Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான போட்டியும் கைவிடப்பட்டது !

By RAJEEBAN

28 OCT, 2022 | 03:55 PM
image

No description available.

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளிற்கு எதிரான போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

ரி20 உலக கிண்ணத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான இன்றைய போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்துகொண்டுள்ளன.

https://www.virakesari.lk/article/138603

large.1710990267_t20pt28-10.JPG.8a5e7575

  • Replies 167
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போங்கய்யா நீங்களும் உங்கள் விழையாட்டும்.😄

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, சுவைப்பிரியன் said:

போங்கய்யா நீங்களும் உங்கள் விழையாட்டும்.😄

நாளைக்கும் மழை வரும் நியூஸிலாந்திற்கும் இலங்கைக்கும்
புள்ளிப் பங்கீடு நடக்கும்
அதன் பின்னர் அவுசும் இங்கிலாந்தும் தங்கள்
இரண்டு விளையாட்டுக்களையும் வென்று
அரையிறுதிக்குள் நுழைவார்கள்
எல்லாம் செட்டப் போலத்தான் இருக்கு 🇳🇿🙂

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பலவான்கள், பலவீனர்கள் என்ற பேச்சுக்கு இனிமேல் இடம் இல்லை

By DIGITAL DESK 5

29 OCT, 2022 | 09:13 AM
image

(நெவில் அன்தனி)

2022 இருபது 20 உலகக் கிண்ணத்தில் இதுவரை...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பலவான்கள், பலவீனமானவர்கள், அனுகூலமானவர்கள், அனுகூலமற்றவர்கள் என்ற பேச்சுக்கு இனிமேல் இடம் இல்லை என்பது 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் உணர்த்தப்பட்டுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை முன்னாள் உலக சம்பியன்களான இலங்கை (2014), மேற்கிந்தியத் தீவுகள் (2012, 2016), இங்கிலாந்து (2010), பாகிஸ்தான் (2009) ஆகிய அணிகளை முறையே நமிபியா, ஸ்கொட்லாநது, அயர்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய அணிகள் வெற்றிகொண்டதன் மூலம் இது உணர்த்தப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்திடமும் அயர்லாந்திடமும் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்திருந்தமை மற்றொரு குறிப்படத்தக்க விடயமாகும்.

முன்னைய உலகக் கிண்ண அத்தியாயங்களில் ஓரிரு போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் இடம்பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது அறிந்திருக்கிறோம்.

ஆனால், இப்போது எதிர்பாராத முடிவு என்றோ தலைகீழ் முடிவு என்றோ சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

அத்தகைய போட்டி முடிவுகளை மகத்தான வெற்றி அல்லது படுதோல்வி அல்லது பரபரப்பான முடிவு என்று கூறுவதே பொருந்தும்.

ஏனெனில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடும் இரண்டு அணிகளில் ஏதோ ஒரு அணி வெற்றிபெறுவது நிச்சயம். அந்தப் போட்டியில் எந்த அணி திறமையை வெளிப்படுத்துகிறதோ அந்த அணிதான் இறுதியில் வெற்றிபெறும்.

அதனை இந்த உலகக் கிண்ண போட்டிகள் சிலவற்றில் காணக்கூடியதாக இருந்தது.

அவுஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இரண்டாம் கட்டமான சுப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்றுவருகிறது.

இதற்கு முன்னோடியாக 8 அணிகள் 2 குழுக்களில் பங்குபற்றிய முதல் சுற்று அல்லது தகுதிகாண் சுற்று மெல்பேர்ன், ஜீலோங் கார்டினியா விளையாட்டரங்கிலும் ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கிலும் நடைபெற்றன.

நமிபியாவிடம் வீழ்ந்தது

2014 சம்பியன் இலங்கை

முதலாம் சுற்றில் ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 2014 உலக சம்பியன் இலங்கையை வீழ்த்தி நமிபியா வரலாறு படைத்தது.

போட்டியின் 15ஆவது ஓவரில் நமிபியா 6 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், ஜான் ப்ரைலின்க் (44), ஜொஹானெஸ் ஸ்மித் (31 ஆ.இ.) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை எதிரணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

அப் போட்டியில் மாத்திரமே பானுக்க ராஜபக்ஷ (20), தசன் ஷானக்க (29) ஆகிய இருவரும் ஓரளவு பிரகாசித்தனர்.

நமிபியா பந்துவீச்சில் டேவிட் வைஸ், பேர்னார்ட் ஷோல்ட்ஸ், பென் ஷிக்கொங்கோ, ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு

இரண்டு தோல்விகள்

இரண்டு தடவைகள் (2012, 2016) உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் பி குழுவில் இரண்டு தோல்விகளைத் தழுவியது

முதலாவதாக ஸ்கொட்லாந்திடம் 42 ஓட்டங்களால் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் அயர்லாந்திடம் 9 விக்கெட்களால் தோல்வி அடைந்து சுப்பர் 12 சுற்று வாய்ப்பை இழந்து நாடு திரும்பியது.

பி குழு ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்ங்களைப் பெற மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஜோர்ஜ் மேர்பி (60) குவித்த அரைச் சதமும் மார்க் வொட் பதிவு செய்த 3 விக்கெட் குவியலும் (12 - 3 விக்) ஸ்கொட்லாந்தின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தன.

இக் குழுவில் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை அயர்லாந்து வெற்றிகொண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. ப்றெண்டன் கிங் 62 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கெரத் டிலேனி 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அயர்லாந்து மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றி ஈட்டியது. போல் ஸ்டேர்லிங் (66 ஆ.இ.), அண்டி பேல்பேர்னி (37), லோர்க்கன் டக்கர் (45 ஆ.இ) ஆகிய மூவரும் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சுகளை துச்சமென மதித்து திறமையாக துடுப்பெடுத்தாடினர்.

அயர்லாந்திடம் பணிந்தது

2010 சம்பியன் இங்கிலாந்து

சுப்பர் 12 சுற்றில் இங்கிலாந்தை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அயர்லாந்து வெற்றிகொண்டது.

மழையினால் தாமதித்து ஆரம்பமான அப்போட்டியில் 2ஆவது ஓவர் வீசப்படுகையில் பெய்த மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் 19 நிமிடங்கள் தடையின் பின்னர் ஆட்டம் 19.2 ஓவர்கள் வரை தடையின்றி தொடர அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி 62 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பவர் ப்ளே ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அதன் பின்னர் சுமாரான வேகத்தில் ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக இங்கிலாந்தை அண்மித்துக்கொண்டிருந்த வெற்றியை டக்வேர்த் லூயிஸ் முறைமையில்  அயர்லாந்து   தட்டிப் பறித்தது. ஆட்டம் கைவிடப்பட்டபோது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் இங்கிலாந்து திருத்தப்பட்ட வெற்றி இலக்கைவிட 5 ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தது.

இதன் மூலம் இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு முன்னாள் உலக சம்பியன்களை (மெற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து) வெற்றிகொண்ட அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுக்கொண்டது.

இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இங்கிலாந்தை அயர்லாந்து வெற்றிகொண்டது இது இரண்டாவது தடவையாகும்.

11 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கெவின் ஓ'ப்றயனின் அதரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 3 விக்கெட்களால் அயர்லாந்து வெற்றிகொண்டிருந்தது.

அப் போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கெவின் ஓ'ப்றயன் குவித்த 113 ஓட்டங்களின் உதவியுடன் அயர்லாந்து 49.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்று    மகத்தான வெற்றியை ஈட்டியது.

2009 சம்பியன் பாகிஸ்தானை

வென்றது ஸிம்பாப்வே

2009 உலக சம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை (27) நடைபெற்ற குழு 2 சுப்பர் 12 சுற்று போட்டியில் ஸிம்பாப்வே ஒரு ஓட்டத்தால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. சோன் வில்லியம்ஸ் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 31 ஓட்டங்களைப் பெற்றார்.

131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது இது இரண்டாவது தடவையாகும். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் கடைசிப் பந்திலேயே இந்தியா தோல்வி அடைந்திருந்தது.

மொஹமத் ரிஸ்வான், பாபர் அஸாம், ஷான் மசூத், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், ஹய்தர் அலி, மொஹமத் நவாஸ் ஆகிய திறமைவாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றதால் பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டதில் தவறில்லை.

ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக இருபது 20 கிரிக்கெட்  போட்டிகளின் கடைசிக் கட்டத்தில் தவறுகள் இழைக்காமல் விளையாடினால்தான் வெற்றிபெற முடியும் என்பதை ஸிம்பாப்வே நிரூபித்தது.

பாகிஸ்தான் சார்பாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷான் மசூத் 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிக்கந்தர் ராஸாவின் பந்துவீச்சில் சமநிலை இழந்து ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்ததோடு அவரது அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும் மொஹமத் நவாஸ் (22), மொஹமத் வசிம் (12 ஆ.இ.) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 128 ஓட்டங்களாக   உயர்த்தினர்.

ஆனால் கடைசி 2 பந்துகளில் நவாஸ், ஷஹின் ஷா அவ்றிடி ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இருபது 20 உலகக் கிண்ணத்தில் ஸிம்பாப்வே வராற்று வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்த்தாடிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே ஸிம்பாப்வே வெற்றிபெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும்.

இவ்வாறாக இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நான்கு முன்னாள் உலக சம்பியன்களை நமிபியா, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய அணிகள் வெற்றிகொண்டதன் மூலம், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பலவான்கள், பலவீனர்கள் என்ற பேச்சுக்கு இனிமேலும் இடம் இல்லை என்பதும் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றிபெறும் என்பதும் முழு கிரிக்கெட் உலகுக்கும் உணர்த்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/138621

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை இலகுவாக வெற்றியீட்டியது நியூஸிலாந்து

29 OCT, 2022 | 05:44 PM
image

(நெவில் அன்தனி)


இலங்கைக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (29) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் நியூஸிலாந்து இலகுவாக வெற்றியீட்டியது.


க்லென் பிலிப்ஸ் குவித்த அபார சதம், ட்ரென்ட் போல்டின் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி என்பன நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.


