Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் 

img_1952

பாதிரியார் டொனால் கனகரட்ணத்துடன் அவரது தாயாரும் சகோதரிகளும்
 

கார்த்திகை 14 ஆம் நாள் இடம்பெற்ற கத்தோலிக்கப் பாதிரியார் சிங்கராயரின் கைது, மறுநாள் 15 ஆம் திகதி இடம்பெற்ற பாதிரியார் சின்னராசாவின் கைது, கார்த்திகை 18 ஆம் நாள் இடம்பெற்ற மெதொடிஸ்த்த திருச்சபையின் மதகுரு ஜயதிலகராஜாவின் கைது, மார்கழி 15 ஆம் திகதி இடம்பெற்ற அங்கிலிக்கன் திருச்சபையின் பாதிரியார் டொனால்ட் கனகரட்ணத்தின் கைது மற்றும் கார்த்திகை 20 ஆம் திகதி இடம்பெற்ற நித்தியானந்தன் தம்பதிகளின் கைது ஆகியன தமிழ் மக்களிடையே கொந்தளிப்பான மனோநிலையினை உருவாக்கின. உணர்வெழுச்சியால் ஆட்கொள்ளப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களாக இந்த உணர்ச்சி மாறியது.  தமிழர் விடுதலைப் போராட்டத்தில் இக்களம் தனித்தன்மையானதும், தன்னெழுச்சியான நிகழ்வாகவும் கருதப்படுகிறது. 

ஆயிரக்கணக்கான பாதிரியார்கள், கன்னியாஸ்த்திரிகள், சமயப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தினர் தேவாலயங்களினுள்ளும், அவற்றின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரச நிர்வாக அலுவலகங்களின் முன்னால் மறியல்ப் போராட்டங்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆகியவற்றிலும் அவர்கள் ஈடுபலாயினர். "முறிந்த பனை" ஆவணம் இந்தப் போராட்டங்கள் பற்றி விரிவான தகவல்களை வழங்குகிறது.  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் வாரப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ இனை மேற்கோள் காட்டி முறிந்த பனை இந்த போராட்டங்கள் குறித்த பதிவினை பேசுகிறது. கொழும்பில் ராணுவ அறிக்கைகளை மட்டுமே தனது செய்தியாக வெளியிட்டுவந்த லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளுக்கு யாழ்ப்பாணத்தில் எழுந்து வந்த மக்களின் உணர்வலைகள் குறித்து அறிவேதும் இருக்கவில்லை.

அவர்களின் கவலையெல்லாம் சிங்களவர்களின் நலன்களைப் பற்றி பேசுவது மட்டும்தான். இதனையே அவர்களின் சிறிலங்காவின் நலன்கள் என்கிற போர்வையில் செய்துவந்தார்கள். 

1982 ஆம் ஆண்டு கார்த்திகை 20 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ தனது ஆசிரியர் தலையங்கத்தினை, "பேனாவையும் கத்தியையும் கொண்டு நடத்தும் ஊடக சிறுமையினை நிறுத்து" என்று என்று விழித்திருந்தது.  அரச ஆதரவுடன் தமிழ் மக்களுக்கெதிரான வன்மப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்த கொழும்புப் பத்திரிக்கைகளின் இனவாத நிலைப்பாட்டினை இக்கட்டுரை கடுமையாகக் கண்டித்திருந்தது. மதகுருக்களைக் கைதுசெய்ய அரச உயர்பீடம் எடுத்த தீர்மானங்கள் அனைத்துமே அவர்கள் அனைவரையும் "பயங்கரவாதிகளாகக்" காட்டுவதன் மூலம் கொழும்புப் பத்திரிக்கைகளால் நியாயப்படுத்தப்பட்டு வந்தது. மதகுருக்களின் கைதுகள் குறித்துச் செய்தி வெளியிட்ட கொழும்புப் பத்திரிக்கைகள், "பயங்கரவாத மதகுருக்கள் கைது" என்று தலைப்பிட்டே செய்தி வெளியிட்டன. சட்ட அதிகாரத்தினையும் நீதித்துறையினை ஒருங்கே தமது கைகளுக்குள் எடுத்துக்கொண்ட கொழும்பின அரச தனியார் இனவாதப் பத்திரிக்கைகள் கைதுசெய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் தான் என்று தம் பங்கிற்கு தீர்ப்பிட்டிருந்தன.

பாதிரியார் கனகரட்ணம் சில நாட்களுக்குப் பின்னர் விடுதலையான செய்தியை லேக் ஹவுஸின் சிங்களப் பத்திரிக்கைகள் முற்றாக இருட்டடிப்புச் செய்ய, ஆங்கிலப் பத்திரிக்கையான டெயிலிநியூஸும், தமிழ்ப் பத்திரிக்கையான தினகரனும் அச்செய்தியை வேண்டுமென்றே பத்திரிக்கையின் உட்புறத்தில் சிறு பெட்டிச் செய்தியாக வெளியிட்டு உண்மை வெளிவருவதைத் தடுத்திருந்தன. பிலிமத்தலாவை பாதிரியார் பயிற்சிக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி வந்த கனகரட்ணம் அடிகளார் 1977 ஆம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவிலான திட்டமிட்ட வன்முறைகளினைக்   கண்டிக்கும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு சுதந்திர நாளன்று தனது கல்லூரியில் சிங்கள தேசத்தின் கொடியினை ஏற்றுவதை நிராகரித்திருந்தார். இதனையடுத்து சில சிங்கள மாணவர்கள் இதுகுறித்து முறைப்பாடு செய்த நிலையில் கனகரட்ணம் தனது பதவியைத் துரந்ததுடன், வவுனியாவின் எல்லைப்புறக் கிராமமொன்றில் தமிழ் சிங்கள இனங்களிடையே அமைதியை உருவாக்கும் நோக்கில் "ஒற்றுமை இல்லம்" எனும் அமைப்பினை ஆரம்பித்து நடத்திவந்தார். ஆனால், அவர் தமிழ்ப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார் எனும் பொய்யான குற்றச்சாட்டில் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டார். அப்பகுதியில் இருந்த சிங்களவர்கள் சிலருக்கும் பாதிரியாருக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பினால் அவர் குற்றமற்றவர் என்பதை உணர்ந்துகொண்ட அரசாங்கம் சில நாட்களின் பின்னர் அவரை விடுதலை செய்திருந்தது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 613
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்களும் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்க நினைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும்
 

பாதிரியார்கள் மற்றும் நித்தியானந்தனின் கைதுகளையடுத்து யாழ்க்குடாநாட்டில் இடம்பெற்றுவந்த போராட்டங்கள், சத்யாக்கிரகங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆகியவை மொத்த தமிழ் மக்களையும் அரசுக்கெதிரான போராட்டக் களத்திற்கு இழுத்துச் சென்றிருந்தன.

இப்போராட்டங்கள் மக்களை உத்வேகப்படுத்தியிருந்ததுடன் அரசுக்கெதிரான போராட்ட மனோநிலைக்கும் உயரே தள்ளியிருந்தன. போராட்டங்களை அடக்குவதற்கு ஜெயவர்த்தனவின் அரசு மேற்கொண்ட குறுகிய பார்வை கொண்ட ராணுவ பொலீஸ் அடக்குமுறைகள் மக்களை மேலும் மேலும் போராட்டங்கள் நோக்கி இழுத்துவந்ததுடன், ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் வேண்டா வெறுப்பாக போராட்டத்தில் இறங்க வைத்திருந்தது. போராட்டங்களின் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்கில் ஒருங்கிணைந்த வகையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கார்த்திகை 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தாம் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடக் கூடும் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளத் தீர்மானித்தது. முன்னணியின் இந்தச் சந்தர்ப்பவாதத்தினைச் சுட்டிக் காட்டியிருந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை அவர்களின் பங்களிப்பை, "மக்கள் போராட்டத்திற்கு கும்பலோடு கும்பலாக கோவிந்தா பாட வந்தவர்கள்" என்று கேலி செய்திருந்தது.

தமிழர் தாயகத்தில் புதிதாக எழுந்துவந்த தமிழ் மக்களின் எழுச்சியை ஜெயவர்த்தனவும் அவரது பாதுகாப்புத் தரப்புக்களும் கணிக்கத் தவறியிருந்தன .

Image

புனித அந்தோணியார் ஆலயம்இரம்பைக் குளம் - வவுனியா

 

மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்குப் பழிவாங்கலாக அரசு மேற்கொண்டுவந்த அடக்குமுறைகள் மக்கள் போராட்டங்களுக்கு உத்வேகத்தை அளித்ததோடு மக்களின் பங்களிப்பினையும் அதிகரிக்கச் செய்தன. மார்கழி 15 ஆம் திகதி வவுனியா இரம்பைக்குளத்தில் அமைந்திருந்த புனித அந்தோணியார் ஆலயத்தினுள் நுழைந்த கலகம் அடக்கும் பொலீஸார் அப்பாவிகள் மீது தடிகளாலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர்.

மார்கழி 18 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை வவுனியா இரம்பைக் குளத்தில் தமிழ்மக்கள் மீது பொலீஸார் நடத்திய தாக்குதலை பின்வருமாறு விவரித்திருந்தது.

"மார்கழி 15 ஆம் திகதி ஆலய முன்றலில் தமிழர், முஸ்லீம்கள், பெளத்தர்கள் என்று வேறுபாடின்றிச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்பிள்ளைகள், பெண்கள், சிறுவர்கள், ஆண்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பாடசாலை மாணவிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட மெளன நடைப்பயணப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மாணவிகள் தமது வாய்களை மூடி துணைகளைக் கட்டி, உடைகளில் கறுப்புத் துணித்துண்டுகளை அணிந்துகொண்டு வீதியால் வந்துகொண்டிருந்தனர். மாணவிகள் வீதிக்கு வந்தபோது அவர்கள் மீது பாய்ந்த பொலீஸ் காடையர்கள் அவர்களின் தலை முடியினைப் பிடித்து இழுத்துக் கீழே வீழ்த்தியதுடன் அவர்கள் மீது சரமாரியாக கால்களால் உதைக்கத் தொடங்கியதுடன் தடிகளால் தாக்குதலும் நடத்தினர். தமது மெளன நடைப்பயணப் போராட்டத்தை பொலீஸார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து வீதியிலேயே அமர்ந்துவிட்ட மாணவிகள் மீது பொலீஸார் லத்திகளால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். மேலும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடமான அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற பொலீஸார், அங்கு பொலீஸாரின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மீது குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டனர்" என்று எழுதியது.

பொலீஸாரின் அடக்குமுறை மூலம் தமிழ் மக்களின் போராட்டங்களை அடக்கிவிடலாம் என்று அரசு எண்ணியது. ஆனால், அரசு எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. போராட்டம் மக்கள்மயப்படுத்தப்பட்டதோடு மக்களின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல்ப் போனதுடன் மக்களை ஒன்றிணையவும் உதவியது. வயது, பால், சாதி, சமூக அந்தஸ்த்து என்று எந்தவித வேறுபாடும் இன்றி மக்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், தம்மை அடக்கி ஒடுக்குவதற்கு அரசால் பாவிக்கப்பட்டு வந்த கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிரான தமது கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தனர். போராட்டங்களின் முன்னால் நின்று செயற்பட்ட பல்கலைக் கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் தமது மொத்த எதிர்ப்பினையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகக் குவித்து ஆக்ரோஷமாகப் போராடி வந்தனர்.

1983 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை யாழ்ப்பாணத்தில் நடத்தினர். யாழ்ப்பாணத்தின் தெருக்களில் பேரணியாகச் சென்ற மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொடுமையான இச்சட்டத்தைப் பாவித்து அரசு கைதுசெய்து தடுத்து வைத்திருந்த மாணவர்த் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக சேவகர்கள் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் கோஷமிட்டபடி சென்றனர். இப்பேரணியின் பின்னர் நான்கு நாள் சத்தியாக்கிரக நிக்ழவினையும் அவர்கள் மாசி 1ம் ஆம் திகதியிலிருந்து  மேற்கொண்டனர். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இறுதிநாளான மாசி 4 அன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களின் அரச சேவைகள் அனைத்தும் முற்றான ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சத்தியாக்கிரக போராட்டத்தின் இறுதிநாளான மாசி 4 என்பது இலங்கையின் சுதந்திர நாள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

seelan.jpg

தலைவருடன் சீலன்

மிகுந்த அரசியல் அவதானியாகத் திகழ்ந்த பிரபாகரன், வடக்குக் கிழக்கில் நடைபெற்று வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களையும் அவற்றுக்கெதிரான அரசின் அடக்குமுறைகளையும் நன்கு கூர்ந்து அவதானித்து வந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடமிருந்து தமிழ் மக்களைத் தலைமை தாங்கும் பொறுப்பினை தான் எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஜெயவர்த்தனவின் அரசே உருவாக்கிவருவதை அவர் நன்கு உணர்ந்துகொண்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மக்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகும்போது அதனால் ஏற்படும் அரசியல் வெற்றிடத்தை உமா மகேஸ்வரன் அபகரித்துக்கொள்வதைத் தடுப்பதும் அவருக்குத் தேவையாக இருந்தது. ஆகவே, ஏற்பட்டுவந்த அரசியல் மாற்றங்கள் குறித்து தனது நெருங்கிய சகாக்களான பேபி சுப்பிரமணியத்துடனும், சீலனுடனும் பிரபாகரன் தீவிர ஆலோசனைகளை நடத்தினார். சீலன் தனது முழங்கால் காயத்திலிருந்து தேறிவந்துகொண்டிருந்தார். மேலும், தாயகத்தில் ஏற்பட்டுவந்த அரசியல்ச் சூழ்நிலைகள் குறித்து தனது வழிகாட்டியான நெடுமாறனுடனும் பிரபாகரன் பேசினார். நெடுமாறனின் ஆசியோடும், சீலனின் துணையுடனும் 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி அதிகாலை தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பினார் பிரபாகரன். அவர் நாடுதிரும்பிய முதல் நாள் மாலையே அவரின் வருகையினை அறிவிப்பதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தின் அதிகாரியான .கே.ஆர். விஜேவர்த்தன புலிகளால் கொல்லப்பட்டார். 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் தாயகம் திரும்பலும் அரசியல் வெற்றிடத்தினை நிரப்பலும்

பிரபாகரன் தமிழ்நாட்டிற்குச் சென்று சரியாக ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி, காலை புலரும் முன் வல்வெட்டித்துறையில் தரையிறங்கினார்.

1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி, அதாவது யாழ் நூலகம் எரிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது அவர் மிகுந்த வருத்தமும், கோபமும் கொண்டிருந்தார். அவர் மீது இராணுவத்தினரும், பொலீஸாரும் கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தனர். அவரது மறைவிடங்கள் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு சல்லடை போடப்பட்டன. அவரிடமிருந்த பணமும் அற்றுப்போயிருந்தது. அவரால் நம்பப்பட்ட பல நண்பர்கள் அவரை விட்டுச் சென்றிருந்தனர். தன்னையும், தனது போராட்ட அமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள டெலோ அமைப்புடன் சேர்ந்து, ஒரு பகுதியாக இயங்கவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். 

தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த 19 மாதங்களில் அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதும், பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் புலிகளியக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதில் வெற்றி பெற்றிருந்தார். தனது இயக்கத்தைப் பலப்படுத்தி தனித்து இயங்கும் நிலைக்கு அவர் உயர்த்தியிருந்தார்.

ஜெயவர்த்தன அரசின் அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில் தோற்றுவித்திருந்த உணர்வெழுச்சிப் போராட்டங்கள் தனது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜெயவர்த்தனவிடம் முற்றாகச் சரணடைந்திருந்த நிலையில் மக்களால் அவர்கள் கைவிடப்படுவதன் மூலம் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஒன்றும் உருவாகிவருவதையும் அவர் உணர்ந்துகொண்டார்.

main-qimg-277e093be74ba9e31c65d47c76b88ab4

பேபி சுப்பிரமணியம்

இவ்விரு விடயங்கள் குறித்தும் அவர் பேபி சுப்பிரமணியத்துடனும் நெடுமாறனுடனும் ஆலோசனைகளை நடத்தினார்.

"ஒரு ஆயுதப் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது, ஜெயவர்த்தனவுக்கே நன்றிகள்" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக நெடுமாறன் நினைவுகூர்திருந்தார். "நாம் செய்யவேண்டியதெல்லாம் மக்கள் உருவாக்கித் தந்திருக்கும் இந்த உந்துசக்தியை மேலும் தீவிரமாக்குவதுதான். இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், இந்த உணர்வெழுச்சி அடங்கிப் போய்விடும்" என்று பிரபாகரன் விவாதித்திருக்கிறார்.

சீலனின் முழங்கால் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து, அவரையும் தன்னுடம் தாயகத்திற்கு அழைத்து வந்த பிரபாகரன் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டச் சூழ்நிலையினை போராட்டத்தின் இன்னொரு படியான ஆயுத மோதலுக்கு முன்கொண்டுசெல்லத் தீர்மானித்தார். தனது சிறுபராயம் தொட்டு எண்ணிவந்த ஆயுத ரீதியிலான தாயக விடுதலைப் போராட்டத்தினை முழுமூச்சுடன் ஆரம்பிக்க முடிவெடுத்தார். எதிரி மீது திருப்பியடிக்க, பலமாகத் திருப்பியடிக்க அவர் முடிவெடுத்தார். 

ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினையிருந்தது. அதுதான் தமிழ்நாட்டில் அவருக்கு இன்னமும் இருந்த நீதிமன்றப் பிணை. தான் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் தப்பிவந்தது தெரியவருமிடத்து தனக்குப் பிணைநின்ற நெடுமாறனுக்கு சங்கடத்தையும் அசெளகரியங்களையும் அது ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சினார். நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்த நாளிலிருந்து அவர் நெடுமாறனின் மதுரை வீட்டிலேயே தங்கியிருந்தார்.

"நான் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வருமா?" என்று நெடுமாறனிடம் வினவினார் பிரபாகரன்.

