம்.

வீட்டிற்கு வந்த பையன் தன் அம்மாவிடம் கூறினான் பயந்தபடி, அம்மா கடவுளை யாரோ திருடிவிட்டார்கள். நான்தான் திருடியிருப்பேன் என்று நினைத்து பூசாரி என்னிடம் கேட்கிறார். நான் சத்தியமா கடவுளை திருடவில்லை என்று கூறினானாம்.

ஹி ஹி ஹி

  • தொடங்கியவர்

மாணவன் : செய்யாத தவறுக்குத் தண்டனை உண்டா சேர்

ஆசிரியர் : சீ சீ செய்யாத தவறுக்குத் தண்டனை குடுக்கக் கூடாது.

மாணவன் : அப்ப சரி நான் வீட்டுப் பாடம் செய்ய இல்லை

ஆசிரியர் : ??????

மணி அண்ணா, எல்லாம் சூப்பரா இருக்கு

தொடர்ந்து அசத்துங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி மணி வாசகன் , நீங்களா, இரசிகையா சின்ன சின்ன விசயங்களை முடிவெடுக்கிறீர்கள்?

  • தொடங்கியவர்

கந்தப்பு அண்ணை மனவருத்தம் தாற கேள்வியெல்லாம் கேக்கப்படாது சொல்லிப் போட்டன். :(

  • தொடங்கியவர்

ஒருவர் ஆற்றங்கரையில் வைத்து அவருடைய மனைவியை Measuring Tape வினால் அளந்து கொண்டிருநதார்.

அவ்வழியால் போன ஒருவர் எனப்பா மனைவியை அளக்கிறார் என்று கேட்டதற்கு

`` ஆத்திலை போட்டாலும் அளந்து போடு''

என்று சொல்லியிருக்கிறார்கள். அது தான் அளக்கிறேன் என்றாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்து முதலாவது வருடம் கணவன் சொல்ல மனைவி கேட்பார்.இரண்டாவது வருடம்,மனைவி சொல்ல கணவன் கேட்பார்.மூன்றாவது வருடம்,கணவனும்,மனைவியும் சொல்ல பக்கத்து வீட்டுக்காரர் கேட்பார்கள்.

  • தொடங்கியவர்

சின்னக் கடி

கேள்வி எலிக்கு என் வால் இருக்கு

பதில் செத்தாத் தூக்கி வீசுறதுக்கு

கந்தப்பு அண்ணை மனவருத்தம் தாற கேள்வியெல்லாம் கேக்கப்படாது சொல்லிப் போட்டன். :lol:

:lol::D:rolleyes:

மணி அத்தானின் நகைசுவை எல்லாம் நல்லா இருக்கு...........என்ன நிலா அக்கா ஒரு மாதிரி பார்கிறீங்க கல்யாணம் ஆகினா அப்படி தான் என்று அடிகடி கந்தப்பு தாத்தா சொல்லுறவர்........ :P :lol:

  • தொடங்கியவர்

ஒருவர் பொதுக்கிணற்றின் அருகில் நின்று பதின் மூன்று பதின்மூன்று என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவ்வழியால் போன ஒருவர் அருகில் சென்று ஏனண்ணை திரும்பத் திரும்ப 13இ 13 எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க அந்த நபரோ திடீரென இவரைப் பிடித்துக் கிணற்றிற்குள் தள்ளி விட்டு விட்டு 14, 14, 14 என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தாராம்

ஒருவர் பொதுக்கிணற்றின் அருகில் நின்று பதின் மூன்று பதின்மூன்று என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவ்வழியால் போன ஒருவர் அருகில் சென்று ஏனண்ணை திரும்பத் திரும்ப 13இ 13 எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க அந்த நபரோ திடீரென இவரைப் பிடித்துக் கிணற்றிற்குள் தள்ளி விட்டு விட்டு 14, 14, 14 என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தாராம்

:D:D:D:D:D

  • தொடங்கியவர்

சாப்பிட வந்தவர் ஹோட்டல் பணியாளரிடம்:

என்னையா சிக்கன் டெவிலுக்குள்ளை (Chicken devil) முழு இலையானொண்டு செத்துப் போய்க் கிடக்குது.

ஹோட்டல் பணியாளர் : என்னை செர். ஒரு முழுக் கோழியே செத்துப் போய் பிளேற்றுக்குள்ளை கிடக்குது. அதைப் பற்றிக் கதைக்காமல் உந்தச் சின்ன இலையானைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறியள்.

சாப்பிட வந்தவர் ஹோட்டல் பணியாளரிடம்:

என்னையா சிக்கன் டெவிலுக்குள்ளை (Chicken devil) முழு இலையானொண்டு செத்துப் போய்க் கிடக்குது.

ஹோட்டல் பணியாளர் : என்னை செர். ஒரு முழுக் கோழியே செத்துப் போய் பிளேற்றுக்குள்ளை கிடக்குது. அதைப் பற்றிக் கதைக்காமல் உந்தச் சின்ன இலையானைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறியள்.

:):lol: :P

  • தொடங்கியவர்

மரணப் படுக்கையில் இருக்கும் கணவன் மனைவியிடம

`` நான் செத்தால் நீ பக்கத்து வீட்டுப் பரமசிவத்தைத் தான் கலியாணம் செய்ய வேணும்''

மனைவி : அவன் தான் உங்கடை பரம எதிரியாச்சே

கணவன் : அதாலை தான் சொல்லுறன். அவனை;ப பழிவாங்கிறதுக்கு எனக்கு வேறை வழி தெரியேல்லை

அட பாவமே பழி வாங்குறதுக்காக இபப்டியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.