இந்த வெற்றியுடன் 3 போட்டிகளில் தோல்வி அடையாமல் 5 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூஸிலாந்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டதுடன் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


பெத்தும் நிஸ்ஸன்க தவறவிட்ட பிடியை தனக்கு அதிர்ஷ்டமாக்கிக்கொண்ட கலென் பிலிப்ஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்ததுடன் அபார சதம் குவித்து நியூஸிலாந்து அணியைப் பலப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார்.


இப் போட்டியில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைக் குவித்தது.
எவ்வாறாயினும், நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.


மஹீஷ் தீக்ஷனவின் முதலாவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ஃபின் அலன் (1), 3ஆவது ஓவரில் தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் டெவன் கொன்வே (1) ஆகிய இருவரும் போல்ட் செய்யப்பட்டனர்.


தொடர்ந்து 4ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் கசுன் ராஜித்தவின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (8) ஆட்டம் இழந்தார். (15 - 3 விக்.)
அடுத்த 2 ஓவர்களில் 10 ஓட்டங்கள் பெறப்பட்டபோதிலும் 6 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து 3 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.


இதனைத் தொடர்ந்து 7 ஆவது ஓவரில் நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஹசரங்க டி சில்வாவின் பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் கொடுத்த இலகுவான நேரடி பிடியை பெத்தும் நிஸ்ஸன்க தவறிவிட்டார்.


அதுவே க்லென் பிலிப்ஸுக்கும் நியூஸிலாந்துக்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
அப்போது 12 ஓட்டங்களைப் பெற்றிருந்த பிலிப்ஸ் இறுதியில் அபார சதம் குவித்து தனி ஒருவராக அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

எனினும் அதன் பின்னர் க்லென் பிலிப்ஸும் உபாதைக்குப் பின்னர் பூரண சுகம் பெற்று திரும்பிய டெரில் மிச்செலும் (22) 4ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.


டெரில் மிச்செலின் விக்கெட்டை வனிந்து ஹசரங்க டி சில்வா நேரடியாகப் பதம் பார்த்தார்.


அடுத்து களம் நுழைந்த ஜேம்ஸ் நீஷாம் 5 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ரஜித்தவின் பந்துவீச்சில் தசுன் ஷானக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.


ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய நிலையில், க்லென் பிலிப்ஸ் 64 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 104 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இஷ் சோதி ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார்.
மிச்செல் சென்ட்னர் 11 ஓட்டங்களுடனும் டிம் சௌதீ 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.


பதில் வீரராக  அணியில்   இணைக்கப்பட்ட கசுன் ராஜித்த 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
168 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பவர் ப்ளேக்குள் நியூஸிலாந்தின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மூவரை ஆட்டமிழக்கச் செய்து 25 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கையின் துடுப்பாட்டம் அதனை விட மோசமாக இருந்தது.


பவர்  ப்ளே   நிறைவில் இலங்கை  4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.


நியூஸிலாந்தின் அதிவேக பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் தடுமாற்றம் அடைந்த இலங்கையின் முன்வரிசை வீரர்கள் நால்வர் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க (0) முதல் ஓவரில் டிம் சௌதீயின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற ட்ரென்ட் போல்டின் அடுத்த ஓவரில் விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வேயிடம் பிடிகொடுத்து குசல் மெண்டிஸ் (4) களம் விட்டகன்றார்.


ட்ரென்ட் போல்டின் அதே ஓவரில் தனஞ்சய டி சில்வா (0) போல்ட் செய்யப்பட்டார்.
அத்துடன் நின்று விடாத ட்ரென்ட்  ட்ரென்ட் போல்ட்    தனது தொடர்ச்சியான 3ஆவது ஓவரில் சரித் அசலன்கவை 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.


7ஆவது ஓவரை வீசிய மிச்செல் சென்ட்னர் தனது முதலாவது பந்தில் சாமிக்க கருணாரட்;னவை (3) ஆடுகளம் விட்டு வெளியேற்றினார். (24 - 5 விக்.)
அதனைத் தொடர்ந்து பானுக்க ராஜபக்ஷவும் அணித் தலைவர் தசன் ஷானக்கவும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.


அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லொக்கி பேர்குசனின் பந்துவீச்சில் அணித் தலைவர் வில்லியம்சனிடம் பிடிகொடுத்து 34 ஓட்டங்களுடன் பானுக்க ராஜபக்ஷ ஆட்டமிழந்தார்.


வனிந்து ஹசரங்க டி சில்வா (4), மஹீஷ் தீக்ஷன (0) ஆகிய இருவரும் தவறான அடி தெரிவுகளால் அடுத்தடுத்த ஓவர்களில் முறையே இஷ் சோதி, மிச்செல் சென்ட்னர் ஆகியோரின் பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தனர். (65 - 8 விக்.)


மொத்த எண்ணிக்கை 93 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரென்ட் போல்டின் பந்துவீச்சை விளாசி அடித்த தசன் ஷானக்க, டெரில் மிச்செலிடம் பிடிகொடுத்து 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


கடைசி ஆட்டக்காரரான லஹிரு குமார, விக்கெட்டை விட்டு முன்னாள் நகர்ந்து இஷ் சோதியின் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து அதனை தவறவிட கொன்வேயினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழக்க நியூஸிலாந்து மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.


நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.


அவரை விட மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி ஆகிய இருவரும் ஒரே மாதிரியாக 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: க்லென் பிலிப்ஸ்

https://www.virakesari.lk/article/138662

large.1007184424_t20pt29-10.JPG.53aab107

  • கருத்துக்கள உறவுகள்
NED FlagNED
(3.6/20 ov) 12/1
PAK FlagPAK

Netherlands chose to bat.

  • கருத்துக்கள உறவுகள்
NED FlagNED
91/9
PAK FlagPAK
(5.6/20 ov, T:92) 41/1

Pakistan need 51 runs in 84 balls.

  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வேயின் சவாலை முறியடித்த பங்களாதேஷ் திரில் வெற்றி

By DIGITAL DESK 5

30 OCT, 2022 | 01:46 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயின் சவாலை முறியடித்த பங்களாதேஷ் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கடைசிவரை விறுவிறுப்பைத் தோற்றுவித்த அப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்ததால் ஸிம்பாப்வே தோல்வியைத் தழுவ நேரிட்டது.

Najmul Hossain Shanto accelerated after getting to his half-century, Bangladesh vs Zimbabwe, T20 World Cup, Brisbane, October 30, 2022

நூருள் ஹொசெய்ன் ஷன்டோ குவித்த அரைச் சதம், தஸ்கின் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், மொசாடெக் ஹொசெய்ன் ஆகியோரின் திறமையான பந்துவீச்சகள் என்பன பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

12ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது 5ஆவது விக்கெட் வீழ்ந்ததால் ஸிம்பாப்வே படுதோல்வி அடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சோன் வில்லியம்ஸ் 6ஆவது விக்கெட்டில் ரெயான் பியூரியுடன் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸிம்பாப்வேக்கு உற்சாகம் ஊட்டினார்.

Ryan Burl struck some meaty blows, Bangladesh vs Zimbabwe, T20 World Cup, Brisbane, October 30, 2022

ஆனால், 19ஆவது ஓவரில் சோன் வில்லியம்ஸ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் ஸிம்பாப்வே நெருக்கடிக்கு உள்ளானது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மொஸாடெக் வீசிய முதல் பந்தில் உதிரி ஒன்று பெறப்பட்டது. அடுத்த பந்தில் இவான்ஸ் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து   களம் புகுந்த இங்கராவா தான் எதிர்கொண்ட முதல் பந்தை சுழற்றி அடிக்க முயற்சித்தார். அவரது தோளில் பட்ட பந்து பவுண்டறியை நோக்கி செல்ல மேலும் 4 உதிரிகள் கிடைத்தன.

அடுத்த பந்தை லெக் திசையில் சிக்ஸ் ஆக்கிய இங்கராவா, போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அடுத்த பந்தையும் சிக்ஸாக்கும் முயற்சியாக முன்னோக்கி நகர்ந்த இங்கராவா பந்தை தவறவிட நூருள் ஹசன் ஸ்டம்ப் செய்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

Blessing Muzarabani picked up both the Bangladesh wickets to fall in the powerplay, Bangladesh vs Zimbabwe, T20 World Cup, Brisbane, October 30, 2022

அடுத்த பந்து நோ போலாக அமைந்ததுடன் மேலதிகமாக உதிரி ஒன்றும் பெறப்படடது. எனினும் மொசாடெக் மிகத் துல்லிமாக கடைசிப் பந்தை வீச முஸராபனியினால் தேவையான 4 ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.     ஸிம்பாப்வே 3 ஓட்டங்களால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது.

ரெயான் பியூரி 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சோன் வில்லியம்ஸ், பியூரி ஆகியோரைவிட ரெஜிஸ் சக்கப்வா (15) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொசாடெக் ஹொசெயன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஓவரில் சௌம்யா சர்க்கார் (0) ஆட்டமிழந்ததால் பங்களாதேஷ் அழுத்தத்தை எதிர்கொண்டது.

ஆனால், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ குவித்த அரைச் சதமும் லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், அபிப் ஹொசெய்ன் ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி பங்களாதேஷ் அணியை மீட்டனர்.

ஷன்டோ 55 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

Taskin Ahmed and Mustafizur Rahman picked up two wickets each in the powerplay, Bangladesh vs Zimbabwe, T20 World Cup, Brisbane, October 30, 2022

அவர் லிட்டன் தாசுடன் 2ஆவது விக்கெட்டில் 22 ஓட்டங்களையும் ஷக்கிப் அல் ஹசனுடன் 3ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையம் அபிப் ஹொசெய்னுடன் 38 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

தாஸ் 12 ஓட்டங்களையும் ஷக்கிப் அல் ஹசன் 23 ஓட்டங்களையும் அபிப் ஹொசெய்ன் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிச்சர்ட் இங்கராவா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138685

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண தொடரில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து

உலகக் கிண்ண தொடரில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து

 

உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்த்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த போட்டியின் போது, ஹரிஸ் ரவுஃப் வீதிய பந்து நெதர்லாந்து அணி வீரர் பாஸ் டி லீட் முகத்தில் பட்டுள்ளது.