"என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். உங்களுக்கும் உங்களின் போராட்டத்திற்கும் நண்மையானதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் நெடுமாறன்.

பிரபாகரன் வல்வெட்டித்துறையில் வந்திறங்கிய நாள்வரை, சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலை விடுத்து பெருமளவில் அமைதியாகவிருந்த புலிகளின் படை அன்று மாலையே பொலீஸாரையும், இராணுவத்தையும் கலங்கவைக்கும் தாக்குதல் ஒன்றினை நடத்தியது.

large.1471652702_Hon.VPwithMr.PazhaNedumaranAiya.jpg.010a51096e4892dad039093ec9c11ca7.jpg

நெடுமாறனுடன் தலைவர் - 1980 களில்

அன்று இரவு 8:15 மணிக்கு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் பரிசோதகர் .கே. ஆர். விஜேவர்த்தன சிகரெட்டுக்களை வாங்கிவர "சிறி கபே" எனும் தேநீர்ச் சாலைக்கு தனது ஜீப்பில் சென்றிருந்தார். அவரது குடும்பம் விடுமுறை நாட்களில் அவரைப் பார்க்க அங்கு வந்திருந்தது. ஆகவே, குடும்பத்தினருடன் பொழுதைக் களிக்க சில நண்பர்களையும் அன்று அவர் இரவு விருந்திற்கு அழைத்திருந்தார். அவர் சிகரெட்டுக்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது ஜீப்வண்டியில் ஏறும்போது அதுவரை அவரைத் தொடர்ந்துவந்த நான்கு புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். தனது அதிகாரி வாகனத்தில் ஏறுவதற்கு வாகனத்தின் கதவினைத் திறந்துவிட வெளியே வந்த சாரதி வீரசிங்கவும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு பொலீஸாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பொலீஸ் வாகனத்தில் தப்பிச்சென்றது புலிகளின் அணி. 31 சிறி 5627 எனும் இலக்கமுடைய அந்தப் பொலீஸ் ஜீப் வண்டி மறுநாள் புத்தூர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விஜேவர்த்தனவின் மீதான தாக்குதலை திட்டமிட்டவர் பிரபாகரனே. இத்தாக்குதல் பற்றி மறுநாள் வெளிவந்த ஈழநாடு பத்திரிக்கை விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தது. மேலும் தொடர்ந்து வந்த நாட்களில் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள், மாத்தையாவைத் தேடிப் பிடிப்பதற்கு உருவாக்கப்பட்டிருந்த ராணுவப் புலநாய்வுத்துறையின் குழு வல்வெட்டித்துறைக்குச் சென்றமை போன்ற தகவல்களையும் அது வெளியிட்டு வந்தது. பருத்தித்துறை பொலீஸ் அதிகாரியின் மரணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் நிம்மதியினை ஏற்படுத்தியிருந்ததுடன், மக்களும் அதனை வரவேற்றிருந்தனர். 

மக்களைப் பொறுத்தவரை பொலீஸ் அதிகாரி விஜேவர்த்தன ஒரு கொடுமையான பயங்கரவாதியாகத் திகழ்ந்தார். பொதுமக்களை அச்சுருத்தவும், துன்புறுத்தவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகத் தனக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான அதிகாரங்களை அவர் விருப்பத்துடன் பாவித்து வந்தார். ஆகவே, அவ்வாறான கொடுமையான அதிகாரி ஒருவர் களத்திலிருந்து அகற்றப்பட்டது தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிம்மதியளிக்கும் விடயமாகவும், புலிகளால் தமக்கு செய்யப்பட்ட உதவியாகவும்  தெரிந்தது. தனது ஆயுதப் போராட்டத்திற்கு புதிய குணவியல்பினைக் கொடுக்கும் தாக்குதலாக விஜேவர்த்தனவின் தாக்குதலை பிரபாகரன் திட்டமிட்டார். "மக்களைப் பாதுகாக்கும் காவலர்கள்" என்பதே அந்த விசேடமான குணவியல்பு !

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல்ப்பெருச்சாளி ஆளாளசுந்தரமும் அவருக்குப் புலிகள் வழங்கிய எச்சரிக்கையும்

நான்கு நாட்களின் பின்னர், மாசி 22 ஆம் திகதி பிரபாகரன் தனது விடுதலைப் போராட்டத்திற்கு இன்னொரு குணவியல்பையும் கொடுத்தார்.  மக்களை ஊழல்களிலிருந்தும் ஏனைய சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் காப்பவர்கள் என்பதே அது.

பிரபாகரனின் சமூகச் சுத்திகரிப்பிற்கு முதலாவதாகத் தண்டிக்கப்பட்டவர்  கோப்பாய்த் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் . எம். ஆளாளசுந்தரம் ஆகும். அவர் யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றி வந்தார். 

ஆளாளசுந்தரம் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்ததோடு வழக்கறிஞராகவும் பட்டம்பெற்றிருந்தவர். சிறிமாவின் அரசாங்கத்திடமிருந்து பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்ட சிறிமாவின் தமிழ் ஆதரவாளர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தவர். சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்தவரும் யாழ்நகர மேயருமான அல்பிரெட் துரையப்பாமீது கடுமையான விமர்சனங்களை ஆளாளசுந்தரம் முன்வைத்து வந்தார். பொதுக்கூட்டங்களில் பேசிய அவர், துரையப்பாவை "கூப்பன் கள்ளன்" என்று வெளிப்படையாக கேலிசெய்திருந்தார். 

ஆனால், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் ஜெயவர்த்தனவுடனான தமது நெருக்கத்தினைப் பாவித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தான் முன்னர் விமர்சித்து வந்த அதே ஊழல்களை தானும் செய்யலாயிற்று. ஆளாளசுந்தரம் யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கூட்டுறவுச் சங்கத்தில் பல ஊழல்களும், முறைகேடுகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும்  நடைபெறத் தொடங்கியதாக பலமான முறைப்பாடுகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மனோகரன், ஆளாளசுந்தரத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டியதுடன், அவரை உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். தனது குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளும், அதனோடு இணைந்த ஆவணங்களும் மூன்றாம் தரப்பு ஒன்றினால் ஆராயப்படவேண்டும் என்றும் கோரியிருந்தார். 

பின்னர் ஒரு நாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளும், ஏனைய ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்த அறை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உள்ளிருந்த அனைத்து ஆவணங்களும் தீயில் சாம்பலாகிப் போயின. ஆளாளசுந்தரமே தனது முறைகேடுகளை மறைக்க ஆவணங்களை எரித்தார் என்று மக்கள் நம்பினர். ஆகவே, ஆளாளசுந்தரத்திற்கும், அவர் உறுப்பினராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் ஒரு பாடத்தைப் புகட்ட எண்ணினார் பிரபாகரன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தாம் விரும்பியபடி நடந்துகொள்ள முடியாதென்றும், மக்களின் நலனே அவர்களின் மிக முக்கியமான குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஒருநாள் இரவு கல்வியங்காட்டில் அமைந்திருந்த தனது வீட்டுக் கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, "யாரது?" என்று ஆளாளசுந்தரம் கேட்டார். "ஆளாள் அண்ணையைப் பாக்க வேணும்" என்று கதவின் வெளியில் இருந்து பதில் வந்தது. ஆளாளசுந்தரம் கதவைத் திறக்கவும், கணேஷ் என்று அழைக்கப்பட்ட புலிகளின் போராளியொருவர் அவரருகில் சென்று வலது காலில் துப்பாக்கியால் சுட்டார்.

"அண்ணை, இதை ஒரு எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்ளுங்கோ. இனிமேலும் உங்கட ஊழல் வேலைகளைச் செய்யாதேயுங்கோ" என்று அவரை எச்சரித்துவிட்டு தான் வந்த சைக்கிளில் திரும்பிச் சென்றுவிட்டார் கணேஷ்.

மறுநாள் யாழ்ப்பாணத்தில் அனைவரும் இச்சம்பவம் குறித்து பேசிக்கொண்டார்கள். "ஆளாளை புலியள் வெருட்டியிருக்கிறாங்கள்" என்று மக்கள் இச்சம்பவத்தை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்கள்.

ஆளாளசுந்தரத்தின்மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் வியப்படைந்திருந்த தமிழ் மக்களுக்கு நான்கு முக்கிய விடயங்களைப் பிரபாகரன் கூறியிருந்தார்.

முதலாவது, புலிகள் மீண்டும் செயலில் இறங்கிவிட்டார்கள் என்பது.

இரண்டாவது, புலிகள் உங்களைப் பாதுகாப்பார்கள் என்பது.

மூன்றாவது, ஊழல்களில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பது.

நான்காவது, தமிழீழ விடுதலைப் புலிகள் இனிமேல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் எடுபிடியல்ல என்பதே அவை நான்கும்.

மறுநாள், தமது கையொப்பத்துடன் துண்டுப் பிரசுரம் ஒன்றினை புலிகள் வெளியிட்டனர். சமூகத்திற்கெதிரான செயற்பாடுகள் கடுமையான குற்றங்களாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், ஆளாளசுந்தரத்தினால் செய்யப்பட்டுவந்த சமூகத்திற்கெதிரான முறைகேடுகள் பற்றியும் விளக்கப்பட்டிருந்தன. ஆகவே, அவருக்கு எச்சரிக்கையொன்றினை விடுக்கும் முகமாக அவரது வலது காலில் தாம் துப்பாக்கியால் சுட்டதாக புலிகள் அத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவித்திருந்தனர். 

ஆளாளாசுந்தரத்திற்கு புலிகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிர்பார்த்த பலனைத் தந்திருந்தது. யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மொத்த நிர்வாகக் குழுவினரும் இதனைத் தொடர்ந்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். தமக்கெதிராகப் புலிகள் செயற்படமாட்டார்கள் என்று எண்ணியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைவர்களுக்கு நடுக்கம் பிடித்துக்கொண்டது.

தமது கட்சி உறுப்பினரான ஆளாளசுந்தரத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்துரையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு

 

அரச பயங்கரவாதினாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உணர்வுகள் பொங்கியெழுந்துகொண்டிருந்தவேளை, மாசி 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் அவ்வுணர்ச்சியைக் கட்டுக்கடங்காத கோபமாக மாற்றிவிட்டிருந்தது. பிரபாகரன் மதுரையை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிக்கொண்டிருந்த வேளை, நீர்வேலி வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா நீதிமன்றில் வரலாற்றைச் சுட்டிக் காட்டி ஆற்றிய வாதத் தொகுப்பில் குறிப்பிட்ட சில விடயங்கள் இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவந்த ஒவ்வொரு தமிழனின் உணர்வினையும் ஆளமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது.

Nadesan Satyendra

வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா

உயர் நீதிமன்ற நீதிபதி சி.எல்.டி. மூனெமலி தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில் பிரதிவாதிகளாக தங்கத்துரை, குட்டிமணி, தேவன், சிவபாலன் மாஸ்ட்டர், நடேசநாதன் மற்றும் சிறி சபாராட்ணம் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால், சிறி சபாரட்ணம் தலைமறைவாகியிருந்தபடியினால், அவரின்றியே வழக்கு நடைபெற்றது.

வழக்கில் பேசிய சத்தியேந்திரா, "குற்றஞ்சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் தொடர்பாக நான் ஒரு விடயத்தை இந்த நீதிமன்றில் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். எந்தவொரு தனி மனிதனுக்கும் இருக்கும் விலை மதிக்கமுடியாத பொருளான தனது உயிரை, தனது மக்களின் விடுதலைக்காக கொடுக்க முன்வந்திருக்கும் எனது சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முன்னால் நான்  தாழ்ந்து அடிபணிகிறேன்" என்று உணர்வு மேலிடக் கூறினார்.

மாசி 24 ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்த்தண்டனையினை வழங்குமுன்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார்.  தங்கத்துரை தமிழில் உணர்வூர்வமான பேச்சொன்றினை வழங்க அதனை ஆரம்பத்திலிருந்தே நடேசன் சத்தியேந்திரா மொழிபெயர்த்துவந்தார். தங்கத்துரையின் பேச்சு நீண்டு செல்கையில் சத்தியேந்திரா அழத்தொடங்கினார். உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட சத்தியேந்திரா, தங்கத்துரையின் பேச்சினை தன்னால் தொடர்ந்தும் மொழிபெயர்க்க முடியாது என்று நீதிபதியினைப் பார்த்துக் கூறினார்.

சத்தியேந்திராவுக்கு இவ்வழக்கில் உதவிபுரிந்த சிவசிதம்பரம் தங்கத்துரையின் மீதிப் பேச்சினைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

See the source image

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நடராஜா தங்கத்துரை - கொழும்பு, மாசி 24, 1983

தமிழர்களின் வரலாறு பற்றியும், சுதந்திரத்தின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக அரசுகளால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்குச் சட்டபூர்வமாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை மிதவாதத் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கத் தவறியமையும், அரச பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்ததையும் விளக்கப்படுத்திய தங்கத்துரை தனது பேச்சினை பின்வரும் வகையில் நிறைவு செய்தார்.

"நாம் வன்முறையினைக் காதலிப்பவர்கள் அல்ல. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எமது மக்களை விடுவிக்க போராடும் ஒரு இயக்கத்தின் போராளிகள் நாங்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்று ஓயாமல் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான மனிதர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல விழைகிறோம்".

"நூற்றுக்கணக்கான தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பயங்கரவாதம் குறித்து நீங்கள் அச்சம் கொள்ளவில்லையா? இனவாதிகள் தமது வெறுப்பினை இந்த நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல பரப்பியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உங்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது உங்களுக்கு பயங்கரவாதம் குறித்த பயம் ஏற்படவில்லையா? எமது கலாசாரப் பொக்கிஷங்களை நீங்கள் எரியூட்டியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? 1977 ஆம் ஆண்டில் மட்டும் 400 தமிழர்கள் பலியிடப்பட்டு, அவர்களின் இரத்தத்தில் வானம் செந்நிறமாகியபோது பயங்கரவாதத்தினை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?"

"ஆக, தமிழ் ஈழத்தில் ஒரு சில பொலீஸ் காடையர்கள் கொல்லப்பட்டபோதும் சில லட்சம் ரூபாய்கள் வங்கிகளில் கொள்ளையிடப்பட்டபோதும் மட்டும்தான் பயங்கரவாதம் உங்களின் முகத்தில் அறைந்ததோ?"

"ஆனால் என்னுடைய வேண்டுதல் என்னவென்றால், அதிகார வெறிபிடித்த சிங்கள அரசியல்வாதிகள் விதைத்த வினையினை அப்பாவிச் சிங்கள மக்கள் அறுவடை செய்யக் கூடாது என்பதுதான். நாம் அனுபவிக்கும் இன்னல்கள் எல்லாம் ஆண்டவன் எங்களைப் புனிதப்படுத்த அருளிய வரங்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதி வெற்றி எமதே!"

இறுதி வெற்றி எமதே என்று தங்கத்துரை எதிர்வுகூறியபடி தனது பேச்சினை முடித்தபோது நானும் நீதிமன்றத்தில் இருந்தேன். அப்பாவிச் சிங்கள மக்கள் அதிகார வெறி பிடித்த சிங்கள அரசியல்வாதிகளின் செயலினால் பழிவாங்கப்பட்டு விடக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று அவர் கூறியபோது என்னால் அழுகையினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைத்துத் தமிழர்களும் அழுதார்கள். தங்கத்துரை எம் அனைவரையும் உணர்வுகளால் இணைத்துவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களையும் அவர் உணர்வால் ஒன்றிணைத்தார். தமிழர்கள் உணர்வுரீதியாக ஒருங்கிணைவதை அவர் அன்று உறுதிப்படுத்திக்கொண்டார்.

தங்கத்துரையின் உரையின் இறுதிப்பகுதியை, குறிப்பாக அவரது உரையின் இறுதி வாக்கியத்தை மேற்கோள் காட்டித் தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதுடன், அந்தப் பேச்சு தமிழ் மக்கள் மேல் எவ்வகையான தாக்கத்தினைச் செலுத்தப்போகின்றது என்பது பற்றிய ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன. ஆனால், ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கத்துரையின் பேச்சினை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்ததுடன், தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்ப் பயங்கரவாதத்தினை எவ்வாறு முடிவிற்குக் கொண்டுவரப்போகின்றது என்பது பற்றி எதிர்வுகூறியிருந்தன. சிங்களப் பத்திரிக்கைகளோ ஒரு படி மேலே சென்று, தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆரவாரத்துடன் வரவேற்றது மட்டுமன்றி, தமிழ்ப் பயங்கரவாதிகளைக் கைதுசெய்த பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வானளவப் புகழ்ந்து தள்ளியிருந்தன. தங்கத்துரையின் அன்றைய பேச்சு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதும், இலங்கை அரசியலின் எதிர்காலம் மீதும் செலுத்தவிருக்கும் தாக்கத்தினை சிங்கள ஊடகவியலாளர்கள் அன்று கண்டுகொள்ளத் தவறியிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினையில் இரு தரப்புக்கள் இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறியிருந்தனர்.

ஒருபக்கச் சார்பாக செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலம் தமது தலைவர்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த குற்றங்களைத் தூண்டிவிட்டதுடன்,  அவற்றினை ஆதரித்தும் அவர்கள் எழுதி வந்தனர்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது கண்ணிவெடித் தாக்குதல்

புலிகளின் மீள் எழுச்சி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. வடக்கின் பாதுகாப்பு நிலைமையினை அது வெகுவாகப் புரட்டிப் போட்டிருந்தது. இங்கிலாந்துப் பத்திரிக்கையாளரான டேவிட் செல்போர்னுக்குச் செவ்வி வழங்கிய ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, "நாம் தற்போது உச்சத்தில் இல்லை" என்று கூறியிருந்தார்.

See the source image

டேவிட் செல்போர்ன்

"பயங்கரவாதிகளே தாக்குதலையும் நேரத்தையும் தெரிவு செய்கிறார்கள், நாம் செய்வதெல்லாம் அதற்கான எதிர்வினை மட்டும்தான்" என்று திஸ்ஸ வீரதுங்க அவரிடம் கூறினார்.