இதன்போது அவரது முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்
(18.6/20 ov) 127/8
SA FlagSA

India chose to bat.

நெதர்லாந்துடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது பாகிஸ்தான்

By DIGITAL DESK 5

30 OCT, 2022 | 04:59 PM
image

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக பேர்த், மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை பாகிஸ்தான் ஈட்டிக்கொண்டது.

சுப்பர் 12 சுற்றில் தனது முதலிரு போட்டிகளில் இந்தியாவிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வி கண்டதால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்ட பாகிஸ்தான் இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது வெற்றியை ஈட்டிக்கொண்டது.

மிகத் துல்லியமாக பந்துவீசி நெதர்லாந்தை 100 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய பாகிஸ்தான், 14 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை அடைந்து எதிர்மறையாக இருந்து நிகர ஓட்ட வேகத்தை நேர்மறை ஆக்கிக்கொண்டுள்ளது.

ஆனால், அடுத்துவரும் போட்டிகளின் பெறுபேறுகளிலேயே பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்னெறுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நெதர்லாந்து ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டு 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Mohammad Rizwan top-scored for Pakistan with his 49 runs, Men's T20 World Cup 2022, Perth, October 30, 2022

நெதர்லாந்து துடுப்பெடுத்தாடியபோது 6ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூப் வீசிய பந்து பாஸ் டி லீஸின் வலது புருவத்துக்குக் கீழ் தாக்கியதால் அவர் காயமடைந்து ஓய்வு பெற நேரிட்டது. பாரதூரமான காயம் ஏற்படாதபோதிலும் அதன் பின்னர் அவர் துடுப்பெடுத்தாடவில்லை.

இதேவேளை மிகவும் மந்த கதியில் ஓட்டங்களைப் பெற்ற நெதர்லாந்து 8 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த நெதர்லாந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கொலின் அக்கர்மன் (27), ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (15) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர். அத்துடன் 4ஆவது விக்கெட்டில் அவர்கள் பகிர்ந்த 35 ஓட்டங்களே நெதர்லாந்தின் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

Mohammad Wasim celebrates with Haris Rauf after bowling Fred Klaassen, Netherlands vs Pakistan, Men's T20 World Cup 2022, Perth, October 30, 2022

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷடாப் கான் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் வசிம் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

92 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 13.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

மொஹமத் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 20 ஓட்டங்களையும் ஷான் மசூத் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்றெண்டன் க்ளோவர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/138715

(19.6/20 ov) 133/9
SA FlagSA

India chose to bat.

 

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி?

  • அஷ்ஃபாக் அகமது
  • பிபிசி தமிழ்
58 நிமிடங்களுக்கு முன்னர்
 

ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது... இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணியின் மில்லர் எடுத்த அந்த ஒரு ரன் Suicidal Single என வர்ணிக்கப்பட்டது. அப்படி ஒரு ஆபத்தான சிங்கிள் எடுக்கும் முயற்சி அது. மார்க்ரமை எளிதில் ரன் அவுட் செய்ய அது ஒரு அற்புதமான வாய்ப்பு. கேப்டன் ரோஹித் சர்மா அதை மோசமாக தவறவிட்டார்.

முன்னதாக மார்க்ரம் 35 ரன்கள் எடுத்திருந்த போது அவர் அடித்த பந்து கேட்சாக மாறியது. அதை கோலி நழுவவிட்டார். பரபரப்பான தருணத்தில் இந்திய வீரர்களின் தடுமாற்றம் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் போர்டில் எதிரொலித்தது. முடிவில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

 

முன்னதாக இந்தியாவின் நம்பிக்கையான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 133 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் குவிக்க முடிந்தது.

தடுமாறிய பேட்ஸ்மேன்கள் - தூக்கி நிறுத்திய சூர்யகுமார்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து அரைசதம் பதிவு செய்த விராட் கோலி மீதான எதிர்ப்பார்ப்பு இன்றைய ஆட்டத்தில் அதிகமாகவே இருந்தன. இருப்பினும் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அக்சர் பட்டேலுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா டக் அவுட். ஹர்திக் 2, தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேறினர். 9 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை பறிகொடுத்து வெறும் 51 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இந்தியாவை நூறு ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என எண்ணிய தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் கனவு சூர்யகுமாரின் பேட்டிங்கால் கானல் நீரானது.

 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணியின் மீட்பராக செயல்பட்ட சூர்யகுமார் பொறுப்பாக ஆடி சரிவில் இருந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 68 ரன்கள் குவித்தார். நடப்பு தொடரில் பெர்த் மைதானத்தில் தனியொருவர் விளாசிய அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதர 8 பேரும் சேர்ந்து 80 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை மட்டுமே சேர்த்தனர். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த இரு ஓவர்

2வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே மிரட்டலான பேட்ஸ்மன்கள் டி காக் மற்றும் ரூசோவை அடுத்தடுத்து வெளியேற்றி மிரட்டினார். இந்தியாவின் வேகத்தால் தென்னாப்பிரிக்கா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 40 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆனால் இதன் பிறகு ஆட்டம் தென்னாப்பிரிக்கா வசம் மெல்ல நகரத் தொடங்கியது. 11வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்கா 3 பவுன்டரிகள் உள்பட 16 ரன்களை சேர்த்தது. அஷ்வின் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர் உள்பட 17 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா. மார்க்ரம் 52 ரன்களில் வெறியேறினாலும் மில்லர் இறுதி வரை களத்தில் நின்று 59 ரன்கள் விளாசியதுடன் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கும் வித்திட்டார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

வேகப்பந்து வீச்சுக்கு பேர் போன பெர்த்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 ஆட்டம் வேகப்பந்துவீச்சுக்கு பேர் போன பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் ஆட முடிவு செய்தது. பெர்த்தில் நடைபெற்ற 21 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 13 முறை போட்டியை வென்றுள்ளன.

 

லுங்கி

பட மூலாதாரம்,PAUL KANE

ஆடுகளம் வேகப்பந்துவீச்சிற்கு குறிப்பாக பவுன்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸ் சராசரி வெறும் 133 ரன்கள்தான் என்கிறது சில முன்னணி கிரிக்கெட் ஊடகங்கள். பெர்த் மைதானம் எப்படி இருக்கிறது என்பதை தென்னாப்பிரிக்கா வீசிய முதல் ஓவரே காட்டிவிட்டது. பார்னெல் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல்.ராகுலால் ஒரு ரன் கூட எடுக்க முடியாததால் அது மெய்டன் ஓவராக மாறியது. தென்னாப்பிரிக்காவின் வேகம் ராகுல் ரோஹித் இருவரின் கால்களையும் சற்று பதம் பார்த்தது.

கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்புவது ஏன்?

லுங்கி நிகிடி வீசிய பந்தில் ரோஹித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல் ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். டாப் ஆர்டரில் ரோஹித்தும், கோலியும் அரைசதங்கள் விளாசிய நிலையில், கே.எல்.ராகுல் இதுவரை பெரியளவுக்கு தொடரில் பங்களிப்பு செய்யவில்லை. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா, "இன்றைக்கு உலக கிரிக்கெட்டில் ராகுலுக்கு நிகரான திறமையான பேட்ஸ்மேன் என ஒரு சிலரைத்தான் சொல்ல முடியும். சரக்கு இல்லாவிட்டால் லாரா, பீட்டர்சன் மாதிரியான மேதைகள் ஏன் அவரை கொண்டாடப் போகிறார்கள்? ஆனால் வருத்தம் என்னவென்றால் ராகுல், தனது திறமைக்கு இதுவரை முழுமையாக நியாயம் செய்யவில்லை என்பதுதான்.

கடந்த காலங்களில் ராகுல் எப்போதெல்லாம் ஃபார்மை தொலைத்தார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு பேட்டர்ன் இருப்பதைப் பார்க்க முடியும். ஒன்று தோல்வியைக் கண்டு அஞ்சுவது அல்லது இல்லை அப்படியே அதற்கு நேரெதிராக வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் தடுமாறுவதாக இருக்கும். ஒருவர் தொடர்ந்து தன்னுணர்வு உடன் இருப்பாரானல் அது அவருடைய சக்தியை உறுஞ்சி அவரை சோர்வடைய செய்துவிடும். ஆற்றல் குறையும் போது அது கவனமின்மைக்கு இட்டுச் செல்கிறது. முக்கியமான தொடர்களில் ராகுல் பதட்டமடைவதும் சொதப்புவது இதன் காரணமாகத்தான்.

 

சூர்யகுமார்

பட மூலாதாரம்,PAUL KANE

மற்றபடி அவருக்கு டெக்னிக்கலாக எல்லாம் பெரிய பிரச்சினை எதுவுமில்லை. இதுபோன்ற விசித்திரங்கள் கிரிக்கெட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. மார்க் வாஹ், கார்ல் ஹூப்பர் போன்ற மேதைகள் கடைசி வரைக்கும் தங்களுடைய உச்சத்தை வெளிப்படுத்தாமலே தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம். இது அந்தந்த வீரரின் ஆளுமை மற்றும் மன வார்ப்பைப் பொறுத்தது. இப்போதைக்கு ராகுலுக்கு தேவை ஒரு நல்ல மென்டர்" என்றார்

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

நடப்பு டி20 தொடரில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

ஒருவேளை இந்தியா சொதப்பும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும். ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான், இன்று நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. எஞ்சிய ஆட்டங்களில் வெற்றியும், இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தங்கள் இதர போட்டிகளில் தோல்வியைத் தழுவினால் மட்டுமே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். ஆனால் இதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது.