தான் பிரித்தானியச் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் கணத்தில்க் கூட பிரபாகரன் கண்ணிவெடிப் போரினைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் என்பதோ அல்லது ராணுவத்தின் நடமாட்டங்கள் முடக்கப்பட்டு அவர்கள் முகாம்களுக்குள் அடைபடவேண்டிய நிலை உருவாவதையோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. பொன்னாலைப் பாலத்தைத் தகர்த்து கடற்படை ரோந்து அணியை அழிக்க புலிகள் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியடைந்தபோதிலும், அவர்கள் கண்ணிவெடித்தாக்குதல்கள் மீதான தமது நாட்டத்தினை ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை. தமது தவறுகளில் இருந்து பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட அவர்கள், தமது உத்திகளை மேலும் மெருகேற்றிக்கொள்ள எத்தனித்தனர். கண்ணிவெடிகளை இயக்குவதற்கு ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது கடிணமானது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். காவிச்செல்வதற்குக் கடிணமானதாக இருந்த அதேவேளை, அதன் இரைச்சலும் புலிகளுக்கு சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. ஆகவே, ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக லொறிகளில் பாவிக்கப்படும் பற்றரிகளைப் பயன்படுத்தலாம் என்று புலிகள் முடிவெடுத்தனர்.

புலிகளின் இரண்டாவது கண்ணிவெடி முயற்சியும் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு, பங்குனி 4 ஆம் திகதி கிளிநொச்சி உமையாள்புரம் கோவிலின் அருகிலேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றது. சீலனே இத்தாக்குதலுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். முதலாவது தாக்குதலைப் போலவே, இத்தாக்குதலிலும் செல்லக்கிளியே கண்ணிவெடிகளை வெடிக்கவைப்பதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைப் போலல்லாது இந்தமுறை கண்ணிவெடித்தாக்குதலில் இருந்து தப்பியோடும் ராணுவத்தினர்மீது துப்பாக்கித் தாக்குதலையும் நடத்துவதென்று புலிகள் தீர்மானித்திருந்தார்கள்.

மினி பஸ்ஸில் தாக்குதல் நடைபெறப்போகும் இடத்திற்கு வந்திறங்கிய புலிகளின் அணி, வீதியில் இரு கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டு அவற்றின்மீது தாரினை ஊற்றி மறைத்துக்கொண்டது. கண்ணிவெடிகளையும் பற்றரியையும் இணைக்கும் மின்கம்பிகளும் தாரினாலும், மண்ணினாலும் உருமறைப்புச் செய்யப்பட்டன. இரு குழுக்களாகத் தம்மைப் பிரித்துக்கொண்ட புலிகளின் அணி, வீதியின் இருமருங்கிலும் நிலையெடுத்துப் பதுங்கிக்கொண்டது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்குக் காவலுக்கு நிற்கும் இராணுவ அணிக்கு உணவுப் பொருட்களைக் காவிவரும் இராணுவ ரோந்து அணியே அவர்களின் அன்றைய இலக்கு. ஆனையிறவு தடை முகாமிலிருந்தே கிளிநோச்சிப் பொலீஸ் நிலைய ராணுவத்தினருக்கு மூன்றுவேளையும் உணவு கொண்டுவரப்பட்டது. காலை வேளையில் அவ்வீதியால் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆதலால், காலையுணவைக் கொண்டுசெல்லும் ரோந்து அணியையே தாக்குவதென்று புலிகள் முடிவெடுத்தனர்.

இராணுவத்தினருக்கு உணவினை ஏற்றிச்செலூம் ட்ரக் வண்டி காலை 7 மணிக்கு ஆனையிறவு முகாமிலிருந்து கிளம்பியது. அதற்குக் காவலாக நான்கு ராணுவ வீரர்கள் சென்றனர். வீதியில் ராணுவ ட்ரக்கினைக் கண்டதும், தனது சக்காக்களை உசார்ப்படுத்தினார் சீலன். ஆனால் இந்தமுறையும் செல்லக்கிளியின் நேரம் தவறிவிட்டது. பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைக் காட்டிலும் இம்முறை கண்ணிவெடி இலக்கு அருகில் வரும்போது வெடித்திருந்தது. கண்ணிவெடி வெடித்தபோது வீதியில் உருவான கிடங்கினுள் ட்ரக் இறங்குவதற்குச் சற்று முன்னர் சாரதி ட்ரக்கினை நிறுத்திவிட்டார். ட்ரக்கிலிருந்ஃது வெளியே குதித்த ராணுவத்தினர் தாம் கொண்டுவந்த தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக எல்லாத்திசைகளிலும் சுட ஆரம்பித்தனர்.

புலிகளும் பதிலுக்கு இரு பக்கத்திலிருந்து ராணுவத்தினர் மீது தாக்கத் தொடங்கினர். இரு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் தமது ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு ஆனையிறவு நோக்கி ஓடத் தொடங்கினார்கள். சாரதியும், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஏனைய ராணுவ வீரர்களின் பின்னால் ஓடத் தொடங்கினார். வீதிக்கு வந்த புலிகள், ட்ரக் வண்டியின் பின்னால் மீள ஒருங்கிணைந்தார்கள்.

இருவர் ராணுவத்தினரின் ஆயுதங்களை எடுத்துக்கொள்ள மேலும் இருவர் ட்ரக் வண்டியின் அடியில் சென்று அதன் அமைப்பைச் சோதித்தார்கள். ராணுவத்திற்குக் கொண்டுவரப்பட்ட உணவினை உண்டுவிட்டு, குளிர்பானங்களையும் அருந்தினார்கள். அங்கிருந்து தப்பி ஓடிச்சென்ற இராணுவ வீரர்கள் ஆனையிறவு முகாமைச் சென்றடைந்து, மேலும் ராணுவ வீரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வருவதற்கு நேரம் எடுக்கலாம் என்பதை அறிந்திருந்த புலிகள், சாவகசமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாங்குளம் முகாமிலிருந்து பலாலி நோக்கி இரு ராணுவக் கவச வாகனங்கள் அவ்வீதியால் அப்போது வந்துகொண்டிருந்தன. முகாம்களுக்கிடையே ராணுவ வீரர்கள் இடம் மாறிக்கொள்ளும் வழமையான செயற்பாட்டிற்கமைய இவ்விரு கவச வாகனங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தில் சென்றவர்கள் வீதியின் நடுவே தமக்கு முன்னால் ராணுவ ட்ரக் ஒன்று நிற்பதைக் கண்டுகொண்டார்கள். கவச வாகனத்தின் சாரதி, வீதியில் நின்ற ட்ரக் வண்டிக்கு அருகில் சீருடை அணிந்த சிலர் நிற்பதையும் கண்டுகொண்டார். புலிகளும் தம்மை நோக்கி இரு கவச வாகனங்கள் வேகமாக வருவதை அவதானித்தார்கள். உடனே வீதியின் கரைக்கு பாய்ந்த புலிகள், கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2023 at 12:40, ரஞ்சித் said:

"நாம் வன்முறையினைக் காதலிப்பவர்கள் அல்ல. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எமது மக்களை விடுவிக்க போராடும் ஒரு இயக்கத்தின் போராளிகள் நாங்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்று ஓயாமல் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான மனிதர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல விழைகிறோம்".

"நூற்றுக்கணக்கான தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பயங்கரவாதம் குறித்து நீங்கள் அச்சம் கொள்ளவில்லையா? இனவாதிகள் தமது வெறுப்பினை இந்த நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல பரப்பியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உங்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது உங்களுக்கு பயங்கரவாதம் குறித்த பயம் ஏற்படவில்லையா? எமது கலாசாரப் பொக்கிஷங்களை நீங்கள் எரியூட்டியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? 1977 ஆம் ஆண்டில் மட்டும் 400 தமிழர்கள் பலியிடப்பட்டு, அவர்களின் இரத்தத்தில் வானம் செந்நிறமாகியபோது பயங்கரவாதத்தினை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?"

"ஆக, தமிழ் ஈழத்தில் ஒரு சில பொலீஸ் காடையர்கள் கொல்லப்பட்டபோதும் சில லட்சம் ரூபாய்கள் வங்கிகளில் கொள்ளையிடப்பட்டபோதும் மட்டும்தான் பயங்கரவாதம் உங்களின் முகத்தில் அறைந்ததோ?"

"ஆனால் என்னுடைய வேண்டுதல் என்னவென்றால், அதிகார வெறிபிடித்த சிங்கள அரசியல்வாதிகள் விதைத்த வினையினை அப்பாவிச் சிங்கள மக்கள் அறுவடை செய்யக் கூடாது என்பதுதான். நாம் அனுபவிக்கும் இன்னல்கள் எல்லாம் ஆண்டவன் எங்களைப் புனிதப்படுத்த அருளிய வரங்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதி வெற்றி எமதே!"

 

On 22/5/2023 at 12:40, ரஞ்சித் said:

வழக்கில் பேசிய சத்தியேந்திரா, "குற்றஞ்சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் தொடர்பாக நான் ஒரு விடயத்தை இந்த நீதிமன்றில் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். எந்தவொரு தனி மனிதனுக்கும் இருக்கும் விலை மதிக்கமுடியாத பொருளான தனது உயிரை, தனது மக்களின் விடுதலைக்காக கொடுக்க முன்வந்திருக்கும் எனது சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முன்னால் நான்  தாழ்ந்து அடிபணிகிறேன்" என்று உணர்வு மேலிடக் கூறினார்.

வரலாற்றுத் தடம் வழியே தமிழினப் (நடேசன் சத்தியேந்திரா) பற்றுடையோரையும், நாற்பது ஆண்டுகளின் முன் தங்கத்துரையவர்களால் கேட்கப்பட்ட  பயங்கரவாதம் குறித்தான வினாவுக்கான பதிலை இன்றுவரை சிங்களத்தாலோ உலகாலோ தேடவோ அல்லது மாற்றுச்சிந்தனைக்கான தேடலோ இல்லாத நிலையே தொடர்கிறது. ஆனால், சிங்களத்தால் முன்னெடுக்கப்பட்ட அதேகாட்சிகள் மாறாது தொடர்கிறது. இறுதியில் அப்பாவிச் சிங்கள மக்கள் இனவாதத்தீயில் முழ்கடிக்கப்பட்டு பட்டினியோடு போராட, தமிழினமோ நீதியற்ற உலகிடமே நீதிகேட்டுப்போராடும் நிலையிற் பணமுதலைகள் மட்டும் உறிஞ்சி ஊதிப்பெருத்துவருகிறது. தங்கத்துரையவர்கள் சுட்டியதை இன்றாவது தூசுதட்டுடியெடுத்துப்பார்த்தால் புத்திவருமா?

ரஞ்சித் அவர்களே உங்கள் உழைப்புக்கு நன்றியோடு கரம் பற்றுகிறோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவை சித்திரவதைகளுக்குப் பின்னர்  கொன்றுபோட்ட இராணுவப் புலநாய்வுத்துறை

PEARL Action on Twitter: "An inquest into the April 10 death ...
 

முதலாவது கவசவாகனச் சாரதி வாகனத்தின் தடுப்புக்களைப் பிரயோகித்தார். புலிகளின் தாக்குதலில்  அந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனம் சடுதியாக வீதியின் நடுவே நின்றதைக் கண்ட இரண்டாவது கவச வாகனத்தின் சாரதி, தனது வாகனம் முதலாவது வாகனத்துடன் மோதுப்படுவதைத் தவிர்க்க வீதியின் கரைநோக்கி வாகனத்தைச் செலுத்த, அது கண்ணிவெடியால் உருவாகியிருந்த கிடங்கிற்குள் வீழ்ந்தது. எதிர்பாராது நடந்த இந்த சம்பவத்தை அடுத்து நிலைகுலைந்துபோன புலிகள், தாக்குதல் திட்டத்தினைக் கைவிட்டு, தமது மினிபஸ் தரித்துநின்ற பரந்தன் பகுதிநோக்கி ஓடத் தொடங்கினர். 

அவசரத்தில், புலிகளின் அணியினைச் சேர்ந்த நால்வர் தமது பாதணிகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர். அவற்றினைப் பரிசோதித்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் அவை காடுகளில் பாவிக்கப்படும் பாதணிகள் என்பதை அறிந்துகொண்டதோடு, அவற்றில் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டுகொண்டனர். பாதணிகளில் கிட்டு, கணேஷ், விக்டர் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயர்கள் காணப்பட்டன. காடுகளில் பாவிக்கும் பாதணிகளை அதிகப் பாவித்துப் பழகியிருக்காமையினால், அவற்றுடன் ஓடுவதைக் காட்டிலும் வெறுங்காலுடன் ஓடுவதே அவர்களைப் பொறுத்தவரை அன்று இலகுவானதாக இருந்திருக்கிறது. 

மேலும், ராணுவ வாகனத்தின் அருகில் சிறிய காகிதம் ஒன்றினையும் புலநாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர். அக்காகிதத்தில் ஒருவருடைய பெயர் இருந்தது. திருகோணமலை மாவட்டம், கிளிவெட்டியை வதிவிடமாகக் கொண்ட சித்திரவேல் சிவானந்தராஜா என்பதே அந்தப் பெயர். இதனையடுத்து, கிளிவெட்டியைச் சேர்ந்த சிவானந்தராஜாவை விசாரிக்க ராணுவப் புலநாய்வுத்துறை அங்கு சென்றது. இராணுவத்தினருடன் பேசிய அவர், சார்ள்ஸ் அன்டனி எனப்படும் சீலன் தனது பாடசாலை நண்பர் என்றும், தன்னை புலிகளுடன் இணைந்துகொள்ளுமாறு அவர் வற்புருத்தி வந்ததாகவும், ஆனால் தான் இணைய விரும்பவில்லையென்றும் கூறினார். அவரை விடுதலை செய்த ராணுவப் புலநாய்வாளர்கள், கிளிவெட்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞரான 28 வயது நிரம்பிய கதிர்காமத்தம்பி நவரட்ணராஜாவை பங்குனி 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து குருநகர் முகாமிற்கு அழைத்து வந்ததோடு கடுமையான சித்திரவதைகளின்பின்னர், 1983 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை ராணுவத்தினர் ஒருபோதும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தம்மால் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் உடலை யாழ் வைத்தியசாலையில் கையளித்த ராணுவத்தினர் அவர் சுகயீனம் காரணமாக இறந்தார் என்று கூறினர். அன்று, ராணுவத்தை எதிர்த்துக் கேள்விகேட்கும் துணிவு வைத்தியசாலையில் இருந்த எவருக்கும் இருக்கவில்லை. 

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணராக பணியாற்றிவந்த மருத்துவர் என். சரவணபவனந்தன் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் பிரேதப் பரிசோதனையை நடத்தியிருந்தார். 

வைத்தியர் சரவணபவனந்தனால் வழங்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை பின்வருமாறு கூறியது, "இறந்துபோன நவரட்ணராஜாவின் உடலில் 25 வெளிக்காயங்களும், பத்து உட்காயங்களும் காணப்பட்டன.  அவரது நுரையீரலில் காணப்படும் காயங்கள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டவையாகும். அவரது மரணம் இதயம் மற்றும் சுவாசத் தொகுதிகளின் செயலின்மையினால் ஏற்பட்டிருக்கிறது. அவரது உடலின் தசைப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாலேயே இந்த செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருப்பின் அவரது உயிரைக் காத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறப்பட்டிருந்தது. 

சித்திரை 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இளைஞர் நவரட்ணராஜாவின் மரணம் பற்றிய செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்ததோடு, வைத்தியர் சரவணபவனந்தனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் வைத்தியசாலையின் சவ அறைக்குச் சென்ற பொலீஸார் நவரட்ணராஜாவின் மரணம் தொடர்பாக வைத்தியர் வெளியிட்ட மருத்துவ அறிக்கையினைத் தேடியதாகவும், ஆனால் அதனை மருத்துவர் சரவணபவனந்தன் பாதுகாப்பாக மறைத்து வைத்துவிட்டதனால் பொலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறியிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவின் சித்திரவதையும் அதன்பின்னரான கொலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசு மீதும், இராணுவத்தினர் மீதும் அதீத கோபத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன், அரசிடமிருந்து மேலும் மேலும் அவர்களை அந்நியப்படவும் வைத்திருந்தது. கைதுசெய்யப்படும் அனைவரையும் சித்திரவதைக்குள்ளாகுதல் என்பது அன்றைய கால கட்டத்தில் இராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுவான நடைமுறையாகக் கையாளப்பட்டு வந்ததுடன், கைதுசெய்யப்படும் தமிழர்கள் அனைவரும் பாரபட்சமின்றி சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்துவந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் அரச இயந்திரத்தின் ராணுவப் பொலீஸ் படைகளுடன் நேரடியான மோதல்களுக்கு தம்மை தயார்ப்படுத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றிருந்தது. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களால் சித்திரை 5 ஆம் திகதியன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவரட்ணராஜா கொல்லப்படுவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைக்க பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகமும், கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலையும் மாணவர் மீது மேற்கொண்டிருந்தனர். சித்திரை 5 ஆம் திகதி காலை, புனித ஜேம்ஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்பாடாகியிருந்தது. இதனையடுத்து புனித ஜேம்ஸ் தேவாலயத்தைச் சுற்றித் தடைகளை ஏற்படுத்திய பொலீஸார், அத்தேவாலயம் நோக்கி மாணவர்கள் வருவதைத் தடுக்க எத்தனித்தனர். ஆனால், அருகிலிருந்த புனித மரியாள் பேராலயத்திலிருந்து தமது பேரணியினை மாணவர்கள் ஆரம்பித்து நடத்தவே, அப்பகுதிக்குச் சென்ற பொலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துப் போட்டனர்.