அணி விவரம்

இந்தியா: 1 கேஎல் ராகுல், 2 ரோகித் சர்மா (கேப்டன்), 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5 தீபக் ஹூடா, 6 ஹர்திக் பாண்டியா, 7 தினேஷ் கார்த்திக் 8 அஸ்வின், 9 முகமது ஷமி, 10 புவனேஷ்வர் குமார், 11 அர்ஷ்தீப் சிங்

தென்னாப்பிரிக்கா: 1 குயின்டன் டி காக் , 2 டெம்பா பவுமா, 3 ரிலீ ரோசோவ், 4 மார்க்ரம், 5 டேவிட் மில்லர், 6 டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 7 வெய்ன் பார்னெல், 8 கேசவ் மகராஜ், 9 அன்ரிச் நார்ட்ஜே, 10 லுங்கி நிகிடி, 11. ரபாடா

https://www.bbc.com/tamil/sport-63445880

large.187511202_t20pt30-10.JPG.debb71efa

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை அபார வெற்றிகொண்டது தென்னாபிரிக்கா

30 OCT, 2022 | 09:05 PM
image

 

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக பேர்த், மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 2 பந்துகள் மீதமிருக்க தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

லுங்கி நிகிடியின் 5 விக்கெட் குவியல், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

இந்தப் போட்டி முடிவுடன் குழு 2இல் 5 புள்ளிகளுடன் தென் ஆபிரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியள்ளதுடன் இந்தியா 4 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போட்டி முடிவை அடுத்து இரண்டு குழுக்களில் தென் ஆபிரிக்காவும் நியூஸிலாந்தும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக இருக்கின்றன. 

தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடத்தாடியபோத இந்தியாவைப் போன்றே அதன்ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

அதிரடி ஆட்டக்காரர்களான குவின்டன் டி கொக் (1), கடந்த போட்டியில் சதம் குவித்த ரைலி ரூசோவ் (0) ஆகிய இருவரும் 2ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். (3 - 2 விக்.)

அணித் தலைவர் டெம்பா பவுமாவும் ஏய்டன் மார்க்ராமும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் பவுமா 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து மார்க்ராம், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலப்படுததினர்.

 

மார்க்ராம் 35 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அஷ்வினின் பந்துவீச்சில் கொடுத்த நேரான பிடியை கோஹ்லி தவறவிட்டமை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் டேவிட் மில்லர் 46 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய பந்துவிச்சில் அர்ஷ்தீப் சிங் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இணங்கிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

லுங்கி நிகிடியின் 4 விக்கெட் குவியல் காரணமாக 9ஆவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்தியா தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், சூரியகுமார் யாதவ் அபாரமாக துடுப்பெடுத்தாடி பெற்ற அரைச் சதத்தின் உதவியுடன் இந்தியா ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

போட்டியின் 5ஆவது ஓவரில் ரோஹித் ஷர்மா (15), கே. எல். ராகுல் (9) ஆகிய இருவரும் லுங்கி நிகிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் கே. எல். ராகுல் விளையாடிய 4 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தைக் கடக்காததால் அடுத்த போட்டியில் அவரக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என கருதப்படுகிறது.

மொத்த எண்ணிக்கை 41 ஓட்டங்களாக இருந்தபோது நிகிடியின் பந்துவீச்சில் விராத் கோஹ்லி 12 ஓட்டங்களுடனும் ஒரு ஓட்டம் கழித்து அன்றிச் நோக்கியாவின் பந்துவீச்சில் தீப்பக் ஹூடா ஓட்டம் பெறாமலும் களம் விட்டகன்றனர்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது லுங்கி நிகிடியின் பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதுவரை 2.3 ஓவர்களில் நிகிடி 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதன் பின்னர் சூரியகுமார் யாதவ், 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை மோசமான வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

தொடர்ந்து சூரியகுமார் யாதவ், ரவிச்சந்திரன் (7) ஆகிய இருவரும் 7அவது விக்கெட்டில் பகிர்ந்த 23 ஓட்டங்களும் அணிக்கு சிறு தெம்பை கொடுத்தது.

தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 40 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களைக் குவித்தார்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் லுங்கி நிகிடி 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வெய்ன் பார்னல் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: லுங்கி நிகிடி

https://www.virakesari.lk/article/138741

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்தை தோற்கடித்த அவுஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

By VISHNU

31 OCT, 2022 | 05:43 PM
image

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

00222.gif

ஐ.சி.சி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றிலிருந்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2 வெற்றிப் புள்ளிகளை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் பிரிஸ்பேன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (31) ஒன்றையொன்று எதிர்த்தாடின.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அணித் தலைவர் ஆரோன் பிஞ் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பில் பரி மெக்கார்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

180 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்பில் லுகன் டஸ்கர் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆரோன் பிஞ் தெரிவு செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/138806

large.84089948_t20pt31-10.JPG.6dc2bf8107

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி!

By DIGITAL DESK 5

01 NOV, 2022 | 01:36 PM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்க ளைப்  பெற்று மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றது.

இப் போட்டி மழையினால தடைப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டபோதிலும் இந்தப் போட்டி தடையின்றி நடைபெற்றது. 

Wanindu Hasaranga got rid of Usman Ghani, caught at deep midwicket, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

இந்த போட்டி முடிவை அடுத்து அரை இறுதிக்கு செல்வதற்கான இலங்கையின் வாய்ப்பு சிறிய அளவில் பிரகாசம் அடைந்துள்ளது. 

ஆனால், குழு 1இல் நடைபெறவுள்ள கடைசிக் கட்ட முடிவுகளே இக் குழுவிலிருந்து எந்தெந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை உறுதிசெய்யும். 

இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் எஞ்சிய போட்டிகளில் தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.

இலங்கை அதன் கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

Kusal Mendis drives one over covers, Afghanistan vs Sri Lanka, Men's T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிஸும் தனஞ்சய டி சில்வாவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். (46 - 2 விக்.)

எனினும் தனஞ்சய டி சில்வாவும் சரித் அசலன்கவும் 3 ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

Dhananjaya de Silva took charge after the Sri Lanka openers fell, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்ச டி சில்வாவுடன் இணைந்த பாணுக்க ராஜபக்ஷ  4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு அவிசியமான வெற்றியைக் கிடைக்கச் செய்தார்.

தனஞ்சய டி சில்வா 42 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காதிருந்தார்.

வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பானுக்க ராஜபக்ஷ 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

Mujeeb Ur Rahman is up and running after castling Pathum Nissanka with a peach, Afghanistan vs Sri Lanka, Men's T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்   கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப்  பெற்றது.

Rahmanullah Gurbaz whacks one over midwicket, Afghanistan vs Sri Lanka, Men's T20 World Cup 2022, Brisbane, November 1, 2022

ரஹ்மானுல்லா குர்பாஸ் (28), உஸ்மான் கானி (27) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பவர் ப்ளே ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 7ஆவது ஓவரில் குர்பாஸின் விக்கெட்டை லஹிரு குமார கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமை ஆப்கானிஸ்தானுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

Najibullah Zadran had a lot to do after back-to-back wickets, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆரம்ப வீரர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் (22), நஜிபுல்லா ஸத்ரான் (18), மோஹமத் நபி (13) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கசுன் ராஜித்த 31 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Wanindu Hasarnga didn't concede a boundary in his four overs, and picked up three wickets, Afghanistan vs Sri Lanka, T20 World Cup, Brisbane, November 1, 2022

ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க டி சில்வா.

https://www.virakesari.lk/article/138853

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வெற்றி பெற்றதால் அரை இறுதிக்கு 4 அணிகளுக்கு இடையில் போட்டி

By VISHNU

01 NOV, 2022 | 08:20 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு முக்கிய ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 20 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இங்கிலாந்து   ஈட்டிக்கொண்டது.

Kane Williamson hit 40 off 40, England vs New Zealand, Men's T20 World Cup 2022, Group 1, Brisbane, November 1, 2022

அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், கட்டுப்பாடான பந்துவீச்சு என்பன இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.

ponts_table___1_.jpg

இந்தப் போட்டி முடிவுடன் குழு 1இல் நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களை வகிக்கின்றன.

இலங்கை 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்த 4 அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி போட்டிகளின் முடிவுகளே எந்த 2 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.

நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால்தான் அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும் என அறிந்திருந்த இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே அதிரடியில் இறங்கி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்து 62 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த வருட ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 4 சதங்களைக் குவித்து  அசத்திய ஜொஸ் பட்லர், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அரைச் சதம் குவித்தார்.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுடனான 2 போட்டிகளில் (18, 0) பிரகாசிக்கத் தவறிய பட்லர் இன்றைய போட்டியில் 47 பந்துகளில் (7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள்) 73 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்குப் பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் (7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ்) 52 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட லியாம் லிவிங்ஸ்டன் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் லொக்கி பேர்கசன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அதிரடி ஆரம்ப வீரர்களான டெவன் கொன்வே (3), ஃபின் அலன் (16) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க நியூஸிலாந்து 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், அணித் தலைவர் கேன் வில்லியம்சன், இலங்கையை நையப்புடைத்த க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

கேன் வில்லிம்சன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் ஜேம்ஸ் நீஷான்   வந்த வேகத்தில் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனை அடுத்து கடைசி 4 ஓவர்களில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு மேலும் 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த க்லென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 4 பவண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் நியூஸிலாந்தின் வெற்றிக்கனவு கலைந்துபோனது.

கடைசி ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தெவைப்பட அவ்வணியினால் 5 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

மிச்செல் சென்ட்னர் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சாம் கரன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எஞ்சிய போட்டிகள்

அயர்லாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியும் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும்.

https://www.virakesari.lk/article/138891

large.120768236_t20pt01-11.JPG.230deec8e

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியிடம் தோற்பது உறுதியாகிவிட்டது.

பொதுவாக வங்கதேச அணி எதிர்பாராவிதமாக எதிரணியினரை தோற்கடிக்கும் அணியாக கடந்த காலங்களில் திகழ்ந்துள்ளது ஆனால இந்த போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானம் இன்று மழை வருவதற்கான அறிகுறி உள்ளதாக கூறப்படுகிறது.

மழை வராவிடில் மேக மூட்டம், காற்றில் பந்தினை திருப்பும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக காணப்படும், இதனால் இந்தியா, நாணய சுழற்சியில் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இரண்டாவதாக பந்து வீசும் அணி மைதான ஈரப்பதனால் பாதிப்படையலாம் என கருதுகிறேன் ஆனால் அவுஸ்ரேலிய மைதானங்கள் இதுவரை மைதான ஈரப்பதன் பெரிதாக தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை, ஆனால் மழை வரும் என எதிர்பார்ப்பதால் காற்றில் அதிக ஈரப்பதன் காணப்படலாம்.