 

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுதழுவிய அடக்குமுறைகள்

Cartoon on JR Jayawardene  Tamils April 12, 1984

 வடக்குக் கிழக்கில் தமிழர் மீது அரச பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்துவிட்ட அதேவேளை தெற்கில் சிங்கள மக்கள் மீது தனது அடக்குமுறையினை ஜெயாரின் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தினை தனது தொழிற்சங்கக் காடையர்களைக் கொண்டு கொடூரமாக அடக்கியதிலிருந்து தனக்கெதிரான சக்திகள் அனைத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வந்தது. ஜெயவர்த்தனவின் அடக்குமுறைக்கு தமது எதிர்ப்பினைக் காட்டியவர்கள் என்றால் அது மொனராகலை மாவட்ட விவசாயிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டும்தான். சர்வதேச சீனி உற்பத்தி நிறுவனம் ஒன்று மொனராகலை மாவட்டத்தில் பொதுமக்களின் விவசாயக் காணிகளை அரச ஆதரவுடன் கபளீகரம் செய்ய முற்பட்டவேளை மொனராகலை மாவட்ட விவசாயிகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். அவ்வாறே, பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஜெயவர்த்தன அரசின் தலையீட்டையும், இலவசக் கல்வி முறையில் ஜெயார் கொண்டுவர முயற்சித்த மாற்றங்களையும் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். மேலும் பல்கலைக் கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகவும், பொலீஸ் அக்கிரமங்களுக்கெதிராகவும் பின்னாட்களில் விரிவுபடுத்தப்பட்டது. கொழும்பு மற்றும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக மாணவர்கள் மீதான பொலீஸ் அடக்குமுறைகளையடுத்து கெலனிய, பேராதனை, றுகுண மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கழக மாணவர்கள் தமது விரிவுரைகளைப் புறக்கணித்ததோடு 1983 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒருநாள் பகிஷ்கரிப்பையும் மேற்கொண்டார்கள்.

 Vivienne Goonewardene.jpg

திருமதி விவியேன் குணவர்த்தன

 ஜெயவர்த்தனவின் அடக்குமுறை தனது எதிராளிகளை அடக்கிச் சிதறடித்ததுடன், தேர்தல்க் காலங்களில் வன்முறைகளைப் பாவிப்பதன் மூலம் வெற்றிகொள்ளும் நிலைமையினையும் அவருக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவியான சிறிமா பண்டாரநாயக்கவை அரசியலிலிருந்து முற்றாக நீக்கிவிட்ட ஜெயாரினால் அதன் தொடர்ச்சியாக மக்களிடம் பிரபலயமடைந்துவந்த திரைப்படக் கலைஞரும் அரசியல்வாதியுமான விஜே குமாரதுங்க மீது நக்ஸலைட் எனும் பொய்யான குற்றச்சாட்டினைச் சுமத்திச் சிறையில் அடைக்கவும்  முடிந்தது. இதில் வேதனை என்னவென்றால், தனது சகோதரியான சந்திரிக்காவின் கணவர் விஜே குமாரதுங்க சிறையில் அடைக்கப்படுவதற்கான சூழ்ச்சியில் அநுர பண்டாரநாயக்கவும் பங்குகொண்டதுதான். ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் தொடர்ச்சியான வன்முறைகள், அச்சுருத்தல்கள், கள்ளவாக்குகள் ஆகிய பல முறைகேடுகளிலும் ஜெயவர்த்தன அரசு இறங்கியிருந்தது. சுதந்திரக் கட்சியினரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பொலீஸாரைக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்வது, அக்கட்சியின் தேர்தல் முகவர்கள் மீது வீண்பழி சுமத்தி கைதுசெய்வது ஆகிய்வற்றை ஜெயவர்த்தனவின் அரசு தேர்தல் நடைமுறையாகவே கைக்கொண்டு வந்தது.

தனது அடக்குமுறைக் குற்றங்களை மறைக்க ஜெயவர்த்தனவின் அரசு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவ்வபோது காட்டி வந்தது.

jaya%202_072613115137.jpg

 1977 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தை வெகுஜன வாக்களிப்பின் மூலம் மேலும் ஆறு வருடங்களுக்கு ஜெயவர்த்தன நீட்டித்தபோது, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதற்கெதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தன. ஆகவே, இக்கண்டனங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக சூழ்ச்சியொன்றில் இறங்கினார் ஜெயார். அதாவது, சர்வஜன வாக்கெடுப்பில் "ஆம்" என்கிற வாக்குகளைக் காட்டிலும் "இல்லை" என்கிற வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்ட 18 தேர்தல்த் தொகுதிகளில் இடைத்தேர்தல்களை அவர் நடத்தினார். 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி இந்தத் இடைத்தேர்தல்களிலும் ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சி 14 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இத்தேர்தல் முடிவுகளைக் கொண்டு தனது கட்சிக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று ஜெயார் பிரச்சாரம் செய்துவந்தார். ஆனால், இந்த இடைத்தேர்தல்களில் ஜெயாரின் கட்சி மேற்கொண்ட கடுமையான முறைகேடுகளினூடாகவே அவரால் வெற்றிபெற முடிந்ததாக எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றஞ்சாட்டியிருந்தன.

This 7th March 1983 file photo shows then Indian Prime Minister Indira Gandhi next to Cuban president Fidel Castro during the opening of the Non Aligned Conference. (Virendra Prabhakar/Hindustan Times) 

1983 ஆம் ஆண்டு பங்குனி 7 முதல் 15 வரையான காலப்பகுதியில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இந்தியாவில் தலைநகர் புது தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வினையொட்டி, தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பாணை ஒன்றினை மாநாட்டின் தலைவருக்கும் ஏனைய அரசத் தலைவர்களுக்கும் அனுப்பியிருந்தனர். இந்த அறிக்கை இலங்கையில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதம் குறித்தும், இப்பயங்கரவாதத்தினை முறியடித்து தமிழ் மக்களுக்கான தனியான நாட்டினை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் ஒன்றினுள் இறங்குவதற்கான நியாயப்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தது. 

"உலக நாடுகளின் சமூகத்திற்கு !, சிறிலங்கா தன்னை சொர்க்கபுரித் தீவென்று வெளியுலகில் பிரச்சாரம் செய்துவருவதோடு, பெளத்த கோட்பாடுகளான அகிம்சையினையும், சமாதானத்தினையும் கைக்கொண்டு, சோசலிஸ ஜனநாயகத்தினை அரசியலில் பின்பற்றுவதன் மூலம் நடுநிலையான அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து வருவதாகவும் பித்தலாட்டம் செய்து வருகிறது. ஆனால், சிறிலங்கா வெளியுலகிற்குக் காட்டிவரும் இந்த ஜனநாயக முகமூடியின் பின்னால் அது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனரீதியான அடக்குமுறைகளும், அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களும் , இராணுவ பொலீஸ் அட்டூழியங்களும், இவை அனைத்தினூடான திட்டமிட்ட இனக்கொலையும் மறைந்து கிடக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வாதிகாரத்தனமான அரசியல் நடைமுறையினைக் கைக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் ஆளும் வர்க்கம், தேசிய இனவாதத்தினையும், மத அடிப்படைவாதத்தினையும் முடுக்கிவிட்டுள்ளதன் மூலம் தமது அதிகாரத்தை தக்கவைத்து வருகின்றன. மேலும், இதே அதிகார வர்க்கங்கள் தமிழ் மக்கள் மீது மிகவும் திட்டமிட்ட அடிப்படியில் மிகக் கொடுமையான இனவாத அரசியலை முன்னெடுத்தும் வருகின்றன". 

"இதில் வேதனை தரும் முரண்பாடு யாதெனில், உலக மனிதவுரிமை அமைப்புக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட, மனித குலத்திற்கெதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டு வருகின்ற சிறிலங்கா போன்ற சர்வாதிகாரத்தனமான நாடுகள் உலக அரங்கொன்றில் அகிம்சையினையும், சமாதானத்தையும் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு வலம்வருவதுதான்". 

"எமது குறிக்கோள் என்னவெனில், சிறிலங்கா பாஸிஸ அரசின் பொய் முகத்திரையினை சர்வதேச அரங்கில் துகிலுரிப்பதும், இந்த அராஜக அரசின் கீழ் எமது மக்கள் அடைந்துவரும் அவலங்களை வெளிக்கொணர்வதும், அடிமைகளாக கீழிறக்கப்பட்டு, மெதுவான சாவை எதிர்நோக்கியிருப்பதைக் காட்டிலும், வேறு எந்தத் தெரிவுகளும் இல்லாத நிலையில் கெளரவத்தினையும், சுதந்திரத்தினையும் அடைந்துகொள்ள எமது மக்கள் முன்னெடுத்திருக்கும் வீரம்செறிந்த  போராட்டத்தினை நியாயப்படுத்துவதும் ஆகும்"  என்று புலிகளின் அறிக்கை கூறியது.

ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இராணுவத்தையும், பொலீஸாரையும் தனது அடக்குமுறையின் கருவிகளாகப் பாவித்து வந்தது. சமூக உரிமைகள் அமைப்பு இந்த அபாயகரமான மாற்றத்திற்கெதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தது. இந்த அமைப்பின் தலைவரான ஆயர் வணக்கத்திற்குரிய லக்ஷ்மண் விக்கிரமசிங்க தலைமையில் 1983 ஆம் ஆண்டு சித்திரை 15 ஆம் திகதி கூடிய சமூக உரிமைகள் அமைப்பினர், அதிகரித்துவரும் பொலீஸ் அடக்குமுறைகள் பற்றியும், அடாவடித்தனங்கள் பற்றியும் விமர்சித்திருந்தன. மேலும், பொலீஸாரின் அடக்குமுறைச் சம்பவங்கள் குறித்த பட்டியல் ஒன்றினையும் இவ்வமைப்பு வெளியிட்டது. கொத்மலைப் பகுதியில் செய்தியாளர்கள் மீது பொலீஸார் நடத்திய தாக்குதல், கண்டி பொலீஸ் நிலையத்தில் நீதிக்குப் புறம்பான விதத்தில் கைதுசெய்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட 17 வயது இளைஞன், ஏக்கலை சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  பெண் தொழிலாளிகள் மீதான பொலீஸாரின் தாக்குதல்கள், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், மாத்தளை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது பொலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட நபர், கொழும்பு நடைபாதை வியாபாரிகள் மீதான பொலீஸாரின் தாக்குதல்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விவியேன் குணவர்த்தன மீதான பொலீஸாரின் தாக்குதல் ஆகியன் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

S.A. David Solomon Arulanandam David Gandhiyam

எஸ். . டேவிட் சொலொமொன் அருளானந்தம் - காந்தீயம்

ஆனால், தமிழ் மக்கள் மீது சிறிலங்காவின் பொலீஸாரும் இராணுவத்தினரும் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகள் இங்கே பட்டியலிடப்பட்டவற்றைக் காட்டிலும் பல மடங்கு கொடுமையானவை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததோடு, பொலீஸார் எழுதும் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கடுமையாகத் தாக்கப்பட்டு வந்தனர். இந்த வாக்குமூலங்கள் கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்கெதிராகப் பொலீஸாரினால் பாவிக்கப்பட்டபோது, சிறிலங்காவின் நீதிமன்றங்களும் அவற்றினை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தன. 1983 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த கட்டட வடிவமைப்பாளரும், காந்தீயம் அமைப்பின் தலைவருமான எஸ். அருளானந்தம் டேவிட் அவர்களின் அவலத்தினைச் செய்தியாகக் காவி வந்திருந்தது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபகரிக்கப்பட்டுவரும் தமிழர் தாயகம்

 

இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவந்த வவுனியா மாவட்டத்தின் பன்குளம் கிராமத்திற்குச் சென்ற பொலீஸ் அதிகாரிகளும் இராணுவத்தினரும், அங்கிருந்த தமிழர்களின் கொட்டகைகளுக்கும், பயிர்களுக்கும் தீமூட்டினர். 1983 ஆம் ஆண்டு சித்திரை 6 ஆம் திகதி நடைபெற்ற இந்த நாசகாரச் செயலிற்கான உத்தரவினை வழங்கியவர் அன்றிருந்த வவுனியா உதவி அரசாங்க அதிபராகும். இதன் பின்னர், வவுனியாவில் இயங்கிவந்த காந்தீயம் அமைப்பின் தலைமையகத்திற்குச் சென்ற பொலீஸாரும் இராணுவத்தினரும் அவ்வமைப்பின் செயலாளர் கலாநிதி எஸ் ராஜசுந்தரத்தைக் கைதுசெய்து குருநகர் இராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றனர். இரு நாட்களுக்குப் பின்னர் காந்தீயம் அமைப்பின் தலைவரான அருளானந்தம் டேவிட்டை இராணுவம் கைதுசெய்தது. இவர்கள் இருவரும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரசால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

1977 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்கள் மீது அரச ஆதரவுடன் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களைக் காக்கவும், அவர்களுக்கான புணர்வாழ்வினை வழங்கவுமே  தொண்டு நிறுவனமான காந்தீயம் இயங்கிவந்தது. ஆனால், தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைக்கும் ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட நடவடிக்கையே காந்தீயம் அமைப்பாளர்கள் மீதான அடக்குமுறை என்றால் அது மிகையில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணங்கள் தமது பூர்வீகத் தாயகம் என்றும், அவற்றினை ஆளும் அதிகாரம் தமக்கு வேண்டும் என்றும் தமிழர்கள் கோரிவந்த நிலையில், அதனைச் சிங்களவர்கள் கடுமையாக எதிர்த்துவந்ததுடன், தமிழர்களின் கோரிக்கையினை வேருடன் பிடிங்கி எறியவே ஜெயவர்த்தன திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தார். 

அரச ஆதரவுடன் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த சிங்கள குடியேற்றங்களே தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையினுள், சமஷ்ட்டி அடிப்படியில்,  வடகிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்கள் தமக்குத் தரப்படவேண்டும் கோரிக்கையினை முன்வைத்தமைக்கான அடிப்படைக் காரணமாகும். அக்காலத்தில் இலங்கையில் காணப்பட்ட கிராமப்புற நிலப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட பல தீர்வுகளில் அரச ஆதரவுடனான குடியேற்றங்களும் ஒன்று. 1927 ஆம் ஆண்டு இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுநராகக் கடமையாற்றிய சேர் ஹியூ கிபோர்ட்டே இந்த யோசனையினை முதலில் முன்வைத்திருந்தார். ஆனால், நிலம் என்பது இலங்கை மக்களைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்பதால், அரசாங்கம் மிகவும் அவதானமாக இதனைக் கையாளவேண்டும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அவரது பரிந்துரைகளின்படி, ஈரவலயத்தில் வாழும் காணியற்ற ஒருவரை வறண்ட வலயத்தில் குடியேற்றலாம் என்றே கூறப்பட்டிருந்தது. 

சேர் ஹியூவின் பரிந்துரைகள் அன்றிருந்த சட்டவாக்கல் கவுன்சிலினால் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காணி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டது. காணி ஆணைக்குழு குருநாகலை, அநுராதபுரம், திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாவிக்கப்படாத பெருந்தொகை வெற்றுக்காணிகளை இக்குடியேற்றங்களுக்காக அடையாளம் காட்டியது. 1933 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராகவிருந்த டி எஸ் சேனநாயக்க அரசிற்குச் சொந்தமான இக்காணிகளை அபிவிருத்தி செய்யும் ஆணையினை வெளியிட்டார். இதன் பிரகாரம் பாவிக்கப்படாத இக்காணிகள், கிராமங்களை விரிவாக்கவும், அரசாங்கத்தின் பாவனைக்கும், விவசாயக் குடியேற்றங்களை அமைக்கவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தவகையில் விவசாயிகளுக்கான காணிகள் முதன் முதலாக மின்னேரியாவில் சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, வட மாகாணத்தில்,  கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன்பின்னர் சிங்களவர்கள் பொலொன்னறுவை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இவை எல்லாமே அப்பொழுது நீதியான முறையில் நடைபெற்றுவருவது போன்றே தோன்றியது. காணியற்ற தமிழ் விவசாயிகள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும், காணியற்ற சிங்கள விவசாயிகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும் குடியேற்றப்பட்டு வந்தனர். சிங்களவரைப் போலவே, தமிழரும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வந்த விவசாயக் குடியேற்றங்களை அன்று வரவேற்றிருந்தனர்.

See the source image

ஆனால், 1949 ஆம் ஆண்டு இவை எல்லாமே தலைகீழாக மாறிப்போயிற்று. பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 1949 ஆம் ஆண்டு கல்லோயாச் சிங்களக் குடியேற்றம் அரசினால் முன்னெடுக்கப்பட்டது. அவ்வருடம் மாசி மாதம் தனது நிரந்தரக் காரியாதிரிசி சேர் கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசன இயக்குநர் . அழகரட்ணம் மற்றும் நில அளவையாளர் நாயகம் சேர் எஸ் புரொகிர் ஆகியோரை அழைத்த அன்றைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்க, பட்டிப்பளை ஆற்றினைச் சுற்றி பாரிய விவசாயக் குடியேற்றம் ஒன்றினை உருவாக்க ஆற்றிற்குக் குறுக்கே அணை ஒன்றினைக் கட்டும் தனது திட்டத்தினைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் விவசாயிகள் நண்மையடைவதோடு, நீர்ப்பாசனம் கிடைக்கும் மேலதிக காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டமுடியும் என்று அவர் கூறினார். ஆகவே, இத்திட்டத்தின் சாத்தியப்பாடுகளை அறிந்துகொள்ள அழகரட்ணத்தை அவர் பணித்தார்.

பிரதமர் தனது திட்டம் பற்றிக் கூறியபோது தானும், சேர் கந்தையா வைத்தியநாதனும் மிகவும் உற்சாகமடைந்ததாக அழகரட்ணம் வீரகேசரிப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். "தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கே பிரதமர் தனது திட்டத்தை உருவாக்கியிருந்தார் என்று நாங்கள் கனவில்க் கூட நினைத்திருக்கவில்லை" என்று அவர் கூறினார்.