வங்கதேச அணிக்கு முஸ்டபிர் பெரிய தாக்கத்தினை பந்து வீச்சு தரப்பில் ஏற்படுத்துவார் என எதிர்வு கூறுகிறார்கள், இவர் இந்திய அணியில் பந்து வீசும் சமி போன்றே பந்தின் கட்டினை பயன்படுத்தி பந்து வீசுபவர், மட்டையாளர்கள் இறுதி வரை பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிக்க முடியாமல் திணறுவார்கள்.

பொதுவாக இந்த வகை பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட மைதானங்களாகவே அவுஸ்ரேலிய மைதானங்கள் உள்ளது ஆனால் ஆட்டங்களில் உடனடி ஆடுகளம் பயன்படுத்துவதாலும் காலனிலையும் காற்றில் பந்தினை திருப்பும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது ( புவெனேஸ்குமார, அஸ்ரிடிப் சிங்).

முதல் 6 ஓவர்களும் இவர்கள் அதிகமான பாதிப்பினை ஏற்படுத்துவார்கள், ஆட்ட நடுப்பகுதியில் சமியின் பந்து வீச்சு என அனைத்து வகையிலும் இந்தியாவின் கை ஓங்கியே இருக்கும்.

மைதானம் சராசரியாக 170 ஓட்டங்கள் கொண்ட மைதானம், வங்கதேச அணியின் ஆரம்பதுடுப்பாட்டக்காரர்கள் முதல் 6 ஓவர்களில் விக்கெட்டினை இழக்காமல் தாக்குபிடித்தால் மிக சிறிய அளவில் வெற்றி வாய்ய்ப்பு இருக்கலாம் ஆனால் வங்கதேச அணி முழுமையாக ஆரம்ப ஆட்டக்காரர்களில் தங்கியிருப்பதால், இந்தியா முதல் 6 ஓவர்களிலேயே வங்கதேச ஆரம்ப ஆட்டக்காரர்களை வீழ்த்திவிடுவார்கள்.

வங்க அணி மிகப்பெரிய தோல்வியினை தவிர்க்க முடியாது என  நான் கருதுகிறேன்.

வங்க அணி இந்திய அணிக்கு சவாலாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன், ஆனால் நடைமுறையில் அது நடக்காது என்பதுதான் நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்காவிட்டால் என்னவாகும்?

14 நிமிடங்களுக்கு முன்னர்
 

வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 பிரிவில் இன்று இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

ஏற்கெனவே இந்தியாவும் வங்கதேசமும் இரு போட்டிகளில் வென்று தலா 4 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. எந்த அணி வெற்றிபெற்றாலும் அந்த அணி அரையிறுதியை எட்டுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும்.

"இந்தத் தொடரில் குறைந்தது நான்கு போட்டிகளில் வெல்ல வேண்டும்" என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலியுறுத்தியிருக்கிறார். அதனால் எந்த வகையிலும் வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பது தெரிகிறது.

இந்தியாவின் தொடக்க இணை குழப்பம்

இந்திய அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றியும் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியில் தோல்வியும் அடைந்திருக்கிறது.

மூன்று போட்டிகளிலும் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஆனால் எந்தப் போட்டியிலும் இந்த இணை நீடித்து நின்று ஆடவில்லை. குறிப்பாக கே.எல். ராகுல் எந்தப் போட்டியிலும் அதிக ரன்களைக் குவிக்கவில்லை. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கே.எல். ராகுல் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. பேட்டி ஒன்றில் டிராவிட் இதை வெளிப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்க ஆட்டத்தில் வெளிப்பட்ட பலவீனம்

பாகிஸ்தானையும், நெதர்லாந்தையும் தோற்கடித்த களிப்பில் இருந்த இந்தியாவை தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர்கள் பலவீனப்படுத்தினார்கள். லுங்கி நிகிடின் பந்துவீச்சில் பெர்த்தின் ஆடுகளத்தில் இந்திய ஆட்டக்காரர்கள் தடுமாறினார்கள்.

 

இந்தியா

பட மூலாதாரம்,PAUL KANE

சூர்யகுமார் யாதவ் தவிர வேறு யாரும் அதிகளவு ரன்களைக் குவிக்க முடியவில்லை. அணியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடாவும் சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்தார். வரும் போட்டியில் இந்தப் பலவீனத்தை இந்திய அணி சரி செய்ய வேண்டியிருக்கும்.

இந்தியா - வங்கதேசம் யார் பலசாலி?

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துடன் டி20 போட்டியில் மோதுகிறது. இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வென்றிருப்பது, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் ஃபார்மில் இருப்பதும் இந்தியாவுக்கு பலமாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் வங்கதேசம் வென்ற இரு போட்டிகளிலும் அந்த அணியின் சார்பில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தொடக்க வேகப் பந்துவீச்சாளர் தக்சின் அகமது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

ஆனால் அவை இரண்டும் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் 3 ஓவர்களில் 46 ரன்களைக் கொடுத்தார்.

மைதானம் எப்படி?

போட்டி நடக்கும் அடிலெய்ட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக 170 ரன்கள் வரை எடுக்கக்கூடிய மைதானம் இது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஒரேயொரு டி20 போட்டியில் ஆடியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டு நடந்த இந்தப் போட்டியில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.

வங்கதேசமும் இங்கு ஆடிய ஒரேயொரு போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.

மழை பெய்தால் என்னவாகும்?

இந்தப் போட்டி நடைபெறும் அடிலெய்டில் இன்று காலை முதல் மழை இல்லை என்றாலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு வேளை மழை பெய்தால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைக்கும். வங்கதேசத்துக்கும் 1 புள்ளி கிடைக்கும். அடுத்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் வங்கதேசம் உள்ளிட்ட பிற அணிகளின் போட்டிகளின் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

நடப்பு டி20 தொடரில் இந்தியா முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும்.

 

இந்தியா

பட மூலாதாரம்,PAUL KANE

வங்கதேசத்துக்கு என்ன வாய்ப்பு?

வங்கதேசம் 3 போட்டிகளில் ஆடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ் 1.533. இன்னும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டியிருக்கிறது. இந்தியாவை விட ரன்ரேட்டில் மிகவும் குறைவாக இருப்பதால் அந்த அணிக்கான வாய்ப்புக் குறைவுதான்.

எனினும் இந்தியா தோல்வியைச் சந்தித்து, ரன்ரேட்டும் குறைந்தால் வங்கதேசத்துக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்த அணி குறைந்தது இன்னும் ஒரு போட்டியில் வென்றாக வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வென்றால் சந்தேகமே இல்லாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிட்டதா?

மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் 2.772. இன்னும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஆட வேண்டியிருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கான வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகிவிடும்.

வங்கதேசமோ, ஜிம்பாப்வேயோ இரு போட்டிகளிலும் வென்று ஏழு, எட்டு புள்ளிகளைப் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிடும்.

ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?

மூன்று போட்டிகளை ஆடியுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ். 0.050. நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் ஜிம்பாப்வே மோத வேண்டியிருக்கிறது. இருபோட்டிகளிலும் வெற்றிபெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும். இந்தியாவுடன் தோற்றுவிட்டால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் ஏற்கெனவே அரையிறுதிக்கான தகுதியை இழந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/sport-63481489

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: விராட் கோலி அடித்த 'டெண்டுல்கர் சிக்ஸர்' - மீண்டும் இந்தியாவைத் தாங்கிப் பிடித்த தருணம்

2 நவம்பர் 2022, 09:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோலி

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.

கடந்த மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடாத கே.எல். ராகுல் மீது கடுமையான விமர்சனம் இருந்த நிலையில், வங்கதேசத்துடனான போட்டியில் அவர் அந்த விமர்சனத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக ஆடினார். எனினும் மறு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தபோது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த சூர்யகுமார் யாதவும் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகிப் அலஹசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு முறை ஏமாற்றினார். 5 ரன்களில் அவர் வெளியேறினார்.

இதன் பிறகு வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தாங்கிப் பிடித்த விராட் கோலி

ஆனால் மறுபுறம் விராட் கோலி பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அடிலெய்ட் மைதானத்தில் சராசரியாக எடுக்க வேண்டிய 170 ரன்கள் என்ற இலக்கை இதனால்தான் இந்தியாவால் தாண்ட முடிந்தது.

தொடக்கத்தில் சாதாரண வேகத்துடன் ஆட்டத்தைத் தொடங்கிய அவர் கடைசி ஓவர்கள் நெருங்கும்போது வழக்கமாகக் கையாளும் அதிரடி உத்தியைக் காட்டினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் அவர் 64 ரன்களை எடுத்திருந்தார்.

 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

'டெண்டுல்கர் சிக்சர்'

ஆட்டத்தில் 19-ஆவது ஓவரில் கடைசிப் பந்தை ஹசன் மஹ்முத் வீசியபோது, முன்னோக்கி இறங்கி வந்து ஸ்ட்ரெய்ட் திரையில் பந்தை சிக்கசருக்கு விரட்டினார் கோலி. இது 1998-ஆம் ஆண்டு சார்ஜா போட்டியில் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக இருந்தது என் வர்ணனையாளர்கள் வியந்தனர்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 184-ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

நடப்பு டி20 தொடரில் இந்தியா ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும்.

 

இந்தியா

பட மூலாதாரம்,PAUL KANE

வங்கதேசத்துக்கு என்ன வாய்ப்பு?

வங்கதேசம் 3 போட்டிகளில் ஆடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ் 1.533. இன்னும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டியிருக்கிறது. இந்தியாவை விட ரன்ரேட்டில் மிகவும் குறைவாக இருப்பதால் அந்த அணிக்கான வாய்ப்புக் குறைவுதான்.

எனினும் இந்தியா தோல்வியைச் சந்தித்து, ரன்ரேட்டும் குறைந்தால் வங்கதேசத்துக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்த அணி குறைந்தது இன்னும் ஒரு போட்டியில் வென்றாக வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வென்றால் சந்தேகமே இல்லாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிட்டதா?

மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் 2.772. இன்னும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஆட வேண்டியிருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கான வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகிவிடும்.

ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?