அழகரட்ணமும் அவரது நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகளும் முஸ்லீம் கிராமமான சம்மாந்துரைக்குச் சென்று, அங்கிருந்து மாட்டு வண்டிகளில் ஆற்றின்வழியே மேல்நோக்கிப் பயணித்தனர்.  பதுளை மாவட்டத்தின் மதுல்சீமை மலைத்தொடர்களிலிருந்தே பட்டிப்பளை ஆறு உருப்பெறுகிறது. அங்கிருந்து 85 கிலோமீட்டர்கள் பயணித்து வங்காள விரிகுடாவினை அது அடைகிறது. கிறீஸ்த்துவுக்கு முன் மூன்று நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பசுமையான தமிழ்க்  கிராமமான பட்டிப்பளைக்குச் சென்றது அழகரட்ணத்தின் குழு. அங்கிருந்து இங்கினியாகலை நோக்கிச் சென்ற அந்தக் குழுவினர் அப்பகுதியில் அணையொன்றினைக் கட்டுவதற்கு உகந்த இடத்தினைத் தெரிவுசெய்தார்கள். இதன் அடிப்படையில் இப்பகுதியில் விவசாயக் குடியேற்றம் ஒன்றினை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை அழகரட்ணத்தின் குழு அரசிடம் முன்வைத்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் கல்லோயாக் குடியேற்றம்

See the source image

அழகரட்ணம் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படியில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றினை உருவாக்கிய பிரதமர் சேனநாயக்க, இத்திட்டத்தினை நடத்துவதற்கு விசேட பணிக்குழு ஒன்றினை உருவாக்கினார். இத்திட்டத்திற்கு கல்லோயா அபிவிருத்திச் சபை என்று அவர் பெயரிட்டார். பட்டிப்பளை ஆறு என்று சரித்திர காலத்திலிருந்து தமிழில் அழைக்கப்பட்டு வந்த ஆற்றிற்கு கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. சிங்கள கல்விமான்களின் ஆசீர்வாதத்துடனும் ஆராய்ச்சிகளுடனும் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயரிடும் செயற்பாடுகள் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன. 

Official Photographic Portrait of Don Stephen Senanayaka (1884-1952).jpg

தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை - டி எஸ் சேனநாயக்க

கல்லோயா திட்டத்தினை 1949 ஆம் ஆண்டு ஆவணி 28 ஆம் திகதி சேனநாயக்க இங்கினியாகலை பகுதியில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடகாலத்தில் இத்திட்டம் நிறைவுபெற்றது. இந்த நீர்த்தேக்கத்திற்குச் சிங்களவர்களின் அரசு சேனநாயக்க சமுத்திரம் (சிங்களத்தில் சேனநாயக்க சமுத்ர)  என்று பெயரிட்டது. 

SENANAYAKE-SAMUDRA-1.jpg?ssl=1

சேனநாயக்க சமுத்திரமாக மாற்றப்பட்ட தமிழரின் பட்டிப்பளை ஆறு

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் 120,000 ஏக்கர்கள் நிலம் 40 குடியேற்றக் கிராமங்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. இந்த கிராமம் ஒவ்வொன்றிலும் 150 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஏக்கர்கள் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இந்த 40 குடியேற்றக் கிராமங்களில் 6 கிராமங்கள் மட்டுமே தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழரின் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 7,000 சிங்களக் குடும்பங்கள் இத்திட்டத்தினூடாக தமிழ்ப் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் குடியேற்றப்பட்டார்கள். இச்சிங்களக் குடும்பங்கள் அனைத்துமே தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். நாட்டின் தந்தையென்று சிங்களவர்களால் அழைக்கப்பட்ட சேனநாயக்க, "தமிழரின் நிலம் அபகரிக்கும் சிங்கள முன்னெடுப்பின் தந்தை" யென்று ஆனதுடன், நாடு முற்றான இனப்போரிற்குள் புதைந்துவிட அடித்தளம் இட்ட சிங்களவர்களில் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கு முன்னர் கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தினையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைத்தே அழைக்கப்பட்டு வந்தது. அம்பாறை மாவட்டம் 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டாகப் பிளந்து உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டது.

1911 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அம்பாறை மாவட்டம் அமைக்கப்பட்ட பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்ததுடன், தமிழர்கள் இரண்டாம் நிலையிலும், சிங்களவர்கள் மூன்றாம் நிலையிலும் வாழ்ந்துவந்திருந்தார்கள். 1911 ஆம் ஆண்டில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 36,843 (55 %), தமிழர்கள் 24,733 (37%) மற்றும் சிங்களவர்கள் 4,762(7%) ஆக இருந்தது. ஆனால், 1921 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 31,943 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 25,203 ஆகவும் சிங்களவர்களின் எண்ணிக்கை 7,285 ஆகவும் காணப்பட்டது. பின்னால் வந்த வருடங்களில், முக்கியமாக கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தினூடாக இப்பிரதேசத்தில் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை பின்வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் விபரங்கள் கூறுகின்றன,

1953 இல் : முஸ்லீம்கள் 37,901, தமிழர்கள் 39,985, சிங்களவர்கள் 26,459

1963 இல் : முஸ்லீம்கள் 97,990 (45.6%), சிங்களவர்கள் 62,160 (29%), தமிழர்கள் 49,220 (23.5%)

1971 இல் : முஸ்லீம்கள் 123,365 (47%), சிங்களவர்கள் 82,280 (30%), தமிழர்கள் 60,519 (22%)

1981 இல் : 166,889 (47%), சிங்களவர்கள் 146,371 (38.01%) தமிழர்கள் 78,315 (20%).

2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கண்க்கெடுப்பின்படி சிங்களவர்களின் எண்ணிக்கை 252,458 ஆக இருக்க முஸ்லீம்களின் எண்ணிக்கை 281,702 ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 113, 3003 எனும் பலவீனமான நிலையிலும் காணப்பட்டது. 

அன்றிலிருந்து இம்மாவட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை முதலாவது இடத்திற்கு அரச ஆதரவுடன் முந்தள்ளப்பட்டுவிட்டதும் குறிப்பிடத் தக்கது.

கல்லோய அபிவிருத்தித் திட்டத்தின்படி தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆறு குடியேற்றக் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்களை அரசும் சிங்களக் குடியேற்றவாசிகளினால் உருவாக்கப்பட்ட காடையர்களும் இணைந்து அடித்து விரட்டினர். 1956 ஆம் ஆண்டு ஆனியில் நடைபெற்ற இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பின்போது குறைந்தது 200 தமிழர்கள் சிங்களவர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். முதலாம் கட்ட ஆக்கிரமிப்பு நிறைவுக்கு வந்தபின்னர் இப்பகுதிகளில் குடியேறுவதற்கு மீண்டும் எத்தனித்த தமிழர்கள் இரண்டாவது கட்டமாக 1958 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல்களினால் நிரந்தரமாகவே இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனாலும் சில குடும்பங்கள் மீண்டும் தமது வீடுகளில் குடியேறும் நிலை ஏற்பட்டபோதும் கூட, 1990 களில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலைகளின் பின்னர் இப்பிரதேசத்திலிருந்து தமிழர்கள் முற்றாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டனர். அன்றிலிருந்து கல்லோயாத் திட்டத்தின் மூலம் பூர்வீகத் தமிழ்ப் பிரதேசமாகவிருந்த இப்பகுதியில் குடியேற்றப்பட்ட இறுதி 900 தமிழ்க் குடும்பங்களும் திட்டமிட்ட படுகொலைகளினூடாகவும் கலவரங்களினூடாகவும் இப்பகுதியிலிருந்து முற்றாக அடித்து விரட்டப்பட்டதுடன் இப்பகுதியில் தமிழ் இனச் சுத்திகரிப்பொன்றினை சிங்கள அரசுகள் செய்து முடித்திருக்கின்றன. தமிழரின் பூர்வீகப் பிரதேசத்தில், தமிழினம் முற்றாக அடித்து விரட்டப்பட்டு சிங்கள விவசாயிகள் குடியேறி வாழ்ந்துவருகிறார்கள்.

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலைக்கு வைக்கப்பட்ட பொறி

Kantale Wewa | AmazingLanka.com

கந்தளே வெவ என்று சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்ட தமிழரின் கந்தளாய்க் குளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதுடன் மட்டுமே சேனநாயக்க நின்றுவிட விரும்பவில்லை. திருகோணமலை மாவட்டத்திலும் சிங்களவர்களைக் குடியேற்ற அவர் விரும்பினார். சரித்திர காலத்திலிருந்தே வடமாகாணத்தின் வன்னிப்பகுதியும், கிழக்கும் மிகவும் சிறப்பான அணைக்கட்டுகளைக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் வலையமைப்புக்களைக் கொண்ட செழிப்பான நெல்விளையும் விவசாயப் பிரதேசங்களாகக் காணப்பட்டன. இவ்வாறான நீர்ப்பாசனத் திட்டங்கள் தெற்கில் சிங்களப் பகுதிகளிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலும் காணப்பட்டு வந்தது. அணைகளைக் கட்டி நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது பாரம்பரியமாக தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விவசாய நடைமுறையாகும். திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே பல அணைக்கட்டுக்களும் நீர்பாசனத் திட்டங்களும் காணப்பட்டன. இவ்வாறான பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் கந்தளாய்க் குளமும் ஒன்று. திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்களான தம்பலகாமம் மற்றும்  கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கு கந்தளாய்க் குளத்திலிருந்தே நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், 1948 ஆம் ஆண்டு கந்தளாய்க் குளத்தை "கந்தளாய் அபிவிருத்தித் திட்டம்" எனும்பெயரில் மேலும் ஆளமாக்கி மேம்படுத்திய சேனநாயக்க புதிதாக காணிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்து சிங்களவர்களைக் குடியேற்றினார். 

கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின மூலம் மிகப்பெருமளவில் சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள அரசுகளினால் குடியேற்றப்பட்டனர். கந்தளாய்க் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்துவந்த 86,000 சிங்களவர்களில் 40,000 பேர் கந்தளாய்க் குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின் மூலம் பெரு வெற்றியைச் சம்பாதித்துக் கொண்டதாக உணர்ந்த சேனநாயக்க, அல்லைக் குடியேற்றத் திட்டத்தினை 1950 ஆம் ஆண்டு ஆர்ம்பித்து வைத்தார். 1952 ஆம் ஆண்டு தமிழரின் நில அபகரிப்பின் தந்தை என்று அறியப்பட்ட சேனநாயக்க இறந்துவிட, அவரது மகனான டட்லி சேனநாயகா அத்திட்டத்தினைத் தொடர்ந்து நடத்தினார்.

Image

அல்லை அபிவிருத்தித் திட்டம் சேனநாயக்கவினால் மகாவலி ஆற்றின் ஒரு கிளையான வெருகல் ஆற்றிற்குக் குறுக்கே, திருகோணமலை குடாவிற்கு தெற்காக அணையொன்றினைக் கட்டுவதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதி தமிழர்களால் பூர்வீக காலத்திலிருந்து கொட்டியார் என்று அழைக்கப்பட்டு வந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் இப்பகுதியில் வாழ்ந்துவந்தபோதும், இப்பிரதேசம் தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசமாகவே விளங்கிவந்தது.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொட்டியார் பகுதியில் ஒரு பிரதேசச் செயலகமே இருந்தது. அது கொட்டியார் பிரதேசச் செயலகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்பகுதியில் மூன்று பிரதேசச் செயலகங்கள் இயங்கி வருகின்றன. மூதூர், சேருவிலை மற்றும் வெருகல் என்பனவே அந்த மூன்று பிரதேசச் செயலகங்களும் ஆகும். 1960 ஆம் ஆண்டு சேருவிலை பிரதேசச் செயலகமும், 1980 இல் வெருகல் பிரதேசச் செயலகமும் அப்பிரதேசங்களில் அரசினால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் நலன்களைக் கவனிக்கவென்று உருவாக்கப்பட்டன. 1981 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி சேருவிலை பகுதியில் வாழ்ந்த 20,187 மக்களில் 11,665 பேர் தென்பகுதிகளில் இருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Image

 

தமிழருக்குச் சொந்தமான, ஆனால் மக்கள் வாழ்ந்துவராத காணிகளில் மட்டுமே சிங்களவர்களை அரசு குடியேற்றவில்லை. தமிழர்கள் பூர்வீகமாக வழ்ந்துவந்த தமிழ்க் கிராமங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றிய அரசுகள் அவற்றிற்குச் சிங்களப் பெயர்களை இட்டதன் மூலம், அவை பாரம்பரியமான சிங்களக் கிராமங்கள் என்று சரித்திரத்தினை மாற்றி எழுதுவதிலும் வெற்றி கண்டன. இப்பகுதியில் சிங்களமயமாக்கப்பட்டுள்ள கிராமங்களான புளஸ்த்திகம, காங்கேயப்பட்டுன என்பவை புராதன தமிழ்க் கிராமங்களாக இருந்து முற்றான சிங்கள மயமாக்கலுக்கு உள்ளானவற்றிற்கு உதாரணங்களாகும்.

புராதன தமிழ்க் கிராமமான அரிப்பு எனும் பிரதேசத்திற்கு சேருவில எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டது. அவ்வாறே கல்லாறு எனும் தமிழ்க் கிராமம் சோமபுற என்றும், நீலப்பளை எனும் தமிழ்க் கிராமம் நீலபொல என்றும், பூநகர் எனும் தமிழ்க் கிராமம் மகிந்த புர என்றும், திருமங்கலை எனும் தூய தமிழ்க் கிராமம் சிறிமங்களபுர  என்றும், இலங்கைத் துறை எனும் தமிழ்க் கிராமம் லங்கா பட்டுண என்றும்  சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டன.

z_p10-d.s.senanayake.jpg

1951 ஆம் ஆண்டளவில் கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களில், அரச முன்னெடுப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகளுக்கு முக்கிய காரணமாக உருவாகியிருந்தன. 1951 ஆம் ஆண்டு மாசி 4 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் சேனநாயக்க கிழக்கில் முடுக்கிவிடப்பட்ட குடியேற்றங்களே தனது அரசின் முக்கியமான வெற்றிகரமான செயற்பாடு என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பை அறுத்தெறிந்த சிங்களக் குடியேற்றங்கள்

சேனநாயக்கவின் திமிரான பேச்சு தமிழர்களை ஆத்திரப்பட வைத்தது. தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட குடியேற்றங்கள் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அனைத்துச் சிங்கள அரசுகளாலும் தொய்வின்றி கொண்டுசெல்லப்பட்டன. 1956 ஆம் ஆண்டு வவுனியாவின் கிழக்கில் பதவியா எனும் புதிய சிங்களக் குடியேற்றத்தினை சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரதமாரன S W R D பண்டாரநாயக்கா ஆரம்பித்து வைத்தார். சுதந்திரத்தின் பொழுது திருகோணமலை துறைமுகம் ஆங்கிலேயரிடமிருந்து இலங்கையரசிற்குக் கைமாறிய வேளை, துறைமுகத்தில் பணியாற்றி பின்னர் வேலையிழந்த  தொழிலாளர்களை மீளக் குடியமர்த்தும் நோக்குடனேயே பதவியா எனும் சிங்களக் கிராமம் வவுனியாவில் அமைக்கப்பட்டது. பதவியா திட்டத்தின் ஆரம்பப்படியில் 595 தமிழ்க் குடும்பங்களும், 453 சிங்களக் குடும்பங்களும் இப்பகுதியில் குடியேற்றப்பட்டன. ஆனால், சிங்களவர்களுடன் இப்பகுதியில் குடியேறிய பெளத்த பிக்குவும், சிங்களக் குடியேற்றக்காரரும் தமிழர்கள் இப்பகுதியில் குடியேறுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், தமிழர்களுக்கென்று அமைக்கப்பட்ட கொட்டகைகளில் சிங்களவர்களைக் குடியேற்றினர். அரசும் இதற்குத் துணைபோகவே, பதவியா எனும் புதிய கிராமம் முற்றுமுழுதான சிங்களக் கிராமமாக உருப்பெற்றது.

Manal_Aru.jpg

பின்னர், 1960 ஆம் ஆண்டு சிறிமா பண்டார்நாயக்க மொறவெவ எனும் சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கினார். புராதன தமிழ்ப் பிரதேசமாக விளங்கிய முதலிக் குளம் எனும் பகுதியே சிறிமாவினால் மொறவெவ என்று சிங்களத்தில் பெயர் சூட்டப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் முதலிக் குளமான மொறவெவவில் வாழ்ந்துவந்த 9,271 மக்களில் 5,101 பேர் தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களாக இருந்தனர். தமிழர்களின் இன்னொரு பூர்வீகக் கிராமமான பெரியவிளான்குளம் ஜெயவர்த்தனவினால் மகா-திவிலுவெவ என்று சிங்களத்தில் பெயர்மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றமாக உருப்பெற்றது.

The original Neeliyamman temple, photographed over 30 years ago

தமிழர்களின் பூர்வீக நீலியம்மன் ஆலயம் - திருகோணமலை

அரசாங்கத்தின் முன்னெடுப்புடன் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலதிகமாக, அப்பகுதியில் அமைச்சர்களாகவிருந்த பலரின் தலைமையில் சட்டத்திற்குப் புறம்பான வகையிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். அமைச்சர்களால் தனிப்பட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களின் ஒரே இலக்கு திருகோணமலை மாவட்டத்தினை சிங்களவர்களின் பெரும்பான்மை மாவட்டமாக மாற்றுவது தான் என்றால் அது மிகையில்லை. 1972 ஆம் ஆண்டுவரை தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக விளங்கிவந்த நொச்சிக்குளம், சிங்களவர்களால் நொச்சியாகம என்று பெயர் சூட்டப்பட்டு தூய சிங்களக் கிராமமாக அபிஷேகம் செய்துகொண்டது. இப்பகுதியில் 5000 ஏக்கர் நிலப்பகுதியில் இச்சிங்களக் குடும்பங்கள் குடியேறிக்கொண்டன. 1973 ஆம் ஆண்டு பேரினவாத அரசுகளின் ஆசீர்வாதத்துடன் புதியவகை குடியேற்றத்தில் சிங்களவர்கள் ஈடுபடலாயினர்.

Image

தமிழக் கிராமங்களைச் சுற்றியிருக்கும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் முதலில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பகுதிகளான குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னைமரவாடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன. சுமார் 10,750 சிங்களக் குடும்பங்கள் இந்த சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத் திட்டங்களினூடாக தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். இத்தொடரின் மூன்றாவது அட்டவணையின்படி திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரம் எவ்வாறு இச்சிங்களக் குடியேற்றங்களினால் மாற்றப்பட்டு வந்தது என்பதனைக் காட்டுகின்றது.

 

அரசினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வந்த சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்னால் இன்னொரு சூழ்ச்சியும் இருந்தது. திருகோணமலையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கே மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பை உடைப்பதுதான் அது.

Image

வெருகல் ஆற்றுக் குடியேற்றம்

 

தமிழக் கிராமங்களைச் சுற்றியிருக்கும் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் முதலில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பகுதிகளான குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னைமரவாடி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன. சுமார் 10,750 சிங்களக் குடும்பங்கள் இந்த சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத் திட்டங்களினூடாக தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். இத்தொடரின் மூன்றாவது அட்டவணையின்படி திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரம் எவ்வாறு இச்சிங்களக் குடியேற்றங்களினால் மாற்றப்பட்டு வந்தது என்பதனைக் காட்டுகின்றந்து.

அரசினால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வந்த சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்னால் இன்னொரு சூழ்ச்சியும் இருந்தது. திருகோணமலையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கே மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பை உடைப்பதுதான் அது.

Image

சேருவில சிங்களக் குடியேற்றம்

திருகோணமலை மாவட்டத்தினை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் நான்கு பிரதான நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமணலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அல்லைக் குடியேற்றத்திட்டமும், திருகோணமலை - வவுனியா வீதியில் மொறவெவ குடியேற்றத்திட்டமும், திருகோணமலை - முல்லைத்தீவு வீதியில் பதவியா குடியேற்றத் திட்டமும் அமைக்கப்பட்டன. திருகோணமலையில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடக்கும்பட்சத்தில், அவர்கள் தப்பியோட முடியாதபடி அனைத்துத் திசைகளினாலும் சிங்களக் குடியேற்றங்களால் சூழப்பட்டு முற்றுகைக்குள் வைத்திருப்பதும் இதன் ஒரு நோக்கமாக இருக்கிறது. திருகோணமலையினைத் தமிழ் ஈழத்தின்  தலைநகராக்குவோம் என்கிற தமிழரின் நிலைப்பாட்டிற்குப் பதிலடியாகவே சிங்கள அரசுகள் திருகோணமலையினைச் சிங்களக் குடியேற்றங்களால் முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தன.

Buddhisization Verugal 6

முற்றாகச் சிங்களமயமாக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதி

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களால் குடியேற்றப்பட்ட பகுதிகளையும், அவற்றினைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பாதுகாப்புக் கோட்டைகளாக மாற்றுவதிலும் சிங்கள அரசுகள் வெற்றிகண்டன. திருகோணமலைத் துறைமுகத்தில் பாரிய கடற்படை முகாம் ஒன்று உருவாக்கப்பட்டதுடன், சீனன்குடாவிலும் மொறவெவவிலும்  விமானப்படைத் தளங்கள் அமைக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 300 இற்கும் அதிகமான அரச படை முகாம்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானவை திருகோணமலை மாவட்டத்திலும், அதற்கு அண்மையாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன (இத்தொடர் எழுதப்பட்ட 2005 ஆம் ஆண்டுக் காலப்பகுதியின் நிலவரத்தின்படி இது கூறப்பட்டிருக்கிறது. ஆனால்,  தமிழர் தாயகம் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இன்றைய நிலையில் இம்முகாம்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு என்பது குறிப்பிடத் தக்கது). 

Buddhisization Verugal 3

சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாகிவரும் திருகோணமலை

வவுனியா மாவட்டமும் சிங்களக் குடியேற்றங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, பதவியா போன்ற சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன், வவுனியாவில் குடியேற்றப்பட்ட சிங்களக் கிராமங்களுக்கென்று வவுனியா தெற்கு பிரதேசச் செயலகத்தையும் சிங்கள அரசுகள் நடத்தி வருகின்றன. இவ்வாறு, பல தமிழ்ப் பிரதேசங்களை ஊடறுத்து நடைபெற்றுவரும் பல சிங்களக் குடியேற்றங்கள் மூலம், தமிழர் தாயகம் கூறுபோடப்பட்டு சிங்கள மயமாக்கப்படுவதுடன், இப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் விகிதாசாரமும் திட்டமிட்டவகையில் கீழிறக்கப்பட்டு வருகிறது.

Buddhisization Verugal 1

சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாகிவரும் திருகோணமலை

வவுனியா மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான சிங்களக் குடியேற்றங்களும் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வவுனியா மாவட்டத்தில் 13,164 தமிழர்களும் 1157 சிங்களவர்களும் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது 1981 ஆம் ஆண்டு 54,179 தமிழர்களாகவும் 15,794 சிங்களவர்களாகவும் காணப்பட்டது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீதான சிங்களக் குடியேற்றங்களின் தாக்கம்

அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர்கள் மூன்றுவிதமான சிக்கல்களை எதிர்கொண்டார்கள். முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின், முக்கியமாகக் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலினை இக்குடியேற்றங்கள் மாற்றிப்போட்டன.  இரண்டாவது, தமிழரின் விளைச்சல் நிலங்கள் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டதனால், தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாயிற்று. மூன்றாவதாக, தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இப்பிரதேசங்களிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையலாயிற்று.

கீழ்வரும் அட்டவணை 1 இல், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட முறையில் அரசு நடத்திவரும் சிங்களக் குடியேற்றங்கள் இனவிகிதாசாரத்தினை எந்தவகையில் மாற்றியமைத்திருக்கிறது என்பது காட்டப்பட்டிருக்கிறது.

Demographic change in the Eastern Province (1881- 1981)

Year Sinhalese Tamils Muslims
1827 250
1.3%
34758
75.65%
11533
23.56%
1881 5947
4.5%
75408
62.35%
43001
30.65%
1891 7512
4.75%
87761
61.55%
51206
30.75%
1901 8778
4.7%
96296
57.5%
62448
33.155%
1911 6909
3.75%
101181
56.2%
70409
36%
1921 8744
4.5%
103551
53.5%
75992
39.4%
1946 23456
8.4%
146059
52.3%
109024
39%
1953 46470
13.1%
167898
47.3%
135322
38%
1963 109690
20.1%
246120
45.1%
185750
34%
1971 148572
20.7%
315560
43.9%
248567
34.6%
1981 243358
24.9%
409451
41.9%
315201
32.2%

அட்டவணை 1

 

அட்டவணை 2 இல், தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் சிங்களக் குடியேற்றங்களால் எவ்வகையான பாதிப்பினை கொண்டிருக்கின்றன என்பதனைக் காட்டுகிறது.

Change in the racial composition in the North-East (1881-1981)

    1881     1946     1981  
  Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim Sinhala Tamil Muslim
Jaffna District 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.6 97.7 1.7
Mannar District 0.67 61.6 31.1 3.76 51.0 33.0 8.1 63.7 26.6
Vavuniya District 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 76.3 6.9
Batticaloa District 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.4 72.0 23.9
Amparai District N/A N/A N/A N/A N/A N/A 38.1 20.0 47.0
Trincomalee District 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 36.4 29.0

அட்டவணை 2

தேர்தல் முறையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் சிங்களவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். அம்பாறை மற்றும் சேருவில ஆகிய தொகுதிகளிலிருந்தே இவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 1978 ஆம் ஆண்டு தேர்தல்களின்போது, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐந்து சிங்களவர்களும் வட மாகாணத்திலிருந்து ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியேற்றங்களுக்கான தமிழரின் எதிர்ப்பு

ds-s-3.jpg?ssl=1

சிங்களக் குடியேற்றங்களின் பிதாமகன் - டி எஸ் சேனநாயக்க

தமிழர் மீதான சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் எதிர்ப்பென்பது கல்லோயா குடியேற்றத்திட்டத்தினை சேனநாயக்க ஆரம்பித்து வைத்த ஆறு மாதங்களின் பின்னர், 1950 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முன்னெடுக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சி, கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் முதலாவது தொகுதி சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டபோது தனது போராட்டத்தினை ஆரம்பித்தது. மேலும் தமிழருக்குச் சொந்தமான பட்டிப்பளை ஆற்றினை கல்லோயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்படுவதையும் சமஷ்ட்டிக் கட்சி எதிர்த்தது.

சமஷ்ட்டிக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் தமிழரின் மனதில் ஆளமாக வேரூன்றிக் கொண்டதுடன், தமது தாயகத்தினை கபளீகரம் செய்யவே சிங்களவர்கள் முனைகிறார்கள் என்பதனையும் உணரச் செய்தது. இந்த உணர்வே அவர்களை ஒற்றுமையாகப் போராடும் மனோநிலைக்குக் கொண்டுவந்தது. கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையே சகோதரத்துவத்தையும் தோழமையினையும் ஏற்படுத்தியது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்கள் இப்போராட்டங்களில் மும்முரமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

தமது தாயகத்தை அபகரிக்கும் சிங்களவரின் ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தமிழர்கள் இரு வழிகளில் தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தொடங்கினர். அரசு தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தியதுடன், சிங்கள அரசுத் தலைமைகளோடு ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சரத்துக்களையும் சேர்த்துக்கொண்டனர். அடுத்ததாக, சிங்களக் குடியேற்றங்களில் எல்லைகளில் தமிழ் விவசாயிகளை குடியேற்றுவதையும் தமிழ் தலைமைகள் செய்ய ஆரம்பித்தன. 

itakfront-page.png?ssl=1

1951 ஆம் ஆண்டு சித்திரையில் திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய வருடாந்த மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களே பிரதான பேசுபொருளாகக் காணப்பட்டது. இக்குடியேற்றங்கள் மூலம் எதிர்காலத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து தந்தை செல்வா தனது பேச்சில் எச்சரித்திருந்தார்.

"எம்மைப்போன்ற சிறுபான்மை இனம் ஒன்றிற்கு அவர்களின் சனத்தொகையும், தாயகமுமே பாதுகாப்பு அரண்களாகும். சிங்கள அரசுகள் இவை இரண்டையும் தாக்க ஆரம்பித்து விட்டன. மலையகத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழர்களின் எண்ணிக்கையினை அவர்கள் குறைத்து விட்டார்கள். கல்லோயாவிலும், கந்தளாயிலும் சிங்களக் குடியேற்றங்களை நடத்திவருவதன் மூலம் எமது தாயகத்தின் மீதும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று கல்லோயாவிலும், கந்தளாயிலும் நடப்பது நாளை பதவியா, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கும் பரவப் போகிறது" என்று அவர் எச்சரித்தார்.  

தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் அவர்களைச் சிறுபான்மையினர் ஆக்கும் நோக்குடன் அரசினால் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து பிரேரணை ஒன்றும் சமஷ்ட்டிக் கட்சியினால் நிறைவேற்றப்பட்டது.

பல சந்ததிகளாக தாம் வாழ்ந்துவரும் தாயகத்தின் மீது தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையினை எவராலும் அகற்றிவிட முடியாது. சிங்களவர்களை மட்டுமே குடியேற்றும் நோக்கில் தமிழரின் தாயகத்தில் அரசு மேற்கொண்டுவரும் குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். தமிழர்களின் தாயகத்தில் அவர்கள் சரித்திரகாலம் தொட்டு வாழ்ந்துவரும் வாழ்வை அழிக்கவே சிங்கள அரசு இக்குடியேற்றங்களைச் செய்துவருகிறது என்று தனது முதலாவது தேசிய மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி கடுமையான கணடனத்தைப் பதிவுசெய்கிறது.

தமிழரின் சனத்தொகைப் பலம் மீதான சிங்களவரின் தாக்குதல் என்று தந்தை செல்வா குறிப்பிட்டது டி. எஸ் சேனநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தினூடாக ஏறக்குறைய  பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதுத்துவம் குறைக்கப்பட்டதோடு, அவர்களின் அரசியல்ப் பலமும் வீழ்ச்சி கண்டது.

1950 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றத்திட்டத்திற்கெதிரான தனது போராட்டத்தினையடுத்து, தமிழரின் தாயகத்தினைப் பாதுகாப்பதே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதுடன், "சுவர் இருந்தால்த் தான் சித்திரம் வரையலாம்" எனும் சுலோகத்தினையும் தனது பிரச்சாரங்களில் முக்கிய கருப்பொருளாகவும் வரிந்துகொண்டார்.

சிங்களக் குடியேற்றங்களுக்கெதிரான தடுப்புச் சுவரைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்ததுடன், சமஷ்ட்டிக் கட்சியின் ஒவ்வொரு வருடாந்த மாநாடுகளிலும் இதனையே முக்கிய பிரச்சினையாக அவர் பேசிவந்தார். மேலும், சிங்களத் தலைவர்களுடன் அவர் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக அவர் நிபந்தனைகளையும் இட்டு வந்தார். இருவேறு சிங்களப் பிரதமர்களோடு தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் கருப்பொருளே இச்சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவே இருந்தது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறையில் நின்றதால் பல பதிவுகளை இன்னமும் பார்க்கவில்லை.

தொடருங்கள் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

விடுமுறையில் நின்றதால் பல பதிவுகளை இன்னமும் பார்க்கவில்லை.

தொடருங்கள் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.

நன்றியண்ணா, வேலைப்பழு காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க செல்வா முயன்ற தடுப்புச் சுவரும், அவரை இருமுறை ஏமாற்றிய சிங்களவர்களும்
 

image_1498246924-e91b853891.jpg

செல்வாவை ஏமாற்றுமுன் நமட்டுச் சிரிப்புடன் கைகொடுக்கும் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் பண்டாரநாயக்க

1957 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவுடன் தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்தத்தில், குடியேற்றத்திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவிருக்கும் பிராந்திய கவுன்சில்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். இதுகுறித்த ஒப்பந்தத்தின் பகுதி "பி" இன் சரத்து 6 பின்வருமாறு கூறுகிறது,

6. குடியேற்றத்திட்டங்களில் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும், இத்திட்டங்களில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் அதிகாரமும் பிராந்தியக் கவுன்சில்களுக்கே இருக்கும். இந்த ஆணையினை நடைமுறையில் இருக்கும் கல்லோயாக் குடியேற்றத்திட்டத் திட்டத்தில் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்படும்.

Image

மேலும், 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவுடன் செல்வா செய்துகொண்ட உடன்படிக்கையில் தமிழர் தாயகத்தை பாதுகாப்பதற்காக மேலும் இரு விடயங்களை கோரி டட்லியின் இணக்கப்பாட்டினையும் பெற்றிருந்தார். அவையாவன,

4. நடைமுறையில் இருந்த காணி அபிவிருத்திச் சட்டம் மாற்றப்பட்டு, இலங்கைப் பிஜைகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையினை சட்டத்தினுள் கொண்டுவருவது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் குடியேற்றத்திட்டங்களில்,

1. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் குடியேற்றத் திட்டங்களில் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுகே முன்னுரிமை அளிக்கப்படும்.

2. அதன் பின்னர், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இக்குடியேற்றத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

3. மூன்றாவதாக இலங்கைப் பிரஜை ஒருவருக்கு, குறிப்பாக தமிழ் பேசும் பிரஜை ஒருவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆகிய மூன்று சரத்துக்களுக்கும் தந்தை செல்வாவிடம் தனது சம்மதத்தை டட்லி வழங்கியிருந்தார்.

ஆனால், இந்த ஒப்பந்தங்களின் தோல்வியின் மூலம் தந்தை செல்வா செய்ய எத்தனித்த தமிழர்களின் தாயகத்தைப் பாதுகாக்கும் தடுப்புச் சுவர் எனும் நோக்கம் முற்றாக இல்லாமலாக்கப்பட்டது. இதன் மூலம் சிங்களத் தலைவர்கள் தாம் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தமிழர் தாயகத்தைப் பகுதி பகுதியாகச் சிங்கள மயமாக்கவும், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினைச் சிதைக்கவும் வழிசமைத்துக் கொடுக்கப்பட்டது.

File:Sri Lanka Ethnic Map.png

இலங்கை - இனப்பரம்பல் வரைபடம்

தமது தாயகம் பறிபோவதைத் தடுக்க தம்மாலான வழிகளில் முயன்ற தமிழர்கள், சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வந்த பகுதிகளுக்கு அண்மையாகத் தாமும் குடியேறத் தொடங்கினர். இவ்வாறானவர்களின் அருளரின் தகப்பனாரான அருளப்பு முக்கியமானவர். ஆசிரியராகக் கடமையாற்றி வந்த அருளப்பு ஒரு தீவிர சமஷ்ட்டிக் கட்சி ஆதரவாளர். மன்னார் மாவட்டத்தில், கண்ணடிப் பகுதியில் அமைந்திருந்த கத்தோலிக்கத் தேவாலயத்திற்குச் சொந்தமான காணியொன்றினைக் கொள்வனவு செய்த அருளப்பு, 1964 ஆம் ஆண்டு அங்கு ஒரு பண்ணையை நிறுவி நடத்தி வந்தார். மேலும், இனப்பற்றும், ஆர்வமும் உடைய தமிழர்களை விவசாயம் செய்வதற்கு செழிப்பான வளங்களைக் கொண்ட வன்னிப் பகுதிக்கு வந்து குடியேறுமாறும் ஊக்கப்படுத்தி வந்தார்.

இரு வருடங்களுக்குப் பின்னர், சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் அணியினரால் திருகோணமலை மாவட்டத்தின் கித்துள் ஊற்று எனும் பகுதியில் தமிழர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டது. அப்பகுதியில் புணரமைக்கப்பட்ட குளம் ஒன்றினைச் சுற்றிச் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு எடுத்துவந்த முயற்சியினால் கோபமடைந்த தமிழ் இளைஞர்கள் இப்பகுதியில் குடியேறிக்கொண்டனர். திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபராக இருந்த சிங்களவர் தமிழ் இளைஞர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவரின் கோரிக்கைக்கு தமிழ் இளைஞர்கள் செவிமடுக்க மறுக்கவே ராணுவத்தினரையும் பொலீஸாரையும் அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் கொட்டகைகளும் எரியூட்டப்பட்டன. ஈற்றில் அந்த இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் அரசில் பங்காளிக் கட்சியாகவிருந்த சமஷ்ட்டிக் கட்சி, இக்குடியேற்றத் திட்டத்தில் சில பகுதிகள் தமிழர்களுக்கும் ஒதுக்கப்பட டட்லியின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டது.