நான்கு போட்டிகளை ஆடியுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியாவுடன் மட்டுமே ஜிம்பாப்வே மோத வேண்டியிருக்கிறது. அந்த அணிக்கு இனி அரையிறுதி வாய்ப்பு இல்லை.

நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் ஏற்கெனவே அரையிறுதிக்கான தகுதியை இழந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/sport-63483273

  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வேயை நொக்-வுட் செய்த இனிய நினைவுகளுடன் நெதர்லாந்து நாடு திரும்பவுள்ளது

By DIGITAL DESK 5

02 NOV, 2022 | 03:02 PM
image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (02)  நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்றில் ஸிம்பாப்வேயை 5 விக்கெட்களால் வீழ்த்திய நெதர்லாந்து, இனிய நினைவுகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து விடைபெறவுள்ளது.

சுப்பர் 12 சுற்றில் தனது கடைசிக்கு முந்தைய போட்டியில் நெதர்லாந்து ஈட்டிய அபார வெற்றியால் அரை இறுதியில் நுழையும் ஸிம்பாப்வேயின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் பிரதான அல்லது சுப்பர் சுற்றில் நெதர்லாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

நெதர்லாந்து தனது கடைசிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது.

 

Max O'Dowd and Tom Cooper shared a crucial partnership, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

போல் வென் மீக்கெரென், பாஸ் டி லீட், லோகன் வென் பீக், ப்றெண்டன் க்லோவர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், மெக்ஸ் ஓ'டவுட், டொம் கூப்பர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறப்பான பங்களிப்பு என்பன நெதர்லாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை கலங்கச் செய்த ஸிம்பாப்வேயை இன்றைய போட்டியில் வெற்றிகொண்டதன் மூலம் நெதர்லாந்து அணியினர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

அப் போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 118 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Tom Cooper got his highest score of the 2022 T20 World Cup against Zimbabwe, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

4ஆவது ஓவரில் 8 ஓட்டங்கள் பெற்றிருந்த ஸ்டெபான் மைபேர்கின் விக்கெட்டை  நெதர்லாந்து   இழந்ததால் ஸிம்பாப்வே பெரு உற்சாகம் அடைந்தது.

ஆனால், மெக்ஸ் ஓ'டவுட், டொம் கூப்பர் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து  நெதர்லாந்துக்கு வெற்றியை அண்மிக்க உதவினர்.

மெக்ஸ் ஓ'டவுட் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களையும் டொம் கூப்பர் 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 32 ஒட்டங்களையும் பெற்றனர்.

கொலின் அக்கர்மன் (1), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

எனினும் பாஸ் டி லீட் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களைப் பெற்று நெதர்லாநதின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் ரிச்சர்ட் இங்கராவா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Richard Ngarava and Max O'Dowd in action, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய ஸிம்பாப்வே 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஸிம்பாப்வே துடுப்பாட்டத்தில் இருவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறாதது அவ்வணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நெதர்லாந்தின் துல்லிய பந்துவீச்சில் திணறிய ஸிம்பாப்வே பவர் ப்ளே நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் பவ்ர் ப்ளேயில் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

Paul van Meekeren got the first Dutch wicket, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

அனுபவசாலிகளான சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிய ஸிம்பாப்வேயினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது.

Sikandar Raza top-scored with a 24-ball 40, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

துடுப்பாட்டத்தில் சிக்கந்தர் ராஸா 24 பந்துகளில் தலா 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களையும் சோன் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

Wessley Madhevere had his middle stump clattered, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

பந்துவீச்சில் போல் வென் மீக்கெரென் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லோகன் வென் பீக் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றெண்டன் க்லோவர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Max O'Dowd drives through covers, Netherlands vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Group 2, Adelaide, November 2, 2022

ஆட்டநாயகன்: மெக்ஸ் ஓ'டவுட்

https://www.virakesari.lk/article/138953

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை: "இந்தியா மேட்ச் எப்பவும் இப்படித்தான்" - அலுத்துக் கொண்ட வங்கதேச கேப்டன்

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அடிலெய்டில் இந்தியா, வங்கதேசம் இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றியைக் கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று வங்கதேச அணி சேஸிங்கில் ஏழு ஓவர்களை ஆடி முடித்திருந்த நேரம் அது. திடீரென மழை பொழியவே, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் மத்தியில் சோக ரேகைகள் பரவின. காரணம் 'டக்வொர்த் லூயில் விதி'.

ஆம். டி20 போட்டிகளை பொறுத்தவரையில் மழை குறுக்கிட்டாலும் ஐந்து ஓவர்களை கடந்துவிட்டால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி முடிவு தெரிந்துவிடும்.

இந்தியா 185 ரன்கள் என ஓரளவு வலுவான இலக்கையே நிர்ணயித்திருந்தது. ஆனால் வங்கதேச அணி ஏழு ஓவர்கள் முடிவில் 66ரன்கள் எடுத்திருந்தது. அதுவும் விக்கெட் இழப்பின்றி!

அப்போதுதான் அந்த தகவல் வெளிவந்தது.

 

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேசம் ஆறு ஓவர்களில் டிஎல்எஸ் இலக்கை விட 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் மழை ஏற்கெனவே சில அணிகளின் வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், மழை நிற்கவில்லை எனில் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படக்கூடும் எனும் நிலை. இதனால் தான் இந்திய அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மறுமுனையில் வெற்றியை நெருங்கி விட்டதாக வங்கதேச முகாம் கருதியது.

"மழை விடக்கூடாது, நிச்சயம் ஆட்டத்தை பாதிக்க வேண்டும்," என்றே வங்கதேச ரசிகர்கள் கருதியிருக்கக் கூடும்.

கணக்கை மாற்றிய இயற்கை

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தில் தோற்றால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு என்ன ஆகும்?

அடுத்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வென்றாலும், வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளிடையேயான போட்டி அரை இறுதி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுமா என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பலர் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இயற்கையின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. மழை நின்றது. 16 ஓவர்களில் வங்கதேசம் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் இந்திய ரசிகர்கள் குஷியாயினர்.

ஆனால், வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் லித்தன் தாஸ் ஆகியோர் ஆட்ட நடுவர் எராஸ்மஸ் உடன் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்ததை திரையில் பார்க்க முடிந்தது.

மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது அஷ்வினை பந்துவீச அழைத்தார் ரோகித். எட்டாவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் லித்தன் தாஸ். இரண்டாவது பந்தில் ரன் அவுட் மூலம் முதல் விக்கெட்டை பறித்தது இந்தியா.

கே.எல்.ராகுல் வீசிய ஒரு அபாரமான த்ரோவால் அஷ்வின் பக்கமிருந்த ஸ்டம்புகள் தகர்ந்தன.

உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இ்நதிய அணி வங்கதேச விக்கெட்டை வீழ்த்தியபோது உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்

வங்கதேசம் தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் இந்திய ரசிகர்கள் மத்தியை போட்டியையே வென்றுவிட்டது போல உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இதற்கு காரணம் ஆட்டமிழந்தது லித்தன் தாஸ் என்பதுதான்.

ஆம். பவர்பிளேவில் லித்தன் தாஸ் ஆடிய ஆட்டம் அப்படி. இந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தார்.

ஷமி பந்தில் ஒரு சிக்ஸர் வைத்து 21 பந்துகளில் அரைசதம் விளாசி இந்திய அணி ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தவர் அவர்தான்.

வங்கதேசம் 68 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அபாரமாக ஆடிவந்த லித்தன் தாஸ் ரன்அவுட் ஆகி வெளியேறும்போது 27 பந்துகளில் அறுபது ரன்கள் அடித்திருந்தார். அதில் ஏழு பந்துகள் பௌண்டரியை முத்தமிட்டன. மூன்று பந்துகள் சிக்சருக்கு பறந்தன.

லித்தன் அவுட் ஆனதும் இந்திய அணி வீரர்களின் உடல்மொழியில் தெம்பு வந்தது.

அஷ்வின் ஓவருக்கு பிறகு ஹர்டிக் பாண்ட்யா வீச வந்தார். அவரது ஓவரில் ஒரு சிக்ஸர் வைத்தார் ஷாண்டோ. ஆனால் அதற்கு அடுத்த ஓவரை வீசிய ஷமியின் ஓவரில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேச அணி.

 

அஷ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

11வது ஓவரை அஷ்வின் வீசினர். அடுத்தடுத்து இரு பந்துகளை பௌண்டரிக்கு ஓடவிட்டார் ஷகிப் அல் ஹசன். 11 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை நெருங்கியது வங்கதேசம்.

அப்போது அர்ஷிதீப்பை அழைத்தார் ரோகித். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

அஃபிப் ஹொசைன் மற்றும் ஷகிப் அல் ஹசன் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப். ஆட்டத்தின் திருப்புமுனை ஓவராக அந்த ஓவர் அமைந்தது. வெறும் இரண்டு ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப்.

அதற்கடுத்த ஓவரை பாண்டியா வீசினார். தன் பங்குக்கு அவரும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, அவசர கதியில் ஆடிய வங்கதேசம் வெற்றி வாய்ப்பை வீணடித்துக் கொண்டிருந்து.

கடைசி நேர போராட்டம்

 

உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும் அதற்கடுத்து 14 மற்றும் 15வது ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு போராடியது.

கடைசி ஓவர் அதாவது ஆட்டத்தின் பதினாறாவது ஓவரை அர்ஷ்தீப் வீசினர். அந்த ஓவரில் வங்கதேசம் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை.

முதல் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார் நூருல் ஹசன். கடைசி பந்தை சிக்சருக்கு விளாசினால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் எனும் நிலை. ஆனால் அவரால் லாங் ஆஃபில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

டக்வொர்த் முறைப்படி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் முதல் ஏழு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம், அடுத்த 9 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பித்தக்கது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் 184 ரன்கள் எடுத்தது.

கே.எல்.ராகுல் இந்த உலகக்கோப்பையின் முதல் மூன்று போட்டிகளில் சொதப்பினாலும் இந்த போட்டியில் அரைசதம் விளாசினார். விராட் கோலி இந்தத்தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார். 44 பந்துகளில் அவர் 64 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். வஙகேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசும்போது, இந்தியாவுடன் விளையாடும்போது எப்போதும் இதே கதைதான். வெற்றிக்கோட்டுக்கு மிக அருகே வந்துவிடுவோம் ஆனால் கோட்டை தொடமாட்டோம். இந்த போட்டியை இரண்டு அணிகளும் உற்சாகமாக எதிர்கொண்டனர் என்கிறார்.

இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்தியா ஆறு புள்ளிகளோடு குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-63488726

large.1859688928_t20pt02-11.JPG.3036b1c3

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: வங்கதேசம், பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்'

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றாலும் அவர் மீது வங்கதேச ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் கோபம் கொண்டிருக்கின்றனர்.

வங்கதேசத்துடனான போட்டியின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் உத்தியைப் பயன்படுத்தியதாகவும் இது ஐசிசி விதிகளுக்கு விரோதமானது என்றும் வங்கதேச ரசிகர்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவரில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இடுப்புக்கு மேலே ஃபுல் டாசாக வந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தை விராட் கோலி சிக்சருக்கு அனுப்பியதால் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. அது நோபால் இல்லை என அப்போதே பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்த நிலையில், அதே விவாதம் வங்கதேச போட்டிக்குப் பிறகு ட்விட்டரில் ட்ரென்டானது.

தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய வீரர்களுக்கு திகிலூட்டிய வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் ஃபேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கோலி இதைச் செய்ததாக வங்கதேச ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

 

என்ன நடந்தது?

இந்தியா நிர்ணயித்த 185 ரன்கள் இலக்கை நோக்கி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸும், ஷான்டோவும் விரைந்து கொண்டிருந்தபோது 7-ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார் அப்போது லிட்டன் தாஸ் அடித்த பந்து அக்சர் படேலை நோக்கிச் சென்றது.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாயின்டில் நின்று கொண்டிருந்த விராட் கோலியை தாண்டி பந்து சென்றபோது, பந்தைப் பிடிக்காமலேயே பந்தைப் பிடித்தது போலவும், ஸ்டம்பை நோக்கி எறிவது போலவும் சைகை செய்தார். அந்த நேரத்தில் அம்பயர்களாக இருந்த கிறிஸ் பிரவுன் மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகிய இருவரும் இதைக் கவனிக்கவில்லை.

இப்படிச் செய்வது ஐசிசி விதிமுறகளுக்கு முரணானது என வங்கதேச ரசிகர்கள் வாதிடுகிறார்கள். ஐசிசியின் 41.5 -ஆவது விதியை வங்கதேச ரசிகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

வங்கதேச விக்கெட் கீப்பரின் குற்றச்சாட்டு

கோலி போலியாக ஃபீல்டிங் செய்த புகாரை ஆட்டம் முடிந்த பிறகு வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் எழுப்பினார். செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆடுகளம் ஈரமாக இருந்ததைப் பார்த்தோம். ஃபேக் த்ரோவும் நடந்தது. அதற்கு 5 ரன்கள் தண்டனையாகக் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்குச் சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் கெடுவாய்ப்பாக அது நடக்கவில்லை" என்று அவர் கூறினார்.

எதேச்சையாக 5 ரன்கள் வித்தியாசத்தில்தான் இந்திய அணி வங்கதேச அணியை வெற்றிகொண்டது.

வங்கதேச போட்டியிலும் 'நோ பால்' சர்ச்சை

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடியபோதும் நோபால் சர்ச்சை வெடித்தது. இந்தியா பேட்டிங்கில் 16-ஆவது ஓவரை ஹசன் முகமது வீசினார். அந்தப் பந்து பந்து பவுன்சராகச் சென்றது. அந்தப் பந்தை தட்டி விட்ட விராட் கோலி, ஸ்கொயர் லெக் அம்பயரிடம் நோபால் என்று சைகை செய்தார்.

இதைத் தொடர்ந்து அவரும் நோபால் என அறிவித்தார். அந்த நேரத்தில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனும் விராட் கோலியும் களத்தில் மோதினர். ஆனால் இருவரும் கட்டிப் பிடித்து, சிரித்து சமாதானம் ஆகினர். ஒரு நிமிடத்துக்கும் மேலாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.உண்மையில் ரன் எடுக்கும்போதே எதேச்சையாக இருவரும் மோதிக் கொண்டதாகக் தெரிகிறது.

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் சமூக ஊடகங்களில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நோபால் குறித்தும் கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.

வங்கதேச ரசிகர்களுடன் இணைந்த பாகிஸ்தான் ரசிகர்கள்

பாகிஸ்தானுடனான போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெறுவதற்குக்க காரணமாக இருந்ததாக் கருதப்படும் நோபால் சர்ச்சை கடுமையாகப் பேசப்பட்ட நிலையில், தற்போதைய சர்ச்சையிலும் பாகிஸ்தான் ரசிகர்கள் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் போட்டியில் நடந்ததை நினைவுபடுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் போட்டியின்போது ட்ரென்டான 'சீட்டிங்' என்ற ஹேஷ்டேக்கும் இப்போது மீண்டும் ட்ரென்டாகி இருக்கிறது. அதாவது இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டது என்ற பொருளில் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈரமான ஆடுகளம் பற்றிய சர்ச்சை

வங்கதேசத்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு மழையே முக்கியமான காரணம் என்றும், ஈரமான ஆடுகளத்தில் வங்கதேச அணி ஆட வேண்டியிருந்தது என்றும் சமூக ஊடகங்களில் வங்கதேச ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

போட்டியின்போதே மழை நின்றபிறகு ஈரமான ஆடுகளத்தைக் காட்டி வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் இந்தச் சர்ச்சைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் செய்யப்படவில்லை.

போட்டியில் என்ன நடந்தது?

விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் வங்கதேசத்துடன் இந்தியா வெற்றி பெற உதவியது. மழை குறுக்கிட்ட ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்த இந்திய அணிக்கு எதிராக 16 ஓவரில் 151 ரன்கள் எடுக்க வேண்டும் என வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தப் போட்டியில் விராட்கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்தப் போட்டியின் 19-ஆவது ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சர் 1998-ஆம் ஆண்டு டெண்டுல்கர் சார்ஜாவில் அடித்த சிக்சருடன் ஒப்பிடப்பட்டது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.

கடந்த மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடாத கே.எல். ராகுல் மீது கடுமையான விமர்சனம் இருந்த நிலையில், வங்கதேசத்துடனான போட்டியில் அவர் அந்த விமர்சனத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக ஆடினார். எனினும் மறு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தபோது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த சூர்யகுமார் யாதவும் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகிப் அலஹசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு முறை ஏமாற்றினார். 5 ரன்களில் அவர் வெளியேறினார்.

இதன் பிறகு வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தாங்கிப் பிடித்த விராட் கோலி

ஆனால் மறுபுறம் விராட் கோலி பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அடிலெய்ட் மைதானத்தில் சராசரியாக எடுக்க வேண்டிய 170 ரன்கள் என்ற இலக்கை இதனால்தான் இந்தியாவால் தாண்ட முடிந்தது.

தொடக்கத்தில் சாதாரண வேகத்துடன் ஆட்டத்தைத் தொடங்கிய அவர் கடைசி ஓவர்கள் நெருங்கும்போது வழக்கமாகக் கையாளும் அதிரடி உத்தியைக் காட்டினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் அவர் 64 ரன்களை எடுத்திருந்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்

186 ரன்கள் இலக்குடன் ஆடத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி அளித்தார். 21 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த லிட்டன் தாஸ், தொடர்ந்து அதிடியாக ஆடினார்.

வங்கதேச அணி 7 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தபோது மழைகுறுக்கிட்டது. அந்த நேரத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியாவை விட 17 ரன்கள் அதிகம் எடுத்திருந்தனர். அன்த நேரத்தில் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்களும் நஜ்முஸ் ஹுசைன் ஷான்டோ 16 பந்துகளில் 7 ரன்களும் எடுத்திருந்தனர்.

குறைக்கப்பட்ட ஓவர்கள்

மழை நீடித்திருந்ததால் ஆட்டம் 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு வங்கதேச அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனதால் வங்கதேசத்தின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்தன.

 

மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அந்த அணி வீரர்கள் 14 ரன்களை எடுத்தனர். இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விராட் கோலி

நெருக்கடியான நேரத்தில் அரைச் சதம் அடித்து, விக்கெட்டை காப்பாற்றிய விராட் கோலிக்கு மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. "இதை நான் எதனுடனும் ஒப்பிட விரும்பவில்லை. கடந்தபோனது போனதுதான். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடக்கிறது என்றது கேள்விப்பட்டதில் இருந்தே, நல்ல கிரிக்கெட் ஷாட்கள்தான் முக்கியம் என்று உறுதியாக இருந்தேன்" என்றார் கோலி.

https://www.bbc.com/tamil/sport-63495083

  • கருத்துக்கள உறவுகள்

மஹேலவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

By DIGITAL DESK 2

03 NOV, 2022 | 02:38 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 16ஆவது ஓட்டத்தைப் பூர்த்தி செய்தபோது இந்த சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.

இதன் மூலம் இதற்கு முன்னர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமாகவிருந்த 1016 ஓட்டங்கள் என்ற சாதனையை கோஹ்லி முறியடித்தார்.

0311_virak_kohli_record_in_t20_most_runs

மஹேல ஜயவர்தன 2007இலிருந்து 2014வரை விளையாடிய 5 இருபது 20 உலகக் கிண்ண அத்தியாங்களில் 31 இன்னிங்ஸ்களில் 1016 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால், விராத் கோஹ்லி 2012இலிருந்து 2022வரை 5 இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயங்களில் 23 இன்னிங்ஸ்களில் 1065 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 4 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய கோஹ்லி முறையே 82 ஆ.இ., 62 ஆ.இ., 12, 64 ஆ.இ. ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக 220 ஓட்டங்களைக் குவித்து 220.00 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/139031

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
37 நிமிடங்களுக்கு முன்னர்
 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்தியா தோல்வியடையும்பட்சத்தில் 6 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ரன் விகிதத்தை அதிகரித்துக் கொண்டு அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

 

பாகிஸ்தான் அணியின் நிலை என்ன?

பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.

அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குச் சென்றுவிட்டதா?

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம்.

வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு?

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியில் என்ன நடந்தது?

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. தடுமாறிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது ஓவரில் நோர்ஜே வீசிய பந்தில் ஒரு சிக்சரை அடித்த முகமது ஹாரிஸ் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தடுமாறிவரும் பாகி்ஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும் லுங்கி நிங்கிடி பந்துவீச்சில் வெறும் 6 ரன்களுக்கு ரபாடாவிடம் பிடி கொடுத்தார்.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த ஓவரிலேயே நோர்ஜேவின் பந்துவீச்சில் ஷான் மசூத் இரண்டே ரன்களுக்கு பவுமாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

7-ஆவது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களுக்கு எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு களத்தில் இருந்த முகமது நவாஸும், இப்திஹார் அகமதுவும் பொறுப்பாக ஆடத் தொடங்கினர்.

ரன் ரேட் குறைவாக இருந்தாலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 28 ரன்களை எடுத்திருந்த நவாஸ், ஷம்சியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இஃப்திகாரும் சதாப்கானும் இணைந்து பாகிஸ்தானின் ஸ்கோரை வேகமாக உயர்த்தத் தொடங்கினர்.

பாகிஸ்தானுக்கு கிடைத்த 'நோ பால்' சிக்சர்

19-ஆவது ஓவரில் நோர்ஜே வீசிய முழு நீளப் பந்து சதாப்பின் இடுப்பு உயரத்துக்கு மேல் வந்தது. அதை மிட் ஆன் திசையில் சிக்சராக மாற்றினார் சதாப். அது நோபால் என அறிவிக்கப்பட்டதால் ஃப்ரீ ஹிட்டாக கிடைத்த அடுத்த பந்திலும் சதாப் சிக்சர் அடித்தார். இதன் மூலம் 20 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்தார்.

எனினும் அந்த ஓவரின் 5-ஆவது பந்தில் எல்லைக் கோட்டைத் தாண்டும் வகையில் அவர் அடித்த பந்தை ஸ்டப்ஸ் அற்புதமாகக் குதித்துப் பிடித்தார். அது பாகிஸ்தானின் ரன்குவிப்புக்கு தடையாக அமைந்தது.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. டி20 கிரிக்கெட்டில் இது ஓரளவுக்கு வெற்றிபெறும் எண்ணிக்கை கருதப்படுகிறது.

குயின்டன் டி காக் விட்ட கேட்ச்

பாகிஸ்தான் அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், இப்திகார் அகமதுவை ரன் அவுட் செய்யும் ஒரு வாய்ப்பைத் தவற விட்டார். அப்போது அவர் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த விக்கெட்டை அப்போதே எடுத்திருந்தால் பாகிஸ்தான் அணி இன்னும் குறைவான ரன்களையே எடுக்க முடிந்திருக்கும்.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தான் அணியைப் போலவே தென்னாப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே தடுமாறத் தொடங்கியது. ஷாகின் ஷா அப்ரிடியின் முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

மூன்றாவது ஓவரில் ரூசோப் ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரிஸ் ராஃப் அதிரடியாக ஆடி ஓரளவு ரன்களைக் குவித்தார். ஆனால் எட்டாவது ஓவரில் சதாப் வீசிய பந்தில் பவுமாவும், மார்க்ரமும் ஆட்டமிழந்தனர். இதனால் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது.

மழையால் தடைபட்ட ஆட்டம்

9ஆவது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 69 ரன்களை எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஸ்டப்ஸ், கிளாஸன் ஆகியோர் தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழை நின்ற பிறகு ஆட்டம் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 9 ஓவர்கள் முடிந்த நிலையில் மேலும் 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

ஆனால் 11-ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 14 ஓவரில் 108 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

https://www.bbc.com/tamil/sport-63500487

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

By VISHNU

03 NOV, 2022 | 06:50 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (03) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி  (DLS) 33 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

001.gif

இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் குழு 2இல் 3ஆம் இடத்திற்கு முன்னேறி அரை இறுதிக்கான தனது வாய்ப்பை இப்போதைக்கு சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

002.gif

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போகும்.

பாகிஸ்தானின் இன்றைய வெற்றியில் இப்திகார் அஹ்மத் குவித்த அரைச் சதம், ஷதாப் கானின் சகலதுறை ஆட்டம், ஷஹீன் ஷா அப்றிடியின் சிறப்பான பந்துவீச்சு என்பன முக்கிய பங்காற்றின.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 9 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 84 ஓட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தென் ஆபிரிக்கா 15 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போட்டி தொடர்ந்த போது தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி 14 ஓவர்களில் 142 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஓட்டங்களை வேகமாக குவி;க்க முயற்சித்த தென் ஆபிரிக்கா, 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று இந்த வருட இருபது 20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக தோல்வி அடைந்தது.

இதற்கு அமைய இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகல அணிகளும் குறைந்தது ஒரு தோல்வியைத் தழுவியுள்ளன.

தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் டெம்பா பவுமா (36 ஓட்டங்கள்), ஏய்டன் மார்க்ராம் (20), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (18), ஹெய்ன்ரிச் க்ளாசென் (15) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கான தனது வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்பதை அறிந்திருந்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

முன்வரிசை வீரர்கள் மொஹமத் ரிஸ்வான் (4), மொஹமத் ஹரிஸ் (28), அணித் தலைவர் பாபர் அஸாம் (6), ஷான் மசூத் (2) ஆகிய நால்வரும் ஆட்டமிழக்க 7ஆவது ஓவரில் பாகிஸ்தானின் எண்ணிக்கை 43 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், மத்திய வரிசை வீரர்கள் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

இப்திகார் அஹ்மத், மொஹமத் நவாஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நவாஸ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து இப்திகார் அஹ்மத், ஷதாப் கான் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 82 பெறுமதிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ஷதாப் கான் 22 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் 35 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.

எனினும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த பாகிஸ்தான் கடைசி 2 ஓவர்களில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்தது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 14 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் அணித் தலைவர் பவுமா 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/139063

large.1262753061_t20pt03-11.JPG.dc38920b

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் பாபர் ஆஸம் - 'நானும் ரிஸ்வானும் மோசம்'

35 நிமிடங்களுக்கு முன்னர்
 

ரிஸ்வான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பை போட்டியில் தானும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானும் சரியாக ஆடவில்லை என்பதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரில் பாபர் ஆஸம் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு ஆதரவாகவும் நம்பிக்கை தரும் வகையும் ஏராளமானோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

பேட்டிங்கில் இந்தியாவின் விராட் கோலியுடன் அவ்வப்போது ஒப்பிடப்படும் பாபர் ஆஸம், விராட் கோலி முன்பிருந்தது போலவே ஒரு மோசமான கட்டத்தை கடந்து வருகிறார் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் பலமான தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் குரூப்-2 பிரிவில் இருந்து எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது குழப்பமாகி இருக்கிறது.

 

இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. 20 ஓவர்களில் இருந்து 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டபோது, குறிப்பிட்ட இலக்கை தென்னாப்பிரிக்க அணியால் எட்ட முடியவில்லை.

எனினும் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டது பற்றியோ, அல்லது ஈரமான மைதானத்தால் பந்துகள் பவுண்டரிக்குச் செல்லாதது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா புவுமா எந்தக் குறையும் சொல்லவில்லை. அதேபோல் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது குறித்து கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

 

ரிஸ்வான் பாபர் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் "பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது ஒரு விழிப்புக்கான அழைப்பு" என்று கூறினார் பவுமா.

"பந்துவீச்சிலும் ஃபீல்டிலும் சிறப்பாகச் செயல்படவில்லை" என்று தங்களுடைய குறையை பவுமா ஒப்புக் கொண்டார்.

பாபர் ஆஸம் கவலை

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரலாறு நேற்றைய போட்டி வரைக்கும் தொடர்ந்திருக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்களுடைய நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுடனான போட்டி முடிந்து பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், "கடந்த இரு போட்டிகளிலும் 100 சதவிகித ஆட்டத்தை அணியினர் வெளிப்படுத்தியுள்ளனர்" என்று கூறினார்.

"நானும் ரிஸ்வானும் சரியாக ஆடவில்லை" என்று அவர் ஒப்புக் கொண்டார்.

பாபர் ஆஸம், ரிஸ்வான் எப்படி ஆடியிருக்கிறார்கள்?

பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களும் நம்பிக்கை நட்சத்திரங்களுமான ரிஸ்வானும் பாபர் ஆஸமும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடவில்லை.

தென்னாப்பிரிக்காவுடனா போட்டியில் பாகிஸ்தான் வென்ற போதும் பாபர் ஆஸம் 15 பந்துகளில் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ரிஸ்வான் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். ஷதாப்கான், இப்திகார் அகமது உள்ளிட்டோரின் ஆட்டமே பாகிஸ்தான் அணி 185 ரன்களைக் குவிக்க உதவியது.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு முன்பு நெதர்லாந்துடனான போட்டியிலும் பாபர் ஆஸம் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகிவிட்டார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் ஓரளவு நின்று ஆடி 49 ரன்களைக் குவித்தார்.

ஜிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியிலும் பாபர் ஆஸம் 4 ரன்களைத்தான் எடுத்தார். ரிஸ்வான் 14 ரன்களை எடுத்தார்.

இந்தியாவுடனான போட்டியில் பாபர் ஆஸம் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் அந்தப் போட்டியில் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். இப்திகார் அகமது ஷான மசூத் ஆகிய இருவரின் ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி அந்தப் போட்டியில் 159 ரன்களை எடுக்க முடிந்தது.

ஒட்டுமொத்தமாக பாபர் ஆஸம் இந்தத் தொடரில் முறையே 0,4,4,6 ரன்களையும், ரிஸ்வான் 4, 14, 49, 4 ரன்களையும் எடுத்திருக்கிறார்கள்.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் அந்த அணி ஓரளவு ரன்களைக் குவித்து வருகிறது.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாபர் ஆஸம் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு ஆதரவாகவும், நம்பிக்கை வைத்தும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிடுகின்றனர்.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?

பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.

அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

 

பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குச் சென்றுவிட்டதா?

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம்.

வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு?

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/sport-63509331

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.