 

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச வேலைவாய்ப்பிற்காக வன்னியில் குடியேறி வாழ்வதை நிராகரித்த யாழ்ப்பாணத் தமிழர்களும், எல்லைக்கிராமங்களில் தமிழர் தாயகக் காப்புச்சுவர்களாகக் குடியேறிய மலையகத் தமிழர்களும்

அருளப்புவின் முன்னோடியான வன்னிக் குடியேற்றமும், கித்துள் ஊற்றில் தமிழ் இளைஞர்கள் குடியேற எடுத்த முயற்சியும் வித்தியாசமானவை. ஏனென்றால், யாழ்ப்பாணத்துத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அரசுச் சேவையில் இணைவதே முக்கிய இலக்காக இருந்தது. ஆகவேதான் வன்னியில் சிங்கள எல்லைக்கிராமங்களில் குடியேற அருளப்பு விடுத்த வேண்டுகோள்களை எவரும் செவிசாய்க்க முன்வரவில்லை. அவ்வாறே 1977 ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் வன்னியில் குடியேறுமாறு யாழ்ப்பாணத்துத் தமிழர்களை அழைத்தபோது அதற்கான ஆதரவினை வழங்க அவர்கள் தவறிவிட்டனர். 

K. W. Devanayagam.png

தேவநாயகம்

ஆனால், தமிழ் மக்களில் ஒருபகுதியினரான மலையகத் தமிழர்கள், தாம் வேலை செய்துவந்த தேயிலை இறப்பர்த் தோட்டங்களை விட்டு வெளியேறி வடக்குக் கிழக்கில் குடியேறி விவசாயம் செய்வதற்கு விருப்புடன் முன்வந்தனர். 1970 களில் ஆங்கிலேயக் கம்பெனிகள் தேசிய மயமாக்கப்பட்டபோது அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களில் பலர் வேலைவாய்ப்பினை இழந்திருந்ததுடன், பலர் தாம் காலம்காலமாக வாழ்ந்துவந்த பிரதேசங்களை விட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கு நோக்கி, குறிப்பாக வவுனியா மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள் நோக்கி நகர ஆரம்பித்தனர். 

அரசியல் பின்புலம் கொண்ட தமிழ் அமைப்புக்கள் மலையகத் தமிழர்களை இப்பகுதிகளில் கூடியேற்றினர். 1975 ஆம் ஆண்டில் கல்க்குடா தொகுதியில் அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகத்தின் முயற்சியினால் சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. தமிழர் இவ்வாறு குடியேற்றப்பட்டமையினை அரசு கடுமையாக எதிர்த்திருந்ததுடன், பொலீசாரைக் கொண்டு இந்த குடியேற்றத்தை உடனேயே கலைத்துவிடுமாறும் ஆணையிட்டது. அரச ஆணைக்கு அமைவாக மலையகத் தமிழர்கள் குடியேறிய கல்க்குடாப் பகுதியில் கொட்டகைகளை பொலீஸார் எரியூட்டினர். பலர் தாக்கப்பட்டதோடு, கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து தேவநாயகமும், தொண்டைமானும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு தந்திமூலம் விடுத்த வேண்டுகோளில் இலங்கைப் பிரதமரான சிறிமாவுக்கு இதுகுறித்து அழுத்தம் கொடுக்குமாறு கேட்டிருந்தனர்.  

polon_batti.jpg

திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் தமிழ்க் குடியேற்றப்பகுதியான புணாணை - இன்று முற்றான ராணுவமயமாக்கலினூடாக சிங்கள மயமாக்கப்பட்டுவருகிறது

 

பொலீஸாரால விரட்டியடிக்கப்பட்ட தமிழ்க் குடியேற்றவாசிகள் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி சண்முகநாதனிடம் முறைப்பாடு செய்யவே, வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகநாதனும் பொலீஸார் நடந்துகொண்ட முறை சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தார். இதன்மூலம் அத்தமிழர்கள் புணாணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீளவும் குடியேற வழி அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்த ஆரம்பகால மலையகத் தமிழர்களின் குடியேற்றங்களின் வெற்றியினையடுத்து மேலும் பல மலையகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கின் எல்லையோராங்களில் குடியேற ஆரம்பித்தனர். இவ்வாறான குடியேற்றங்கள் 1977 ஆம் ஆண்டின் தமிழர் மீதான திட்டமிட்ட இனக்கலவரத்தின் பின்னர் பலமடங்காக அதிகரித்ததுடன், பின்னாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியாக இக்குடியேற்ற எண்ணிக்கை அதிகரித்து வரலாயிற்று. 

TRO

இனக்கலவரத்தின் பொழுது தமிழ் மக்கள் தமது வாழ்நாள் சேமிப்புக்களை இழந்து மிகவும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையினை கண்ட இளைஞர் அமைப்பொன்று, கொழும்பில் அமைந்திருந்த பாரிய அகதிமுகாமான சரஸ்வதி மண்டபத்தில் கூடி, வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களைக் குடியேற்றி அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கென்று ஒரு அமைப்பை உருவாக்கினர். தமிழ் அகதிகள் புர்வாழ்வுக் கழகம் என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக முன்னணி தொழிற்சங்கவாதியான நித்தியானந்தாவும், செயலாளராக வர்த்தக வழக்கறிஞரான கந்தசாமியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் தமிழ் அகதிகளை குடியேற்றியபோதும் இவ்வமைப்பு ஏனைய தொண்டர் நிறுவனங்களுக்கான உதவிகளை வழங்குவதிலேயே அதிக சிரத்தை எடுத்திருந்தது.

 

 

Edited by ரஞ்சித்
குடியேறிய
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியம்

Dr. S. Rajasunderam, Selvarajah Yogachandran ( Kuttimuni ), Nadarajah Thangathurai

 

 

1983 ஆம் ஆண்டு வெலிக்கடையில் சிங்களப் பொலீஸாராலும், சிறைக் காவலர்களாலும் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர் ராஜசுந்தரம் (காந்தியம்), குட்டிமணி மற்றும் தங்கத்துரை 

S. A. David Solomon Gandhiyam movement Welikade Massacre youth and old man

காந்தியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான கட்டட வடிவமைப்பாளர்  திரு டேவிட் அவர்கள்

தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினால் ஆதரிக்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் காந்தியம். இவ்வமைப்பு இரு இலட்சியவாதிகளான வைத்திய கலாநிதி எஸ் ராஜசுந்தரம் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் எஸ் அருளானந்தன் டேவிட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 1970 களின் ஆரம்பித்திலிருந்தே அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்திருந்தபோதும்,  1977 ஆம் ஆண்டில் தமிழர் மேல் அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னரே காந்தியம் அமைப்பை இவர்கள் உருவாக்கினார்கள். மீள்குடியேற்றப்பட்ட அகதிகளுக்கான விவசாய ஆலோசனைகள், உதவிகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான பொருட்கள் ஆகியவற்றினை காந்தியம் வழங்கி வந்தது. குடியேற்றப்பட்ட அகதிகளின் பிள்ளைகளுக்கான பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இவ்வமைப்பைச் சேர்ந்த தான்னார்வத் தொண்டர்கள் நடத்தி வந்தனர். அமெரிக்க தொண்டர் நிறுவனமான கெயர் இச்சிறுவர்களுக்கு திரிபோஷா போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிறையுணவினையும் வழங்கி வந்தது. இதற்கு மேலதிகமாக நோவிப் மற்றும் ஒக்ஸ்பாம் ஆகிய வெளிநாட்டு தொண்டர் அமைப்புக்களும் இந்த அகதிகளுக்கு உதவிவந்தன. இக்குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு இருவருடங்களுக்குள் தம்மைத்தாமே பராமரித்துக்கொள்ளவும், தமக்குத் தேவையான உணவினை தாமே தயாரித்துக் கொள்ளும் நிலைமைக்கும் வளர்ந்திருந்தன.

வைத்திய கலாநிதி ராஜசுந்தரமும், மனைவியான வைத்திய கலாநிதி சாந்தி காராளசிங்கமும் 1967 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவுசெய்துவிட்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வந்தனர். 1977 ஆம் ஆண்டு தமிழர் மேல் சிங்கள அரசு திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தாக்குதல்களினால் மன உழைச்சலுக்குள்ளான இவர்கள் இருவரும் வன்னிக்குத் திரும்பி வந்து ராஜசுந்தரம் முன்னர் ஈடுபட்டிருந்த அகதிகளைக் குடியேற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதென்று தீர்மானித்தனர். அதற்கமைய, சாந்தி காராளசிங்கம் வவுனியா நகரில் மருத்துவ சேவை நிலையமொன்றினை ஆரம்பிக்க, ராஜசுந்தரமோ காந்தியத்தின் தலைமைக் காரியாலயம் அமைந்திருந்த வவுனியா நகரிலிருந்து அகதிகளுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வைத்தியர் ராஜசுந்தரத்தின் மனிதாபிமானச் செயற்பாடுகள் வவுனியாவில் பணிபுரிந்து வந்த சிங்கள அரச அதிகாரிகளுக்கும் பொலீசாருக்கும் வெறுப்பினை ஏற்படுத்தி வந்தது. ஆகவே, அவருக்கெதிராகவும், காந்தியம் அமைப்பிற்கெதிராகவும் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரத்தினை அவர்கள் மேற்கொண்டு வந்தனர். காந்தியம் அமைப்பின் செயற்பாடுகளுக்கெதிரான விஷமத்தனமான பிரச்சாரங்களை சிங்கள ஆங்கிலப் பத்திரிக்கைகள் காவி வெளிவரத் தொடங்கின. இப்பிரச்சாரங்களின் அடிப்படையாக காந்தியம் அமைப்பின் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து வருகிறார்கள் என்பதாகவே இருந்தது.

ஆனால், ராஜசுந்தரம் அவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, குறிப்பாக அதன் தலைவர் அமிர்தலிங்கத்திற்கெதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதனை அவருக்கெதிராகப் பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்பி வந்த பொலீஸார் அறிந்திருக்கவில்லை. மேலும், புலிகளுடன் அன்று செயற்பட்டு வந்த உமாமகேஸ்வரன் தலைமையில் புலிகள் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பண்ணையொன்றினை நடத்திவருவதையும், உமாமகேஸ்வரனுடன் ராஜசுந்தரம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதனையும் பொலீஸார் அறிந்திருக்கவில்லை.

1978 ஆம் ஆண்டு மார்கழி மாதமளவில் முதலாவது உழுந்துப் பயிர்ச்செய்கை மிகுந்த விளைச்சலைக் கொடுத்திருந்தது. இதன்மூலம் வைத்தியர் ராஜசுந்தரம் தலைமையிலான குடியேற்றத்திட்டம் வெற்றிகரமாக இயங்கிவருவது தெரிந்தது. ஒருமுறை ராஜசுந்தரம் அவர்கள் வெளிநாட்டு விருந்தினர் ஒருவரை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தபோது, அவர் வியந்துபோனார். பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டில் ஒன்றிற்குள் அந்த வெளிநாட்டு விருந்தினரை அமரவைத்து அருந்துவதற்கு சிற்றுண்டிகளை வழங்கிக்கொண்டே தனது உள்ளக்கிடக்கையினை அவரிடம் வெளிப்படுத்தினார் வைத்தியர் ராஜசுந்தரம்.

"இத்திட்டம் தொடர்பாகக் கடுமையான அழுத்தங்கள் தெற்கிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பொலீஸாரும், சிங்கள அதிகாரிகளும் இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மதவாச்சியிலிருந்து சிங்களக் காடையர்களை அழைத்துவந்து எமது பண்ணைக் குடியேற்றத்தை அழித்து, அகதிகளை விரட்டப்போவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன" என்று தான் நம்புவதாக அவர் கூறினார். "இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எமக்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. இக்குடியேற்றத்திலிருந்து சில இளைஞர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியினை வழங்குவதன் மூலம் தம்மைத்தாமே அவர்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியும்" என்று அவர் கூறினார். புளொட் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் இவ்வாறான ராணுவப் பயிற்சிகளை குடியேற்ற இளைஞர்களுக்கு வழங்க ராஜசுந்தரம் ஆவண செய்தார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியத்தை திட்டமிட்டுச் சிதைத்த சிங்களப் பேரினவாதம்

z_p17-Search-1.jpg?itok=g-z9QZKW

சிங்களப் பேரினவாதத்தின் தூண்களில் ஒன்றான அன்றைய பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, ஜெயாருடன்

வவுனியா நகருக்கான உதவிப் பொலீஸ் அத்தியட்சகராக ஹேரத் எனும் சிங்கள இனவாதி நியமிக்கப்பட்டதன் பின்னர் காந்தியத்திற்கெதிரான பிரச்சாரங்கள் வேகம்பெறத் தொடங்கின. பொலீஸ் மா அதிபரூடாக பாதுகாப்பு அமைச்சிற்கு ஹேரத் அனுப்பிய பல அறிக்கைகளில் "சட்டத்திற்குப் புறம்பான இந்தியக் குடியேற்றவாசிகளை" உடனடியாக அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த அறிக்கைகள் ஜனாதிபதி ஜெயார் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் தொடர்ச்சியாக கவனத்தில் எடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, அன்று பொருளியல், வர்த்தக மற்றும் கப்பற்றுரை அமைச்சராகவிருந்த இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான லலித் அதுலத் முதலியிடம் காந்தியம் குறித்து விசாரித்து தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இதற்கமைய 1982 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் காந்தியம் பற்றி விசாரிக்கவென்று இப்பகுதிக்குச் சென்றிருந்தார் லலித் அதுலத் முதலி.

காந்தியம் தொடர்பான தனது விசாரணைப் பயணம் பற்றி வெளித்தெரியாதிருக்க, அப்பயணத்தை அமைச்சர் ஒருவரின் சாதாரண பயணமாகக் காட்டிக்கொண்ட லலித் அதுலத் முதலி, மாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தையொன்றைத் திறக்கவே தான்  வந்ததாகக் காட்டிக்கொண்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தைப்பற்றிய செய்திகளைச் சேகரிக்க அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். மாங்குளம் விருந்தினர் மாளிகையில் நாம் தங்கவைக்கப்பட்டதோடு சனிக்கிழமை இரவு ஒன்றுகூடல் ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அந்த ஒன்றுகூடலில் வவுனியா நகரின் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத்தும் பங்குகொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்களிடையே பேசிய ஹேரத், வவுனியாவில் இடம்பெற்றுவரும் விவசாயக் குடியேற்றங்களினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கையில் வாழத் தகுதியில்லாத இந்திய வம்சாவளித் தமிழர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், காந்தியமும் சட்டத்திற்கு முரணான வகையில் வவுனியா மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றிவருவது பாரிய குற்றமாகும் என்று அழுத்தமாகக் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன், தனிமையில் என்னுடன் உரையாடவேண்டும் என்று அழைத்த ஹேரத், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவனான என்னிடம், இக்குடியேற்றங்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தவன் என்கிற ரீதியில் எனது உணர்வுகளை அறிந்துகொள்ள எத்தனித்தார்,

"இக்காணிகள் யாழ்ப்பாணத்து விவசாயிகளுக்குத்தான் கிடைக்கப்பட வேண்டும். ஆனால், அவர்களோ இந்தியர்களைக் குடியமர்த்துகிறார்கள்" என்று என்னைப் பார்த்துக் கூறினார். மறுநாள் அப்பகுதியில் வியாபாரம் செய்துவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் நான் பேசியபோது, வவுனியாவில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியேற்றப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தவர்கள் கிளர்ந்தெழவேண்டும் என்று தம்மை ஹேரத் நச்சரித்துவந்ததாகக் கூறினார்கள். 

மாங்குளத்தில் லலித்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தையினைத் தொடர்ந்து நாம் வவுனியாவில் காந்தியத்தினால் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் குடியேற்றக் கிராமங்களைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம்.  அங்கே விளைச்சல் மிகுந்த காணிகளில் செழிப்பாக விவசாயம் செய்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாம் கண்டோம். லலித் அதுலத் முதலியோ ராணுவத்துடனும், பொலீஸாருடனும் ரகசியச் சந்திப்புக்களை அவ்வேளை நடத்திக்கொண்டிருந்தார். இந்த கூட்டங்களிலேயே இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்த விவசாயக் குடியேற்றங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டோம். ஆனால், தமது இந்த நாசகாரத் திட்டத்தினை உடனடியாகச் செய்ய அரசு எத்தனிக்கவில்லை. ஆகவே, தமது சதிச் செயலுக்கான உகந்த சூழ்நிலையினை தமது செய்தி ஊடகங்களைக் கொண்டு சிறுகச் சிறுக அரசு உருவாக்கத் தொடங்கியது. இவற்றுள் ஒன்றுதான் இக்குடியேற்றங்களூடாக காந்தியம் அமைப்பு மலையகத் தமிழர்களை புளொட் அமைப்பிற்காக  சேர்த்துவருவதான பிரச்சாரம்.

EdjtI06WoAAtACP.png

சித்திரை 6 ஆம் திகதி வவுனியா நகரில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் பொலீஸாரினால் முற்றுகையிடப்பட்டதோடு, வைத்தியர் ராஜசுந்தரமும் கைதுசெய்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது அமைப்பினால் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய  நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அலுவலகங்களும் பொலீஸரினால் மூடப்பட்டன. கொழும்பு வை எம் சி கட்டிடத்தில் தங்கியிருந்த திரு டேவிட் அவர்களும் கைதுசெய்யப்பட்டார். குருநகர் ராணுவ முகாமில் கடுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் வைத்தியர் ராஜசுந்தரமும், டேவிட் அவர்களும் பணாகொடை ராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டனர். அங்கு கடுமையான சித்திரவதைகளூடாக அவர்களிடமிருந்து பலவந்தமாக வாக்குமூலங்களை பொலீஸார் பெற்றுக்கொண்டனர்.

EdjtKi_WsAAkqZn.png

இவர்கள் இருவருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் குமாரலிங்கம், ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் டேவிட் அவர்கள் கடுமையான மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நீதிமன்ற ஆணை ஒன்றினூடாக டேவிட் அவர்களை தான் சந்திப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொண்டார். இதன்படி, நீதிமன்றம் கொழும்பு நீதிமன்ற வைத்தியர் சல்காடோ ஆவர்களை டேவிட் அவர்களையும் ராஜசுந்தரத்தையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தது. வைத்தியர் சல்காடோ வழங்கிய அறிக்கையில் ராஜசுந்தரம் மீது கடுமையான சித்திரவதைகளும், தாக்குதல்களும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அவரது உடலில் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

Panagoda_1.jpg

ஆனால், அமைச்சர் சிறில் மத்தியூ ஊடாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ராஜசுந்தரம் மற்றும் டேவிட் ஆகியோர் மீது கடுமையான பிரச்சாரத்தை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். திரு டேவிட் அவர்களுக்கு அபகீர்த்தியை உருவாக்கும் விதத்தில் நடந்துகொண்ட சிறில் மத்தியூ, டேவிட் தங்கியிருந்த கொழும்பு யை எம் சி அறையிலிருந்து பாலியல் உணர்வினைத் தூண்டும் சஞ்சிகைகள் பலவற்றை பொலீஸார் கண்டெடுத்ததாகக் கூறி சில சஞ்சிகைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், பொலீஸாரினால் சாட்சியங்களாக கைப்பற்றப்பட்ட அச்சஞ்சிகைகள் தன்னிடம் எவ்வாறு கிடைக்கப்பட்டன என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். மேலும், ஊடகங்களை தனது பிரச்சாரக் கருவிகளாகப் பாவித்த பொலீஸார், புலிகள் இயகத்திற்கும், புளொட் அமைப்பிற்கும் இடையிலான பிணக்கினைத் தீர்த்துவைக்க ராஜசுந்தரம் முயன்றுவந்ததாகவும், பிரெஞ்சு அதிகாரிகளை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கும்படி கோரியிருந்ததாகவும் பொய்ச் செய்திகளைக் கசியவிட்டிருந்தனர்.

Edjt9_kXgAkunFV.png

 

ஆனால், பொலீஸாரினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க போதுமானவை அல்ல என்று சட்ட மா அதிபர் அலுவலகம் அறிவித்தது. இவ்வகையான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டிருக்க இலங்கை தனது சரித்திரத்தை நிரந்தரமாகவே மாற்றப்போகின்ற 1983 ஆண்டு தமிழினம் மீதான அரச ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட  இரத்தக்களரி நோக்கிச் சாய்ந்துகொண்டிருந்தது.

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆயுத அமைப்புக்களின் தலைமைகளை பின்தொடர்ந்த தமிழர்கள்

துரோகிகள்

1983 ஆம் ஆண்டு, வைகாசி 18 ஆம் திகதி நடைபெறத் தீர்மானிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழு அம்மாதம் 11 ஆம் திகதி நல்லூரில் கூடி முடிவெடுத்திருந்தது. போராளி அமைக்களின் கடுமையான எதிர்ப்புக்கும் மத்தியிலும் முன்னணியினரின் இந்த முடிவு, அவர்களின் அரசியல் அஸ்த்தமனத்தின் ஆரம்பப்புள்ளியாக மாறியது என்றால் அது மிகையில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின், குறிப்பாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தின் மிகவும் பாரதூரமான முடிவு இது என்று கூடக் கூறமுடியும். போராளி அமைக்களினதும், தமிழ் மக்களினதும் அன்றைய மனநிலையினை புரிந்துகொள்ளும் நிலையில் அமிர்தலிங்கம் இருக்கவில்லை.

அத்துடன், ஜெயவர்த்தனவும் அவரது அரசியல் ஆலோசகர்களும் எடுத்த மோசமான முடிவும் இதுதான் என்று கூறமுடியும். தமிழ் ஆயுத அமைப்புக்களை ராணுவ ரீதியில் முற்றாகத் துடைத்தழிப்பதற்கு முன்பதாக, அவர்களுக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையே பிளவொன்றினை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜெயார் செயற்பட்டு வந்திருந்தார். மேலும், 1981 ஆம் ஆண்டு, ஆனி 4 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ் மக்கள் செயற்பட்ட விதம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு மக்களிடையே இன்னமும் ஆதரவு இருக்கின்றது எனும் மாயையினை ஏற்படுத்தியிருந்தது. போராளி அமைப்புக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டபோதும் இத்தேர்தல்களில் முன்னணிக்கு 263,369 வாக்குகளைத் தமிழர்கள் வழங்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் 10 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்த முன்னணியினர் சுமார் 80 வீதமான வாக்குகளைத் தம் பக்கம் ஈர்த்திருந்தனர்.

Cartoon on JR Jayawardene Oct 30 1982 The Economist

ஜெயார்

"மக்கள் இன்னமும் எம்முடன் தான் இருக்கிறார்கள்" என்று முன்னணியினரின் செயற்குழு கூட்டத்தில் கூறினார் அமிர். "அவர்கள் இளைஞர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர்களால் அழிவுகளை மட்டும் தான் கொடுக்க முடியும்" என்றும் அவர் கூறினார். ஆனால், துரதிஷ்ட்டவசமாக, முன்னணியின் தலைமை யதார்த்தத்திலிருந்து வெகு தூரத்திலேயே அன்று நின்றிருந்தது. 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ் நூலக எரிப்பும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் கைதும் முன்னணியினருக்கு அனுதாப அலையினையும் தேர்தலில் ஏற்படுத்தியிருந்தது.  அன்றைய நாட்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமை எடுக்கும் முடிவுகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும், முன்னணியின் தலைமைக்கு நிகரான தலைமைத்துவத்தினைப் போராளித் தலைமைகளால் வழங்கமுடியும் என்பதை அன்று அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. போராளிகள் இளையவர்களாக இருந்ததனால், ராணுவம் மற்றும் பொலீஸார் மீதான துணிகரத் தாக்குதல்கள், வங்கிக் கொள்ளைகள் உள்ளிட்ட துணிகர நடவடிக்கைகளில் மட்டுமே அவர்களால் ஈடுபட முடியும், தூரநோக்குக் கொண்ட அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் முதிர்ச்சி போதாது என்று அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், 1983 ஆம் ஆண்டளவில் தமிழ் மக்களின் மனோநிலை முற்றாக மாறியிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமை எடுத்த முடிவுகள் குறித்து தமிழர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருந்தனர். குறிப்பாக, ஜெயவர்த்தன மீது முன்னணியினரின் தலைமை தொடர்ச்சியாகக் கொண்டிருந்த நம்பிக்கை குறித்து தமிழ் மக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். அப்படியிருந்தபோதும் போராளித் தலைவர்கள் மீது முற்றான நம்பிக்கையினை வைக்கும் அளவிற்கு அவர்கள் அன்று வந்திருக்கவில்லை. இதனை வெளிப்படையாகவே அவ்வப்போது கூறவும் தலைப்பட்டனர்.

ஈழ மாணவர்களின் பொது ஒன்றியம் எனும் அமைப்பினரின் கூட்டங்களில் பங்கெடுத்த தமிழர்கள், தமக்கான தலைமைத்துவத்தை அவர்களால் வழங்கமுடியுமா என்று நேரடியாகவே கேட்டிருந்தனர். மேலும், "முன்னணியினரின் தலைவர்கள் பல ஆண்டு கால அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவர்கள். நீங்கள் அனைவரும் மிகவும் இளவயதினர், அரசியல் அனுபவமோ , முதிர்ச்சியோ இல்லாதவர்கள், உங்களை நம்பி எமது அரசியல் எதிர்காலத்தை நாம் எப்படி ஒப்படைக்க முடியும்?" என்று அவர்கள் வினவியிருந்தனர்.

பெரும்பாலான போராளி அமைப்புக்களிடம் இக்கேள்விகளுக்கான பதில்கள் அன்று இருக்கவில்லை. ஆனால், பிரபாகரன் இகேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வந்தார். தமிழர்களுக்கான ராணுவ, அரசியல்த் தலைமைத்துவத்தை தன்னால் வழங்கமுடியும் என்று அவர் செயல்முறையில் நிரூபித்துக் காட்டினார். பிரபாகரன் இதனைச் செய்வதற்கான சூழ்நிலையினை ஜெயாரே ஏற்படுத்திக் கொடுத்தார்.

பிரபாகரனைப் பொறுத்தவரையில் 1981 ஆம் ஆண்டில் இருந்த அரசியல் நிலைமைக்கும் 1983 ஆம் ஆண்டில் இருந்த நிலைமைக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்தது. 1981 இல் அவர் அரச படைகளால் தேடப்பட்டவராக  இருந்தார். பொலீஸாரும், ராணுவத்தினரும் அவரை ஓய்வின்றித் தொடர்ச்சியாகத் துரத்தியபடி இருந்தனர். தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவர் கடுமையாகப் போராடவேண்டி இருந்தது. அது மட்டுமல்லாமல், அவரது அமைப்பும் பலவீனமான நிலையில் காணப்பட்டது. அவர் நம்பியிருந்த பல தோழர்கள் அவரைக் கைவிட்டு விட்டு, அவரின் எதிரியான உமா மகேஸ்வரனுடன் இணைந்திருந்தார்கள். அன்று பிரபாகரன், உற்சாகமற்ற, களைத்துப் போன மனிதராக இருந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடைபெற்ற காலத்தில் அவருக்கிருந்த ஒரே நோக்கம், தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றும் மீளவும் தன்னைக் கட்டியெழுப்புவதாக மட்டுமே இருந்தது.

ஆனால், 1983 இலோ பிரபாகரன் மிகுந்த மன தைரியத்துடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார். இக்காலத்தில் தன து இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பியிருந்த பிரபாகரன், தனக்கு விசுவாசமான இளைஞர்களையும் தன்னுடன் சேர்த்திருந்தார். ராணுவத்திற்கெதிரான துணிகரமான தாக்குதல்களின் மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தையும் அவர் பெற்றிருந்தார். ஆகவே, தமிழ் மக்களை தான் தேர்ந்துகொண்ட பாதையில் வழிநடத்திச் செல்லத் தக்க உகந்த சந்தர்ப்பம் தோன்றியிருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட விரும்பும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலிலிருந்து மக்களை வெளியே கொண்டுவரவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். அவர் எதிர்பார்த்தது போலவே, தமிழ் மக்களிடமிருந்து முன்னணியினரை அந்நியப்படுத்தும் பொறிகளை ஜெயவர்த்தனவே அப்போது விதைக்கத் தொடங்கியிருந்தார்.

 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயார் வைத்த பொறி

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு

1983 ஆம் ஆண்டு பங்குனி 4 ஆம் திகதி உமையாள்புரம் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்கும் நடவடிக்கையினால் கொதிப்படைந்திருந்த ஜெயாரின் அரசு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் போராளி அமைப்புக்களுக்கும் இடையே மோதல் ஒன்றினை உருவாக்க மறுபடி முயன்றது. அதன்படி, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு இந்த பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் தீங்கானதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாநாட்டில் பேசப்படவேண்டிய விடயங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தன,

1. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரத்தினை ஆராய்தல்

2. நிலைமைகளைச் சீராக்கும் வழிவகைகளை ஆராய்தல்.

3. உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்தல்.

4. மற்றும், ஏனைய விடயங்கள்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைசாமி இம்மாநாட்டிற்கான ஒழுங்குகளைச் செய்வாரென்றும், யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் யு. பி. விஜெயக்கோன் இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் யோகேந்திராவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் விடயத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அமிர்தலிங்கமும், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த ஏனைய முன்னணித் தலைவர்களும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கான தமது விருப்பத்தினை உடனேயே அரசுக்கு அறியப்படுத்தியிருந்தனர். முன்னணியினர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்கிற செய்தி கசிந்தபோது, அமிர்தலிங்கத்தைச் சந்தித்த சில இளைஞர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றவேண்டாம் என்று அவரைக் கேட்டனர்.  "இக்கூட்டத்தில் பங்குகொள்வதில் என்ன தவறிருக்கிறது?" என்று அவர்களைப் பார்த்து கோபத்துடன் கேட்டார் அமிர்தலிங்கம். "உள்ளுராட்சி மன்றங்களை மீளவும் நடைமுறைப்படுத்துங்கள் என்று அரசைப் பார்த்துக் கேட்பதில் என்ன தவறிருக்கிறது?" என்று மேலும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் அமிர்.

உள்ளுராட்சி மன்றங்கள் முன்னர் முன்னணியினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், 1983 ஆம் ஆண்டளவில் இந்த மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்தபோதும் அவற்றுக்கான தேர்தல்களை அரசு நடத்தியிராமையினால், இம்மன்றங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்துவந்தன. யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால், அம்மாவட்டத்தில் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார்.

தமிழ்ப் பிரதேசங்களில் சுமூகமான நிலையினைத் தோற்றுவித்திருப்பதாகவும், சிவில் நிர்வாகத்தினை மீள ஆரம்பிக்கவிருப்பதாகவும் வெளியுலகிற்குக் காட்டவே இந்த மாநாட்டினை ஜெயார் நடத்துகிறார் என்று போராளிகள் அமிருக்குத் தெரிவித்திருந்தனர். "தமிழர் பிரதேசங்களில் சுமூக நிலை உருவாகிவிட்டதாகக் காட்டி உதவி வழங்கும் நாடுகளிலிருந்து பணத்தினைப் பெற்றுக்கொண்டு, அப்பணத்தினைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தவே ஜெயார் முனைகிறார்" என்று இளைஞர்கள் அமிரிடம் கூறினர்.

JaffnaKachcheri03.jpg

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணச் செயலகம் 2002

ஆனால், சித்திரை 2 ஆம் திகதி நடக்கவிருந்த யாழ்ப்பாண பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதென்று அமிர்தலிங்கம் பிடிவாதமாக இருந்தார். அன்று காலை, மாநாடு நடக்கவிருந்த யாழ் செயலகத்தின் பகுதியொன்றினை புலிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர். பின்னர், செயலகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மண்டபத்தில் இம்மாநாட்டினை அரச அதிபர் யோகேந்திரா ஒழுங்குசெய்து நடத்தினார். அமிர்தலிங்கம் உட்பட பல முன்னணி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

யாழ் செயலகக் கட்டிடம் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி புலிகள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அதில், "ஒரு ஆயுதப் புரட்சியினை, அரச பயங்கரவாதமும், அரசியல் சந்தர்ப்பவாதிகளும் சேர்ந்து அடக்கிவிட முடியாது. இச்செய்தியினை வழங்கவே செயலகத்தின் மீது தாக்குதல் நடத்தினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புலிகளின் அறிக்கையினை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகளுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டார். "ஒன்று, இரண்டு கட்டிடங்களை வெடிவைத்துத் தகர்ப்பதன் மூலம் ஆயுதப் புரட்சியொன்றினைச் செய்துவிட முடியாது எனும் செய்தியினை தம்பிமார் இப்போது நன்கு உணர்ந்திருப்பார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பு மாநாடு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது என்பதை அவர்கள் அறிந்துகொள்வது அவசியம்" என்று அவரது அறிக்கை கூறியது.

அமிர்தலிங்கம் தனது நிலைப்பாட்டில் மிகவும் பிடிவாதமாக நின்றார். தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் தானே தமிழர்களின் தலைவர் என்பதைக் காட்டவேண்டும் என்கிற தேவை அவருக்கிருந்தது. செயலகக் குண்டு வெடிப்பிற்குச் சில நாட்களுக்குப் பின்னர் கூட்டமொன்றில் பேசிய அமிர்தலிங்கம், "ஒரு கப்பலுக்கு ஒரு தலைவன் மட்டும் தான் இருக்க முடியும். கப்பலில் உள்ள அனைவரும் தலைவராக விரும்பினால், கப்பலில் கலவரம் ஏற்பட்டு, இறுதியில் மூள்கியும் விடும். 1977 ஆம் ஆண்டு இந்தக் கப்பலை தலைமையேற்றுச் செலுத்துமாறு மக்கள் என்னிடம் ஆணையொன்றினைத் தந்திருக்கிறார்கள். ஆகவே, நான் தான் இக்கப்பலுக்கான தலைவன், என்னைத் தலைமைதாங்க விடுங்கள்" என்று கூறினார். 

அமிர்தலிங்கத்தின் இந்தக் கூற்றிற்கு போராளிகள் உடனடியாகக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டனர். "கப்பலின் தலைவர், அதனைத் தலைமைதாங்கும் தகுதியைக் கொண்டிருக்காதவிடத்து, கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காத்துக்கொள்ள, ஏனையவர்கள் அந்த மாலுமியைத் தள்ளிவிட்டு, கப்பலுக்கான தலைமையினைப் பொறுப்பேற்பதுதான் சரியானது" என்று தெரிவித்தனர்.

அமிர்தலிங்கத்தை தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான சந்தர்ப்பத்தினை ஜெயாரே போராளிகளுக்கு ஏற்படுத்தித் தந்தார். ஆகவே உள்ளூராட்சித் தேர்தல்களை வைகாசி 18 ஆம் திகதி நடத்துவதென்று முடிவெடுத்த ஜெயார், அதற்கான வேட்பாளர் மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரைப் பணித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சில சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் பங்கெடுக்க தமது வேட்பாளர்களை நியமித்திருந்தன.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

.

JaffnaKachcheri03.jpg

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணச் செயலகம் 2002.

இது யாழ். பல்கலைக்கழகக் கட்டடம் என நம்புகிறேன். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.